Contributors

Friday, November 3, 2023

அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன, ரகசியம் காத்தலே வெற்றியின் ரகசியம் - சையத் நஸ்ரல்லா:

 Sayyed Nasrallah: On the Lebanese front, all options are on the table, Keeping secrets is the secret to success

28 நாட்களுக்குப் பிறகு, சையத் ஹசன் நஸ்ரல்லா காஸா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி பேச மௌனம் கலைத்தார்.

ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா அவர்கள் நவம்பர் 3, 2023 அன்று ஆற்றிய உரை (ஜைனப் டெர்மோஸ் அவர்களால் அல் மயாதீனுக்காக தொகுக்கப்பட்டது.)

ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா, "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் (Operation Al-Aqsa Flood) 100% ஒரு பாலஸ்தீனிய முடிவு, மற்றும் அதன் நிறைவேற்றம் 100% பாலஸ்தீனிய முடிவு, "அதன் தொடக்கக்காரர்கள் அதை மற்ற பாலஸ்தீன பிரிவுகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து கூட மறைத்தனர், அவர்கள் அவ்வாறு செய்ததை எவரும் பொருட்படுத்தவில்லை" என்று கூறினார்.

அல்-குத்ஸுக்கு செல்லும் பாதையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், சையத் நஸ்ரல்லா, "இந்த ரகசியம் காத்தல் தான் ஆச்சரியப்படத்தக்க அதன் குறிப்பிடத்தக்க வெற்றியை உறுதி செய்தது, மேலும் இந்த நடவடிக்கையே ஒன்றுக்கு மேற்பட்ட போர்முனைகள் மற்றும் போர்க்களங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

"ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் (Operation Al-Aqsa Flood)” பற்றி யாருக்கும் தெரியாது என்பதான் இந்த போர் முற்றிலும் பாலஸ்தீனியமானது மற்றும் பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும், மேலும் இது எந்தவொரு பிராந்திய அல்லது சர்வதேச அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தலைவர் உறுதிப்படுத்தினார்.

"இந்த போர் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டது" இது "இறைவனுக்காக நிலைநிறுத்தப்பட்ட பாதையில் போராடுவதற்கான தெளிவான மற்றும் தூய்மையான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்" என்று வலியுறுத்தினார்.

ஹெஸ்புல்லா தலைவரின் கூற்றுப்படி, "அல்-அக்ஸா புயலில் கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகளே ஈரானுக்கு எதிர்ப்பு பிரிவுகள் மீது எந்த ஆணையும் இல்லை என்பதற்கான தெளிவான சான்றுகள்" மற்றும் "உண்மையான முடிவுகளை எடுப்பவர்கள் எதிர்ப்பின் தலைவர்கள் மற்றும் அதன் சுதந்திரப் போராட்ட வீரர்கள்."

இந்த சூழலில், சையத் நஸ்ரல்லா, "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் (Operation Al-Aqsa Flood) இஸ்ரேலிய அமைப்பின் பலவீனத்தையும் இயலாமையையும் மேலும் அம்பலப்படுத்தியது" என்றும், இது உண்மையில் "சிலந்தி வலையை விட பலவீனமானது" என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் நோக்கத்தை முழு உலகமும் பார்க்கும் வகையில் ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் மீண்டும் முன்னணிக்குத் தள்ளியது என்று அவர் தொடர்ந்து கூறினார்.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்திற்கு முன் என்ன நடந்தது?

இந்த சூழலில், சையத் நஸ்ரல்லா அக்டோபர் 7 க்கு முன்னர் பாலஸ்தீன மக்கள் அனுபவித்த கஷ்டங்களை எடுத்துரைத்தார், "குறிப்பாக பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிச, முட்டாள்தனமான, கொடூரமான மற்றும் அசுரத்தனமான அரசாங்கத்தின் கீழ் பாலஸ்தீனத்தில் கடந்த [சில] ஆண்டுகளில் நிலைமைகள் மிகவும் கடினமாக இருந்தன."

"நீங்களும் முழு உலகமும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனிய மக்களின் துன்பங்களை நன்கு அறிவீர்கள்" என்று அவர் மேலும் கூறினார், இருப்பினும், "தீவிரவாத அரசாங்கம் கைதிகளுக்கு எதிரான அதன் தன்னிச்சையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது," ஏற்கனவே மோசமான மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கியது.

"காஸாவில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் [20 ஆண்டுகளுக்கும் மேலாக] கடினமான நிலைமைகளை அனுபவித்து வருகின்றனர்" என்று கூறினார்.

இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கவாதக் கொள்கைகளையும் எதிர்ப்புத் தலைவர் சுட்டிக் காட்டினார், இது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதற்கான அபாயங்களை மேலும் அதிகரித்தது.

ஆக்கிரமிப்பால் நடத்தப்பட்ட அதிகரித்த அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக் கொள்கைகளையும் அவர் சுட்டிக் காட்டினார், இது "அபகரிக்கும் நிறுவனத்தை [அதன் மையத்தை] மற்றும் திமிர்பிடித்த ஆதரவாளர்கள், குறிப்பாக வாஷிங்டன் மற்றும் லண்டன்" ஆகிவற்றை உலுக்கக்கூடிய ஒரு பெரிய நிகழ்வு".

காஸா மீதான போரில் அமெரிக்காவின் பங்கு

காஸா முனை மீதான மிருகத்தனமான போரில் அமெரிக்காவின் பங்கு குறித்து, சையத் நஸ்ரல்லா தெளிவுபடுத்தினார், அக்டோபர் 7 அன்று ஒரு பலமான அடியைப் வாங்கிய பின்னர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக பைடன் நிர்வாகம் "அதன் ஜனாதிபதி, செயலாளர்கள் மற்றும் தளபதிகளை அனுப்புவதற்கு அவசரம் காட்டியது" என்று தெளிவுபடுத்தினார்.

ஆக்கிரமிப்பை ஆதரிப்பதற்கான வாஷிங்டனின் அவசரம் அதன் "பலவீனத்தை" வெளிப்படுத்துகிறது என்று உறுதிப்படுத்தினார்.

மோதல்களின் முதல் நாளில் அமெரிக்காவிடமிருந்து 10 பில்லியன் டாலர் உதவியைக் கோரியதைக் கருத்தில் கொண்டு அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான "இஸ்ரேலின்" திறனை அவர் கேள்விக்கு உட்படுத்தினர். "இஸ்ரேலுக்கு" உதவுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குச் சென்ற ஏராளமான அமெரிக்க இராணுவ அதிகாரிகளையும், ஆக்கிரமிப்பிற்கு அனுப்பப்பட்ட ஏராளமான ஆயுதங்களையும் அவர் சுட்டிக்காட்டினார், இவை அனைத்தும் "இஸ்ரேல்" சுயாதீனமாக "அதன் காலில் நிற்க முடியாது" என்பதைக் காட்டுகின்றன.

சையத் நஸ்ரல்லாவின் கூற்றுப்படி, "காஸாவில் நடப்பது அமெரிக்காவின் பாசாங்குத்தனத்துடன் கூடிய இந்த கொலைகள் அனைத்திற்கும் அமெரிக்காவின் நேரடி பொறுப்பை வெளிப்படுத்துகிறது, மேலும் இது எங்கள் பிராந்தியத்தில் அவர்கள் விதைத்த அபகரிப்பு நிறுவனத்தின் மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தன்மையையும் பிரதிபலிக்கிறது."

"காஸாவில் நடந்து வரும் போருக்கு வாஷிங்டன் முற்றிலும் பொறுப்பு, அதே நேரத்தில் "இஸ்ரேல்" என்பது மனிதர்களைக் கொல்லும் ஒரு கருவி மட்டுமே என்றும், "காஸாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதைத் தடுக்கும், எந்தவொரு போர்நிறுத்த முடிவையும் நிராகரிக்கும் பக்கமே அமெரிக்கா உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தினார்.

உண்மையில், காஸாவில் போரை நடத்துபவர்கள் அமெரிக்கர்கள்தான் " அதுவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடங்க ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தூண்டியது", இது "ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவு" என்று விவரித்தார்.

இஸ்ரேலின் தவறுகள் தொடர்கின்றன

"இஸ்ரேலியர்கள் செய்த மற்றும் தொடர்ந்து செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, அவர்களால் அடைய முடியாத அல்லது தொலைநோக்கற்ற நீண்டகால இலக்குகளை நிர்ணயிப்பதாகும்."

சையத் நஸ்ரல்லா ஹமாஸை ஒழிப்பதற்கான இஸ்ரேலிய நோக்கத்தை 2006 இல் "லெபனானில் எதிர்ப்பை நசுக்குதல்" மற்றும் கடத்தப்பட்ட இரண்டு இஸ்ரேலிய கைதிகளை மீட்டெடுப்பது என்ற அவர்களின் நோக்கத்துடன் ஒப்பிட்டார், "பேச்சுவார்த்தைகளிலோ அல்லது [கைதிகள்] பரிமாற்றத்திலோ ஈடுபடாமல், தாக்க முற்பட்டு தோல்வியைத் தழுவினர்".

2006-ம் ஆண்டு தோல்வியடைந்த நிலையில் செய்தது போன்ற தவறுகளை செய்த இஸ்ரேலியர்கள், இன்று காஸாவில் மீண்டும் தவறுகளைச் செய்கின்றனர், அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை, தம்மை தகவமைத்துக் கொள்வதுமில்லை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

காஸாவில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை "இஸ்ரேல்" கொலை செய்வதும், அத்துடன் ஒட்டுமொத்த குடியிருப்பு முகாம்களையும் அழிப்பதும் ஆக்கிரமிப்பு அனைத்து சிவப்பு கோடுகளையும் கடக்க தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

சையத் நஸ்ரல்லா பாலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் எடுத்து வரும் வீரமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். "ஒரு எதிர்ப்புப் போராளி முன்னேறி ஒரு டாங்கியின் மீது வெடிகுண்டை வைத்தால், இஸ்ரேலிய எதிரி இந்த திறமையான போராளிகளை எவ்வாறு சமாளிப்பார்?"

"காஸாவிலிருந்து மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் மற்றும் தினசரி வரும் காட்சிகளையும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிபாடுகளின் கீழ் இருந்து வெளியே வரும் காட்சிகளையும், அவர்கள் இன்னும் எதிர்ப்புக்கு ஆதரவை வெளிப்படுத்தும் காட்சிகளையும்" அவர் எடுத்துரைத்தார்.

இந்த சம்பவங்கள் "பொதுமக்களைக் கொல்வதன் மூலமும் படுகொலைகளைச் செய்வதன் மூலமும் நீங்கள் எந்த இலக்குகளையும் அடைய முடியாது என்பதையே சியோனிஸ்டுகளுக்கு தெளிவாகக் கூறுகின்றன."

வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள், அனுதாபங்கள்

சையது நஸ்ரல்லா வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அல்-அக்ஸா வெள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகின் எந்த இடத்திலும் இறந்த ஒவ்வொரு தியாகியின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்தார்.

உலகில் இணையற்ற காஸாவின் புகழ்பெற்ற மக்களுக்கும் தலைவர் அஞ்சலி செலுத்தினார், "காஸா மக்களின் மகத்துவம், உறுதி மற்றும் பொறுமையை எந்த வார்த்தைகளும் வெளிப்படுத்த முடியாது, இது மேற்குக் கரை மக்களுக்கும் பொருந்தும்" என்று கூறினார்.

மேலும், அல்-அக்ஸா பிளட் நடவடிக்கையில் இணைந்து கொண்ட ஈராக் மற்றும் ஏமன் படைகளுக்கு அவர் நன்றி கூறினார்.

https://english.almayadeen.net/news/politics/sayyed-nasrallah--us-is-preventing-ceasefire-in-gaza

தமிழில்: தாஹா முஸம்மில் 

 

Thursday, November 2, 2023

அமெரிக்கா வரலாற்றின் சாக்கடைக்குள் இறங்குகிறது

America descends into the cesspool of history

 By: Hossein Askari

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கூறியதைக் சுட்டிக்காட்டுவோம்: "அக்டோபர் 7 தாக்குதல் சும்மா இடம்பெறவில்லை."

எது பயங்கரவாதம்...? இஸ்ரேல் உருவாவதற்கு முன்பு, வலதுசாரி சியோனிச இர்குனால் 1946ல் கிங் டேவிட் ஹோட்டல் மீது குண்டு வீசப்பட்டது. இந்த ஹோட்டலிலேயே பாலஸ்தீனத்திற்கான பிரிட்டிஷ் நிர்வாக தலைமையகம் இருந்தது. அது பயங்கரவாதம்.  

1948 ஆம் ஆண்டில், பாலஸ்தீனியர்கள் அவர்களின் நிலங்கள் (இழப்பீடு இல்லாமல்) கொள்ளையடிக்கப்பட்டு அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அது ஒரு பயங்கரவாதம்.

மீண்டும் 1948 ஆம் ஆண்டில், டெய்ர் யாசின் படுகொலை நடந்தது, அங்கு இர்குன் மற்றும் லேஹியைச் சேர்ந்த சியோனிஸ்டுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றனர். அது பயங்கரவாதம்.

பின்னர் 1982 ஆம் ஆண்டில், லெபனான் உள்நாட்டுப் போரின் போது இஸ்ரேலியப் படைகள் மற்றும் அதன் லெபனான் கிறிஸ்தவ கூட்டாளிகளுடன் இணைந்து சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள் முகாம்களில் படுகொலை செய்தது, இதில் 3,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அது பயங்கரவாதம்.

மிக சமீபத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் வசிக்கும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய படைகளின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்களை தினசரி அடிப்படையில் தாக்கி, கொலை செய்து, பிரித்தெடுத்து சிறையில் அடைத்துள்ளனர். அதுதான் தீவிரவாதம்.

யூதர்கள் அல்லாத இஸ்ரேலிய குடிமக்கள் இஸ்ரேல் முழுவதும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறைவான செய்தி. அது பயங்கரவாதம் அல்ல, மாறாக நிறவெறி.

மேற்குக் கரையிலும், அல்-குத்ஸிலும் வாழும் பாலஸ்தீனியர்கள் எல்லா வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதுதான் நிறவெறி.

காஸாவில் வாழும் 2.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையில் மனிதாபிமானமற்ற நிலையில் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பரிதாபகரமான வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதுதான் நிறவெறி.

அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்கள் என்று நீங்கள் எதை அழைத்தாலும், பல ஆண்டுகளாக இஸ்ரேலிய கொள்கைகள் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளன. இஸ்ரேல் ஒரு நிறவெறி நாடாக இருந்து, இப்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பாகிறது.

சியோனிஸ்டுகள் பயங்கரவாதத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்களாகவும், அதை பரப்புபவர்களாகவும் தொடர்ந்து இருந்துவருகின்றன. (Israel’s torture techniques).

இன்று சுமார் 7 மில்லியன் யூத இஸ்ரேலியர்களும் 7 மில்லியன் பாலஸ்தீனியர்களும் மத்திய தரைக்கடல் மற்றும் ஜோர்டான் நதிக்கு இடையில் வாழ்கின்றனர், இது இஸ்ரேல் மற்றும் மேற்கு கரையை (கிழக்கு அல்-குத்ஸ் மற்றும் காஸா உட்பட) உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிகளில், இஸ்ரேல் மட்டுமே ஆளும் சக்தியாக உள்ளது அல்லது வரையறுக்கப்பட்ட பாலஸ்தீனிய சுயாட்சியுடன் முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் கூட இரண்டாம் தர குடிமக்களாகவும், இஸ்ரேலிய குடியுரிமை இல்லாதவர்கள் சிவில் உரிமைகள் இல்லாத "உயிரினங்களாகவும்" பார்க்கப்படுகிறார்கள். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை சிறையில் அடைத்து, பிரித்துள்ளது, அடிமைப்படுத்தியுள்ளது, அவர்கள் பாலஸ்தீனியர்கள் என்பதற்காகவே தவிர, அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக அல்ல. மொத்தத்தில், நிறவெறி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இது எப்படி நடக்கமுடியும்?

இந்த இடத்தில்தான் “புனிதமான” அமெரிக்கா படத்தில் வருகிறது மற்றும் உலகெங்கிலும், குறிப்பாக ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்கள் மற்றும் குண்டுகள் அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன. இதுவும் நிதி உதவியும் அமெரிக்க வரி செலுத்துவோரால் வழங்கப்படும் பணம் ஆகும். இஸ்ரேல் மீதான விமர்சனங்களுக்கு அமெரிக்கா அரசியல் ஆதரவு அளிக்கிறது. இஸ்ரேலின் மோசமான கொள்கைகள் மற்றும் செயல்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 100 வீட்டோக்களை அமெரிக்கா பிறப்பித்துள்ளது. இந்த வீட்டோக்கள் அமெரிக்காவை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்துகின்றன, அவர்கள் களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் அறியாதவர்கள் அல்ல.

கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது அமெரிக்கக் கொள்கைகளில் ஊடுருவியுள்ளது. இஸ்ரேலை விமர்சிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக யூதர்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். எத்தனையோ பேர் வேலை இழந்துள்ளனர். பேச்சு சுதந்திரத்தின் கோட்டைகள் என்று சொல்லப்படும் பல்கலைக்கழகங்களில் கூட, பணக்கார யூத நன்கொடையாளர்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை முறியடிக்காத நிறுவனங்களுக்கு நிதி உதவியை நிறுத்தி வைப்பதன் மூலம் இஸ்ரேலைக் கண்டிக்கும் சிறிய விமர்சனங்களுக்கு கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க அரசியலில் யூதப் பணத்தின் பங்கு மிகவும் பெரியதாக இருக்கும் — அரசியல்வாதிகளுக்கு நிதி ஆதரவை நிறுத்தி வைப்பது மற்றும் இஸ்ரேலிய வழியை மீறாத பிரச்சாரங்கள் ஆதரவு வழங்குவது.

இத்தகைய கண்மூடித்தனமான ஆதரவை அமெரிக்கா எவ்வாறு நியாயப்படுத்துகிறது? மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே ஜனநாயக நாடு, நமது மிகப்பெரிய நட்பு நாடு என்ற இரண்டு பெரிய பொய்களுடன் அரசியலைத் தொடர்கிறது. இஸ்ரேல் எந்த வகையிலும் ஜனநாயக நாடு கிடையாது. இது மிகத்துல்லியமான ஒரு நிறவெறி அரசு. இஸ்ரேலின் உக்ரைன் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான விருப்பமின்மை மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலிருந்தும் கிழக்கு ஜெருசலேமின் சில பகுதிகளை இணைப்பதைத் தவிர்ப்பதற்கும் அமெரிக்க வேண்டுகோளைப் புறக்கணிப்பதிலும் உறுதியாக இருக்கிறது. இது தான் அவர்கள் கொண்டுள்ள நட்பு.

அரேபியர்கள் (மற்றும் முஸ்லிம்கள்) ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு கையாலாகாதவர்களா?

இல்லை, அவர்கள் கையாலாகாதவர்கள் அல்ல, ஆனால் அரபு மற்றும் பெரும்பாலான முஸ்லிம் ஆட்சியாளர்கள் நாட்டு மக்களால் தெரிவுசெய்யப்படாத சட்டவிரோதமானவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் சுயநலவாதிகள். அநேகமானோர் அமெரிக்காவை கண்மூடி பின்தொடர்பவர்கள், அவ்வாறு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் முறைகேடான ஆட்சியாளர்கள் என்ற முறையில், உள்நாட்டு எதிர்ப்பை முறியடிக்கவும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்கள் அமெரிக்காவின் ஆதரவை நம்பியுள்ளனர். நாம் இப்போது கூட்டு காலனித்துவத்தின் ஒரு உலகத்தின் கீழ் வாழ்கிறோம்- அங்கு ஆட்சியாளர்கள் தாங்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற காலனித்துவ சக்திகளின் விருப்பங்களை மீறுவதில்லை.

நிச்சயமாக. அவ்வாறான ஆட்சியாளர்களால் இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பை பின்னுக்குத் தள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியாது, ஆனால் அவர்கள் மிகவும் பயனுள்ள பொருளாதார ஆயுதமான 'பொருளாதாரத் தடைகளைக்' கொண்டுவரலாம். எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) ஏற்றுமதிக்கு அவர்கள் தடை அல்லது கட்டுப்பாட்டை விதிக்கலாம்.

அரேபியர்களும், முஸ்லிம்களும் அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதன் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அமெரிக்கா யாரையும், எதற்கும் தடை விதிக்கிறது. உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) விதிகளை மீறும் பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா ஒரு "முன்னோடியாக" இருந்து வருகிறது, ஒரு நாடு, ஒரு நிறுவனம், ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபருக்கு மட்டுமல்ல, அமெரிக்க தடைசெய்யப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் அமெரிக்க தடைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் தடை விதிக்கிறது.

அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள், குறிப்பாக எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி ஏற்றுமதியாளர்கள், இந்த ஆயுதத்தை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், ஆனால் இஸ்ரேலின் கண்மூடித்தனமான ஆதரவாளரான அமெரிக்காவை அவர்கள் குழப்பிவிடக்கூடாது என்பதற்காக, ஒன்றிணைந்து அதைப் பயன்படுத்த பயப்படுகிறார்கள். 1973 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் மறைந்த மன்னர் பைசல் விதித்த வரையறுக்கப்பட்ட தடையையும், அது அமெரிக்காவில் ஏற்படுத்திய பீதியையாவது அரேபியர்களும் முஸ்லிம்களும் நினைவில் கொள்வது நல்லது.

"பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் துயரமான சம்பவத்தை நாம் காண்கிறோம். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் செய்தது காஸாவில் வாழும் அனைவராலும் இழைக்கப்பட்ட குற்றம், அவர்கள் அனைவரும் பொறுப்பு" என்று காஸா மீதான கொடூரமான இஸ்ரேலிய தாக்குதலை — போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் — ஒரு இஸ்ரேலிய அதிகாரி நியாயப்படுத்தினார். ஏன்? ஏனெனில் அவர்கள் தங்கள் தலைவர்களை தூக்கி எறிந்திருக்கலாம். அப்படியானால், இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிராக செய்ததற்கும் செய்யக்கூடியவற்றுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் பொறுப்பாளிகளா?

இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகளின் வெறியாட்டங்கள் தொடர்கிறது. அமெரிக்க விமானங்கள் மற்றும் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்கிறது. இதனையிட்டு உலகம் அமெரிக்காவை எப்படிப் பார்த்திருக்க வேண்டும்? சமாதானப்பிரியர்களாகவா..?

பேராசிரியர் ஹொசைன் அஸ்கரி ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான எமெரிட்டஸ் பேராசிரியர் ஆவார்.

https://en.mehrnews.com/news/207710/America-descends-into-the-cesspool-of-history

தமிழில்: தாஹா முஸம்மில் 

Sunday, October 29, 2023

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.வில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தியது

How the US has used its veto power at the UN in support of Israel

The US has used its veto power at least 34 times to block UN Security Council resolutions that were critical of Israel.

இஸ்ரேலை விமர்சிக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை தடுக்க அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை குறைந்தது 34 முறை பயன்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையிலான மோதல் குறித்த பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் அக்டோபர் 24, 2023 அன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. [ஷானன் ஸ்டேபிள்டன்/ராய்ட்டர்ஸ்]

காஸாவில் நிலவும் நிலைமை குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற தவறிவிட்டது. இரண்டு போட்டி வரைவு தீர்மானங்கள், உறுப்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டன.

"மனிதாபிமான இடைநிறுத்தங்கள்" மற்றும் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்காவால் வரையப்பட்ட தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரித்தன.

மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவால் அனுசரணையளிக்கப்பட்ட இரண்டாவது வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு போதுமான வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. இந்த தீர்மானத்தை ஒப்புதலுக்கு கொண்டு செல்ல போதுமான வாக்குகளை பெற்றிருந்தால் அமெரிக்கா அதை வீட்டோ செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

"பாலஸ்தீனப் பிரச்சினை உட்பட மத்திய கிழக்கின் நிலைமை" குறித்து உறுப்பினர்களின் தீவிரமான வெளிப்படையான விவாதத்திற்குப் பிறகு இந்த இரண்டு தீர்மானங்களும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் புதன்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.

மூன்று வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடங்கியதிலிருந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இரண்டாவது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வரைவு தீர்மானம் இதுவாகும். முதலாவது கூட்டம் அக்டோபர் 18 அன்று நடைபெற்றது, "மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு" அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன அப்போது அமெரிக்கா தடுத்தது..

இஸ்ரேலை பாதுகாக்கும் அமெரிக்க வீட்டோக்களின் வரலாறு

இந்த மோதலுக்கு மத்தியில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு அமெரிக்க விடையிறுப்பு, இஸ்ரேலை விமர்சிக்கும் அல்லது பாலஸ்தீனிய மாநில அந்தஸ்துக்கு அழைப்பு விடுக்கும் எந்தவொரு தீர்மானங்களையும் தடுக்க அதன் வீட்டோ அதிகாரத்தை அதன் வரலாற்று ரீதியான பயன்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

1945 முதல், இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான மொத்தம் 36 ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வரைவு தீர்மானங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றால் வீட்டோ அதிகாரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதில் 34 முறை அமெரிக்காவும், 2 முறை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரம் பிரயோகம் செய்துள்ளன.

இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை பல தசாப்தங்களாக நீடித்த இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அமைதிக்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காக வரையப்பட்டவையாகும்; இதில் சர்வதேச சட்டங்களுக்கு இணங்குமாறு இஸ்ரேலைக் கோருவது, பாலஸ்தீன மாநிலத்திற்கான சுயநிர்ணய உரிமைக்கு அழைப்பு விடுப்பது அல்லது பாலஸ்தீனர்களை இடம்பெயர்த்ததற்காக இஸ்ரேலைக் கண்டிப்பது அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றம் அமைப்பது ஆகியவை அடங்கும்.

(Al Jazeera)

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் சிரிய கோலன் குன்றுகளை இஸ்ரேல் இணைத்துக் கொண்டது உட்பட மொத்தம் 46 முறை இஸ்ரேல் மீதான தீர்மானங்களை அமெரிக்கா வீட்டோ மூலம் நிராகரித்துள்ளது. வாஷிங்டன் 2019 இல் கோலன் குன்றுகள் மீதான இஸ்ரேலிய இறையாண்மையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது, இது பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை தலைகீழாக மாற்றியது.

1972 வரைவுத் தீர்மானம் - அமெரிக்கா வீட்டோ செய்யாத ஒரே முறை - சுருக்கமாகவும் பொதுவானதாகவும் இருந்தது, "அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தவும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு நலன் கருதி மிகப்பெரிய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும்" அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.

அமெரிக்காவால் முடக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

  • "மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு" அழைப்பு விடுக்கும் அக்டோபர் 18, 2023 தீர்மானம், வடக்கு காஸாவிற்கான வெளியேற்ற உத்தரவை இஸ்ரேல் ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் கூறினார்: "ஆம், தீர்மானங்கள் முக்கியமானவை, ஆம், இந்த கவுன்சில் பேச வேண்டும். எனினும் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் களத்தில் உள்ள உண்மைகளால் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றக்கூடிய நேரடி இராஜதந்திரத்தை ஆதரிக்க வேண்டும்.
  • 2018 ஆம் ஆண்டில், திரும்பி வரும் பெரும் பேரணிக்குப் பிறகு, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை உருவாக்கியது, "பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படைகளால் அதிகப்படியான, முறையற்ற மற்றும் கண்மூடித்தனமான பலத்தைப் பயன்படுத்துவதை" கண்டித்தும், "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்ற இரண்டு ஜனநாயக நாடுகளுடன்" "நீடித்த, விரிவான அமைதிக்கு" அழைப்பு விடுத்தது. ஐ.நா.வுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, "சமீபத்திய வாரங்களில் காஸாவில் என்ன நடந்தது என்பது குறித்து முற்றிலும் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டத்தை" முன்வைத்ததாக கூறியதை அடுத்து, அமெரிக்கா இந்த தீர்மானத்தை வீட்டோ செய்தது.
  • 2017 ஆம் ஆண்டில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பின்னர், ஒரு வரைவு தீர்மானம் , "புனித நகரமான ஜெருசலேமின் தன்மை, அந்தஸ்து அல்லது மக்கள்தொகை கலவையை மாற்றியதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் எந்த சட்ட விளைவையும் கொண்டிருக்கவில்லை, செல்லாது" என்று கூறியது. ஜெருசலேமின் நிலை ஐ.நா.வின் விதிமுறைகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அது கோரியது. யு.என்.எஸ்.சியின் 15 உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்காவைத் தவிர.
  • 2000 ஆம் ஆண்டில் தொடங்கிய இரண்டாவது இன்திபாதா அல்லது எழுச்சியைத் தொடர்ந்து, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் "செப்டம்பர் 2000 முதல் நடந்த துயரமான மற்றும் வன்முறை நிகழ்வுகள் தொடர்வது குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தியது", பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தது மற்றும் இஸ்ரேல் "நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் அதன் சட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்தது. ஐ.நா.வுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் ஜான் நெக்ரோபோன்ட் கூறுகையில், "கவுன்சிலின் பலத்தை மற்றொரு தரப்பினருக்கு பின்னால் வீசும் முயற்சியின் மூலம் மோதலில் ஒரு தரப்பினரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதை இந்த தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார். 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, ஆனால் அமெரிக்கா வீட்டோ செய்தது.
https://www.aljazeera.com/news/2023/10/26/how-the-us-has-used-its-veto-power-at-the-un-in-support-of-israel 

Saturday, October 28, 2023

மேற்குலகுக்கு வழங்கும் எண்ணெய்யை நிறுத்துங்கள், சத்தம் இன்றி யுத்தம் நிற்கும்

 In Israel, Macron endorses Netanyahu’s genocidal war on Gaza


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா
கு, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமைஅக்டோபர் 242023 ஜெருசலேமில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை வரவேற்றார். (ஏபி புகைப்படம்/கிறிஸ்டோப் ஈனாபூல்)

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார். இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு உடனான அவரது கூட்டு செய்தியாளர் சந்திப்பில், நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு பிரெஞ்சு இராணுவ ஆதரவை வெளிப்படையாக உறுதியளித்தார்.

மக்ரோன் பேசியது போல, காஸா மீதான சட்டவிரோதமான, 16 ஆண்டுகால இஸ்ரேலிய முற்றுகைக்கு எதிராக அக்டோபர் 6-7 அன்று கிளர்ச்சி செய்ததற்காக பாலஸ்தீனியர்களை தண்டிக்க இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) பாலஸ்தீனியர்கள் மீது ஒரு இனப்படுகொலைப் போரை நடத்தி வருவதால், 7,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காஸாவின் கட்டிடங்களில் கால் பகுதி தரைமட்டமாக்கப்பட்டது. நெதன்யாகுவுடனான மூடிய கதவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மக்ரோன் இந்த இரத்தக்களரி தாக்குதலுடன் தனது "ஒற்றுமையையும் நட்பையும்" உறுதியளிக்க கேமராக்களின் முன் வந்தார்.

பின்னர் மக்ரோன் பிரான்ஸ் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளை மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பாரிய விரிவாக்கத்தில் ஈடுபடுத்த அழைப்பு விடுத்தார். "ஈராக் மற்றும் சிரியாவில் எங்கள் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச கூட்டணியும் ஹமாஸை எதிர்த்துப் போராட வேண்டும்" என்று அவர் முன்மொழிந்தார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஈரானிய ஆட்சி மற்றும் யேமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் காஸாவுக்கு ஆதரவாக ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது ஒரு "பிராந்திய மோதலுக்கு" வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மக்ரோன் முன்மொழிந்தது காஸாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அனைத்து முக்கிய நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டணியால் தொடுக்கப்படும் ஒரு நவகாலனித்துவப் போர் ஆகும். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகள் இக்கூட்டணியில் இணைந்தன. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரின் பின்னணியிலும், 2003-2011 ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின் போது அமைக்கப்பட்ட நவகாலனித்துவ ஈராக்கிய கைப்பாவை ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அது நகரங்கள், சிவிலியன் இலக்குகள் மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) போராளிப் பிரிவுகள் மீது குண்டுவீசித் தாக்கியது.

மக்ரோனின் முற்றிலும் பொறுப்பற்ற கருத்துக்கள், நேட்டோ மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு முழு அளவிலான போரில் இணையும் என்ற உறுதிமொழிக்கு சமமானதாகும். நேட்டோ ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் இருக்கும் நிலையில், இது ஒருபுறம் நேட்டோ கூட்டணிக்கும் மறுபுறம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையே உலகளாவிய அளவில் ஒரு நேரடி இராணுவ மோதலை விரைவாக தூண்டக்கூடும்.

மக்ரோன் பேசியபோது, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகளுக்கும் வடக்கு இஸ்ரேலில் ஐ.டி.எஃப் துருப்புக்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைகள் அதிகரித்தன, மேலும் எல்லையின் இருபுறமும் உள்ள கிராமங்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. ஹிஸ்புல்லா "முழுமையான தயார் நிலையில் உள்ளது" என்றும், அதைத் தடுக்க இரண்டு விமானம் தாங்கி போர்க் குழுக்களை பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை அனுமதிக்காது என்றும் அதன் இரண்டாவது தலைமை அதிகாரி நைம் காசிம் கூறினார். ரஷ்ய மற்றும் ஈரானிய இராணுவப் படைகள் இருக்கும் சிரியாவில் இலக்குகள் மீது ஐ.டி.எஃப் வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

கடந்த வாரம், ஈரானிய உச்ச தலைவர் ஆயத்துல்லா செய்யிதலி காமனெய், காஸாவுடனான இனப்படுகொலை இஸ்ரேலிய போரை தொடர்ந்து தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கு நாடுகள் போரில் பரந்த அளவில் நுழைவதைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூறினார், "சியோனிச [இஸ்ரேலிய] ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்தால், முஸ்லிம்களும் எதிர்ப்பு சக்திகளும் பொறுமையிழந்து போவார்கள், அவற்றை யாராலும் தடுக்க முடியாது ... காஸா மீதான குண்டுவீச்சு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன், ஹமாஸை ஆதரிப்பதற்கான எந்தவொரு ஈரானிய இராணுவ நடவடிக்கைக்கும் எதிராக அமெரிக்க படைகள் "விரைவாகவும் தீர்க்கமாகவும்" தலையிடும் என்று உறுதியளித்தார். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் எண்ணெய் தொழில்துறை மீது வான்வழித் தாக்குதல்களை அச்சுறுத்தியுள்ளனர். இது ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நேட்டோ மோதலுக்கான வாய்ப்பை நேரடியாக அதிகரிக்கிறது, இது 2021 இல் ஈரானுடன் பரஸ்பர இராணுவ உதவியை உறுதியளிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது இப்போது சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய ஆதாரமாகும்.

மக்ரோனுடனான செய்தியாளர் சந்திப்பில், நெதன்யாகு "ஹமாஸ், ஈரான் மற்றும் ஹவுத்திகள்" மற்றும் ஹெஸ்பொல்லா ஆகியவற்றை உள்ளடக்கிய "தீய அச்சுக்கு" எதிராக போர் தொடுக்கப்போவதாக அச்சுறுத்தினார். காஸா மீதான ஐ.டி.எஃப் தரைவழி ஆக்கிரமிப்பிற்கு எதிராக தலையிட்டால் "பயங்கரமான விளைவுகள்" இருக்கும் என்றும் "ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பேரழிவு கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்" என்றும் கூறிய அவர், ஐ.டி.எஃப் பாரிய லெபனான் சிவிலியன் உயிரிழப்புகளை தூண்டும் என்று சுட்டிக்காட்டினார்: "(ஹிஸ்புல்லா) ஹமாஸ் போன்ற சிவிலியன் மக்களில் தங்களை உட்பொதித்துக் கொண்டிருப்பதால், நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

மக்ரோன் அரசாங்கமும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளும் ஒட்டுமொத்தமாக அண்மைக்-கிழக்கு முழுவதிலும் உள்ள மக்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனைக்கான இனப்படுகொலை முறைகளால் தொடுக்கப்படும் ஒரு போரை ஆதரிக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர் மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு ஆகியவற்றிற்குப் பின்னர், நேட்டோ சக்திகளால் பிராந்தியத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவகாலனித்துவ போர்களின் இறுதி விளைபொருளாகும். நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இடைவிடாத ஆக்கிரமிப்பு, 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர், உலகை ஒரு மூன்றாம் உலகப் போரில் மூழ்கடித்து வருகிறது.

வெட்கமின்றி பொய் கூறும் மக்ரோன், மத்திய கிழக்கு முழுவதும் இராணுவ விரிவாக்கத்திற்கான தனது அரசாங்கம் மற்றும் நேட்டோ கூட்டணியின் ஆதரவை பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராக சித்தரித்தார். "போராட்டம் இரக்கமின்றி நடத்தப்பட வேண்டுமே தவிர, விதிகள் இல்லாமல் நடத்தப்படக் கூடாது. பயங்கரவாதிகள், போர் விதிகளை மதிக்கும், மனிதாபிமான அணுகலை உறுதி செய்யும் ஜனநாயக நாடுகள் மீது போர் தொடுக்கும் ஜனநாயக நாடுகள் நாம் காஸாவிலோ அல்லது வேறு எங்கும் பொதுமக்களை குறிவைக்காத ஜனநாயக நாடுகள் நாங்கள், என்ற பொய்யை அவிழ்த்துவிட்டார்.

காஸாவிற்கு எதிராக ஒரு "இராணுவ மற்றும் அசைக்க முடியாத பதிலை" பரிந்துரைக்கும் மக்ரோன், பாலஸ்தீன மக்களுக்கு "ஒரு நிலப்பரப்பையும் ஒரு அரசையும்" வழங்குவதற்காக "பாலஸ்தீனியர்களுடன் ஒரு அரசியல் முன்னெடுப்பை ஒரு தீர்க்கமான மறுதொடக்கம்" செய்ய விரும்புவதாகக் கூறினார்.

உண்மையில், மக்ரோன் காஸாவின் ஒடுக்கப்பட்ட, பெரும்பாலும் பாதுகாப்பற்ற மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு போரை பாராட்டினார். இஸ்ரேல் 2007 முதல் அதன் முற்றுகை சட்டவிரோதமானது என்ற ஐ.நா.வின் தீர்ப்புகளை மீறி காஸாவை முற்றுகையிட்டுள்ளதுடன், மோதலின் முதல் இரண்டு வாரங்களில், வறிய பகுதிகளுக்கான அனைத்து நீர், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றையும் தடுத்தது. கடந்த வாரம் அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு, நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை பலி வாங்கியது, காஸா மீதான போரின் காட்டுமிராண்டித்தனமான தன்மையை அம்பலப்படுத்துகிறது.

காஸாவின் 35 மருத்துவமனைகளில் 12 மருத்துவமனைகள் உட்பட, அதன் 72 சுகாதார வசதிகளில் மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் இல்லாததால் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) நேற்று தெரிவித்தது. இன்குபேட்டர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் குறைப்பிரசவக் குழந்தைகள் உயிரிழக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிகபட்சம் ஒரு நாள் மின்சாரம் மிச்சமிருக்கிறது.

மக்ரோனே இந்த உண்மையை சுருக்கமாக ஒப்புக்கொண்டார், அவரும் நெதன்யாகுவும் "நீண்ட நேரம் பேசினார்கள் மருத்துவமனைகளில் மின்சார விநியோகத்தை மீண்டும் நிறுவுவது பற்றி, அதை போருக்கு பயன்படுத்த முடியாது."

எவ்வாறெனினும், அத்தகைய அறிக்கைகள், நெதன்யாகுவை ஆதரிப்பதால், அவர் பொதுமக்கள் மீது போர் தொடுக்கிறார் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்கிறார் என்பதை பிரெஞ்சு அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது என்பதை மட்டுமே தெளிவுபடுத்துகிறது. IDF போர் விதிகளை மதிக்கிறது மற்றும் காஸாவிற்கு மனிதாபிமான அணுகலை வழங்குகிறது என்று மக்ரோன் வலியுறுத்தும் நிலையில், அவர் உண்மையில் பிரான்ஸ் மற்றும் உலக மக்களுக்கு வேண்டுமென்றே பொய் சொல்கிறார்.

காஸாவில் வசிக்கும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற சட்டவிரோத உத்தரவை பிறப்பித்துள்ள நெதன்யாகுவை அங்கீகரிப்பதன் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதியை விரும்புவதாக மக்ரோனின் கூற்று அபத்தமானது. உண்மையில், 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் பாசிச அரசாங்கங்கள் எளிதில் புரிந்துகொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு முறைகள் மூலம் பாலஸ்தீனிய பிரச்சினையை "தீர்க்கும்" ஒரு முயற்சியை அவர் பாதுகாக்கிறார்.

இது அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் காஸா போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களின் அலையைத் தூண்டியுள்ளது. காஸாவிற்கு எதிரான கொடூரமான தாக்குதலை நிறுத்துவதற்கும், மூன்றாம் உலகப் போரில் ஏகாதிபத்திய சக்திகளின் கீழ்நோக்கிய சுழலைத் தடுப்பதற்கும் ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும்.

இதில், "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என்று பரவலாக வெறுக்கப்படும் ஒரு வங்கியாளரான மக்ரோனுடன் எந்த அரசியல் சமரசங்களும் இருக்க முடியாது. இந்த வசந்தகாலத்தில் அவரது பெரிதும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தாக்குவதற்கு தனது கலகக் காவல்துறையை அனுப்பியதன் மூலம் அவர் வெளிப்படுத்தியபடி, மக்ரோன் அரசாங்கம் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவும் நனவுடனும் ஆட்சி செய்கிறது. சமூக செல்வத்தை தொடர்ந்து போர் செலவினங்களுக்கு திருப்பிவிடுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஒரு பேரழிவுகரமான உலகளாவிய போரை நிறுத்துவதற்கும், அவரது அரசாங்கத்தை கவிழ்க்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

https://www.wsws.org/en/articles/2023/10/25/ikfo-o25.html

(தமிழில்: தாஹா முஸம்மில்)