Contributors

Tuesday, November 15, 2022

முஸ்லிம் உலகு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்தல்

 Addressing the challenges facing the Muslim world

இஸ்லாத்துக்கு எதிரான சதிகளை முறியடிப்பதற்காக, மதவாத கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன், இஸ்லாமிய பிரிவினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற அல்-அஸ்ஹரின் தலைமை ஷெய்க் ஷேக் அகமது எல்-தய்யிப் அழைப்புவிடுத்துள்ளார்.

Sheikh Ahmed el-Tayyeb

ஷெய்க் அஹ்மத் முஹம்மது அல்-தைய்யிப் அவரது முன்னோடி டாக்டர் முஹம்மது சயீத் தந்தாவியின் மறைவுக்குப் பிறகு மார்ச் 2010 இல் அல்-அஸ்ஹரின் தலைமை ஷெய்க்காக நியமிக்கப்பட்டார், சன்னி இஸ்லாமிய உலகத்தால் இஸ்லாமிய நீதித்துறைக்கான அதி உயர் அதிகாரியாகக் கருதப்படுகிறார்.

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான ஈரானின் உலக மன்றத்தின் பொதுச் செயலாளர், ஷேக் அஹ்மத் எல் தய்யிப், மூத்த சன்னி அறிஞரை ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, உள்-முஸ்லிம் உரையாடலுக்கான சமீபத்திய திட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

Hujjat-ul-Islam Hamid Shahriari

ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஹமித் ஷஹ்ரியாரி, பெய்ரூட்டை தளமாகக் கொண்ட சாட்டிலைட் சேனலான அல்-மயாதீனுக்கு அளித்த பேட்டியில், ஷியா-சுன்னி உரையாடலுக்கான எகிப்திய அறிஞரின் முன்மொழிவைத் தொடர்ந்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முஃப்தியை ஈரானுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஷெய்க் அஹ்மத் முஹம்மது அல்-தைய்யிபின் உரைக்கு பதிலளித்த ஈரானிய இஸ்லாமிய அறிஞர், “இஸ்லாமிய உலகில் பாதுகாப்பும் அமைதியும் நிலவ வேண்டும், இந்த குறிக்கோளை அடைவதற்கு முஸ்லிம்களுக்கு இடையேயான உரையாடல் அவசியமாகும்" என்று ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஹமித் ஷஹ்ரியாரி தெரிவித்தார்.

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச் செயலாளர், இஸ்லாமிய உரையாடலின் முதல் அடிப்படையைக் கண்டறியும் முயற்சியில் ஈரானுக்கு வருமாறு அல் அஸ்ஹர் தலைமை முஃப்திக்கு அழைப்பு விடுத்தார். அதேசமயம் முஸ்லிம்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிப்பதற்காக கெய்ரோவிற்கு வருகைதர ஈரானிய இஸ்லாமிய ஒற்றுமை மையம் தயாராக இருப்பதாகவும் ஷஹ்ரியாரி கூறினார்.

அல்-அஸ்ஹரின் தலைமை முப்தியுடனான உரையாடலுக்கு நாங்கள் திறந்த மனதுடன் தயாராய் இருக்கின்றோம்; இஸ்லாத்தின் எதிரிகளால் ஊக்குவிக்கப்படும் விரோத சதிகளுக்கு எதிராக எந்த அழைப்பையும் நாம் தவறவிட மாட்டோம், அது வருடாந்திர அழைப்பானாலும் சரிய. ஈரான் உலகில் இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது” என்று ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஷஹ்ரியாரி மேலும் கூறினார்,
 
இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச் செயலாளர் அல்-மயாதீன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின் போதே இக்கருத்தைத் தெரிவித்தார்.

மேலும் ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஹமித் ஷஹ்ரியாரி, சிரியாவின் அவ்காஃப் அமைச்சர் முகமது அப்துல் சத்தாருடன் ஒரு சந்திப்பில், இஸ்லாமிய உலகிற்கு எதிரான சதிகளை முறியடிக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் அறிஞர்களிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாக தக்ரிப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்ற நாடுகளில் உள்ள சன்மார்க்க நிறுவனங்கள், கலாச்சார மற்றும் அறிவியல் மையங்கள் மற்றும் செமினரிகளுக்குச் சென்று முஸ்லிம் உலகப் பிரச்சினைகள் குறித்து அறிஞர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
 
ஈரான் இஸ்லாமிய குடியரசில் பல்வேறு பிரிவுகளின் சகவாழ்வை சுட்டிக்காட்டிய ஷஹ்ரியாரி, பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கையைக் காட்டுவதற்கு ஈரான் நாட்டை ஒரு முன்மாதிரியாக குறிப்பிட்டார்.
 
ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஷஹ்ரியாரி, இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழி, பல்வேறு நாடுகளில் உள்ள முஸ்லிம் அறிஞர்களிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும், பல்வேறு நாடுகளில் உள்ள ஷீஆ-சுன்னி அறிஞர்களின் ஒன்றுகூடலை முன்மொழிவதும் ஆகும். இதற்கு களமமைக்கை ஈரான் இஸ்லாமிய குடியரசு எப்போதும் தயாராக உள்ளது என்றார்.

இஸ்லாத்தின் புனிதத்துவத்தைக் கெடுப்பதற்கென்றே திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான ஒன்று தான் ஐ.எஸ்.ஐ.எஸ்

தாயேஷ் தக்ஃபிரி பயங்கரவாதக் குழு இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான ஒன்று என்று ஷஹ்ரியாரி சாடினார்.

அவர் குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்டு, எதிரிகளுடனான மோதலையும், முஸ்லிம்களுடனான நட்புறவையும் ஒரு இஸ்லாமிய தேசத்திற்கான இரண்டு முக்கிய அளவுகோல்களாகக் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தின் இமேஜைக் கெடுக்கும் நோக்கத்துடன் திமிர்பிடித்த சக்திகளின் சிந்தனையில் உருவான தாயேஷ் பயங்கரவாதக் குழுவாக்கும். "ஆணவ சக்திகள் இஸ்லாத்தின் பிம்பத்தை வன்முறையாக உருவாக்கி அவற்றின் இஸ்லாமோஃபோபியா திட்டத்தை முன்னெடுக்க எண்ணுகின்றன" என்றார்.

அவர் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியை நாத்திகர்களின் உண்மையான வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டி, "அதன் ஆட்சியின் அடித்தளம் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது" என்றும் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய படைகளையும் அதற்கு துணைபோகும் அமெரிக்க அரசையும் முஸ்லிம்களின் உண்மையான எதிரிகள் என்றும் அழைத்தார்.

அவர் இஸ்ரேலிய ஆட்சியை போர்வெறியின் உண்மையான உதாரணம் என்று குறிப்பிட்டார், மேலும் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது" என்று குறிப்பிட்டார்.

ஹுஜ்ஜத்-உல்-இஸ்லாம் ஷாஹ்ரியாரி, இஸ்லாமிய சமூகங்களுக்கு எதிரான இன்னபிற விரோத சக்திகளின் இளைய தலைமுறையினரின் மனதை தவறாக வழிநடத்தும் முயற்சிகளை கண்டித்தார். இந்த சூழ்ச்சிகளுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமைக்கான உலக மன்றத்தின் பொதுச்செயலாளர், இஸ்லாமியர்களிடையே நட்புறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இஸ்லாமிய உலகில் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதையும் புனித குர்ஆனின் முக்கிய பரிந்துரைகளாக வலியுறுத்தி தனது கருத்துக்களை முடித்தார்.

"ஒற்றுமையை அடைவதன் மூலம் முஸ்லிம் உலகில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும்", லெபனான் முப்தி

மூத்த லெபனான் முஃப்தி ஷெய்க் காஸி ஹுனைனா பல்வேறு இஸ்லாமிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் நீண்ட கால மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து உலகில் இஸ்லாமிய ஒற்றுமையை அடைவதற்கு பிரிவினருக்கிடையே உரையாடலின் அவசியத்தை வலியுறுத்தினார்.

Sheikh Qazi Hunainah

ஷெய்க் காஸி ஹுனைனா, ஒரு நேர்காணலில், கருத்துகளின் பன்முகத்தன்மை இஸ்லாத்தின் உள்ளார்ந்த பகுதியாகவும், அவை சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் ஆசீர்வாதமாகவும் இருப்பதாகவும் தக்ரிப் செய்தி நிறுவனம் (TNA) நடத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

"இஸ்லாத்தில் கருத்தியல் முரண்பாடு மற்றும் ஃபிக்'ஹ் பன்முகத்தன்மை அனுமதிக்கப்படுகிறது, ஆனால்  முஸ்லிம்களிடையே போருக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுக்கும் முரண்பாடுகளே அனுமதிக்கப்படாதது" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் "முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக மோதல்கள் தொடர்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்; மேலும் இஸ்லாமிய குழுவினரிடையே உரையாடலும் புரிந்துணர்வும் இந்த மோதல்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும், எனவே, இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் அருகாமை என்பது ஒரு இஸ்லாமிய பிரிவு அதன் சிந்தனைகளை மற்ற குழுக்களின் மீது திணிப்பதாகவோ அல்லது எல்லா சிந்தனைப்பள்ளிகளும் ஒன்றாக மாற வேண்டும் என்பதாகவோ ஆகாது" என்றும் குறிப்பிட்டார்.

"புனித மக்காவில் வெவ்வேறு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளை பின்பற்றுபவர்கள் ஹஜ் செய்வதை நாங்கள் காண்கிறோம். இது முஸ்லிம்கள் அவரவர் இருக்கும் வழியை ஒப்புக்கொள்வதற்கான அருகாமையின் ஒரு பகுதியாகும், இங்கு முரண்பாடுகளின் பால் கவனம் செலுத்தப்படுவதில்லை, எவரும் பிற குழுக்களின் வித்தியாசமான கிரியைகள் காரணமாக எவரையும் அவமதிப்பதும் இல்லை" என்று ஷேக் காசி ஹுனைனா கூறினார்.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் வெளியிட்ட ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) பற்றியும் குறிப்பிட்டார், இது மஸ்ஜித் அல்-ஹராமில் சுன்னி இமாம்களுக்குப் பின்னால் ஷியா வழிபாட்டாளர்கள் தொழுகையை பின்தொடர கட்டாயப்படுத்துகிறது.

ஆகவே, அருகாமை என்பது இஸ்லாமிய உம்மா மத்தியில் உள்ள தொடர்புகளை புதுப்பித்து, முஸ்லிம்களை ஒழுங்கப்படுத்தி முஸ்லிம் உலகு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம்கொடுக்க ஒத்துழைப்பை அதிகரிப்பதாகும்.

ஷியா-சுன்னி சர்ச்சைகளை முன்னிலைப்படுத்தி, குழப்பங்களை ஏற்படுத்தும் எதிரிகளைப் பற்றி சன்னி அறிஞர் எச்சரிக்கிறார்.

ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள சன்னி சமூகத்தின் பிரார்த்தனைத் தலைவர் மமுஸ்தா மொல்லா அஹ்மத் ஷெய்க்கி, ஷீஆ மற்றும் சன்னி முஸ்லிம்களை சகோதரர்கள் என்று அழைத்தார் மற்றும் இஸ்லாமிய பிரிவினர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி குழப்பங்களை விதைப்பவர்களைக் கண்டித்தார்.

Mamusta Molla Ahmad Sheikhi

மூத்த சுன்னி அறிஞர் மமுஸ்தா மொல்லா அஹ்மத் ஷெய்க்கி, தக்ரிப் செய்தி நிறுவனத்திற்கு (டிஎன்ஏ) அளித்த பேட்டியில், ஷியா மற்றும் சன்னி சமூகங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை என்றாலும், எதிரிகள் இந்த சர்ச்சைகளை பெரிதுபடுத்தி இப்பிரிவினர் மத்தியில் சண்டையை மூட்டிவிட முயற்சிக்கின்றனர், என்றார்.

"இஸ்லாமிய ஈரானை எவ்வழியிலாவது தனிமைப்படுத்த வேண்டும் என்ற எதிரிகளின் திட்டங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்; மேலும் எதிரிகளின் ஆதரவுடன் புரட்சிக்கு எதிரான முகவர்கள் நாட்டில் பாதுகாப்பின்மையைப் ஏற்படுத்தி, இந்த சதித்திட்டங்களுக்கு தங்களைத் தாங்களே ஆளாக்கிக் கொள்கிறார்கள்."

சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட அதே கதியை ஈரானிலும் ஏற்படுத்தி, இஸ்லாமியர்களின் நிலப்பரப்பு மற்றும் அதிகாரத்தை குறைக்கும் அல்லது தம்வசமாக்கும் முயற்சியில் இஸ்லாமிய புரட்சியின் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன மற்றும் மத உணர்வைத் தொட்டு சமூக மற்றும் உளவியல் பாதுகாப்பின்மையைக் கொண்டுவருவதற்காகவும், ஷியா மற்றும் சன்னி பிரிவினரை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்க தூண்டுவதற்காகவும் எதிரிகள் தொடுத்துள்ள முன்னோடியில்லாத ஊடகப் போரைக் கண்டித்தார்.

முஸ்லிம் உலகம் சியோனிசத்திற்கு எதிராக முழு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்

இந்தோனேசிய பல்கலைக்கழக பேராசிரியர், இஸ்லாமிய உலகை அச்சுறுத்தும் சவால்கள் குறித்து எச்சரித்தார் மற்றும் முஸ்லிம்கள் சியோனிசம் பற்றி முழுமையாக அறிந்திருப்பதை பாராட்டினார்.

Shafiq A. Mughni

இந்தோனேசிய தேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷபிக் ஏ. முக்னி, IQNA க்கு அளித்த பேட்டியில், பாலஸ்தீன நிலங்களில் நிலவும் சியோனிசவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதியை இஸ்லாம் உலகம் முழுமையாக புரிந்து கொண்டுள்ளது என்று தக்ரிப் செய்தி நிறுவனம் (TNA) தெரிவித்துள்ளது.

சில முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலிய ஆட்சியுடன் இயல்பு நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையிட்டு அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், "பாலஸ்தீன நிலங்களில் நிலவும் அநீதி அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது; எனவே, நாம் மத்திய கிழக்கில் நீதியை நிலைநாட்ட வேண்டும் மற்றும் பாலஸ்தீனியர்களின் இரத்தம் சிந்தப்படுவதை தடுக்க வேண்டும், என்றார்.

பிரிவினைவாதமும், இஸ்லாமிய விழுமியங்களைக் கற்பிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி முறை இல்லாமையும் மற்றும் வெளிநாட்டு எதிரிகளின் சதியும் இஸ்லாமிய உலகிற்கு மூன்று முக்கிய சவால்களாக அறிஞர் குறிப்பிட்டுக் காட்டினார்.

இஸ்லாமிய உலகிற்கு சவால் விடும் முதல் முக்கியப் பிரச்சினையாக இருப்பது முஸ்லிம்களிடையே இருக்கும் பிரிவினை என்று குறிப்பிட்ட ஷபீக் முக்னி, இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு மதம் அல்ல, ஒட்டுமொத்த மனித இனத்தின் மகிழ்ச்சிக்கான மார்க்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்" என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய கொள்கைகளை கற்பிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த கல்வி முறை இல்லாதது முஸ்லிம்களுக்கு இரண்டாவது முக்கிய பிரச்சனையாகும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

"அவர்களின் சுயநலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக முஸ்லிம்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து பின்பற்றும் பல வெளி சக்திகள் உள்ளன, மேலும் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் சவால் விடும் மூன்றாவது முக்கிய பிரச்சனையாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதன்முறையாக வருடாந்திர சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட ஷபிக் ஏ. முக்னி, ஈரான் இஸ்லாமிய குடியரசு தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில்,  நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் முகம்கொடுத்துள்ள சமீபத்திய சவால்கள் குறித்து விவாதிக்க ஒன்றுகூடிய போதே மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

http://www.taghribnews.com/en/news

Wednesday, November 9, 2022

ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் பார்வையில் ஈரான், பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம்

Iran, women’s rights and freedom: A foreign woman’s first-hand experience

By: Humaira Ahad  

தெஹ்ரான், கம்பீரமான பனிபடர்ந்த மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகான மற்றும் பரபரப்பான நகரம், பழமையான வில்லாக்கள் மற்றும் புதிய வானளாவிய கட்டிடங்களால் சூழப்பட்ட மரங்கள் நிறைந்த சோலை போல் காட்சியளிக்கும் பாதைகள், நவீன மற்றும் பாரம்பரியமான ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்துள்ளது - தெஹ்ரான் கனவுகளின் நகரம்.

இது ஒரு முக்கிய இடம், என்னைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு வீட்டிலிருந்து ஒரு அற்புதமான மாற்று வீடு. வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் மூழ்கிய நகரம். தெஹ்ரானைப்பற்றி இன்னும் ஏராளமாக சொல்லலாம்.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மயக்கும் நகரத்திற்கு வந்தேன், உயர்கல்வியைத் தொடரவும், ஆன்மீகத்தைப் படிக்கவும், வரலாறு மற்றும் அரசியலைப் புரிந்துகொள்வதற்காகவும், அவற்றுக்கு இந்த இடம் மிகவும் பிரபலமானது. (இன்னும் ஏராளமான மாணவர்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் இங்குவந்து பலவேறு துறைகளிலும் உயர்கல்வி கற்கின்றனர்).

இந்த இடம் எனக்கு புதிய கண்ணோட்டத்தை அளித்தது, என் வாழ்க்கையையும் வாழும் கலையையும் வளப்படுத்தியது. அது என்னை ஒரு நபராகவும் ஆராய்ச்சியாளராகவும் மாற்றியது, மேலும் முக்கியமாக என்னை ஒரு முற்போக்கான பெண்ணாக மாற்றியது.

இந்த நகரைப் பற்றி அறிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இந்த நிலம் அதன் அழகான பூக்களுக்கு பெயர் பெற்றது. பல வண்ணங்களில் அவை பூத்துக் குலுங்கும் அழகே தனி. எவரும் அவற்றை சீண்டுவது கிடையாது, பாதுகாக்கப்பட்ட ஒன்றாக கருதி பராமரிக்கின்றனர். ஒரு பெண்ணாக அதை உணர்வு பூர்வமாக ரசிக்கின்றேன்.

நான் இப்போது எனது இரண்டாவது வீடாக கருதும் ஈரான் எப்போதும் உலக செய்தி அரங்கத்தில் இருக்கும், பெரும்பாலும் தவறான காரணங்களுக்காக. மேற்கு நாடுகளுடன் மோதல், அமெரிக்க பொருளாதாரத் தடைகள், அணுசக்தி திட்டம், இஸ்ரேல் ஆட்சி நாசவேலைகள் போன்றவை.

கடந்த ஒரு மாதமாக, ஈரானிய இளம் பெண் ஒருவர் போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, ஈரானில் பெண்களின் உரிமைப் பிரச்சினை திடீரென உலகத்தின் கற்பனையைப் பிடித்தது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் மொத்த மனித உரிமை மீறல்களை கண்டும் காணாத மேற்குலகில் மனித உரிமை சாம்பியனாகக் கூறிக்கொள்பவர்கள், தடயவியல் அறிக்கை உட்பட அனைத்து ஆதாரங்களும் அந்த கூற்றுகளை மறுத்தாலும், ஈரானிய அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கொன்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு வெளிநாட்டவராகவும் ஒரு பெண்ணாகவும் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையைச் சொல்வதானால், நான் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தேன், பிரதான ஊடகங்களில் ஈரான் நாட்டைப் பற்றிய எதிர்மறையான கவரேஜ் மற்றும் பரவலான தவறான தகவல்கள் இருந்தபோதிலும், அந்த நம்பிக்கைகள் சிதையும் படியான எதையும் நான் இதுவரை காணவில்லை.

நான் எனது ஆய்வு பயணத்தை புனித நகரமான மஷ்ஹத்தில் இருந்து தொடங்கினேன், அங்கு நான் நினைத்ததை விட எனது இருப்பு மிகவும் புனிதமானது. இமாம் ரீஸா சன்னதியில் மணிக்கணக்கில் அமர்ந்து, ஆன்மீகம் முதல் தபோதைய நிலவரங்கள் வரை பல்வேறு விஷயங்களில், வெவ்வேறு பின்னணியில் உள்ள பெண்களிடம் உரையாடுவேன்.

நான் ஒரு "முற்போக்கு" சமூகத்தில் இருந்து வந்தாலும், ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் மிகவும் பாதுகாப்பான சூழலிலேயே வளர்க்கப்பட்டேன். வேறொரு நகரத்திற்கு தனியாகப் பயணம் செய்வது, அல்லது மாலை அல்லது இரவு நேரங்களை வீட்டின் எல்லைக்கு வெளியே செலவிடுவது எப்போதும் கேள்விக்குறியாக இருந்தது.

நான் ஈரானுக்கு வந்தபோது முன் சொன்ன அனைத்தும் என் மனதில் இருந்தன, ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் எனது அச்சம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. நிலா வெளிச்சம் எல்லாவற்றையும் மூடிய பிறகும், பயமின்றி தனியாக வெளியே செல்ல என்னால் முடியும். பெண்கள் முழு சுதந்திரத்துடன் சுற்றித் திரிவதைப் பார்ப்பது இன்ப அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

எல்லா வயது பெண்களும் திறந்த வெளியில் சுதந்திர காற்றை சுவாசிக்கும்போது எதேச்சாதிகாரக் கண்கள் அல்லது கரடுமுரடான கரங்கள் குறுக்கிடுவது இல்லை என்பதை நான் படிப்படியாக உணர்ந்தேன்.

நான் உலகம் முழுவதும் பயணித்தவள் அல்ல என்றாலும், அதைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். எனக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளனர், நாங்கள் அடிக்கடி கலாச்சாரங்கள், சுதந்திரங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி விவாதிப்போம். அவர்களின் வாழ்க்கையை எனது தாயகத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கையோடும் இங்கு ஈரானில் உள்ள பெண்களின் வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ஈரானில் உள்ள பெண்கள் மேற்கத்திய உலகில் உள்ள பெண்களை விட பல்வேறு வழிகளில் புரட்சிகர சிந்தனை வளர்ச்சியில் மிகவும் உயர்வாக இருப்பதை நான் கண்டேன்.

ஈரானில் குடும்ப வாழ்க்கை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் கால அனுபவம் பற்றி மேலும் அறிய நான் எப்போதும் ஆர்வமாக இருந்தேன், ஒரு ஈரானிய வீட்டில் சில காலம் வசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உள்ளூர் கலாச்சாரம் மற்றும் ஈரானியரின் விருந்தோம்பலை நெருக்கமாக அனுபவிக்கவும் எனக்கு அது வாய்ப்பளித்தது.

குறைந்தபட்சம் இரண்டு கலாச்சாரங்களை மிக நுணுக்கமாக ஒப்பிட்டுப் பார்க்கும் சுதந்திரம் (எனினும் என் மனதில் வெளிநாட்டு நண்பர்களுடனான தொடர்பு காரணமாக பல கலாச்சாரங்களை ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்), நான் நினைத்ததை விட இங்கு பெண்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதைக் கண்டேன்.

ஒரு பாரம்பரிய ஈரானிய வீட்டில், ஒரு பெண் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன, அவள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது, மேலும் முஸ்லிம் உலகம் உட்பட பல நாடுகளில் போல் ஈரானில் பெண்கள் ஒரு பண்டமாக கருதப்படுவதில்லை.

சில முஸ்லிம் நாடுகளில் உள்ள பெண்கள் சமூகத்தைப் பற்றிப் பேசாமல், தங்கள் சொந்த வீட்டில் தமது நிலைக்காக போராடுவதை நாம் அறிவோம். ஆனால், இந்த நாட்டில் கதை வேறு.

இங்குள்ள பெண்களும் ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 99.3 சதவீதமாக உள்ளது, இது மேற்குலகின் பல நாடுகளை விட அதிகமாகும்.

பெண்கள் சந்தைகளில் பொருட்களை விற்பதையும், அலுவலகங்களில் வேலை செய்வதையும், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளுடன் கூடிய பட்டறைகளில் பிஸியாக இருப்பதையும், பல்கலைக்கழகங்களில் படிப்பதையும் கற்பிப்பதையும் சர்வசாதாரணமாகக் காணலாம். புள்ளிவிவர அறிக்கையின்படி, அரச பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள். மாறாக, அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 39 சதவீதமாக உள்ளது.

மேற்கத்திய ஊடகங்களில் நீங்கள் கேட்பதற்கு மாறாக, பல ஈரானிய பெண்கள் அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கம் துறையில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். முக்கியமாக, 1000க்கும் மேற்பட்ட பெண்கள் நீதியை நிர்வகிப்பதற்காக நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர்.

நான் பார்த்து, அனுபவத்தின் ஊடாக அறிந்த ஈரான் இஸ்லாமிய குடியரசு மக்கள், சமூக அந்தஸ்து மற்றும் பாலினங்களுக்கு இடையே சமத்துவம், சுதந்திரம் மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்கிறது. மேற்குலகின் திரிபுபடுத்தப்பட்ட ஊடக அறிக்கைகளுக்கு மாறாக இஸ்லாத்திற்கும் பெண்களின் உரிமைகளுக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை. இஸ்லாம் பெண்களை சிறையில் அடைக்கவில்லை மாறாக விடுதலை செய்கிறது.

சுதந்திரம், பெண்கள் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்கான மேற்கத்திய போலி முயற்சிகள் பேரழிவு என்பதை நிரூபித்துள்ளன. இது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற இடங்களில் காணப்படுகிறது, அங்கு மேற்கத்திய படையெடுப்புகள் அழிவை மட்டுமே ஏற்படுத்தியது.

அந்த நாடுகளில் பெண் "விடுதலை" என்பது கூறப்பட்ட நோக்கங்களில் ஒன்றாகும். அழிவுகரமான போர்களுக்குப் பிறகு பெண்களின் போலி விடுதலையை அனைவரும் அங்கு பார்க்கக்கூடியதாக உள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் திணிக்கப்பட்ட போர்கள் பெண்களின் உரிமை மீறல்களையும் மற்றும் இஸ்லாமோஃபோபியாவின் தீப்பிழம்புகளையும் தூண்டியது. முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு விடுதலை தேவை என்றும் கூறியவர்கள், அவர்களின் சொந்த விருப்பங்களைச் செய்வதற்கும், தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், அவர்களின் அடையாளத்தை கண்ணியத்துடன் நிலைநிறுத்துவதற்கும் உரிமை மறுக்கப்பட்டது.

Saba Mehmood
ஹிஜாப் பெண்களை ஒடுக்குகிறது, அதனால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மானுடவியலாளர் Saba Mehmood தனது ஆய்வு புத்தகமான ‘Politics of Piety’ இல், எகிப்தில் உள்ள Piety Movement எகிப்திய சமூகத்தின் மேற்கத்தியமயமாக்கலுக்கு எதிராக ஹிஜாபின் கொள்கைகளை எவ்வாறு நிலைநிறுத்தியது என்பதைப் பற்றி விவாதிக்கிறார்.

பாலஸ்தீனிய-அமெரிக்க மானுடவியலாளர் Lila Abu-Lughod தனது 'முஸ்லிம் பெண்களுக்கு சேமிப்பு அவசியமா' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "நான் எகிப்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி செய்து வருகிறேன், எனக்கு தெரிந்த பெண்களில், கிராமப்புற ஏழைகள் முதல் மிகவும் படித்த நகர்வாழ் செல்வந்த பெண்கள் வரை, அமெரிக்கப் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்,

Lila Abu-Lughod
அதுபோல் நாமில்லை என்று பொறாமையை வெளிப்படுத்திய ஒருவரைப் பற்றி என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர்களை சமூகத்தை இழந்த பெண்களாக அவர்கள் கருதுகின்றனர், பாலியல் வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களால்  இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர், ஒழுக்கத்தை விட தனிப்பட்ட பொருளாயத உந்துதலுக்கு ஆளானவர்கள், இறைவனை மதியாதவர்கள் என்பதே அவர்களது கருத்து.

போர்வெறியர்களின் சொந்த நலன்களுக்காக பெண்கள் ஒரு முக்கியமான சாக்குப்போக்கு ஆக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற தவறான கதை மேற்கத்திய சக்திகள் ஊடகங்கள் மூலம் தங்கள் ஏகாதிபத்திய லட்சியங்களை நியாயப்படுத்த பயன்படுத்தியது.

Frantz Fanon
அல்ஜீரியாவில் முஸ்லிம் பெண்களின் உடல் மறைப்பு கலாசாரத்தை அழிப்பது காலனித்துவப் போரின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்று பிரெஞ்சு அரசியல் தத்துவஞானி Frantz Fanon தனது ‘A Dying Colonialism’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இவர்கள் கூறும் முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் என்பது மேற்கத்திய தராதரங்களைக் கடைப்பிடிப்பதாகும். முஸ்லிம் நாடுகளில் குடும்ப மற்றும் சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் ஒரு வழியுமாகும். பாலின அரசியல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணியம் ஆகியவை பல ஆண்டுகளாக இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இவர்களது வலுவான கருவிகள்.

பொதுவாக முஸ்லிம் சமூகங்களிலும், குறிப்பாக ஈரானிலும் கூட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் அந்த பிரச்சினைகளை வெளியாட்கள் கதையை கடத்த அனுமதிக்காமல் விவேகத்துடனும் சாதுர்யமாகவும் தீர்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளே முன்மாதிரி என்ற கருத்து விமர்சன ரீதியாக ஆராயப்பட வேண்டும் மற்றும் ஈரானிய பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களும் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டும்.

-----

கட்டுரையாளர் Humaira Ahad தற்போது தெஹ்ரானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தனது PhD படிப்பை தொடர்ந்து வருகிறார். அவர் இந்தியாவின் முக்கிய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார் மற்றும் பல்வேறு காஷ்மீர் வெளியீடுகளுக்கு எழுதி வருகிறார்.

https://www.presstv.ir/Detail/2022/11/04/692121/Iran-Womens-Rights-Freedom-Foreign-Woman-Experience-Viewpoint-Humaira-Ahad