இஸ்லாமிய புரட்சியின் பெரும் தலைவரும்,
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகருமான இமாம் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்கள் சோவியத்
ஒன்றியத் தலைவர் மிகாயில் கொர்பசேவ் அவர்களுக்கு 1989 ஜனவரி 1
எழுதிய
சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த கடிதம்.
இக்கடித்தம் இமாமின் சீடர்களில் ஒருவரான ஆயத்துல்லாஹ் ஜவாத் அமுலி தலைமையிலான, பிரதி வெளியுறவு அமைச்சர் மற்றும் பாராளுமன்ற ஒரு பெண் பிரதிநிதி ஒருவரும் அடங்கிய தூதுக்குழுவினால் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் திகதி அப்போதைய சோவியத் ஒன்றியத் தலைவர் திரு. கோர்பச்சேவ் அவர்களிடம் கிரெம்ளின் மாளிகையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
இக்கடித்தம் இமாமின் சீடர்களில் ஒருவரான ஆயத்துல்லாஹ் ஜவாத் அமுலி தலைமையிலான, பிரதி வெளியுறவு அமைச்சர் மற்றும் பாராளுமன்ற ஒரு பெண் பிரதிநிதி ஒருவரும் அடங்கிய தூதுக்குழுவினால் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் திகதி அப்போதைய சோவியத் ஒன்றியத் தலைவர் திரு. கோர்பச்சேவ் அவர்களிடம் கிரெம்ளின் மாளிகையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
============================================
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
கண்ணியத்துக்குரிய சோவியத் ஒன்றியத்தின்
தலைவரான
ஜனாதிபதி மிக்கேல் கோர்பச்சேவ் அவர்களுக்கு
உங்களுடையதும் சோவியத் ஒன்றிய மக்களதும்
மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் ஆகியவற்றுக்காக வாழ்த்துகிறேன்.
கண்ணியத்துக்குரிய நீங்கள் பதவியேற்றத்தைத்
தொடர்ந்து, உலக அரசியல் நடவடிக்கைகளை ஆராய்கையில்,
குறிப்பாக
சோவியத் ஒன்றியம் தொடர்பாக, நீங்கள் ஒரு புது யுகத்துக்கான மாற்றம்
மற்றும் மோதல் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வதில் ஈடுபட்டுள்ளதை உணர்கிறோம். உலகின்
யதார்த்த நிலையை கையாள்வதில் உங்கள் தைரியமும், முன்முயற்சியும், மேலாதிக்கம் செய்யும் உலக சமன்பாட்டில், மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே சில விஷயங்களை உங்கள் கவனத்திற்கு
கொண்டு வருவது அவசியம் என நினைக்கிறேன்.
உங்கள் புதிய அணுகுமுறை மற்றும் முடிவுகள்
வெறுமனே கட்சி நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிமுறையாகவும்,
உங்கள்
மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுமாயினும், உலகெங்கிலும் இரும்புத் திரைக்குப்
பின்னால் புரட்சிகர இளைஞர்களை பல தசாப்தங்களாக விலங்கிடப்பட்டு வைத்திருக்கும்
சிந்தனைப் பள்ளியை மறு பரிசீலனை செய்வதில் உங்கள் தைரியம் நிச்சயமாக
போற்றத்தக்கது.
எவ்வாறெனினும், நீங்கள் மேலும் முன்னோக்கிச் செல்வதைக்
கருத்தில் கொண்டால்,
முதன்முதலில்
நீங்கள் சமூகத்தில் இறைமறுப்பு மற்றும் மதவிரோத போக்கினை உருவாக்கிய உங்கள்
முன்னோடிகளின் கொள்கையினை மீள்பரிசீலனை செய்தல் அவசியமாகும். இந்த கொள்கை சோவியத்
மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
உலக
பிரச்சினைகளை யதார்த்தமாக தீர்க்கப்படக்கூடிய ஒரே வழி இதுமட்டும் தான் என்பதை
உணர்ந்துகொள்ளுங்கள்.
சோசலிசக் கட்டடத்தின் சிதறியாக ஒன்றாக இஸ்லாத்தை
முன்னர் கருதிய மார்க்சிஸ்டுகள் அதை எதிர்கொள்வதற்கு இரண்டு பிரதான அணுகுமுறைகளை
மேற்கொண்டனர்: வெளிப்படையாக எதிர்ப்பதன் மூலம், இஸ்லாத்தை ஓர் அந்நியமான கொள்கையாகக்
காட்டி,
பொது வாழ்விலிருந்து அதனை துடைத்தெறிதலும்
மற்றும் முஸ்லிம்களை ரஷ்யமயப்படுத்தி இஸ்லாத்தை
உள்வாங்குதலும்
ஆகும். அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களிலுமே
மிகவும் மோசமானவர் என்று அறியப்பட்ட ஸ்டாலின்,
முஸ்லிம்
மக்களை துன்புறுத்தி,
சைபீரியா
மற்றும் சின்னாசியா பிரதேசங்களுக்கு விரட்டியடித்தார். இஸ்லாமிய நாடுகளில், நம்பமுடியாத அளவு, இஸ்லாத்துக்கு எதிரான பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன. இது சோவியத் அரசாங்கத்தின் இஸ்லாத்துக்கு எதிரான உலகளாவிய
போராட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இஸ்லாமிய
உலகில் ஊடுருவும் சோவியத் ஒன்றியத்தின் கடைசி முயற்சியாக ஆப்கானிஸ்தான்
ஆக்கிரமிப்பு இருந்தது.
முன்னாள் கம்யூனிச அதிகாரிகளின் தவறான
பொருளாதார கொள்கைகளின் விளைவாக, மேற்கத்திய உலகம் என்ற மாய சொர்க்கம்
கவர்ச்சிகரமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் உண்மை இருப்பது வேறிடத்திலாகும். இந்த காலக்கட்டத்தில், சோஷலிசத்தினதும் கம்யூனிசத்தினதும்
பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு
மேற்கத்திய முதலாளித்துவத்தின் மையத்தை நாடுவீர்களாயின், நீங்கள் அதிலிருந்து மீள்வதற்குப் பதிலாக, சிக்கலில் இன்னும் மாட்டிக் கொள்வீர்கள்; இந்தத் தவறை செய்வீர்களாயின் அதனை
சரிசெய்ய இன்னும் சிலர் பிறகு வரவேண்டியிருக்கும்.
மார்க்சிசம் அதன் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முன்னேற்றமடைய முடியாத முட்டுக்கட்டை நிலைக்கு வந்துள்ளது. அதுபோல் முதலாளித்துவமும் இன்னொரு வடிவத்தில், இதிலும் வேறு அம்சங்களிலும், அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.
மார்க்சிசம் அதன் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முன்னேற்றமடைய முடியாத முட்டுக்கட்டை நிலைக்கு வந்துள்ளது. அதுபோல் முதலாளித்துவமும் இன்னொரு வடிவத்தில், இதிலும் வேறு அம்சங்களிலும், அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.
திருவாளர் கொர்பச்சேவ் அவர்களே,
யதார்த்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டும்.
உங்கள் நாட்டை எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை தனியார் உரிமையோ,
சுதந்திரமோ
அல்லது பொருளாதாரமோ அல்ல. இறைவன் மீது உண்மையான விசுவாசம் இல்லாததே உங்கள்
பிரச்சனைக்கான காரணம். இந்த அநாகரீகம் மேற்கையும் பீடித்துள்ளது அல்லது விரைவில்
பீடித்துக்கொள்ளும்; அதுவே தடைக்கல்லாகவும் அமையும். உங்கள் பிரச்சனைக்கான பிரதான காரணம், இருப்புக்கு ஆதாரமான, படைப்புகளுக்கு மூலாதாரமான இறைவன் மீது
நீங்கள் தொடுத்துள்ள நீடித்த,
வீணான, யுத்தமேயாகும்.
திரு கொர்பச்சேவ் அவர்களே,
மார்க்சிசத்தினால் மனிதகுலத்தின் உண்மையான
தேவைகள் எதையும் பூர்த்தி செய்யமுடியாது என்பதால், கம்யூனிசத்தை இனி உலக அரசியல் வரலாற்றின்
அருங்காட்சியகங்களில் மட்டுமே தேடவேண்டியிருக்கும் என்பது அனைவருக்கும்
தெளிவாகும்.
மார்க்சிசம்
ஒரு சடவாத சித்தாந்தமாகும். சடவாததினால்,
ஆன்மிகத்தில்
நம்பிக்கை இல்லாததால்,
மனிதகுலத்தை
நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டுவர முடியாது - கிழக்கிலும் மேற்கிலும் மனித
சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள துன்பத்துக்கான பிரதான காரணம் இதுவேயாகும்.
திரு கொர்பச்சேவ் அவர்களே,
மார்க்சிசத்தின் சித்தாந்த அம்சங்களில் சிலவற்றை நீங்கள் கோட்பாட்டு
ரீதியில் நிராகரிக்காது இருக்கலாம் - நேர்காணல்களின்போது அவற்றில் உங்கள்
இதயப்பூர்வமான விசுவாசத்தையும் தொடரலாம் - ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறல்ல
என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சீனாவின்
தலைவர் கம்யூனிசத்திற்கு முதல் அடியைக்கொடுத்தார். இப்போது நீங்கள்
கொடுத்திருப்பது இரண்டாவது அடி. அதுவே இறுதி அடி. இன்று கம்யூனிஸம் என்று
கூறப்படும் ஒன்று உலகில் கிடையாது.
எனினும், மார்க்சிச
விம்பத்தின் சுவர்களைக் தகர்த்தெறிகையில், மேற்கினதும் பெரிய சாத்தானினதும் சிறையில்
சிக்கிவிடாதீர்கள் என்று நான் உங்களை தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். சரித்திரத்தினதும் உங்கள் நாட்டினதும் 70 ஆண்டுகால
கம்யூனிச வரலாற்று பிறழ்வின் மாசடைந்த பக்கங்களை கிழித்தெறிந்த கண்ணியத்தை நீங்கள்
அடைவீர்கள் என்று நம்புகின்றேன்.
உங்களுடன்
அணிசேர்ந்திருந்தோர் இன்று தங்கள் தாய்நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்டுள்ள உண்மையான
அக்கறையின் காரணமாக,
கம்யூனிசத்தின்
வெற்றி புராணத்தை உயிருடன் தக்க வைத்துக்கொள்வதற்கு, தங்கள் நிலத்தடி மற்றும் நிலமேல் (தேசிய)
வளங்களை அர்ப்பணிக்கத் தயாரில்லை. கம்யூனிச சித்தாந்தம் இடிந்துவிழுந்த ஓசை
அவர்களது பிள்ளைகளின் காதுகளையும் எட்டியுள்ளது.
திரு கொர்பச்சேவ் அவர்களே,
70 ஆண்டுகளுக்கு
பிறகு,
"அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) வணக்கத்துக்குரிய இறைவன்
அல்லாஹ்வைத்தவிர வேறில்லை, தீர்க்கதரிசிகளின் முத்திரை முஹம்மது
(ஸல்) அவர்கள் என்று சாட்சியம் கூறுகிறேன்" என்ற முழக்கம் உங்கள் குடியரசுகள்
சிலவற்றின் மஸ்ஜித் மினாராக்களில் இருந்து கேட்கையில்,
முஹம்மத்
(ஸல்) அவர்களின் தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
எனவே, பொருள்முதல்வாதம் மற்றும் ஆத்திக உலகப்
பார்வைகளில் நீங்கள் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உங்களுக்கு
நினைவூட்ட விரும்புகிறேன்.
பொருள்முதல்வாதிகள் அறிவின் ஒரே அளவுகோல் உணர்வே என்றும் உணர்வுகளுக்கு அப்பால் உள்ளவை அறிவுக்குள் அடங்குவதில்லை என்றும் கருதுகின்றனர். ஒன்றின் இருப்பை அவர்கள் பொருளைக்கொண்டே நிச்சயிக்கின்றனர், மேலும் பொருளற்ற எதுவும் இருக்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனடிப்படையில், கண்ணால் காண முடியாதவற்றை - சர்வ வல்லமைகொண்ட இறைவன், இறை வசனங்கள், தூதுத்துவம், மீளுயிர்ப்பித்தல், மறுமை நாள் - வெறும் கற்பனை என்கின்றனர்.
பொருள்முதல்வாதிகள் அறிவின் ஒரே அளவுகோல் உணர்வே என்றும் உணர்வுகளுக்கு அப்பால் உள்ளவை அறிவுக்குள் அடங்குவதில்லை என்றும் கருதுகின்றனர். ஒன்றின் இருப்பை அவர்கள் பொருளைக்கொண்டே நிச்சயிக்கின்றனர், மேலும் பொருளற்ற எதுவும் இருக்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனடிப்படையில், கண்ணால் காண முடியாதவற்றை - சர்வ வல்லமைகொண்ட இறைவன், இறை வசனங்கள், தூதுத்துவம், மீளுயிர்ப்பித்தல், மறுமை நாள் - வெறும் கற்பனை என்கின்றனர்.
மறுபுறம், இறை
நம்பிக்கையாளர்கள் உணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகிய இரண்டையும் ஞானத்தின்
அடிப்படையாக கருத்தில் கொள்கின்றனர். மேலும், புரிந்துகொள்ள
முடியாவிட்டாலும், பகுத்தறிவின் ஊடாக அறிந்துகொள்ளும்
அனைத்தும் ஞானத்துக்குள் அடங்குகின்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே,
இறை
நம்பிக்கையுடையோருக்கு,
இருப்பு
என்பது மறைவானதும் வெளிப்படையானதுமாகும். ஒன்று இருப்பதற்கு பொருள்கொண்ட உடல்
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதேபோல் ஒரு
பொருள் உடல் வடிவம் இல்லாத விடயம் சார்ந்து,
உணர்தல்
என்பது பகுத்தறிவை சார்ந்து இருக்கிறது.
புனித குர்ஆன் பொருள்முதல்வாத சிந்தனையின்
அடிப்படைகளை நிராகரிக்கிறது.
“நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறுவோருக்கு
“நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறுவோருக்கு
“பார்வைகளால் அவனைப் பார்த்திட முடியாது.
அவனோ எல்லாப் பார்வைகளையும் அறிந்து கொள்கின்றான். அவன் நுட்பமானவனும், எல்லாம் தெரிந்தவனுமாயிருக்கின்றான்” என்று குர்ஆன் பறைசாற்றுகிறது.
உங்கள் கருத்துப்படி விவாதத்துக்குரிய
தெய்வீக வெளிப்பாடு, தீர்க்கதரிசனம் மற்றும் உயிர்த்தெழுதல்
ஆகியவற்றைப் பற்றிய குர்ஆனிய வாதங்களை இங்கே முன்வைப்பதற்கு நான் விரும்பவில்லை. உண்மையில், மெய்யியலின் நெளிவுசுளிவு விவாதங்ககளில், குறிப்பாக இஸ்லாமிய தத்துவார்த்த
விடயங்களில், உங்களை
சிக்கவைக்க நான் விரும்பவில்லை.
ஆயினும், அரசியல்வாதிகளுக்கும் பயன்தரக்கூடிய
ஓரிரண்டு எளிமையான, உள்ளுணர்வு சார்ந்த உதாரணங்களை வழங்குவதன்
மூலம் திருப்தியடைகிறேன்.
எந்த பொருளுக்கும் அதன் தன்மை பற்றிய சுய
விழிப்புணர்வு கிடையாது என்பது தெளிவு. ஒரு கற்சிலையை எடுத்துக்கொண்டால் அதனை
சுற்றி என்ன நடக்கிறது என்பது அதற்குத் தெரியாது. மனிதர்கள் அவர்கள் இருக்கும் சூழலை
தெளிவாகக் கவனித்து வைத்துள்ளனர். விலங்குகளும் அவ்வாறே அவற்றின் சூழலை நன்கு
அறிந்திருக்கின்றன;
மேலும் தாம்
இருப்பது எங்கே, தம்மை சுற்றி
என்ன நடக்கிறது என்பதை அவையும் அறியும். அவ்வாறாயின் மனித இனத்துக்கும்
விலங்கிணத்துக்கும்,
பொருளுக்கு
அப்பால், பிரித்தறியக்கூடிய ஒரு தனிமம் இருக்க
வேண்டும்.
உள்ளார்ந்த ரீதியில் மனிதன் முழுமையை
அடைவதற்கு முற்படுகிறான்.
உலகின் முழு
அதிகாரத்தையும் அடைந்துகொள்ள அவன் போராடுகிறான்; குறைபாடுள்ள எந்த சக்தியுடனும் இணைந்து
கொள்ள அவன் விரும்புவதில்லை
என்பது உங்களுக்கு
நன்றாகத் தெரியும்.
முழு உலகும்
அவனது அதிகாரத்தின் கீழ் வந்தபோதும் இன்னுமொரு உலகு உள்ளது என்று அறியவரும்போது
அதன் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவது அவனது இயல்பாகும். ஒரு நபர் எவ்வளவு கற்றவனாய் இருந்தபோதும், அறிவின் வேறு சில கிளைகளை அறியவரும்போது
அவற்றையும் துறைபோக கற்கவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே அவனுக்கு ஏற்படுகிறது.
ஆகையால், மனிதனுடன் இணைக்கப்பட்டுள்ள சில முழுமையான சக்தியும்
அறிவும் இருக்க வேண்டும். நாம் அறிந்திராவிட்டாலும், சக்தியே நாம்
அனைவரும் நாடும் இறைவனாகும்.
மனிதன் முழுமையான
சத்தியத்தை அடைவதற்கு இறைவனில் இல்லாதொழியவே முயல்கிறான். அடிப்படையில், இதுவே ஒவ்வொரு நபருக்கும் இருக்கும்
உள்ளார்ந்த நித்திய வாழ்வுக்கான ஆசை;
இதுவே ஒரு
நித்திய உலகம் இருப்பதற்கான நிரூபணம் ஆகும்.
இந்த விடயங்களைப் பற்றி இன்னும் கூடுதலான
தகவலைக் கோர விரும்பினால், இத்துறையில் நன்கு பரிச்சயமுள்ள உங்களது
அறிஞர்களை, மேற்கத்திய தத்துவவாதிகளின் ஆக்கங்களுக்கு
மேலதிகமாக, பெரும் தத்துவவாதிகளான ஃபராபி மற்றும் அலி
இப்னு-ஸீனா (அவர்கள் மீது இறை அருள் சொரியட்டும்) ஆகியோரின் ஆக்கங்களையும் கற்க அவர்களை பணியுங்கள். அப்போது எல்லா அறிவும் சார்ந்து இருப்பது
பகுத்தறிவிலேயே அன்றி உணர்வு விதிகளில் அல்ல என்பது தெளிவாகிவிடும். அதேபோல், பொது நியதிகள் மற்றும் கருத்தாக்கங்கள்
அனைத்தையும் உணர்தல், உணர்திறன்
ஊடாக அல்ல, பகுத்தறிவினூடாக என்பது புரியும். உங்கள் அறிஞர்கள் சுஹ்ராவாதியியின்
இறைஞானம் பற்றிய “இஸ்ராக்கி”யில் இருந்து குறிப்புகளை பெற்று, சதை மற்றும் ஏனைய அனைத்து வஸ்துக்களும், பொருளல்லாத, தூய ஒளியின் தேவைப்பாட்டில் உள்ளன
என்பதையும் மனிதன் அவனது இருப்புக்கான உண்மையை, எந்த உணர்வு
உறுப்பின் மூலமும் அறிந்துகொள்வதில்லை என்பதை உங்களுக்கு உணர்த்துவர். முல்லா சத்ராவின் (அல்லாஹ் அவரை நேசித்து,
இறைத்தூதர்களுடனும்,
பயபக்தியுடையோருடனும்
மறுமையில் உயிர்ப்பிக்கட்டும்) ஆழ்ந்த மெய்யியலுடன் உங்களது அறிஞர்களை
பரிச்சயமாகச் செய்யலாம். இதன் மூலம் அவர்கள் அறிவின் தன்மை என்பது பொருளின் தன்மையிலிருந்து வேறுபட்டது
என்று மட்டுமல்லாமல்
பொருட்களை கட்டுப்படுத்தும் சட்டங்களால் ஞானத்தை மட்டிட முடியாது என்பதிலும் தெளிவுபெறக் கூடும்.
நான் ஆத்ம ஞானிகளின்,
குறிப்பாக
முஹியத்தீன் இப்னு அல்-அறபி
அவர்களின் ஆக்கங்களையும் குறிப்பிட்டு உங்களை இன்னும் களைப்படையச் செய்ய விரும்பவில்லை. இந்த புகழ்பெற்ற ஆத்மஞானிகளின்
கோட்பாடுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இத்துறையில் நன்கு பரிச்சயமுள்ள உங்கள்
உயர் அறிஞர்கள் சிலரை 'கும்' நகருக்கு அனுப்பிவையுங்கள். இறை
நாட்டத்தின் அடிப்படையில் அவர்கள், சில
வருடங்களில், மறைஞானத்தின்
நுட்பமான நிலைகள் பற்றிய ஆழமான பார்வையை கொண்டிருப்பர். அவ்வாறான ஒரு பயணத்தை
மேற்கொள்ளாவிடில் இவ்வறிவைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது.
திரு கொர்பச்சேவ் அவர்களே,
இந்தப் பிரச்சினைகளின் ஆரம்ப புள்ளிகளைக் குறிப்பிட்டு, உங்களை நான் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ளும் படி வாஞ்சையுடன் அழைக்கின்றேன்; இஸ்லாத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ நீங்கள் அவசியம் என்பதற்காக அல்ல, இஸ்லாம் உயரிய உலக விழுமியங்களைக் கொண்டுள்ளதாலும் எல்லா நாடுகளுக்கும் நிம்மதி மற்றும் இரட்சிப்பை வழங்குவதன் மூலம் மனிதகுலத்தின் அடிப்படை பிரச்சினைகளை தீரக்கூடியது இஸ்லாம் ஒன்றே என்பதனாலுமேயாகும். இஸ்லாம் பற்றிய உண்மையான புரிதல் உங்களை ஆப்கானிஸ்தான் பிரச்சினை மற்றும் அது போன்ற இன்னபிற ஈடுபாடுகளில் இருந்தும் விடுவிக்கக் கூடும். உலக முஸ்லிம்களை எமது சொந்த நாட்டு முஸ்லிம்களாகவே நாம் கருதுகின்றோம்; அவர்களது விதியில் நாம் எப்போதும் பங்குகொள்வோம்.
உங்கள் குடியரசுகள் சிலவற்றில்,
மதம் சார்ந்த
சில விஷயங்களில் சில உரிமைகளை வழங்கியுள்ளதன் மூலம், மதத்தை
நீங்கள் இன்னும் "மக்களின் அபினி" என்று கருதவில்லை என்பதை
உணர்த்தியுள்ளீர்கள்.
உண்மையில், இஸ்லாம் ஈரானியர்களை வல்லரசுகளுக்கு
எதிராக ஒரு மலைபோல் உறுதியாக உருவாக்கியுள்ள நிலையில் எவ்வாறு அது மக்களின்
அபினியாக இருக்க முடியும்...?
உலகில் நீதி
நிர்வாகத்தை நாடுகின்ற,
பொருள்முதல்வாதத்திலிருந்தும்
மத அடிமைத்துவத்தில் இருந்தும் மனிதனை விடுவித்துள்ள ஒரு மார்க்கம் மக்களின் அபினியாக இருக்க முடியுமா...? மக்களின் அபினியாக இருப்பது, இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத
நாடுகளின் பொருளாதார வளங்களை மற்றும் ஆன்மீக வளங்களை சுரண்டுவதற்கு, வல்லரசுகளுக்கும் குறைசக்திகளுக்கும்
வழிவகுக்கக்கூடிய “அரசியல் வேறு, மார்க்கம் வேறு” என்று கூறும் மதமாகும். இதனை ஒர் உண்மையான மார்க்கமென கூற முடியாது; எமது மக்கள் அதனை "அமெரிக்க
மதம்" என்று அழைப்பர்.
இறுதியாக, இஸ்லாமிய
உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தளமாக உள்ள ஈரான் இஸ்லாமிய
குடியரசினால் உங்கள் சமூகத்தில் இருக்கும்
மத நம்பிக்கையின் வெற்றிடத்தை எளிதில் நிரப்ப முடியும் என்று நான் தெளிவாகக் கூறுகிறேன்.
எவ்வாறாயினும், எமது நாடு, கடந்த
காலத்தைப் போல, அண்டை நாடுகளுடனான இருதரப்பு நல்லுறவுகளை
மதிக்கிறது.
நேர்வழியை பின்பற்றுபவர்களுக்கு
சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
ருஹுல்லாஹ் அல்-மூஸவி அல் கொமெய்னி
ஹி.சூ.வ. 67/10/11
[ஜனவரி 1, 1989]
No comments:
Post a Comment