Contributors

Monday, July 19, 2021

ஹஜ்ஜின் தாத்பரியம் பற்றி இமாம் ஆயத்துல்லாஹ் காமெனி

 Abrahamic Hajj: Moving toward God and condemning false gods

பொய் கடவுள்களை நிராகரித்து, சர்வ வல்லமை மிக்க இறைவனை நோக்கி நகர்வதே இப்ராஹீமிய்ய ஹஜ்

ஹஜ்ஜின் போது ஒன்றுகூடும் மாபெரும் கூட்டம் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உலகத்துக்கும் பெரிதும் பயனளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இருப்பினும், பல மகத்துவமிக்க நிகழ்வுகளில் பிறழ்வுகள் ஏற்பட்டது போலவே இஸ்லாமிய-இப்ராஹீமிய ஹஜ்ஜும் ஓர் இலக்கு நோக்கிய அதன் சத்தியாபாதையிலிருந்து சில விலகல்களுக்கு உட்பட்டுள்ளது.

இந்த கட்டுரையானது, முஸ்லிம் உலகுக்கு பெரும் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள உண்மையான இப்ராஹீமிய்ய ஹஜ்ஜின் தாத்பரியங்களை விளக்க முயற்சிக்கிறது,

புனித குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்-பாத்திஹா (திறப்பு), வசனங்கள் 5-6 இந்த பரிசுத்த தாத்பரியத்தை சுருக்கமாகக் காட்டுகிறது.

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ

 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

ஒரு தனி மனிதர் தனிமையில் தொழுகையில் ஈடுபடும்  நேரம் கூட இது முஸ்லிம்களின் அனைத்து பிரார்த்தனைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இதன் மூலம் அனைத்து மதங்கள், அனைத்து இனங்கள், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் அனைத்து புவியியல் பகுதிகளையும் சேர்ந்த  மக்கள் சார்பாக தனிநபராக நின்று இறைவனின் அருளைக் கேட்கிறார். இந்தப் பிரார்த்தனையில் அவர் தன்னையும் மற்றும் அனைவரையும் சரியான பாதையில் வழிநடத்துமாறு இறைவனிடம் இறைஞ்சுகிறார்.


இறைவனின் வழிகாட்டல் என்பது, அவனுடைய மற்ற எல்லா அருட்கொடைகளுடனும் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடுகையில், அவனது கருணையின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும்.

மனிதர்கள் என்போர், சாராம்சத்தில், இறைவனுக்கு சொந்தமான ஆத்மாக்கள் என்பதால், அவனிடமிருந்து வந்து, அவனிடமே திரும்பி செல்வதும்; அவனே இறுதி இலக்கு, முழுமையான அமைதி மற்றும் முழுமையான அன்பு போன்ற மிக உயர்ந்த ஆசீர்வாதமாக இருப்பதால், அவனை அடைவதற்கு வழிகாட்டுதல் தேவை.

ஆகவே, இந்த வழிகாட்டலின் சமூக அம்சத்தை இறைவனே வலியுறுத்துகின்றான். அதனால்தான் முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை  குழுவாக நிறைவேற்றுகின்றனர். அதிகாலை முதல் இரவுவரை ஒரு நாளில் ஐந்து முறை அவர்கள் தொழுகைகளை  குழுவாக நிறைவேற்றுகின்றனர், மேலும் தொழுகையானது கூட்டாக நிறைவேற்றப்படுவதை மிகவும் உயர்வாக பரிந்துரைக்கப்படுகிறது.

இது வெறுமனே உடல் ரீதியான ஒரு ஒன்றுகூடல் அல்ல. இறைவனின் அருளை வேண்டுவதற்காகவே முஸ்லிம்கள் ஒன்று கூடுகின்றனர். இந்த ஒன்றுகூடலை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்த ஒன்றுகூடல்கள் வாய்ப்புகளாக அமைந்தன. இதுபோன்ற ஒன்றுகூடல்களின்போது  நபி (ஸல்) அவர்கள் மக்களின் சொந்த பிரச்சினைகள்,  தமது சமூக விடயங்கள், உலகின் கலாசார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்கள். அவர் ஏழை மக்கள் மீது கவனம் செலுத்தினார்கள்,

மக்களை விசுவாசத்தின் காரணமாகவோ அல்லது படைப்பிலோ தங்கள் சகோதரிகளாக, சகோதரர்களாக கருதி, அவர்களின் நிலையை மேம்படுத்த முயன்றார்கள், அதற்காக மற்றவர்களின் உதவியையும் நாடினார்கள்.

இவர்கள் இறைவனின் பிற  படைப்புக்களான உயிரினங்கள் மீது அக்கறை காட்டுவோராகவும், தனிப்பட்ட ரீதியில் ஆன்மீக உச்சத்தை அடைய விரும்புவோராகவும் இருந்தனர். அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுயநல நோக்கம் கொண்டோராகவோ அல்லது ஆன்மீக அகங்காரம் கொண்டோராகவோ இருக்கவில்லை.

இஸ்லாத்தில் மற்றவர்களின், அதாவது, பிற வீடுகளில் உள்ளோர், பழங்குடியினர், கலாச்சார பிரிவினர்கள், பல இனங்களை சேர்ந்தோர், வேறு நாட்டவர்கள் மற்றும் வேற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவராலும் எதிகொள்ளப்படும் சிரமங்களையும் சிக்கல்களையும் அவை அவர்களது சொந்த பிரச்சினைகளாக கருதி விட்டுவிடவில்லை.


மற்றொரு மனிதனை பாதிக்கும் பேரழிவு மற்றும் பெரும் துயரம் குறித்து ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருந்தால் அவனோ அல்லது அவளோ ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அல்-பாத்திஹா அத்தியாயத்தை ஓதுகையில், முஸ்லிம்கள் குழுவாக உதவி கேட்கிறார்கள் மற்றும் குழுவாகவே இறைவனை வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் ஏனையோரையும் சரியான பாதையில் வழிநடத்தும்படி இறைவனிடம் கேட்டுக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் இறைவனுடைய கோபத்துக்கு உள்ளான மக்களினதும் மற்றும் வழிதவறிய மக்களினதும் பாதையைத் தவிர்க்க உதவுமாறு கோருகிறார்கள். ஆகவே, குர்ஆனின் அல்-பாத்திஹா அத்தியாயம் சமூக தன்மையைகொண்டுள்ள ஒரு சுருக்கமான அத்தியாயம் எனலாம்.

வழிகாட்டுதல் என்பது அனைத்து மக்களின் ஓர் அளப்பரிய அருளாகும். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், நோய்வாய்ப்பட்ட மக்கள் உலக வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளில் அலட்சியமாக இருக்கும் ஒருவர் சரியான பாதையில் வழிநடாத்தப் படுவதில்லை. ஒடுக்குமுறையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்கத் துணியாத ஒரு நபர் சரியான வழியில் நடத்தப்படுவதில்லை.

ஒடுக்கப்பட்டவர்கள் மீதான உளப்பூர்வமான பச்சாதாபம்மும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக சினமும் இருப்பது இறை நேசத்தில் உரியதாகும். அதாவது, இறைவனையும் அவன் படைப்பான உயிரினங்களையும் நேசிப்பது மற்றும் அவனுடைய படைப்புகளை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ ஒடுக்குபவர்களை வெறுப்பது வழிகாட்டலின் சாராம்சமாகும்.

வழிகாட்டப்பட்ட ஒரு நபர் எப்போதும் அவருக்கும் இறைவனுக்கும் இடையில் தூரத்தை உருவாக்கும் எல்லாவற்றிற்கும் எதிராக போராடுகிறார்.

குறிப்பிட்ட தடைகளின் காரணி தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ இருக்கலாம், ஆனால் தனிநபர் ஒருவர் சமூகத்திலிருந்து பிரிக்கப்படுவதில்லை மற்றும் சமூகமானது குறிப்பிட்ட தனிநபருடன் தொடர்புடையதாகவே இருக்கும்.

யாராவது ஒரு நபர் அவரது தூய்மையையும், இறைவன் மீதான பக்தியையும் பரிசோதிக்க விரும்பினால், அவரது குடும்பம், அயலவர்கள், சகாக்கள், தமது நகர மக்கள், நாட்டு மக்கள் அல்லது வெளிநாட்டவர், பிற இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர் எவ்வளவு தூரம் தொடர்பில் உள்ளார் என்பதை அந்த நபர் பார்க்க வேண்டும்.


இஸ்லாத்தில், ஆன்மீக சுய ஒழுக்கம் இல்லாமல், ஆணவ சக்திக்கு எதிராக போராடாமல், ஒரு நபரால் இறைவனுக்கு கீழ்ப்படியும் ஒருவராக இருக்க முடியாது. இஸ்லாத்தை பொறுத்தவரை, ஆன்மீக சுய ஒழுக்கம் இல்லாமலும் ஆணவ சக்திக்கு எதிராக போராடாமலும் ஒரு நபரால் இறைவனுக்கு கீழ்ப்படியும் ஒருவராக இருக்க முடியாது. அதேவேளை ஒரு சமூக அளவில் முற்றிலும் வழிநடத்தப்பட்ட ஒருவராகவோ அல்லது உயர் நோக்கத்தை கொண்டிருப்பவராகவோ இருக்க முடியாது.

அதேபோல், ஒருவரின் இதயத்தில் மனித ஆன்மாவை தனிப்பட்ட ரீதியில் அடிமைப்படுத்தும் அனைத்து சிலைகள், போலி தெய்வங்கள், பிர்அவ்ன்கள் மற்றும் அடக்குமுறையாளர்களை விட்டொழிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் சமூக ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவோ அல்லது பிர்அவ்ன்களுக்கு எதிராகவோ ஒரு நபரால்  போராட முடியாது.

இது அடிமைப்படுத்துபவர்களை அல்லது பல்தெய்வ  அடிமைப்படுத்தல் கொள்கைக்கு எதிரான  போராட்டமாகும், இது ஒரே நேரத்தில் தனிநபர் மற்றும் சமூகம் என்ற இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது.

ஹஜ் யாத்திரை என்பது உலக அளவில் சமூக மற்றும் தனிநபரின் நிலைகளில் பலதெய்வ கொள்கைக்கு எதிரான இந்த போராட்டத்தின் மகத்துவமிக்க வெளிப்பாடாகும்.

ஹஜ்ஜில் பங்கேற்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர். எல்லா தேசங்களிலிருந்தும், இனங்களிலிருந்தும், எல்லா கலாச்சார பின்னைகளையும் கொண்ட சகல வயதினரூம் பாலின வித்தியாசமின்றி இந்த அற்புதமான ஒன்றுகூடலுக்கு வருகிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை பொறுத்தவரை அனைத்து சமூக மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றியும் தொடர்புகொள்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு இதுவாகும்.

உலக அளவில் அன்பை வெளிப்படுத்துவது நபி (ஸல்) அவர்களினதும் மற்றும் புனித குர்ஆனினதும் ஆவி போன்றது. ஆகவேதான் விசுவாசிகள் அனைவரும் அல்லாஹ்வின் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்கள்.  அதே சமயம், எல்லா விசுவாசிகளும் மனிதர்களை உடல் மற்றும் ஆன்மீக அடிமைத்தனத்தில் வைக்க விரும்பும் எல்லா அடக்குமுறை மற்றும் அடிமைப்படுத்தும் பிர்அவனிய சக்திகளுக்கு எதிராக தங்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

காலனித்துவமயமாக்கலுக்கும் மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கும் எதிராக இயக்கப்படவேண்டிய இந்த ஒன்றுகூடலின் உயிர்துடிப்பு, கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சிக்குப் பிறகு அடங்கிப்போய், செயலற்றதாக இருந்து வந்தது.

நவீன பிர்அவ்ன்களான இந்த அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறையாளர்கள் முஸ்லிம் உலகில் இத்தகைய உயிர்துடிப்புக்கு எதிராக மிகவும் கவனமாக, சூட்சுமமான முறையில் காலனித்துவபடுத்தப்பட்ட இஸ்லாத்தைக் கொண்டு அதைத் தடுத்தனர்.

ஆயினும் 1979 ல் இமாம் கொமெய்னி தலைமையில் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி இந்த ஏகாதிபத்திய தந்திரத்தை உடைத்தது.

இமாம் கொமெய்னி அவர்களது வழிகாட்டுதலின் கீழ் உலகின் பல பாகங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவரது கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, ஹஜ் சமயத்தில் மக்காவில் ஒன்றுகூடி, இஸ்லாத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு, சமூக மற்றும் அரசியல் விடயங்களை உணர்ந்தனர். இதன் விளைவாக, அவர்களின் காலத்தின் பிர்அவ்ன்களுக்கு எதிராக, அதாவது சாத்தானிய ஏகாதிபத்திய-காலனித்துவ அமெரிக்க மற்றும் பிற மேற்கு நாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினர்.

எனவே ஒரு வகையில், சாத்தானின் வெளிப்பாடுகளான ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ அரசுகள் மீது கோபம், எதிர்ப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படையாக வெளிப்படுத்துவதன் மூலம் அடையாள “ஷெய்த்தானுக்கு கல்லெறிதல்” (ஹஜ் கிரியைகளில் ஒரு சடங்காக) உணரப்பட்டது மற்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஹஜ் ஒரு காலனித்துவமற்ற மற்றும் உண்மையான அர்த்தத்தில் சாத்தானிய ஏகாதிபத்தியத்தையும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டை வீசியதையும் கண்டிக்கிறது. ஈராக் மற்றும் ஈரானில் உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதையும் கண்டிக்கிறது. அதேவேளை யுத்தம், வறுமை, பாதுகாப்பின்மை, மரணம் மற்றும் வெகுஜன இடப்பெயர்ச்சி ஆகியவற்றை திணிக்கும் அதன் ஊழியர்களையும் கண்டிக்கிறது.

பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, யெமன், வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின்; - சிலி, நிகரகுவா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளில் - ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்த சதித்திட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராக இவர்களின் குரல்கள் ஓங்கி எழுகின்றன.


மேலும் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் மற்றும் ஆசியாவிலும் வாழும் கறுப்பின மக்கள் மீது வறுமையை திணித்தலையும்; மற்றும் இந்த சக்திகள் அயர்லாந்தை சுரண்டுவதையும், ஏழை பழங்குடி கனேடிய பள்ளி குழந்தைகளை உடல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் காலனித்துவப்படுத்துவதை,  லத்தீன் அமெரிக்க நாடுகளை தங்கள் சொந்த காலனித்துவ கொல்லைப்புறமாக கொடுங்கோன்மைக்கு உட்படுத்துவதையும் கண்டிக்கிறது.

பாலியல், போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் மூலம் நாடுகளை சிதைக்கும் திட்டத்துடன் கருவறுக்கும் (இந்த சித்தாந்தத்தை வளர்க்கின்ற மற்றும் பரப்புகின்ற நாடுகளுக்கும்) தீய சக்திகள் இப்ராஹீமிய்ய ஹஜ்ஜுடன் உடன்படவில்லை. உண்மையான இஸ்லாமிய ஹஜ் குறிப்பிடப்பட்ட விடயங்களை சாத்தானின் வெளிப்பாடுகளாக அடையாளம் காண்கிறது. எனவே, அனைத்து முஸ்லிம்களையும், சத்தியம் தேடும் அனைத்து சுதந்திர நபர்களையும் கூட அவற்றுக்கு எதிராக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறது.

எவ்வாறாயினும், சாத்தானிய ஏகாதிபத்தியமானது இஸ்லாம் மற்றும் ஹஜ்ஜின் மீது காலனித்துவ பதிப்பை ஏற்படுத்தவே முயற்சிக்கிறது.  இந்த சாத்தானிய சக்திகள் புறவய சடங்குகள் சிலவற்றுடன் வரையறுக்கும் ஒரு ஹஜ் யாத்திரையையே ஊக்குவிக்கிறது. நபி மூஸா (அலை) அவர்களதும் நபி ஈஸா (அலை) அவர்களதும் மற்றுமுள்ள நபிமார்களதும் வழிவந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் புரட்சிகரமான மற்றும் தூய்மைப்படுத்தும் இயக்கத்திலிருந்து ஹஜ்ஜை தூரப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தற்போதைய தலைவரான இமாம் கமேனி, இமாம் கொமெய்னி (ரஹ்) அவைகளை போலவே,  உயிரோட்டமற்ற, காலனித்துவ ஹஜ்ஜுக்கு மாறாக, உயிர்துடிப்பான ஹஜ்ஜை வலியுறுத்துகிறார்.

ஹஜ் தொடர்பான தனது வருடாந்திர செய்திகளில், அவர் பல விடயங்களை முன்னிலை படுத்துகின்றார்; இதன்போது அதில் எப்போதும் முக்கிய விடயங்கள் இரண்டு இருந்தன: முதலாவதாக, இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமை, இரண்டாவதாக, பொய்யான கடவுள்களைத் எதிர்த்தல் ஆகும்.


2019 ஆம் ஆண்டு ஹாஜிகளுக்கு விடுத்த செய்தியில், ஹஜ் சந்தர்ப்பத்தை “கொடுங்கோலர்களின் இரக்கமின்மை, கொடுமை, அநியாயம் மற்றும் ஊழல் ஆகிய ஒவ்வொரு தீய செயலையும் கண்டித்து, வரலாறு முழுவதும் திமிர்பிடித்தவர்களால் செய்யப்படும் மிரட்டல் மற்றும் மிரட்டி காரியம் சாதித்தல் போன்ற அநியாயங்களுக்கு எதிராக கொதித்தெழும் நேரம்… ”, என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “இன்று, திமிர்பிடித்த தீய சக்திகளால் - அவற்றில் முதன்மையானது அமெரிக்கா - முன்வைக்கப்படும் ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் குஃப்ர்  எனும் இறை நிராகரிப்பு ஆகியவற்றை விமர்சிக்காது இருப்பது, ஒடுக்கப்பட்டவர்களைக் கொல்வதற்கும், போர்களை நடத்துவதற்கும் ஒப்பாகும் என்றார்.

நபிகள் நாயகத்தின் பாரம்பரியத்தின்படி, பலதெய்வ கொள்கைக்கு எதிராகப் போராடாமல் கொண்டுள்ள இறை நேசமானது அழகான வெற்று சொற்களாகவே  அமையக் கூடும். இதன் காரணமாகவே  "லா இலாஹா இல்லல்லாஹ்" எனும் முழக்கமும் உறுதிமொழியும் இஸ்லாத்தில் மிக முக்கியமானதாக உள்ளது.

ஒரு விசுவாசிக்கு போலி கடவுளர்கள் மீதான இந்த ஆரம்ப மறுப்பு மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு செயலின் தொடக்கத்திற்கு முன்பும், ஒரு விசுவாசி சாத்தானியத்திலிருந்து முதலில் இறைவனின் பாதுகாப்பைத் தேட வேண்டும், அதன் பிறகு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தினால் காரியத்தில் இறங்க வேண்டும்.

https://english.khamenei.ir/news/8584/Abrahamic-Hajj-Moving-toward-God-and-condemning-false-gods

 

Saturday, July 10, 2021

ஈரானில் சகோதர உணர்வுடன் பராமரிக்கப்படும் ஆப்கன் அகதிகள்

Afghan refugees cared with a sense of brotherhood in Iran 

கடந்த நான்கு தசாப்தங்களாக, ஈரானிய மக்கள் அகதிகளுக்கு விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மையைக் காட்டியுள்ளனர், ஏனெனில் ஈரானிய நாடு இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள 8 வது பெரிய நாடு.

“நாங்கள் ஒன்றாக குணமடைகிறோம், கற்றுக்கொள்கிறோம், பிரகாசிக்கிறோம்” (Together we heal, learn and shine) என்பது உலக அகதிகள் தினமான 2021 இன் கருப்பொருளாகும், இது உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களை இலக்காகக் கொண்டது,

உலகில், வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சுமார் 82 மில்லியன் மக்கள் உள்ளனர், இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்களுடையதல்லாத வேறு நாடுகளிலும் 74 சதவீத அகதிகள் வளரும் நாடுகளிலும் அடைக்கலம் பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டுகளில், ஈரானில் மேலும் மேலும் அகதிகள் வந்து சேர்ந்தனர், எவ்வித ஆவணமும் அற்றோர்,  பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் தேசிய அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர், இஸ்லாமிய குடியரசு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை விருந்தாளிகளை போல் கவனித்து வருகிறது - அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானியர்கள்.

தொற்றுநோயின் அபாய நிலையிலும் அனைத்து அகதிகளும், ஆவணப்படுத்தப்படாதவர்களும் கூட, ஈரானிய நாட்டவர்களைப் போலவே இலவச ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் COVID-19 தொடர்பான இலவச சோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதன் மூலம் பயனடைந்தனர். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 75 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அகதிகளுக்கும் எந்தக்கட்டுப்பாட்டும் இன்றி வழங்கப்படுகிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 3 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானியர்கள் ஈரானில் வாழ்கின்றனர் - அவர்களில் சுமார் 780,000 பேர் அகதிகள், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் எவ்வித ஆவணத்தையும் கொண்டிராதோர் மற்றும் 600,000 ஆப்கானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஈரானிய விசாக்களுடன் உள்நுழைந்தவர்கள் ஆகும்

40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானிய அரசாங்கமும் மக்களும் ஆப்கானியர்களுக்கு நம்பமுடியாத படி விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மையைக் காட்டி வருகின்றனர். இது போன்று இடம்பெறுவதுதை உலகில் அகதிகளைக் கொண்டுள்ள நாடுகளில் மிக சொற்ப நாடுகளிலேயே காணமுடியும்.

கடந்த ஆண்டில், COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது, இதனால் மில்லியன் கணக்கான இறப்புகள், பொருளாதார மந்தநிலை, கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பிற கடுமையான வரம்புகள் இடப்பட்டன. இதற்கு அகதிகளும் விதிவிலக்கல்ல, அதனால் ஏற்பட்ட விளைவுகளை அவர்களும் தாங்கினர்.

கோவிட் வைரஸ் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வரும் ஈரானும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், சர்வதேச உதவியை உரிய நேரத்தில் பெறுவது ஒரு பெரிய சவாலாகவும்  இருந்தது, மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கும் ஒரு பெரும் தடையாக இருந்தது. எனவே, ஈரானில் வாழும் ஆப்கன் அகதிகள் குறைந்துவரும் வாய்ப்புகளின் காரணத்தினாலும் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்னும் தொடரும் நிச்சயமற்ற நிலை காரணமாகவும் சில கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 

இருப்பினும், தொற்றுநோய் தொடர்பில், அனைத்து அகதிகளும், ஆவணங்கள் எதையும் வைத்திராதோர் கூட, ஈரானிய நாட்டவர்களைப் போலவே இலவச ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் இலவச COVID-19 தொடர்பான பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவமனை சேவைகளைப் பெற்று பயனடைந்தனர்.

ஈரான் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை  75 வயதிற்கு மேற்பட்ட அகதிகளுக்கும் தாராளமாகக் வழங்கியது. ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி (ஐ.ஆர்.சி.எஸ்) ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தடுப்பூசி போட 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை (ஐ.சி.ஆர்.சி) கேட்டுக் கொண்டது. எனினும், இது தொடர்பாக இதுவரை சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை COVID-19 நமக்குக் உணர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, உலகளாவிய ரீதியில், அகதிகள், புகலிடம் கோருவோர் உள்ளிட்ட அனைவரையும் சுகாதாரக் கொள்கைகளில் சேர்க்காவிட்டால் சமூகத்தில் உள்ள - தடுப்புக்காவலில் உள்ளோர் உட்பட - அனைவரையும் இணைக்காவிட்டால் இந்த தொற்றுநோயை ஒழிக்க முடியாது.

கொரோனா வைரஸுக்கு மத்தியில் ஆப்கானிய அகதிகள் இலவச சிகிச்சையைப் பெறுகின்றனர்.

ஈரான் அதன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை அதிகரித்தது, மேலும் சுயாதீன தொழில்முனைவோர் - அகதிகள் உள்ளிட்டவர்கள் - தேசிய COVID-19 ஒழிப்புக்கு ஏற்றவிதத்தில் - தங்களது பங்களிப்பு முயற்சிகளை மாற்றினர். 

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் பாரிய அளவில் குறைந்து வருவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை, மேலும் அதிகரித்த பொருளாதாரத் தடையினது அழுத்தத்தின் மத்தியில், இப்போதுள்ள  சமூக-பொருளாதார சூழலுடன், அகதிகள் உட்பட வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதிகரித்த எண்ணிக்கையினரின் நலனை கவனிக்க ஈரானுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது

நாட்டில் வாழும் அகதிகளை கவனிப்பதற்காக, சுகாதார காப்பீட்டு அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஏழாவது ஷரத்து மூலம், பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களாக கருதப்படும் 120,000 அகதிகள் பயனடைவர்.

ஈரானில், யு.என்.எச்.சி.ஆர் (UNHCR) COVID-19 அவசரநிலைக்கு 16.2 மில்லியன் டாலர்களைக் கோரியுள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான தீர்வுகள் என்ற மூலோபாய (SSAR) குடையின் கீழ் ஈரானுக்கு அதன் அகதிகளுக்கான கொள்கைகளை பராமரிப்பதற்கும் 98.7 மில்லியன் டாலர் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானில் உள்ள ஆப்கானிய அகதிகளுக்கு ஆதரவு

15 முதல் 60 வயதிற்குட்பட்ட 970,000 வெளிநாட்டினரில்  (ஆண்கள் மற்றும் பெண்கள்), சுமார் 36,000 பேர் நாட்டில் சமூக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வெளிநாட்டினருக்கான துறைத் தலைவர் அஹ்மத் ரீஸா கஸாயி 2018 ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

ஈரான் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்காக சுமார் 20 டிரில்லியன் ரியால்களை செலவிடுகிறது. அதாவது 477 மில்லியன் டாலர்களை என்று கல்வி அமைச்சின் சர்வதேச விவகாரத் துறைத் தலைவர் குலாம்ரேசா கரீமி மார்ச் மாதம் தெரிவித்தார். 

474,000 ஆப்கானிய பிள்ளைகள் ஈரானில் இலவசமாகப் கல்வியைப் பெறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான், உலகளவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை நீண்டகாலமாக பராமரித்து வரும் நாடுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அகதிகள்

உலகில் ஒவ்வொரு நிமிடமும் 20 பேர் போர், துன்புறுத்தல் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமது நாட்டையும் துறக்கின்றனர். இவர்களில் பலவந்தமாக நாட்டைவிட்டு துரத்தப்பட்டோர், அகதிகள், புகலிடம் கோருவோர், இடம்பெயர்ந்தவர்கள், நாடற்றோர் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாதவர்கள் என பலர் அடங்குவர்.

உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவே அகதிகள் உள்ளனர். 1951ல் இடம்பெற்ற அகதிகள் மாநாடும் 1967ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதன் நெறிமுறையும் அவர்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இவையே அகதிகளின் வாழ்க்கையின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒரே உலகளாவிய சட்ட கருவிகள் ஆகும். அவற்றின் விதிகள், அகதிகள் குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட நாட்டில் அந்நாட்டவரினதும் மற்றும் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு பிரஜைகள் அனுபவிக்கும் அதே தரநிலைகளுக்கும் தகுதியானவர்கள் என்று அவை குறிப்பிடுகின்றன.

1951 மாநாட்டில் அகதிகளுக்கான பல உரிமைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன, மேலும் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ள நாடு மீதான கடமைகளையும் எடுத்துக்காட்டுகின்றன. 1951 மாநாட்டின் மூலக்கல்லானது அகதிகளை பலவந்தமாக திருப்பியனுப்பக்கூடாது என்ற கொள்கையாகும். இந்த கொள்கையின்படி, ஓர் அகதி அவன் அல்லது அவள் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு திருப்பியப்பக்கூடாது. நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடியவர்  என்று கருதப்படும் அகதிகள் அல்லது குறிப்பாக கடுமையான குற்றத்திற்கு தண்டனை பெற்ற, சமூகத்திற்கு ஆபத்தாக கருதப்படுவோரால் இந்த உரிமையைக் கோர கூறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tehrantimes.com/news/462166/Iranian-hospitality-for-refugees-impressive-despite-challenges 

 

Saturday, July 3, 2021

அமெரிக்க பயங்கரவாதம்: இன்று மனிதகுலம் எதிர்நோக்கும் மிக மோசமான நெருக்கடி

American terrorism: The worst crisis facing humanity today 


அமெரிக்க சரித்திரத்தில் கறைபடிந்த பக்கங்கள் ஏராளம் உள்ளன. செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஜப்பானில்  ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட சம்பவம், ஈரானில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட முஹம்மத் முசத்தேக் ஆட்சி கவிழ்ப்பு, மேலும் பாலஸ்தீனம், வியட்நாம்,வட கொரியா, கியூபா, கிரனாடா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா சிரியா, சோமாலியா, யெமன், வெனிஸுலா போன்ற நாடுகளில் ராணுவரீதியான தலையீடுகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக மோசமான நெருக்கடி

இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 3, 1988 அன்று, ஒரு அதிநவீன அமெரிக்க கடற்படை போர்க்கப்பல், யுஎஸ்எஸ் வின்சென்ஸ் (The USS Vincennes), பாரசீக வளைகுடாவுக்கு மேலே, ஈரானிய வான்வெளியில் பறந்த A300 ரக ஈரானிய சிவிலியன் விமானத்தை சுட்டுவீழ்த்தியதில் 66 குழந்தைகள், ஈரானியர்கள் அல்லாதவர்கள் 38 பேர் அடங்கலாக அதில் பயணித்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பந்தரப்பாஸ் ஊடாக துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்த ஈரான் ஏர் (Iran Air) A300 ரக பயணிகள் ஜெட் விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. பாரசீக வளைகுடாவுக்கு மேலாக வழக்கமாக செல்லும் பாதையில், வழக்கமாக செல்லும் நேரத்தில் துபாய் நோக்கி வாரம் இருமுறை செல்லும் (Sheduled Flight) விமானமே அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டது. 

யுஎஸ்எஸ் வின்சென்ஸ் எனும் போர்க்கப்பல் (The USS Vincennes) இரண்டு ஏவுகணைகளால் அவ்விமானத்தை சுட்டு, சிதறடித்த பின் பல பொய்யான சாக்குபோக்குகளை கூறி தப்பிக்கப் பார்த்தது. “எம்மை நோக்கிவரும் ஈரானிய போர் விமானம் என்று எண்ணி, அதை இலக்குவைத்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று கூறியது.

"அதிநவீன அமெரிக்க கடற்படையினருக்கு பிரயாணிகள் விமானத்துக்கும் யுத்தவிமானத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என்று சர்வதேச ஊடகங்கள் நையாண்டி செய்து, செய்தி வெளியிட்டன.

இந்த "காட்டுமிராண்டித்தனமான படுகொலை" சம்பவத்தை அமெரிக்க அதிகாரிகள் நியாயப்படுத்தினர்,  விமானம், பயணிகள் விமானம் செல்லும் பாதைக்கு வெளியே, தாழ்வாக 7,800 அடி உயரத்தில் மட்டுமே பறந்து வந்ததாகவும், வின்சென்ஸ் போர்க்கப்பல் நோக்கி இறங்கியதாகவும் ஆரம்பத்தில் கூறினர். ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்ட பயணிகள் விமானம் தாழப் பறக்கவில்லை என்றும், 12,000 அடி உயரத்திலேயே பறந்துள்ளது என்றும் ஒப்புக்கொண்டனர். 

போர்வீரர்களின் மன அழுத்தம் காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்று அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது. இந்த தவறுக்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன்  மன்னிப்பும் கோரியிருந்தார். 

தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் குடும்பங்களுக்கு 62 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் 1996 ஆம் ஆண்டில் அமேரிக்கா ஒப்புக்கொண்டது.

அமெரிக்க பயங்கரவாதம்

இதுபற்றி ஆயத்துல்லாஹ் காமனேய் கூறுகையில் பயணிகள் விமானம் மீதான தாக்குதல் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதன் பெரும் சோகமான சம்பவமானது அமெரிக்காவின் வெறித்தனமான வன்முறை மற்றும் நமது புரட்சியை வீழ்த்த எந்த அநியாயத்தையும் செய்யத் அவர்கள்  தயார் என்பதையுமே குறிக்கிறது. இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி இந்த அமெரிக்க பயங்கரவாதம் ஆகும் என்பதையே இது காட்டுகிறது, என்றார்.

"உயர் நாகரிகத்தைக் கொண்டுள்ளதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மனித உரிமைகளை ஆதரிப்பதாக தொடர்ந்து பாசாங்கு செய்கிறது, தற்பெருமை காட்டி மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது போல் நடித்து அதை ஊக்குவிக்கிறது; மனித அறிவை அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும்  பயன்படுத்துவதற்கு பதிலாக வெட்கக்கேடான, அழிவு  நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது, என்று குறிப்பிட்டார். (ஜூலை 3, 1988)

அமெரிக்காவின் இந்த செயலானது "பல ஈரானியர்களுக்கு ஒரு தேசிய அதிர்ச்சியாக இன்றளவிலும் தொடர்கிறது,"

"அப்பாவி மக்களின் உயிர்களை அமெரிக்கா ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று ஈரானியர்கள் கருதுவது ஏன் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது," என்று ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சுட்டிக்காட்டி தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சையத் முகமது மராண்டி என்பிசி செய்திக்கு குறுஞ்செய்தி மூலம், அண்மையில் கூறியிருந்தார்.

"கடந்த ஆண்டும் இதுபோன்ற அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு சிவிலியன் விமானத்தை அச்சுறுத்துவதானது" 1988 இல் ஈரானியர்களின் விரோதத்தையும் கோபத்தையும் அதிகரித்தது போலவே இருக்கும் என்று அவர் கூறினார்.

"இந்த 2020 சம்பவத்துக்கும் கூட அவர்கள் எங்கள் மீதே குற்றம்சாட்ட முயன்றனர்," என்று அவர் மேலும் கூறினார். "இவ்வாறான சம்பவங்கள் அமேரிக்கா மீதான ஈரானியர்களின் அதிகரித்த கோபத்துக்கே வழிவகுக்கும்," என்றார்.

கடந்த ஆண்டின் குறிப்பிட்ட சம்பவம் குறித்து ஈரானிய அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

"அமெரிக்காவின் அரச பயங்கரவாதம் வானத்திலும் நிலத்திலும் மற்றும் கடலிலும் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது." என்று கலாச்சார அமைச்சர் சையத் அப்பாஸ் சாலிஹி தெரிவித்தார். 

ஜூலை 3, 1988 ல் அமெரிக்க கடற்படையால் ஈரான் ஏர் விமானம் (Iran Air flight) 655 ஐ வீழ்த்தி, 290 பேரைக் கொன்ற சம்பவத்தை ஈரானிய அரசாங்கம் பல தசாப்தங்களாக அமெரிக்கா மீதான அதன் அவநம்பிக்கைக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படும்  சம்பவங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தாஹா முஸம்மில்