Contributors

Friday, September 15, 2023

அமெரிக்காவின் சதித்திட்டங்கள் ஈரானை மட்டும் இலாக்காகக் கொண்டவை அல்ல

US conspiracies are not limited to Iran

அமெரிக்காவின் நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தில் இன மற்றும் மத வேறுபாடுகளை அதிகரிப்பதன் மூலம் ஈரானை குறிவைத்தல் மற்றும் பெண்கள் பிரச்சினையைப் பூதாகாரமாக்குதல் அடங்கும் 

ஈரானிய மாகாணங்களான சிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் தெற்கு கொராசான் பிரதேசங்களில் இருந்து தன்னை சந்திக்க வந்திருந்த ஏராளமான மக்களுடன் உரையாடுகையில் இமாம் கமேனி உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்ற நாடுகளில் நெருக்கடியை உருவாக்குவதற்கான பணிகளையும் திட்டங்களையும் தொடர்ச்சியாக மென்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த செப்டம்பர் 11, 2023 அன்று இமாம் கொமேனி ஹுசைனியாவில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், தற்போது உலகில் நிகழ்ந்துவரும் மாற்றத்தின் மிக முக்கியமான கூறுகள் அமெரிக்கா மற்றும் பிற திமிர் பிடித்த சக்திகளின் பலவீனம் மற்றும் புதிய பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் தோற்றம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

உலகெங்கிலும் பெரிய மாற்றங்கள் நிகழும் இந்த காலகட்டத்தில் நாடுகளின் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் முழு விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.

18 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டம் உட்பட ஆசியாவின் முக்கிய பகுதிகளில் இங்கிலாந்தின் காலனித்துவ மேலாதிக்கம் மற்றும் முதல் உலகப் போருக்குப் பிறகு மேற்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் மேற்கத்தியர்களின் ஆதிக்கத்துக்குக்கு உள்ளானது, இந்த பிராந்தியங்களின் நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் அலட்சியத்தின் விளைவாகவே இவ்வாறு நிகழ்ந்தது என்று தலைவர் விவரித்தார். "காலனித்துவவாதிகளின் சூறையாடும் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இந்த பிராந்தியங்களின் நாடுகள் பின்னர் பெரிதும் போராடவேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

உலகம் இன்று ஒரு மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது பல்வேறு பரிமாணங்களிலிருந்து மாற்றத்திற்கு உட்பட்டு வருவதாகக் கூறினார். காலனித்துவ சக்திகள் ஒருபுறம் பலவீனமடைவதும், மறுபுறம் புதிய பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் எழுச்சியும் இந்த மாபெரும் மாற்றங்களின் இரண்டு பண்புகளாக அவர் பட்டியலிட்டார்.

பல மேற்கத்திய தரவுகளை மேற்கோள் காட்டி, இஸ்லாமிய புரட்சியின் தலைவர், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறினார். "அரசாங்கங்களை மாற்றுவதற்கான அமெரிக்காவின் பலமும் கணிசமாகக் குறைந்துள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.

"ஒரு காலத்தில் அமெரிக்கா தனது முகவர்களின் ஊடாக நினைத்த நேரத்தில் ஆட்சிகளை மாற்றும் சதிகளில் ஈடுபட்டு வந்தது; ஆனால், அமெரிக்காவால் எந்த நாட்டிலும் இலகுவாக தனது தசைகளை வளைக்க முடியாது. அதனால்தான் அது ஹைபிரிட் போரை மேற்கொண்டுள்ளது, அதுவும் இறுதியில் அவர்களுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை" என்று தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்,

சிரியாவில் அமெரிக்காவின் தோல்வி மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அதன் அவமானகரமான வெளியேற்றம் ஆகியவை அமெரிக்க அதிகாரத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் என்று விவரித்தார். ஆபிரிக்கக் கண்டத்தின் செல்வங்களை சுரண்டிவந்த பிரான்சுக்கு எதிராக பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் தற்போது எழுச்சிகள் ஏற்பட்டுவருகின்றன. ஆபிரிக்க மக்கள் இந்த எழுச்சிகளை ஆதரிப்பதாலும், பிரான்ஸ் போன்ற திமிர் பிடித்த வல்லரசுகளும் இதையே எதிர்கொள்ளும் என்றும் தலைவர் ஹேஷ்யம் கூறினார்.

"எதிரி பலவீனமடைகின்றனர் என்று நாம் சொல்லும்போது, அவர்கள் மற்றவர்களை ஏமாற்றவும், சதி செய்யவும், தீங்கு விளைவிக்கவும் சக்தியற்றவர் என்று அர்த்தமல்ல. (அவர்களின் சதி விளையாட்டுக்கள் தொடரவே செய்யும்) எனவே, நாமும், மக்களும், அதிகாரிகளும் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்" என்று இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் விளக்கினார்,

அமெரிக்காவின் சதித்திட்டங்கள் ஈரானை மட்டும் இலாக்காகக் கொண்டவை அல்ல என்பதையும் "இன்று, ஈராக், சிரியா, லெபனான், யேமன், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பழைய மற்றும் பாரம்பரிய நண்பர்களான பாரசீக வளைகுடா நாடுகளுக்கான திட்டங்களை அமெரிக்கா கொண்டுள்ளது" என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நாடுகளை அது சும்மா விட்டுவிடும் என்று நாம் நினைக்கக்கூடாது. மீண்டும் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அது எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, இதனையிட்டு நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நெருக்கடியை ஏற்படுத்த சாதகமான சூழல் என்று அவர்கள் நினைக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தூண்டுவதே அவர்களின் நோக்கம் "அவர்களின் பார்வையில், இன மற்றும் மத வேறுபாடுகள் மற்றும் பாலினம் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் ஈரானில் நெருக்கடியை ஏற்படுத்தும் புள்ளிகளில் அடங்கும். இவற்றைத் தூண்டிவிட்டு நாட்டிற்கு தீங்கு விளைவிக்க அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் ஆசை ஒருபோதும் நிறைவேறப்பவதில்லை என்றும் இமாம் கமேனி கூறினார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழிகாட்டுதல்களை ஈரானிய தேசம் பின்பற்றியதால் கடந்த 40 ஆண்டுகளில் எதிரிகளின் சதித்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என்று தலைவர் கூறினார். ஈரானிய தேசத்தின் வெற்றிகரமான இயக்கம் தொடர்வதற்கு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் நோக்குநிலைகள் முக்கியமானவை என்று அவர் கூறினார். "ஈரானியர்களின் 'தேசிய ஒற்றுமை' மற்றும் 'தேசிய பாதுகாப்பு' ஆகிய இரண்டு அடிப்படை கூறுகளை எதிரிகள் குறிவைத்துள்ளனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இமாம் கமேனி தனது உரையில், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மற்றும் கொராசானின் தெற்குப் பகுதிகளுடனான தனது 60 ஆண்டுகால உறவைப் பற்றி பேசினார். "1963 ஆம் ஆண்டில் முஹர்ரம் மாதத்தில் பிர்ஜாந்தில் தாகூத் (பஹ்லவி) ஆட்சிக்கு எதிராக எனது முதல் வெளிப்படையான போராட்டம் நடந்தது. அங்குள்ள அறிஞர்கள் மற்றும் மக்களின் அன்பான சகவாசமும் அப்போது கிடைத்தது. அதே ஆண்டு ரமலான் மாதத்தில், விழிப்புடன் இருந்த ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் மற்றும் அந்த பிராந்தியத்தின் மத மக்களின் ஆதரவுடன் இந்த இயக்கம் ஸாஹிதானில் தொடர்ந்தது என்றார்.

இந்த சந்திப்பின் போது, ஈரான்ஷாஹ்கரில் தான் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட காலத்தை நினைவுகூர்ந்த தலைவர், சுன்னி அறிஞர்கள் மற்றும் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மக்களின் அன்பான இதயங்களுடன் ஒன்றிணைந்த இனிமையான, அர்த்தமுள்ள நினைவுகளை சுட்டிக்காட்டினார்.

"இந்த பிராந்தியங்கள் மதிப்புமிக்க ஷியா மற்றும் சன்னி தியாகிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாத்திற்கு வழங்கியுள்ளன. MKO பயங்கரவாதிகள் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போரின் போதும், புனிதப் பாதுகாப்புக் காலத்திலும், பாதுகாப்பையும் ஒற்றுமையையும் நிறுவும் போதும் அவர்கள் தியாகங்கள் செய்தனர். இந்த யதார்த்தம்தான் இந்த பிராந்தியங்களுக்கு அவர்களின் பிரகாசமான அடையாளத்தை அளிக்கிறது," என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.

சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றின் தற்போதைய நிலை புரட்சிக்கு முன்பு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு முன்னேறியுள்ளது எனினும், "இவ்வளவும் செய்யப்பட்டிருந்தாலும், எங்கள் அதிகாரிகள் பிராந்தியத்திற்கு சேவைகளை வழங்குவதை இன்னும் தீவிரமாக மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். மாகாணத்தில் வடக்கு- தெற்கு புகையிரத பாதையை அமைத்து மக்களின் நீர் உரிமையை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றார்.

அர்பஈன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 22 மில்லியன் யாத்ரீகர்களுக்கு ஈராக்கிய மக்கள் காட்டிய மதிப்புமிக்க வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த மாபெரும் நிகழ்வின் போது பாதுகாப்பு வழங்கிய ஈராக் அரசு, அதிகாரிகள், போலீஸ் படைகள் மற்றும் குறிப்பாக ஹஷ்த் அல்-ஷாபிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

https://english.khamenei.ir/news/10070/Exposing-US-s-crisis-making-mission-Targeting-Iran-by-aggravating

 

Sunday, September 10, 2023

கஸ்வின் நகரம்; ஈரானின் கலை மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்

 Qazvin city; Symbol of Iran's art and traditions

1278 மீட்டர் உயரத்தில் அல்போர்ஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கஸ்வின் ஈரானின் மிகவும் வரலாற்று நகரங்களில் ஒன்றாகும், மேலும் ஒரு காலத்தில் சஃபாவித் வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் தலைநகராக இருந்தது.

காஸ்வின் நகரம் சசானியப் பேரரசு சகாப்தத்தில், மன்னர் இரண்டாம் ஷாபூர் (கி.பி. 309 - 379) என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. தெயிலாமிகளின் படையெடுப்பைத் தடுக்க இந்த பகுதியில் ஒரு கோட்டையைக் கட்ட மன்னர் உத்தரவிட்டார் என்றும் இந்த உத்தரவின்படியே கோட்டையின் அஸ்திவாரம் படிப்படியாக அமைக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. சில வரலாற்றாசிரியர்கள் காஸ்வின் என்ற பெயர் எல்லை என்று பொருள்படும் 'காஷ்வின்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக நம்புகின்றனர், மேலும் சில ஓரியண்டலிஸ்டுகள் காஸ்வின் என்ற சொல் காஸ்பியன் கடலின் மேற்கில் வாழும் ஒரு குழுவான காஸ்பியன்ஸ் என்ற பழங்குடியினரின் பெயரிலிருந்து பெறப்பட்டது என்றும் நம்புகின்றனர்.

கஸ்வினின் நாட்டின் வரலாற்று கட்டிடங்களைக் கொண்டிருப்பதின் காரணமாக முதல் இடத்தைக் கொடுத்துள்ளன. பட்டுப் பாதை காரணமாக வணிகர்களுக்கு கஸ்வின் ஒரு முக்கிய கடக்கும் இடமாகவும் இருந்தது. இந்த நகரம் மிர் இமாத் கஸ்வினி (1554-1615) போன்ற பல சிறந்த ஈரானிய கலைஞர்களின் தாயகமாகவும் உள்ளது, மேலும் இவை அனைத்திற்கும் மேலாக, சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகளின் பேர்பெற்ற நகரமாகவும் உள்ளது.

கஸ்வின் பாரசீக தரைவிரிப்புகள் மற்றும் சிற்றோவியங்கள் மற்றும் எழுத்தணி போன்ற நுண்கலைகளுக்காகவும், அதன் திராட்சை மற்றும் சுவையான பழங்களுக்காகவும் புகழ் பெற்றது.

கஸ்வின், ஈரானின் எழுத்தணி கலையின் தலைநகரம்

பனாயி, மொஹாக்கக், தாலிக், மெய்தானி, நஸ்டாலிக், ஷெகஸ்தே-நஸ்தலிக், நஸ்க் மற்றும் சோல்ஸ் போன்ற பல்வேறு பாரம்பரிய எழுத்தணி பாணிகளில், கடைசி நான்கு மட்டுமே ஈரானில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. சஃபாவித் சகாப்தத்தில் மிர் எமாத் கஸ்வினி, ஜாண்ட் சகாப்தத்தில் மிர்சா ஜீனோலாபெடின் முஜேஸ்னேகர் மற்றும் ஈரானிய கலாச்சாரத்தை செம்மைப்படுத்த பங்களித்த கஜார் சகாப்தத்தில் மாலெக் முகமது மற்றும் மிர்சா முகமது ஹொசைன் சீஃபி கஸ்வினி (எமாடோல்கேதாப்) உள்ளிட்ட பல முக்கிய எழுத்தணி நிபுணர்கள் இந்த நகரத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாஸ்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எழுத்துப் பாணியை உருவாக்கினர். மீர் இமாத் கஸ்வினி மற்றும் பிற கஸ்வினி எழுத்தணி நிபுணர்களின் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை.

கஸ்வின் வரலாற்று மற்றும் சுற்றுலா தளங்கள்

கஸ்வின் மாகாணம் நாட்டின் பழமையான மத்திய மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சசானிய காலத்தைச் சேர்ந்தது. சஃபாவித் ஆட்சியின் போது சுமார் 57 ஆண்டுகள் ஈரானின் தலைநகராக கஸ்வின் நகரம் இருந்தது. இந்த காரணத்திற்காக, இந்த பண்டைய நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான சுற்றுலா ஈர்ப்புகள் உள்ளன. சில வரலாற்றுத் தளங்களாகவும், சில இயற்கையான இடங்களாகவும் உள்ளன.

கஸ்வினின் ஓவன் ஏரி

ஓவன் ஏரி கஸ்வினின் இயற்கை ஈர்ப்புகளில் ஒன்றாகும், இது பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, அதன் அற்புதமான மற்றும் கண்கவர் காட்சிகள் காரணமாக. இந்த அழகிய ஏரியைச் சுற்றி இவான், வெயின், ஜவர்தஷ்த் மற்றும் ஜராபாத் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன:

ஈரானின் இயற்கை ஏரிகளில் ஒன்றான ஓவன் ஏரி அதன் கண்கவர் காட்சிகளுக்கு பெயர் பெற்றது. ஏரிக்கு வசதியான சாலை மற்றும் ஏரியின் விளிம்பில் உள்ள வசதிகள் குடும்பங்களுக்கு சரியான பொழுதுபோக்கை வழங்கியுள்ளன. இயற்கை ஆர்வலர்களை இயற்கைக்கு ஈர்க்கும் ஓவன் ஏரியின் மற்றொரு அம்சம் இந்த கேம்ப்கிரவுண்ட் ஆகும்.

ஓவன் ஏரி குளிர்காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் உறைகிறது, மேலும் இது அன்னங்கள், வாத்துகள் போன்ற புலம்பெயர் பறவைகளுக்கு பொருத்தமான புகலிடமாக கருதப்படுகிறது.

1815 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் குளிர்காலத்தில் ஏரியின் மேற்பரப்பு உறைந்து பனிச்சறுக்கு வீரர்களை ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய அனுமதிக்கிறது. மறுபுறம், கோடையில் மீன்பிடித்தல், நீச்சல் மற்றும் படகு சவாரிக்கு ஏற்ற தலமாகவும் உள்ளது.

கஸ்வின் பெரிய பள்ளிவாசல்

கிராண்ட் மசூதி என்றும், அதிக் மசூதி என்றும் (ஜாமே மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது) பல்வேறு வரலாற்று காலங்களின் கட்டிடக்கலை பாணிகளின் தொகுப்பாகும். செல்ஜுக், சஃபாவித் மற்றும் ஓரளவிற்கு கஜார் காலங்களின் கட்டிடக்கலை பாணிகளை இங்கு காணலாம்.

ஷாஸ்தே ஹொசைன் நினைவாலயம்

ஷாஸ்தே ஹொசைன் எட்டாவது ஷியா இமாம் ரெஸா அவர்களின் மகன்களில் ஒருவரின் கல்லறை கஸ்வின் நகர மையத்தில் அமைந்துள்ளது. இதன் அற்புத கட்டிடக்கலை பார்ப்பவரை பிரமிக்கச் செய்யும்.

இந்த கல்லறை முதன்முதலில் 1220 களில் கட்டப்பட்டது, அதன்பிறகு சஃபாவித் மன்னர்களின் ஆட்சியின் போது இது சில மறுசீரமைப்புகளுக்கு உள்ளாகி அற்புதமான கட்டிடக்கலை வளாகமாக மாறியது. கட்டிடத்தின் உள்ளே கண்கவர் கண்ணாடி வேலைப்பாடுகள் 1840 களில் சேர்க்கப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கு வாயில்களால் சூழப்பட்ட ஒரு பரந்த முற்றம், கட்டிடத்தைப் பார்க்க வருவோருக்கு போதுமான இடத்தை வழங்குகிறது. வடக்கு நுழைவாயில் ஒரு கம்பீரமான படைப்பாகும். கலை வடிவங்கள், அலங்கார ஓடு வேலைகள், உயரமான வாயில்கள் மற்றும் 6 மினி-மினாராக்கள் வடக்கு நுழைவாயிலுக்கு ஒரு தனித்துவமான அழகிய பாணியைக் கொடுத்துள்ளன.

லமுட் கோட்டை

லமுட் கோட்டை வடகிழக்கு காஸ்வின் மாகாணத்தில் கஸோர்கான் கிராமத்திற்கு அருகில் 2163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட கல் படிக்கட்டுகளைக் கொண்ட இந்த கோட்டையின் வடக்கு முகப்பில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. மலையின் தெற்கு சரிவில் ஒரு பள்ளம் உள்ளது, இது எந்த ஊடுருவலையும் தடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த கோட்டை கிட்டத்தட்ட 120 மீட்டர் நீளமும், 10 முதல் 35 மீட்டர் அகலமும் கொண்டது. கோட்டையின் உச்சியில் நிற்கும்போது, சுமார் 10 கி.மீ தூரத்தைக் காணலாம்.

நாற்பது தூண் பெரிய கட்டிடம்

செஹெல் சோடூன் அல்லது நாற்பது தூண்கள் கொண்ட மாளிகை என்பது பழைய நகரமான கஸ்வினில் அமைந்துள்ள ஒரு சஃபாவித் அரண்மனை ஆகும். ஒட்டோமான் துருக்கியர்களின் அச்சுறுத்தல் காரணமாக சஃபாவித் மன்னரான ஷா தஹ்மாஸ்ப் தலைநகரை கஸ்வினுக்கு மாற்றியபோது இந்த சதுர வடிவ மாளிகை கட்டப்பட்டது. இந்த அரண்மனை துருக்கிய கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பின்படி மிகவும் கவர்ச்சிகரமான மர ஜன்னல்களைக் கொண்ட ஒரு அழகான தோட்டத்தின் நடுவில் ஒரு மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது.

காஸ்வின் இனிப்புகள் சிறப்பு

ஈரானில், உணவு மற்றும் இனிப்புகள் தனித்துவமான சுவையை கொண்டதாக இருக்கும். ஈரானியர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கவும் உணவைப் பயன்படுத்துகின்றனர்.

ஈரானில் உள்ள நகரங்களில் இனிப்பு பண்டங்களுக்கு பிரசித்தமான இடமாக கஸ்வின் அறியப்படுகிறது. முக்கிய விழாக்களின் போது, காஸ்வின் இனிப்புகள் பரிமாறப்படுகின்றன.

விதைகள், உலர்ந்த பழங்களின் மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் சுவைகள் காஸ்வின் இனிப்புகளுக்கு தனி இடத்தை வழங்கியுள்ளன. காஸ்வின் மாகாணத்தில் உள்ள இல்லத்தரசிகள் பெரும்பாலும் வெவ்வேறு விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நிறம், வாசனை மற்றும் சுவையில் மாறுபடும் இனிப்புகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள்.

கொடி பக்லாவா

பக்லாவா இனிப்பு (Baklawa Sweet) யாஸ்த், கஷான் மற்றும் இஸ்பஹான் பல ஈரானிய நகரங்களின் அடையாளமாகும், இருப்பினும், கஸ்வின் பக்லாவா தனித்துவமான ஈரானிய உணவுகளில் ஒன்றாகும். கொடியில் உள்ள ஒவ்வொரு அடுக்கும் காஸ்வின் பாரம்பரிய தோட்டங்களின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றைக் குறிக்கிறது. கஸ்வின் பக்லாவாவில் சேர்க்கப்படும் பிஸ்தா அங்கு அங்கு உற்பத்தி செய்தவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனெனில் இந்த பிஸ்தாவின் தரம் குறித்து கஸ்வினின் குடிமக்கள் ஒரு சிறப்பு கருத்தைக் கொண்டுள்ளனர்.

படேராஸி இனிப்புகள்

கஸ்வின் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான இனிப்புகளைப் போலவே, படேராஸியும் அரை இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது. இது அநேகமாக தேநீர் அல்லது காபியுடன் வழங்கப்படுகிறது. மூன்று வகையான மாவால் தயாரிக்கப்படும்  படேராஸி கோதுமை மாவு, கொண்டைக்கடலை மாவு மற்றும் அரிசி மாவுடன் முட்டை, இஞ்சி தூள், வெணிலா, குங்குமப்பூ, எள், சக்கரை, பால் மற்றும் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக ஈரானிய புதுவருடமான நவ்ரூஸுக்காக மூன்று வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.

கொண்டைக்கடலை இனிப்புகள்

கொண்டைக்கடலை இனிப்புகள் ஈரானின் பெரும்பாலான நகரங்களில் பிரபலமாக இருந்தபோதிலும் அவை முதலில் கஸ்வின் மாகாணத்திலிருந்து வந்தவை ஆகும். அவை பெரும்பாலும் ஈரானிய புதுவருடமான நவ்ரூஸில் விருந்தினர்களை மகிழ்விக்கின்றன. கொண்டைக்கடலை இனிப்பு தயாரிப்பதற்கு விரைவானது மற்றும் மிகவும் திருப்திகரமானது. இந்த சுவையான இனிப்புகள் பொதுவாக பிஸ்தா, பட்டாணி மாவு, முட்டையின் மஞ்சள் கரு, சக்கரை, தூள் சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

பிஸ்தா ரோல்

எள் ரோல், அக்ரூட் ரோல் போன்ற பல வகையான மெல்லிய ரோல்கள் (Thin Roll) இருந்தபோதிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது பிஸ்தா மெல்லிய ரோல் ஆகும். கஸ்வின் உள்ளூர் மக்களால் இது பெசாக் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை மாவு, சக்கரை தூள், முட்டை, திட எண்ணெய், வெணிலா, தயிர், உருகிய வெண்ணெய், உப்பு, பேக்கிங் பவுடர், புளிப்புத் தூள், வால்நட் பவுடர், பிஸ்தா தூள், குங்குமப்பூ மற்றும் எள் ஆகிய பொருட்கள் இந்த சுவையான ரொட்டியில் சேர்கின்றன.

கஸ்வினின் சுவையான உணவுகள்:

மத்திய அல்போர்ஸ் மலைத்தொடரால் சூழப்பட்டிருப்பதால் கஸ்வின் மாகாணம் ஒரு தனித்துவமான புவியியல் இருப்பிடத்தையும் காலநிலையையும் கொண்டுள்ளது, மேலும் இந்த நகரத்தின் பண்டைய வரலாற்றுக்கு கூடுதலாக, இந்த பகுதியின் உள்ளூர் உணவு வகைகள் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான கஸ்வினி உணவுகள் இனிப்பு மற்றும் மென்மையான சுவையைக் கொண்டதாக்க இருக்கும், மேலும் அவை பீன்ஸ், இறைச்சி, அனைத்து வகையான உண்ணக்கூடிய விதைகள் மற்றும் நறுமணமுள்ள உள்ளூர் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றன.

கெய்மே நெசார்

கெய்மே நெசார் கஸ்வின் மாகாணத்தின் பிரபலமான மற்றும் உள்ளூர் உணவுகளில் ஒன்றாகும். இது மட்டன் அல்லது மாட்டிறைச்சி துண்டுகள், வெங்காயம், பாதாம் துண்டுகள், பிஸ்தா துண்டுகள், ஆரஞ்சு தோல் துண்டுகள் மற்றும் பார்பெர்ரி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை சாதத்தின் மீது தூவி பரிமாறுகின்றனர்.

கஸ்வினி அனார் போலோ (மாதுளை மற்றும் சோறு)

அனார் போலோ என்பது மிகவும் சுவையான ஈரானிய உணவுகளில் ஒன்றாகும், இது வழக்கமாக 'யால்டா' எனப்படும் நீண்ட இரவில் பரிமாறப்படுகிறது. கஸ்வினி அனார் போலோ என்பது மாதுளை, அரிசி, திராட்சை, குங்குமப்பூ, கொத்தமல்லி மற்றும் பிஸ்தா துண்டுகளின் கலவையாகும், இந்த உணவின் அற்புதமான சுவை மற்றும் தோற்றம் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும்.

கல் ஜூஷ்

கல் ஜூஷின் முக்கிய பொருட்கள் காஷ்க் (பாலில் இருந்து ஒரு தயாரிப்பு), அக்ரூட் பருப்புகள் மற்றும் புதினா. ஆனால் நாட்டின் சில பகுதிகளில், இந்த உணவை தயாரிக்க அவர்கள் தயிரைப் பயன்படுத்துகிறார்கள், இது ஒரு அற்புதமான சுவையைத் தருகிறது. இதில் மாமிசம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், கல் ஜூஷ் சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். கல்ஜூஷ் ஒரு நீர் நிறைந்த உணவு என்பதை அறிந்து கொள்வது நல்லது, அவர்கள் வழக்கமாக அதில் ரொட்டியை வைத்து கலவையை சாப்பிடுவார்கள். நீங்கள் இந்த உணவை ஒரு பசியூட்டியாகவோ, சிற்றுண்டியாகவோ அல்லது ஒரு சைட் டிஷ் ஆகவோ கூட சுவைக்கலாம்.

தொகுப்பு: முஹத்தசே பக்ரவன்

https://en.mehrnews.com/news/204742/Qazvin-city-Symbol-of-Iran-s-art-and-traditions#:~:text=Qazvin%20is%20famed%20for%20Persian,its%20grapes%20and%20delicious%20sweets.&text=Of%20the%20various%20traditional%20calligraphy,are%20still%20used%20in%20Iran

Tuesday, September 5, 2023

அண்டை நாடுகளுடனான முரண்பாடுகளை ஒத்துழைப்பாக மாற்றுவோம் - இமாம் காமனெய்

Let's turn conflicts with neighbours into cooperation - Imam Khamane'i

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் -  அலி ரஜாய் மற்றும் பஹோனர்

1981 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30 அன்று, ஈரானில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பில் அப்போதைய ஜனாதிபதி முகமது அலி ராஜாய், பிரதம மந்திரி முகமது ஜவாத் பஹோனர் மற்றும் ஆறு மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவர்களது இந்த உயிர் தியாகத்தை நினைவுகூறுமுகமாக ஒவ்வொரு ஆண்டும், ஈரான் இஸ்லாமிய குடியரசில் அவர்களின் தியாக நினைவு தினத்திற்கு முந்தைய வாரம் 'அரசாங்க வாரமாக' அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன் போது, இமாம் காமனெய், தியாகி ராஜாய் மற்றும் தியாகி பஹோனர் ஆகிய இருவரும் கொண்டிருந்த இரண்டு முக்கிய அம்சங்கள் பற்றி சிலாகித்துப் பேசினார், அவர்கள் இறைவனின் திருப்தியை நாடியே மக்களுக்கு சேவை செய்ய உழைத்தனர் என்று கூறினார்.

"ரஜாய் மற்றும் பஹோனரின் நோக்குநிலை இஸ்லாமாகவும் புரட்சியையும் நோக்கியதாகவும் இருந்தது. மக்களுக்கு சேவை செய்வது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். எனவே, இஸ்லாமிய அமைப்பின் அனைத்து அரசாங்கங்களுக்கான குறியீட்டு வார்த்தைகள் இறைவனின் திருப்தியைத் தேடுவதாகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காக செயல்படுவதாகவும் இருக்க வேண்டும்" என்று தலைவர் கூறினார்,

அண்டை நாடுகளுடனான உறவுகள் தொடர்பாக ஈரானின் கொள்கை உட்பட வெளியுறவுக் கொள்கைத் துறையில் தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் மோதல் கொள்ளக் கூடாது. முரண்பாடு ஏற்பட்டால், அதை ஒத்துழைப்பாக மாற்ற வேண்டும். இது தொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இது தொடர வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

ஈரானுடன் உறவு கொள்ள விரும்பும் அனைத்து அரசாங்கங்களுடனும் (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர) உறவுகளை நிறுவும் கொள்கைக்காக தற்போதைய நிர்வாகத்தை இமாம் காமனெய்  பாராட்டினார்.

வெவ்வேறு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பதும் சரியான நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதும் அவசியம் என்றும் சில நாடுகளுடனான ஒத்துழைப்பின் அரசாங்கத்தின் எண்ணற்ற, நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது அவசியம் என்றும், அவை வெறுமனே காகிதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

உலக நாடுகளுடனான தொடர்புகள் ஒரு சில மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு கொண்டவையாக மட்டுப்படுத்தப்பட்டவை என்று சில அரசியல் கூறுகள் கருதுவதாக இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் சுட்டிக்காட்டி, "இந்தக் கண்ணோட்டம் தவறானது, பிற்போக்குத்தனமானது, 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் காலனித்துவத்தின் ஊடாக உலகைக் கட்டுப்படுத்திய காலத்தைச் சேர்ந்தது. ஆனால், அந்த பழைய, பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை நாம் இன்று ஒதுக்கி வைக்க வேண்டும். உலகத்துடன் உறவு வைத்திருப்பது என்பது ஏராளமான மனித மற்றும் இயற்கை வளங்கள் உள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவுடன் உறவுகளைக் கொண்டிருப்பது என்பதை உணர வேண்டும். மேலும், சர்வதேச உறவுகளுக்கான அளவுகோல் நமது நாட்டின் நலன்கள் மற்றும் பரஸ்பர மரியாதை கொண்டதாக இருக்கவேண்டுமே அன்றி. நமது உறவுகளில் ஆதிக்கமும், அடிபணிதலும் இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மிகவும் முக்கியமான விஷயம் என்று இமாம் காமனெய்  தனது உரையில் கூறினார். "மக்களின் வாழ்வாதாரப் பகுதியில் உள்ள பிரச்சினைகள், வீடு அதிக விலைகள் மற்றும் அதிகரித்த வாடகையி போன்றவை அரசாங்கத்தின் அனைத்து நல்ல வேலைகளையும் முயற்சிகளையும் மழுங்கச்செய்யும், அரசின் பணிகள் பணிகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க காரணமாகின்றன" என்று அவர் கூறினார்.

எதிரிகளால் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் முக்கிய நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்க வேண்டும் என்பதாகும். இதை நாம் நன்கு அறிவோம். "பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இது சரியான வழிமுறையாகும். ஆனால் அதே நேரத்தில், பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைக் குறைக்கும் மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்று பணவீக்கத்தைக் குறைப்பதாகும், "என்று அவர் மேலும் கூறினார்.

பணவீக்கக் குறைப்பு தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிவரங்களுக்கு பதிலளித்த இமாம் காமனெய் , "இது [பணவீக்க விகிதத்தில் குறைப்பு] நல்லது, ஆனால் அது போதாது. இரட்டை இலக்க பணவீக்க விகிதமும், தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடரும் பணவீக்கமும் முற்றிலும் பொருத்தமற்றது. பணவீக்கத்தை முடிந்தவரை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

கூட்டத்தின் மற்றொரு பகுதியில், இமாம் காமனெய்  நிர்வாகத் துறைகளில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டார். தற்போதைய நிர்வாகம் மக்கள் மத்தியில் சுறுசுறுப்பாக இருப்பதாக பாராட்டிய அவர், "நாங்கள் யாரும் விசேட சிறப்பு வாய்ந்தவர்கள் அல்ல, இங்கே இருப்பது அனைத்தும் மக்களுக்கு சொந்தமானது, நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மக்களாலேயே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே, மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

நிர்வாகத்தில் உள்ளோரின் எளிமையான வாழ்க்கை முறை, புரட்சிகர மனப்பான்மை, ஜிகாதி (தியாக) மனப்பான்மை மற்றும் பல்வேறு நிர்வாக பதவிகளில் இளைஞர்களை இணைத்துக் கொண்டிருப்பதற்காகவும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் பாராட்டினார். 

நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், "மக்களைப் போல வாழ்வது மிகவும் மதிப்புமிக்கது, அது தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

https://english.khamenei.ir/news/10047/Considering-the-world-to-be-just-several-western-countries-A

Friday, September 1, 2023

ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்க திட்டம் தோல்வி

 The US plan to isolate Iran has failed

Velayati speaks to Al Mayadeen Net about Iran, BRICS, and US reactions affairs, 

ஈரான், பிரிக்ஸ் (BRICS) மற்றும் அமெரிக்க எதிர்வினைகள் விவகாரங்கள் குறித்து அல் மயாதீன் நெட்டிடம் பேசிய அலி அக்பர் வெலாயத்தி, உலகம் மேலும் பல்துருவமாக மாறும் போது உலகளாவிய நாணயமான டாலர் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று கூறுகிறார்.

அலி அக்பர் வெலாயத்தி

ஈரானின் பிரிக்ஸ் உறுப்புரிமை தெஹ்ரானுக்கு இந்த ஆண்டின் மிக முக்கியமான இராஜதந்திர சாதனைகளில் ஒன்றாக மாறியுள்ளது, அந்த சூழலில், அல் மயாதீன் செய்தியாளர் சியாவாஸ் ஃபல்லாபோர் (Siavash Fallahpor) சர்வதேச விவகாரங்களில் ஈரானிய தலைவர் செய்யிதலி காமனெயின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் வெலாயத்தியுடன் ஒரு பிரத்யேக நேர்காணலை நடத்தினார். அதன் முழுமையான வடிவம் இதோ:

ஈரானின் பிரிக்ஸ் உறுப்புரிமை என்பது ஈரான் மீது திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கொள்கை முயற்சி தோல்வியடைந்ததன் அறிகுறியாகக் கருத முடியுமா?

ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில், தெஹ்ரான் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு வடிவங்களில் தொடர்புகளை கொண்டிருந்தது, குறிப்பாக ஈரான் கிழக்கு நோக்குநிலை மற்றும் அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகள் என அரசியல் கொள்கையை ஏற்றுக்கொண்டது. இந்த கொள்கை மிகவும் முக்கியமானது என்று இமாம் செய்யிதலி காமனெய் வலியுறுத்தி இருந்தார், மேலும் இதற்காக அனைத்து முயற்சிகளும் தீவிரத்தன்மையுடனும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்கையின் விளைவாக சமீபத்திய ஆண்டுகளில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய முன்னேற்றகாரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண்கிறோம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்த முயன்ற அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் கொள்கைகள் தோல்வியடைந்ததை நாம் காண்கிறோம், ஷாங்காய் அமைப்பில் ஈரானின் உத்தியோகபூர்வ அங்கத்துவத்திற்குப் பிறகு இந்த தோல்வியுற்ற கொள்கைகள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன.

இப்போது ஈரான் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளது, அமெரிக்கா மீதான பிராந்திய நாடுகளின் நம்பிக்கையும் ஆட்டம் கண்டுள்ளது, ஏனெனில் இதன் உறுப்பு நாடுகள் ஒரு புறம் வெவ்வேறு வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, மேலும் இவை ஒரு வகையான கிழக்கு சார்ந்த கொள்கையையும் பிராந்திய நாடுகளுடன் அதிக கூட்டணி மற்றும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த நாட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன. அவற்றின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனவே, ஈரானுக்கு எதிரான தனிமைப்படுத்தும் கொள்கை சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியடைந்துள்ளது, மேலும் மற்றொரு நாட்டை தனிமைப்படுத்த முயற்சித்தவர்கள் தங்களைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக் கொண்டனர்.

புரட்சியின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை ஈரான் இஸ்லாமிய குடியரசு பொருளாதார மற்றும் அரசியல் முற்றுகையின் கீழ் உள்ளது, இருப்பினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முடிவால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஈரானுக்கு தன்னைத் தவிர உலகத்துடன் பொருளாதார அல்லது வேறுவகையான தொடர்பு எதுவும் இல்லை என்றும் யாராவது கூற முடியுமா?

அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஆரம்பத்திலிருந்தே ஈரானுக்கு எதிராக தனிமைப்படுத்தல் என்ற பிரச்சார கோஷத்தை பயன்படுத்த முயன்றாலும், அவை தோல்வியடைந்துள்ளன. நிச்சயமாக, ஈரான் இன்று அதன் அந்தஸ்தின் அடிப்படையில் உலகத்துடன் அதன் உத்தியோகபூர்வ உறவுகளை உறுதியாக வளர்த்துக் கொண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

பிரிக்ஸில் ஈரானின் உறுப்புரிமை தனிமைப்படுத்தல் திட்டத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது பலவீனப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, இந்த குழு அதிக பொருளாதார திறன்களையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அதன் உறுப்பு நாடுகள் உலகின் மொத்த மக்கள்தொகையில் [கிட்டத்தட்ட] பாதியைக் கொண்டுள்ளன.

இந்த சூழலில், உறுப்பு நாடுகளுடன் அரசியல் உறவுகளை வளர்ப்பதன் மூலமும், பொருளாதார ரீதியாக அவர்களுடன் ஈடுபடுவதன் மூலமும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும், புதிய திறன்களை வழங்குவதிலும் ஈரான் முக்கிய பங்கு வகிக்க முடியும். எனவே, ஈரானுக்கு எதிராக அமெரிக்கர்களும் மேற்கத்திய தலைவர்களும் அறிவித்த தனிமைப்படுத்தல் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து போன்ற வேறு சில நாடுகள் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருப்பதன் தாக்கம் என்ன?

பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற பொருளாதார வல்லரசுகள் இருப்பது, இந்த குழுவில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பங்கேற்பு மற்றும் உறுப்புரிமை ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கத்துவத்தின் விளைவுகளில் ஒன்று, நான் குறிப்பிட்டது போல,

பிரிக்ஸ் அமைப்பில் ஈரானின் அங்கத்துவம் உலகத்துடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஸ்தாபிப்பதற்கான இஸ்லாமிய குடியரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது, மேலும் இது அமெரிக்காவின் நீண்டகால தனிமைப்படுத்தல் திட்டத்தையும் உலகளாவிய ஆணவத்தையும் முறியடித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு கடந்த காலத்தை விட இன்று வலுவான நாடாக உள்ளது. அனைத்து துறைகளிலும் தனது செயலூக்கமான இராஜதந்திரத்தின் மூலம் பிராந்தியத்திலும் உலகிலும் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது.

இந்நிகழ்வு மேற்காசிய நாடுகளின் பிராந்திய உறவுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமா?

உலகில் பல துருவ சக்திகளின் உருவாக்கம் மற்றும் ஒன்றிணைந்துள்ள பெரும் பிராந்திய சக்திகளின் எழுச்சி ஆகியவை டாலரின் மையப்படுத்தலை பலவீனப்படுத்துவதற்கும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இது முன்னெப்போதையும் விட நாடுகளின் தீர்மானத்திலும் விருப்பத்திலும் நாம் காணும் ஒரு முக்கியமான விளைவாகும்.

மேலும், இந்த நிகழ்வு மேற்கூறிய நாடுகளுக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான மிகவும் தீவிரமான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையைக் காட்டுகிறது மற்றும் பிராந்தியத்தில் வளமான இருதரப்பு உறவுகளை தெளிவாக வலுப்படுத்தும்.

இந்த முன்னேற்றங்கள் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

இந்த புதிய நிகழ்வுகள் மற்றும் பிராந்திய நாடுகளுடனான ஈரானின் நிலைப்பாடுகள், உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றால் அமெரிக்கர்கள் நிச்சயமாக அதிருப்தி அடைந்துள்ளனர், எனவே அவர்களின் விரோதம் தொடரும். இந்த நடவடிக்கையும், பிரிக்ஸ் அமைப்பில் ஈரானின் சேர்க்கையும் அமெரிக்கர்கள் வரலாற்று ரீதியாக கையாளும் தந்திரங்களை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பிரிக்ஸ் அமைப்பு தற்போது ஒருங்கிணைப்பை அடைவதற்கும், உலக அரங்கில் பயனுள்ள பொருளாதார சக்தியை அதிகரிப்பதற்கும் அதன் உள்ளக நிறுவனங்களை உருவாக்கி வருகிறது. உறுப்பு நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதும், அவற்றின் பிராந்திய மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை வலுப்படுத்துவதும் இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். மேற்கத்திய நிறுவனங்களிலிருந்து சுயாதீனமான நிதி நிறுவனங்களை நிறுவுவது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதில் மிக முக்கியமான வெற்றியாகவும், உலகப் பொருளாதாரத்தின் புதிய கட்டமைப்பில் அவற்றின் மிக முக்கியமான அனுகூலமாகவும் கருதப்படுகிறது.

உங்கள் பார்வையில், உலகின் வளர்ந்து வரும் சக்திகளுடனான ஈரானின் உறவுகளின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வாஷிங்டன் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இந்த நடவடிக்கைகளுக்கு ஈரானின் பதில் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதன் நன்மைகளில் ஒன்று, குறிப்பாக ஈரானுக்கு, பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் திறன்களிலிருந்து பயனடைவதாகும். பன்னாட்டு அபிவிருத்தி வங்கி (Multinational Development Bank) என்று குறிப்பிடப்படும் இந்த வங்கி, உறுப்பு நாடுகளுக்கான கட்டண அறிவிப்பு முறையைக் கொண்டுள்ளது, இது SWIFT எனப்படும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளுக்கான நிதி முறையை மாற்றும்,

பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு குறிக்கோள், உலகளாவிய வர்த்தக நாணயமாக டாலரில் இருந்து பிரிந்து, உறுப்பு நாடுகளின் நாணயத்தின் அடிப்படையில் சர்வதேச நாணய இருப்பு நிதியை உருவாக்குவதாகும். வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார சமூகமான பிரிக்ஸ் இல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர உறுப்புரிமை, வெளிநாட்டு வர்த்தகம், தகவல்தொடர்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் உள்ள முக்கிய சக்திகளுடனான ஒற்றுமை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும்.

1944 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளின் ஒப்பந்தங்களில் ஒன்றாக பிரெட்டன் வூட்ஸ் (Bretton Woods) நாணய முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகிவிட்டன, இதன் மூலம் டாலர் ஒரு உலகளாவிய இருப்பு நாணயமாக அங்கீகரிக்கப்பட்டது, உண்மையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் அடிப்படையில், உலகில் ஒரு புதிய நாணய முறை நிறுவப்பட்டது. இதில் தங்கத்திற்கு பதிலாக செல்லுபடியாகும் சர்வதேச நாணயமாக டாலர் பயன்படுத்தப்படுகிறது.

அப்போதிருந்து, அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, ஆனால் காலப்போக்கில், உலகம் ஒரு துருவத்திலிருந்து பல துருவத்திற்கு நகரும்போது, டாலரின் வலிமையும் குறைந்துவிட்டது,

இன்று, ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகளின் உருவாக்கத்துடன், பிராந்தியத்தின் சக்திவாய்ந்த நாடுகள் ஒரு புதிய பொருளாதார ஒழுங்கை உருவாக்க முயற்சிக்கின்றன.

https://english.almayadeen.net/news/politics/velayati-speaks-to-al-mayadeen-net-about-iran-brics-and-us-r