Iran
calls for ending Israel impunity of anti-Palestine crimes
பலஸ்தீனர்களுக்கு
எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடாவடித் தனத்தை உலக நாடுகள் ஒரு முடிவுக்கு கொண்டுவர
வேண்டும் என்று ஐ.நா.வுக்கான ஈரானியத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனிய
பிரச்சினை உட்பட மத்திய கிழக்கில் உள்ள நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை
கூட்டத்தில் உரையாற்றிய ஈரானியத் தூதுவர் இஸ்ஹாக் அல்-ஹபீப் 'இப்பொழுது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல்
இழைத்துவரும் அநியாயங்களுக்கு அதனை பொறுப்புக்கூறச் செய்வதன்மூலம் முற்றுப்புள்ளி
வைப்பதே ஒரே வழி' என்றும் இது சட்டத்தின் பயன்பாட்டை உறுதிப்படுத்திபடுத்துவதுடன்
இஸ்ரேலின் எதிர்கால சட்ட மீறலை தடுக்கவும் முடியும்' என்றும் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனிய
நிலைமை கடந்த ஆண்டு மிகவும் மோசமடைந்தது. 295 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடிமக்கள்
இஸ்ரேலினால் கொடூரமாக கொல்லப்பட்டனர் மற்றும் 29,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட
மற்றும் காயமடைந்தவர்களில் சுமார் 7,000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்லும் ஒரு கொலைகார
ஆட்சி என்று இது நிரூபிக்கிறது. இது இஸ்ரேலின்
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு
எதிரான குற்றங்களின் தெளிவான வெளிப்பாடுமாகும்.
அதேபோல், 2018 ல், ஏராளமான பாலஸ்தீனிய வீடுகளை இடித்து,
சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்கள்
கட்டப்பட்டன: இது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும்.
இன்னும்
பல பாலஸ்தீனிய வீடுகளை இடித்து, பல பாலஸ்தீனிய காணிகளை பலாத்காரமாக பறிமுதல்
செய்வதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் புதிய
திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். இது இன்னும் பல பாலஸ்தீனிய குடும்பங்களை
கட்டாயமாக வெளியேற்றம் செய்வதையே
அர்த்தப்படுத்துகிறது.
கடந்த
ஆண்டு இஸ்ரேல் காசா மீது அதன் பத்தாண்டு கால சட்டவிரோதமான,
மனிதாபிமானமற்ற முற்றுகையை மிக மோசமாக
மேற்கொண்டது; அதன்
தொடர்ச்சியானது ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிலைமை இன்னும்
மோசமாகிவிடும்.
2018 ல், யூதர்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஒரு
சட்டத்தை இயற்றியதன் மூலம் இஸ்ரேல் இனவாதத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
அண்மையில், இஸ்ரலினால் பெரிய கான்கிரீட் சுவரினால்
பிரிக்கப்படும் ஒரு இனவெறி நெடுஞ்சாலை திறந்துவைக்கப்பட்டது;
ஒரு பக்கம் இஸ்ரேலிய வாகனங்களுக்கு மட்டுமே
திறக்கப்பட்டுள்ளது; மற்றொன்று பாலஸ்தீனிய வாகனங்களுக்கு மட்டுமே
என்று திறக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் ஏதும்
இல்லை. இனவெறி
இஸ்ரேலிய ஆட்சியின் இயல்பே அதுதான். முதலாவதாக, அவர்கள் ஒரு இனப் பிரிவினை சுவர் கட்டினர்,
பின்னர் ஒரு இன பாகுபாடு சட்டத்தை இயற்றினர்,
இப்போது ஒரு இனவெறி நெடுஞ்சாலையை
கட்டியுள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானதாகும்! வலுவான
மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இது கண்டிக்கப்பட
வேண்டும்.
அல்
குத்ஸ் அல் ஷரீப்பை இஸ்ரேலிய தலைநகராக நாம் ஒருபோது அங்கீகரிக்கப்போவதில்லை.
மேலும் லெபனான் மற்றும் சிரிய கோலன் பிரதேச பகுதிகளில் இஸ்ரேலின் தொடர்ச்சியான
ஆக்கிரமிப்பினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த
ஆக்கிரமிப்பு அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல்களாகும் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை மீறும்
செயலுமாகும்.
கடந்த
70 ஆண்டுகளாக
பாலஸ்தீனியர்களின் பிறப்புரிமைகள்
தொடர்ச்சியாக மீறப்படுவது ஏன்? என்ற கேள்வியை இந்தச்சபையில் மீண்டும் கேட்க விரும்புகின்றேன் ?
இந்தக்
கேள்விக்கான பதில் மிகவும் எளிதானது: இஸ்ரேலைக் காப்பாற்றுவதன் மூலம்,
இஸ்ரேலிய விவகாரத்தில் அமெரிக்கா இந்த சபையை
முற்றிலும் பயனற்ற ஒன்றாக ஆக்கியுள்ளது. இதன் விளைவாக, அதன் குற்றச்செயல்களுக்கு தண்டனைப் பெறாமை
இஸ்ரேலை இன்னும் தைரியமூட்டியுள்ளது. இந்த தண்டனைவிலக்கு அனைத்து சர்வதேச
குற்றங்களையும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கு இஸ்ரயேலுக்கு ஒரு வரப்பிரசாதமாக
ஆகியுள்ளது.
இதன்
காரணமாகத்தான், குறுகிய
காலப்பகுதியில் இஸ்ரேல் 15 யுத்தங்களை தொடுத்தது;
அரபுப் பிரதேசங்களை பலவந்தமாக கைப்பற்றியுள்ளது;
அதனை சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளையும் விதிவிலக்கு
இல்லாமல் ஆக்கிரமித்துள்ள; மத்திய கிழக்கில் இருந்து ஆபிரிக்கா வரை, அதற்கு அப்பாலும் மற்ற நாடுகளைத் தாக்கியுள்ளது;
பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது;
இவ்வாறு பட்டியல் தொடர்கிறது.
சமீபத்திய
ஆண்டுகளில், இஸ்ரேல்
பலமுறையும் பிராந்திய நாடுகளை தாக்கி, அதற்கான பொறுப்பை வெட்கக்கேடான முறையில் ஏற்றுள்ளது.
ஐ.நா. சாசனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அத்துமீறல்களுக்கு இந்த சபை என்ன
நடவடிக்கை எடுத்தது?
இஸ்ரேலுக்கு சார்பான அறிக்கைகளை தவிர அமெரிக்க
ஒன்றியத்திலிருந்து வேறு எதையும் நீங்கள் அறிந்ததுண்டா?
எந்தவொரு மேற்கத்திய உறுப்பு நாடுகளாலும் அது
கண்டிக்கப்பட்டதா?
மிக
சமீபத்தில், இஸ்ரேல்
"எந்த இடத்திலும் எவ்வித இலக்கையும் எட்டக்கூடிய ஏவுகணைகளை
தயாரித்துள்ளோம்" என்று அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும்
அச்சுறுத்தும் வகையில், எகத்தாளமாக கூறுமளவுக்கு தைரியம் பெற்றுள்ளது.
இதேபோல்,
ஈரானை அணு ஆயுதங்களைக்கொண்டு அழிக்கப்போவதாக இஸ்ரேல்
சில காலத்துக்கு முன் அச்சுறுத்தியது. நிச்சயமாக அது ஒரு கனவாகவே அமையும்.
பிராந்திய
நாடுகளின் மீதான இஸ்ரேலின் ஒட்டுமொத்த முறைமை மீறலும் இறையாண்மையை மீறலும்
நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற அனைத்து மீறல்களுக்கும் அது பொறுப்புக்கூற
வேண்டும்.
ஐ.நா.
சாசனத்தின் 51 வது
உறுப்புரைக்கு அமைய, அனைத்து பிராந்திய நாடுகளும் இஸ்ரேலின் ஆயுத
தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாக்க ஒரு இயல்பான உரிமையைக் கொண்டுள்ளன என்பதை
நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த உரிமையை எவராலும் மறுக்கவோ அல்லது நிறுத்தவோ
முடியாது. அந்த உரிமையை எவ்வாறு, எப்போது பயன்படுத்தவேண்டும் என்று அந்தந்த
நாடுகளே முடிவு செய்யும்.
இப்போது
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்வதன் மூலம்
அது அனுபவித்துவரும் தண்டனைவிலக்கை முடிவுக்கு கொண்டுவருவதே ஒரே வழி. இவ்வாறு
செய்வதனால் சட்டத்தின் பயன்பாட்டை உறுதிசெய்து, இஸ்ரேலின் எதிர்கால மீறல்களை தடுக்க முடியும்.
அதனால்தான்,
பாலஸ்தீனியர்கள் அவர்களது உரிமைகளை
அடைவதற்கு உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு,
அடக்குமுறை, அச்சுறுத்தல் ஆகியவற்றை அங்கீகரிக்கலாகாது
என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனை தொடர்ச்சியாக
செய்து வருகிறது.
No comments:
Post a Comment