Islamic Revolution, a political shock to Americans: Iranian cmdr.
Brigadier-General Ahmad-Reza Pourdastan |
"1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப்
புரட்சியின் வெற்றி அமெரிக்கர்களுக்கு ஒரு அரசியல் பேரதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அது அவர்களின் அனைத்து சமன்பாடுகளையும்
மாற்றியமைத்தது" என்று இராணுவத்தின்
மூலோபாய ஆய்வுகள் மையத்தின் தலைவர் புதனன்று (23-01-2019) தெரிவித்தார்.
பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத்-ரெசா பூர்தாஸ்டான் (Brigadier-General Ahmad-Reza Pourdastan) ஈரானிய இராணுவத்தின் 40 ஆண்டுகால
சாதனைகளை நினைவுகூறும் ஒரு விழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
"இரண்டாம் உலக
யுத்தத்துக்குப் பிறகு, அமெரிக்காவும் சோவியத்
ஒன்றியமும் உலகை பிரித்தாண்டன. ஈரான் மீது அமெரிக்கா தமது தலைவர்களுக்கு நன்மைகள் ஏற்படும்
விதத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
பாரசீக வளைகுடாவில் சக்தி வள
சந்தையிணை கட்டுப்படுத்துவதும் சோவியத் ஒன்றியத்தை எதிர்ப்பதற்காக வட ஈரானில்
ராடார் அமைப்பதுவதும் அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு பெரிய சந்தையாக ஈரானை
மாற்றியமைத்து நன்மைப் பெறுவதும் அவர்களது முக்கிய குறிக்கோளாய் இருந்தது.
இஸ்லாமியப் புரட்சிக்கு முன்
ஈரானிய இராணுவத்தின் கடமைகளில் ஒன்று ஷாவின் சிம்மாசனத்தை பாதுகாப்பதாகும்.
அதேவேளை பிராந்திய நாடுகள் அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்படாதவாறு
பார்த்துக்கொள்வதுமாகும்.
இஸ்லாமியப் புரட்சியின்
வெற்றிக்கு பின்னர் அமேரிக்கா பெற்றுவந்த இந்த நன்மைகள் அனைத்தும் இல்லாமல் போயின.
எனவே இஸ்லாமிய ஆட்சி முறைக்கு எதிராக அதன் முதல் நாளிலிருந்து அவர்கள்
திட்டமிட்டனர்.
எமது எல்லைகளை பாதுகாப்பதில் ஈரான்
மிக உறுதியாக இருக்கிறது. ஈராக்கில் செயல்பட்டுவந்த தாயேஷ் பயங்கரவாதக் குழு இப்போது
நலிவடைய செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் கொஞ்சப்பேர் தியாலா மாகாணத்தில்
எஞ்சியுள்ளனர்; இருந்துவிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும்
அழுத்தம் கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 6,000 தாயேஷ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில்
நிறுத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவும் எமிரேட்ஸும் இவர்களுக்கு நிதி வழங்கி
வருகின்றன. இருப்பினும், அவர்கள் ஈரானிய எல்லைக்கு அருகே நிலைக் கொண்டிருக்கவில்லை.
கிழக்கு எல்லைகளில் எமது
இராணுவப் படைகள் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கின்றன. எமக்கு எதிராக அவர்கள்
பயங்கவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், எமது பதிலடியின் வீரியத்தை
புரிந்துகொள்வர்” என்றும் தளபதி அஹ்மத்-ரெசா
பூர்தாஸ்டான் கூறினார்.
http://www.irna.ir/en/News/83181938
No comments:
Post a Comment