Tuesday, April 13, 2021

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உபாயம் தோல்வியடைந்தது: நியூயார்க் டைம்ஸ்

New York Times: Iran Will Never Capitulate

2018 ஆம் ஆண்டில், டிரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியது, அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமான புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதில் ஈரானை அடிபணியச் செய்யும் அளவுக்கு அதிகமான அடக்குமுறை போட்டுளாதாரத் தடைகள் ஈரானை முடக்கும் என்று நம்பினர், "ஆனால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உபாயம் தோல்வியடைந்தது", என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானிய அரசாங்கத்தை கைவிட்ட அணுசக்தி பணிகளை மீண்டும் தொடங்கத் தூண்டின. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் நெருக்கமாக பணியாற்றிய சீனா உள்ளிட்ட பிற நாடுகள், அமெரிக்காவினது ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் சோர்ந்து போயுள்ளன, மேலும் அவை ஈரானுடனான வணிகத்தை வேறு வழிகளில் மீண்டும் தொடங்கலாம். 

ஈரானுக்கான டிரம்ப்பின் சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றிய எலியட் ஆப்ராம்ஸ் போன்ற குடியரசுக் கட்சியினரும், பாப் மெனண்டெஸ் போன்ற ஜனநாயகக் கட்சியினரும் அண்மையில் 43 செனட்டர்கள் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர், இது ஈரானின் அணுசக்திக்கு ஆழமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் மற்றொரு உடன்படிக்கை எட்டப்படும் வரை - அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்தியத்தில் எதிர்ப்பு இயக்கங்களுக்கு அதன் ஆதரவு ஆகியவை நிறுத்தப்படும் வரை - பொருளாதாரத் தடைகள் தொடர வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருந்தது.

"அந்த கடிதம் பேச்சுவார்த்தைக்கான தொடக்க புள்ளியாக அமையும் என்பதை விட அது ஒரு அமெரிக்க விருப்பப்பட்டியலாகும். ஈரான் அந்த அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணியும் என்று இருந்தால், அது மிக நீண்ட காலத்திற்கு முன்பே அவ்வாறு செய்திருக்கும்" என்று டைம்ஸ் கூறியது.

"இந்த கட்டத்தில், *அமெரிக்காவின்) கடினமான அணுகுமுறை பொது அறிவுக்கு சவால்விடுவதாக அமைந்துள்ளது.. முதல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க தவறியதால் எவ்வாறு அது மற்றொன்றை மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று ஈரானியர்கள் சந்தேகிப்பதில் நியாயம் உள்ளது?".

டைம்ஸ் கருத்துப்படி, "அதிகபட்ச அழுத்தம்" தடைகள் தொடர்ச்சியாக நீடிக்க முடியாதவை என்பது சங்கடமான உண்மை." அத்தடைகளால் தம் விருப்பப்படி ஈரானை மாற்ற முடியவில்லை; நடந்ததோ அதற்கு மிகவும் நேர்மாறானது,” என்று அது கூறியது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரானுக்கு யுரேனியத்தை 3.67 சதவிகிதம் வரை செரிவாக்க அனுமதிக்கப்பட்டது, இது ஆயுத தரத்திற்கு மிகக் குறைவு. இது இப்போது 20 சதவீதம் செரிவாக்குகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் 202.8 கிலோகிராம் யுரேனியமாக வைத்தருக்க மட்டுப்படுத்தப்பட்டது. இப்போது ஈரானிடம் மூன்று டன் இருப்பு வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் அணுசக்தி எரிபொருள் சுழற்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் முன்னறிவித்தல் இன்றி விசாரிக்க சர்வதேச ஆய்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இப்போது, ஆய்வாளர்கள் அந்த வகையான அணுகலை இழக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில், அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால், ஈரானின் அணுசக்தி தளங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்த சர்வதேச ஆய்வாளர்கள் தமது பார்வை இழக்க நேரிடும். அந்த நிலை நிலையானது அல்ல, ”என்று அந்த அறிக்கை கூறியது.

நிதித் தடைகளை அதிகமாகப் பயன்படுத்துவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேக்கப் லூவின் எச்சரிக்கையையும் டைம்ஸ் தொட்டுக்காட்டியது.

"ஈரானுடன் வர்த்தகம் செய்யும் உலகெங்கிலும் உள்ள வங்கிகளையும் வணிகங்களையும் தண்டிக்க அமேரிக்கா விடுக்கும் அச்சுறுத்தலை மற்ற நாடுகளை  சோர்வடையச் செய்தால், அவர்கள் அமெரிக்க நிதி முறைக்கு மாற்று வழிகளைத் தேட ஆரம்பிக்கலாம். அமெரிக்க பொருளாதாரத் தடைகள் தங்கள் சக்தியை இழக்கச் செய்யும் என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க வங்கிகளின் மையமும், உலகின் ஆதிக்கம் செலுத்தும் நாணயமாக டாலரின் நிலையும் தேயத் தொடங்கும்,” என்று அது கூறியது.

"பொருளாதாரத் தடைகள் நீண்ட காலமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கியுள்ளன, அதன் விளைவுகளை காணத் தொடங்கியுள்ளோம். (தாம் இறக்குமதிசெய்யும்) எண்ணெய்க்கு ஈடாக ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான திட்டத்தை சீனாவின் சமீபத்திய அறிவிப்பு, சீனாவும் ரஷ்யாவும் இதுபோன்ற கடுமையான (அமெரிக்க) கட்டுப்பாடுகளை என்றென்றும் பின்பற்றாது என்பதற்கான அறிகுறியாகும்.என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.

http://kayhan.ir/en/news/89076/new-york-times-iran-will-never-capitulate

 


No comments:

Post a Comment