Abrahamic Hajj: Moving toward God and condemning false gods
பொய் கடவுள்களை நிராகரித்து, சர்வ வல்லமை மிக்க இறைவனை நோக்கி நகர்வதே இப்ராஹீமிய்ய ஹஜ்
ஹஜ்ஜின் போது ஒன்றுகூடும்
மாபெரும் கூட்டம் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உலகத்துக்கும் பெரிதும் பயனளிக்கும் ஆற்றலைக்
கொண்டுள்ளது.
இருப்பினும், பல மகத்துவமிக்க நிகழ்வுகளில் பிறழ்வுகள் ஏற்பட்டது
போலவே இஸ்லாமிய-இப்ராஹீமிய ஹஜ்ஜும் ஓர் இலக்கு நோக்கிய அதன் சத்தியாபாதையிலிருந்து
சில விலகல்களுக்கு உட்பட்டுள்ளது.
இந்த கட்டுரையானது, முஸ்லிம் உலகுக்கு பெரும் நன்மைகளையும்
ஆசீர்வாதங்களையும் வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள உண்மையான இப்ராஹீமிய்ய ஹஜ்ஜின்
தாத்பரியங்களை விளக்க முயற்சிக்கிறது,
புனித குர்ஆனின் முதல்
அத்தியாயமான அல்-பாத்திஹா (திறப்பு), வசனங்கள் 5-6 இந்த பரிசுத்த
தாத்பரியத்தை சுருக்கமாகக் காட்டுகிறது.
اِيَّاكَ نَعْبُدُ
وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
(இறைவா!) உன்னையே நாங்கள்
வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
ஒரு தனி மனிதர் தனிமையில்
தொழுகையில் ஈடுபடும் நேரம் கூட இது முஸ்லிம்களின்
அனைத்து பிரார்த்தனைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இதன் மூலம் அனைத்து மதங்கள், அனைத்து இனங்கள், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் அனைத்து புவியியல் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் சார்பாக தனிநபராக நின்று இறைவனின் அருளைக் கேட்கிறார். இந்தப் பிரார்த்தனையில் அவர் தன்னையும் மற்றும் அனைவரையும் சரியான பாதையில் வழிநடத்துமாறு இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
இறைவனின் வழிகாட்டல்
என்பது, அவனுடைய மற்ற எல்லா அருட்கொடைகளுடனும்
ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடுகையில், அவனது கருணையின் மிக
உயர்ந்த வெளிப்பாடாகும்.
மனிதர்கள் என்போர், சாராம்சத்தில், இறைவனுக்கு சொந்தமான ஆத்மாக்கள் என்பதால், அவனிடமிருந்து வந்து, அவனிடமே திரும்பி செல்வதும்; அவனே இறுதி இலக்கு, முழுமையான அமைதி மற்றும் முழுமையான அன்பு போன்ற மிக உயர்ந்த
ஆசீர்வாதமாக இருப்பதால்,
அவனை அடைவதற்கு வழிகாட்டுதல்
தேவை.
ஆகவே, இந்த வழிகாட்டலின் சமூக அம்சத்தை இறைவனே வலியுறுத்துகின்றான். அதனால்தான் முஸ்லிம்கள்
தங்கள் தொழுகைகளை குழுவாக நிறைவேற்றுகின்றனர்.
அதிகாலை முதல் இரவுவரை ஒரு நாளில் ஐந்து முறை அவர்கள் தொழுகைகளை குழுவாக நிறைவேற்றுகின்றனர், மேலும் தொழுகையானது கூட்டாக நிறைவேற்றப்படுவதை மிகவும் உயர்வாக பரிந்துரைக்கப்படுகிறது.
இது வெறுமனே உடல் ரீதியான ஒரு ஒன்றுகூடல் அல்ல. இறைவனின் அருளை வேண்டுவதற்காகவே முஸ்லிம்கள் ஒன்று கூடுகின்றனர். இந்த ஒன்றுகூடலை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் காலத்தில் இந்த ஒன்றுகூடல்கள் வாய்ப்புகளாக அமைந்தன. இதுபோன்ற ஒன்றுகூடல்களின்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் சொந்த பிரச்சினைகள், தமது சமூக விடயங்கள், உலகின் கலாசார மற்றும் அரசியல்
பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்கள். அவர் ஏழை மக்கள் மீது கவனம் செலுத்தினார்கள்,
மக்களை விசுவாசத்தின்
காரணமாகவோ அல்லது படைப்பிலோ தங்கள் சகோதரிகளாக, சகோதரர்களாக கருதி, அவர்களின் நிலையை மேம்படுத்த முயன்றார்கள், அதற்காக மற்றவர்களின் உதவியையும்
நாடினார்கள்.
இவர்கள் இறைவனின் பிற படைப்புக்களான உயிரினங்கள் மீது அக்கறை காட்டுவோராகவும், தனிப்பட்ட ரீதியில் ஆன்மீக உச்சத்தை அடைய விரும்புவோராகவும் இருந்தனர். அவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்டோராகவோ அல்லது ஆன்மீக அகங்காரம் கொண்டோராகவோ
இருக்கவில்லை.
இஸ்லாத்தில் மற்றவர்களின், அதாவது, பிற வீடுகளில் உள்ளோர், பழங்குடியினர், கலாச்சார பிரிவினர்கள், பல இனங்களை சேர்ந்தோர், வேறு நாட்டவர்கள் மற்றும் வேற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவராலும் எதிகொள்ளப்படும் சிரமங்களையும் சிக்கல்களையும் அவை அவர்களது சொந்த பிரச்சினைகளாக கருதி விட்டுவிடவில்லை.
மற்றொரு மனிதனை பாதிக்கும்
பேரழிவு மற்றும் பெரும் துயரம் குறித்து ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருந்தால் அவனோ அல்லது
அவளோ ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, அல்-பாத்திஹா அத்தியாயத்தை ஓதுகையில், முஸ்லிம்கள் குழுவாக உதவி கேட்கிறார்கள்
மற்றும் குழுவாகவே இறைவனை வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் ஏனையோரையும் சரியான பாதையில்
வழிநடத்தும்படி இறைவனிடம் கேட்டுக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் இறைவனுடைய கோபத்துக்கு
உள்ளான மக்களினதும் மற்றும் வழிதவறிய மக்களினதும் பாதையைத் தவிர்க்க உதவுமாறு கோருகிறார்கள்.
ஆகவே, குர்ஆனின் அல்-பாத்திஹா அத்தியாயம் சமூக தன்மையைகொண்டுள்ள ஒரு சுருக்கமான அத்தியாயம்
எனலாம்.
வழிகாட்டுதல் என்பது
அனைத்து மக்களின் ஓர் அளப்பரிய அருளாகும். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், நோய்வாய்ப்பட்ட மக்கள் உலக வாழ்க்கையில் சந்திக்கும்
பிரச்சினைகளில் அலட்சியமாக இருக்கும் ஒருவர் சரியான பாதையில் வழிநடாத்தப் படுவதில்லை.
ஒடுக்குமுறையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்கத் துணியாத ஒரு நபர் சரியான வழியில் நடத்தப்படுவதில்லை.
ஒடுக்கப்பட்டவர்கள் மீதான
உளப்பூர்வமான பச்சாதாபம்மும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக சினமும் இருப்பது இறை
நேசத்தில் உரியதாகும். அதாவது, இறைவனையும் அவன் படைப்பான உயிரினங்களையும் நேசிப்பது
மற்றும் அவனுடைய படைப்புகளை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ
ஒடுக்குபவர்களை வெறுப்பது வழிகாட்டலின் சாராம்சமாகும்.
வழிகாட்டப்பட்ட ஒரு நபர்
எப்போதும் அவருக்கும் இறைவனுக்கும் இடையில் தூரத்தை உருவாக்கும் எல்லாவற்றிற்கும் எதிராக
போராடுகிறார்.
குறிப்பிட்ட தடைகளின்
காரணி தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ இருக்கலாம், ஆனால் தனிநபர் ஒருவர் சமூகத்திலிருந்து
பிரிக்கப்படுவதில்லை மற்றும் சமூகமானது குறிப்பிட்ட தனிநபருடன் தொடர்புடையதாகவே இருக்கும்.
யாராவது ஒரு நபர் அவரது தூய்மையையும், இறைவன் மீதான பக்தியையும் பரிசோதிக்க விரும்பினால், அவரது குடும்பம், அயலவர்கள், சகாக்கள், தமது நகர மக்கள், நாட்டு மக்கள் அல்லது வெளிநாட்டவர், பிற இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர் எவ்வளவு தூரம் தொடர்பில் உள்ளார் என்பதை அந்த நபர் பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தில், ஆன்மீக சுய ஒழுக்கம் இல்லாமல், ஆணவ சக்திக்கு எதிராக போராடாமல், ஒரு நபரால் இறைவனுக்கு கீழ்ப்படியும் ஒருவராக இருக்க முடியாது.
இஸ்லாத்தை பொறுத்தவரை, ஆன்மீக சுய ஒழுக்கம் இல்லாமலும்
ஆணவ சக்திக்கு எதிராக போராடாமலும் ஒரு நபரால் இறைவனுக்கு கீழ்ப்படியும் ஒருவராக இருக்க
முடியாது. அதேவேளை ஒரு சமூக அளவில் முற்றிலும் வழிநடத்தப்பட்ட ஒருவராகவோ அல்லது உயர்
நோக்கத்தை கொண்டிருப்பவராகவோ இருக்க முடியாது.
அதேபோல், ஒருவரின் இதயத்தில் மனித ஆன்மாவை தனிப்பட்ட ரீதியில்
அடிமைப்படுத்தும் அனைத்து சிலைகள், போலி தெய்வங்கள், பிர்அவ்ன்கள் மற்றும் அடக்குமுறையாளர்களை விட்டொழிக்க
வேண்டும். அவ்வாறில்லாமல் சமூக ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவோ
அல்லது பிர்அவ்ன்களுக்கு எதிராகவோ ஒரு நபரால்
போராட முடியாது.
இது அடிமைப்படுத்துபவர்களை
அல்லது பல்தெய்வ அடிமைப்படுத்தல் கொள்கைக்கு
எதிரான போராட்டமாகும், இது ஒரே நேரத்தில் தனிநபர் மற்றும் சமூகம் என்ற இரண்டு
நிலைகளில் நடைபெறுகிறது.
ஹஜ் யாத்திரை என்பது
உலக அளவில் சமூக மற்றும் தனிநபரின் நிலைகளில் பலதெய்வ கொள்கைக்கு எதிரான இந்த போராட்டத்தின்
மகத்துவமிக்க வெளிப்பாடாகும்.
ஹஜ்ஜில் பங்கேற்பதற்கு
உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர். எல்லா தேசங்களிலிருந்தும், இனங்களிலிருந்தும், எல்லா கலாச்சார பின்னைகளையும் கொண்ட சகல வயதினரூம் பாலின வித்தியாசமின்றி
இந்த அற்புதமான ஒன்றுகூடலுக்கு வருகிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை
பொறுத்தவரை அனைத்து சமூக மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றியும் தொடர்புகொள்வதற்கான
ஒரு தனித்துவமான வாய்ப்பு இதுவாகும்.
உலக அளவில் அன்பை வெளிப்படுத்துவது
நபி (ஸல்) அவர்களினதும் மற்றும் புனித குர்ஆனினதும் ஆவி போன்றது. ஆகவேதான் விசுவாசிகள்
அனைவரும் அல்லாஹ்வின் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்கள்.
அதே சமயம், எல்லா விசுவாசிகளும் மனிதர்களை உடல் மற்றும் ஆன்மீக அடிமைத்தனத்தில்
வைக்க விரும்பும் எல்லா அடக்குமுறை மற்றும் அடிமைப்படுத்தும் பிர்அவனிய சக்திகளுக்கு
எதிராக தங்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
காலனித்துவமயமாக்கலுக்கும்
மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கும் எதிராக இயக்கப்படவேண்டிய இந்த ஒன்றுகூடலின்
உயிர்துடிப்பு, கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
எழுச்சிக்குப் பிறகு அடங்கிப்போய், செயலற்றதாக இருந்து வந்தது.
நவீன பிர்அவ்ன்களான இந்த
அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறையாளர்கள் முஸ்லிம் உலகில் இத்தகைய உயிர்துடிப்புக்கு எதிராக
மிகவும் கவனமாக, சூட்சுமமான முறையில் காலனித்துவபடுத்தப்பட்ட இஸ்லாத்தைக் கொண்டு அதைத்
தடுத்தனர்.
ஆயினும் 1979 ல் இமாம் கொமெய்னி தலைமையில் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி இந்த ஏகாதிபத்திய தந்திரத்தை உடைத்தது.
இமாம் கொமெய்னி அவர்களது
வழிகாட்டுதலின் கீழ் உலகின் பல பாகங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவரது கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, ஹஜ் சமயத்தில் மக்காவில் ஒன்றுகூடி, இஸ்லாத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு, சமூக மற்றும் அரசியல் விடயங்களை உணர்ந்தனர். இதன் விளைவாக, அவர்களின் காலத்தின் பிர்அவ்ன்களுக்கு எதிராக, அதாவது சாத்தானிய ஏகாதிபத்திய-காலனித்துவ
அமெரிக்க மற்றும் பிற மேற்கு நாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினர்.
எனவே ஒரு வகையில், சாத்தானின் வெளிப்பாடுகளான ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ
அரசுகள் மீது கோபம், எதிர்ப்பு மற்றும் அதிருப்தியை
வெளிப்படையாக வெளிப்படுத்துவதன் மூலம் அடையாள “ஷெய்த்தானுக்கு கல்லெறிதல்” (ஹஜ் கிரியைகளில்
ஒரு சடங்காக) உணரப்பட்டது மற்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஹஜ் ஒரு காலனித்துவமற்ற
மற்றும் உண்மையான அர்த்தத்தில் சாத்தானிய ஏகாதிபத்தியத்தையும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது
அணுகுண்டை வீசியதையும் கண்டிக்கிறது. ஈராக் மற்றும் ஈரானில் உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இரசாயன
ஆயுதங்களைப் பயன்படுத்தியதையும் கண்டிக்கிறது. அதேவேளை யுத்தம், வறுமை, பாதுகாப்பின்மை, மரணம் மற்றும் வெகுஜன இடப்பெயர்ச்சி ஆகியவற்றை திணிக்கும் அதன் ஊழியர்களையும் கண்டிக்கிறது.
பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, யெமன், வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின்; - சிலி, நிகரகுவா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளில் - ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்த சதித்திட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராக இவர்களின் குரல்கள் ஓங்கி எழுகின்றன.
மேலும் அமெரிக்காவிலும்,
ஆபிரிக்காவிலும் மற்றும் ஆசியாவிலும் வாழும் கறுப்பின மக்கள் மீது வறுமையை திணித்தலையும்; மற்றும் இந்த சக்திகள் அயர்லாந்தை
சுரண்டுவதையும், ஏழை பழங்குடி கனேடிய பள்ளி குழந்தைகளை
உடல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் காலனித்துவப்படுத்துவதை,
லத்தீன் அமெரிக்க நாடுகளை
தங்கள் சொந்த காலனித்துவ கொல்லைப்புறமாக கொடுங்கோன்மைக்கு உட்படுத்துவதையும் கண்டிக்கிறது.
பாலியல், போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் மூலம் நாடுகளை சிதைக்கும் திட்டத்துடன் கருவறுக்கும்
(இந்த சித்தாந்தத்தை வளர்க்கின்ற மற்றும் பரப்புகின்ற நாடுகளுக்கும்) தீய சக்திகள்
இப்ராஹீமிய்ய ஹஜ்ஜுடன் உடன்படவில்லை. உண்மையான இஸ்லாமிய ஹஜ் குறிப்பிடப்பட்ட விடயங்களை
சாத்தானின் வெளிப்பாடுகளாக அடையாளம் காண்கிறது. எனவே, அனைத்து முஸ்லிம்களையும், சத்தியம் தேடும் அனைத்து சுதந்திர
நபர்களையும் கூட அவற்றுக்கு எதிராக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறது.
எவ்வாறாயினும், சாத்தானிய ஏகாதிபத்தியமானது இஸ்லாம் மற்றும் ஹஜ்ஜின்
மீது காலனித்துவ பதிப்பை ஏற்படுத்தவே முயற்சிக்கிறது. இந்த சாத்தானிய சக்திகள் புறவய சடங்குகள் சிலவற்றுடன் வரையறுக்கும் ஒரு ஹஜ் யாத்திரையையே
ஊக்குவிக்கிறது. நபி மூஸா (அலை) அவர்களதும் நபி ஈஸா (அலை) அவர்களதும் மற்றுமுள்ள நபிமார்களதும்
வழிவந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் புரட்சிகரமான மற்றும் தூய்மைப்படுத்தும் இயக்கத்திலிருந்து
ஹஜ்ஜை தூரப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.
ஈரான் இஸ்லாமிய புரட்சியின்
தற்போதைய தலைவரான இமாம் கமேனி, இமாம் கொமெய்னி (ரஹ்) அவைகளை போலவே, உயிரோட்டமற்ற, காலனித்துவ ஹஜ்ஜுக்கு மாறாக, உயிர்துடிப்பான ஹஜ்ஜை வலியுறுத்துகிறார்.
ஹஜ் தொடர்பான தனது வருடாந்திர செய்திகளில், அவர் பல விடயங்களை முன்னிலை படுத்துகின்றார்; இதன்போது அதில் எப்போதும் முக்கிய விடயங்கள் இரண்டு இருந்தன: முதலாவதாக, இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமை, இரண்டாவதாக, பொய்யான கடவுள்களைத் எதிர்த்தல் ஆகும்.
2019 ஆம் ஆண்டு ஹாஜிகளுக்கு
விடுத்த செய்தியில், ஹஜ் சந்தர்ப்பத்தை “கொடுங்கோலர்களின்
இரக்கமின்மை, கொடுமை, அநியாயம் மற்றும் ஊழல் ஆகிய ஒவ்வொரு தீய செயலையும் கண்டித்து, வரலாறு முழுவதும் திமிர்பிடித்தவர்களால் செய்யப்படும்
மிரட்டல் மற்றும் மிரட்டி காரியம் சாதித்தல் போன்ற அநியாயங்களுக்கு எதிராக கொதித்தெழும்
நேரம்… ”, என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “இன்று, திமிர்பிடித்த தீய சக்திகளால் - அவற்றில் முதன்மையானது அமெரிக்கா - முன்வைக்கப்படும்
ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் குஃப்ர் எனும்
இறை நிராகரிப்பு ஆகியவற்றை விமர்சிக்காது இருப்பது, ஒடுக்கப்பட்டவர்களைக் கொல்வதற்கும், போர்களை நடத்துவதற்கும் ஒப்பாகும் என்றார்.
நபிகள் நாயகத்தின் பாரம்பரியத்தின்படி, பலதெய்வ கொள்கைக்கு எதிராகப் போராடாமல் கொண்டுள்ள இறை நேசமானது
அழகான வெற்று சொற்களாகவே அமையக் கூடும். இதன்
காரணமாகவே "லா இலாஹா இல்லல்லாஹ்"
எனும் முழக்கமும் உறுதிமொழியும் இஸ்லாத்தில் மிக முக்கியமானதாக உள்ளது.
ஒரு விசுவாசிக்கு போலி
கடவுளர்கள் மீதான இந்த ஆரம்ப மறுப்பு மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு செயலின் தொடக்கத்திற்கு
முன்பும், ஒரு விசுவாசி சாத்தானியத்திலிருந்து முதலில் இறைவனின் பாதுகாப்பைத் தேட வேண்டும், அதன் பிறகு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தினால்
காரியத்தில் இறங்க வேண்டும்.
https://english.khamenei.ir/news/8584/Abrahamic-Hajj-Moving-toward-God-and-condemning-false-gods
No comments:
Post a Comment