Contributors

Monday, October 11, 2021

இஸ்லாத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவம்

 Importance of Unity in Islam




வாழ்க்கையை மாற்ற ஒற்றுமையின் சக்தியைப் பயன்படுத்துவோம்

பரஸ்பர அன்பினால் நாம் ஒன்றிணைவதன் மூலம் நிறைய பெறுபேறுகளை அடைய முடியும். எங்கள் நபி (ஸல்) ஒற்றுமையை எங்கும் எப்போதும் வலியுறுத்தினார். அவர் சென்ற இடமெல்லாம் அன்பையும் தயவையும் பரப்புவதை உறுதி செய்தார், அவரின் இந்த நற்பண்பு, மில்லியன் கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்தது; அவர்களை ஏகத்துவ மார்க்கத்தில் இணைக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது.

ஒற்றுமையின் சக்தி அளப்பரியது, ஒன்றிணைவதன் மூலம் நாம் எமது நிலையை மட்டுமல்லாது எம் சமூக வாழ்க்கையையம் மாற்றியமைக்க முடியும். மனச்சோர்வடைந்து காணப்படும் சமூகத்திற்கு உட்சாகம் ஊட்டமுடியும், வீழ்ந்துகிடக்கும் சமூகத்தை தூக்கி நிமிர்த்த முடியும், மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் தனிமையை உணர்கிறவர்களுக்கு நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும்.

சமுகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றவர்களுடனான நமது தொடர்புகளை வளர்ப்பதற்கும் மூல கூரான ஒற்றுமையை நாம் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கான சில வழிகளை இங்கே ஆராய்வோம்.

ஒற்றுமை நமக்கு பொதுநலத்தை கற்றுக்கொடுக்கிறது

"தான் நேசிப்பதை அவன் தன் சகோதரனுக்கும் நேசிக்காத வரை ஒருவர் நம்பிக்கை கொண்டவராக ஆக்கமாட்டார்" [அல்-புகாரி]

இந்த ஹதீஸில் சகோதரத்துவத்தை பேணுவது தொடர்பாக எவ்வளவு அழகாக சொல்லப்பட்டுள்ளது என்பதை அவதானியுங்கள். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவரையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது. இமாம் அன்-நவவி (ரஹ்) இங்கு, நம்முடைய உத்தம நபி (ஸல்) அவர்கள் சத்தியத் தூதை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது பற்றி நமக்கு வழிகாட்டுகிறார் என்றும், ஒரு விசுவாசி எப்படி ஒரு இஸ்லாமியரை எப்படி நேசிக்கிறாரோ அவ்வாறான நேசத்துடன் மற்றவரை நேசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அவர் “இந்த காரணத்திற்காக, அவர் ஹிதாயத் எனும் நேர்வழியை அடைய பிரார்த்தனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, இந்த வகையான அன்பு மிகவும் அலாதியானது. ஒரு நண்பரை நீங்கள் விரும்புவதன் காரணமாக அவரை வீட்டிற்கு அழைத்து உங்கள் வசதிக்கு ஏற்றவாறு, எவ்வாறு உபசரிப்பீர்களோ அவ்வாறே, அதே மனநிலையுடன், நாம் அவர்களுக்கு நல்லதை விரும்புவதன் காரணமாக அன்பை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கு அது ஓர் எடடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இதுவே ஒற்றுமையின் சாராம்சம், அன்பும் மரியாதையும் மக்கள் மனங்களை பிணைக்கிறது.

நாம் ஒரு அமைப்பு போன்றவர்கள் என்பதை அறிதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "உண்மையாக, விசுவாசிகள் ஒரு கட்டமைப்பைப் போன்றவர்கள், ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றை வலுப்படுத்துகிறது" என்று சொல்லிவிட்டு தனது விரல்களை ஒன்றாகக் இணைத்துக் காட்டினார்கள் . [அல்-புகாரி]

இந்த ஹதீஸ் அவசியமான நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், நேர்மையாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இறைவன் அருளிய வாய்ப்பாகவும் அதை பார்ப்பது இதில் அடங்கும்.

இது மக்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் செயலாகும். நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நாட்டில், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத, எதோ ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு உதவி செய்தாலும், அவர் உள்ளத்தளவில் இயல்பாகவே ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்; அவர் உங்களுக்காக, உங்கள் உடல் நலத்துக்காக, அமைதிக்காக துஆ செய்பவராக இருப்பார் என்பது நிச்சயம்.

எனவே ஒற்றுமையை அடையும் செயல்பாடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மேலும், ஒரு கட்டமைப்பை உருவாக்க ஒன்றாக இணைந்திருக்கும் செங்கற்களாக விசுவாசிகளைப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் நிலைமைகளை அறிந்து கொள்வதன் மூலம் எவ்வளவு நன்மைகள் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்ளவும்.

உறவுகளை உருவாக்குவதன் மூலம் ஒன்றிணைத்தல்

ஒற்றுமை முக்கியம், ஆனால் அது ஒவ்வொரு நபரின் முயற்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். புனித குர்ஆனில் அல்லாஹ் சுபுஹானஹு தஆலா குறிப்பிப்பிடுவதை பாருங்கள்

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். 3:103.

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் வாழ்வதற்கு நமது நபி (ஸல்) அவர்களே உண்மையான உதாரணமாகும். தலைமைப் பதவியில் இருந்த போதிலும் அவர் மீது கற்கள் வீசப்பட்டன,, அழுக்குகளும் வீசப்பட்டன மேலும் அவரது உயிருக்கு கூட பல முறை ஆபத்து ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பெரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். ஆயினும், நம் நபி (ஸல்) தனது எதிரிகளுக்கு தயவையும் மரியாதையையும் தவிர வேறு எதையும் காட்டவில்லை. அவர் உலகை மாற்றவும், இன்றும் நம்முடன் வாழும் மரபுகளை உருவாக்கவும் தயவைப் பயன்படுத்தினார். புனித குர்ஆன் வசனமும் றஸூலுல்லாஹ்வின் கருணை கொண்ட பார்வையுமே மோசமான எதிரிகளில் ஒருவராக இருந்த உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது; றஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறினார்.

கருணையின் சக்தி அத்தகையது, மேலும் அதன் மூலம் அன்பை வெகுதூரம் பரப்பலாம் என்பதை ரசூலுல்லாஹ் தனது வாழ்க்கையின் மூலம் காட்டித் தந்தார்..

தான தர்மத்தின் மூலம் ஒற்றுமை

ஒரு முஸ்லிம் தனது இதயத்தில் வைத்திருக்கும் அன்பு மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், அது அவரை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வைக்கிறது. அவர் மற்றொரு நபரின் வலியை உணர்கிறார், மேலும் அவர் அன்பான விதத்தில் எதிர்வினையாற்றுகிறார். இது இயற்கையாகவே மற்றவர்களிடம் பாசத்தையும், பரிவையும், கருணையையும் உருவாக்குகிறது.

மோதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டும் தடைகளை எதிர் கொண்டிருக்கும் ஒரு கடினமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் தேவையுடையவர்களுக்கு உதவுமாறு அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிடுகின்றான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றிணைந்து, வீழ்ந்துகிடப்போரை உயர்த்தி, உலகிற்கு நல்ல செய்தியை வழங்க முடியும். நன்மையில் ஒன்றிணைவதற்கு அன்பைப் பரப்புவது மிக முக்கியமாகும்.

நாம் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும்.

ஒற்றுமையின் மூலம்  நிறைய சாதிக்க முடியும். ஒற்றுமை மக்களை ஒன்றிணைக்கிறது, அவர்களுக்கு இடையே அன்பு, நல்லிணக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை உருவாக்குகிறது.

விசுவாசிகளாகிய நாம் ஒற்றுமையைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் கருணையைப் பரப்புவோம், அத்துடன் நமது ஆன்மீக வளர்ச்சியை அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்தலாம்.

எனவே, ஒற்றுமையின் நற்பண்புகளைப் பற்றி சிந்திப்போம், நம் குடும்பம், நண்பர்கள், மற்றும் நாம் வாழும் அபாயகரமான உலகத்திற்கு நேர்மையான தயவை, உண்மையான மனிதநேயத்தை பரப்புவோம். நாம் இதைச் செய்யக்கூடிய ஒரு வழி, பாதிப்புக்குள்ளான மக்களை, இன, மத பேதமின்றி வறுமையில் வாடுபவர்களையும் காப்பாற்ற, வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் சிறந்த மனிதாபிமான திட்டங்களுக்கு எம்மால் முடிந்தளவு உதவுவோம்.

இஸ்லாமிய பண்புகளான நன்மை, அன்பு மற்றும் தாராள மனப்பான்மையின் பால் ஒன்று சேர அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

-         -  தாஹா முஸம்மில்

Monday, October 4, 2021

வெளிநாட்டு சக்திகளை நம்பி பாதுகாப்பை ஒப்படைப்பது வெறும் "மாயை" - ஆயதுல்லா கமேனி

The good of the region lies in having independent, national armed forces & cooperation between neighboring countries


இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயித் அலி கமேனி பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் குறுக்கீடானது முரண்பாடு மற்றும் அழிவுக்கு ஆதாரமாக உள்ளது என்றும் பலம் பெறுவதற்கும் மற்றும் பகுத்தறிவை பயன்படுத்துவதற்கு ஈரானின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு பிராந்திய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆயத்துல்லா கமேனி கடந்த (3-10-2021) ஞாயிற்றுக்கிழமை இராணுவ அகாடமிகளின் பட்டதாரிகளுக்காக நடத்திய விழாவில், ஈரானின் ஆயுதப்படைகளை விழித்து ஆற்றிய மெய்நிகர் உரையில்  அவர்களை வெகுவாக பாராட்டினார், "வெளிப்புற மற்றும் உள் எதிரிகளின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையான அர்த்தத்தில் அவர்கள் ஒரு தற்காப்பு கவசம்" என்று அவர்களை குறிப்பிட்டார்.


ஈரானின் இராணுவம் வடமேற்கு எல்லையில் இராணுவப் பயிற்சிகளை நடத்திய பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்தொல்லாஹியான், தெஹ்ரான் "தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான சியோனிச ஆட்சியின் செயல்பாட்டை சகித்துக் கொள்ள மாட்டாது" என்று கூறியது, அண்டை நாடான அஜர்பைஜானுடன் இஸ்ரேலின் உறவுகளைக் குறிப்பிடுகிறது.

"பிராந்தியத்தில் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு முரண்பாடு மற்றும் சேதத்திற்கு நாசம் விளைவிப்பதாக உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் சம்பவங்களும் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் பிராந்தியத்தின் நாடுகள் அதிகாரம் மற்றும் பகுத்தறிவுக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தலைவர் கூறினார்.

பிராந்தியப் படைகளால் பிராந்தியத்தில் பாதுகாப்பை வழங்க முடியும் என்று ஆயதுல்லா கமேனி கூறினார், சில அரசுகள் தங்கள் சொந்த தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், வெளிநாட்டுப் படைகள் தலையிடவோ அல்லது பிராந்தியத்தில் அந்நிய இராணுவ இருப்பை அனுமதிக்கவோ கூடாது.

"ஈரானின் வடமேற்கில் உள்ள சில அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், வெளிநாட்டினரின் தலையீட்டுக்கு அனுமதி வழங்குவதைத் தவிர்த்து, தர்க்கத்துடன் தீர்க்கப்பட வேண்டும்" என்றும் தலைவர் கூறினார்.

"எங்கள் பிரியமான தேசத்தின் ஆயுதப்படைகள் எப்போதுமே பகுத்தறிவுடனும் சக்தியுடனும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் இந்த பகுத்தறிவு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு காரணியாகவும் இருக்க வேண்டும். மேலும் யார் ஒருவர் சகோதரர்களுக்காக முதலில் ஒரு குழி வெட்டுகிறார்களா அவர்களே அதில் விழுவார்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்." அவர் மேலும் கூறினார்.

ஆயதுல்லா கமேனி பாதுகாப்பு என்பது ஈரானின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளின் அடிப்படை உள்கட்டமைப்பு" என்று விவரித்தார், வெளிநாட்டவர்களை நம்பாமல் பாதுகாப்பை அடைவது முக்கியம் என்றும் கூறினார்.

ஈரானிய தேசத்திற்கு பாதுகாப்பு என்பது சாதாரண விஷயம் என்று தலைவர் கூறினார், பல நாடுகள் - ஐரோப்பாவில் கூட - அதை அடைவதில் சிக்கல் உள்ளது, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலியா - வெளிப்படையாக அமெரிக்க அழுத்தத்தின் கீழ் - பிரான்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிறகு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் கட்டளையை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வழங்கியது.

"சில ஐரோப்பியர்கள் அமெரிக்ககாவின் இந்த நடவடிக்கையை (பிரான்சின்) முதுகில் குத்தும் செயலாகவும், ஒரு வகையில் ஐரோப்பா, நேட்டோ மற்றும் உண்மையில் அமெரிக்காவை நம்பாமல் சுதந்திரமாக அதனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்". அவர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரினது ஒரு நேர்காணல் மேற்கோள் காட்டியே அவ்வாறு குறிப்பிட்டார்.

"ஐரோப்பாவை அமேரிக்கா எதிர்ப்பதில்லை என்றாலும் அமெரிக்காவை நம்பியிருப்பதால் நீடித்த பாதுகாப்பை அடைவதில் ஐரோப்பிய நாடுகள் தம்மில் குறைபாடு இருப்பதாக உணரும்போது, பிற வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் தங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கும் மற்ற நாடுகளின் நிலை தெளிவானது," என்று தலைவர் கூறினார்.

வெளிநாட்டு சக்திகளை நம்பி பாதுகாப்பை ஒப்படைப்பது வெறும் "மாயை" என்று ஆயதுல்லா கமேனி கூறினார்.

"இந்த மாயையால் பாதிக்கப்படுபவர்கள் விரைவில் அதன் பலனை அனுபவிப்பர், ஏனென்றால் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு, யுத்தம் மற்றும் அமைதி ஆகியவற்றில் வெளிநாட்டினரின் நேரடி அல்லது மறைமுக தலையீடு ஒரு பேரழிவாகவே அமையும்."

ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பலம்வாய்ந்த அமெரிக்க துருப்புக்களை அவமானத்துடன் திரும்பப் பெற்றதை ஆயதுல்லா கமேனி சுட்டிக்காட்டி, இது அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று கூறினார்.

"அமெரிக்க இராணுவம் மற்றும் அது போன்ற நாடுகளின் வீராப்பு எல்லாம் ஹாலிவுட் படங்களில் வரும் ஒரு காட்சி போன்றதே, ஆப்கானிஸ்தானில் அவர்களின் உண்மையான தன்மை நன்கு வெளிப்பட்டது" என்று தலைவர் குறிப்பிட்டார்.

"தலிபான்களை வீழ்த்துவதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர், இந்த நீண்ட ஆக்கிரமிப்பின் போது, அந்நாட்டில் அவர்கள் பல படுகொலைகளையும் கொடுமைகளையும் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர், ஆனால் அனைத்து பொருள் மற்றும் மனித அழிவுக்குப் பிறகும், அவர்கள் அரசாங்கத்தை தலிபானிடம் ஒப்படைத்துவிட்டு ஓடினர் - இது அனைத்து நாடுகளுக்கும் ஒரு நல்ல பாடம்.

ஆயத்துல்லா கமேனி அமெரிக்க இராணுவத்தின் மீது கிழக்கு ஆசிய மக்களின் வெறுப்பையும் தொட்டுக் காட்டி , "அமெரிக்கர்கள் தலையிடும் இடங்களிலெல்லாம் மக்களால் வெறுக்கப்படுகிறார்கள்" என்றும் கூறினார்.

https://www.presstv.ir/Detail/2021/10/03/667755/Iran-Leader-foreign-threat-neighbors-armed-forces-


Saturday, October 2, 2021

ஈரானின் சுற்றுலா தங்க முக்கோணம்

Iran’s golden ‘triangle’ of tourism



பண்டைய நகரமான கெர்மன்ஈரானின் தங்க முக்கோண சுற்றுலா தளங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளஏனைய தலங்களாக இஸ்ஃபாஹான்ஷிராஸ் மற்றும் யஸ்த் உள்ளன.

பழங்காலத்திலிருந்தே கெர்மான் ஒரு கலாச்சார பெருமைமிக்க இடமாக இருந்து வந்துள்ளதுபாரசீக துணைக்கண்ட பழங்குடி மக்கள் கலாசாரத்துடன் கலக்கிறது.

இப்பிரதேசம் பஜார்-இ சர்தாசாரிஜபாலீஹ் டோம்கஞ்சாலி கான் பாத்ஹவுஸ்மாலேக் ஜாமேஹ் மசூதி மற்றும் ஷாஹத் பாலைவனம் போன்ற எண்ணற்ற வரலாற்றுத் தளங்கள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய குடியரசிற்கு முதன்முறையாக வருகை தருபவர்களுக்கு தங்க முக்கோணம் என்றழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஈரானின் கலாச்சார அடையாளத்தின் உருவகத்தை வழங்குகிறது.

Fபத்ஹ்-அபாத் சோலை



Fபத்ஹ்-அபாத் சோலை கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ளது. மற்றும் இங்கு பிக்லார் பெகி மாளிகை’, ‘பிக்லார்பேகி சோலை’, ‘Fபத்ஹ்-அபாத் சோலை போன்றன ஈரானின் தென்கிழக்கு நகரமான கெர்மானுக்கு வெளியே 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படிஇந்த கட்டிட முறை மஹான் என்ற இடத்தில் ஷாஸ்டே சோலையை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் பாரசீக சோலைகளின் ஒரு பகுதியாக இந்த சோலை இன்னும் பதிவு செய்யப்படவில்லைஎன்றாலும் இது கண்டிப்பாக பார்வையிடத்தக்க இடமாகும்.

அந்தி நேரத்தில் பிரபல்யமான இந்த சோலைக்குச் சென்றுஅரண்மனையின் முகப்பில் நேர்த்தியான சிவப்புஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை காணும் உங்களை உண்மையிலேயே ஆச்சரியப்பட படவைக்கும்.

சோலையின் மத்தியில் அமைந்துள்ள குளத்தில் இந்த நிறங்களின் பிரதிபலிப்பைக் காணும் நீங்கள் பிரமித்துப்போவீர்கள். இந்த சோலை கஜார் வம்ச ஆட்சி காலத்தில் சுமார் 1255 (ஹிஜ்ரி-சூரிய) ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

Fபத்ஹ்-அபாத் நினைவு சோலை (Fathabad memorial garden) "ஃபசல் அலி கான் பிக்லர்பெய்கி" கெர்மானின் ஆட்சியாளராக இருந்தபோது நிர்மாணிக்கப்பட்டது. அதனால்தான் இது Biglarbeigi Garden என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகை அதன் தரை தளம் மற்றும் சுற்றி கவர்ச்சிமிகு நடைபாதைகளைக் கொண்டுள்ளதுஅதேசமயம் அதனது பிரம்மாண்டமான இரண்டாவது மாடிஅருமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அந்நாட்களில், Fபத்ஹ்-அபாத் கனாத் எனப்படும் பண்டைய பாரசீக நீர் வழங்கல் முறைகெர்மான் நகரத்திற்கு அவசியமான நீரை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. இதன் மூலமாகவே, ‘ஃபத் அலி சோலை மற்றும் மாளிகை அவற்றுக்குத் தேவையான தண்ணீரை பெற்றுக்கொண்டன.



தோட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பிரதானிகள் அமர்ந்திருக்கும் பகுதிஇரண்டு பெரிய செவ்வகக் குளங்கள் அதன் பிரமிக்க வைக்கும் முகப்பை பிரதிபலிக்கிறது. கட்டிட அமைப்பு முழுக்க முழுக்க செங்கற்களிலான மற்றும் மண் சாந்தினால் ஆனது. எளிமையான பொருட்களால் பண்டைய கட்டடக் கலைஞர்களால் இதுபோன்ற நுட்பமான கட்டிடங்களை எவ்வாறு அமைக்க முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

140,000 சதுர மீட்டர் பரப்பளவு சோலையின் நடுவில் 4000 சதுர மீட்டர் கொண்ட இந்த கட்டமைப்பும் அமைந்துள்ளது. சோலைக்கான நீர் Fபத்ஹ்-அபாத் கனாட் என்ற நிலத்தடி நீர்வழங்கல் மூலம் வழங்கப்பட்டது. கட்டிடத்தின் முக்கிய பகுதி இரண்டு இறக்கைகள் கொண்ட மத்திய கட்டிடம் ஆகும்இது சின்னத்தின் முக்கிய மையமாகும். மத்திய கட்டிடத்தின் கிழக்கில் நான்கு பருவ மாளிகை என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடமும் உள்ளது.

ஃபசல் அலி கான் பிக்லர்பெய்கியின் ஆட்சிக்கு பிறகுஇந்த அழகான , Fபத்ஹ்-அபாத் கார்டன் மற்றும் மாளிகையை, நுஸ்ரத் அல் மம்ளெக் I & II மன்னர்கள் காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.



பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு மெதுவாக உருக்குலைந்து வந்த போதிலும்சமகால முயற்சிகள் ஊடாக இந்த பொக்கிஷத்தை முழுமையாக மீட்டெடுத்துள்ளனர். இப்போதெல்லாம்சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள், Fபத்ஹ்-அபாத் கார்டன் மற்றும் மாளிகையின் நேர்த்தியான சிறப்பைக் கண்டு வியக்கின்றனர் எனலாம். மேலும் படிக்க

https://www.itto.org/iran/attraction/FathAbad-Garden-kerman/


ஷிராஸ்



2000 ஆண்டுகளுக்கும் மேலாக பாரசீக கலாச்சாரத்தின் மையப்பகுதியாக கொண்டாடப்படும் ஷிராஸ்தலைமுறை தலைமுறையாக பரவிய கல்விகவிதை மற்றும் கைவினைத் திறன்களுக்கு பேர் போன இடமாகும். இது இடைக்கால இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருந்தது மற்றும் சாண்ட் வம்சத்தின் போது (1751-1794) ஈரானின் தலைநகராகவும் இருந்தது. ஷிராஸ் ஈரானின் நூல்களுக்கான தலை நகர் என்றும் 2020 இல் பெயரிடப்பட்டுள்ளது.

யஸ்த்


ஜூலை 2017 இல்யஸ்த் மாகாணத்தின் தலைநகரான யஸ்த் நகரத்தின் வரலாற்று அமைப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக பெயரிடப்பட்டது. இது பொதுவாக தங்குவதற்கான ஒரு மகிழ்ச்சியான இடம் அல்லது அதன் அனைத்து பார்வையாளர்களாலும் "தவறவிடக்கூடாத" இலக்கு என்று குறிப்பிடப்படுகிறது. இது புதுமையான பேட்கிர்கள் (காற்று உள்வாங்கி)இயற்கை அழகு கொண்ட  பாதைகள் மற்றும் பல இஸ்லாமிய மற்றும் ஈரானிய நினைவுச்சின்னங்களைக் கொண்ட மண் செங்கல் வீடுகளால் கண்கவர் நகர நிலப்பரப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ஃபஹான்



ஒரு வளமான கலாசாரத்தில் ஊறிப்போனஇஸ்ஃபஹான் ஒரு காலத்தில் ஈரானில் சர்வதேச வர்த்தகம் மற்றும் இராஜதந்திரத்தின் பாதையாக இருந்ததுஇப்போது அது ஈரானின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இணையற்ற இஸ்லாமிய கட்டிடங்கள்சந்தைகள்அருங்காட்சியகங்கள்பாரசீகத் தோட்டங்கள்மற்றும் மரங்கள் நிறைந்த சோலைகள்அரண்மனைகள் போன்ற பல கட்டடக்கலை அதிசயங்களால் நிரம்பிய இஸ்ஃபஹான்பலரின் கருத்துப்படிஅதன் பிரம்மாண்ட சந்தையில் தொலைந்து போதல்அழகான தோட்டங்களில் உலா வருதல் மற்றும் மக்கள் சந்திப்பு இடங்கள் என பல அம்சங்கள் நிறைந்து உள்ளன. இஸ்ஃபாஹான் நீண்ட காலமாக "நெஸ்ஃப்-இ-ஜஹான்" (உலகின் பாதி) என்று அழைக்கப்படுகிறதுஇங்கு விஜயம் செய்வது என்பது உலகின் பாதியை பார்ப்பதற்கு சமனாகும்.

https://www.tehrantimes.com/news/465067/Kerman-added-to-Iran-s-golden-triangle-of-tourism


Tuesday, September 28, 2021

இமாம் ஹுசைனின் ஷஹாதத் அநீதி, கொடுங்கோன்மை, ஆணவத்திற்கு எதிரான ஓர் எழுச்சி

 America cannot confront Husseini ideology: political activist



அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளிகளினாலோ ஹுசைனி இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கூறுகிறார் ஒரு லெபனான் அரசியல் ஆர்வலர்

"எதிர்ப்பு இயக்கங்கள் ரசூலுல்லாஹ்விடம் இருந்து கற்றுக்கொண்ட உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் இயங்குகின்றன, அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும், மற்றும் தூய்மையான இமாம்களையும், பொருந்திக்கொள்ளட்டும்" என்று ஹுசைன் அல்-திரானி டெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.

"எதிர்ப்பு சித்தாந்தத்தை எதிர் கொள்வதென்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை; அவர்களுக்கு தார்மீக சிதைவு மற்றும் சமூக மற்றும் குடும்ப சிதைவு தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை” என்று அல்-திரானி குறிப்பிடுகிறார்.

இருபது வருடப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, ஒரு நாடு எதிர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒற்றுமையாக செயல்பட்டால் இராணுவ ஆதிக்கத்தால் போர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதையே இது உணர்த்தியுள்ளது.

இப்போது பல அரசியல் ஆய்வாளர்கள் ஈராக் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதை எதிர்பார்க்கலாம் என்று ஆரூடம் கூறுகின்றனர்.

லெபனான் ஆர்வலர் வாதிடுகையில், மக்களின் சக்திக்கு முன்னால் அவர்களது இராணுவ சக்தி தோல்வியை தழுவியதையே அது நிரூபித்தது, அமெரிக்கர்கள் தாங்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தான் ஆகும், அமெரிக்க ராணுவம் வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுவதை நாம் கண்டோம்" என்று லெபனான் ஆர்வலர் கூறுகிறார்.

அல்-திரானி மேலும் கூறுகையில், "முன்னர், லெபனானிலிருந்தும் அமெரிக்கப் படைகள் சத்திய போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஒரு காட்சியை நாங்கள் கண்டோம். விரைவில் சிரியா, ஈராக் மற்றும் யேமனில் இருந்து தப்பித்து ஓடுவதையும் நாம் காண்போம்".


அவரின் முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

கே: இஸ்லாமிய உம்மத்தின் அரசியல் வாழ்க்கையில் தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஷஹாதத் நினைவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

: இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்), அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் தேதி ஹிஜ்ரி 61 கர்பலாவில் நடந்த தியாகம் மனித வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய சோக பேரழிவாகும்.

இமாம் அல்-ஹுசைனின் ஆளுமை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு சிறப்புப் பாடத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் இறை தூதரின் பேரனாக இருந்தார், "ஹுசைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுசைனை சேர்ந்தவன்". என்று ரசூலுல்லாஹ் கூறிய ஹதீஸ் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

மேலும், அவரது பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் சொர்க்கது  இளைஞர்களின் தலைவர்களாகும்."

றஸூலுல்லாஹ்வின் மற்றொரு ஹதீஸின் படி,: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் ஆகிய இருவரும் இமாம்கள் ....." அவர்கள் இமாம் அலியின் புத்திரர்கள்; இறைவனின் அமைதி அவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்

எனவே, இமாம் ஹுசைன், (அலை), புரட்சியின் சின்னமாக இருந்தார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார், மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் புகலிடமாக இருந்தார். அவர் எங்களுக்கு சத்திய போராட்டத்தின் பாதையைக் காட்டினார் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மனசாட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கே: ஊடகங்கள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பெயர், சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் என்ற வேறுபாடின்றி, முஸ்லிம்கள் மனதில் எப்படி படிந்தது?

ப: இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஞாபகார்த்த துக்க நிகழ்ச்சிகள், அது அவரது தியாகத்தின் ஆரம்ப காலம் முதலே நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்கள் மனதில் அவரது நினைவை புதுப்பித்து வந்தது எனலாம்.

மற்றொரு அம்சம் என்னவெனில் இமாம் ஹுசைனின் சகோதரி ஸைனப் ஆகும், அவர் இமாம் அலீ பின் அல்-ஹுசைன் ஸெய்ன் அல்-ஆபிதீன் (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாவதாக) அவர்களுடன் அப்போதைய கலீபாவின் அரண்மனைக்கு வந்தபோது அவரது உறுதியான எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த இருவரும் யஸீதின் அநீதியையும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது குடும்பத்துக்கு எதிரான அடக்குமுறையையும் பரப்ப ஊடகப் பாத்திரத்தை வகித்தனர், யஸீதின் அரண்மனையில் அவர்கள் ஆற்றிய உரை சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது.

அரண்மனையில் அப்போது கூடியிருந்த மக்கள் றஸூலுல்லாஹ்வின் பேரனுக்காக கதறி அழ ஆரம்பித்தபோது, தனது ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்று யஸீத் அச்சமடைந்தார்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு தேசியங்கள் மற்றும் இனங்களுக்கிடையே வருடம் தவறாது ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஹுசைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் இந்த புரட்சி உணர்ச்சி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், ஊடகங்களிலும் நிலைத்திருப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன.

கே: பாலஸ்தீனம் மற்றும் லெபனான் முதல் யெமன் வரையிலான பிராந்தியத்தில் போராட்ட இயக்கங்களில் ஹுசைனி எழுச்சியின் தாக்கம் என்ன? இமாம் ஹுசைன் நிறுவிய திசையிலிருந்து போராளிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை

. இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் எழுச்சி மற்றும் அநியாயத்திற்கு எதிரான அவரது புரட்சி, சுதந்திரப் புரட்சியாளர்கள் தங்கள் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட போராளிகள் சரியான பாதையை வெளிச்சமிட்டு காட்டியது என்பதில் சந்தேகமில்லை.

லெபனானில், இமாம் மூசா அல்-சதர் லெபனான் மக்களை  ஆக்கிரமிப்பு மற்றும் சியோனிச ஆட்சியை எதிர்த்து போராடுவதற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் போக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் இமாம் ஹுஸை (அலை) அவர்களது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் இருந்து அணிதிரட்டினார்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் புரட்சியால் அவர் ஈர்க்கப்பட்டார், அதை ஓர் உதாரண பாதையாக மற்றும் நடைமுறை அணுகுமுறை என அவரது அனைத்து ஜிஹாதி மற்றும் அரசியல் இயக்கங்கள் மற்றும் நோக்குநிலைகளிலும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு, எதிர்ப்புப் போக்கு தொடர்ந்தது மற்றும் இன்றுவரை சியோனிச எதிரியுடன் அனைத்து முனைகளிலும் பெரும் வெற்றிகளை அடைந்து வருகிறது.

இனவெறி, பயங்கரவாத அமெரிக்க நிர்வாகம் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூலிப்படையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட உலகளாவிய திமிர் முன்னணியால் உருவாக்கப்பட்ட புதிய தக்பிரி எதிரியுடன் ஒரு எதிர்ப்பு முன்னணி வெற்றிகரமாக போராடி வருகிறது.

லெபனான், பாலஸ்தீனம், யெமன், ஈராக் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சத்திய போராளிகள் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளின் போது எழுப்பிய முழக்கங்களை பிரதிபலிக்க போதுமானது, குறிப்பாக அவர்களின் நிரந்தர முழக்கம்:

இப்னு ஸியாத் (இமாமின் எதிரி) எங்களுக்கு இரண்டு தேர்வுகளை முன்வைத்தான்; போர் அல்லது சரணடைதல் எனும் அவமானம். ஆனால் அவமானங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவவனாலும் அவனுடைய தூதராலும், துஷ்டனுக்கு கீழ்ப்படிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் நாம் கற்றுக்கொடுக்கொண்ட பாடம் இதுதான்: கொடுங்கோலர்களுக்கு அடிபணிய ஒப்புக்கொள்ள வேண்டாம், சரணடைய வேண்டாம்; அநீதி, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை பயமின்றி எதிர்க்க வேண்டும். தோற்கடிக்கும் வரை போராட வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் வெற்றியடையும்வரை போராடவேண்டும்; அதில் நாம் உயிர் தியாகம் செய்ய நேரிட்டாலும் சரியே. இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நித்திய வாழ்க்கையில், மரியாதை மற்றும் கண்ணியத்தை அடைவோம்.

கே: போராட்ட முன்னணியின் ஹுசைனி சித்தாந்தத்தை எதேச்சதிகார அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் எதிர்கொள்ள முடியுமா? இமாம் ஹுசைன் கைக்கொண்ட வழிகள் மக்கள் மீதான "மென்மையான செல்வாக்கு" என்று விளக்கப்படலாம், ஏனெனில் இமாம் அவர்களின் போதனைகள் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அத்தகைய செல்வாக்கை அமெரிக்கா எதிர்கொள்ள முடியுமா?

. ஹுசைனி சித்தாந்தம் என்பது முஸ்லிம்களின் இதயங்களில் ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை ஆகும். உலகில் எந்த ஒரு சக்தியாலும் அத்தகைய நிறுவப்பட்ட நம்பிக்கையை எதிர்க்கவோ அல்லது தோற்கடிக்கவோ முடியாது, அது இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சரி.

ஆமாம், இந்த உண்மையான ஹுசைனி மற்றும் புரட்சிகர சிந்தனையைச் சேர்ந்தவர்களை மதிப்பிழக்கச் செய்வதற்காக அமெரிக்க நிர்வாகம் ஆராய்ச்சி மையங்களுக்காகவும் மூலோபாய மற்றும் ஊடக ஆய்வுகளுக்காகவும் ஒரு பெரிய பட்ஜெட்டை வருடாந்தம் செலவிடுகிறது. போராட்ட இயக்கங்களுக்கு எதிராக இராணுவம், உளவுத்துறை மற்றும் ஊடகப் போரைத் தொடர அது தயங்காது என்பது உண்மையே.

போராட்ட இயக்கங்கள் உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் நிறுவப்பட்டுள்ளன, இது இறைதூதரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மற்றும் தூய இமாம்களின் வழிகாட்டல் அடிப்படையைக் கொண்டுள்ளது, இவர்களது இந்த போராட்ட சித்தாந்தத்தை எதிர்கொள்வது என்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை.

அவர்களது இராணுவ சக்தி அனைத்தும் உறுதிகொண்ட  மக்களின் முன்னிலையில் தோல்வியை தழுவும் என்பதையே சரித்திரம் நிரூபித்தது, அமெரிக்கர்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தானில் ஆகும், அங்கிருந்து அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

முன்னதாக, லெபனானில் இதுபோன்ற காட்சியை நாங்கள் கண்டோம், அமெரிக்க துருப்புக்கள் போராட்ட முன்னணியின் தாக்குதல்களுக்குப் பிறகு தப்பி ஓடியது, சிரியா, ஈராக் மற்றும் யெமனில் இருந்தும் மிக விரைவில் அவர்கள் தப்பி ஓடுவதை நாங்கள் விரைவில் காண்போம்.

கே: அர்பஈன் (இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட 40 ஆம் நாள்) அணிவகுப்புகள் எதிர்வரும் காலங்களில் (அதாவது இஸ்லாமிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய் அடங்கிய பிறகு) மற்ற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் நீடிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ப. ஈராக்கிலும் மற்றும் ஈராக்கிற்கு வெளியிலும், கொரோனா தொற்றுக்கு முன், அர்பஈன் அணிவகுப்புகளில் மக்கள் பங்கேற்றதன் அடிப்படையில், நாங்கள் கண்ட காட்சி எமது கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது; கர்பலாவில் அர்பீன் அணிவகுப்பில் 25 மில்லியன் யாத்ரீகர்களுக்கும் அதிகமானோரை பங்கேற்றனர். அது ஒரு மானுட சூறாவளி போல் இருந்தது.

இந்த நிகழ்வை மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் அணிவகுப்பை கண்ட வெளிநாட்டு ஊடகங்கள் பிரமித்து, வாயடைத்து போகின்றன. பிறகு, இமாம் ஹுசைன் மீதான இந்த அன்பு எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை ஆராய தலைப்படுகின்றன.

அதன் செய்தி என்னவென்றால் அது ஒரு புரட்சி மற்றும் அநீதி, கொடுங்கோன்மை மற்றும் ஆணவத்திற்கு எதிரான எழுச்சி என்பதைத் தவிர வேறில்லை.

இந்த கர்பலா அணிவகுப்பில் ஷிஆக்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான சன்னிகளுடன் கிறிஸ்தவர்களும் பங்கேற்பதையும் நாங்கள் கண்டோம், இந்த அணிவகுப்பில் ஷியாக்களின் பிரசன்னம் மிகப்பெரியதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவுகுரியது என்று கூற முடியாத, உலகளாவிய செய்தி அதில் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

https://www.tehrantimes.com/news/465443/America-cannot-confront-Husseini-ideology-political-activist

தமிழில்: தாஹா முஸம்மில்