Contributors

Sunday, May 1, 2022

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் - தலைவர்

 Zionist army forced to turn offensive array to defensive one

சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை:

அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மீதும் அமைதியும் வாழ்த்துக்களும் உண்டாவதாக.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இஸ்லாமிய உலக இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாலஸ்தீனத்தின் தைரியமான, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு குத்ஸ் தினம் வந்துள்ளது. புனித குத்ஸ் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது. உண்மையில், அபகரிப்பு, கிரிமினல் சியோனிச ஆட்சி குத்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தும் வரை, ஆண்டின் அனைத்து நாட்களும் குத்ஸ் தினமாக கருதப்பட வேண்டும்.

புனித குத்ஸ் பாலஸ்தீனத்தின் இதயம், மற்றும் நதி முதல் கடல் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களும் பாலஸ்தீனத்தின் பகுதியாகும். அடக்குமுறையாளர்களுக்கு எதிராக முன்னுதாரணத் துணிச்சலுடன் எழுந்து நிற்கிறோம் என்பதை பாலஸ்தீன தேசம் ஒவ்வொரு நாளும் உணர்த்தி வருகிறது. பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் சுய தியாகச் செயல்பாடுகளால் பாலஸ்தீனத்தின் தற்காப்புக் கவசமாகச் செயல்பட்டு வருகின்றனர் மேலும் அவர்கள் எதிர்காலத்திற்கான முன்னோடிகளாகவும் உள்ளனர்.

பாலஸ்தீனத்தின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஒரு புதிய சமன்பாட்டைச் அடையாளப்படுத்தும் அதே தருவாயில், இந்த ஆண்டு குத்ஸ் தினத்தை நாங்கள் அனுஷ்டிக்கின்றோம்.

இன்று, பாலஸ்தீனத்திலும் மேற்கு ஆசியா முழுவதிலும் இளைஞர்களின் ஒரு "வெல்லமுடியாத மன உறுதி" மேலோங்கியுள்ளது. அது சியோனிஸ்டுகளின் "வெல்லமுடியாத இராணுவம்" என்ற நிலையை மாற்றியுள்ளது. இன்று, அந்த கிரிமினல் சியோனிச இராணுவம் அதன் ஆக்கிரமிப்பு வரிசையை தற்காப்புப் படையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று அரசியல் அரங்கில், அந்த கிரிமினல் ஆட்சியின் மிக முக்கிய ஆதரவாளரான அமெரிக்கா, தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. அது ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அதன் அதிகபட்ச அழுத்தக் கொள்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஆசிய சக்திகளின் முன்னாள் தோற்கடிக்கப்பட்டுள்ளது,, உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, மற்றும் அமெரிக்க நாட்டில், மற்றும் அமெரிக்க ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவின் நிகழ்வை நிர்வகித்தல் மற்றும் உள்ளக  நிர்வாகத்திலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் சியோனிச ஆட்சியானது அரசியல் மற்றும் இராணுவ அரங்கில், சிக்கல்களின் சுருண்ட வலைப்பின்னலில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் உச்சியில் இருந்த முன்னாள் கசாப்புக் கடைக்காரரும், கிரிமினலும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார். சைஃப் அல்-குத்ஸ் காவியத்தைத் தொடர்ந்து. ஒவ்வொரு மணி நேரமும் அவரது தற்போதைய வாரிசுகள் மற்றொரு காவியத்தின் கூர்மையான கத்திக்காக காத்திருக்கிறார்கள்.

ஜெனினின் செயல்பாடுகள் சியோனிச ஆட்சியை பைத்தியக்காரத்தனமாக ஆத்திரமடையச் செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நஹாரியாவில் ஒரு சில சியோனிஸ்டுகளின் மரணத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜெனின் விஷயத்தை +முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ஜெனின் அகதிகள் முகாமில் 200 பேரை சியோனிச கிரிமினல் ஆட்சி கொன்றது.

1948 மற்றும் 1967 அபகரிக்கப்பட்ட நிலங்களிலும் அதைச் சுற்றியுள்ள முகாம்களிலும் கிட்டத்தட்ட 70% பாலஸ்தீனியர்கள் சியோனிச ஆட்சியின் மீது தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனிய தலைவர்களை ஊக்குவிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், ஏனெனில் இது சியோனிச கிரிமினல் ஆட்சியை எதிர்கொள்ள பாலஸ்தீனியர்களின் முழுமையான தயார்நிலையைக் குறிக்கிறது மற்றும் முஜாஹித் அமைப்புகளுக்கு தேவையான போது இராணுவ நடவடிக்கை எடுக்க சுதந்திரத்தை வழங்குகிறது.

1948ல் அபகரிக்கப்பட்ட நிலங்களில் இரண்டு - வடக்கு மற்றும் தெற்கு - பகுதிகளில் பாலஸ்தீன மக்களின் ஜிஹாதி நகர்வுகள், அதே நேரத்தில், ஜோர்டான் மற்றும் கிழக்கு குத்ஸில் மாபெரும் பேரணிகள், பாலஸ்தீனிய இளைஞர்களால் அல்-அக்ஸா மசூதியின் துணிச்சலான பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் காசாவில் இராணுவ உத்திகள் பாலஸ்தீனம் முழுவதும் எதிர்ப்பின் களமாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், பாலஸ்தீன மக்கள் இறைவனின் பாதையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்வதில் ஒருமனதாக உள்ளனர்.

இந்த சம்பவங்கள் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் நடந்தவை சியோனிச எதிரியுடன் சமரசம் செய்து கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யும் முத்திரையாகும். ஏனென்றால் பாலஸ்தீனம் இல்லாத நிலையில் அல்லது அதன் உரிமையாளர்களான பாலஸ்தீனர்களின் சம்மதத்திற்கு எதிராக பாலஸ்தீனம் பற்றிய எந்த திட்டமும் அல்லது நிகழ்ச்சிகளும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒஸ்லோ ஒப்பந்தம், இரு நாடுகள் என்ற அரேபியர்களின் தீர்வு, (ட்ரம்பின்) நூற்றாண்டின் ஒப்பந்தம் மற்றும் உறவுகளை இயல்பாக்குவதற்கான சமீபத்திய அவமானகரமான முயற்சிகள் போன்ற அனைத்து முன்னாள் ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளன.

சியோனிச ஆட்சி மூச்சுத் திணறிய நிலையிலும், குற்றங்களைச் செய்து அப்பாவி மக்களை ஆயுதங்களால் கொன்று குவித்து வருகிறது. இது நிராயுதபாணியான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களை படுகொலை செய்கிறது. அது அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்கிறது, வீடுகளை அழித்து, பண்ணைகளையும் சொத்துக்களையும் இடித்துத் தள்ளுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பொய்யர்களின் மனித உரிமைகள் பற்றி ஆடம்பரமான கூற்றுக்கள் அனைத்தும் பாசாங்கு என்று நிரூபணமாகியுள்ளது. மற்றும் உக்ரைன் பிரச்சினையில் ஒரு கலவரத்தை உருவாக்கி, பாதிப்புகளுக்காக குரல் எழுப்பும் இவர்கள், பாலஸ்தீனத்தில் இழைக்கப்படும் இந்த குற்றங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் காக்க முன்வராதது மட்டுமல்ல, இரத்தவெறி பிடித்த அந்த ஓநாய்க்கும் உதவி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

இது எம் அனைவருக்கும் ஒரு முக்கியமான பாடம். இஸ்லாமிய உலகத்தின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் - அதில் பாலஸ்தீன் பிரச்சினை முதன்மையாக உள்ளது - இந்த இனவெறி மற்றும் மனித விரோத சக்திகளை நாம் நம்ப முடியாது மற்றும் நம்பவும் கூடாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அல்குர்ஆனின் போதனைகளில் இருந்து உருவாகும், சன்மார்க்க வழிகாட்டுதல்களில் இருந்து எழும் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே, இஸ்லாமிய உலகப் பிரச்சினைகளுக்கும், உச்சத்தில் நிற்கும் பாலஸ்தீன் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

மேற்கு ஆசியாவில் (அநீதி) எதிர்ப்பின் உருவாக்கம் சமீபத்திய தசாப்தங்களில் இந்த பிராந்தியத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரவேற்கத்தக்க நிகழ்வாகும். அநீதி எதிர்ப்பின் மகத்துவத்தால்  சியோனிஸம் என்ற அசிங்கத்திலிருந்து லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்தப்படுத்தவும், ஈராக்கை அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவும், ஈராக்கை அமெரிக்க திட்டங்கள் மற்றும் தாயேஷ் வெறியர்களின் தீங்கிழைப்பிலிருந்து காப்பாற்றவும், சிரிய பாதுகாவலர்களுக்கு உதவவும் முடிந்தது.

இந்த அநீதி எதிர்ப்பு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட போரில் எதிர்க்கும் யெமன் மக்களுக்கு உதவுகிறது, பாலஸ்தீனத்தில் உள்ள சியோனிச கொள்ளையர்களுடன் யுத்தம் செய்து இறைவனின் கிருபையுடன் அவர்களை மண்டிச் செய்வதோடு குத்ஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் பிரச்சினையை உலக மக்கள் அன்றாடம் அறிந்துகொள்ளும் வகையில் இது மேலும் மேலும் முன்னிலைப்படுத்துகிறது.

பாலஸ்தீன மக்களே, மேற்குக் கரையிலும், 1948 இல் அபகரிக்கப்பட்ட பிரதேசங்களில் சுய தியாகம் (ஜிஹாது) செய்யும் இளைஞர்களே, ஜெனின் அகதிகள் முகாமிலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் காஸா விடுதலையில் இறைவனுக்காக போராடும் நீங்கள், மற்றும் பாலஸ்தீனத்திற்கு வெளியே முகாம்களில் வசிப்பவர்களே முக்கியமானவர்கள். நீங்களே உணர்திறன் பகுதிகள் மற்றும் எதிர்ப்பின் முன்னோடிகள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும் மற்றும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாப்பான்" [புனித குர்ஆன், 22:38], "ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்தால், பொறுமையாளர்களுக்கு நிச்சயமாக அதுவே சிறந்ததாக இருக்கும்" [16:126] , “ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.” [3:186], மேலும் “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி உறைவிடம் எவ்வளவு சிறப்பானது” [13:24].

ஈரான் இஸ்லாமிய குடியரசு (அநீதி)எதிர்ப்பு முகாமை ஆதரிக்கிறது. இது பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்துகிறது மற்றும் ஆதரிக்கிறது. நாங்கள் இதைச் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம், நாங்கள் எப்போதும் இதைச் செயலிலும் காட்டி வருகின்றோம், நாங்கள் அதில் உறுதியாக இருக்கின்றோம். [சியோனிச ஆட்சியுடன்] உறவுகளை இயல்பாக்குவதற்கான துரோக நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். உறவுகளை இயல்பாக்கும் கொள்கையை நாங்கள் கண்டிக்கிறோம். சில அரபு அரசாங்கங்கள் பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் விஷயத்தை விரைவுபடுத்துமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளன. அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சியோனிச ஆட்சியின் வழியில் இருக்கும் எந்த தடையையும் நீக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், முதலில், அவர்கள் துரோகமாக நடந்துகொண்டு அரபு உலகிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாக, குருடர்கள் பார்வையற்றவர்களை வழிநடத்தும் நிகழ்வு போன்றது அது என்பதால் அவர்கள் அப்பாவியாக இருக்கிறார்கள்.

எனது இந்த அறிக்கையின் முடிவில், பாலஸ்தீன தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு ஆனால் உறுதியுடன் எதிர்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எனது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இந்தப் பெரிய பொறுப்பின் முக்கியப் பகுதியைச் செயல்படுத்த உறுதியளித்துள்ள நமது (அநீதி) எதிர்ப்பு பாலஸ்தீனிய குழுக்களின் கைகளை நான் பற்றிக்கொள்கிறேன். முழு இஸ்லாமிய உலகையும், குறிப்பாக இளைஞர்களையும், கண்ணியத்தையும், கெளரவத்தையும் கொண்டு வரும் இந்தத் துறையில் பங்கேற்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

"எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது." [புனித குர்ஆன், 10:10]

https://english.khamenei.ir/news/8960/Everything-is-signaling-a-new-equation-in-Palestine-s-future

Thursday, April 28, 2022

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine


மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்." இந்தத் தினமானது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய ஆதரவைப் பிரதிபலிக்கிறது.



சர்வதேச குத்ஸ் தினம்நாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஊர்வலங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகள் மூலம் அனுஷ்டிக்கப்படுகிறது, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இந்த நுண்ணறிவுமிக்க அறிவிப்பு எல்லைகடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது..

சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின் பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீன மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் அரசு சட்டவிரோத மற்றும் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு,, 1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ சிலுவைப்போராளிகள் யூதர்களை தங்கள் ஜெப ஆலயத்தில் உயிருடன் எரித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் சலாஹுத்தீன் யூதர்களை அபயமளிக்குமுகமாக ஜெருசலேமுக்கு அழைத்து வந்து, பெரும்பான்மையான முஸ்லிம்களுடன் குடியமர்த்தினார். 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் கடந்தகாலத்தில் யூதர்களுக்கு முஸ்லிம்கள் காட்டிய கருணைக்கான நன்றிக்கடனை இவ்வாறே  திருப்பிச் செலுத்தியது.


பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கம் அல்லது இடைவிடாத மத்திய கிழக்கு மோதல் என்று அறியாமையால் மற்றவர்கள் குறிப்பிடுவது தொடர்பான அனைத்து சாலை வரைபடங்களின் முக்கிய சூத்திரதாரி மற்றும் தலைமை வடிவமைப்பாளராக அமெரிக்கா இருந்து வருகிறது.

இப்போது எழும் மிக முக்கியமான கேள்விகள் என்னவெனில் "ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் ஏதேனும் உறுதியான சாதனைகள் பெறப்பட்டுள்ளதா? பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் நம்பிக்கை உள்ளதா? என்பதாகும்.

மோதலின் மறுபக்கம் பார்க்கையில் அமெரிக்க மற்றும் பிற ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கான ஆதாய ஆயுத வர்த்தகம் வெளிப்படுகிறது.

1945 இல் அரபு லீக் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்றும், எனவே, அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்க முடியும் என்றும் பலர் நினைத்தனர். ஆனால் அரபு லீக் அமைப்பின் சாதனைகள் என்ன? இந்த அமைப்பினால் மற்றும் அதன் சகோதர பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினால் (PLO) எந்த அளவிற்கு அவர்கள் கூறிய நோக்கங்களை அடைய முடிந்தது? என்பதை சிந்தித்தல் நன்று.


கேள்வி என்னவென்றால், அரேபியம் என்ற தேசியவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரபு லீக் மற்றும் PLO வினால்  எவ்வாறு பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும்...? ஏனெனில் அதே தேசியவாதமே அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேலை நிறுவ பயன்படுத்தப்பட்டது.

எனவே, சர்வதேச குத்ஸ் தினம் மட்டுமே முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமும் மற்றும் முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை உறுதி செய்யக்கூடிய ஒரே நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையே பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான இறுதி நம்பிக்கை.  உண்மையில், இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் செய்தியின் முக்கிய கருப்பொருளும் அதுவே ஆகும்.

ஜார்ஜ் கர்ஸன், 1911-1921 வெளியுறவுத்துறைக்கான பிரிட்டிஷ் செயலர்  "முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய ஒற்றுமையைக் கொண்டுவரும் எந்த முயற்சிக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிலாபத் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதால், முஸ்லிம்கள் மத்தியில் அறிவு ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஒற்றுமை என்ற ஒன்று மீண்டும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியதை உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் உச்ச தலைவர் ஆயதுல்லா சையத் அலி காமனெய், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகளை விதைப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்க நலனுக்காக தெளிவாக சேவை செய்கிறது என்று கூறுவதற்கு இதுவே காரணம். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;.(அத்தியாயம் 3, வசனம் 103) என்று அல்லாஹ் கூறியிருக்க இவ்வாறு நடக்கிறது.


சர்வதேச குத்ஸ் தினம் என்பது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஒருமைப்பாட்டை தெரிவித்தது ஆதரவு வழங்கும் தினமாகும் அதேவேளை ஒடுக்குமுறை மற்றும் அநீதியைக் கண்டிக்கும் நாளுமாகும்.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) நிறவெறியை வெறுத்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு பூரண உதவியை வழங்கினார். பதிலுக்கு நெல்சன் மண்டேலாவும் "பாலஸ்தீனன் சுதந்திரம் அடையாமல் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது" கூறினார்.


நீண்ட சிறை தண்டனையில் இருந்து விடுதலையான மண்டேலா அவர் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின் போது, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இமாம் வகித்த பாத்திரத்தையும் ஈரானின் வரலாற்று ஆதரவையும் பாராட்டினார். 

மறைந்த வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் சர்வதேச குத்ஸ் தின நிகழ்வுகளில் தனது நாட்டில் ஏனைய போராட்டக்காரர்கள் மத்தியில் முன்னணியில் காணப்படும் முக்கிய நபராக இருந்தார்.


சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் புறக்கணித்து வரும் சவூதி அரேபியா, அதன் கூட்டாளிகளுடன் இணைந்து 2015 முதல் யெமனுக்கு எதிரான இராணுவப் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சவூதி அரேபியா பணக்கார மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அரபு தேசமாகும். அது வறிய மற்றும் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு எதிராக திட்டமிட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயலாகும். யெமனில் நடந்த ஆக்கிரமிப்பின் விளைவை சமகால வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடு வர்ணித்தது.


உலகம் முழுவதும் அமைதிகாக்கவும், நீதிகாக்கவும் போராடும் மக்களின் முயற்சியை அங்கீகரிப்பது கட்டாயம். இமாம் அவர்கள் வலியுறுத்தியது போல் "குத்ஸ் தினம் என்பது ஒரு சர்வதேச தினம். இது குத்ஸுக்கே பிரத்தியேகமான நாள் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும், ஆணவ சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் தினமாகும்."


அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. பிராந்தியத்தில் அவர்களின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னணி நிலைகளைக் கோரும் வளர்ந்த நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது. என்ன ஒரு நயவஞ்சகத்தனம், என்ன ஒரு இரட்டை நிலைப்பாடு...!



 


Tuesday, April 26, 2022

லெபனானில் ரமலானை கொண்டாடும் இஸ்லாமியர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள்

 Muslims, non-Muslims enjoying Ramadan festivities in Lebanon

கிறிஸ்துமஸைப் போலவேலெபனானில் ரமலான் ஒரு தேசிய நிகழ்வாகக் கருதப்படுகிறதுஅதன் உற்சவங்கள் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் வரும் நோன்பை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தனித்துவமான வழிகளில் கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதன் தனித்துவமான மரபுகள் மற்றும் நடைமுறைகளுடன் இந்த புனித மாதத்தை வரவேற்கிறது.

ரமலான் பிறை கண்டவுடன் உற்சவங்கள் தொடங்கி விடுகின்றன மற்றும் ஆன்மீக ஒழுக்கம், தொண்டு, தாராள மனப்பான்மை மற்றும் பிரார்த்தனைக்கான நேரம் தொடங்கிவிடுகிறது.

பகலில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருப்பதையும், எந்த திரவத்தையும் (தண்ணீர் உட்பட) சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்ப்பதையும், புகைபிடித்தல், வம்பளப்பது மற்றும் வாக்குவாதம் செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதையும் நீங்கள் காணலாம். இருப்பினும், ரமழானின் உயிர்த்துடிப்புடன் இருப்பது இரவுகள் என்றால் மிகையாகாது.

அரபு உலகம் முழுவதும், அந்தி சாயும் நேரத்தில் இப்தார் (நோன்பு முறித்தல்) முடிந்தவுடன் பண்டிகைகள் தொடங்குகின்றன, ஏனெனில் அமைதியான, மெதுவான உணவு மந்த நிலைக்குப் பிறகு சுற்றுப்புறங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

லெபனானில் ரமலான் வித்தியாசமானது ஆனால் மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். மக்கள்தொகையில் 40% ஆனோர் கிறிஸ்தவர்கள் என்பதால், ரமலான் உற்சவ காலத்தில்  நீங்கள் லெபனானில் ஒரு புதிய அனுபவத்தை பெறுவீர்கள். அவர்களால் பகல் நேரத்தில் கண்ணியமான கண் அசைவின் மூலம் ஒரு கண்ணியமான உணவைப் பெற முடியும்.

லெபனிய முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 21ம் இரவை லைலத்துல் கத்ர் இரவாக பொதுவாக அனுஷ்டித்த போதிலும் அம்மாதத்தின் கடைசி பத்து இரவுகளையும் புனித குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், பாவமன்னிப்பு தேடுதல் போன்ற விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி, பள்ளிவாசல்களில் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புனித மாதம் வந்துவிட்டால், மேற்கு ஆசிய நாடான லெபனானில் சில சுவாரஸ்யமான ரமலான் பழக்க வழக்கங்களை பார்ப்போம்.

முஸாஹராதி (வைகறையில் எழுப்புபவர்)

ரமழானின் விடியற்காலையில், அரபு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக லெபனானில் முசாஹராதி ஒரு பொதுவான காட்சியாகும். அவர் வைகறையில் எழுப்புபவர் என்றும் குறிப்பிடப்படுகிறார், அவர் சஹருக்கு முஸ்லிம்களை எழுப்ப விடியற்காலையில் தனது டிரம்மை அடித்துக்கொண்டு வீதி வீதியாக வலம்வருவார்.

முஸாஹராதிக்கு நன்றி, தங்கள் சஹர் உணவைத் தவறவிட மாட்டார்கள் என்பதை அறிந்து மக்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.

அவர் விடியற்காலையில் காற்றை நிரப்பும் கணீர் என்ற குரல் கொண்டவர், மக்களை எழுந்திருங்கள், சஹர் நேரமாகிவிட்டது, சாப்பிடுங்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு (விடியல் தொழுகை) தயார் செய்து ரமழானின் புதிய நாளைத் தொடங்குங்கள் என்றவாறு பாடிக்கொண்டு, வீதியெங்கும் அலைவார்.

ஹிஜாஸில் உள்ள முஸாஹராதியின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இஸ்லாமிய சகாப்தங்களில், குறிப்பாக மம்லுக் மற்றும் ஒட்டோமான் காலங்களில் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவரது செயல்பாடு தெரிகிறது.

ரமலானை கொண்டாடும் முஸ்லிமல்லாதோர்

லெபனானில், ரமலான், கிறிஸ்மஸ் போன்ற ஒரு தேசிய விழாவாகவும் கருதப்படுகிறது. இந்த நாட்டில், ரமலான் பண்டிகைகள் அனைத்து சமூகத்தினராலும் கொண்டாடப்படுகின்றது, அவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இப்தார் விருந்தில் அனைத்து சமூக தலைவர்கள் மற்றும் மத பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இப்தார் விருந்தில், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள், நோன்பு நோற்பவர்கள் மற்றும் நோன்பு நோற்காதவர்கள், அருகருகே அமர்ந்திருப்பர். உண்ணாவிரதம் இருப்பவர்களின் தனித்தன்மைகள் மதிக்கப்படுகின்றன. இரு தரப்பிலும் சமரசம் மற்றும் சகிப்புத்தன்மை அவர்கள் மத்தியில் உள்ளது.

தொண்டு நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்கின்றன, இதில் பல்வேறு மத சமூகங்கள் மற்றும் பிரிவுகளில் இருந்து விருந்தினர்கள் அழைக்கப்படுவைத்து வழமையாகும்.

 லெபனானில் திரிபோலி ரமழானின் போது இரவில் உயிர் பெறுகிறது

திரிபோலியில் ரமலான் மிகவும் அழகாக இருக்கும். வித விதமான இனிப்பு பண்டங்கள், உணவு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை அனுபவிக்க நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வருவதால், புனித மாதத்தில், மகிழ்ச்சியான சூழ்நிலையில், திரிபோலி ஒரு புதிய உத்வேகம் பெற்றுவிடும்.

சூரிய அஸ்தமனத்தில், முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவ அண்டை வீட்டாருடன் இப்தார் உணவை உண்டுகளிப்பார்கள் மற்றும் ஹகாவதி அல்லது கதைசொல்லிகளைக் கேட்பதற்காக சிற்றுண்டி விடுதிகளில் நீண்ட நேரம் தரித்திருப்பார்கள், சிலர் சூஃபிகளின் கனவுப்போன்ற சுழல் நிகழ்ச்சியைக் காண பூங்காவிற்குச் செல்வார்கள். இப்தாருக்குப் பிறகு மக்கள் இரவில் நீண்ட நேரம் நல்லமல்கள் செய்யும் உற்சாகத்தை பெற்றுவிடுகின்றன.ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் பண்டிகை காலங்களில் லெபனான் நகரம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

அதிகாலை 2.15 ஆகிவிட்டது, திரிபோலி பழைய நகரத்தில் வசிக்கும் மக்களை சஹருக்கு முன் எழுப்புவதற்காக ஒரு முஸாஹராட்டி டிரம்ஸை அடித்துக் கொண்டிருந்தார். அமைதியாக இருந்த நகரத்தின் தெருக்கள் திடீரென உயிர்ப்பற்று எழ தொடங்குகின்றன. சமையலின் வாசனையானது, வழிப்போக்கர்களுக்கு வீடுகளில் உணவைப் பகிர்ந்துகொள்வதை அறிய முடிகிறது.

இப்தாருக்கான லெபனான் சிறப்பு இனிப்புகள்

ரமழானின் இன்றியமையாத பகுதியாக, சஹர் மற்றும் இப்தார் உணவுகள் உலகெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் முக்கியமானவையாக உள்ளன, இது மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு மற்றொரு காரணத்தை வழங்குகிறது.

அரபு நாடுகளில், குறிப்பாக லெபனானில், புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் தனித்துவமான உணவுகள் மற்றும் இனிப்புகள் உள்ளன.

பின்வரும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் சில சிறப்பு ரமலான் ரெசிபிகளாகும், லெபனான் மக்கள் பொதுவாக ரமழானின் போது இஃப்தார் உணவுக்காக பின்வருவனவற்றை தயார் செய்கிறார்கள்.

கெல்லாஜ்

ரமலான் சீசனில் கெல்லாஜ் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இது அஷ்டா கிரீம் நிரப்பப்பட்ட ஒரு லேசான மா கலவையாகும், ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு கணம் சிரப்பில் ஒரே நேரத்தில் ஊறவைக்கப்படுகிறது. ஒரு தூய அற்புதமான சுவை...!

 மFப்ரூக்கே

ரவை மாவு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றை மாவுடன் கலந்து மஃப்ரூக்கே தயாரிக்கப்படுகிறது. பால்கட்டி மற்றும் வறுத்த கொட்டைகள் அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. Mafroukeh ஒரு தட்டில் பரிமாறப்படலாம் அல்லது பல வடிவங்களில் வடிவமைக்கப்படலாம்.

ரமலான் காலத்தில் பொதுவாக தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு, சாய்பியேட், பால்கட்டி நிரப்பப்பட்ட பேஸ்ட்ரியின் முறுமுறுப்பான அடுக்குகளால் ஆனது. Chaaybiyet பொதுவாக ஒரு முக்கோண வடிவில் வடிவமைக்கப்படுகிறது மற்றும் நொறுக்கப்பட்ட பிஸ்தா மற்றும் மிட்டாய் செய்யப்பட்ட ஆரஞ்சு சுளைகளால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் நிச்சயமாக இனிப்பு சிரப்பால் மூடப்பட்டிருக்கும்! அதை குளிராகவோ அல்லது சூடாகவோ பரிமாறலாம்.

டௌகியே

Daoukiyeh பெய்ரூட்டின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 80 களில் பெய்ரூட்டில் உள்ள ஒரு சிறிய பேஸ்ட்ரி கடையான Al-Daouk இனிப்புகளால் உருவாக்கப்பட்டது, மேலும் குடும்பத்தின் கடைசி பெயரால் பெயரிடப்பட்டது.

Daoukiyeh என்பது அஷ்டா (பால்கட்டி)வின் ஒரு அடுக்கு மற்றும் பிஸ்தா பேஸ்டின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் முந்திரி பருப்புகளின் அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிஸ்தாவின் நிறம் Daoukiyeh க்கு அதன் சிறப்பு பச்சை நிறத்தை அளிக்கிறது. இன்று, Daoukiyeh நாடு முழுவதும் உள்ள பல பேஸ்ட்ரி கடைகளில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது.

கத்தாயேஃப்

கத்தாயேஃப் என்பது ரமழானில் மிகவும் பொதுவாக தயாரிக்கப்படும் சுவையான உணவாகும். இந்த அரபு உணவானது பேன்கேக் போன்ற மாவை வால்நட் மற்றும் சர்க்கரை கலவை அல்லது இனிப்பு அக்காவி சீஸ் அல்லது அஷ்டா (ரோஸ் வாட்டருடன் உறைந்த கிரீம்) போன்ற பல்வேறு நிரப்புகளுடன் தயாரிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பொருட்களால் நிறைக்கப்பட்டு செய்யப்பட்ட கத்தாயேஃப் பின்னர் வறுக்கப்பட்டு, சர்க்கரை பாகில் முக்கி பரிமாறப்படும்.

மொத்தத்தில் புனித ரமலான் மாதம் முழுவதும் ஒரு புதுமையான அனுபவத்தை லெபனானில் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

https://en.mehrnews.com/news/186023/Muslims-non-Muslims-enjoying-Ramadan-festivities-in-Lebanon