Iran: No
sustainable security in region as long as Israeli entity exists
இஸ்ரேல் என்ற ஒன்று இருக்கும் வரை பிராந்தியத்தில் நிலையான சமாதானத்துக்கு வாய்ப்பில்லை
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப் சிரிய வெளியுறவு மந்திரி
பைசல் மெக்தாத் உடன் தெஹ்ரானில் டிசம்பர் 7, 2020 அன்று சந்தித்தார். (புகைப்படம் இகானா செய்தி நிறுவனம்)
சிரிய வெளியுறவு மந்திரி
வருகையுடன் உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் தனித்தனியாக சந்தித்துள்ளனர், பிராந்தியத்தில் இஸ்ரேலின்
ஸ்திரமின்மைக்குரிய பங்கை எடுத்துரைத்து, சியோனிச ஆட்சி இல்லாமல் உலகம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும்
என்று வலியுறுத்தினர்.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர்
முகமது பாக்கர் கலிபாஃப், பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்பை அடைவதற்கு இஸ்ரேல்
ஒரு தடையாக இருக்கின்றது என்று வர்ணித்து, ஆக்கிரமிப்பு ஆட்சிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான
அமெரிக்க தரகில் ஏற்படுத்தப்பட்ட இயல்பாக்க ஒப்பந்தங்களுக்கு எதிராக முஸ்லிம் அரசாங்கங்கள்
உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"அமெரிக்காவின் ஆதரவுடன்,
சியோனிச ஆட்சி சில முஸ்லிம்
நாடுகளுடனான உறவை சீராக்க முயல்கிறது. அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சி எடுத்துவரும் இந்த முயற்சிக்கு எதிராக முஸ்லிம் அரசாங்கங்களும் சமூகங்களும் நிற்க வேண்டும் மற்றும்
இவ்வொப்பந்தங்கள் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை இயல்பாக்குவது நியாயமற்ற, சர்வதேச சட்டங்களுக்கு
உடன்படாத செயலாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் ”என்று திங்களன்று தெஹ்ரானில் சிரிய வெளியுறவு
மந்திரி பைசல் மெக்தாத்துடனான சந்திப்பில் கலிபாஃப் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம்
இஸ்ரேல் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் எட்டிய,
வாஷிங்டன் தரகு ஒப்பந்தங்களையே
அவர் குறிப்பிடுகிறார்.
இன்னும் ஒரு மாதம் கழிந்ததும்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
டிரம்ப், இஸ்ரேலும் சூடானும் பொருளாதார உறவுகளை இயல்பாக்கப்பட்ட உறவுகளை
நோக்கிய பாதையாக நிறுவியுள்ளன என்றார்.
"அல்-குத்ஸை ஆக்கிரமித்துள்ள
பயங்கரவாத ஆட்சி இருக்கும் வரை இப்பகுதியில் பொருத்தமான பாதுகாப்பு இருக்காது"
என்று கலிபாஃப் எச்சரித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இஸ்லாமிய உம்மாவின் ஒற்றுமையின்
முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார், "இஸ்லாமிய நாடுகளின் மக்கள்
மீதான நம்பகத்தன்மை, இஸ்லாம் மார்க்கம் மற்றும்
எதிரிகளுக்கு எதிரான ஒத்துழைப்பு ஆகியவை முஸ்லிம்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்"
என்றும் குறிப்பிட்டார்.
பிராந்திய பாதுகாப்பைப்
பேணுவதில் ஈரானிய பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காஸெம் சுலைமானி
ஆற்றிய மகத்தான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
ஈராக் அரசாங்கத்தின்
அழைப்பின் பேரில் ஜனவரி 3 ம் தேதி பாக்தாத் சர்வதேச
விமான நிலையத்திற்கு சென்ற ஜெனரல் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டார்.
பிராந்தியத்தில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான
தாயெஸ் பயங்கரவாத குழுவை இல்லாதொழிக்க ஜெனரல் சுலைமானி ஆற்றிய பங்கு மகத்தானது.
சியோனிச அமைப்பின் ஆக்கிரமிப்பு
ஆட்சிக்கு எதிராக முகம்கொடுக்கும் முன்னணி
நாடாக சிரியாவை கலிபாஃப் குறிப்பிட்டார் மேலும் சிரிய அரசாங்கத்திற்கும் தேசத்திற்கும்
இஸ்லாமிய குடியரசின் அயராத ஆதரவை வலியுறுத்தினார்.
தக்ஃபிரி பயங்கரவாதிகளுக்கு
எதிரான சமீபத்திய வெற்றிகள் குறித்து சிரியாவை வாழ்த்திய அவர்,
“எதிரிகளுக்கு எதிரான
போரில் அஸ்தானா சமாதான முன்னெடுப்பின் கட்டமைப்பிற்குள் அரசியல் பேச்சுவார்த்தைகள்
நிலையான ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பாராளுமன்றத் துறைகளில் சிரியாவுடன் ஈரானின் சகோதர உறவுகளை விரிவுபடுத்த மேலும் அவர் அழைப்பு விடுத்தார்.
பிராந்திய முன்னேற்றங்கள்
ஈரான்-சிரியா விழிப்புணர்வு, ஆலோசனைகள்: எஃப்.எம்.சரீஃப்
ஈரானிய வெளியுறவு மந்திரி
தெஹ்ரானும் டமாஸ்கஸும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள்
குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
சிரிய ஜனாதிபதி பஷர்
அல்-அசாத்தின் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கா தலைமையில்
அதன் மேற்கு மற்றும் பிராந்திய நட்பு நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும்
ஆயுதங்களைத் வழங்கி உள்நாட்டு யுத்தம் ஒன்றை தொடங்கின. அச்சமயத்தில் ஈரான் சிரியாவுக்கு
இராணுவ ஆலோசனை உதவிகளை வழங்கத் தொடங்கியது.
ஆரம்பத்தில் தாயெஸ் மற்றும்
பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு கணிசமான அளவிலான நிலப்பரப்பை இழந்த போதிலும்,
ஈரான் மற்றும் ரஷ்யாவின்
உதவியுடன் சிரியா மீண்டும் தனது வலிமையைப் பெற்றது, மேலும் போர்க்களத்தில்
அதனால் தனக்கு சாதகமாக சமநிலையை மாற்றியமைக்கவும் முடிந்தது.
ஜெனரல் சுலைமானி மற்றும்
ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே ஆகியோரின் படுகொலைகள் பயங்கரவாதத்தின்
ஆதரவாளர்களான வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றின் உண்மையான முகங்களை உலகுக்கு மீண்டும்
வெளிப்படுத்தியதாக மெக்தாத் கூறினார்.
ஈரானின் துணை பாதுகாப்பு
அமைச்சரும், அமைச்சின் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின்
(SPND) தலைவருமான ஃபக்ரிசாதே நவம்பர் 27 அன்று தெஹ்ரானுக்கு அருகே இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
சிரியாவின் எதிரிகளுக்கு
எதிரான போராட்டத்தில் ஈரானின் பொருள் மற்றும் ஆன்மீக உதவிகளை தனது நாடு ஒருபோதும் மறக்காது
என்று உயர் சிரிய தூதர் வலியுறுத்தினார்.
புதிய அமெரிக்க ஜனாதிபதியாக
ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி அவர் குறிப்பிடுகையில் அமெரிக்க அரசாங்கங்கள்
கொள்கை அடிப்படையில் வேறுபட்டவை அல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருத்தல் பிராந்தியங்களில் எப்போதும் பாதுகாப்பின்மை மற்றும் உறுதியற்ற
தன்மை பரவுவதற்கு பங்களித்து வந்துள்ளது.
சியோனிச ஆட்சியின் நலன்களைப்
பாதுகாப்பதில் அமெரிக்க ஜனாதிபதிகள் உடன்படுகிறார்கள்,
இது ஐரோப்பிய நாடுகளின்
நலன்களைக் காட்டிலும் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். பலஸ்தீன் விடயத்தில் பைடன் நியாயத்தை கடைபிடிப்பார் என்று நம்புவதற்கில்லை என்றும் மிக்தாத் குறிப்பிட்டார்.
‘இஸ்ரேல் இல்லா உலகம் பாதுகாப்பாக இருக்கும்’
செவ்வாயன்று,
மிக்தாத் ஈரானின் உச்ச
தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எஸ்.என்.எஸ்.சி) செயலாளர் அலி ஷம்கானியுடன் இருதரப்பு,
பிராந்திய மற்றும் சர்வதேச
விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது,
சிரியாவில் அமெரிக்காவின்
இருப்பு அரபு நாட்டின் எண்ணெயைக் கொள்ளையடிப்பதற்கும்,
இஸ்ரேலின் பாதுகாப்பைப்
பேணுவதற்கும், தாயெஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி வலுப்படுத்துவதற்கும்
ஆகும் என்றும், “இப்பகுதியில் அமெரிக்காவின்
தீய இருப்பு முடிவுக்கு வர வேண்டும்” என்றும் ஷம்கானி கூறினார்.
இஸ்ரேல் அதன் இருப்புக்காக
மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாதத்தை நம்பியுள்ளது,
எனவே சர்வதேச சமூகம்
"இந்த இரத்தவெறி ஆட்சியின்" நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும்
என்று அவர் கூறினார்.
"சந்தேகத்திற்கு இடமின்றி,
சியோனிச ஆட்சி இல்லாமல்
உலகம் பாதுகாப்பாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
"போலி சியோனிச ஆட்சியுடனான உறவை இயல்பாக்குவதற்கு மானம் கெட்டத்தனமாக முயலும்,
பிராந்தியத்தில் அமெரிக்க
திட்டங்களை செயல்படுத்த உதவுகின்ற அந்த அரசாங்க அதிகாரிகளுக்கு வெளியேற்றப்பட்ட லிபிய தலைவர் முஅம்மர்] கடாபி மற்றும் சூடான் தலைவர் உமர் அல்-பஷீர் ஆகியோரை விட சிறந்த உதாரணம் இருக்காது.,”
என்று ஷம்கானி கூறினார்.
இஸ்லாமிய குடியரசு,
சிரிய அரசாங்கத்தையும்
தேசத்தையும் ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில்
ஒருபோதும் கைவிட மாட்டாது என்றும் ஷம்கானி குறிப்பிட்டார்.
https://www.presstv.com/Detail/2020/12/08/640255/Iran-Qalibaf-Syria-Mekdad-Israel
No comments:
Post a Comment