Contributors

Friday, May 14, 2021

“அடுத்த 25 ஆண்டுகளில் சியோனிச ஆட்சி இருக்காது”

 Backing Palestine is top foreign policy priority: Velayati

There will be no Zionist rule in the next 25 years


1981-1997 வரை வெளியுறவு அமைச்சராக இருந்த வெலாயத்தி, ஈரான் இஸ்லாமிய குடியரசு பாலஸ்தீனியர்களுக்கு சொல்லாலும் செயலாலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டார்.

அலி அக்பர் வெலாயத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பலஸ்தீன் தொடர்பான வெபினாரில் உரையாற்றும் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் "ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கைகளில் பாலஸ்தீன் பிரச்சினை மிக முக்கியமான மற்றும் முன்னுரிமை பெற்ற ஒன்றாகும்" என்று சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு உலக இஸ்லாமிய விழிப்புணர்வு மன்றம் நடத்திய வெபினாரில் வெலாயத்தி கூறினார்.

அரசியல் மற்றும் இராஜதந்திர அரங்குகளில் மட்டுமல்லாமல், உண்மையான செயற்பாட்டு ரீதியான மற்றும் [இஸ்ரேல்] எதிர்ப்பிலும் ஈரான் தனது பாலஸ்தீனிய சகோதரர்களுடன் அதே உணர்வை பகிர்ந்து கொள்கிறது, [ஜெருசலேம்] அல்-குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை ஈரான் பாலஸ்தீன தேசத்துடனும் எதிர்ப்புக் குழுக்களுடனும் உறுதியாக நிற்கும்" என்று தலைவரின் ஆலோசகரான வெலாயத்தி குறிப்பிட்டார்.

இன்று, சியோனிச ஆட்சிக்கு எதிராக பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் போராட்டக் 'களத்தில்' பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உத்திகள் காரணமாக, இந்த ஆக்கிரமிப்பாளர்களின் முயற்சி எதிர்கொள்ளப்படுகிறது; உள்ளே இருந்தும் கடுமையான சவால்கள் விடுக்கப்படுகின்றன" என்றும் அவர் கூறினார்.

லெபனான் மற்றும் காஸா பகுதிக்கு எதிரான போர்களில் சியோனிச ஆட்சி சந்தித்த தோல்விகள் மற்றும் சிரியாவில் அதன் தோல்வி ஆகியவை அடுத்த 25 ஆண்டுகளில் சியோனிச ஆட்சி இருக்காது" என்ற இஸ்லாமிய புரட்சியின் தலைவரின் கணிப்பை தெளிவாக நிரூபிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்,

"இந்த நூற்றாண்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்) Deal of the Century ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனவெறி சியோனிச ஆட்சியுடன் சில அரபு நாடுகள் உறவுகளை இயல்பாக்குவதானது தேசத்துரோகச் செயலாகும், என்று அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் அபரிமிதமான மக்கள் தெரிவித்திருந்திருந்தனர் என்று வெலாயத்தி கூறினார்.

இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது என்பது "நீறு பூத்த நெருப்பு போன்றது" என்றும், இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நாடுகளில் உள்ள மக்களது பரவலான எதிர்ப்பை அவை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

"மனித வரலாறு ஒருபோதும் கண்டிராத, சியோனிச குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் நீண்ட வன்முறை ஆக்கிரமிபை நாங்கள் இப்போது கண்டுக்கொண்டு இருக்கிறோம்,” என்று வெலாயத்தி சுட்டிக்காட்டினார்.

இருந்தாலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனிய குழுக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தையும் உறுதியையும் வெலாயத்தி வெகுவாகப் பாராட்டினார், இந்த போராட்டங்கள் இறுதியாக நிச்சயமாக வெற்றியைத் தரும் என்றும் "ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் விடுதலையை எதிர்காலத்தில் நிச்சயம் நாம் காண்போம்" என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினத்தை குறிக்கும் உரையில், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமேனி, அமெரிக்காவின் உதவியுடன், ஒரு சில அரபு நாடுகள் சியானிஸ்ட்டுகளுடன் உறவை சீராக்கியதானது இஸ்ரேலிய ஆட்சியின் வீழ்ச்சியின் மற்றொரு அறிகுறியாகும் என்றும் "ஆக்கிரமிப்பின் முதல் நாளிலிருந்து, சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை ஒரு பயங்கரவாத தளமாக மாற்றினர். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, மாறாக அது பாலஸ்தீனிய தேசத்திற்கும் பிற முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான பயங்கரவாத முகாம்" என்று கூறியதையும் வெலாயத்தி ஞாபகப்படுத்தினார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினது தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2020 செப்டம்பரில், இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தில் பஹ்ரைன் கையெழுத்திட்டது, அதைத் தொடர்ந்து மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சியோனிஸ்டுகளுடன் உறவை சீராக்கின. இது உலக முஸ்லிம் மக்களின் சீற்றத்தைத் தூண்டின.

உலகளாவிய விமர்சனங்களை மீறி, டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலம் அல்-குத்ஸுக்கு டிசம்பர் 2017 இல் இடமாற்றம் செய்தார், ஆக்கிரமிக்கப்பட்ட புனித நகரமான ஜெரூசலத்தை இஸ்ரேலின் "தலைநகரம்" என்று அழைத்தார்,.

ட்ரம்பின் வெளிப்படையான இந்த ஆதரவால் துணிந்து, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில் புதிய குடியேற்ற அலகுகளை நிர்மாணிப்பது உட்பட மிகவும் கண்டிக்கப்பட்ட அதன் கொள்கைகளை இஸ்ரேல் முன்னெடுத்தது.

குறிப்பிட்ட வெபினாரில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாசர் அபு ஷெரீப் உரையாற்றுகையில் சில அரபு ஆட்சிகள் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது, தற்போதைய கட்டத்தில் முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினை என்று விவரித்தார்.

யெமன் நாட்டின் தலைமை முப்தி ஷம்ஸ் அல்-தின் முஹம்மது ஷரஃப் அல்-தின், The Yemeni Grand Mufti the scholar Shams al-Din Sharaf al-Din உரையாற்றுகையில் சியோனிச ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்கியதற்காக சில அரபு ஆட்சிகளைக் கண்டித்தது மட்டுமல்லாமல், பாலஸ்தீனம் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது அதை விடுவிக்கும் பொறுப்பு எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மார்ச் 2015 முதல் சவுதி தலைமையிலான கூட்டு ராணுவம் தமது நாட்டிற்கு எதிராக முழுமையான போர் ஒன்றைத் தொடுத்து, முற்றுகையிட்டு இருக்கும் நிலையிலும், பாலஸ்தீனிய விடுதலைக்கான யெமன் மக்களின் முழுமையான ஆதரவை முப்தி மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் துணைத் தலைவர் முகமது அல் ஹிந்தி உரையாற்றுகையில் சியோனிஸ்டுகளுடன் உறவுகளை இயல்பாக்கிய அந்த அரபு ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து அரபு மக்களும் இறுதியாக கிளர்ச்சி செய்வர் என்று கூறினார். இஸ்ரேல் ஒரு நாடு அல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிரதேசங்களை அபகரித்து ஆளும் குற்றவாளிக் கும்பல்கள் என்பதை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனிய இஸ்லாமிக் ரிஸிஸ்டண்ட்  இயக்கத்தின் பிரதிநிதி காலித் அல்- கத்தூமி Khaled al- Qaddumi, தனது அறிக்கையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான அதன் தொடர்ச்சியாக ஆதரவுக்காக ஈரானிய அரசாங்கத்தையும் மக்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

கத்தூமி தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படைகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. ஷேக் ஜர்ரா உட்பட ஜெருசலேம் அல்-குத்ஸில் உள்ள பாலஸ்தீனிய குடும்பங்களை தங்கள் மூதாதையர் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயன்றுவருகின்றன, கிழக்கு அல்-குத்ஸின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் உள்ள பாலஸ்தீனிய வீடுகளை படைகள் தாக்கிய ஆத்திரமூட்டல்கள் இன்னும் ஆபத்தான திருப்பத்தை எடுத்தன. இதற்கு நாம் பதிலடி லொடுத்து வருகின்றோம் என்றார்.

ஜெருசலேம் அல்-குத்ஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய பிரதேசங்களை யூதமயமாக்கும் திட்டத்திற்கு சியோனிஸ்ட் ஆட்சியை கத்தூமி கண்டித்தார்.அல்-அக்ஸா மஸ்ஜிதை இழிவுபடுத்துவதன் மூலமும், பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைக் கொல்வதன் மூலமும் இஸ்ரேல் அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுவதையும் விடுவிப்பதற்கும்  பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடவும் முஸ்லிம்களின் தீர்க்கமான நிலைப்பாட்டுக்காக கத்தூமி அழைப்பு விடுத்தார்.

புனித ரமழான் மாதத்தின் தொடக்கத்திலிருந்து, இஸ்ரேலிய படைகளும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அச்சுறுத்தும் விதமாக நகரத்தில் சுற்றித் திரிந்து வருகின்றனர், பாலஸ்தீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் கூடி தங்கள் மதக் கடமைகளைச் செய்வதைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய ஆட்சி அல்-குத்ஸின் பழைய நகரத்தின் பாப் அல்-அமூத் (டமாஸ்கஸ் கேட்) ஐ மூடியதானது, பாலஸ்தீனியர்களை மேலும் கோபப்படுத்தியது.

பாலஸ்தீனிய இன்திபாதா ஆதரவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் உரையாற்றுகையில் பழைய நகரமான ஜெருசலம் அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜித் வளாகத்தில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீதான இஸ்ரேலிய வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் கட்டாயம் இந்த "பயங்கரவாத மற்றும் போலி" டெல் அவிவ் ஆட்சியின் குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அல்-குத்ஸ் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜித் பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு இஸ்லாமிய பாராளுமன்றங்களை, குறிப்பாக இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடாளுமன்றங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


சியோனிச ஆட்சியின் படைகள் அல்-அக்ஸா மஸ்ஜிதின் கதவுகளை மூடி பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களைத் தாக்கியதாக செய்தி வட்டாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டன.அறிக்கையின்படி
, அல்-அக்ஸா மஸ்ஜிதின் முற்றத்திற்குள் சியோனிச ஆட்சியின் படைகள் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான  அடக்குமுறை இஸ்ரேலின் வழக்கமாகிவிட்டது. ஜெருசலத்தில் இருந்து முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்ற கடும் முயற்சில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் Rupert Colville வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இந்த செயல் "பலவந்தமான இடப்பெயர்ச்சி அபாயத்திற்கு வழிவகுக்கும் மேலும் அது போர்க்குற்றங்களுக்கு காரணமாக அமையலாம், ஆகவே இஸ்ரேல் இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

https://www.tehrantimes.com/news/460811/Backing-Palestine-is-top-foreign-policy-priority-Velayati

தூது சார்பாக அபிமானிகள் அனைவருக்கும் 

ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்

 

Friday, May 7, 2021

பைத்துல் முகத்தஸ் மீட்புக்கு ஒரே வழி இஸ்லாமிய ஒற்றுமையே

 The only way to liberate Quds is through Islamic unity

முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை இந்த நாட்களில் உம்மத்தின் உறுப்பினர்கள் அதிகமாக உணர்கிறார்கள். உம்மத்தின் ஒற்றுமைக்கு வழி வகுக்க முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும்என்று ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்

பலஸ்தீன் விவகாரம் போன்றதொரு பெரும் பிரச்சினையை அவ்வாறு இலகுவில் மறந்துவிட முஸ்லிம் சமுதாயங்களின் ஆர்வமும் அவர்களது தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஒருகாலமும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. அமெரிக்காவும் ஏனைய ஆதிக்க சக்திகளும் பிராந்தியத்தின் அல்லக்கைகளும் எவ்வளவு செல்வமும்  பலமும்  அதற்காக செலவிட்டாலும் அது  சாத்தியப்படப் போவதில்லை. 


குத்ஸ் மீட்புக்கு ஒரே வழி இஸ்லாமிய ஒற்றுமையே

இந்த அபகரிப்பாளர்களின் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கைகளைத் துண்டிக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். பாலஸ்தீனிய மக்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய நாளாக புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச  "குத்ஸ் தினமாக" அறிவிக்கின்றேன். இத்தினத்தை முஸ்லிம் மக்களின் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்ககுத்ஸ் விடுதலைக்கான முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக மட்டுமல்லாது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக நாளாக அனுஷ்டிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆயத்துல்லாஹ் கொமெய்னி அறைகூவல் விடுத்தார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து இஸ்ரேலுடன் ஷாவின் அரசாங்கம் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளையும் உடனடியாகவே துண்டித்து, அங்கிருந்த இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, அவ்விடத்தை பலஸ்தீன் தூதரகமாக மாற்றினார். அதுமட்டுமல்லாமல்பைத்துல் முகத்தஸை விடுவிக்கும் முக்கியத்துவத்தை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் முகமாகபுனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை "சர்வதேச குத்ஸ் தினம்" என்று பிரகடனப்படுத்தினார் மர்ஹூம் ஆயதுல்லாஹ் கொமெய் (ரஹ்) அவர்கள்.


இஸ்லாமிய ஒற்றுமையை வளர்க்க எல்லா முஸ்லிம்களாலும் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடிய விஷயங்கள்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் பல்வேறு வகையான ஆயுத மோதல்கள் முதல் பொருளாதார கஷ்டங்கள் மற்றும் பொது சுகாதார பிரச்சினைகள் வரை எண்ணற்ற சிரமங்களை எதிர்கொள்கின்றன.

உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் காரணியான, பல நூறு வருடங்களாக இடம்பெற்றுவந்த முஸ்லிம்களின் வருடாந்திர யாத்திரையான ஹஜ்ஜை கூட ரத்து செய்யும் நிலையை இந்த நவ கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கி உள்ளது.

இதற்கிடையில், கடந்த ஏழு தசாப்தங்களாக அளவிட முடியாத அநீதிக்கு ஆளான பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து, மேற்குக் கரையில் உள்ள ஏராளமான நிலங்களை இஸ்ரேலுடன் இணைப்பதில் சியோனிச ஆட்சி உறுதிபூண்டுள்ளது

இந்த கொடும் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கைகோர்த்திருந்தால், சியோனிச ஆட்சி அத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்த துணிந்திருக்காது என்பது மட்டுமல்ல அதை நிறைவேற்ற நினைத்தும் பார்த்திருக்காது,

சிரமங்களை எதிர்கொள்வதற்கும் ஒற்றுமையை அடைவதற்கும் முஸ்லிம் அரசாங்கங்களின் கூட்டு முயற்சிகள் இல்லாத நிலையில், உம்மாவின் ஒற்றுமைக்கு வழி வகுப்பதற்கும் உதவுவதற்கும் முஸ்லிம்களாகிய எம் அனைவருக்கும் தட்டிக்கழிக்க முடியாத தனிப்பட்ட கடமை உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒற்றுமை என்ற கட்டிடம் தனிநபருடன் தொடங்குகிறது என்பதையும்  அறிந்துகொள்வோம்..

"ஆயிரம் மைல் பயணம் நாம் முன் வைக்கும் ஓர் அடியுடன் தொடங்குகிறது".என்று ஒரு பிரபலமான பழமொழி உண்டு.

ஒரே நாளில் இஸ்லாமிய ஒற்றுமையை நாம் உருவாக்க நிச்சயமாக முடியாது என்பது நிதர்சனம். ஆனால் நாம் அனைவரும் தினசரி அடிப்படையில் அந்த இலக்கை நோக்கிச் செல்ல சிறிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இஸ்லாமிய ஒற்றுமை என்பது விரும்பினால் செய்யலாம் என்று விடக்கூடிய ஒரு விடயமல்ல 

முஸ்லிம்கள் இஸ்லாத்தை சடங்குகளாகக் குறைத்து விட்டார்கள் மற்றும் இன்ன பிற முக்கியமான கொள்கைகளையும் மறந்துவிட்டார்கள் என்று சொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இஸ்லாத்தின் ஐந்து தூண்களைப் பயிற்சி செய்வது மிக முக்கியமானது என்றாலும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விசுவாசத்தின் பிற அடிப்படை அம்சங்களையும் நாம் புறக்கணிக்க முடியாது.

குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரபுகளின்படி முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது ஒரு "பர்ழ்" (கட்டாய கடமை) ஆகும். கீழே உள்ள பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்:

49:10 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 

3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًاۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

இதிலிருந்து ஒற்றுமை எந்தளவு அவசியம் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

எம் பொது எதிரியை வெற்றிகொள்ள மிகச்சிறந்த ஆயுதம் ஒற்றுமையே! அதை ஒவ்வொரு இயக்கமும் கைக்கொள்ளவேண்டும், அதன்பால் அழைப்புவிடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

Sunday, May 2, 2021

ஈரானுடனான உறவுகளை சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் - முஹம்மது பின் சல்மான்

We are willing to mend relations with Iran - Muhammad bin Salman

சவூதி முடிக்குரிய இளவரசர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ஈரானுடனான உறவை சரி செய்ய விருப்பம் தெரிவித்தார். 

என்ன இருந்தாலும்ஈரான் எமது அண்டை நாடு. நாங்கள் வேண்டுவதெல்லாம் ஈரானுடன் நல்ல மற்றும் தனித்துவமான உறவைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று முஹம்மத் பின் சல்மான் ஏப்ரல் 27 ஆம் திகதியன்று வழங்கிய நேர்காணலில் கூறினார்.

"ஈரானுடனான நிலைமை கடினமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. மாறாகஈரானில் எங்களுக்கு சவுதி நலன்கள் இருப்பதால் அது செழித்து வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்அதேபோல் அவர்களுக்கு சவுதி அரேபியாவில் ஈரானிய நலன்கள் உள்ளனஇது பிராந்தியத்திலும் முழு உலகிலும் செழிப்பையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அதே நேரத்தில்சவூதி இளவரசர் ஈரானுடனான "பிரச்சினைகளை"யும் பிரஸ்தாபித்தார்இந்த பிரச்சினைகளை தனது நாட்டினால் சமாளிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள எங்கள் நண்பர்களுடன் இப்போது நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் அந்த பிரச்சினைகளில் வெற்றிகண்டு, ஈரானுடன் ஒரு நல்ல மற்றும் நேர்மறையான உறவை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்அது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ”என்று பின் சல்மான் கூறினார்.

சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் சமீபத்திய கருத்துக்களுக்கு அதன் முதல் எதிர்வினையில், ஈரான் சவூதி அரேபியாவின் தொனியில் ஏற்பட்ட மாற்றத்தை வரவேற்று, முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு தொடக்கப்புள்ளியாக இதைக் கருதுகிறது.

இதனை வரவேற்றுதெஹ்ரானும் ரியாதும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தைத் திறக்க முடியும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் கதிப்ஸாதே கூறினார்.

பின் சல்மானின் விருப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் இந்த அறிக்கை வந்துள்ளது,

"ஹார்முஸ் அமைதி முயற்சி (HOPE) உட்பட பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான முன்மொழிவுகளையும் முன்முயற்சிகளையும் முன்வைப்பதன் மூலம், ஈரான் இஸ்லாமிய குடியரசு நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் பாதையில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் சவுதி அரேபியாவின் மாற்றத்தை வரவேற்கிறது. ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்ஸாதே கடந்த வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"ஈரானும் சவுதி அரேபியாவும், பிராந்தியத்திலும் முஸ்லிம் உலகிலும் இரண்டு முக்கியமான நாடுகளாகும். ஆக்கபூர்வமான மற்றும் உரையாடல் அடிப்படையிலான அணுகுமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைய தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தில் நுழைய முடியும்" என்று கதிப்ஸாதே கூறினார்.

"இறைவனின் அருள் நிறைந்த மாதமான புனித ரமழான் மாதம் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றிணைவதற்கும், இந்த பிராந்தியத்தில் போர், இடப்பெயர்ச்சி மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் முடிவிற்கும் ஒரு பாக்கியமான தொடக்கமாக இருக்கும்" என்று கதிப்ஸாதே உறுதியாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரானிய-சவுதி உறவுகளில் சமீபத்திய உருகுநிலை, இரண்டு பிராந்திய அதிகார மையங்களுக்கிடையில் புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர பின்னணியின் விளைவாகும்.

இரு பிராந்திய போட்டியாளர்களும் 2016 ல் இராஜதந்திர உறவுகளை துண்டித்த பின்னர் ஈரான் மற்றும் சவுதி அரேபியா அதிகாரிகள் பாக்தாத்தில் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் சமீபத்திய வாரங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி மற்றும் ஈரானிய அதிகாரிகள் தங்களது இருதரப்பு பேச்சுவார்த்தையின் முதல் சுற்றை ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத்தில் நடத்தியதாகவும், அடுத்த சுற்று வரும் வாரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியா மீதான யேமன் அன்சஸாரல்லாவின் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டன என்றும் செய்தித்தாள் பிராந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

சவுதி-ஈரானிய பேச்சுவார்த்தைகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியது, கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் லெபனான் விடயமும் அவர்களது பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக அது மேலும் தெரிவித்தது.

முக்கிய ஷியா அறிஞர் ஷேக் நிமர் அல்-நிம்ரை சவுதி மரணதண்டனை வழங்கி கொன்றதால் கோபமடைந்த ஈரானிய எதிர்ப்பாளர்கள் தெஹ்ரானில் உள்ள சவூதி தூதரகத்தை தாக்கியதை அடுத்து, சவுதி அரேபியா 2016 ஜனவரியில் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துவிட்டது. அப்போதிருந்து, சவூதி அரேபியா ஈரான் மீது கடும் போக்கை கொண்டிருந்ததுடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஈரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தம்” பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரித்தது.

ஆனால் சவுதி-ஈரானிய உறவுகளில் இருந்துவந்த பதட்டங்கள் குறைந்தபட்சம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது. ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் கத்தார், ஈராக், ஓமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பிராந்தியங்களுக்கான தனது பயணத்தின் போது, ஈரானின் வெளியுறவு அமைச்சர் பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தார். அவர் மீண்டும் ஈரானிய சமாதான முயற்சியான ஹார்முஸ் அமைதி முயற்சி (HOPE) ஐ வழங்கினார், இது பிராந்தியத்தில் உரையாடலையும் பாதுகாப்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

https://www.tehrantimes.com/news/460426/Iran-welcomes-change-in-Saudi-tone-spokesman