Ashura and Iran's foreign policy
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் இமாம் ஹுசைனின் (அலை) அவர்களது இயக்கம் மற்றும் ஆஷுராவின் உத்வேகம் எப்போதும் ஆதாரங்களாக இருந்துவந்துள்ளன.
சந்தேகத்திற்கு இடமின்றி, ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறை இமாம் ஹுசைன்
(அலை) அவர்களது கொள்கையின் அடிப்படையில் இருந்து வருகிறது.
ஈரானின் வெளியுறவு சில கொள்கைகளை
அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு அவை அரசியலமைப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆணவத்திற்கு
எதிராக போராடுவது, அனைத்து வகையான ஆதிக்கத்தையும், மேலாதிக்கத்தையும் நிராகரித்தல், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுதல், அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாத்தல், மேலாதிக்க மற்றும் ஒடுக்குமுறை அதிகாரங்களை அனுமதியாமை
மற்றும் அடக்குமுறையை நிராகரித்தல் போன்ற கொள்கைகள் இதில் அடங்கும்.
இந்த கொள்கைகள் இஸ்லாமிய ஈரானின்
கலாச்சார விழுமியங்களால் ஈர்க்கப்பட்டவை, அதில் கர்பலாவின் எழுச்சியும்
ஆஷுரா நிகழ்வும் அதன் தூண்களாகும். மேலும் இவை அரசியலமைப்பு உருவாக்கத்திலும் முக்கிய
பங்கு வகித்தன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இந்த கொள்கைகள் மற்றும் மதிப்புகள்
இஸ்லாமிய ஈரானின் வெளியுறவுக் கொள்கையில், ஈரானின் வரலாற்றின் அத்தியாயங்களில்
தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளன.
தொடரும் கட்டுரை இந்த கொள்கைகளை
மேலும் தெளிவுபடுத்துவதோடு ஈரான் இஸ்லாமிய
குடியரசின் வெளியுறவுக் கொள்கையில் அவற்றின் எடுத்துக்காட்டுகளைப் பற்றியும் பேசுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் ஈரான்
இஸ்லாமிய குடியரசின் நிலைப்பாடு:
இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பின்
ஷரத்து 152, 154, 14,
11 மற்றும் பிரிவு 3
மற்றும் பிரிவு 16 இன் படி,
அனைத்து மனிதர்களின்
மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் அதன் ஈரான் அதன் குறிக்கோளாகக் கருதுகிறது, மேலும் இது அனைத்து மனிதர்களின், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்
உரிமைகளைப் பாதுகாக்க தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.
இஸ்லாமிய புரட்சியின்போது ஈரானிய
மக்களின் முக்கிய விருப்பமாக கொள்கைகள் இருந்தன, "கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம் எமது இலக்கு இஸ்லாமிய
குடியரசு" மேலும் "சுதந்திரம், சுதந்திரம், இஸ்லாமிய குடியரசு" என்ற முழக்கங்களாகவே இருந்தன.
இந்த கோட்பாடுகள் அரசியலமைப்பில்
பல்வேறு இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன, இதில் ஷரத்து 2 இன் பத்தி
C இல் "கொடுங்கோன்மை, ஆதிக்கம், அடக்குமுறை அல்லது அடிபணிதல்
ஆகிவற்றை, அவை எந்தவடிவத்தில் இருப்பினும், நிராகரித்தல்". மற்றும் ஷரத்து 5 இன் 5 பிரிவில்
"காலனித்துவத்தை முழுமையாக நிராகரித்தல் மற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்தை தடுப்பது"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 152, வெளியுறவுக் கொள்கைப் பற்றி விவரிக்கிறது, "ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கை எந்த
வகையிலும் மேலாதிக்கம் மற்றும் அடக்குமுறையை மறுப்பது, அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும்
நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டது. அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பது, மேலாதிக்க சக்திகளுடன் ஒத்துப்போகாமல், எம்முடன் விரோதம் பாராட்டாத அரசாங்கங்களுடன் அமைதியான உறவுகளைப் பேணுதல்," என்று குறிப்பிடுகிறது. ஷரத்து "இயற்கை வளங்களின்
மற்றும் பொருளாதார வளங்கள்,
கலாச்சாரம், இராணுவம் அல்லது நாட்டின் பிற விவகாரங்கள் மீது வெளிநாட்டு
ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் தடைசெய்யப்பட்டுள்ளது," பிரிவு 153 கூறுகிறது,
அரசிலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த கொள்கைகள் ஈரானிய அரசியல் கலாச்சாரத்தை வளப்படுத்தி,
வளங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன.
புனித குர்ஆனின் வசனங்கள், இஸ்லாத்தின் வருகையின் வரலாறு மற்றும் இஸ்லாமிய அரசின் தோற்றம், பிறருடன் தொடர்பு கொண்ட விதம்,
நபி (ஸல்) அவர்கள், இமாம்கள் (அலை) மற்றும் தோழர்கள் ஆகியோரின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் குணங்கள் அனைத்தும் வெளியுறவுக் கொள்கையை சத்திய பாதையில் வழிநடத்தும்
வளமிக்க ஆதாரங்களாகும், அவை நிலையான கொள்கைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான
அரசியலமைப்பை வரைந்த அறிஞர்களுக்கு இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான
ஷரத்துகள் மற்றும் பந்திகளை வரைகையில், குறிப்பாக இமாம் ஹுசைன்
(அலை) போராட்டம் மற்றும் ஹிஜ்ரி 61 (கி.பி. 680)இல் இடம்பெற்ற கர்பலா எழுச்சி ஆகியன
உத்வேகம் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.
ஷீஆ முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஈரானியர்களுக்கு, கர்பலா சம்பவமானது ஒரு தனிநபர் மற்றும் சமூக வாழ்க்கையில்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேலும் ஓர் அரசை அமைப்பதற்குரிய ஒரு மதிப்புமிக்க விடயமாகும்.
இஸ்லாமிய குடியரசு உருவான பிறகு, கர்பலா எழுச்சியின் கொள்கைகள் மற்றும் அது வழங்கும் செய்திகளின் தாக்கத்தை இஸ்லாமிய
குடியரசின் சட்டப்பூர்வ ஆவணங்களிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மற்றும் அதன் நான்கு தசாப்த
செயல்பாடுகளிலும் தெளிவாக உணரலாம்.
கர்பலா எழுச்சியின் மதிப்புமிக்க
கோட்பாடுகள் மற்றும் ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் அந்தக் கொள்கைகளைப் பயன்படுத்துதல்
கர்பலா நிகழ்வானது ஆணவம் மற்றும்
கொடுங்கோன்மைக்கு எதிராக போராடும் கொள்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
கூபா வாசிகள் நசுக்கப்படும் நிலையிலிருந்து
தங்களைக் காப்பாற்றுவதற்கு நபி (ஸல்) அவர்களின் பேரனான இமாம் ஹுசைன் (அலை) அவர்களை அழைத்தார்கள்.
கூபா மக்களின் அழைப்பின் பேரில்
அவர்களின் விசுவாசக் கடிதங்களைப் பெற்ற பிறகு, இமாமவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின்
அரசியல் மையத்திற்குச் சென்று முதலில் மக்களை அவதிக்கு உட்படுத்தி வரும் கொடுங்கோன்மைக்கு
எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினார்கள்.
கர்பாலா நிகழ்வில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருடன் இருந்தபோதிலும், தனதும் தனது தோழர்களினதும் மற்றும் தனது குடும்பத்தினதும் உயிர்த்தியாகம் பற்றி
தெளிவாக அறிந்திருந்தபோதிலும், அவர்களின் கூடாரங்கள் எரிக்கப்படும் என்று அறிந்திருந்தபோதிலும்
மற்றும் அவரது குடும்பத்தவர் பலர் சிறைபிடிக்கப்படுவர் என்று கணிக்கக்கூடியதாய் இருந்தபோதிலும்
கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் ஆணவத்திற்கு எதிராக போராடும் தனது முடிவிலிருந்து
அவர் பின்வாங்கவுமில்லை சமரசம் செய்துகொள்ளவும் இல்லை.
கர்பலா எழுச்சியிலும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது
இயக்கத்திலும், " மேலாதிக்கத்தை நிராகரித்தல் மற்றும் அநியாயத்திற்கு அடிப்படியாமை" ஆகியன
நிலையான கொள்கைகளாக இருந்தன.
ஈரானின் வெளியுறவுக் கொள்கையின்
ஒரு முக்கிய கொள்கையாக இருக்கும் சுதந்திரமானது கர்பலா எழுச்சியின் வேர்களைக் கொண்டுள்ளது
எனலாம். எதிரிப் படையினருடனான உரையாடலில் இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் "நீங்கள்
ஒரு மதத்தைப் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை சுதந்திரமான மனிதர்களாக இருங்கள்"
என்று அறிவுறுத்தினார்கள்.
இந்த அறிவுரையானது சுதந்திரத்தை
அனுபவிப்பதற்கு மற்றும் சுதந்திர மனிதனாக வாழ்வதற்கு ஒரு மதத்தை பின்பற்றுவராய் இருக்கவேண்டிய
அவசியமில்லை என்பதைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சமூகமும் கொண்டிருக்க
வேண்டிய ஒரு கௌரவமாக. ஒரு சுதந்திர மனிதனாக இருப்பதற்கு மனித விழுமியங்கள் மற்றும்
கண்ணியம், இரக்கம் மற்றும் மரியாதை என்பன
அவசியமாகும்.
மக்களுக்குரிய மரியாதை
"போர்கள்" போன்ற நிகழ்வுகளில் கூட பின்பற்றப்பட வேண்டும். கர்பலா எழுச்சியில்
சமத்துவமற்ற போரின் கடுமையான நிலைமைகளில் கூட, இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் சுதந்திரமாக
இருப்பதை வலியுறுத்தினார்.
எனவே, இமாம் ஹுசைன் (அலை) அவர்களின்
"அடிபணியாதிருப்பது" மற்றும் "சுதந்திரமாக இருப்பது" ஆகியவற்றின்
பால் இஸ்லாமிய புரட்சியின் தலைவர்கள் ஈர்க்கப்பட்டிருப்பது இயற்கையானது, மேலும், இந்தக் கொள்கை முடிந்தவரை நடைமுறையில் உள்ளன.
இந்த அணுகுமுறைக்கு ஒரு உதாரணம், சதாமினால் திணிக்கப்பட்ட போரில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஈராக்கிய நகரங்களில் இஸ்லாமிய குடியரசின் படைகள் குண்டுகளை வீசவில்லை, ஈரானின் இராணுவ ஆலோசகர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை மீறக்கூடாது என்பதில் உறுதியாக
இருந்தனர். பொதுமக்கள் இல்லை என்று அறிந்த பின்னரே தாக்குதல்களை நடத்தினர்.
இமாம் ஹுசை (அலை) அவர்கள் காட்டித்தந்த
மற்றொரு மதிப்பு என்னவெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகும், இதுவும் இன்று ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் தெளிவாகக் காணப்படுகிறது, இது இஸ்லாமிய குடியரசிற்கும் மேற்குலகிற்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும்.
இமாம் ஹுசைனின் (அலை) கர்பலாவுக்குச்
செல்லும் வழியில், பலர் அவர்களின் பரிவாரத்தை எதிர்கொண்டனர். போர் ஒன்று நிகழக்கூடும், அது இரத்தக்களரியில் முடிவடையக்
கூடும் என்று அறிந்த பிறகும் கூட இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அழைப்புக்கு
செவிசாய்த்து அவரது பரிவாரத்துடன் இணைந்து, கடைசி தருணம் வரை அவருடன் சேர்ந்து
போராடி தம் உயிரைத் தியாகம் செய்தனர்.
இன்று, இஸ்லாமிய குடியரசு யமன், பஹ்ரைன், சிரியா, லெபனான், பலஸ்தீன் மற்றும் லத்தீன்
அமெரிக்க நாடுகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத
விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட அரசுகளின் அழைப்பின்
பேரிலேயே இந்த பகுதிகளுக்கு ஈரான் சென்றிருக்கிறது, அதுவும் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு ஆளான மக்களுக்கு
உதவுவதற்காக.
வெனிசுலா மற்றும் கியூபா நாடுகளின்
மக்கள் அமெரிக்கர்களின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
மேலும், இந்த நாடுகளின் அரசாங்கங்கள் காலனித்துவம் மற்றும் ஆணவத்தை எதிர்த்துப் போராடிய
இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
அது போன்றே சிரிய மக்களும் பிராந்திய
மற்றும் இஸ்லாம் விரோத வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் திணிக்கப்பட்ட பயங்கரவாதத்தை
எதிர்கொண்டு வருகின்றனர். எவருக்கும் இதில் சந்தேகமில்லை. ஆய்வு நிறுவனங்கள், உளவுத்துறை நிறுவனங்கள் அல்லது
சுதந்திர ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இதில் சந்தேகமில்லை. ஆணவ அதிகாரத்துக்கு உட்பட்ட ஊடகங்கள்
இதற்கு விதிவிலக்காக அமையலாம்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும்
அதன் கொள்கைக்கு இணங்க, ஈரான் தனது இராணுவ ஆலோசகர்களை
பக்தாத் மற்றும் டமஸ்கஸ் நகரங்களுக்கு, அவற்றின் சட்டபூர்வமான
அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில், அனுப்பியது. தாம் உதவி
கோரிய கடைசி நாடு ஈரானாக இருந்தபோதிலும் எமக்கு உதவிக்கு வந்த முதலாவது நாடு ஈரானாகும்
என்று இந்த நாடுகளின் தலைவர்கள் கூறினர்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும்
கொள்கையின் காரணமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு தனது பிரசன்னத்தின் மூலம், வட ஈராக் குர்திஸ்தான் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் படை ஊடுருவலைத் தடுத்தது. இதன்போது அப்பிரதேச
மக்களின் மதம் என்னவென்றோ அல்லது எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்றோ பார்க்கவில்லை; அதன் மனிதாபிமான கடமையை நிறைவேற்ற மட்டுமே
ஈரான் விரும்பியது. இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட சுதந்திரக் கொள்கையை செயல்படுத்தவும்
களமிறங்கியது, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஷீஆக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ இல்லாதிருந்த போதிலும்
கூட அம் மக்களுக்காக போரிட்டு பல ஈரானியப் படையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர்.
இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக்
கொள்கையில் கர்பலா எழுச்சியின் தாக்கம் மேற்கூறிய ஓரிரண்டு சம்பவங்களுக்கு மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டதல்ல. கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறையுடன் சமரசம் செய்யாதது அதன்
மற்றொரு கொள்கையாகும். கர்பலா வழங்கிய பாடம் ஒடுக்குமுறைக்கு சரணடையாது, மனிதகுலத்திற்கு ஒரு நித்திய படிப்பினையாக அமைந்தது
போலவே, இஸ்லாமிய குடியரசு சதாம் ஹுசைனின்
பாத்திஸ ஆட்சியிடம் சரணடையாது தொடர்ந்து எட்டு வருடமாக போரிட்டது. ராணுவ மற்றும் ராஜதந்திர
ரீதியான அழுத்தத்திற்கு ஒருபோதும் ஈரான் அடிபணியவில்லை. ஈரான் மீது அநியாயமாக திணிக்கப்பட்ட
போரின் போது, போரை தொடங்கிய குற்றத்தில் இருந்து சதாமை விடுவிக்க சர்வதேச வட்டாரங்கள் பல முயற்சிகளை
மேற்கொண்டன. எவ்வாறு அநீதியான யுத்தத்தை திணித்தனரோ அதுபோன்றதொரு அநீதியான சமாதானத்தையும்
திணிக்க முனைந்தனர். இவர்களது அழுத்தங்கள் ஈரானிடம் எடுபடவில்லை.
போரின்போது ஈரான் ஆரம்பத்தில்
இழந்த பிரதேசங்கள் அனைத்தையும் விடுவித்தது மட்டுமல்லாமல் பல ஈராக்கிய நகரங்களையும்
கைப்பற்றினர். ஆக்கிரமிப்பாளன் தண்டிக்கப்படும் வரை போர் தொடரும் என்ற நிலையிலும் யுத்தகளத்தில்
ஈரானிய ராணுவத்தின் கை ஓங்கியிருந்த நிலையிலும் ஒருநாள் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்)
அவர்கள் திடீரென போர்நிறுத்தத்தை அறிவித்தார்கள். (சதாம் ஹுசைன் ஈரானுக்கு எதிராக தொடுத்த
யுத்தத்தில், அவருக்கு உதவிய நண்பர்களாலேயே தண்டிக்கப்படவுள்ளார் என்ற ரகசியத்தை இமாம் அறிந்திருந்தாரோ
என்னவோ) படை வாபஸ் பெறப்பட்டு, 8 வருடகால போர் ஓய்ந்தது.
ஆயினும், அடக்குமுறை இருக்கும் வரை, இஸ்லாமிய குடியரசு ஒடுக்குபவர்களுடனும் ஆணவம் கொண்ட
சக்திகளுடனும் எதிர்த்து போராடுவதை நிறுத்தாது என்ற இமாம் ஹுசைனின் எழுச்சியின் கொள்கையை
மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) மீண்டும் வலியுறுத்தினார்.
உலகில் எந்த நாடும் எந்த ஒரு
சந்தர்ப்பத்திலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தளவு தடைகளையும் அழுத்தங்களை எதிர்கொண்டதில்லை
எனலாம். இன்றளவிலும் அதிகரித்த பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. ஆயினும் ஈரான் எந்த
அழுத்தங்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ அடிபணிய போவதில்லை என்பதை நன்றாகவே உணர்த்தியுள்ளது..
இஸ்லாமிய குடியரசு மேற்கத்திய
நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டும்போது கூட, அமெரிக்காவின் அழுத்தமும் பொருளாதார
தடைகளும் இருந்துவருகிறது. இன்றளவிலும் அவை
தொடர்கின்றன. எனினும், அது அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் ஒருபோதும்
அடிபணியவில்லை.
அமெரிக்கா உணராத விஷயம் என்னவென்றால், முந்தைய P5 + 1 இன் கட்டமைப்பின் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள்
ஒரு குறிப்பிட்ட நிபந்தனை இல்லாத ஒரு விருப்பமாகும். ஆனால் இன்று அவ்வாறல்ல, "பேச்சுவார்த்தை இல்லை" என்பது ஈரானின் வெளியுறவுக்
கொள்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீற முடியாத கொள்கையாகவும் உள்ளது. ஏனென்றால்
இது அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு அடிபணியாத ஈரானின் கொள்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, இது ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கும் கர்பலா எழுச்சிக்கும் இடையிலான பொதுவான கொள்கைகளில்
ஒன்றாகும்.
ஈரானின் வெளியுறவுக் கொள்கைகள், பெருமானங்கள் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளாகும், அவை இவர்களது வணிகக் கொள்கைகள்
மற்றும் இவர்களது உலகை ஆதிக்கம் செலுத்தும் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை.
இந்த தீர்மானங்கள் இஸ்லாமிய ஈரானில்
கர்பலா நிகழ்வு உட்பட நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தில் உள்ள பெருமானங்களினால் ஆனவையாகும்.
ஈரானின் இஸ்லாமிய குடியரசின் நடத்தை மற்றும் உத்திகளை மதிப்பீடு செய்வதற்கு முன் மேற்கத்திய
ஆய்வாளர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
https://english.khamenei.ir/news/7891/Ashura-and-Iran-s-foreign-policy
No comments:
Post a Comment