Contributors

Monday, August 12, 2024

நபிகளாரின் மூத்த பேரன் இமாம் ஹசன் (அலை) அவர்களின் தியாகம்

  Martyrdom of the Prophet’s Elder Grandson Imam Hasan 

மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்



 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

இன்னும்அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:154)


சஃபர் மாதத்தின் சோகமான 
ஆம் தேதி இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூத்த பேரன்இரண்டாவது வாரிசு இமாம் ஹஸன் (அலை) அவர்களின் தியாக நினைவு நாள்.

"மிகச் சிறந்தவர்" என்று பொருள்படும் ஹஸன் என்ற பெயரைக்கொண்ட இமாம் ஹஸன் (அலை)மாசற்ற பெற்றோரான ஹஸ்ரத் ஃபாத்திமா ஸஹ்ரா (அலை) மற்றும் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை) ஆகியோரின் முதல் மகனாவார். ஹிஜ்ரி 50ல் முடிவடைந்த அவரது வாழ்நாள் முழுவதும்போலித்தனத்தையும், நயவஞ்சகங்களையும் அம்பலப்படுத்தி இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்ட பாடுபட்டார்.

இமாம் ஹஸன் (அலை) 47 வயதாக இருக்கையில்ஆரம்பம் தொட்டே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் பரம வைரியான முஆவியா இப்னு அபு சுஃப்யானின் உத்தரவின் பேரில் கொடுக்கப்பட்ட விஷத்தின் காரணமாக ஷஹீதானார்.

மதீனாவில் பிறந்த இமாம் ஹஸன் (அலை) அவர்களும் அவரது இளைய சகோதரர், கர்பலாவின் தியாகி, இமாம் ஹுசைன் (அலை) அவர்களும் "சொர்க்கத்தின் இளைஞர்களின் தலைவர்கள்" என்று இறை கட்டளையின் அடிப்படையில் நபியவர்களால் புகழப்பட்டவர்களாகும்.

நபியவர்களால் தனிப்பட்ட மேற்பார்வையில் வளர்க்கப்பட்ட இரு சகோதரர்களும் (அவர்களின் பெற்றோரைப் போலவே)புனித குர்ஆனின் பல ஆயாக்களின் அடையாளங்கள்.

اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிஉங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (திருக்குர்ஆன் 33:33)

மேற்குறிப்பிட்ட ஆயத்தின் மூலம் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் றஸூலுல்லாஹ்வுடன் அவரது மகள்மருமகன் மற்றும் இரண்டு பேரர்களை "அஹ்ல் அல்-பைத்" அல்லது "வீட்டின் மக்கள்" என்று அழைத்து அவர்களின் தூய்மைக்கு உறுதியளிக்கிறான்.

நஜ்ரானில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு எதிராக இஸ்லாத்தின் உண்மையை வெளிப்படுத்தும் முக்கிய முபாஹிலாவில்இறைவனின் கட்டளைப்படி (3:61), பரிசுத்தமான இந்த ஐந்து பேர்களும் கலந்து கொண்டனர்கிறிஸ்தவ பாதிரியார்கள் றஸூலுல்லாஹ்வுடன் அவர்களைப் பார்த்ததும்அவர்களின் ஆன்மீக பிரகாசத்தையும் தெய்வீக குணங்களையும் உணர்ந்துஉடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டனர்.

இமாம் ஹஸன் (அலைஅவரது சகோதரர்அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் அபிசீனிய பணிப்பெண் ஃபிஸ்ஸா ஆகியோர் நேர்ச்சை ஒன்றை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்றதற்காக தெய்வீக வெகுமதிகளைப் பெற்றனர்ஒவ்வொரு இரவும் (நோன்பு திறக்கும்) அந்தி சாயும் நேரத்தில் வரும் ஏழை வறியோருக்கு தாராளமாக தங்கள் உணவை அளித்தனர். (76:5-to-22)

இமாம் ஹஸன் (அலை) அவர்கள் அறிவில் உறுதியாக உள்ளவர்களைக் குறிக்க புனித குர்ஆனில் (3:7 & 4:162) சர்வவல்லமையுள்ள இறைவனால் இரண்டு முறை பயன்படுத்தப்பட்ட "ராஸிக்கூன ஃபில்-இல்ம்" (இறைவனால் முழுமையான அறிவு வழங்கப்பட்ட) என்ற வார்த்தையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.

அஹ்ல் அல்-பைத்தின் முக்கிய தகுதியானது சூரா ஷூ'ராவின் ஆயா 23 வில் குறிப்பிடப்படுகிறதுஇது அவரது பாவம் செய்ய முடியாத சந்ததியினருக்கும் அவர்களின் அதிகாரத்திற்கும் செலுத்த வேண்டிய மரியாதையை தெளிவுபடுத்துமாறு நபிக்கு அறிவுறுத்துகிறதுஇமாம் அலி (அலை) மற்றும் அவரது தூய சந்ததியினரின் தலைமையை சந்தேகத்திற்கு இடமின்றி இந்த ஆயா நிறுவுகிறது.

தனது பிரியாவிடை ஹஜ் யாத்திரையின் போது அரஃபா தினத்தன்று மினாவில் நிகழ்த்தப்பட்ட தனது புகழ்பெற்ற பிரசங்கத்தில்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஹதீஸ் தக்கலைனை" வலியுறுத்தி கூறினார்கள்"உங்களில் விலைமதிப்பற்ற இரண்டு (தகலைன்) நான் விட்டுச் செல்கிறேன்: ஒன்று இறைவனின் புத்தகம் மற்றுது எனது அஹ்ல் அல்-பைத். அவர்களைப் பற்றிக் கொள்ளுங்கள்நீங்கள் வழிதவற மாட்டீர்கள்ஏனென்றால் அவர்கள் (மறுமை நாளில் கவுதரின்) நீரூற்றில் என்னைச் சந்திக்கும் வரை அவர்கள் ஒருபோதும் பிரிய மாட்டார்கள். "ஹஸன் மற்றும் ஹுசைன் அவர்கள் உட்கார்ந்தாலும் அல்லது நின்றாலும் (அமைதியாக இருந்தாலும் அல்லது எழுந்தாலும்) இமாம்கள் (உம்மாவின் தலைவர்கள்)" என்றும் அவர் தெளிவாக வலியுறுத்திக் கூறினார்.

ஆயினும்கூடபடைப்பாளரின் இந்த தெளிவான கட்டளைகள் மற்றும் நபியின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும்அஹ்ல் அல்-பைத்தின் அரசியல் தலைமைத்துவ உரிமை றஸூலுல்லாஹ்வை கொல்லத்துணிந்த மக்காவின் தன்னலக்குழுக்களால் பறிக்கப்பட்டது.

இழிவான ஹிந்த் பிந்த் உத்பாவின் மகன் முஆவியாறஸூலுல்லாஹ்வை அழித்தே தீருவேன் என்று கங்கணம்கட்டியிருந்த முக்கிய நபர்களில் ஒருவர். ஹிந்த் என்பவள் உஹதுப் போரின்போது நபிகளாரின் மாமனார் ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைச் சிதைத்துகல்லீரலை மெல்லுவதற்காகதன் அடிமையான வஹ்ஷிக்கு பொறுப்பை வழங்கியவள்.

(இஸ்லாத்தை பூண்டோடு அழிக்கும் எண்ணத்தோடு றஸூலுல்லாஹ்வை கொல்லத்துணிந்த உமையா வம்சம்மக்கா வெற்றியின் போதுஇனியும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில்தம் உயிர்களை பாதுகாத்துக்கொள்ளஇஸ்லாத்தில் இணைந்தவர்கள்)

அபு ஸுஃப்யானின் மகன் முஆவியாஇஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தின் மீது மறைத்துவைத்திருந்த பகையை மீறிசிரியாலெபனான்ஜோர்டான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் (இஸ்ரேல்) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிதாக கைப்பற்றப்பட்ட ஷாம் பிராந்தியத்தின் ஆளுநராக இரண்டாம் கலீஃபாவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்களின் இஸ்லாமியத்திற்கு முந்தைய நட்பு காரணமாகவே அவ்வாறு நியமிக்கப்பட்டார்.


டமாஸ்கஸில் ஆளுநர் என்ற அதிகாரத்தை பொறுப்பேற்றவுடன்இஸ்லாமிய சமூகத்தை உள்ளிருந்து பலவீனப்படுத்தவும்இஸ்லாத்தின் போதனைகளை சிதைக்கவும் சகல சதித்திட்டங்களையும் கையாண்ட முஆவியா அமீருல் முஃமினீன் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை அவர்களால் முறையாக பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அமீருல் முஃமினீனின் கட்டளைக்கு கட்டுப்படாமல்முஆவியா ஆளுநர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.

அவர் இமாமுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்தார்ஆனால் நீண்டகால சிஃபின் போரில் தவிர்க்கமுடியாத தோல்வியை எதிர்கொண்டபோது,​​ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஈட்டி முனைகளில் புனித குர்ஆனின் பிரதிகளை ஏந்தி வந்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்தி வந்தார்.

இதற்கிடையில் ஹிஜ்ரி 40 இல் விசுவாசிகளின் தளபதி அமீருல் முஃமினீன் கொல்லப்படுகிறார்அதன் பின் முஆவியா இப்னு அபு சுஃப்யான் முழு கிலாபத்தையும் தனதாக்கிக்கொள்ளும் வகையில் இமாம் ஹஸன் (அலை) க்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்; பயங்கரவாதம்போலியான ஹதீஸ்களை இட்டுக்கட்டுதல் மற்றும் லஞ்சம் போன்ற கொள்கையை கடைபிடித்தார்.

இதன்போது இமாம் ஹஸன் (அலை) முஆவியாவுக்கு பின்வரும் கடிதத்தை எழுதினார்:

ஓ முஆவியா! பொய்யிலிருந்தும் கிளர்ச்சி செய்வதில் இருந்தும் விலகி இருங்கள் மேலும். வெகுஜனங்கள் செய்தது போல் எனக்கு விசுவாசமாக இருங்கள். சர்வவல்லமையுள்ள இறைவன்அவனுடைய தூதர்கள் மற்றும் மனசாட்சியுள்ளவர்களின் பார்வையில் உங்களை விட கலிஃபா பொறுப்புக்கு நானே மிகவும் தகுதியானவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து கலகத்தை கைவிடுங்கள். முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்தாதீர்கள்.

இந்த உமய்யா கிளர்ச்சியாளர்இமாமுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாகஇமாம் ஹசனின் (அலை) வாழ்க்கைக்கு எதிராக சதி செய்ய ஈராக்கில் உள்ள பழங்குடியினரின் சில துரோகத் தலைவர்களை லஞ்சம் கொடுத்து வாங்கினார். அவர் உண்மையான முஸ்லிம் அல்ல என்றும் இஸ்லாத்தின் போதனைகளை சிதைக்க முயற்சிக்கிறார் என்றும் இமாம் அவருக்கு வெளிப்படையான வார்த்தைகளில் எழுதினார். கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது:

பரிதாபத்துக்குரிய முஆவியா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை (சொல் மற்றும் நடத்தை) கடைப்பிடிப்பவர் மற்றும் அவரது செயல்கள் இறைவனுக்கு கீழ்ப்படிவதை நிரூபிப்பதே உண்மையான கலீஃபாவாகும். என் வாழ்வில்நாங்கள் (அஹ்லுல் பைத்) நிச்சயமாக வழிகாட்டுதலின் அடையாளங்களாகவும்இறையச்சத்தின் விளக்குகளாகவும் இருக்கிறோம். முஆவியா அவர்களேநீர் சுன்னாவைத் திரித்துபித்அத்துக்களை உயிர்ப்பித்தவர்களில் ஒருவர்அல்லாஹ்வின் அடியார்களை அடிமைகளாகவும்அல்லாஹ் வழங்கிய செல்வத்தை விளையாட்டாகக் கருதியவர்களில் ஒருவர்.

முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமித்து பைத் அல்-முகத்தஸைக் கைப்பற்றுவதற்கான பைசண்டைன் பேரரசர் கான்ஸ்டன்டைன் IV இன் நோக்கங்களுக்கு மத்தியில்அவரது இராணுவத்தின் பலவீனமான நம்பிக்கைமுஆவியாவின் துரோகம் மற்றும் அவரது எதிரியின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கும் அதே சமயம் உள்நாட்டுப் போர் அச்சுறுத்தலை உணர்ந்த றஸூலுல்லாஹ்வின் மூத்த பேரன்இரத்தக்களரியைத் தடுக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த இணங்கினார்.

இமாம் ஹஸன் (அலை) அவர்கள் மதீனாவிலும் அமைதி காணவில்லை. ஒப்பந்தத்தை மீறி தனது தகுதியற்ற மகன் யாசித்தை கலீஃபாவாக மாற்ற முயன்றார் முஆவியா. அவரின்  சூழ்ச்சியினால்இமாம் அவர்கள் நஞ்சூட்டப்பட்டுவிஷத்தின் கொடிய வீரியத்தால் ஷஹீதானார்.

இமாமத்தின் தெய்வீக அறக்கட்டளையை இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு வழங்கிய போது, "நான் துரோகியால் ஊட்டப்பட்ட விஷத்தின் காரணமாக உயிரிழக்கின்றேன்." என்று இமாம் ஹஸன் குறிப்பிட்டார். இருப்பினும்இந்த நாள் உங்கள் நாள் போல் இருக்கப்போவதில்லை ஓ அபா அப்தில்லாஹ்! அன்று முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமிருந்தும்எங்கள் பாட்டனாரின் உம்மத்தின் அங்கத்தினரிடமிருந்தும் முப்பதாயிரம் கூட்டங்கள் ஒன்றுகூடி உங்கள் இரத்தத்தை சிந்தி, உங்களைக் கொன்றுவிடுவார்கள்... (அவர்கள்) உங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்து உங்கள் உடைமைகளைச் சூறையாடுவார்கள். அந்த நேரத்தில் இறைவன் உமையாக்களின் மீதான சாபத்தை அனுமதிப்பான்மேலும் வானத்திலிருந்து இரத்தமும் சாம்பலும் பொழியும்எல்லா உயிரினங்களும்காட்டு விலங்குகளும்கடலில் உள்ள மீன்களும் கூட உங்களுக்காக அழும்.”

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு முன்கோவேறு கழுதை மீது ஏறிச் சென்ற ஒரு தேசத்துரோகப் பெண்ணின் தூண்டுதலின் பேரில்பல அம்புகள் எறிந்துமரியாதைக்குரிய உடலைத் துளைத்தது ஒரு சோக சம்பவம். இமாம் ஹஸன் (அலை) மற்றும் இமாம் ஹுசைன் (அலை) இருவரும் இவ்வாறு இஸ்லாத்தையும் அவர்களின் பாட்டனாரின் பணியையும்அவர்களின் தந்தை இமாம் அலி (அலை) அவர்களின் தீவிர முயற்சிகளையும் தங்கள் தனித்துவமான வழிகளில் காப்பாற்றினர்.

அதற்கு உலக முஸ்லிம்கள் என்றென்றும் கடமைப்பட்டிருப்பார்கள்.

https://kayhan.ir/en/news/130358/martyrdom-of-the-prophet%E2%80%99s-elder-grandson

Thursday, August 8, 2024

யாஹ்யா சின்வாரின் தலைமைத்துவ தேர்வும் மேற்கத்திய ஊடகங்களின் தவறான கணிப்பும்

 The election of Yahya Sinwar contradicts Western media's perception

செவ்வாயன்று, ஹமாஸ் போராட்ட இயக்கம், மறைந்த இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு யாஹ்யா சின்வார் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது.

கடந்த செவ்வாயன்று, ஹமாஸ் போராட்ட இயக்கம், தியாகி இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு குழுவின் அரசியல் அலுவலகத்தின் தலைவராக இருக்கும் தலைவர் யஹ்யா சின்வாரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில், The New York Times, The Wall Street Journal, மற்றும் The Economist,போன்ற மேற்கத்திய ஊடகங்கள், யஹ்யா சின்வார் தனது புதிய தலைமைத்துவ பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதால், ஹமாஸை விரிவாக பகுப்பாய்வு செய்யும் கட்டுரைகளை வெளியிட்டன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால்  படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே, போர்நிறுத்தத்திற்காக தொடர்ந்து முயற்சித்த ஒருவராகும். இப்போது அவருக்கு பதிலாக ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் சூத்திரதாரியாக செயல்பட்ட யாஹ்யா சின்வார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹமாசுக்குள்ளும் அதன் கூட்டாளிகள் மற்றும் "இராஜதந்திரத்தில் அதிக ஆர்வமுள்ள உள் தலைவர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய ஒரு கடும் போக்குடையவராக நீண்டகாலமாகவே [மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்களால்] சித்தரிக்கப்பட்டவர் இப்போது தலைமை ஏற்றுள்ளார் என்று தி எகனாமிஸ்ட் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மேற்குலக ஊடகங்களின் கணிப்பு தவறானது என்பதற்கு ஆதாரமாக இயக்கத்தின் தலைவர் தேர்வில் ஒருமனதாக சின்வாரை கட்டமைப்பின் அதி உயர் பதவியில் அமர்த்தியதாய் குறிப்பிடலாம். இது போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களின் எந்த பிரிவினையுமற்ற முழு ஆதரவையும் யஹ்யா சின்வார் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.

ஹமாஸ் தலைவர்களின் படுகொலைகள் எதிர்ப்பு இயக்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தவில்லை என்பதையே மேற்கத்திய ஊடக அறிக்கைகள் காட்டுகின்றன; இன்னும், பாலஸ்தீனத் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேலின் வரலாறு சுதந்திரத்திற்கான விருப்பத்தை மென்மேலும் தூண்டுவதால், பலஸ்தீன் விடுதலைக்கான அதன் உறுதியை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது நிதர்சனம்.

பேச்சுவார்த்தைகள் என்னவாகப் போகிறது?

சின்வார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையலாம் என்றும், காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் எகனாமிஸ்ட் கூறியது. மேலும் யஹ்யா சின்வார் "போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முறியடிப்பதில் முதன்மையானவர்" என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் குற்றச்சாட்டுகளை மீண்டும் அது வலியுறுத்தி கூறியது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஹமாஸ் இயக்கத்தின் முடிவெடுத்தல் அனைத்தும் சின்வாரின் விருப்பத்தின் பேரிலேயே இடம்பெறுகிறது என்ற தவறான கருத்தை மையமாகக் கொண்டிருந்தது. இதற்கிடையில், “ஹமாஸின் முடிவுகளின் மையப் புள்ளியாக யாஹ்யா சின்வாரே இருந்தார் என்று ஒரு முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியை நியூயார்க் டைம்ஸ் அதன் கட்டுரையில் மேற்கோளிட்டுள்ளது.

ஹமாஸின் இறுதி முடிவுகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பணியகத் தலைவர் யஹ்யா சின்வாரால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்ற உண்மை இந்த ஊடகங்களுக்கு தெரிவதில்லை. போர்நிறுத்தம் மற்றும் ‘கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது என்பது போன்ற பொய்களை செய்திகளை பரப்புவதில் அவை பின்நிற்பதில்லை. காஸாவில் மோதலை நிறுத்துவதில் சின்வார் பெரும் தடையாக இருப்பார் என்றும் இவை கதையளக்கின்றன.

தியாகி இஸ்மாயில் ஹனியே அக்டோபர் முதல் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் முன்னணியில் இருந்தார், மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைவதில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் அடாவடித்தனம் மற்றும் அலட்சியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தார். நவம்பர் மாதம் காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டபோதும், "இஸ்ரேல்" தனது உடன்படிக்கையை மீறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் பேச்சுக்களுக்கு இஸ்ரேலிய தரப்பு அடிக்கடி ஏற்படுத்தும் முட்டுக்கட்டையை எடுத்துக்காட்டினர் மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கோரிக்கைகளுக்கு முரணாக அல்லது முன்னர் நிறுவப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணான இஸ்ரேல் புதிய கோரிக்கைகளை அறிமுகப்படுத்துவது எப்படி என்பதை விரிவாக எடுத்துக்கூறினர். மொத்தத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கான காரணம் இஸ்ரேல் தான் என்பதை நினைவூட்டினார்.

பின்னர், ஈரானின் ஜனாதிபதியாக புதிதாக தேர்வுசெய்யப்பட்ட பேசேஷ்க்கியானின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரானுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கேற்ற இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டார், இந்த அத்துமீறல் சம்பவம் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் அல்ல என்பதைக் காட்டுகிறது.

மேற்குலகில் இவ்வாறு முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ள யஹ்யா சின்வார் யார்?

1948 நக்பாவின் போது இடம்பெயர்ந்த பெற்றோருக்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்த யாஹ்யா, இளம் வயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். காஸாவின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரியாக, அவர் இஸ்லாமியத் தொகுதியை வழிநடத்தி அரபுக் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சியோனிச எதிர்ப்பு புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 19 வயதில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்த பல மாதங்களில் பாலஸ்தீனிய பிரச்சனையில் அதிக ஈடுபாடு கொண்டவராக, மற்ற பாலஸ்தீனிய புரட்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

1985 இல் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் ஹமாஸின் நிறுவனரும் தலைவருமான ஷேக் அஹ்மத் யாசினுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார், இந்த தொடர்பு பின்னர் ஹமாஸுக்குள் அவர் பூரணமாக இணைவதற்கு வழி வகுத்தது.

1985 இல் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் அரசியல் அமைப்பில் அதிக கவனம் செலுத்தினார் மற்றும் அவரது செயல்பாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத முயற்சிகளாக மாற்றினார், அல்-மஜ்த் அமைப்பை நிறுவினார்; இதுவே பின்னர் ஹமாஸாக மாறியது. அல்-மஜ்த் காஸாவில் உள்ள துரோகிகளை ஒழிப்பதில் உறுதியாக இருந்தது, அல்-சின்வார் உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் உளவாளிகளை அடையாளம் கண்டு களையெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அல்-சின்வாரின் பாதுகாப்புப் பணியானது காஸாவை ஒரு முக்கிய எதிர்ப்பின் மையமாகவும் பாலஸ்தீனிய விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியாகவும் நிறுவுவதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

1988 ஆம் ஆண்டில், 25 வயதில், அல்-சின்வார் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய உளவு மற்றும் நாசகார நடவடிக்கைகளை முறியடித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

2011 இல், பாலஸ்தீனிய போராட்டக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே 1,027 கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அல்-சின்வார் விடுவிக்கப்பட்டார்.

இன்று அவர் காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட ஏராளமான இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேறியவர்களை மேற்பார்வையிடுகிறார்.

2018 ஆம் ஆண்டில், காஸா மீதான முற்றுகையை அமைதியான முறையில் முறியடிக்கும் முயற்சியில் அல்-சின்வார் 'கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்ன்' (Great March of Return) பேரணியை நடத்தினார். இந்த அமைதி பேரணியில் கலந்துகொண்ட எதிர்ப்பாளர்கள் பலரை இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவம் மிருகத்தனமான முறையில் கொன்று குவித்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-சின்வார் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்திற்கு தலைமை தாங்கி முற்றுகையை வெற்றிகரமாக முறியடித்தார்.

யஹ்யா சின்வார் ஒரு திறமையான மற்றும் துணிச்சல் மிக்க பாலஸ்தீனிய அரசியல்வாதி, அவர் ஆகஸ்ட் 2022 முதல் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இஸ்மாயில் ஹனியேஹ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அவர் அதன் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் பின்னணியில் இருந்த செயல்படுத்தியவர் யாஹ்யா அல்-சின்வார். இஸ்லாத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர், யாருக்காக அல்லாஹ் சொர்க்கத்தின் வாயில் கதவுகளை திறந்து வைக்க நாடினானோஅந்த ஷஹீத் என்ற உயர்ந்த அந்தஸ்தை விரும்பி எதிர்பார்த்திருக்கும் ஒரு தியாகி" என்று அல்-ஹய்யா குறிப்பிடுகிறது.

- தாஹா முஸம்மில் 

Thursday, August 1, 2024

இஸ்மாயில் ஹனியேவின் போராட்டப் பயணம்: நாடுகடத்தலில் இருந்து தியாகம் வரை

 Ismail Haniyeh's journey of Resistance: From exile to martyrdom

“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.” குர்ஆன் 3:139.

மாணவர் செயல்பாடு முதல் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் வரை எதிர்ப்பின் ஒரு முன்மாதிரியான மாதிரியை வழங்கும் இஸ்மாயில் ஹனியே தியாகியாகி, பாலஸ்தீனத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த தலைவர்களின் பட்டியலில் இணைந்தார்.

·      ·        இஸ்மாயில் ஹனியே நேற்று காலை, ஜூலை 31, 2024 அன்று தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

ஹமாஸ் போராட்ட இயக்கம் மற்றும் அதன் அரசியல் பணியகத்தின் தலைவரும் தலைவருமான இஸ்மாயில் ஹனியே ஈரானின் தெஹ்ரானில் அவர் வசிக்கும் இடத்தை குறிவைத்து நடத்திய "கோழைத்தனமான சியோனிச வான்வழி தாக்குதலில்" படுகொலை செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹனியே தெஹ்ரானுக்கு வந்திருந்தார்.

இஸ்மாயில் ஹனியே மே 23, 1963 இல் காஸாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமில் பிறந்தார். 1948 நக்பாவின் போது அவரது பெற்றோர் அஸ்கலனிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

அவர் 1987 இல் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் பட்டம் பெற்றார், பின்னர் 2009 இல் தனது முனைவர் பட்டம் பெற்றார்.

அரசியல் ஈடுபாடு

ஹனியேவின் அரசியல் செயற்பாடு இஸ்லாமிய அமைப்பிற்குள் தொடங்கியது, இது காஸா பகுதியில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மாணவர் பிரிவு ஆகும், அதில் இருந்தே ஹமாஸ் எதிர்ப்பு இயக்கம் பிறந்தது.

அவர் 1983-1984 காலப்பகுதியில் தனது பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவில் உறுப்பினராக இருந்தார், பின்னர் அடுத்த ஆண்டு அதன் தலைவராக செயல்பட்டார்.

1989 இல், இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் (IOF) மூன்று ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தார், பின்னர் ஹமாஸ் தலைவர்கள் குழுவுடன் லெபனான்-பாலஸ்தீன எல்லையில் உள்ள Marj al-Zuhur நகருக்கு நாடு கடத்தப்பட்டார்.

நாடுகடத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்ததும் ஹனியே காஸாவுக்குத் திரும்பினார் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் டீனாக நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலிய காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1997 இல், அவர், ஹமாஸ் நிறுவனர் ஷேக் அஹ்மத் யாஸீனின் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2004 இல் அதன் முந்தைய தலைவரான டாக்டர் அப்துல் அஸீஸ் அல்-ரன்தீஷி ஷஹீதாக்கப்பட்ட பின் காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 2005 இல், அவர் "மாற்றம் மற்றும் சீர்திருத்தம்" அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார், இது 2006 இல் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாவது சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிறிது காலத்திற்குப் பிறகு, பிப்ரவரி 16, 2006 அன்று, பாலஸ்தீனத்தில் பிரதமர் பதவியை ஏற்க அவர் பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் அதே மாதம் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அவர் கலீத் மஷால் ஷஹீதானத்தைத் தொடர்ந்து மே 2017 இல் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரானார்.

இஸ்மாயில் ஹனியே ஏற்கனவே பல அரசியல் படுகொலை முயற்சிகளுக்கு முகம்கொடுத்துள்ளார். 2003 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை அல்-கஸ்ஸாம் படையணிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தியாக நடவடிக்கையைத் தொடர்ந்து எதிர்ப்புத் தலைவர்கள் குழுவிற்கு குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளம்

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தைத் தொடங்கியபோது, ஹனியே தனது தோஹா அலுவலகத்தில் இருந்து இயக்கத்தின் பல தலைவர்களுடன் தொடர்புகொண்டு, ஹமாஸின் இராணுவப் பிரிவான தியாகி இஸ் அல்-தின் அல்-கஸ்ஸாமின் போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களைக் கைப்பற்றியதை அறிந்து, "இந்த வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி" செலுத்துமுகமாக ஒரு பிரார்த்தனைக்கு தலைமை தாங்கினார்.

ஏப்ரல் 10 அன்று, ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் உட்பட ஆறு குடும்ப உறுப்பினர்கள், ஈத் அல்-பித்ரை அதன் குடியிருப்பாளர்களுடன் கொண்டாடுவதற்கு அல்-ஷாதி அகதிகள் முகாமைச் சுற்றி தமது வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அவர்களது காரை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூன் 24 அன்று, அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள அவர்களது வீட்டை குறிவைத்த இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் அவரது சகோதரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களின் தியாகத்தின் மத்தியில், "எனது குடும்ப உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 பேர் தியாகிகளாக ஓய்வெடுக்கிறார்கள், பாலஸ்தீனத்தின் குழந்தைகளைப் போலவே, அவர்களும் வேறுபட்டவர்கள் அல்ல," என்று ஹனியே கூறினார்எதிர்ப்புத் தலைவர்களின் பிள்ளைகளை குறிவைப்பது பாலஸ்தீன மக்களின் உறுதியை உடைக்கும் என்று ஆக்கிரமிப்பு நினைக்கிறது.

'வெற்றியை அறிவிக்கிறோம்'

"பாலஸ்தீன மக்களின் குழந்தைகளின் இரத்தத்தை விட எனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இரத்தம் விலைமதிப்பற்றது அல்ல" என்று ஹனியே தனது குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டபோது கூறினார், அவர்களது உயிர் தியாகங்கள் இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட உயர் கௌரவமாகவே கருதுகிறோம் என்றார்.

2014 இல் அவர் ஆற்றிய உரை ஒன்றில், காஸாவில் நடந்து வரும் முற்றுகையை கண்டித்து ஆற்றிய உரையில், ஷஹீத் ஹனியே "நீங்கள் எங்களை முற்றுகையிடும்போதெல்லாம் வெற்றியை அறிவிக்கும் மக்கள் நாங்கள்" என்று கூறியிருந்தார். காஸா மற்றும் அதன் மக்களின் மனா உறுதியை நீங்கள் உடைக்க விரும்பினால், நாங்கள் கடவுளுக்கு முன் மண்டியிடுகிறோம். பாலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முடிவெடுக்கும் ஒவ்வொருவரும் எமது மக்களின் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்: நம் எதிரிகள் இவ்வுலக வாழ்க்கையை எப்படிப் போற்றுகிறாரோ, அதே போல மரணத்தை மதிக்கும் மக்கள் நாங்கள், மற்றவர்கள் அரசியல் பதவிகளை மதிக்கையில், நாங்கள் எங்கள் தலைவர்களின் வழியில் தியாகத்தை மதிக்கிறோம். நீங்கள் விரும்பும் அனைத்து அலுவலகங்களையும் எடுத்து எங்கள் தேசத்தை எங்களுக்கு கொடுங்கள்.

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (புனித குர்ஆன் 3:169)

தாஹா முஸம்மில்