Iran's missile programme is non-negotiable, says Rouhani
"தெஹ்ரானின் ஏவுகணைத் திட்டம், பேச்சுவார்த்தைக்குட்பட்டது
அல்ல என்பதை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நன்கு
அறிவார்", என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி
திங்களன்று கூறினார்.
பைடனின்
வெற்றியானது அமரிக்க்காவை 2015 இல் ஈரான் உலக வல்லரசுகளுடன் எட்டிய அணுசக்தி
ஒப்பந்தத்தில் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பை ஏற்படடுத்தியுள்ளது, மேலும் ஈரானின் அணுசக்தி பணிகள், அதன் பாலிஸ்டிக்
ஏவுகணைகள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு
அடிப்படையாக அமையலாம்.
ஆனால்
தெஹ்ரான் தற்காப்புக்காக ஈடுபட்டுள்ள தனது ஏவுகணைத் திட்டத்தை நிறுத்தவோ அல்லது
அதன் பிராந்தியக் கொள்கையை மாற்றவோ முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டது, அதற்கு பதிலாக அமெரிக்காவே அதன் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும் என்றும் ட்ரம்பினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட சட்டவிரோத பொருளாதாரத்
தடைகளை நீக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
"ஏவுகணை பிரச்சினையை (அணுசக்தி பேச்சுவார்த்தையில்) சேர்க்க ட்ரம்ப்
நிர்வாகம் பல மாதங்களாக முயன்றது, (இது
அவ்வொப்பந்தத்திற்குள் அடங்கியிராத விடயம் என்பதால்) ஈரானினால்
நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி டிரம்ப் அறியாதிருந்திருக்கலாம், ஆனால் பைடன் இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை நன்கு அறிவார் ”என்று
தெஹ்ரானில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ரூஹானி கூறினார்.
"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கு நாங்கள் மற்றொரு உடன்பாட்டை எட்ட
வேண்டும் என்று ட்ரம்ப் கூறுவதைப் போன்று பைடன் சொன்னதாக நான் இதுவரை
அறியவில்லை" என்று ரூஹானி கூறினார்.
மத்திய
கிழக்கில் ஈரான் மிகப்பெரிய ஏவுகணைத் சக்திகளில் ஒன்றாகும், அமெரிக்காவாகட்டும் அல்லது பிற எதிரி நாடுகளாகட்டும் அவர்களுக்கு பதிலடி
கொடுக்கும் வல்லமை கொண்ட ஒரு நாடுமாகும் என்பதை எதிரிகள் நன்றாக அறிவர்.
மத்தியகிழக்கில் தமது ஆதிக்கம் குறைந்துவருவதை இவர்களால் சகிக்க முடியவில்லை. ஆகவே
ஈரானின் இந்த ஏவுகணை வல்லமையை இல்லாதொழிக்க, அத்துறையில்
அதன் வளர்ச்சியைத் தடுக்க - பிராந்தியத்தில் உள்ள அடிமை அரபு ராஜ்ஜியங்களுடன்
இணைந்து - அத்தனை முயற்சிகளையும் எடுக்கின்றனர்.
நாளுக்கு நாள் பலம்பெற்றுவரும் ஈரானின் தற்காப்பு ஏவுகணை திட்டம் “எதிரிகளின் கண்களில் ஒரு முள்ளாக குத்திக்கொண்டு இருக்கிறது” என்று பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹாத்தமி கூறினார்.
"ஆனால் [எங்கள்] ஜிஹாத் எனும்
தியாக கலாச்சாரம் [ஈரானின்] முதலிடத்தில் உள்ளது, மேலும்
தியாக கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு தேசத்தை (எவராலும்) ஆதிக்கம் செலுத்த
முடியாது" என்று பிரிகேடியர் ஜெனரல் ஹாத்தமி செவ்வாயன்று கூறினார்.
தற்காப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின்
வரவு செலவுத் திட்டம் இவ்வாண்டில் 256 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும்
அவர் கூறினார்.
ஈரானிய உயர்மட்ட விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே
படுகொலை செய்யப்பட்ட பின்னர், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இரண்டு முக்கியமான
விடயங்களை நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தி வைக்க வேண்டும் என்று
சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் வலியறுத்திக் கூறினார்.
"முதலாவதாக, இந்த
படுபாதக செயலுக்கு பதிலடி கொடுப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை
வழங்குவது, இரண்டாவதாக, தியாகி
ஃஃபக்ரிசாதேயின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைப் முன்னெடுத்துச்
செல்வது" என்று ஜெனரல் கூறினார்.
ஈரானின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான ஃபக்ரிசாதே
கடந்த நவம்பர் 27
அன்று படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் ஈரானிய அணு விஞ்ஞானிகளுக்கு
எதிராக பல படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்ட இஸ்ரேல் மீது ஈரானிய அதிகாரிகள் விரல்
நீட்டினார். வெளியுறவு அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீஃப் விஞ்ஞானி படுகொலை
செய்யப்பட்ட அதே தினம் "இஸ்ரேலிய பங்கு பற்றிய தீவிர அறிகுறிகளுடன்"
இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அப்போதிருந்து, பல
ஈரானிய அதிகாரிகள் இந்த கொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
விஞ்ஞான ஆராய்ச்சி செயல்பாட்டை சீர்குலைப்பதும், நவீன
தொழில்நுட்பத் துறையில் இஸ்லாமிய குடியரசின் முன்னேற்றத்தின் வேகத்தை தடுப்பதும்
எதிரிகளின் நோக்கம் ஆகும் என்றும் ஹாத்தமி
குறிப்பிட்டார்.
"வளர்ந்து வரும் அறிவியல் மற்றும்
நவீன ஆயுத தொழில்நுட்பத்தில் எங்களது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிரிகள்
நன்கு அறிவர், எனவே, இந்த கொலை நடவடிக்கையால் எமது மக்களின் மன உறுதியை
பலவீனப்படுத்தலாம் எனவும் ஈரானின் பாதுகாப்பையும் சக்தியையும் குறைக்க முடியும்
என்றும் அவர்கள் கனவு காண்கின்றனர், அது ஒருபோது நடவாது" என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு
அமைச்சின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவரும் தியாகி ஃஃபக்ரிசாதேயின் பாதையைத்
தொடர உறுதி கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
ஃபக்ரிசாதேவின் படுகொலைக்கு பழிவாங்கிய தீருவோம்
என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஹாத்தமி சூளுரைத்திருந்தார். “"நாங்கள் இறுதிவரை குற்றவாளிகளைப் பின்தொடர்வோம், எமது
இமாமின் (அயதுல்லா அலி கமேனி) உத்தரவைப் பின்பற்றுவோம்," என்று
அவர் கூறினார்.
இஸ்லாமிய குடியரசு எப்போதுமே "சிரியா மற்றும்
ஈராக்கில் செய்ததைப் போலவே, அரசாங்கங்கள் மற்றும் அந்த நாடுகளின் ஆயுதப்
படைகளுடன் இணைந்து செயல்பட்டது போல் பயங்கரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து
போராடும்" என்று பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளையும் பாதுகாப்பு
அமைச்சர் எச்சரித்தார்.
https://www.tehrantimes.com/news/455810/Iran-s-missile-program-a-thorn-in-eyes-of-enemies-says-defense
No comments:
Post a Comment