Tuesday, February 15, 2022

;"ஹிஜாப்", பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம்

Hijab, the Emblem of Feminine Freedom and Virtues


முஸ்லிம் சமூகங்களில் பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் அடக்கமான ஆடைகளை அணிந்து முடியை மறைக்கும் ஆடைகளை காலாகாலமாக அணிந்துவருவதை நாம் அறிவோம்.

இப்போது முஸ்லிமல்லாத உலகிலும், நவீன பெண்கள் தாங்கள் வீட்டின் வெளியே செல்லும்போது யாரையும் தொந்தரவு செய்யாமல், யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, முக்காடு போடுவதன் அழகையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள தொடங்கியுள்ளனர்.


இது ஒரு புரட்சிகர அணுகுமுறையோ அல்லது கடுமையான மதவாதச் செயலோ அல்ல.

சமூகத்தின் அமைதியையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் பொது இடங்களில் சுற்றித்திரியும் தீய மனிதர்களின் தேவையற்ற வர்ணனைகள், பார்வைகள், விசில் சத்தம் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், சுயமரியாதையைப் பாதுகாக்கவும் பெண்களின் உள்ளார்ந்த இயல்பிற்கு இணங்க இந்த ஆடையை அணிந்து கொள்கின்றனர். இது உண்மையில் பாராட்டத்தக்கது.


மேலும், முக்காடு அல்லது ஹிஜாப் மற்றும் நீங்கள் அதை விரும்பும் எந்த சொற்களைக் கொண்டாவது அழைத்துக் கொள்ளுங்கள், பரவாயில்லை, அது கிறிஸ்தவ மேற்குலகின் கலாச்சார விழுமியங்களின் மறுமலர்ச்சியாகும், அதே போல் பௌத்த மற்றும் இந்து கிழக்கின் வரலாறு முழுவதும் பெண்கள் முக்காடு போட்டு தலையை மூடியதாக அறியப்படுகிறது. இயந்திர யுகத்தின் தொழில்மயமாக்கலுக்கு முன்னர் ஒரு நாகரீகமான முறையாக இருந்த ஒன்று  துரதிர்ஷ்டவசமாக இந்த பழைய விதிமுறைகளை அழித்துவிட்டது.

இது பரவலான சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுத்துள்ளது, குறிப்பாக கொள்கையற்ற அரசியல்வாதிகளால் பெண்களை வலுக்கட்டாயமாக வெளிக்கொணர்வது, அவர்கள் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தங்கள் மனைவிகள், சகோதரிகள், மகள்கள் மற்றும் தாய்மார்களை கூட கவர்ச்சி காட்டும் வணிக மற்றும் சடப் பொருட்களாக மாற்றியமைத்துள்ளனர்.

இந்தியாவில், இந்துப் பெண்கள் பாரம்பரியமாக "கூங்காட்" எனும் முக்காட்டை அணிந்து வருகின்றனர் அதாவது - பொது இடங்களில் தலையை மூடும் ஒரு வழக்கம் - இன்றும் கிராமப்புறங்களில் இந்த நடைமுறை பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருவதோடு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது.

இது பெண்களின் விருப்பமாகும், மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வியைத் தொடரும்போது அல்லது வேலை செய்யும் போது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி பாதுகாக்க அவர்கள் விரும்பும் ஆடைத் தெரிவாகும் மேலும் இது ஆற்ற வேண்டிய எந்தவொரு சமூகப் பொறுப்புக்கும் ஒரு தடையாக இருப்பதில்லை.

இந்த மறுக்க முடியாத உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்கள் (முஸ்லிம் பெண்கள்) வகுப்புகளுக்கு வருவதைத் தடை செய்வதற்கான தவறான நடவடிக்கை, கடந்த சில காலமாக அராஜகவாத தீவிரவாத சக்திகளால் அரசியலாக்கப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல தசாப்தங்களாக நிர்வாக மற்றும் அரசாங்க எந்திரங்களில் இந்த கும்பல் ஊடுருவி இஸ்லாமிய வெறுப்பின் சூழலை உருவாக்கியுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கல்லூரியின் அதிகாரிகள், கல்வி மையங்களில் ஹிஜாப் மீது பிரான்ஸ் நாட்டில்  தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் தங்களை ஏமாற்ற அனுமதித்ததா அல்லது வெறுப்புணர்ச்சியை தூண்டும் அரசியல்வாதிகளால் இதுபோன்ற தவறான முடிவை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை கட்டுப்பாட்டை மீறி நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளது.


இந்தியா எந்த நிலத்திலும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பல்மொழி நாடாகும், இது முந்நூறு மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையிலான மற்றும் தேசிய மக்கள்தொகையில் 25 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது, மற்ற 75 சதவிகிதம் இந்து பெரும்பான்மை மற்றும் இவர்களில் கோடிக்கணக்கான தலித்துகள் அடங்குவர். மற்றும் பல மில்லியன் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் மற்றும் பல்வேறு மதங்களை பின்பற்றுவோரும் உள்ளனர்.

இது பல்வேறு மதங்கள், பிரிவுகள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு இடையே வேற்றுமையில் ஒற்றுமை காணும் சகோதரத்துவ உணர்விற்காக பிரபலமான தேசமாகும். அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அதன் ஸ்தாபகத் தந்தைகளான மகாதாமா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களின் அகிம்சை மனப்பான்மைக்கு கடன்பட்டுள்ள நாடாகும்.

எனவே, வரலாற்றை மறந்த, வரலாற்றில் அழியக்கூடிய இன்றைய சில்லறை அரசியல்வாதிகள், எதிர்மறையான சொற்களைத் பரப்புவதன் மூலம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் பிரச்சினையை உருவாக்கி நீதிமன்றங்களுக்கு இழுப்பதன் மூலமாக தேசிய ஒற்றுமையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள நலன்களுக்காக எடுக்கவேண்டிய புத்திசாலித்தனமான நடவடிக்கை என்னவெனில், கல்லூரி அதிகாரிகளின் இந்த விவேகமற்ற முடிவை ரத்து செய்து, ஹிஜாப் அணிந்த பெண்களை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்ச்சையை முளையில் கிள்ளி எறிய வேண்டும். நாட்டை துண்டாட முயற்சிக்கும் தீயவர்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

https://kayhan.ir/en/news/100012/hijab-the-emblem-of-feminine-freedom-and-virtues

No comments:

Post a Comment