Contributors

Thursday, August 19, 2021

ஆஷூரா நாளில் இருந்து உலகவாழ் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

 Lessons for Muslims around the world from the day of Ashura

ஆஷுரா நாளில் இருந்து அனைத்து முஸ்லிம்களும் பெறக்கூடிய மகத்தான பாடங்கள் பல உள்ளன. இங்கு நாம் 10 பாடங்களை தொகுத்துத் தருகிறோம்:

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஆஷுரா தினத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஹுசைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு கர்பலா களத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர்.

வரலாறு அதை ஒரு போர் என்று அழைத்த போதிலும் உண்மையில் அது ஒரு படுகொலையாகும், ஏனெனில் ஒரு ஊழல் மிக்க தலைவருக்கு விசுவாசம் கொடுக்க மறுத்த இமாம் ஹுசன் (அலை) அவர்களின் முகாமை ஆயிரக்கணக்கானோரை கொண்ட யசீதின்  ராணுவம் முற்றுகையிட்டு, இமாம் ஹுசன் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தார்களையும் அவரின் தோழர்களையும் படுகொலை செய்தனர்.

இமாம் ஹுசன் (அலை) அவர்கள் கொளுத்தும் வெப்பத்தில் மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் இருந்த தனது ஆறு மாத குழந்தைக்கு தண்ணீர் கோரிய வேளை, வஞ்சகர்களால் குறிவைக்கப்பட்ட அம்பினால் அந்த பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது. ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர் தியாகத்திற்கு பிறகு, றஸூலுல்லாஹ்வின் பேரனின் புனித உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது, மேலும் அவரது சகோதரி அடங்கலாக பெண் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அனைத்தும் கொடியவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

ஹுஸைன் (அலை) அவர்கள்  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஆவார். இங்கே மிகவும் துக்ககரமான செய்தி என்னவென்றால்,

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவரது பேரனைப் பற்றி, இவ்வாறு கூறியுள்ளார்கள்:

"ஹுசைன் என்னிலிருந்து வந்தவர், நான் ஹுசைனில் இருந்து வந்தவன். ஹுசைனை நேசிப்பவரை அல்லாஹ் நேசிக்கிறான். (திர்மிதி)

சந்தேகத்திற்கு இடமின்றி பேராசை, அடக்குமுறை மற்றும் இந்த உலகத்தின் மீதான ஆசை ஆகியவை இந்த துஷ்டர்களை நபி (ஸல்) அவர்களின் அன்பிற்குரிய பேரனை படுகொலை செய்ய வழிவகுத்தது,

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார், இறைவன் மீது பயபக்தியுள்ள மக்களுக்காக எழுந்து நின்றார்; தீயவர்களிடம் இருந்து இஸ்லாத்தை காக்கவே அவர் இவ்வாறு செய்தார்.

துஷ்டனான யஸீதுக்கு விசுவாச பிரமாணம் செய்ய மறுத்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரான எனது பாட்டனாரின் உம்மாவினது சீர்திருத்தத்தை நாடும் ஒரே குறிக்கோளுக்காக நான் போராடத் தயாராக இருக்கிறேன்.  நான் என் பாட்டனார் றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மற்றும் எனது தந்தை அலி பின் அபி தாலிப் (அலை) அவர்கள் செய்தது போல், நல்லதை ஏவவும் தீமையை தடுக்கவும் மற்றும் மக்களின் விவகாரங்களை இஸ்லாத்தின் வழிநடத்தவும் விரும்புகிறேன்".


ஆஷூரா நாளில் இருந்து உலக வாழ் முஸ்லிம்களும் மற்றும் அனைவரும் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொள்ளலாம். நாம் கீழே 10 பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்:

1.      தவ்ஹீத் எனும் இறைவனின் ஒருமை

அன்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டவே அனைத்தையும், செய்தார்கள் - அல்லாஹ்வே இறைவன் என்று போதிப்பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அவரது பாட்டனாரான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பணியை தொடர்வதற்காக, நிலைமையை சீர்திருத்துவதற்காக கொடுங்கோன்மைக்கு எதிராக எழுந்து நின்றார். அல்லாஹ்வின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கை, அவர் உயிர் தியாகத்திற்கு முன் சொன்ன இந்த பிரார்த்தனையில் பிரதிபலிக்கின்றது:

"இந்த உலகம் இனிமையானதாக கருதப்பட்டாலும், அல்லாஹ்வின் வெகுமதி அற்புதமானது மற்றும் உன்னதமானது; மேலும் உடல் மரணத்திற்காக உருவாக்கப்பட்டிருப்பதால், அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்வது மனிதனுக்கு சிறந்தது; மற்றும் வாழ்வாதாரம் பரந்தளவில் இருந்தாலும், அவை உறுதி செய்யப்பட்டால், அதை தேடுவதிலேயே மனிதன் கடுமையாக முயற்சி செய்யக்கூடாது; இந்த செல்வத்தை சேகரிப்பது, விட்டுச் செல்வதற்கு என்றால், மனிதன் ஏன் அதன்பால் வெறித்தனமாக இருக்க வேண்டும்?”

2. உங்கள் சுய கௌரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆற்றிய உரையில், அதிகாரிகள் அவருக்கு அவமானம், அல்லது மரணம், இரண்டு தேர்வுகளை மட்டுமே விட்டு வைத்தார்கள் என்று குறிப்பிட்டு "நாம் அவமானத்தை ஏற்கவில்லை," என்றார்.

3.  மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை

கர்பலா களத்தில் உயிர் தியாகத்தை சந்தித்த ஒருவரின் பெயர் ஹூர் (அதாவது சுதந்திரம்) என்பதாகும். அவர் யஸீதின் ராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்தார், மேலும் அவரது நடவடிக்கைகள் காரணமாகவே இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் கர்பலாவில் இட்டிருந்த முகாம் முற்றுகையிடப்பட்டது. குடிப்பதற்கான நீரையும் தடுத்தவர் அவரே. அதனால் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியே வர நிர்பந்திக்கப்பட்டார்கள். போர் முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்துடன் இணைந்து கொண்டார், தாம் செய்த தவறுக்காக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கோரினார். யஸீதின் ராணுவத்தில் வீரமரணம் அடைந்த முதல் நபர்களில் இவரும் ஒருவர்.

மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை, எந்த பாவமும் திரும்பி வர முடியாத அளவுக்கு கடினமானது அல்ல.  "உங்கள் தாய் உங்களுக்கு பெயரிட்டபடி நீங்கள் நிச்சயமாக சுதந்திர புருஷராக இருக்கிறீர்கள்." என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் குறிப்பிட்டார்கள். கடைசி சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனம் திருந்தலாம் என்பதற்கு ஹூரின் கதை சான்று.

4. வாழ்க்கை கடினமாக இருக்கும் போது, அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகையில் அல்லாஹ்வின் திருப்தியை தவிர வேறு எதையும் நாடவில்லை. தோழர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினரும் போர்க்களத்தில் விழுந்த போது, "அல்லாஹ் இதற்கு சாட்சியாக இருக்கிறான் என்பதால் மட்டுமே மட்டுமே அது இந்த துக்கம் தாங்கக்கூடியதாக உள்ளது," என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சொன்னார்கள்.

5.      சுதந்திர சிந்தனையாளராக இருங்கள்

ஆஷுரா நாளில் இமாம் ஹுஸைன் (அலை) கூறிய முக்கிய விடயங்களில் ஒன்று " உங்களுக்கு மதம் என்று எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் தற்போதைய வாழ்க்கையில் குறைந்தபட்சம் சுதந்திர புருஷர்களாக (திறந்த மனதுடன்) இருங்கள்." உலகில் ஆயிரக்கணக்கானோர் ஒரு கொடுங்கோல் ஆட்சி தலைவனை ஏற்றுக்கொண்டு, கண்மூடித்தனமான விசுவாசத்தை செலுத்தி கொண்டிருக்கையில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

இது நம் அனைவருக்கும் முக்கியமான வாழ்க்கை பாடமாகும் - நாம் சுதந்திரமாக சிந்தித்து, திறந்த மனதுடன், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மறுபரிசீலனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

6.      எப்போதும் உண்மையை ஆதரித்து பாதுகாக்கவும்

இஸ்லாம் சத்தியத்தை பிரதிபலிக்கிறது, பொய்யான உலகில் இதுவே யதார்த்தம், இதைத் தான் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் பாதுகாக்கத் துடித்தார்கள். அவர் அதை பாதுகாக்க தன்னிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.

அவரது மூத்த மகன் அலி அல்-அக்பர் ஆஷூரா நாளில் தந்தையிடம் கேட்டார், "நாங்கள் சாத்தியத்துக்காகத்தானே போராடுகிறோம்?" என்று. அதற்கு இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள், அதைக்கேட்ட அவரது மகன் "அப்படியானால், மரணம் நம்மை நோக்கி வந்தாலும் சரி அல்லது நாம் மரணத்தை நோக்கி சென்றாலும் சரி எந்த வித்தியாசமும் இல்லை," என்று கூறினார்கள்.

7.      மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அரை சகோதரர், அப்பாஸ் இப்னு அலி (ரஹ்) அவர்கள்  பெரும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்கள். அவரது புனைப்பெயர் அபு ஃபாதில் (நல்லொழுக்கங்களின் தந்தை). அவர் மனித குளம் அறிந்துகொள்வதற்காக ஆஷுரா நாளில் தனது உயர் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தினார். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்தின் கொடியை ஏந்தியவர் அவர். எதிர்தரப்பினர் பயந்து நடுங்கும் அளவிற்கு மாவீரர், இமாமின் தீவிர விசுவாசியாக இருந்தார், தாகத்தால் தவித்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது புதல்விகளுக்கு குடிப்பதற்கு நீர் எடுத்து வர சென்ற வேளையில் ஷஹீதாக்கப்பட்டார்.

ஆற்றை அடைந்ததும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களினதும் அவரது குழந்தைகளினதும் தாகத்தை தீர்க்க நீரை கொண்டு வருவதற்கு முன்பு தனது நா வறண்ட நிலையில் தானும் நீரருந்த முயன்றார். கூடாரத்தில் தாகத்தால் தவிப்போரின் நிலை அவர் கண் முன் வந்து நின்றது, தனக்கு முன் அவர்களது தாக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற எண்ணம் காரணமாக அவர் தான் கையில் ஏந்திய நீரையும் குடிக்காமல், கூடாரத்துக்கு திரும்புகையில், மறைந்திருந்த யஸீதின் இராணுவத்தால் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாளில் அவர் எமக்கு வழங்கிய பல பாடங்களில் இதுவும் ஒன்று. சுயநலமின்மை, தன்னலத்தை விட பிறர் நலனே முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.

8.      பொறுமை காத்தல்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தியாக கதையை அறிந்தவர்கள் பெரும்பாலும் அவர் பட்ட துயரங்களையும், அன்றைய வாழ்க்கையில் அவரின் சொந்த கஷ்டங்களின் போது அவர் வெளிப்படுத்திய பொறுமையையும் விபரிக்கின்றார். இது பலவீனத்தினால் வந்த பொறுமை அல்ல, மாறாக எந்த நிலைக்கும் முகம் கொடுக்கக்கூடிய அவரது ஈமானின் உறுதி. "இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கண் எதிரிலேயே அவரது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, மன உறுதியுடன் நின்ற இமாமைப் போன்ற ஒருவரை நாம் இஸ்லாமிய சரித்திரத்தில் காண்பதரிது.

9.      நன்மையை ஏவுதல் மற்றும் தீயதை தடுத்தல்

ஒவ்வொரு முஸ்லிமும் நல்லதை ஏவவும், தீயதைத் தடுக்கவும், வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார், இது இஸ்லாம் விதித்த இன்றியமையாத கடமைகளில் ஒன்றாகும். இதில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அவர் இந்த போராட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் ஒரே குறிக்கோள், நன்மையைக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் மற்றும் தீமையை தடுத்தலுமாகும் என்று குறிப்பிட்டார்.

10.  பெண்களுக்கு உரிய இடம் வழங்குதல்

இமாமவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பேத்திகள் மற்றும் ஸஹாபி பெண்மணிகள் இருந்த கூடாரங்கள் கொடியவர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. இங்குதான் இமாம் ஹுசைனின் சகோதரியும் புனித நபியின் பேத்தியுமான ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா அவர்கள் முகாமில் எஞ்சியிருந்தவர்களின் தலைமையை ஏற்றார். ஒழுக்க சீலத்துக்கு உதாரணமாகவும் கற்புக்கரசிகளாகவும் அறியப்பட்ட றஸூலுல்லாஹ்வின் குடும்பப் பெண்கள், சிறைபிடிக்கப்பட்டு டமாஸ்கஸ் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இருந்தபோதிலும், ஸைனப் ஸலாமுன் அலைஹா அவர்கள் யஸீதின் அரண்மனையில் அச்சமின்றி, உறுதியாக நின்று பின்வருமாறு கூறினார்கள்.

"ஓ யாசித்! எங்கள் மக்களின் தியாகம் மற்றும் எங்களை சிறைபிடித்தல் காரணமாக நாங்கள் தாழ்ந்தவர்களாகவும் இழிவானவர்களாகவும் மாறிவிட்டோம் என்று நினைக்கிறாயா? நீ எங்கள் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிட்டதால், நாங்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால், அல்லாஹ் அவனுடைய ஆசீர்வாதத்தை எங்களிடமிருந்து எடுத்துவிட்டான் என்று நினைக்கிறாயா? இறைநேசர்களை கொல்வதன் மூலம் நீ பெரிய ஆளாகவும் மரியாதைக்குரியவராகவும் ஆகிவிட்டாய் என்று நினைக்கிறாயா? என்று காரசாரமாக கேள்வியெழுப்பினார்.

போர் முடிந்த பிறகு, ஒரு பெண்ணாக இருந்து எஞ்சியிருந்தவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற்றினார்.

கொடுங்கோலனுக்கு சவால் விடுத்து, முழு முஸ்லிம் உலகத்தையும் வழிநடத்திய ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா, இஸ்லாத்தில் பெண் வலுவூட்டலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

 

Friday, August 13, 2021

கர்பலாவும் ஈரானின் வெளியுறவு கொள்கையும்

Ashura and Iran's foreign policy


ஈரான் இஸ்லாமிய குடியரசின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் இமாம் ஹுசைனின் (அலை) அவர்களது இயக்கம் மற்றும் ஆஷுராவின் உத்வேகம் எப்போதும் ஆதாரங்களாக இருந்துவந்துள்ளன.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறை இமாம் ஹுசைன் (அலை) அவர்களது கொள்கையின் அடிப்படையில் இருந்து வருகிறது.

ஈரானின் வெளியுறவு சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு அவை அரசியலமைப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆணவத்திற்கு எதிராக போராடுவது, அனைத்து வகையான ஆதிக்கத்தையும், மேலாதிக்கத்தையும் நிராகரித்தல், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுதல், அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாத்தல், மேலாதிக்க மற்றும் ஒடுக்குமுறை அதிகாரங்களை அனுமதியாமை மற்றும் அடக்குமுறையை நிராகரித்தல் போன்ற கொள்கைகள் இதில் அடங்கும்.

இந்த கொள்கைகள் இஸ்லாமிய ஈரானின் கலாச்சார விழுமியங்களால் ஈர்க்கப்பட்டவை, அதில் கர்பலாவின் எழுச்சியும் ஆஷுரா நிகழ்வும் அதன் தூண்களாகும். மேலும் இவை அரசியலமைப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இந்த கொள்கைகள் மற்றும் மதிப்புகள் இஸ்லாமிய ஈரானின் வெளியுறவுக் கொள்கையில், ஈரானின் வரலாற்றின் அத்தியாயங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளன.

தொடரும் கட்டுரை இந்த கொள்கைகளை மேலும் தெளிவுபடுத்துவதோடு  ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கையில் அவற்றின் எடுத்துக்காட்டுகளைப் பற்றியும் பேசுகிறது.

வெளியுறவுக் கொள்கையில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிலைப்பாடு:

இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பின் ஷரத்து 152, 154, 14, 11 மற்றும் பிரிவு 3 மற்றும் பிரிவு 16 இன் படி, அனைத்து மனிதர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் அதன் ஈரான் அதன் குறிக்கோளாகக் கருதுகிறது, மேலும் இது அனைத்து மனிதர்களின், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.

இஸ்லாமிய புரட்சியின்போது ஈரானிய மக்களின் முக்கிய விருப்பமாக கொள்கைகள் இருந்தன, "கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம் எமது இலக்கு இஸ்லாமிய குடியரசு" மேலும் "சுதந்திரம், சுதந்திரம், இஸ்லாமிய குடியரசு" என்ற முழக்கங்களாகவே இருந்தன.

இந்த கோட்பாடுகள் அரசியலமைப்பில் பல்வேறு இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன, இதில் ஷரத்து 2 இன் பத்தி C இல் "கொடுங்கோன்மை, ஆதிக்கம், அடக்குமுறை அல்லது அடிபணிதல் ஆகிவற்றை, அவை எந்தவடிவத்தில் இருப்பினும், நிராகரித்தல்". மற்றும் ஷரத்து 5 இன் 5 பிரிவில் "காலனித்துவத்தை முழுமையாக நிராகரித்தல் மற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்தை தடுப்பது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 152, வெளியுறவுக் கொள்கைப் பற்றி விவரிக்கிறது, "ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கை எந்த வகையிலும் மேலாதிக்கம் மற்றும் அடக்குமுறையை மறுப்பது, அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பது, மேலாதிக்க சக்திகளுடன் ஒத்துப்போகாமல், எம்முடன் விரோதம் பாராட்டாத  அரசாங்கங்களுடன் அமைதியான உறவுகளைப் பேணுதல்," என்று குறிப்பிடுகிறது. ஷரத்து "இயற்கை வளங்களின் மற்றும் பொருளாதார வளங்கள், கலாச்சாரம், இராணுவம் அல்லது நாட்டின் பிற விவகாரங்கள் மீது வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் தடைசெய்யப்பட்டுள்ளது," பிரிவு 153 கூறுகிறது,

அரசிலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த கொள்கைகள் ஈரானிய அரசியல் கலாச்சாரத்தை வளப்படுத்தி, வளங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

புனித குர்ஆனின் வசனங்கள், இஸ்லாத்தின் வருகையின் வரலாறு மற்றும் இஸ்லாமிய அரசின் தோற்றம்,  பிறருடன் தொடர்பு கொண்ட விதம், நபி (ஸல்) அவர்கள், இமாம்கள் (அலை) மற்றும் தோழர்கள் ஆகியோரின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் குணங்கள் அனைத்தும் வெளியுறவுக் கொள்கையை சத்திய பாதையில் வழிநடத்தும் வளமிக்க ஆதாரங்களாகும், அவை நிலையான கொள்கைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான அரசியலமைப்பை வரைந்த அறிஞர்களுக்கு இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஷரத்துகள் மற்றும் பந்திகளை வரைகையில், குறிப்பாக இமாம் ஹுசைன் (அலை) போராட்டம் மற்றும் ஹிஜ்ரி 61 (கி.பி. 680)இல் இடம்பெற்ற கர்பலா எழுச்சி ஆகியன உத்வேகம் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.

ஷீஆ முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஈரானியர்களுக்கு, கர்பலா சம்பவமானது ஒரு தனிநபர் மற்றும் சமூக வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேலும் ஓர் அரசை அமைப்பதற்குரிய ஒரு மதிப்புமிக்க விடயமாகும்.

இஸ்லாமிய குடியரசு உருவான பிறகு, கர்பலா எழுச்சியின் கொள்கைகள் மற்றும் அது வழங்கும் செய்திகளின் தாக்கத்தை இஸ்லாமிய குடியரசின் சட்டப்பூர்வ ஆவணங்களிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மற்றும் அதன் நான்கு தசாப்த செயல்பாடுகளிலும் தெளிவாக உணரலாம்.

கர்பலா எழுச்சியின் மதிப்புமிக்க கோட்பாடுகள் மற்றும் ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் அந்தக் கொள்கைகளைப் பயன்படுத்துதல்

கர்பலா நிகழ்வானது ஆணவம் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக போராடும் கொள்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

கூபா வாசிகள் நசுக்கப்படும் நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்கு நபி (ஸல்) அவர்களின் பேரனான இமாம் ஹுசைன் (அலை) அவர்களை  அழைத்தார்கள்.

கூபா மக்களின் அழைப்பின் பேரில் அவர்களின் விசுவாசக் கடிதங்களைப் பெற்ற பிறகு, இமாமவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின் அரசியல் மையத்திற்குச் சென்று முதலில் மக்களை அவதிக்கு உட்படுத்தி வரும் கொடுங்கோன்மைக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினார்கள்.

கர்பாலா நிகழ்வில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருடன் இருந்தபோதிலும், தனதும் தனது தோழர்களினதும் மற்றும் தனது குடும்பத்தினதும் உயிர்த்தியாகம் பற்றி தெளிவாக அறிந்திருந்தபோதிலும், அவர்களின் கூடாரங்கள் எரிக்கப்படும் என்று அறிந்திருந்தபோதிலும் மற்றும் அவரது குடும்பத்தவர் பலர் சிறைபிடிக்கப்படுவர் என்று கணிக்கக்கூடியதாய் இருந்தபோதிலும் கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் ஆணவத்திற்கு எதிராக போராடும் தனது முடிவிலிருந்து அவர் பின்வாங்கவுமில்லை சமரசம் செய்துகொள்ளவும் இல்லை.

கர்பலா எழுச்சியிலும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்திலும், " மேலாதிக்கத்தை நிராகரித்தல் மற்றும் அநியாயத்திற்கு அடிப்படியாமை" ஆகியன நிலையான கொள்கைகளாக இருந்தன.

ஈரானின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய கொள்கையாக இருக்கும் சுதந்திரமானது கர்பலா எழுச்சியின் வேர்களைக் கொண்டுள்ளது எனலாம். எதிரிப் படையினருடனான உரையாடலில் இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் "நீங்கள் ஒரு மதத்தைப் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை சுதந்திரமான மனிதர்களாக இருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.

இந்த அறிவுரையானது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு மற்றும் சுதந்திர மனிதனாக வாழ்வதற்கு ஒரு மதத்தை பின்பற்றுவராய் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சமூகமும் கொண்டிருக்க வேண்டிய ஒரு கௌரவமாக. ஒரு சுதந்திர மனிதனாக இருப்பதற்கு மனித விழுமியங்கள் மற்றும் கண்ணியம், இரக்கம் மற்றும் மரியாதை என்பன அவசியமாகும்.

மக்களுக்குரிய மரியாதை "போர்கள்" போன்ற நிகழ்வுகளில் கூட பின்பற்றப்பட வேண்டும். கர்பலா எழுச்சியில் சமத்துவமற்ற போரின் கடுமையான நிலைமைகளில் கூட, இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் சுதந்திரமாக இருப்பதை வலியுறுத்தினார்.

எனவே, இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் "அடிபணியாதிருப்பது" மற்றும் "சுதந்திரமாக இருப்பது" ஆகியவற்றின் பால் இஸ்லாமிய புரட்சியின் தலைவர்கள் ஈர்க்கப்பட்டிருப்பது இயற்கையானது, மேலும், இந்தக் கொள்கை முடிந்தவரை நடைமுறையில் உள்ளன.

இந்த அணுகுமுறைக்கு ஒரு உதாரணம், சதாமினால் திணிக்கப்பட்ட போரில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஈராக்கிய நகரங்களில் இஸ்லாமிய குடியரசின் படைகள் குண்டுகளை வீசவில்லை, ஈரானின் இராணுவ ஆலோசகர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். பொதுமக்கள் இல்லை என்று அறிந்த பின்னரே தாக்குதல்களை நடத்தினர்.

இமாம் ஹுசை (அலை) அவர்கள் காட்டித்தந்த மற்றொரு மதிப்பு என்னவெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகும், இதுவும் இன்று ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் தெளிவாகக் காணப்படுகிறது, இது இஸ்லாமிய குடியரசிற்கும் மேற்குலகிற்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும்.

இமாம் ஹுசைனின் (அலை) கர்பலாவுக்குச் செல்லும் வழியில், பலர் அவர்களின் பரிவாரத்தை எதிர்கொண்டனர். போர் ஒன்று நிகழக்கூடும், அது  இரத்தக்களரியில்  முடிவடையக்  கூடும் என்று அறிந்த பிறகும் கூட இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அழைப்புக்கு செவிசாய்த்து அவரது பரிவாரத்துடன் இணைந்து, கடைசி தருணம் வரை அவருடன் சேர்ந்து போராடி தம் உயிரைத் தியாகம் செய்தனர்.

இன்று, இஸ்லாமிய குடியரசு யமன், பஹ்ரைன், சிரியா, லெபனான், பலஸ்தீன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட அரசுகளின் அழைப்பின் பேரிலேயே  இந்த பகுதிகளுக்கு ஈரான் சென்றிருக்கிறது, அதுவும் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு ஆளான மக்களுக்கு உதவுவதற்காக.

வெனிசுலா மற்றும் கியூபா நாடுகளின் மக்கள் அமெரிக்கர்களின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் எல்லோரும் அறிந்த விடயமாகும். மேலும், இந்த நாடுகளின் அரசாங்கங்கள் காலனித்துவம் மற்றும் ஆணவத்தை எதிர்த்துப் போராடிய இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.

அது போன்றே சிரிய மக்களும் பிராந்திய மற்றும் இஸ்லாம் விரோத வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் திணிக்கப்பட்ட பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எவருக்கும் இதில் சந்தேகமில்லை. ஆய்வு  நிறுவனங்கள், உளவுத்துறை நிறுவனங்கள் அல்லது சுதந்திர ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இதில் சந்தேகமில்லை. ஆணவ அதிகாரத்துக்கு உட்பட்ட ஊடகங்கள் இதற்கு விதிவிலக்காக அமையலாம்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும் அதன் கொள்கைக்கு இணங்க, ஈரான் தனது இராணுவ ஆலோசகர்களை பக்தாத் மற்றும் டமஸ்கஸ் நகரங்களுக்கு, அவற்றின் சட்டபூர்வமான அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில், அனுப்பியது. தாம் உதவி கோரிய கடைசி நாடு ஈரானாக இருந்தபோதிலும் எமக்கு உதவிக்கு வந்த முதலாவது நாடு ஈரானாகும் என்று இந்த நாடுகளின் தலைவர்கள் கூறினர்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும் கொள்கையின் காரணமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு தனது பிரசன்னத்தின் மூலம், வட ஈராக் குர்திஸ்தான் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் படை ஊடுருவலைத் தடுத்தது. இதன்போது அப்பிரதேச மக்களின் மதம் என்னவென்றோ அல்லது எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்றோ பார்க்கவில்லை; அதன் மனிதாபிமான  கடமையை நிறைவேற்ற மட்டுமே ஈரான் விரும்பியது. இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட சுதந்திரக் கொள்கையை செயல்படுத்தவும் களமிறங்கியது, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஷீஆக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ இல்லாதிருந்த போதிலும் கூட அம் மக்களுக்காக போரிட்டு பல ஈரானியப் படையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர்.

இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கையில் கர்பலா எழுச்சியின் தாக்கம் மேற்கூறிய ஓரிரண்டு சம்பவங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறையுடன் சமரசம் செய்யாதது அதன் மற்றொரு கொள்கையாகும். கர்பலா வழங்கிய பாடம் ஒடுக்குமுறைக்கு சரணடையாது, மனிதகுலத்திற்கு ஒரு நித்திய படிப்பினையாக அமைந்தது போலவே, இஸ்லாமிய குடியரசு சதாம் ஹுசைனின் பாத்திஸ ஆட்சியிடம் சரணடையாது தொடர்ந்து எட்டு வருடமாக போரிட்டது. ராணுவ மற்றும் ராஜதந்திர ரீதியான அழுத்தத்திற்கு ஒருபோதும் ஈரான் அடிபணியவில்லை. ஈரான் மீது அநியாயமாக திணிக்கப்பட்ட போரின் போது, போரை தொடங்கிய குற்றத்தில் இருந்து சதாமை விடுவிக்க சர்வதேச வட்டாரங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டன. எவ்வாறு அநீதியான யுத்தத்தை திணித்தனரோ அதுபோன்றதொரு அநீதியான சமாதானத்தையும் திணிக்க முனைந்தனர். இவர்களது அழுத்தங்கள் ஈரானிடம் எடுபடவில்லை.

போரின்போது ஈரான் ஆரம்பத்தில் இழந்த பிரதேசங்கள் அனைத்தையும் விடுவித்தது மட்டுமல்லாமல் பல ஈராக்கிய நகரங்களையும் கைப்பற்றினர். ஆக்கிரமிப்பாளன் தண்டிக்கப்படும் வரை போர் தொடரும் என்ற நிலையிலும் யுத்தகளத்தில் ஈரானிய ராணுவத்தின் கை ஓங்கியிருந்த நிலையிலும் ஒருநாள் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் திடீரென போர்நிறுத்தத்தை அறிவித்தார்கள். (சதாம் ஹுசைன் ஈரானுக்கு எதிராக தொடுத்த யுத்தத்தில், அவருக்கு உதவிய நண்பர்களாலேயே தண்டிக்கப்படவுள்ளார் என்ற ரகசியத்தை இமாம் அறிந்திருந்தாரோ என்னவோ) படை வாபஸ் பெறப்பட்டு, 8 வருடகால போர் ஓய்ந்தது.

ஆயினும், அடக்குமுறை இருக்கும் வரை, இஸ்லாமிய குடியரசு ஒடுக்குபவர்களுடனும் ஆணவம் கொண்ட சக்திகளுடனும் எதிர்த்து போராடுவதை நிறுத்தாது என்ற இமாம் ஹுசைனின் எழுச்சியின் கொள்கையை மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) மீண்டும் வலியுறுத்தினார்.

உலகில் எந்த நாடும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தளவு தடைகளையும் அழுத்தங்களை எதிர்கொண்டதில்லை எனலாம். இன்றளவிலும் அதிகரித்த பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. ஆயினும் ஈரான் எந்த அழுத்தங்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ அடிபணிய போவதில்லை என்பதை நன்றாகவே உணர்த்தியுள்ளது..

இஸ்லாமிய குடியரசு மேற்கத்திய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டும்போது கூட, அமெரிக்காவின் அழுத்தமும் பொருளாதார தடைகளும்  இருந்துவருகிறது. இன்றளவிலும் அவை தொடர்கின்றன. எனினும், அது அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியவில்லை.

அமெரிக்கா உணராத விஷயம் என்னவென்றால், முந்தைய P5 + 1 இன் கட்டமைப்பின் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை இல்லாத ஒரு விருப்பமாகும். ஆனால் இன்று அவ்வாறல்ல,  "பேச்சுவார்த்தை இல்லை" என்பது ஈரானின் வெளியுறவுக் கொள்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீற முடியாத கொள்கையாகவும் உள்ளது. ஏனென்றால் இது அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு அடிபணியாத ஈரானின் கொள்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, இது ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கும் கர்பலா எழுச்சிக்கும் இடையிலான பொதுவான கொள்கைகளில் ஒன்றாகும்.

ஈரானின் வெளியுறவுக் கொள்கைகள், பெருமானங்கள் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட  கொள்கைகளாகும், அவை இவர்களது வணிகக் கொள்கைகள் மற்றும் இவர்களது உலகை ஆதிக்கம் செலுத்தும் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை.

இந்த தீர்மானங்கள் இஸ்லாமிய ஈரானில் கர்பலா நிகழ்வு உட்பட நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தில் உள்ள பெருமானங்களினால் ஆனவையாகும். ஈரானின் இஸ்லாமிய குடியரசின் நடத்தை மற்றும் உத்திகளை மதிப்பீடு செய்வதற்கு முன் மேற்கத்திய ஆய்வாளர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

https://english.khamenei.ir/news/7891/Ashura-and-Iran-s-foreign-policy


Thursday, August 5, 2021

ஈரானிய விவசாயத் துறையில் நனோ தொழில்நுட்ப வளர்ச்சி

 Nanotechnology development in Iranian agricultural sector

நனோ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த துறைகளில் விவசாயம் ஒன்றாகும், ஈரானின் விவசாயத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 50 க்கும் மேற்பட்ட நனோ தயாரிப்புகள் வெளிவந்துள்ளன.

நனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்திறன் பெரும்பாலும் மருத்துவ மற்றும் வேதியியல் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னேற்றங்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அதன் பயன்பாடு மிகவும் நுட்பமான மற்றும் பரந்ததாக உள்ளது.

ஒப்பற்ற இரசாயன, இயற்பியல் மற்றும் இயந்திர பண்புகள் கொண்ட நனோ பொருட்கள் மற்றும் நனோ கட்டமைப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன; உதாரணமாக, மின்வேதியியல் செயல்படுத்தப்பட்ட கார்பன் நனோகுழாய்கள், நானோ ஃபைபர்கள் மற்றும் நானோ துகள்கள் ஆகியவை இந்த தொழில்நுட்பத்தின் சில பயன்பாடுகளாகும்.

வளர்முக நாடுகளில், உணவுப் பாதுகாப்பு, கால்நடைகள், கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளீடுகள், அரிசி உற்பத்தி அமைப்புகள், விவசாய உயிரி தொழில்நுட்பம், விலங்கு சுகாதாரப் பாதுகாப்பு, ஸ்மார்ட் விவசாயம், உணவுத் தொழில் மற்றும் நீர் உள்ளிட்ட பல துறைகளில் நனோ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

சமீபத்தில், நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக உணர்திறன் கொண்ட உயிர்வேதியியல் சென்ஸர்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நனோசென்சர்கள் விவசாயத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக மண் பகுப்பாய்வு, எளிதாக அளவிடுதல் மற்றும் உயிர்வேதியியல் கட்டுப்பாடு, நீர் மேலாண்மை மற்றும் பரிமாற்றம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவற்றில் சில.

விவசாயம் மற்றும் உணவில் நனோவின் பயனுள்ள இருப்பு

விவசாயத்தில், குறிப்பாக, மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான தாவர ஊட்டச்சத்துக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைக் கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பம் முக்கியம். விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நனோ தொழில்நுட்பம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும்.


வேளாண்மையில் நானோ பொருட்களின் சிறப்பு பயன்பாடுகளில் ஒன்று தாவர பாதுகாப்புப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், உரங்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பைக் குறைத்தல் மற்றும் உகந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் விளைச்சலை அதிகரிப்பது ஆகும்.

நனோ கேப்ஸூல்கள், நனோ துகள்கள் மற்றும் வைரல் கேப்சிட்கள் போன்ற நனோ தொழில்நுட்பக் கருவிகள், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கும், தாவரங்களின் ஊட்டச்சத்து உள்ளீர்ப்பை அதிகரிப்பதற்கும், குறிப்பிட்ட இடங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு பயன்பாட்டில் உள்ள பொருட்களை வழங்குவதற்கும் நனோ தொழில்நுட்பத்தின் சில எடுத்துக்காட்டுகள்.

நனோ துகள்களின் பயன்பாடு குறிப்பிட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நன்மை பயக்கும் தாவர திசுக்களுக்கு சேதம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு வெளியாகும் இரசாயனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். நனோ தொழில்நுட்ப சாதனங்கள் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபணு பரிணாமத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.


மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தாத புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பயோபோலிமர்களில் இருந்து பெறப்பட்ட நனோ துகள்கள் பாரிய முறையில் பொதுவானதாகி வருகின்றன மற்றும் அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

விவசாயக் கழிவுகளிலிருந்து நனோ கலவை உற்பத்தி

சமீபத்திய ஆண்டுகளில், பல்வேறு பெட்ரோலிய அடிப்படையிலான பொருட்களின் உற்பத்திக்கான புதைபடிவ எரிபொருட்களுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆதாரமாக விவசாய கழிவுகள் கருதப்படுகின்றன.

பாரம்பரிய மைக்ரோ-கலப்பு மற்றும் மேக்ரோ-கலப்பு பொருட்களுடன் ஒப்பிடும்போது உயிரியல் அடிப்படையிலான நனோகாம்போசைட்டுகள் குறிப்பிடத்தக்க பண்புகளைக் கொண்டுள்ளன, கூடுதலாக, அவற்றின் உற்பத்தி மிகவும் நிலையானது. இன்று, விவசாய கழிவுப் பொருட்களிலிருந்து பயனுள்ள நனோகாம்போசைட்டுகளைப் பிரித்தெடுக்க பல உற்பத்தி செயல்முறைகள் நடந்து வருகின்றன.

விவசாயத்தில் நனோ நிறுவனங்கள்

உலக அளவில், பெரிய ரசாயன நிறுவனங்கள் தம் போக்கை மாற்றி, அவற்றின் தயாரிப்புகளின் செயல்திறனை அல்லது தமது ஊடுருவலை அதிகரிக்குமுகமாக நனோ தொழில்நுட்பங்களின் திறனை ஆராய்கின்றன.

சில விவசாயம் சார்ந்த நானோ பொருட்கள் சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன, மண்-வலுப்படுத்தும் பொருட்கள் மற்றும் சிறந்த விநியோகம், களஞ்சியப்படுத்தல், இதனால் நீர் சேமிப்பு போன்றவை இதன் விளைவுகளாகும்.

இருப்பினும், இந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான அதிக விலை காரணமாக, வணிகச் சந்தை இதுவரை சிறிய அளவில் மட்டுமே அடையப்பட்டுள்ளது.

இந்த செலவுகள் பொதுவாக மருத்துவ அல்லது மருந்தியல் துறைகளில் அதிக வருவாயால் ஈடுசெய்யப்படுகின்றன. ஆனால் இதுவரை, விவசாயத் துறையில் அத்தகைய வருமானம் அடையப்படவில்லை. எனினும் வணிக விவசாயம் மற்றும் ரசாயனங்கள் பாரிய உற்பத்தியை அடைய மற்றும் செலவுகளை குறைப்பதற்கான  ஆராய்ச்சி தொடர்கிறது.

வணிக நோக்கங்களுக்காக பெரிய திறன்

விவசாயத்தில் நனோ தொழில்நுட்பத்தின் திறன் அதிகமாக உள்ளது, ஆனால் உற்பத்தி செயல்முறைகளின் அளவை அதிகரிப்பது மற்றும் செலவுகளைக் குறைப்பது, உற்பத்தி அபாயத்தை மதிப்பிடுவது போன்ற இன்னும் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். நுகர்வோர் தயாரிப்புகளில் நனோ தொழில்நுட்ப பயன்பாடு சில நாடுகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முதல் நுகர்வோர் உணர்வுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை வரை சில நெறிமுறை மற்றும் சமூக கவலைகளை எழுப்பியுள்ளது.

வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தின் ஊடுருவலுக்கான பொதுவான அணுகுமுறை நேர்மறையானதாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் உட்பட விவசாயத் துறையில் இந்த பொருட்களின் நீண்டகால பயன்பாடு மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

நனோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கவுன்சிலின் அறிவிப்பின்படி, சர்வதேச அளவில், உணவு மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள நனோ பொருட்களின் இடர் பகுப்பாய்வுத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண் துறை மற்றும் உணவுத் துறையில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றிய ஆராய்ச்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நனோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புக் கவுன்சில், நனோ தொழில்நுட்பப் பொருட்கள் துறையில் செயல்படும் அறிவு சார்ந்த நிறுவனங்களையும், இந்தத் துறையில் பயன்பாட்டு ஆராய்ச்சியையும் ஆதரித்துள்ளது, அதனால், விவசாயத்தில் இதுவரை சந்தைப்படுத்தப்பட்ட, பரவலாகப் பயன்படுத்தப்படும் 50 க்கும் மேற்பட்ட நனோ தொழில்நுட்பப் பொருட்கள் உள்ளன.

நனோடெக் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கிறது

நனோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போக்கு ஈரானில் வளர்ந்து வருகிறது, ஏனெனில் முந்தைய ஈரானிய காலண்டர் ஆண்டில் (மார்ச் 20 ஆம் தேதி முடிவடைந்தது) உருவாக்கப்பட்ட நானோ தயாரிப்புகள் மற்றும் உபகரணங்களின் எண்ணிக்கை 750 ஆக அதிகரித்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 647 ஆக இருந்தது.

சுமார் 223 தயாரிப்பு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 59 உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்கள் நானோ தொழில்நுட்பத் துறையில் செயலில் உள்ளன மற்றும் கடந்த ஆண்டு இறுதிக்குள், மொத்தம் 750 பொருட்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்கியது.

நனோ தொழில்நுட்ப தயாரிப்பு தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட 750 பொருட்கள் மற்றும் உபகரணங்களில், 535 நனோ தயாரிப்புகளுடன் தொடர்புடையவை மற்றும் 215 நானோ உபகரணங்களுடன் தொடர்புடையவை, இவை இரண்டும் கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்து வரும் போக்கை காட்டுகின்றன, இருப்பினும் நனோ பொருட்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன.

20 சதவிகிதத்துடன் "சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானம்" துறையில் நானோ பொருட்கள் மற்றும் உபகரணங்களில் மிகப்பெரிய பங்கு உள்ளது, அதைத் தொடர்ந்து "மருத்துவம், சுகாதாரம்" மற்றும் "தொழில்துறை சேவைகள் மற்றும் பொருட்கள்" ஒவ்வொன்றும் 13 சதவிகிதம்.

நனோ தொழில்நுட்பத்தின் ஐந்து முன்னோடிகளில் ஒன்றாக ஈரான் உள்ளது

2020 ஆம் ஆண்டில் 11,546 அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டதால் நனோ தொழில்நுட்பத் துறையில் ஈரான் உலகின் 4 வது முன்னணி நாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

WoS தரவுத்தளங்களில் நிறைவேற்றப்பட்ட ஸ்டாட்நனோவின் மாதாந்திர மதிப்பீட்டின்படி, உலகின் மொத்த நனோ தொழில்நுட்பக் கட்டுரைகளில் 6 சதவிகிதப் பங்கை ஈரான் கொண்டுள்ளது.

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு (GII) 2020 அறிக்கையின்படி, உலகளவில் 100 துடிப்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொகுப்புகளில் (S&T) ஈரான் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக  43 வது இடத்தில் உள்ளது.

2019 உடன் ஒப்பிடும்போது நாடு மூன்று நிலை முன்னேற்றத்தை சந்தித்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான துணைத் தலைவர் Sourena Sattari, ஈரான் பிராந்தியத்தில் ஃபின்டெக், ICT, ஸ்டெம் செல், விண்வெளி போன்ற துறைகளில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்றும் செயற்கை நுண்ணறிவில் ஈடு இணையற்றது என்றும் கூறினார்.


ஈரானிய நனோ தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானிய காலண்டர் ஆண்டு 1398 (மார்ச் 2019-மார்ச் 2020) இல் 100 சதவிகிதம் விற்பனையை அதிகரித்துள்ளது, மேலும் அவர்களின் வருவாய் 80 டிரில்லியன் ரியால்கள் (கிட்டத்தட்ட $ 1.9 பில்லியன்) வரை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று சத்தாரி அறிவித்தார்.

பரானக் பக்தியாரி

https://www.tehrantimes.com/news/463423/Nanotechnology-development-in-Iranian-agricultural-sector