Contributors

Saturday, May 14, 2022

யெமன் மாகாணங்களை இணைக்கும் சவுதி திட்டம் அம்பலம்

Saudi plan to annex Yemeni provinces exposed

அன்ஸாருல்லாஹ்: யெமனின் எழுச்சி எதிரிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது,

யெமன் தேசம் உண்மையான சுதந்திரம் மற்றும் எதிரிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்கான பாதையில் செல்கிறது என்று யெமனின் அன்ஸாருல்லாஹ் இயக்கத்தின் தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹௌதி கூறினார், எமது நாட்டின் மக்கள் எழுச்சி அந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.

"ஆக்கிரமிப்பாளர்களின் கூட்டணி தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும், கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களின்படி தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன, நாட்டு மக்களின் போராட்ட உறுதிப்பாட்டிற்கு நன்றி" என்று அன்ஸாருல்லாஹ் தலைவர் மே 9, 2022 அன்று யெமன் சனாவின் மாணவர்களின் கோடைகால நடவடிக்கைகளைத் துவக்கி வைக்க நடைபெற்ற விழாவில் யெமன் தலைநகரில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில் கூறினார்.

யெமன் நாட்டின் மக்கள் எழுச்சி உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதையும் எதிரிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது, அத்தகைய நோக்கங்களை அடைய மக்கள் யதார்த்தமான, பகுத்தறிவு மற்றும் நுண்ணறிவு அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இஸ்லாம் வழிகாட்டுதல் மற்றும் நுண்ணறிவின் மதம். உண்மையைக் கண்டறிவதும், வழிகேட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும் மனித குலத்திற்கு நன்மை பயக்கும். முஸ்லிம் உம்மத் தவறான வழிகாட்டுதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பல தவறான கருத்துக்கள் அதில் பரவியுள்ளன, ”என்று அன்சாருல்லாஹ் தலைவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தவும் பிளவுபடுத்தவும் "எதிரிகள் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் அதற்காக பல செய்தி நிறுவனங்களையும் ஊருருவாக்கியுள்ளனர். அவற்றின் மூலம் உம்மத்தை தொடர்ந்து தவறாக வழிநடத்துகிறார்கள்" என்று அன்ஸாருல்லாஹ் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இளம் முஸ்லிம் தலைமுறைகள் மீது எதிரிகள் தங்கள் கண்களை வைத்திருக்கிறார்கள், தவறான பிரச்சாரங்கள் மூலம் அவர்களை வழிகெட செய்து அழிக்க முயல்வதாக கூறி, அதனால் இளைஞர்கள் நேர்மையான வழியைப் பின்பற்றாது சக்திவாய்ந்த நாடுகளாக காட்டிக்கொள்ளும் அவர்கள் காலடியில் வீழ்வர் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

சவூதி அரேபியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவுடன் மார்ச் 2015 இல் யெமன் மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கியது.

யெமன் தேசத்திற்கு எதிரான எதிரிகளின் தவறான தகவல்களும் பிரச்சாரப் போரும் நாட்டின் விடுதலை மற்றும் நம்பிக்கையின் உணர்வைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று அல்-ஹௌதி குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா அமைதியில் அக்கறை காட்டவில்லை யெமன் மீது ஏழாண்டுகளுக்கும் மேலாக அழிவுகரமான போரை நடத்தி வரும் சவூதி அரேபியா, பல முக்கிய யெமன் மாகாணங்களை அதனுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக யெமன்  ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

Crater Skyயின் சமீபத்திய அறிக்கையின்படி, சவூதி அதிகாரி ஒருவர் யெமன் மாகாணங்களான ஹத்ரமவுத், ஷப்வா, அல்-மஹ்ரா மற்றும் அப்யான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலரைக் கொண்ட குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, சவூதி ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்தார். அந்த மாகாணங்களில் உள்ள மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொண்டால் அவர்கள் சவூதி அரேபியாவுடன் இணைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். இது சவுதியின் தீய நோக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த முடிவு உறுதியானது, ஒருபோதும் அதை ரத்து செய்ய மாட்டோம் என்றும் சவூதி அதிகாரி அறிவித்ததாக ஏடன் சார்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை வளங்கள் நிறைந்த குறிப்பிட்ட யெமன் மாகாணங்களை "சவூதி அரேபியாவின் அரபு தெற்கு" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளது ஈண்டு கவனிக்கத்தக்கது.

குறிப்பிட்ட அறிக்கையின்படி, இந்திய சமுத்திரத்தை அணுகுவதற்கான அதன் திட்டங்களின் ஒரு பகுதியாக சவூதி இராச்சியத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது.

அமெரிக்க சார்பு அப்த் ரப்புஹ் மன்சூர் ஹாடியின் ரியாத் நட்பு ஆட்சியை மீண்டும் நிறுவுவதும், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் யெமனில் அரசு விவகாரங்களை நடத்தி வரும் அன்சாருல்லாஹ் இயக்கத்தை நசுக்குவதும் இதன் நோக்கமாக இருந்தது.

சவூதி தலைமையிலான கூட்டணி அதன் நோக்கங்களை வெற்றிகொள்ள தவறிய நிலையில், போர் நூறாயிரக்கணக்கான யெமனியர்களை கொன்றுள்ளதுடன் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்கு வித்திட்டுள்ளது.

அன்ஸாருல்லாஹ் ஆயுதப் படைகள் சவுதியின் கோரப்பிடியில் இருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதற்காக போராடி முன்னேறி வருவதால், சமீப மாதங்களில், குறிப்பாக முக்கிய மாரிப் மாகாணத்தில், சவுதி ஆதரவுப் படைகள் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், யெமன் மாகாணங்களை இணைக்கும் சவுதி திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

ரியாதின் ஏற்பாடு என்று கூறப்படும் மற்றொரு சதித்திட்டத்தின் கீழ், மன்சூர் ஹாடி கடந்த மாதம் தனது அதிகாரங்களை "ஜனாதிபதி தலைமை" சபைக்கு வழங்கியதாக அறிவித்தார் மற்றும் துணை ஜனாதிபதி அலி மொஹ்சென் அல்-அஹ்மரை பதவி நீக்கம் செய்ததாக அறிவிப்பு செய்தார்.

The Wall Street Journal யெமன் முன்னாள் ஜனாதிபதி மன்சூர் ஹாடியை பதவி விலகுமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) நிர்பந்தித்ததாக பின்னர் செய்தி வெளியிட்டது.

Rai al-Youm, அரபு மொழி டிஜிட்டல் செய்தி மற்றும் கருத்து இணையதளம், The Wall Street Journal அறிக்கையை உறுதிப்படுத்தியது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனின் சமீபத்திய ரியாத் விஜயத்தின் போது நடந்த ஹாடியுடனான தனிப்பட்ட சந்திப்பு முஹம்மத் பின் சல்மானின் திட்டத்திற்கு அமைய இடம்பெற்றிருந்தாக அது மேலும் தெரிவித்தது.

அமெரிக்க சார்பு மன்சூர் ஹாடி 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ஒருமுறை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அன்சாருல்லா இயக்கத்தின் தலைமையிலான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ரியாத்துக்குத் தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர், சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு தனது ராஜினாமாவை ரத்து தாமே ஜனாதிபதி என்று மீண்டும் பிரகடனப்படுத்தி கொண்டார். இப்போது மறுபடியும் ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார்.

யெமன் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஒரு வறிய, பலம் குன்றிய நாடு. இருந்தாலும் அம்மக்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அந்த அப்பாவி மக்களை கொண்று குவிக்க சவுதிக்கு எப்படித்தான் மனசு  வந்ததோ...?

- தாஹா முஸம்மில் 

Saturday, May 7, 2022

மேற்குலகின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்

Double standard of the West exposed

Photo: Aljazeera

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மூன்று மாதங்களாக தொடரும் நிலையில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பொதுவாக மேற்கு நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் பெருகி வருகிறது.

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா பல மேற்குலக நாடுகளின் விரைவான கண்டனத்தையும் எதிர் நடவடிக்கைகளையும் சந்தித்து வருகிறது., ரஷ்ய வங்கிகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ ஏற்றுமதிகளைக் குறிவைத்து அமெரிக்காவும் மற்றும் பிற மேற்குலக நாடுகளும் உடனடி பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிலும் (UNSC) இது தொடர்பாக அவசர தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளது.

ஆனால் இஸ்ரேலின் அடாவடித்தனம் தொடர்பாக இவர்கள் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.

பிராந்தியத்தில் இஸ்ரேலின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. எனினும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தாமே முன்னணியில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது.

இவர்களின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஈரான் இஸ்லாமிய குடிரசு ஆரம்பம் தொட்டே அம்பலப்படுத்தி வருகிறது. பலஸ்தீன் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக அமேரிக்கா வெளிப்படையாகவே காட்டி வரும் நயவஞ்சகத்தனத்தையும் ஈரான் தன்னால் இயன்ற அளவு உலகறிய செய்து வருகிறது.

Iranian President Ebrahim Raisi

அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை பற்றி ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுத பரம்பல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான் அணு ஆயுத தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பிரயோகித்தல் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டவையாக பலமுறை பிரகடனப்படுத்தியும் உள்ளது.

இவ்வாறிருக்க, ஈரான் இஸ்லாமிய குடிரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மேற்குலகம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதை எல்லோரும் அறிவர்.

ஈரான் இஸ்லாமிய குடியசு அதனது பாதுகாப்பு தேவைக்காக செய்யும் சகல ஆராய்ச்சிகளையும் நிறுத்த வேண்டுமாம்..... குறிப்பாக ஏவுகணை ஆராய்ச்சியை கைவிட வேண்டுமாம்..... அணு ஆராய்ச்சியெல்லாம் இஸ்லாமிய நாடொன்றுக்கு உரியதல்லவாம்..... அது அமெக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் ஏகபோக உரிமையாம்..... அரபு நாடுகளைப் போல ஈரானும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டுமாம்..... பலஸ்தீன் விடுதலைக்கான எந்த உதவியும் ஈரான் செய்யக்கூடாதாம்..... இஸ்ரேல் அதிருப்தியுறும் விதத்தில் நடந்துகொள்ளக் கூடாதாம்..... அமெரிக்காவின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிய வேண்டுமாம்.

அதேவேளை, அணு ஆயுத பரம்பல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து, நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ள இஸ்ரேல் பற்றி மேற்குலகு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டுமல்லாமல் அதற்கு எல்லாவித உதவிகளையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்கிறது.

மஹ்மூத் அப்பாஸ்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சுமார் 75 வருடகால இஸ்ரேலின் "குற்றங்களை" புறக்கணிக்கும் அதே வேளையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு தண்டனை வழங்குவதாக பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை மேற்கின் "இரட்டைத் தரங்களை" விமர்சித்தார்.

Palestinian President Mahmoud Abbas

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய ஜனாதிபதி இல்லத்தில் செய்தியாளர்களுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வருகைக்கு அப்பாஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

"ஐரோப்பாவில் தற்போதைய நிகழ்வுகள் அப்பட்டமான இரட்டைத் தரத்தைக் காட்டியுள்ளன," என்று அவர் பிளிங்கனிடம் கூறினார்.

"இஸ்ரேலின் தொடர் குற்றங்கள் மற்றும் அதன் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் பாகுபாடு போன்றவற்றை எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இஸ்ரேல்  சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாடாக நடந்து வருகிறது. மனித இனத்துக்கு எதிராக இஸ்ரேல் செய்துவரும் அட்டூழியங்களுக்காக அதைப்பொறுப்புகூறலுக்கு உற்படுத்தும் எவரையும் நாங்கள் காணவில்லை," என்று அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் பலஸ்தீன அதிகாரிகள் கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் வலியுறுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளை எதிர்கொள்வதில் உள்ள பெரும் சவால்களில் ஒன்று, உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நெருக்கடிகளைக் கையாள்வதில் உள்ள அப்பட்டமான இரட்டைத் தரங்களுக்கு அவர்களின் கண்களைத் திறப்பதாகும்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அமைதியான அண்டை நாடு மீது அப்பட்டமான ஆக்கிரமிப்பு எனவும், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் மற்றும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்கிரமிப்பும் அதுபோன்ற ஒன்றே என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.

இதனால்தான் இளவரசர் துர்கி அல்-ஃபைசலும் மேற்குலகின் பாசாங்குத்தனத்தை கண்டனம் செய்தார். (சவுதியின் இந்த நிலைப்பாடு எவரும் எதிர்பாராத ஒன்று, இருந்தாலும் பலஸ்தீன் தொடர்பாக மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை வரவேற்போம்).

Sadi Arebia's Prince Turki Al-Faisal

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அநீதியான முறையில் தள்ளப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டின் திறந்தவெளி சிறைச்சாலையின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய குண்டுவீச்சுகளில் ஏற்பட்ட இடிபாடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

உக்ரேனிய அகதிகள் போலந்திற்குள் நுழைவதை பார்க்கும்போது அமெரிக்க சியோனிச சக்திகளால் இன்னல்களுக்கு உள்ளான அப்பாவி பலஸ்தீன மக்கள், தாம் ஏனைய நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்வதை அவர்கள் ஞாபகத்தில் கொண்டு வருகிறார்கள். பாலஸ்தீனியர்கள் தங்கள் நக்பா அல்லது பேரழிவைப் பற்றி நினைக்கிறார்கள், 74 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் 70 சதவீத மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள்.

ஐரோப்பியர்கள் உக்ரேனியர்களை வரவேற்கும் போது அவர்களது இனவெறி நன்றாகவே வெளிப்படுகிறது, ஏனெனில் அவர்கள் "நம்மைப் போன்றவர்கள்" மஞ்சள் நிற முடி மற்றும் நீலக்கண்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது தமது கடமை என்று எண்ணுகிறார்கள்.

ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் தீவிரமும் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் வேகமும் கடினத்தன்மையும், எம்மை விழிபிதுங்கச்செய்கிறது, ஆனால் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு தண்டனைக்கு பதிலாக அவர்களது ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்து வருகிறது.

உக்ரைன் மீதான சமீபத்திய ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே மேற்குலகின் இரட்டை வேடம் தெளிவாக தெரிந்தது; 2014 இல் மாஸ்கோ மீது ஐரோப்பிய ஒன்றியம் கிரிமியா படையெடுப்பு மற்றும் இணைப்பின் போது ஒரு சில நாட்களுக்குள்ளேயே  பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மேற்கு நாடுகளும் இஸ்ரேல் போன்ற அதன் நண்பர்களும் ஏனைய நாடுகளை போலவே அதே விதிகளுக்கு தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொள்ள வேண்டும்; அதுவே நியாயமாகும்.

இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிப்பது, பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று கோருவது பல சந்தர்ப்பங்களில், குற்றமாக காணப்பட்டது.

கிழக்கு ஜெருசலேம், காசா பகுதி மற்றும் கோலன் குன்றுகள் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் 55 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு குடிமக்களை மாற்றியதாக ரஷ்யா மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது போல், இஸ்ரேல் 650,000க்கும் மேற்பட்ட யூத மக்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு மாற்றியுள்ளது.

ரஷ்யாவும் இஸ்ரேலும் முறையே உக்ரேனியர்களையும் பாலஸ்தீனியர்களையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளன, இது நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

பல நொண்டி சாக்குகளை கூறி காசாவில் உள்ள பொதுமக்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக குண்டுவீசித் தாக்கி வருகிறது, ஆனால் அது எதையும் கவனத்தில் கொள்ளாமல் ரஷ்யா நொண்டி சாக்குகளை கூறி வருவதாக மேற்குலகு குற்றம்சாட்டுகிறது என்று லண்டனை தளமாகக் கொண்ட அரபு-பிரிட்டிஷ் புரிந்துணர்வு கவுன்சிலின் இயக்குநர் கிறிஸ் டொய்ல் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளுடன் இணைந்து அமேரிக்கா ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். அமெரிக்காவின் மிருகத்தனத்திற்கு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்கள் இன்றும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல் அமேரிக்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு கௌந்தனாமோ பே இன்றும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. 1950 இல் இருந்து முஸ்லிம் நாடுகளை கடித்து குதறுவதில், அமேரிக்கா முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதில் அலாதி பிரியத்தை காட்டி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நாடு, ரஷ்ய விடயத்தில், சர்வதேச சட்டம், ஜனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது நயவஞ்சகத்தின் உச்சம் என்பதை காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். அவ்வாறன்றி உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துவதல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

-         - தாஹா முஸம்மில்


Sunday, May 1, 2022

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் - தலைவர்

 Zionist army forced to turn offensive array to defensive one

சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை:

அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மீதும் அமைதியும் வாழ்த்துக்களும் உண்டாவதாக.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இஸ்லாமிய உலக இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாலஸ்தீனத்தின் தைரியமான, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு குத்ஸ் தினம் வந்துள்ளது. புனித குத்ஸ் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது. உண்மையில், அபகரிப்பு, கிரிமினல் சியோனிச ஆட்சி குத்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தும் வரை, ஆண்டின் அனைத்து நாட்களும் குத்ஸ் தினமாக கருதப்பட வேண்டும்.

புனித குத்ஸ் பாலஸ்தீனத்தின் இதயம், மற்றும் நதி முதல் கடல் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களும் பாலஸ்தீனத்தின் பகுதியாகும். அடக்குமுறையாளர்களுக்கு எதிராக முன்னுதாரணத் துணிச்சலுடன் எழுந்து நிற்கிறோம் என்பதை பாலஸ்தீன தேசம் ஒவ்வொரு நாளும் உணர்த்தி வருகிறது. பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் சுய தியாகச் செயல்பாடுகளால் பாலஸ்தீனத்தின் தற்காப்புக் கவசமாகச் செயல்பட்டு வருகின்றனர் மேலும் அவர்கள் எதிர்காலத்திற்கான முன்னோடிகளாகவும் உள்ளனர்.

பாலஸ்தீனத்தின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஒரு புதிய சமன்பாட்டைச் அடையாளப்படுத்தும் அதே தருவாயில், இந்த ஆண்டு குத்ஸ் தினத்தை நாங்கள் அனுஷ்டிக்கின்றோம்.

இன்று, பாலஸ்தீனத்திலும் மேற்கு ஆசியா முழுவதிலும் இளைஞர்களின் ஒரு "வெல்லமுடியாத மன உறுதி" மேலோங்கியுள்ளது. அது சியோனிஸ்டுகளின் "வெல்லமுடியாத இராணுவம்" என்ற நிலையை மாற்றியுள்ளது. இன்று, அந்த கிரிமினல் சியோனிச இராணுவம் அதன் ஆக்கிரமிப்பு வரிசையை தற்காப்புப் படையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று அரசியல் அரங்கில், அந்த கிரிமினல் ஆட்சியின் மிக முக்கிய ஆதரவாளரான அமெரிக்கா, தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. அது ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அதன் அதிகபட்ச அழுத்தக் கொள்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஆசிய சக்திகளின் முன்னாள் தோற்கடிக்கப்பட்டுள்ளது,, உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, மற்றும் அமெரிக்க நாட்டில், மற்றும் அமெரிக்க ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவின் நிகழ்வை நிர்வகித்தல் மற்றும் உள்ளக  நிர்வாகத்திலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் சியோனிச ஆட்சியானது அரசியல் மற்றும் இராணுவ அரங்கில், சிக்கல்களின் சுருண்ட வலைப்பின்னலில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் உச்சியில் இருந்த முன்னாள் கசாப்புக் கடைக்காரரும், கிரிமினலும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார். சைஃப் அல்-குத்ஸ் காவியத்தைத் தொடர்ந்து. ஒவ்வொரு மணி நேரமும் அவரது தற்போதைய வாரிசுகள் மற்றொரு காவியத்தின் கூர்மையான கத்திக்காக காத்திருக்கிறார்கள்.

ஜெனினின் செயல்பாடுகள் சியோனிச ஆட்சியை பைத்தியக்காரத்தனமாக ஆத்திரமடையச் செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நஹாரியாவில் ஒரு சில சியோனிஸ்டுகளின் மரணத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜெனின் விஷயத்தை +முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ஜெனின் அகதிகள் முகாமில் 200 பேரை சியோனிச கிரிமினல் ஆட்சி கொன்றது.

1948 மற்றும் 1967 அபகரிக்கப்பட்ட நிலங்களிலும் அதைச் சுற்றியுள்ள முகாம்களிலும் கிட்டத்தட்ட 70% பாலஸ்தீனியர்கள் சியோனிச ஆட்சியின் மீது தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனிய தலைவர்களை ஊக்குவிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், ஏனெனில் இது சியோனிச கிரிமினல் ஆட்சியை எதிர்கொள்ள பாலஸ்தீனியர்களின் முழுமையான தயார்நிலையைக் குறிக்கிறது மற்றும் முஜாஹித் அமைப்புகளுக்கு தேவையான போது இராணுவ நடவடிக்கை எடுக்க சுதந்திரத்தை வழங்குகிறது.

1948ல் அபகரிக்கப்பட்ட நிலங்களில் இரண்டு - வடக்கு மற்றும் தெற்கு - பகுதிகளில் பாலஸ்தீன மக்களின் ஜிஹாதி நகர்வுகள், அதே நேரத்தில், ஜோர்டான் மற்றும் கிழக்கு குத்ஸில் மாபெரும் பேரணிகள், பாலஸ்தீனிய இளைஞர்களால் அல்-அக்ஸா மசூதியின் துணிச்சலான பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் காசாவில் இராணுவ உத்திகள் பாலஸ்தீனம் முழுவதும் எதிர்ப்பின் களமாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், பாலஸ்தீன மக்கள் இறைவனின் பாதையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்வதில் ஒருமனதாக உள்ளனர்.

இந்த சம்பவங்கள் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் நடந்தவை சியோனிச எதிரியுடன் சமரசம் செய்து கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யும் முத்திரையாகும். ஏனென்றால் பாலஸ்தீனம் இல்லாத நிலையில் அல்லது அதன் உரிமையாளர்களான பாலஸ்தீனர்களின் சம்மதத்திற்கு எதிராக பாலஸ்தீனம் பற்றிய எந்த திட்டமும் அல்லது நிகழ்ச்சிகளும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒஸ்லோ ஒப்பந்தம், இரு நாடுகள் என்ற அரேபியர்களின் தீர்வு, (ட்ரம்பின்) நூற்றாண்டின் ஒப்பந்தம் மற்றும் உறவுகளை இயல்பாக்குவதற்கான சமீபத்திய அவமானகரமான முயற்சிகள் போன்ற அனைத்து முன்னாள் ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளன.

சியோனிச ஆட்சி மூச்சுத் திணறிய நிலையிலும், குற்றங்களைச் செய்து அப்பாவி மக்களை ஆயுதங்களால் கொன்று குவித்து வருகிறது. இது நிராயுதபாணியான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களை படுகொலை செய்கிறது. அது அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்கிறது, வீடுகளை அழித்து, பண்ணைகளையும் சொத்துக்களையும் இடித்துத் தள்ளுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பொய்யர்களின் மனித உரிமைகள் பற்றி ஆடம்பரமான கூற்றுக்கள் அனைத்தும் பாசாங்கு என்று நிரூபணமாகியுள்ளது. மற்றும் உக்ரைன் பிரச்சினையில் ஒரு கலவரத்தை உருவாக்கி, பாதிப்புகளுக்காக குரல் எழுப்பும் இவர்கள், பாலஸ்தீனத்தில் இழைக்கப்படும் இந்த குற்றங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் காக்க முன்வராதது மட்டுமல்ல, இரத்தவெறி பிடித்த அந்த ஓநாய்க்கும் உதவி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

இது எம் அனைவருக்கும் ஒரு முக்கியமான பாடம். இஸ்லாமிய உலகத்தின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் - அதில் பாலஸ்தீன் பிரச்சினை முதன்மையாக உள்ளது - இந்த இனவெறி மற்றும் மனித விரோத சக்திகளை நாம் நம்ப முடியாது மற்றும் நம்பவும் கூடாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அல்குர்ஆனின் போதனைகளில் இருந்து உருவாகும், சன்மார்க்க வழிகாட்டுதல்களில் இருந்து எழும் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே, இஸ்லாமிய உலகப் பிரச்சினைகளுக்கும், உச்சத்தில் நிற்கும் பாலஸ்தீன் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

மேற்கு ஆசியாவில் (அநீதி) எதிர்ப்பின் உருவாக்கம் சமீபத்திய தசாப்தங்களில் இந்த பிராந்தியத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரவேற்கத்தக்க நிகழ்வாகும். அநீதி எதிர்ப்பின் மகத்துவத்தால்  சியோனிஸம் என்ற அசிங்கத்திலிருந்து லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்தப்படுத்தவும், ஈராக்கை அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவும், ஈராக்கை அமெரிக்க திட்டங்கள் மற்றும் தாயேஷ் வெறியர்களின் தீங்கிழைப்பிலிருந்து காப்பாற்றவும், சிரிய பாதுகாவலர்களுக்கு உதவவும் முடிந்தது.

இந்த அநீதி எதிர்ப்பு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட போரில் எதிர்க்கும் யெமன் மக்களுக்கு உதவுகிறது, பாலஸ்தீனத்தில் உள்ள சியோனிச கொள்ளையர்களுடன் யுத்தம் செய்து இறைவனின் கிருபையுடன் அவர்களை மண்டிச் செய்வதோடு குத்ஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் பிரச்சினையை உலக மக்கள் அன்றாடம் அறிந்துகொள்ளும் வகையில் இது மேலும் மேலும் முன்னிலைப்படுத்துகிறது.

பாலஸ்தீன மக்களே, மேற்குக் கரையிலும், 1948 இல் அபகரிக்கப்பட்ட பிரதேசங்களில் சுய தியாகம் (ஜிஹாது) செய்யும் இளைஞர்களே, ஜெனின் அகதிகள் முகாமிலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் காஸா விடுதலையில் இறைவனுக்காக போராடும் நீங்கள், மற்றும் பாலஸ்தீனத்திற்கு வெளியே முகாம்களில் வசிப்பவர்களே முக்கியமானவர்கள். நீங்களே உணர்திறன் பகுதிகள் மற்றும் எதிர்ப்பின் முன்னோடிகள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும் மற்றும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாப்பான்" [புனித குர்ஆன், 22:38], "ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்தால், பொறுமையாளர்களுக்கு நிச்சயமாக அதுவே சிறந்ததாக இருக்கும்" [16:126] , “ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.” [3:186], மேலும் “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி உறைவிடம் எவ்வளவு சிறப்பானது” [13:24].

ஈரான் இஸ்லாமிய குடியரசு (அநீதி)எதிர்ப்பு முகாமை ஆதரிக்கிறது. இது பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்துகிறது மற்றும் ஆதரிக்கிறது. நாங்கள் இதைச் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம், நாங்கள் எப்போதும் இதைச் செயலிலும் காட்டி வருகின்றோம், நாங்கள் அதில் உறுதியாக இருக்கின்றோம். [சியோனிச ஆட்சியுடன்] உறவுகளை இயல்பாக்குவதற்கான துரோக நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். உறவுகளை இயல்பாக்கும் கொள்கையை நாங்கள் கண்டிக்கிறோம். சில அரபு அரசாங்கங்கள் பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் விஷயத்தை விரைவுபடுத்துமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளன. அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சியோனிச ஆட்சியின் வழியில் இருக்கும் எந்த தடையையும் நீக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், முதலில், அவர்கள் துரோகமாக நடந்துகொண்டு அரபு உலகிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாக, குருடர்கள் பார்வையற்றவர்களை வழிநடத்தும் நிகழ்வு போன்றது அது என்பதால் அவர்கள் அப்பாவியாக இருக்கிறார்கள்.

எனது இந்த அறிக்கையின் முடிவில், பாலஸ்தீன தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு ஆனால் உறுதியுடன் எதிர்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எனது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இந்தப் பெரிய பொறுப்பின் முக்கியப் பகுதியைச் செயல்படுத்த உறுதியளித்துள்ள நமது (அநீதி) எதிர்ப்பு பாலஸ்தீனிய குழுக்களின் கைகளை நான் பற்றிக்கொள்கிறேன். முழு இஸ்லாமிய உலகையும், குறிப்பாக இளைஞர்களையும், கண்ணியத்தையும், கெளரவத்தையும் கொண்டு வரும் இந்தத் துறையில் பங்கேற்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

"எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது." [புனித குர்ஆன், 10:10]

https://english.khamenei.ir/news/8960/Everything-is-signaling-a-new-equation-in-Palestine-s-future