Saturday, January 4, 2020

முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள காசிம் சுலைமானி என்பவர் யார்?


Who was Qassem Soleimani, Iran's IRGC's Quds Force leader? 

பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்  வேளையில் அமெரிக்க வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஜெனரல் கஸ்ஸெம் சுலைமானி மேலும் 6 பேருடன் கொல்லப்பட்டார்.

ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குத்ஸ் படையின் (பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவின்) தலைவராவார்.

புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுக் குழுவின் தலைவராகவும், சிரியா மற்றும் ஈராக்கில் அமேரிக்கா, இஸ்ரேல், சவூதி இணைந்து உருவாக்கிய ISIS ஐ துவம்சம் செய்தவர் சுலைமானி. ISIS பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடுவதில் அவர் வகித்த முக்கிய பங்கிற்காகவும் சுலைமானி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல அந்தஸ்தைப் பெற்றார்.

அரபு நாடுகள் உட்பட மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கு பரவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இது அரபு பிற்போக்குவாதிகளை அச்சம் கொள்ளச் செய்தது.  அமெரிக்காவும் இஸ்லாமிய புரட்சியின்  பிராந்திய எதிரிகளான சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் இணைந்து இவரை கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய, இஸ்ரேலிய மற்றும் அரபு அமைப்புகளால் அவருக்கு எதிரான பல படுகொலை முயற்சிகளில் இருந்தும் அவர் தப்பினார்.

சிரியாவை அமெரிக்க, சியோனிஸ செல்வாக்குக்கு உட்படுத்த சவுதியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைக்கு எதிராக காசிம் சுலைமானியின் குத்ஸ் படை, சிரியாவை முக்கிய அரணாக இருந்து காத்தது. 
மேலும் ஈராக்கை துண்டாடுவதற்கும் இஸ்லாமிய அரசை தோற்கடிக்கவும் மேற்படி சக்திகளால் உருவாக்கப்பட்ட  ஐ.எஸ்.ஐ.எல்., ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் பயங்கரவாத குழுக்களை முற்றாக ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

சுலைமானி 1998 இல் குத்ஸ் மீட்பு படையின் தலைவரானார், லெபனானில் ஹிஸ்புல்லாஹ்க்களுடனும் மற்றும் இரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பாலஸ்தீனிய குழுக்களுடனும் ஈரானின் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டார்.

சமீபத்திய ஆண்டுகளில், அவர் ஈரானின் உச்ச மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தலைவர்களின் நம்பிக்கையையும் வென்றார்.

சுலைமானியின் தலைமையின் கீழ், குத்ஸ்  படை அதன் திறன்களை பெரிதும் விரிவுபடுத்தியது, ஈரானின் எல்லைகளுக்கு அப்பால் உளவுத்துறை, நிதி மற்றும் அரசியல் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய ஒன்றாக மாறியது. இதனைக்கண்ட இஸ்லாமிய எதிர் சக்திகள் அச்சம்கொள்ளலாயின. சுலைமானியைக் கொள்வதற்கு பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வடமேற்கு ஈரானில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தின்போதும் மற்றும்  டமாஸ்கஸில் 2012 குண்டுவெடிப்பைத் தொடர்ந்தும் சுலைமானி இறந்துவிட்டதாக வதந்தி பரவியது.

2015 இல் பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் அலெப்போ மீட்பு சண்டையிட்டபோதும், சுலைமணி கொல்லப்பட்டார் அல்லது பலத்த காயமடைந்தார் என்று வதந்திகள் பரவின.

சிரியாவில் அமைந்துள்ள குத்ஸ் மீட்பு படை தளங்கள் மீது மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

சுலைமானியை கொள்வதற்கு இஸ்ரேல் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் வெளியுறவு மந்திரி காட்ஸ் அப்போது கூறினார் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


மிக சமீபத்தில், கடந்த ஒக்டோபர் மாதத்தில், சுலைமானியைக் கொல்ல இஸ்ரேல் மற்றும் பிற்போக்குவாத அரபு ஏஜென்சிகள் சதி செய்ததாக தெஹ்ரான் கூறியது.

யுத்தகளத்தில் அவரை சந்திக்க சக்தியற்ற கோழைகள், இருட்டில் மறைந்திருந்து தாக்கி கொன்றுள்ளனர்.

தென்கிழக்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் 1957ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுலைமானி ஒரு தாழ்மையான பின்னணியைக் கொண்டவராகும்.

அவர் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக 13 வயதிலேயே பணியாற்றத் தொடங்கினார். தனது ஓய்வு நேரத்தை பாரம்தூக்கும் பயிற்சியிலும் மற்றும் கமேனியின் சன்மார்க்க பிரசங்கங்களிலும் கலந்து கொண்டார்.

1979ல் ஈரானிய புரட்சியின் போது ஒரு இளைஞனாக, சுலைமானி ஈரானிய இராணுவத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியத்தின் மூலம் படிப்படியாக உயர்ந்தார்.

ஈரான்-ஈராக் போரின்போது சுலைமானி  ஈராக்கின் எல்லையைத் தாண்டி நடத்திய துணிகர செயற்பாட்டின் காரணமாக ஒரு தேசிய வீரராக கருதப்பட்டார்.

பேராசிரியர் முஹம்மத் மராந்தி - தெஹ்ரான் பல்கலைக்கழகம், சுலைமானி பற்றி குறிப்பிடுகையில், "ISIS  பயங்கரவாதிகளை ஒழிப்பதில் அவர் அளித்த பங்களிப்பு, அவரை ஒரு தேசிய வீரனாக்கியது. ஏனைய மத்தியகிழக்கு நாடுகளிலும் அவரின் புகழ் ஓங்கியது. இவரைப் போன்றவர்கள் இல்லாதிருந்திருக்கும் பட்சத்தில், இந்த பிராந்தியம் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறப்பதையே கண்டிருப்பீர்கள்," என்று கூறினார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கமேனி, குத்ஸ் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானியை படுகொலை செய்தவர்கள் கடுமையான பழிவாங்கலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆயதுல்லா கமேனி வெள்ளிக்கிழமை விடுத்த ஒரு அறிக்கையில் "பூமியின் குழப்பம் விளைவிக்கும் மிக மோசமானவர்கள், உலகின் தீமைகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் எதிராக தைரியமாக, பல ஆண்டுகளாக போராடிய கெளரவமான தளபதியை படுகொலை செய்துள்ளனர்"

சுலைமானியின் மறைவு அவரது கொள்கை போராட்டப்  பணியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிடாது. ஆனால் ஜெனரல் சுலைமாயுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற தியாகிகளின் இரத்தக்கறை கொண்ட குற்றவாளிகள் கடுமையான பழிவாங்கலுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"தியாகி சுலைமானி அவர்களை முன்னுதாரணமாகக் கொண்ட அனைத்து போராளிகளும் இப்போது பழிவாங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்" என்று ஆயதுல்லா கமேனி குறிப்பிட்டார்.


"தீமையை எதிர்க்கும் பணி ஜிஹாத்தின் பாதை இரட்டை உந்துதலுடன் தொடரும் என்பதை அனைத்து நண்பர்களும் எதிரிகளும் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் இந்த புனிதமான பாதையில் போராடுவோருக்கு ஒரு திட்டவட்டமான வெற்றி காத்திருக்கிறது" என்று தலைவர் கூறினார்.

"எங்கள் அன்புக்குரிய, தன்னலமற்ற ஜெனரலின் மறைவு கசப்பானது தான், ஆனாலும் நிச்சயமாக இறுதி வெற்றிக்கான தொடர்ச்சியான போராட்டமும் சாதனைகளும் கொலைகாரர்களினதும் குற்றவாளிகளினதும் வாழ்க்கையை கசப்பானதாக மாற்றும்" என்று அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment