Contributors

Monday, October 10, 2022

இஸ்லாமோஃபோபியாவை தோற்கடிக்க இஸ்லாமிய ஒற்றுமை இன்றியமையாதது

 Islamic Unity Vital for Defeating Islamophobia


By: Seyyed Ali Shahbaz

மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்


 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; (3:103)

இங்கு எல்லாம் வல்ல படைப்பாளனின் வார்த்தைகள் மிகத் தெளிவாக உள்ளன. ஈமான் கொண்டோர் பிரிவுகளாகப் பிளவுபடாமல், உறுதியான உம்மாவாகப் பிணைந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட புனித குர்'ஆன் வசனம் தொடர்ந்தும் இவ்வாறு கூறுகிறது:

وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

குறிப்பிட்ட புனித குர்ஆனின் வசனம் எந்த மயக்கமும் அற்ற மிகத்தெளிவான ஒன்றாகும். மனிதகுலம் முழுவதற்குமான மகோன்னத நபித்துவத்தை நிறைவுசெய்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது 23 வருட நபித்துவ வழிகாட்டலுக்குப் பின் முஸ்லிம்களை இருட்டில் விட்டுவிட்டு செல்லவில்லை.

காத்தமுன் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில் தனது உம்மத்தை நோக்கி இவ்வாறு கூறினார்கள்:

إنّي تاركٌ فيكُم الثَقَلَيْن كتابَ الله وَعِتْرَتي أهلَ بَيْتي ما إِنْ تَمَسَّكْتُمْ بهما لَنْ تَضلُّوا أبَداً وإنّهما لَنْ يَفْتَرِقا حَتى يَرِدا عَلَيَّ الحَوْضَ

"நான் உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களைவிட்டுச் செல்கிறேன். அவையாவன அல்லாஹ்வுடைய வேதமும், எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துமாகும். அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். இவ்விரண்டும் ஹவ்ழுல் கௌஸர் (எனும் சுவனத்தின் நீர்தடாகத்தில் நீர் அருந்த) என்னிடம் வரும்வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியமாட்டாது".

(ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதி, சுனனுத் தாரமீ, முஸ்னத் அஹமத் மற்றும் அல்-முஸ்தத்ரக் லில் ஹாகிம்)

ஷீஆ -  சுன்னாஹ் பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் பதியப்பட்டுள்ள நபிகளாரின் இந்த பிரபலமான ஹதீஸ் "அல்லாஹ்வின் கயிறு" என்பதன் வரைவிலக்கணத்தை சந்தேகமற தெளிவுபடுத்துகிறது.


ஒரு இழை கயிறு என்று அழைக்கப்படுவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம், இது அரபு, தமிழ் அல்லது ஆங்கிலம் உட்பட எந்த மொழியின் அகராதிகளின்படி, கயிறு என்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுதியான இழைகள் ஒன்றோடொன்று இறுக்கமாக முறுக்கப்பட்ட அல்லது ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

ஆகவே, சன்மார்க்க விரிவுரையாளர்களது விளக்கங்களின் அடிப்படையில், அல்லாஹ்வின் கயிறு என்பது புனித குர்ஆனும் ஆசீர்வதிக்கப்பட்ட அஹ்ல் அல்-பைத்தும் ஆகும். அவை இரண்டும் மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக இறுக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன என்று குறிப்பிட்ட ஹதீஸ் கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழிகாட்டுதலுக்கு திருக்குர்ஆன் மட்டும் போதுமானது அஹ்ல் அல்-பைத்தின் அவசியமற்றது என்று யாராவது கூறினால், இந்த ஹதீஸின் அடிப்படையில் அவர் தவறான பாதையில் இருக்கின்றார் என்றே அர்த்தப்படும். அவ்வாறானோர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் மற்றும் றஸூலுக்கும் கீழ்ப்படியாதோர் ஆகும்.

இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சொர்க்கத்தை நோக்கிய நேரான மற்றும் சரியான பாதையை கடைபிடித்தல், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, நடைமுறை வழிகாட்டிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது அவசியம், அவர்கள் இறை நியதிக்கமைய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் தவறுகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டவர்கள்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, இஸ்லாம் வெறுமையாவதிலிருந்து காப்பாற்றப்படுவதற்காகவும் அதன் தெய்வீக உள்ளடக்கங்களிலிருந்து பயன்பெறுவதற்காகவும், புனித குர்'ஆணை கிஞ்சத்தும் பிசகாமல் தம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட அஹ்ல் அல்-பைத் இனது வழிகாட்டல்,  நாம் வழி தவறி செல்வதில் இருந்து எம்மைக் காப்பாற்றுகிறது. இமாம்களின் ஞானம், அறிவு, இறையச்சம், வழிபாடு, பொறுமை, வீரம், பேச்சாற்றல், சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, அரசியல் சாமர்த்தியம், நிர்வாகம், நீதி உணர்வு, சுய தியாகம் ஆகியவற்றால் அஹ்ல் அல்-பைத் இன் வாழ்க்கை நிறைந்துள்ளது; இதற்கு கர்பலா முதன்மையான உதாரணம்.

அதனால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிரியாவிடை ஹஜ் யாத்திரையின் போது அரஃபா தினத்தன்று (9வது துல்-ஹஜ்) அரஃபா சமவெளியில் கருணை மலையில் (ஜபல் அர்-ரஹ்மா) தனது பிரசங்கத்தில் தொடங்கி, அவரது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை ஹதீஸ் தக்கலைனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜ்ரி 10, துல்-ஹஜ் 18 அன்று கதீர்-கும் நிகழ்வு, அதற்கு சிகரம்தொட்ட தருணமாக இருந்தது.

எனவே, இஸ்லாமிய ஒற்றுமை வாரத்தை அனுஷ்டிக்கும் நாம், இஸ்லாத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான ஒரே இடம், அனைத்து பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தக்கலைனின் தளமாகும் என்று நம்புகிறோம். அல்லாஹ்வின் உறுதியான கயிறு என்பது அனைத்து மனிதகுலத்திற்கும் அல்லாஹ்வினால் வெளிப்படுத்தப்பட்ட இறுதி வார்த்தை (புனித குர்ஆன்) மற்றது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அஹ்ல்-பைத் ஆகும்.

இஸ்லாமிய ஒற்றுமை வாரம் என்பது அஹ்லுஸ்ஸுன்னாஹ் மற்றும் அஹ்லுஸ் ஷீஆ முஸ்லிம்களால் ரபி அல்-அவ்வல் மாதத்தின்  இரண்டு தேதிகளை முறையே 12-17 ஆகிய தினங்களை உள்ளடக்கிய நாட்களை காருண்ய தூதரின் பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்.

சுன்னத் வல் ஜமாத்தினர் றஸூலுல்லாஹ்வினது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அவருடன் பழகிய நபித் தோழர்களின் அறிவிப்பின்படி, ரபீயுல் அவ்வல் 12ம் நாளை றஸூலுல்லாஹ்வின் பிறந்ததினமாக கருதும் அதே வேளை ஷியா முஸ்லிம்கள் அஹ்ல் அல்-பைத், குடும்ப அறிவிப்பின்படி ரபி அல்-அவ்வல் 17 அன்று றஸூலுல்லாஹ்வின் பிறந்ததினமாக கருதுகின்றனர்.

ஆயினும்கூட, அனைத்து இஸ்லாமியர்களும், அவர்களது சிந்தனைப் பள்ளி எதுவாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் ஒரே படைப்பாளனான அல்லாஹ்வையே வணங்குகிறார்கள், மேலும் இஸ்லாத்தின் உலகளாவிய பணியின் இறுதி மற்றும் முத்திரை தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கருதுகின்றனர். மேலும், அவர்கள் புனித குர்ஆனை அனைத்து மனிதகுலத்தின் வழிகாட்டுதலுக்கான இறுதி வெளிப்பாடாகக் கருதுகின்றனர்.


அனைத்து முஸ்லிம் பிரிவுகளுக்கும் ஐந்து நேர தொழுகையின் போது முன்னோக்கும் கிப்லா மக்காவில் உள்ள புனித காபா ஆகும். மேலும், அவர்கள் துல்-ஹஜ் மாதத்தின் அதே தினங்களில் வருடாந்திர ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் கடமையான நோன்புகளை ஒன்றாகவே கடைப்பிடிக்கின்றார்கள்.

இந்த மறுக்க முடியாத உண்மைகளின் அடிப்படையில், பிற மதங்களின் பல்வேறு பிரிவுகளைப் போலல்லாமல், முஸ்லிம்களிடையே பெரிய வேறுபாடுகளைக் காண முடியாது. சுன்னி அல்லது ஷியா முஸ்லிம்களில், இரண்டாம் நிலை விடயங்களில் மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றன, அந்த வேறுபாடுகள் கூட பகுத்தறிவுடன் கையாளப்பட்டால், இஸ்லாமிய உலகின் ஒருமைப்பாட்டுக்கு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் தடைகள் எதுவும் கிடையாது.

எனவே, இஸ்லாமியப் புரட்சியின் தந்தை, இமாம் கொமெய்னி (ரஹ்), 1979ம் ஆண்டில், முஸ்லிம் உம்மா அற்பமான வேறுபாடுகளில் சிந்தனையை சிதறடிக்காமல் இருப்பதற்காக, அவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இஸ்லாமிய ஒற்றுமை வாரத்தைத் பிரகடனப்படுத்தினார், அன்று தொடக்கம் ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகம் முழுவதும் ஒற்றுமையின் செய்தியை பரப்பி வருகிறது.

முஸ்லிம்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுபட விடவே  கூடாது என்று திட்டமிட்டு இஸ்லாம் விரோத சக்திகள் முஸ்லிம்களின் பெயராலேயே பல பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, போஷித்து வருகின்றன என்பது ரகசியமல்ல. ஆனாலும் சில முஸ்லிம்கள் அப்பாவித்தனமாக அவர்களின் சதித்திட்டங்களில் சிக்கிவிடுகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப்பின் உம்மத்திற்கு என்ன நேரிடும் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள், பல சந்தர்ப்பங்களில் தனது தோழர்களிடம் பின்வருமாறு வலியுறுத்தினார்கள்::

எனது அஹ்லுல் பைத்தின் அந்தஸ்து நூஹு நபி (அலை) அவர்களின் ஓடத்தைப் போன்றது. அதில் ஏறியவர்கள் காப்பாற்றப்பட்டனர், பின்தங்கியவர்கள் நீரில் மூழ்கினர்.

(கடற்பயணம் செல்வோருக்கு) நட்சத்திரங்கள் வழிகாட்டிகளாய் அமைந்துள்ளது போன்று, எனது அஹ்ல்-பைத் பூமியிலுள்ள மக்களுக்கு வழிகாட்டிகளாய் உள்ளனர்."

"உடலுக்குத் தலையும், தலைக்கு கண்களும் இருப்பது போல என் அஹ்லுல் பைத் உங்களுக்கு இருக்கட்டும், ஏனென்றால் தலையின்றி உடல் செயல்படாது; கண்கள் இன்றி தலையை வழிநடத்த முடியாது."

முஸ்லிம்களின் எதிர்காலமும் அவர்களது சுபீட்சமும் இஸ்லாமிய ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.

https://kayhan.ir/en/news/107581/islamic-unity-vital-for-defeating-islamophobia

Wednesday, October 5, 2022

ஈரானில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது...? விளக்கிக் கூறுகிறார் இஸ்லாமிய புரட்சியின் தலைவர்

Recent bitter events in Iran are a US plot:

It is not about hijab, it is about a strong, independent Iran


ஈரானில் இடம்பெற்ற சமீபத்திய கசப்பான நிகழ்வுகள் அமெரிக்காவின் சதி: இது ஹிஜாப் பற்றியது அல்ல, இது வலுவான, சுதந்திரமான ஈரானைப் பற்றியது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் பயிலுனர்களுக்கான கூட்டு பட்டமளிப்பு விழாவில் ஆயுதப் படைகளின் பிரதம தளபதி இமாம் காமனெய் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள்:

"நாட்டில் அண்மையில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களின்போது, சட்ட அமலாக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பாசிஜ் துணை ராணுவ தன்னார்வப் படை மற்றும் ஈரானிய தேசத்தவர்கள் மற்றவர்களை விட அதிகமாக பாதிப்புக்குள்ளாகினர். இதற்கு முன் இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்ததைப் போலவே இந்த நிகழ்விலும் ஈரானிய தேச மக்கள் மிகவு உறுதியாக இருந்தனர், இனிமேலும் அவ்வாறே இருப்பர்."

"இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் உயிரிழந்தது கவலைத் தரும் விடயமாகும், இது எங்கள் இதயங்களையும் உறுத்துகிறது. ஆனால் இந்த சம்பவத்தின் எதிர்வினை சாதாரணமானதோ அல்லது இயல்பானதோ அல்ல. எந்த விசாரணையும் இன்றி, என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாமல், பாதுகாப்பின்மையை உருவாக்க சில தீய சக்திகளின் தூண்டுதலால் சிலர் தெருக்களில் இறங்கினர். குர்ஆனை எரித்தனர். அவர்கள் ஹிஜாபை கழட்டியெறிந்தனர். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் (ஹுசைனியாக்கள்) மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இவை திட்டமிடப்பட்ட கலவரங்கள். “இந்த இளம்பெண்ணின் சம்பவம் நடக்கவில்லை என்றால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் கலவரத்தை ஏற்படுத்த வேறு ஒரு காரணத்தை உருவாக்கி இருப்பார்கள்”

இஸ்லாமிய புரட்சியின் தலைவர், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளில் வெளிநாட்டினர் ஆற்றிய பங்கு பற்றிப் குறிப்பிட்டார். "ஈரானில் சமீபத்திய கலவரங்களும் அமைதியின்மையும் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் என்று நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்; அபகரிக்கும், போலியான சியோனிச ஆட்சி; அவர்களின் கூலிப்படையினர்; அவர்களுக்கு உதவிய வெளிநாட்டில் உள்ள சில தேசத்துரோக ஈரானியர்கள் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கலவரங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்களுக்கு நினைவூட்டுகையில். “உலகில் பல கலவரங்கள் நடக்கின்றன. அவ்வப்போது, ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில், பாரிஸில் பெரும் கலவரங்கள் நடக்கின்றன. ஆனால் அமெரிக்க அதிபரோ அல்லது அமெரிக்க பிரதிநிதிகள் சபையோ கலவரக்காரர்களை ஆதரித்து எப்போதாவது அறிக்கை வெளியிட்டதுண்டா? நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்று அவர்கள் செய்தி அனுப்பியதாக ஏதேனும் பதிவு உள்ளதா? அமெரிக்க முதலாளித்துவத்துடன் தொடர்புடைய வெகுஜன ஊடகங்களும், சவுதி போன்ற பிராந்தியத்தில் உள்ள சில அரசாங்கங்கள் போன்ற அமெரிக்க கைக்கூலிகளும் அந்நாடுகளில் கலவரக்காரர்களை ஆதரிப்பதாக வெளியான ஏதேனும் பதிவுகள் உள்ளதா? கலகக்காரர்களின்  இணையத்திற்கான வன்பொருள் அல்லது மென்பொருளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்ததற்கு ஏதேனும் பதிவுகள் உள்ளதா? ஆனால் ஈரானுக்கு எதிரான இத்தகைய கலவரங்களை ஊக்குவிப்பதற்கான ஆதரவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன.

ஒரு யுவதியின் மரணத்திற்கு அமெரிக்க அதிகாரம் வருத்தப்படுவது போன்று நடிப்பது நயவஞ்சகமாகும். (ஈராக், லிபியா, சிரியா, ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த அமெரிக்க அதிகாரத்திற்கு இந்த யுவதியின் உயிர் ஓர் பொருட்டே அல்ல). இஸ்லாமிய ஈரானில் கொந்தளிப்பை உருவாக்க ஒரு காரணம் கிடைத்துள்ளதையிட்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள்.

"நாட்டில் கலவரம் மற்றும் அமைதியின்மையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வெளி நாடுகளின் நோக்கம் என்ன? எமது நாடு ஒரு விரிவான மற்றும் பலவாய்ந்த சக்தியாக முன்னேறி வருவதை அவர்கள் உணர்கிறார்கள், இந்த வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை."

குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் ஈரானின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் பிரச்சினைகளை தோற்றுவித்து, நாட்டின் அதிகாரிகளின் கவனத்தை அதன்பால் திருப்பி, இஸ்லாமிய ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கும் திட்டங்களை வடிவமைத்துள்ளன. இது குறித்து தலைவர் கூறியதாவது, “அவர்கள் வடமேற்கிலும் மற்றும் தென்கிழக்கிலும் வாழும் ஈரானிய மக்களை தவறாக எடைபோட்டுள்ளனர். நான் பலூச் மக்கள் மத்தியில் வாழ்ந்துள்ளேன், அவர்கள் இஸ்லாமிய குடியரசிற்கு மிகவும் விசுவாசமான மக்கள், குர்திஷ் மக்களும் அவ்வாறே; அவர்கள் தங்கள் தாயகத்தையும் இஸ்லாத்தையும் மிகவும் நேசிக்கின்றனர். வழிதவறிய இந்த கலகக்காரர்கள் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, எதிரிகளின் திட்டம் ஒருபோதும் பலிக்காது.

இமாம் கமேனி மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா இஸ்லாமிய குடியரசிற்கு மட்டும் எதிரானது அல்ல சக்திவாய்ந்த, சுதந்திரமான ஈரானுக்கு எதிரானது. "பால் கறக்கும் பசுவைப் போல் தங்கள் கட்டளைகளுக்கு அடிபணிந்த பஹ்லவி காலத்து ஈரானை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்" என்றும் அவர் விளக்கினார்.

ஒரு இளம் பெண்ணின் மரணமோ அல்லது ஹிஜாப் அல்லது முழுமையற்ற ஆடையோ இங்கு பிரச்சினை அல்ல. ஹிஜாபை சரியாகப் பேணாத பல பெண்கள் இஸ்லாமிய குடியரசின் உறுதியான ஆதரவாளர்களாக உள்ளனர், மேலும் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். இன்றைய பிரச்சினையும் விவாதமும் இஸ்லாமிய ஈரானின் சுதந்திரம், எதிர்ப்பு சக்தி, வலிமை மற்றும் அதிகாரம் பற்றியதாகும்.

இஸ்லாமியப் புரட்சித் தலைவர், நாட்டில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்குக் காரணமானவர்கள் குறித்தும் பேசினார். கலவரங்களை உருவாக்குபவர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியானோர் அல்ல; இணையத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து உற்சாகத்தால் தெருவில் இறங்கும் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். சில புணருத்தாபன நடவடிக்கை மூலம், இந்த மக்களுக்கு அவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்த முடியும். முனாஃபிக்கீன், பிரிவினைவாதிகள், முடியாட்சிவாதிகள் மற்றும் வெறுக்கப்பட்ட சவாக்கின் குடும்பங்கள் உறுப்பினர்களின் போன்ற இஸ்லாமிய குடியரசின் வெறுப்புக்கு ஆளானவர்களில் எஞ்சியவர்களான தெருக்களுக்கு வரும் மற்றவர்களும் உள்ளனர். பொது சொத்துக்களை சேதப்படுத்துவதிலும், பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதிலும் அவர்கள் எவ்வளவு பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதன் விகிதத்தில் நீதித்துறை அவர்களின் தண்டனையை தீர்மானிக்க வேண்டும்.

புரட்சித் தலைவர் குறிப்பிட்ட மற்றொரு பிரச்சினை அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவின் நிலை மிக மோசமானது. [அந்த நாட்டில்] கல்விக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இஸ்லாமிய ஈரானில் "உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு" ஒரு பெரிய நன்மை என்பதை இமாம் கமேனி வலியுறுத்தினார்.  “எங்கள் பாதுகாப்பு மற்றவர்களை நம்பாமல் நாட்டின் வளங்களைக்கொண்டு முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து கொண்டு மற்றவர்கள் அளிக்கும் பாதுகாப்பிலிருந்து இந்தப் பாதுகாப்பு முற்றிலும் வேறுபட்டது. பால் கறக்கும் பசுவாக நாம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.”

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு அல்லாஹ்வின் சக்தியை நம்பியதன் விளைவாகும் மேலும் காலத்தின் இமாமின் ஆசீர்வாதமும் அதற்குண்டு. மேலும், “ஒருவர் அந்நிய சக்திகளை நம்பினால், அதே அந்நிய சக்திகள் ஒரு நாள் அவர்களை கைவிட்டு விடும். ஏனென்றால் அந்த அந்நிய சக்திகளின் நோக்கம் பாதுகாப்பு வழங்குவதல்ல, அவற்றால் பாதுகாக்கவும் முடியாது.

இஸ்லாமியப் புரட்சித் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் இராணுவ கல்விச்சாலைகள் மற்றும் ஆயுதப்படை அமைப்புகளில் பல ஆயிரம் இளைஞர்கள் எவ்வாறு ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் இணைகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். இது ஆர்வமூட்டும் பெரும் பலம்வாய்ந்த மற்றும் நல்ல செய்தியாகும், இது நாட்டிற்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகிறது என்று அவர் கூறினார். மேலும், "பல்வேறு அறிவியல் துறைகளிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும், நாட்டின் ராணுவப் படைகளிலும் ஈரானிய இளைஞர்கள் சிறந்து விளங்குவது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது" என்றார்.


இஸ்லாமியப் புரட்சித் தலைவர் இமாம் காமனெய் அவர்களின் உரைக்கு முன், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் பாக்கரி நாட்டின் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகையில், "அறியாமை அல்லது பாதுகாப்பின்மையை உருவாக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் சிலரின் இயக்கங்கள், சத்தியத்தின் முன்னால் கெளரவமான ஈரானின் பெருமைமிக்க தேசாபிமான மக்கள் இயக்கத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். மேலும், "முன்நோக்கு மற்றும் செயலூக்கமான எதிர்ப்பு சக்தி மூலோபாயத்தை செயல்படுத்துவதில் மக்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் தீவிரமாக பங்கேற்பதில் ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறினார்

https://english.khamenei.ir/news/9182/Recent-bitter-events-in-Iran-are-a-US-plot-It-is-not-about-hijab


Saturday, October 1, 2022

உலகப் பெருங் கவிஞர் ஜலால் அத்-தின் ரூமி பற்றி அறியாததை அறிவோம்

Iran marks National Day of Rumi, greatest mystical poet

ஈரானிய நாட்காட்டியில் செப்டம்பர் 30ம் நாள் மாபெரும் ஈரானிய கவிஞர் ஜலால் அத்-தின் முஹம்மது ரூமியை நினைவுகூரும் நாளாக, ஈரானியர்களின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வாகவும் கருதப்படுகிறது,

பாரசீக மண்ணானது எண்ணற்ற புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் கவிஞர்களின் தொட்டிலாகும். மிகவும் பிரபலமான ஈரானிய கவிஞர்களில் ஜலால் அத்-தின் முஹம்மது பால்கியும் ஒருவர் ஆவார், அவர் மவ்லானா, மௌலவி மற்றும் மிகவும் பிரபலமாக ரூமி என்றும் அழைக்கப்படுகிறார்.

ஈரானில் அவர் மௌலானா என்றும் துருக்கியில் மெவ்லானா என்று பிரபலமாக அறியப்படுகிறார். மௌலானா என்பது "எங்கள் எஜமானர்" என்று அர்த்தப்படும் அரபு சொல்லாகும், இப்பிராந்தியத்தில் அவர் பொதுவாக இந்த பெயர்களைக் கொண்டே அறியப்படுகிறார்.

துருக்கி புகாஇஸ்மிறில் அமைக்கப்பட்டுள்ள  23 மீட்டர் உயரமான ரூமியின் சிலை

1207 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, அப்போதைய பாரசீகப் பேரரசின் கிழக்குக் கரையில் (இப்போது அது ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான பால்க் நகர்) பாரசீக மொழி பேசும் தாய் தந்தையருக்கு ரூமி பிறந்தார், இறுதியாக இப்போது துருக்கியில் உள்ள கொன்யா நகரில் குடியேறினார்.

ரூமியின் வாழ்க்கைக் கதை இன்பமும் துன்பமும், சூழ்ச்சியும் நெகிழ்ச்சியும், ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளும் கலந்த விசித்திரமும் நிறைந்த ஒன்றாகும். ரூமி வசீகரமானவர், ஒரு பிரபுத்துவ குடும்ப பின்னணியைக் கொண்டவர், ஒர் இறையியல் மேதை, ஒரு சட்டப் பேரறிஞர் மற்றும் ஒரு புத்திசாலித்தனமான, நிதானம் தவறாத பண்பட்ட ஒருவராக இருந்தார். அவர் தனது முப்பதுகளின் பிற்பகுதியில் கொன்யாவின் தெருக்களில் ஷம்ஸ் என்ற பெயரில் அலைந்து திரிந்த ஒரு உன்னதமான மனிதரை சந்தித்தார்.

ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் அமைந்துள்ள ஷம்ஸ் தப்ரிஸியின் கல்லறை

ரூமியும் ஆன்மீகவாதியான ஷம்ஸும் பல மாதங்களாக மிக நெருக்கமாக இருந்தனர்; இதன் காரணமாக, ரூமி தனது சீடர்களையும் குடும்பத்தினரையும் புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது உறவினர்களும் சீடர்களும் கலக்கமடைந்தனர், ஷம்ஸை ஊரைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர், 1246 இல் ஷம்ஸ் நகரத்தை விட்டு வெளியேறினார். ரூமியினால் இந்தப்பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை,  மனம் உடைந்தார், வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இன்றி வாழத் தொடங்கினார்.

ரூமியின் நிலை கண்டு கவலையடைந்த அவரது மூத்த மகன் சுல்தான் வாலாட், இறுதியில் ஷம்ஸை சிரியாவிலிருந்து அழைத்து வந்தார். எவ்வாறாயினும், ஷம்ஸுடன் ரூமியின் நெருங்கிய உறவை குடும்பத்தால் சகித்துக்கொள்ள முடியவில்ல.

1247 இல் ஒரு இரவு ஷம்ஸ் திடீரென மறைந்துவிட்டார். உண்மையில் ஷம்ஸ் கொலை பட்டிருந்தார் என்பது 20 ஆம் நூற்றாண்டில், நிறுவப்பட்டது. இந்தக் கொலை ரூமியின் மகன்கள் அறியவே இடம்பெற்றிருந்தது என்பது புலனாகியது. அவர்கள் ஷம்ஸின் உடலை அவசரமாக கோன்யாவுக்கு எடுத்துச் சென்று ஒரு கிணற்றின் அருகே புதைத்தனர்.

ஷம்ஸின் மறைவைத் தொடர்ந்து, ரூமி தாங்கொனா துயரத்தில் ஆழ்ந்தார். இந்தத் துயரத்தில் இருந்து வெளிவர ரூமிக்கு நீண்ட காலம் எடுத்தது. பிறகு அந்த மன வலியிலிருந்து படிப்படியாக வெளியேறிய ரூமி கிட்டத்தட்ட 70,000 கவிதைகளை பாரசீக மொழியில் வடித்தார். இவை இரண்டு காவிய புத்தகங்களில் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயிரக்கணக்கான கவிதைகளில், சுமார் 2,000 நாலடி கவிதைகள் அடங்கும், இரண்டு காவிய புத்தகங்களில் சேகரிக்கப்பட்ட காவியங்கள் ஒன்றின் முதல் தொகுப்பு, அவரது வழிகாட்டியான திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தொகுப்பை முடிக்க அவருக்கு சுமார் 15 ஆண்டுகள் தேவைப்பட்டது.

திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸியின் கையெழுத்துப் பிரதி

திவான்-இ ஷம்ஸ்-இ தப்ரிஸியின் கையெழுத்துப் பிரதி துருக்கியின் கொன்யாவில் உள்ள மெவ்லானா அருங்காட்சியகத்தில் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முதல் தொகுப்பை நிறைவு செய்த பிறகு, அவர் தனது வாழ்க்கையின் கடைசி பத்து ஆண்டுகளை மஸ்னவி ம'னவியை உருவாக்க அர்ப்பணித்தார். அது வாழ்க்கைத் தத்துவங்கள், ஒழுக்கக் மாண்புகள், மூன்று இப்ராஹீமிய மதங்களின் கதைகள் மற்றும் அன்றைய பிரபலமான தலைப்புகள் ஆகியவற்றால் நிரம்பிய ஒரு படைப்பாகும்.

ரூமியும் ஷம்ஸும் தொடர்பில் இருந்தது ஒரு குறுகிய காலம், அதாவது சுமார் 2 ஆண்டுகள், எனினும் ஷம்சுடனான அவரது சந்திப்பு ரூமியின் வாழ்க்கையில் ஒரு நித்திய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரூமியின் சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், ஷம்ஸைச் சந்தித்த பிறகு, அவர் ஒரு புத்தக ஆர்வலராக, நிதானமான அறிஞராக, உலகளாவிய உண்மை மற்றும் அன்பைத் தேடும் ஆர்வமுள்ளவராக மாற்றப்பட்டார். ரூமி தன்னைத் தானே அறிந்துகொள்ளும் ஒரு மனிதர் ஆனார்.

ரூமி சுமார் 25 வருட காலத்தில் 70,000 கவிதைகளை வடித்ததன் காரணமாக, அவை உணர்வுகள், சிந்தனை, அறிவியல் மற்றும் வாழக்கையின் சகல பகுதியையும்  அனைத்தைத்துச் செல்லும் தலைப்பையும் உள்ளடக்கியிருந்தன.

எனவே, அவரை ஒரு துறையில் மட்டும் பொருத்திப் பார்க்க முடியாது. அவரது படைப்புகள் அனைத்தையும் தழுவிய உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் அவை கோட்பாடு மற்றும் பாசாங்குத்தனத்திலிருந்து உண்மையான விடுதலைக்காக ஏங்கும் ஒரு சுயாதீன ஆன்மாவின் அழைப்பு அது.

துருக்கியின் கொன்யாவில் உள்ள மெவ்லானா அருங்காட்சியகத்தில்
மஸ்னவி ம
னவியின் கையெழுத்துப் பிரதி

ரூமியின் பெயரில் மூன்று உரைநடைப் படைப்புகளும் இருந்தன. அவை சொற்பொழிவுகள், கடிதங்கள் மற்றும் ஏழு உபந்நியாசங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

ரூமி தனது சீடர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய எழுபத்தொரு சொற்பொழிவுகள் மற்றும் விரிவுரைகளின் பதிவை ஃபிஹி மா ஃபிஹி என்ற புத்தகம் வழங்குகிறது. இது அவரது பல்வேறு சீடர்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டது.

மஜ்லிஸ்-ஏ சப்'ஆ’ ஏழு பாரசீக பிரசங்கங்களைக் கொண்டுள்ளது அவை ஏழு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட விரிவுரைகளாகும். இவை குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றன. இவற்றில் சனாயி, 'அத்தார் மற்றும் ரூமி உட்பட பிற கவிஞர்களின் கவிதைகளின் மேற்கோள்களும் அடங்கப் பெற்றுள்ளன.

மகாதிப் என்பது ரூமி தனது சீடர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்வதிலும் அவரை சுற்றியிருந்த சீடர் சமூகத்தை நிர்வகிப்பதிலும் ரூமி மிகவும் அக்கறையுடன் மும்முரமாக இருந்துள்ளதை குறிப்பிட்ட கடிதங்கள் சாட்சி படுத்துகின்றன.

ரூமியின் கல்லறைகொன்யாதுருக்கி

இசை, கவிதை மற்றும் நடனம் ஆகியவற்றை இறைவனை நெருங்குவதற்கான கருவிகளாக பயன்படுத்த முடியும் என்று ரூமி தீவிரமாக நம்பினார். ரூமியைப் பொறுத்தவரை, இசையானது இறைநேசர்கள் தங்கள் முழு இருப்பையும் இறை நேசத்தின் மீது கவனம் செலுத்த உதவுவதோடு ஆன்மா அழிக்கப்பட்டு உயிர்த்தெழுப்பப்பட உதவும் ஒரு கருவியாக நம்பினார்.

ரூமி சாமா எனும் இசையைக் கேட்டு ஆடும் சுழட்சி நடனத்தை ஊக்குவித்தார், மெவ்லவி பாரம்பரியத்தில், சாமா என்பதுமனிதாபிமானம்  மற்றும் அன்பின் மூலம் இறைவனை அடையும் ஆன்மீக உயர்வுக்கான ஒரு பயணத்தை குறிக்கிறது. இந்த பயணத்தில், தேடலுடையோர் தம் அடையாளமாக உண்மையை நோக்கித் திரும்புகின்றனர், கூடிய பக்குவத்துடன் அன்பின் மூலம் வளர்கின்றனர், அகங்காரத்தை கைவிட்டு, உண்மையைக் கண்டுபிடித்து அதன் மூலம் இறைவனை அடைய முயற்சிக்கின்றனர். கொள்கைகள், இனங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் முழு படைப்புக்கும் அன்பு செலுத்துவதற்கும் சேவை செய்வதற்கும் அதிக முதிர்ச்சியுடன் இந்த ஆன்மீகப் பயணத்திலிருந்து தேடுபவராக மாறுகின்றனர்.

ஜலால் அத்-தின் ரூமி 1273 டிசம்பர் 17 அன்று துருக்கியில் உள்ள கொன்யாவில் காலமானார். ரூமியின் உடல் அவரது தந்தையின் உடலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது; அது ஒரு அற்புதமான சன்னதி, அவர் அடக்கம் செய்யப்பட்ட பசுமையான இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன் சுல்தான் வாலாட் ஆகியோர் மெவ்லவி எனும் தரீக்கா ஒன்றை நிறுவினர், இது டெர்விஷ்ஸ் தரீக்கா என்றும் அழைக்கப்படுகிறது.

ரூமி நினைவாலயம்கொன்யாதுருக்கி

ஜார்ஜிய மகாராணி Gürcü Hatun ரூமியின் நெருங்கிய தோழி. கொன்யாவில் அவனது கல்லறையைக் கட்ட தாராளமாக நிதியுதவி செய்தவள் அவள்தான். 13 ஆம் நூற்றாண்டின் மெவ்லானா கல்லறை, அதன் மசூதி, கல்விக்கூடம் மற்றும் தர்வேஷ்களின் தரிப்பிடம், இன்றுவரை பலரும் தரிசிக்கும் இடமாக உள்ளது.

உலகம் ரூமியை அரவணைத்தது அவர் அன்பை, கருணையை, காருண்யத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதற்காகவே அன்றி அவர் எங்கு பிறந்தார் அல்லது எங்கு வளர்ந்தார் அல்லது அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல.

20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அவரது கவிதைகள் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலான புழக்கத்தை அடைந்ததைத் தொடர்ந்து அவரது புகழ் உலகளாவிய ஒன்றாக மாறியது.

டிசம்பர் 17 ரூமியின் ஞாபகார்த்த தினம். கொன்யாவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 முதல் 17 வரை சிறப்பு ரூமி நினைவு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுகிறது.

துருக்கியின் கொன்யாவில் சாமா விழா

துருக்கியின் கொன்யாவில் சாமா விழா - டெர்விஷ்ஸ் குழுமம் சாமா விழா என்று அழைக்கப்படும் சூஃபி நடனத்திற்கு பிரபலமானது.

சாமா விழாவில், நடனக் கலைஞர்கள் நீண்ட வெள்ளை ஆடைகளை அணிவார்கள். நடனக் கலைஞர்கள் தலையில் உயரமான கூம்பு வடிவ தொப்பிகள் அணிந்து இருப்பர். விழாவிற்கு முன் பல மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும் நடனக் கலைஞர்கள், தாளத்திற்கு ஏற்ப சுழலத் தொடங்குவர், இடது பாதத்தைப் பயன்படுத்தி தங்கள் கண்களைத் திறந்த நிலையில், ஆனால் கவனம் சிதறாமல் தங்கள் உடலை வலது பாதத்தைச் சுற்றி இயக்குவர். ஒருவரின் சுயநலம், அகந்தை அல்லது தனிப்பட்ட ஆசைகளை கைவிடுவதன் மூலமும், இசைக்கு ஏற்ப ஆடுவதன் மூலமும், இறைவன் மீது சிந்தனையைச் செலுத்துவதன் மூலமும், ஒருவரின் உடலை சூரியனை சுற்றும் கோள்களை ஒத்த விதத்தில் மீண்டும் மீண்டும் சுழற்றுவதன் மூலமும் உயரிய நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றனர்.

ஈரானில், ஈரானிய நாட்காட்டியில் எட்டாவது மாதமான மெஹ்ரின் 7வது நாள் மற்றும் 8வது நாள், (இந்த ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில்) முறையே ஷம்ஸ் தப்ரிஸியின் தேசிய நாளாகவும், ரூமியின் தேசிய தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

https://en.mehrnews.com/news/191892/Iran-marks-National-Day-of-Rumi-greatest-mystical-poet