Contributors

Wednesday, April 3, 2024

பாலஸ்தீனம் விடுவிக்கப்படும்; அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்

Palestine will be free; let there be no doubt about it - Leader

சர்வதேச குத்ஸ் தினம் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளியன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் வருடாந்திர நிகழ்வாகும்.

- தாஹா முஸம்மில் 

சர்வதேச குத்ஸ் தினம் 1979 ஆம் ஆண்டு மறைந்த ஈரானியத் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களால் பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை எதிர்த்தும் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தினம், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பேரணிகள், அணிவகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளால் குறிக்கப்படுகிறது, பங்கேற்பாளர்கள் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதோடு பாலஸ்தீனத்தை இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும் அழைப்பு விடுகின்றனர்.

சர்வதேச குத்ஸ் தினம், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை மதிக்கும் ஒரு தீர்மானத்திற்காக குரலெழுப்பும் ஒரு தளமாக இருந்துவருகின்றது.

கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் அதன் ஆக்கிரமிப்பில் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது, மண்ணுக்கு சொந்தக்காரர்களாகிய பலஸ்தீன் மக்களை நிர்கதிக்குள்ளாக்கி அகதிகளாக்கியுமுள்ளது. அகதி முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவங்கள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

காஸா எனும் குறுகிய பிரதேசத்தில் கடந்த ஆறுமாதங்களில் மட்டும் சுமார் 33,000 நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 75,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல, மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் போன்றவைகளும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன, நிவாரண உதவிகள் கூட சென்றடைய முடியாதவாறது தடுக்கப்பட்டுள்ளதால் பச்சைக்குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற இந்த செயல்கள் அனைத்தும் மனித உரிமைகளை மதிக்கும், நாகரீகத்தில் சிறந்த சமூகமாக தம்மை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் ஜெர்மனி போன்றநாடுகளின் உதவி ஒத்தாசையுடன் அரங்கேறியது என்பது மிகவும் கவலைக்குரியது.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்:  “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன்,

மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளையும்  கேட்டுக்கொள்கிறேன்,  மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்."

சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின் பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் மற்றும் பாலஸ்தீன மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் சட்டவிரோத அரசு பலாத்காரமாக உருவாக்கப்பட்டது;  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு, உலக முஸ்லிம்களின் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது 1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் இந்நாள் வரை புரிந்துவரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காத யூத இன வெறியர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும், வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும் மிருகத்தனமாக கொன்று வருகின்றனர். அமெரிக்காவின் தலைமையிலான இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும் நேர்மையாக நடந்துகொள்கிறதா என்ற சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. அமெரிக்க நலன்காக்கும் அமைப்பாக ஐ.நா.சபை செயற்படுகின்றதா என்று சந்தேகப்படும் அளவிற்கு அதன் பாதுகாப்பு சபை இயங்குவதால் ஐ.நா.வை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலைக்கு பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் பலஸ்தீனர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆண்கள்பெண்கள்சிறுவர்கள்வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ள பலஸ்தீனர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ் தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என்று இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப நாட்களிலேயே பிரகடனம் செய்தார்கள்.

"இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு சொந்தமானது போல், பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானது போல் பலஸ்தீன் அரபிகளுக்கு சொந்தமானது. அரபிகளின் நிலத்தில் யூதர்களை சுமத்துவது தவறானது, மனிதாபிமானமற்றது". - மகாத்மா காந்தி 

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) நிறவெறியை வெறுத்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு பூரண உதவியை வழங்கினார். பதிலுக்கு நெல்சன் மண்டேலாவும் "பாலஸ்தீனன் சுதந்திரம் அடையாமல் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது" கூறினார்.

பலஸ்தீன் என்பது நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம்பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய புனித தலமாகும்.நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் பங்காற்றுவது நம் அனைவர் மீதும் கடமையாகும்.

இந்த வருடம் ஏப்ரல் 5ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில்,  போராடிக் கொண்டிருக்கும் பஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம். அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறுபைத்துல் முகத்தஸ் வரலாறுஇஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம். குத்பா மேடைகளை அதற்காக பயன்படுத்துவோம்இந்த புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் பலஸ்தீர்களின் வெற்றிக்காக பிரார்த்திப்போம்.

புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம்.  பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்து என்பதை மக்களுக்கு ஞாபகம் ஊட்டிக்கொண்டு இருப்போம். எனவேஎமது ஒன்றுபட்ட செயற்பாடே முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமும் மற்றும் முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை உறுதி செய்யக்கூடிய ஒரே வழி என்பதை உணர்வோம்.

தற்போது முதல் முறையாக இஸ்ரேல் தனது இருப்பைப் பற்றி அச்சம்கொள்ள தொடங்கியுள்ளது. அநியாயத்துக்கு எதிரான இஸ்லாமிய முன்னணியின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். இஸ்லாமிய ஈரான், காஸாவின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லாஹ், யெமனின் அன்சார் அல்லாஹ், பஸ்தீனில் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஈராக் மற்றும் சிரியா ஆகியவற்றில் இயங்கும் இஸ்லாமிய போராட்டக் குழுக்களின் ஒன்றிணைந்த செயற்பாடே இந்த அச்சத்துக்கு காரணம் என்பது வெளிப்படை.

நம் மத்தியில் உள்ள சிலர் சமாதான பேச்சுவார்த்தைகள் மட்டுமே தீர்வுக்கான ஒரே வழி என்று வாதிடுகின்றனர். இப்போது எம்முன் எழும் மிக முக்கியமான கேள்விகள் என்னவெனில் "ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் ஏதேனும் உறுதியான சாதனைகள் பெறப்பட்டுள்ளதாபாலஸ்தீனர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் நம்பிக்கை உள்ளதா? என்பதாகும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. பிராந்தியத்தில் அவர்களின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னணி நிலைகளைக் கோரும் வளர்ந்த நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது. இந்த நாடுகள் ஒருபோதும் நடுநிலை வகித்ததில்லை. என்ன ஒரு நயவஞ்சகத்தனம்என்ன ஒரு இரட்டை நிலைப்பாடு.

1945 இல் அரபு லீக் அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே இது உருவாக்கப்பட்டது என்றும், அதனூடாக அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரபு லீக் அமைப்பின் சாதனைகள் என்ன? இந்த அமைப்பினால் அதன் சகோதர பாலஸ்தீனிய விடுதலை அமைப்புக்கு எந்த அளவிற்கு உதவ முடிந்தது, அவர்கள் கூறிய நோக்கங்களை அடைய முடிந்தது? என்பதை சிந்தித்தல் நன்று.

இந்த கொடும் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கைகோர்த்திருந்தால், சியோனிச ஆட்சி அத்தகைய மிருகத்தனத்தை கட்டவிழ்த்துவிடத் துணிந்திருக்காது என்பது மட்டுமல்ல அவ்வாறான ஒன்றை நிறைவேற்ற நினைத்தும் பார்த்திருக்காது,

அரபு/முஸ்லிம் அரசாங்கங்களின் கூட்டு முயற்சிகள் இல்லாத நிலையிலும் கூட சிரமங்களை எதிர்கொள்வதற்கும் ஒற்றுமையை அடைவதற்கும் உம்மாவின் ஒற்றுமைக்கு வழி வகுப்பதற்கும் அதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கும் முஸ்லிம்களாகிய எம் அனைவருக்கும் தட்டிக்கழிக்க முடியாத தனிப்பட்ட கடமை உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.

பலஸ்தீன் விவகாரம் போன்றதொரு பாரிய பிரச்சினையை அவ்வளவு இலகுவில் முஸ்லிம்களால் மறந்துவிட முடியாது; முஸ்லிம் சமுதாயங்களின் ஆர்வமும் அவர்களது தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஒருகாலமும் அதற்கு இடம் கொடுக்க மாட்டாது. அமெரிக்காவும் ஏனைய ஆதிக்க சக்திகளும் பிராந்தியத்தின் அல்லக்கைகளுடன் இணைந்து பலஸ்தீனை கபளீகரம் செய்ய எவ்வளவு முயற்சித்தாலும், எவ்வளவு செல்வமும்  பலமும்  அதற்காக செலவிட்டாலும் அது ஒருபோதும் சாத்தியப்படப் போவதில்லை.

Friday, March 29, 2024

முஸ்லிம் உலகு எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது - அல் ஹூதி

The Muslim world must not fall prey to the machinations of the enemy - Al Houthi

யெமன் சவூதி தொடுத்த போர் பிராந்திய கட்டுப்பாட்டை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்கான சதித்திட்டமாகும் -  அன்சார் அல்லாஹ் தலைவர்

அன்சார் அல்லாஹ் இயக்கத்தின் தலைவர்மார்ச் 25, 2024 அன்று எதிரி சக்திகளுக்கு எதிரான தேசிய ஒருமைப்பாட்டு தினத்தின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் உரையாற்றினார்.

அன்சார் அல்லாஹ் இயக்கத்தின் தலைவர் சையத் அப்துல்-மாலிக் அல்-ஹூதி

யெமன் மக்களுக்கு அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார், மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு சவூதி அரேபியாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

அமெரிக்க ஆதரவுடன் யெமன் மீது மேற்கொள்ளப்பட்ட சவுதி தலைமையிலான ஆக்கிரமிப்பு, மேற்கு ஆசியாவில் தற்போதைய நிலையை மறுசீரமைத்து இஸ்ரேலின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு விரிவான திட்டத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டது என்று யெமன் அன்சார் அல்லாஹ் இயக்கத்தின் தலைவர் சையத் அப்துல்-மாலிக் அல்-ஹூதி தனது உரையில் கூறினார்.

யெமன் மீதான ஆக்கிரமிப்பு மூலம், சர்வதேச நடிகர்கள் பாலஸ்தீன பிரச்னையை மறக்கடிக்கடிக்கச் செய்து பிராந்தியத்தில் பெரிய மாற்றங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டே செய்தனர். இது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அங்கீகரித்து அதன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த அனுமதிக்கும் திட்டமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

"எங்கள் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பின் நோக்கங்களில் ஒன்று, பிராந்தியத்தை பொது எதிரியான இஸ்ரேலினது கட்டுப்பாட்டின் கொண்டு வர உதவுவதும், உறவு இயல்பாக்கல் திட்டம் அல்லது நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டும் (டிரம்பின்) திட்டத்தில் உள்ள ஒன்றாகும்" என்று சையத் அல்-ஹூதி விளக்கினார்.

"எங்கள் நாட்டின் மீதான சவூதி அரேபியாவின் ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வத்தன்மை கிடையாது, நியாயமான காரணமும் இல்லை, தெளிவான நோக்கமும் இல்லை" என்று அன்சார் அல்லாஹ் தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

யெமன் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த சவுதியுடன் இணைந்த நாடுகளால் பரப்பப்பட்ட பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி, "அவர்களது உண்மையான நோக்கத்தை கூட்டணியால் பரப்பப்பட்ட செய்திகளே அம்பலப்படுத்தின" என்று சையத் அல்-ஹூதி கூறினார்.

அனைத்து முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிரி 'இஸ்ரேல்',

"எங்கள் எதிரி முழு உம்மத்தின் எதிரியாகும். சியோனிச நாடு என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரியாகும், அரேபியர்களுக்கும் ஆபத்தை உருவாக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் ஒன்றாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

"அரேபியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய விரோதம் என்பது அவர்களின் கலாச்சாரம், சிந்தனைப் பள்ளிகள், பாரம்பரியம் மற்றும் அரசியல் வரை நீண்டுள்ள நன்கு அறியப்பட்ட, தெளிவான மற்றும் வெளிப்படையான விரோதமாகும்" என்று யெமன் தலைவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில், அமெரிக்கா மற்றும் "இஸ்ரேல்" முன்னெடுத்த உறவு இயல்பாக்கல் (Abrahamic Accord) பிரச்சாரங்களின் பங்கை சையத் அல்-ஹூதி தெளிவாக எடுத்துரைத்தார்.

"இந்த சியோனிச அரசுடன் உறவு இயல்பாக்கல் திட்டம் (Abrahamic Accord) இஸ்ரேலிய பகைமையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, எங்கள் உம்மாவிற்குள் போர்கள் மற்றும் சண்டை சச்சரவுகளைத் தூண்டுவதற்காக வந்த ஒன்றாகும். இதற்கு முஸ்லிம் உலகு பலியாகிவிடக்கூடாது." 

"முஸ்லிம் அரசுகள், அரசாங்கங்கள் மற்றும் ஆட்சிகள் அமெரிக்க கொள்கைகளுக்காக சேவை செய்ய தங்கள் ஆற்றல்களையும் திறன்களையும் நகர்த்தின. எங்கள் உம்மத்திற்கு அது ஒரு துயரமான நிலையாகும்" என்று சையத் அல்-ஹூதி மேலும் கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கங்களை அரபு தேசங்கள் உணர தவறியது "பெரும் நட்டம்" மற்றும் "தெளிவான இழப்பு" என்பதை அவர் வலியுறுத்தினார்.

"இஸ்ரேலிய எதிரியைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட உறவு இயல்பாக்கம் என்பது முழு அரபு உலகிலும் ஊடுருவி, அதன் கட்டுப்பாடு மற்றும் செல்வாக்கை பலப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாகும்," என்று அவர் கூறினார்.

தீமையின் முக்கூட்டுடன் - இஸ்ரேல், அமெரிக்காபிரித்தானியா - மோதல் மட்டுமே அன்றி வேறு எவற்றுடனும் நாம் பகைமையை நாடவில்லை,

யெமன் அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனும் ஒப்பந்தங்களையும் சமாதானத்தையும் எட்ட விரும்புகிறது, பங்காளிகளுடனான உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சையத் அல்-ஹூதி உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் "இஸ்ரேல்" ஆகியவற்றை உள்ளடக்கிய "தீமையின் மும்மூர்த்திகளுடன்" மட்டுமே யெமன் மோதல் நிலையில் உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

யெமன் ஆயுதப் படைகள் (YAF) நடத்தும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனிய மக்களுக்கு யெமன் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அன்சார் அல்லாஹ் இயக்கத்தின் தலைவர் கூறினார்.

"எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும்" என்று சையத் அல்-ஹூதி கூறினார், காஸா பகுதியில் சக விடுதலை போராளிகளுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கான யெமன் மக்கள் நடத்திய பேரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

"எங்கள் ஊடக நிறுவனங்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்க தங்கள் அனைத்து ஆற்றல்களுடனும் திறன்களுடனும் இயக்கப்படுகின்றன" என்று சையத் அல்-ஹூதி கூறினார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைதிக்காக செயல்பட வேண்டும்

"தற்போதைய நிலையில் சமாதானம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை சவுதி மற்றும் எமிரேட்ஸ் தொடர்ந்து தள்ளிப்போடுவதற்கு எந்த நியாயமும் இல்லை" என்று சனாவுக்கும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து சையத் அல்-ஹூதி குறித்து கூறினார்.

"சவுதி அரேபியாவும் எமிரேட்ஸும் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், பதற்றத்தைத் தணிக்கும் கட்டத்திலிருந்து அமைதி முயற்சிகளுக்கு நகர வேண்டும். அமைதி என்பது அனைத்து தரப்பினரின் அவசியமான மற்றும் உண்மையான நலனை அடிப்படையாகக் கொண்டதாகும்.."

"எமது பிராந்திய விடயங்களில் அமெரிக்காவை கண்மூடித்தனமாக சார்ந்திருப்பதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுமாறு நாங்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறோம், மேலும் சமாதானத் தேவைகளை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் ஒரு நியாயமான தீர்வை நாங்கள் எட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் வலியுறுத்தினார்.

அல்-ஹூதி: நாங்கள் மேம்பட்ட இராணுவ திறன்களுடன் 10 வது ஆண்டில் நுழைகிறோம்

"அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் பிரிட்டிஷார் விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது" என்று சையத் அல்-ஹூதி கூறினார்.

"எங்கள் மக்களைப் பாதுகாக்கவும், எதிரிகளின் சதித்திட்டங்களை எதிர்கொள்வதில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கவும் மேம்பட்ட இராணுவ திறன்களுடன் நாங்கள் பத்தாவது ஆண்டில் நுழைகிறோம்" என்று சையத் அல்-ஹூதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

""நாங்கள் பொதுவான அணிதிரட்டல் மற்றும் முன்னோடியில்லாத பகிரப்பட்ட மக்கள் நனவு மற்றும் எங்கள் முன்னணியில் முழுமையான ஒருங்கிணைப்புடன் நுழைகிறோம்;" உண்மையான அனுபவம் மற்றும் வளர்ச்சியை இணைத்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விசுவாசமான இராணுவத்துடன் நாங்கள் இப்போது பரிணமித்துள்ளோம்," என்ற அவர்

கடந்த பத்து ஆண்டுகளாக யெமன் மக்களுடன் நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியுடன் தனது உரையை நிறைவு செய்த சையத் அல்-ஹூதி, ஈரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகியவற்றிற்கு யெமனின் நன்றியைத் தெரிவித்தார்.

"லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா எங்கள் சகோதரர்கள் எங்கள் நாட்டுடன் ஆதரவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டின் விளைவாக பல சிக்கல்களை எதிர்கொண்டனர்" என்று சையத் அல்-ஹூதி கூறினார்.

"ஈராக்கில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கும் எங்கள் மக்களை ஆதரித்த உலகில் சமாதானத்தை விரும்பும் அனைத்து சுதந்திர மக்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்." என்று சையத் அல்-ஹூதி தனதுரையை முடித்தார்.

https://english.almayadeen.net/news/politics/al-houthi--9-year-war-on-yemen-a-plot-for-israeli-regional-c

Monday, March 25, 2024

தமது தரப்பு தோல்வியை வெளிப்படுத்தி வரும் இஸ்ரேலிய ஊடகங்கள்

The Israeli media is showing their side's failure

ByAl Mayadeen English

இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வடக்கு முனையை ஹிஸ்புல்லாவிடம் இழந்துவிட்டதாக ஒரு உயர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகிறார்.

இஸ்ரேலிய போர் அமைச்சரவை (War Cabinet) வடக்கை இழந்துள்ளது மட்டுமல்லாமல் "இஸ்ரேல்" ஒரு மூலோபாய பிரச்சினையையும் எதிர்கொள்கிறது, மேலும் காஸா முனையில் ஒரு நீண்ட போரை எதிர்கொள்கிறது என்று இஸ்ரேலிய சேனல் 13 ரிசர்வ் கர்னல் கோபி மரோம் மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.

"வடக்கில் வசிப்பவன் என்ற வகையில் கூறுகிறேன், அமைச்சரவை வடக்கை இழந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன். இங்கு ஒரு மூலோபாய பிரச்சினை உள்ளது. எந்த தீர்வும் கண்ணில் தென்பது தூரத்தில் இல்லை. இது பல மாதங்களாக நடந்து வரும் பெரும் அழிவுப் போராக உள்ளது," என்று மரோம் இஸ்ரேலிய சேனலிடம் கூறினார்.

"அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்கள் ஆகியவை தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 70,000 பேரை மீண்டும் அழைத்து வருவதற்கான நிலைமைகளை உருவாக்கவில்லை என்று நான் நம்புகிறேன்," என்று வலியுறுத்திய அவர், "அமைச்சரவை வடக்கை கவனித்துக் கொள்ளவில்லை மற்றும் ஹெஸ்பொல்லாவின் "அச்சுறுத்தலை" அகற்றுவது என்ற அதன் இலக்கு குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், சேனல் 12 நிருபர் ரோவி ஹேமர்ஷ்லாக் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் "ஒரு அமைதியற்ற வார இறுதி" பற்றி குறிப்பிட்டார், ஹெஸ்புல்லா அதன் நடவடிக்கைகளை இங்கே முடுக்கிவிட்டுள்ளது மற்றும் ஏராளமான தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்று கூறினார்.

சனிக்கிழமை காலை ஹெஸ்புல்லா இரண்டு ராக்கெட்டுகளை ஏவியது குறித்து ஹேமர்ஷ்லாக் பேசுகையில், "மார்கலியட் மற்றும் மிஸ்காவ்-ஆம் ஆகிய இடங்களில் சைரன்கள் ஒலித்தன. பின்னர், அப்பர் அல்-ஜலீலியின் வான் பகுதியில் ட்ரோன்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன," வான் பாதுகாப்பு அமைப்பு "அவற்றை இடைமறிக்கத் தவறிவிட்டது" என்பதையே இது வெளிப்படுத்தியது.

இஸ்ரேலிய நிருபர் மேலும் தெரிவிக்கையில் "கஃபார் ப்ளூம் அருகே இரண்டு ட்ரோன்கள் விபத்துக்குள்ளானதாகவும், சம்பவ இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார்.

அந்த அலைவரிசையின் இராணுவ வர்ணனையாளர் ரோய் ஷரோன், "இஸ்ரேலின் வடக்கில் வசிப்பவர்கள் திரும்பி வந்து குடியேறுவதற்கான சூழ்நிலை வரும் என்றும் அவ்வாறான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் இன்னும் நம்புகிறார்கள், ஆனால் அது கிட்டிய எதிர்காலத்தில் நடக்காது" என்று கூறினார். 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 6 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளாலும், அவர்கள் திரும்பி வருவதற்கு ஹிஸ்புல்லாவுடன் ஒரு அரசியல் தீர்வுக்கான எந்த திட்டமும் இல்லாததாலும் அவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

தெற்கின் நிலையும் மோசமானதே

இஸ்ரேலிய செய்தி நிறுவனமான வாலா சனிக்கிழமையன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காஸா மீதான போரில் உறுதியற்ற நிலையில் இருப்பதாலும், தெளிவான மூலோபாயம் இல்லாமல் இருக்கின்றது, இதனால் அது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மீள வழி தெரியாமல் அங்கு சிக்கியுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் சமீபத்தில் வெறுமையாக்கப்பட்ட பகுதிகளில் ஹமாஸ் எதிர்ப்பு இயக்கம் அதன் திறன்களை தீவிரமாக மீண்டும் கட்டியெழுப்புகிறது என்பதை  வாலா  அடிக்கோடிட்டுக் காட்டியது, இந்த பிரச்சினையில் "இஸ்ரேலுக்கு" எந்த தெளிவான இலக்கும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்நாட்டு அரசியல் இயக்கவியலால் செயலிழந்து காணப்படுகிறார், என்று வாலா  கட்டுரையாளர் பென் காஸ்பிட் கூறினார். ஆதாரங்களின்படி, நெதன்யாகுவின் முடிவெடுக்கும் திறன் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளான இட்டாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோரின் செல்வாக்கால் தடைபட்டுள்ளது, இது காஸாவில் இஸ்ரேலிய படைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு பதிலளிப்பதில் அரசாங்கத்தை முடக்கியுள்ளது.

ஹமாஸ் தனது கோட்டையான கான் யூனிஸை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கான் யூனிஸின் மூலோபாய முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல் ரஃபா மீதான படையெடுப்பை தொடர்வது புத்திசாலித்தனமல்ல என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

நெத்தன்யாகுவிற்கு எதிராக விமர்சனங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன; ஆக்கிரமிப்பின் தற்போதைய இக்கட்டான நிலைக்கு இஸ்ரேலிய அவருடைய தலைமைதான் சிக்கலுக்கு காரணம் என்று யெடியோத் அஹ்ரோனோத் செய்தியாளர் பென்-ட்ரோர் யெமினி போன்றவர்கள் கூறுகின்றனர்.

https://english.almayadeen.net/news/politics/-israel--lost-northern-front-to-hezbollah--senior-official-s

பல ஆண்டுகள் சென்றாலும் சரிசெய்ய முடியாத நெருக்கடியை ஹிஸ்புல்லா உருவாக்கியுள்ளது - இஸ்ரேலிய பிராந்திய அதிகாரி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிராந்திய அதிகாரி ஒருவர் வடக்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

மார்ச் 21, 2024 அன்று, லெபனான் - பாலஸ்தீன எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய குடியேற்றமான "மெதுல்லா" வை நோக்கி ஒரு ஹெஸ்புல்லா போர் விமானம் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை ஏவுகிறது. (லெபனானில் இஸ்லாமிய எதிர்ப்பு / இராணுவ ஊடகங்கள்)

இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது தனக்குள்ள விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய அல்-ஜலீல் பிராந்திய கவுன்சிலின் தலைவர் ஜியோரா சால்ட்ஸ் இஸ்ரேலிய வானொலி சேனலான FM103 க்கு கூறுகையில், "நாங்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறோம், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு யதார்த்தமாகும்," என்றார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள வடக்கு பிராந்தியங்களில் "வரவிருக்கும் ஆண்டுகளில்" எதிர்நோக்கப்படும் நெருக்கடி குறித்து அவர் எச்சரித்தார், அதேவேளையில் அப்பிராந்தியத்தில் இராணுவ மற்றும் பாதுகாப்பு இயலாமைக்காக இஸ்ரேலிய அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.

ஹிஸ்புல்லாவே இஸ்ரேலுக்கு "வலுவான, மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான சவால்" என்று கூறிய அவர், ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு பகுதிகளை முன்னுரிமையில் இரண்டாம் நிலை கருத முடியாது என்றும் கூறினார்.

https://english.almayadeen.net/news/politics/israeli-regional-official--hezbollah-created-crisis-for-year