Contributors

Tuesday, September 8, 2020

நபி (ஸல்) அவர்களை அவமதித்ததற்கு சியோனிசவாதிகளின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகள் முக்கிய காரணம்

 Zionists' anti-Islamic policies the main reason behind insulting Prophet (pbuh)

இறை தூதருக்கு எதிராக ஒரு பிரெஞ்சு வார இதழ் (சார்லி ஹெப்டோ) கூறிய அசிங்கமான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவரான ஆயதுல்லா கமேனி 2020 செப்டம்பர் 8 அன்று வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால்...

இறை தூதரின் ஒளிரும் புனித ஆளுமையை ஒரு பிரெஞ்சு வார இதழ் அவமதித்த செயலானது அது செய்த கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கில் அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகளால் தொடர்ச்சியாக பாராட்டப்படும் விரோதம் மற்றும் தீங்கிழைக்கும் வெறுப்பை இந்த வார (சார்லி ஹெப்டோ) இதழ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தை கண்டிக்கக்கூடாது என்பதற்காக சில பிரெஞ்சு அரசியல்வாதிகள் ‘கருத்து சுதந்திரம்’ என்று சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத, தவறான மற்றும் கீழ்த்தரமான செயலாகும். சியோனிஸ்டுகள் மற்றும் திமிர்பிடித்த சக்திகளின் ஆழ்ந்த இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகள்தான் இந்த விரோத நகர்வுகளுக்குப் பின்னால் உள்ளன.

இந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மற்றொரு நோக்கத்திற்கும் உதவக்கூடும்: அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சி இப்பகுதியில் நடைமுறைப்படுத்தியுள்ள தீய திட்டங்களிலிருந்து  மேற்கு ஆசியாவில் உள்ள மக்கள் மற்றும் அரசாங்கங்களின் கவனத்தை திசை திருப்பும் செயலே அதுவாகும்.

இந்த முக்கியமான பிராந்தியத்தின் பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் அதேவேளை, முஸ்லிம் நாடுகள் - குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளில் - இஸ்லாமிய மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கத்திய அரசியல்வாதிகளினதும் மற்றும் தலைவர்களினதும் விரோதப் போக்கை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

"...அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவனாக இருக்கிறான்...". [புனித குர்ஆன், 12: 21].

சையித் அலி கமேனி

https://english.khamenei.ir/news/7913/Zionists-anti-Islamic-policies-the-main-reason-behind-insulting

Monday, September 7, 2020

மக்கா இமாமின் உரை சியோனிச ஆட்சியுடன் சவுதி உறவுகளை இயல்பாக்குதலுக்கு முன்னோடி

 Mecca Sermon Hints at Saudi Normalization With Zionist Regime

மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் ஆற்றிய குத்பா உரை சியோனிச ஆட்சியுடன் சவுதி உறவுகளை இயல்பாக்குதலுக்கு முன்னோடியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக ஊடகங்களில் விவரிக்கப்படுகின்றது.

சுதைஸ் கடந்த வெள்ளிக்கிழமை அவரது குத்பா பிரசங்கத்தில் முஸ்லிமல்லாதவர்களுதானான உரையாடலையும் தயவையும் யூதர்களைப் பற்றி சிலாகித்தும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சியோனிச ஆட்சி இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கான திட்டங்களை அறிவித்த நான்கு வாரங்களுக்குள், சவூதி அரேபியாவும் இதைப் பின்பற்றுமா என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், இவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

ஒருவருக்கொருவர் உறவு பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் ஆரோக்கியமான பரிவர்த்தனைகளுடன் இணைந்திருப்டது தொடடர்பாக இருதயத்தில் தவறான எண்ணங்கள் கொல்வதைத் தவிர்க்குமாறு இமாம் வழிபாட்டாளர்களை கேட்டுக்கொண்டார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக முன்வைத்து, முஸ்லிமல்லாதவர்களுடன் நல்ல உறவைப் பேணுவதில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"ஆரோக்கியமான மனித உரையாடலை புறக்கணிக்கும்போது, அது நாகரிகங்களின் மோதலுக்கு இட்டுச் செல்வதாகவும் மேலும் வன்முறை, ஒதுக்கல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் முடியும்" என்று சுதைஸ் கூறினார்.

குறிப்பிட்ட இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்தன, பல பயனர்கள் இஸ்லாத்தின் புனிதமான மஸ்ஜிதின் தளத்தை தவறாக பயன்படுத்தியதாக சுதைஸ் மீது குற்றம் சாட்டினர்.

அல்-குத்ஸில் உள்ள அல்-அக்ஸா மஸ்ஜிதின் நிலையைப் பற்றி குறிப்பிடுகையில் சுதைஸ் "அது கைதியாக பிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

"இது இஸ்லாமிய மக்களுக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கும் ஒரு பிரச்சினை, தோன்றும் புதிய போராட்டங்களுக்கு மத்தியில் அதை மறந்துவிடக் கூடாது" என்றும் அவர் வழிபாட்டாளர்களிடம் கூறினார். "இது மனதில் வைக்கப்பட வேண்டும், ஆனால் ஊடகங்களில் மிகைப்படுத்தல்கள் இல்லாமல் அது விமர்சிக்கப்பட வேண்டும்" என்றார்.

இந்நிலையில், சியோனிச ஆட்சிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவு இயல்பாக்க ஒப்பந்தம் இஸ்லாத்தின் மூன்றாவது புனித தளமான அல்-அக்ஸாவின் முக்கிய நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா, சியோனிச ஆட்சி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின் தெளிவற்ற சொற்கள், யூதர்களின் பிரார்த்தனைக்காக அல்-அக்ஸா கதவுகளைத் திறந்து இறுதியில் நிலைமையை மாற்றுவதற்கான ஒரு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கடந்த வாரம் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது யூதர்கள் இந்த தளத்தை அணுக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், சியோனிச ஆட்சிக்கும் அல்-குத்ஸில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புனித தளங்களின் உத்தியோகபூர்வ பாதுகாவலரான ஜோர்டானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

தனது பிரசங்கத்தின் முடிவில், "அல்-அக்ஸா புனித மஸ்ஜிதை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டு", அதை "மறுமை நாள் வரை கண்ணியத்துக்குரிய இடமாக" வைத்திருக்குமாறு இறைவனை வேண்டினார்.

அவரது இந்த இரட்டை நிலைப்பாடு சமூக ஊடக பயனர்களால் கடுமையாக விமர்சிக்கடுகிறது, அவர்களில் பலர் பாலஸ்தீன் விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினர்.

சுதைஸ் இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது இது முதல் முறை அல்ல.

2017 ஆம் ஆண்டில், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மற்றும் சவுதி அரேபியா ஆகியவை உலகை அமைதிக்கு வழிநடத்துகின்றன" என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதற்காகவும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் உள்ள ஒரு மசூதியில் அவர் ஆற்றிய உரையின் போது "யெமனிலும் கட்டாரிலும் உள்ள உங்கள் சகோதரர்களை நீங்கள் புறக்கணித்து அவர்கள் பட்டினி கிடக்கும் போது அமைதி குறித்து எங்களுக்கு எவ்வாறு பாடம் நடத்த முடியும்?" என்று அங்கு ஒரு பார்வையாளர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் திக்குமுக்காடிப்போனார்.

சவுதி அரேபியாவுக்கு சியோனிச ஆட்சியுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் பாரசீக வளைகுடா அரபு ஆட்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் சியோனிச ஆட்சியுடன் பெருகிய முறையில் பொது உறவுகளைக் வளர்த்து வருகின்றன. சவூதி அரசின் அங்கீகாரமின்றி இவ்வாறு இடம்பெறுகின்றது என்று நம்புவதிற்கில்லை.

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் சியோனிச பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க வாஷிங்டன் டி.சி.க்கு திட்டமிட்டிருந்த பயணத்திலிருந்து, அச்சத்தின் காரணமாக விலகியதாக, மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye) சஞ்சிகை முன்பு வெளிப்படுத்தியது.

டிரம்பும் அவரது மருமகனும் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் ஒரு இளம் அரபு 'சமாதானத்தை விரும்பும் இளவரசராக' பின் சல்மானின் இமேஜை கட்டியெழுப்புவதற்கு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சியோனிச ஆட்சிக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு பிராந்திய ஆதரவை உயர்த்துவதற்கும் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye) இடம் தெரிவிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

http://kayhan.ir/en/news/82516/mecca-sermon-hints-at-saudi-normalization-with-zionist-regime

இது இவ்வாறிருக்கையில், ஈரானிய மஜ்லிஸ் சபாநாயகரின் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிராந்திய நாடுகளும் இஸ்லாமிய உம்மாவும் பாலஸ்தீனப் பிரச்சினையை தங்களது முக்கிய முன்னுரிமையாகக் கருதுவதாகவும், புனித குத்ஸ் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவதாகவும் கூறினார். .

அண்மையில் பெய்ரூட்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் தலைவர்களின் சந்திப்பு பாலஸ்தீனத்தின் எதிர்காலத்திற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்றும், இனவெறி, குற்றவியல் மற்றும் பயங்கரவாத ஆக்கிரமிப்பு ஆட்சியின் பிடியிலிருந்து பாலஸ்தீனிய பிரதேசங்களை விடுவிப்பதற்கான முயற்சி என்றும் அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

பாலஸ்தீனிய இன்திபாதாவை ஆதரிப்பதற்கான நிரந்தர செயலகத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் அமீர்-அப்துல்லாஹியான், பாலஸ்தீனியர்களின் விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்பின் இயக்கவியல் ஆகியவை நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ட்ரம்பின் சதி திட்டத்தை தோற்கடிக்கும் என்றும் கூறினார்.

பாலஸ்தீனிய குழுக்கள் ஒற்றுமையும் எதிர்ப்பின் செயல்பாட்டில் கவனம் செலுத்துவதும் ஆக்கிரமிப்பாளருடனான சமரசத்தை ரத்துசெய்து, புதிய பிரபலமான இன்திபாதாவைத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சியோனிச அபகரிப்பாளர்கள் புரிந்துகொள்ளும் ஒரே மொழி எதிர்ப்பு மற்றும் சக்தியின் மொழி என்பது அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும் தெளிவாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தை சீர்குலைப்பதில் சியோனிஸ்டுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை முறியடிப்பது பற்றி குறிப்பிடுகையில், கடந்த 40 ஆண்டுகளில் ஈரான் பாலஸ்தீனிய மக்களுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் சளைக்காது ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார்.

https://en.irna.ir/news/84028814/Palestine-main-priority-of-Muslim-World-Official

இதனைத் தொடர்ந்து லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் பணியகத் தலைவர் மற்றும் பெய்ரூட்டில் உள்ள அவரது துணைத் தலைவர் சலே அல்-அரோரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


தங்கள் பொதுவான எதிரியான சியோனிச ஆட்சியின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தமக்குள் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக லெபனான் அரபு மொழி ஆன்லைன் செய்தித்தாள் எல்னாஷ்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் "பாலஸ்தீனம், லெபனான் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் சமீபத்திய அரசியல் மற்றும் இராணுவ முன்னேற்றங்களை உள்ளடக்கியது" என்று ஹிஸ்புல்லாஹ் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ஹிஸ்புல்லாஹ் அறிக்கை "அனைத்து அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு சியோனிச எதிர்ப்பு அச்சின் வலிமையை" மீண்டும் வலியுறுத்தியது. இது ஹிஸ்புல்லாஹ்விற்கும் ஹமாஸுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவது, சில அரபு ஆட்சிகளுக்கும் சியோனிச ஆட்சிக்கும் இடையில் வளர்ந்து வரும் தொடர்பு இயல்பாக்கும் போக்கு மற்றும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

பாலஸ்தீனர்கள் மற்றும் பரந்த முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எதிர்ப்பு முன்னணியின் உறுதியும் வலிமையும் தேவை என்பதை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஒரு அறிக்கையில், இரு குழுக்களின் உறவுகள் "நம்பிக்கை, சகோதரத்துவம், ஜிஹாத் (இறை  பாதையில் போராட்டம்), பொதுவான உடன்பாடுகள் மற்றும் அவர்களுக்கு இடையே [இருக்கும்] ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளின் விரிவாக்கம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன" என்று ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தது.

இவ்விரு இயக்கங்களும் அந்தந்த நாடுகளில் சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக காசா பகுதியை ஹமாஸ் பாதுகாக்கிறது. டெல் அவிவ் பாலஸ்தீன நிலப்பரப்பை இடைவிடாத தாக்குதல்கள், மூன்று முழுமையான போர்கள் மற்றும் 2007 முதல் முடக்கப்பட்ட முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது.

2000 களில் லெபனானை குறிவைத்து சியோனிச ஆட்சி மேற்கொண்ட இரண்டு போர்களை ஹிஸ்புல்லாஹ் எதிர்த்துப் போராடியது, ஒவ்வொரு முறையும் சியோனிச ஆக்கிரமிப்பு ஆட்சியின் இராணுவத்தை பின்வாங்குமாறு செய்தது.

அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளின் கூட்டத்திற்காக இஸ்மாயீல் ஹனியே 27 ஆண்டுகளில் முதல் முறையாக லெபனான் தலைநகருக்கு பயணம் செய்துள்ளார். லெபனான் 174,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய அகதிகளைக் கொண்டுள்ளது.

பாலஸ்தீனிய பிரிவுகளுக்கிடையேயான இந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்க ஏற்பாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சியோனிச ஆட்சி இடையே தொடர்பு இயல்பாக்கலுக்கிடையே இடம்பெறுகின்றன.

அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளும் ஐக்கிய அரபு எமிரேட்-சியோனிச ஒப்பந்தத்தை ஏகமனதாக கண்டித்துள்ளன, இது ஒடுக்கப்பட்ட தேசத்தின் முதுகில் குத்திய செயலாகவும், ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீனிய போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாகவும் விவரித்தது.

http://kayhan.ir/en/news/82518/hezbollah-hamas-stress-unity-against-zionist-regime

 

Wednesday, September 2, 2020

அபுதாபியின் நடவடிக்கை ஒரு பச்சை துரோகம்

Palestinians see Abu Dhabi's move as a sheer betrayal.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ஒப்பந்தம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்ட போதிலும் அபுதாபியின் இந்த நகர்வை பச்சை துரோகமாக பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.

இந்த வளைகுடா அரபுத் தலைவர்களின் உண்மையான நோக்கம் பலஸ்தீனுக்கு உதவுவதல்ல, பாலஸ்தீன் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல; அவ்வாறு இருந்திருப்பின் பலஸ்தீன் உடன்பிறப்புகள் பல தசாப்தங்களாக படும் துயர் அவர்கள் கண்களுக்கு பட்டிருக்க வேண்டும். ஈரானுக்கு எதிராக ஒன்றிணைவதே இவர்களது முக்கிய குறிக்கோளாகும் என்பதை பாலஸ்தீனர்கள் நன்கு அறிவார்கள்.

 


மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் ஈரானின் செல்வாக்கை, குறிப்பாக அரபு இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் செல்வாக்கை முறியடிப்பதற்காக சவூதி தலைமையிலான அரபு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பல இயக்கங்கள் மற்றும் பல ஊடகங்கள் அவர்களால் இயக்கப்பட்டும் வருகின்றன.

ஈரானின் இஸ்லாமிய அரசு முறையும், பலஸ்தீன் தொடர்பான அதன் உறுதியான கொள்கையும், அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு முகம்கொடுக்கும் அதன் துணிச்சலும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அரபு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இளைஞர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு செல்வதை தடுக்க இந்த அரபு ஆட்சியாளர்களுக்கு இன்றும் பயன்படுவது ஷீஆ - சுன்னி என்ற பிரிவினைவாதமாகும்.

ஒரு சில அரபு ஆட்சியாளர்கள் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கையினை, சுன்னி உலகு இஸ்ரேலுடன் இணங்கிச்செல்ல தயாராய் உள்ளது போலவும் அதனை எதிர்ப்பது ஷியாக்கள் மட்டுமே என்பது போலவும் ஒரு மாயையை உருவாக்க சியோனிச ஊடகங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

ஈரானை சுன்னி உலகுக்கு எதிரான நாடாக காட்டுவதற்கு அரபு அரச ஊடகங்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் உலகு ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் அவை கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகின்றன.

பக்கத்தில் பலம்வாய்ந்த நாடாக ஈரான் வளர்ந்து வருவதையும் அரபு மக்கள் படிப்படியாக அதன்பால் ஈர்க்கப்படுவதையும் இந்த அரபு ஆட்சியாளர்கள் தங்கள் பரம்பரை ஆட்சிக்கு பெரும் சவாலாகவே பார்க்கின்றனர்; அதனால் தான் எந்த சாத்தானுடன் கூட்டு சேர்ந்தாவது, ஈரானின் வளர்ச்சியை முறியடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் தற்போது அவர்கள் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகும்.

 

With deal, UAE abandons Palestinian struggle – Cartoon [Sabaaneh/MiddleEastMonitor]


கடந்த வாரம் ஒரு வலைப்பதிவில்
, ஓய்வுபெற்ற யுஎஸ்ஏஎஃப் உளவுத்துறை அதிகாரி "சுன்னி அரேபியர்களுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள்" என்று எழுதினார். ஏனெனில் "அவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யெமனில் உள்ள அதன் ஷியா சிண்டிகேட்டை ஒரு பொது எதிரியாக கருதுகின்றனர்," என்று ரிக் ஃபிராங்கோனா விளக்கினார்.

எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட விஷயம் என்னவென்றால், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதில் அடுத்ததாக இருக்கும் அரபு நாடுகள் பஹ்ரைன், ஓமான் மற்றும் மொராக்கோ என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதாகும்.

இப்பிராந்தியத்தை நோக்குகையில் ஒருபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சுன்னி அரபு நாடுகளின் பின்னிப்பிணைந்த நலன்கள் உள்ளன, (ஷியா பெரும்பான்மை பஹ்ரைன் சுன்னி கலீபா குடும்பத்தால் ஆளப்படுகிறது, இபாதி ஷியா பெரும்பான்மை ஓமான் பிராந்திய விவகாரங்களில் பல தசாப்தங்களாக நடுநிலை வகிப்பதில் இருந்து விலகிவிட்டது), அவற்றுக்கு பிராந்தியத்தில் சியோனிச பிரசன்னம் ஒரு பொருட்டல்ல; மறுபுறம் ஈரானுடன் கூட்டணி வைத்திருக்கும் அரபு நாடுகளும் அரச சார்பற்ற (ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ், அன்ஸாருல்லாஹ் போன்ற) இஸ்லாமிய இயக்கங்களுமாகும்; இவையே சியோனிச உறவை தீவிரமாக எதிர்ப்பனவாகும்.

எவ்வாறாயினும், சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சுன்னி அரபு நாடுகள் இன்னும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். உதாரணமாக, துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகியவை இஸ்ரேலுடன் இயல்பாக்கத்திற்கு எதிரானவை.

ஈராக் அரசாங்கம் தனது நிலைப்பாடு மாறாது என்றும் இஸ்ரேலுடன் எந்த உறவும் இல்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாக்தாத்தில் ஒரு மதச்சார்பற்ற கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி இஸ்ரேலுடன் தொடர்புகளை இயல்பாக்குதலுக்கு சார்பாக வாதிட்டு வந்தாலும், ஈராக் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது.

பிராந்தியத்தில் ஈரானிய செல்வாக்கை எதிர்ப்பவர்களும், சில ஈரானிய அதிகாரிகளும் கூட, தெஹ்ரான் பாக்தாத், பெய்ரூட், டமாஸ்கஸ் மற்றும் சனா ஆகிய நான்கு அரபு தலைநகரங்களை கட்டுப்படுத்துகிறது என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும், ஈரான் அதன் அரபு நட்பு நாடுகளிடையே ஏற்படுத்தும் செல்வாக்கு கணிசமானது என்பதை மறுப்பதற்கில்லை. சியோனிசம் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கடுமையான எதிர்ப்பில் இந்த நாடுகள் அனைத்தும் மிகவும் உறுதியாக உள்ளன என்பது தற்செயல் நிகழ்வும் அல்ல.

ஈரானின் நெருங்கிய நட்பு நாடான சிரியா இன்னும் இஸ்ரேலுடன் போர் நிலையில் இருந்தபோதிலும், எகிப்து மற்றும் ஜோர்டான் செய்ததைப் போல ஆக்கிரமிப்பு அரசுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. சிரியாவிற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகள் குறித்து ஜூன் மாதம் பேசிய சிரிய வெளியுறவு மந்திரி வலீத் முஅல்லிம், டமாஸ்கஸை அழுத்தங்கள் ஊடாக நாங்கள் "எங்கள் கூட்டணிகளையும், எதிர்ப்பிற்கான எங்கள் ஆதரவையும் கைவிட்டு, இஸ்ரேலுடன் தொடர்புகளை இயல்பாக்குவோம் என்று எதிர்பார்த்தால் நிச்சயமாக ஏமாறுவர்" என்று கூறினார்.

இஸ்லாம் மற்றும் அரேபியத்தை காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்தை கண்டித்து, லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் பொதுச்செயலாளர் சையித் ஹசன் நஸ்ரல்லா தொலைக்காட்சி உரையில், இது நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சாதகமான செயல்பாடே தவிர வேறில்லை" என்று கூறினார்.

சவூதி அரேபியாவின் பல தசாப்த சுரண்டல் மற்றும் தலையீடு யெமனிய ஸைதி முஸ்லிம்களை ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் தள்ளிய பங்களிப்பு காரணிகளில் ஒன்றாகும். யெமனில் உள்ள  ஹௌதி தலைமையிலான அரசாங்கமே அதிக சக்தியைப் பயன்படுத்துகிறது மற்றும் நாட்டின் பெரும்பகுதியை மக்கள் தொகை மையங்களின் அடிப்படையில் நிர்வகிக்கிறது; நாடுகடத்தப்பட்ட சவுதியை தளமாகக் கொண்ட மான்சூர் ஹாதியின் யெமன் அரசாங்கம் அல்ல;

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதில் ஹௌதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. "சியோனிச ஆட்சியை ஆதரிக்கும் அரபு ஆட்சிகள் உண்மையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களில் பங்காளிகள்" என்று ஹவுத்தி தலைவர் சையித் அப்துல்மாலிக் அல்-ஹௌதி கடந்த வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இஸ்ரேல் ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலைப் பற்றி சாதகமாகப் பேசிய தெற்கு இடைக்கால கவுன்சிலின் (எஸ்.டி.சி) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பிரிவினைவாதிகளின் நிலைப்பாட்டிற்கு ஹௌதிகளின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. எமிரேட்ஸின் ஆதரவில் இயங்கும் (எஸ்.டி.சி) குழுக்களின் செயல்பாட்டுகள் யெமனில் இஸ்ரேலுக்கு கால் பதிக்க ஏதுவாக இருப்பதால் அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். யெமனில் ஈரான் சார்பு ஹௌதிகளுக்கு எதிராக செயல்படுவது சவூதி, அமெரிக்க, எமிரேட்ஸ், இஸ்ரேலிய கூட்டணி என்பது இங்கு தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் இல்லையெனில் இன்று லெபனானும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குக்கு உள்ளான நாடாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோல் சிரியா தொடர்பாக ஈரான் கொண்டிருக்கும் நிலைப்பாடு இஸ்ரேலின் விஸ்தீகரிப்பு திட்டத்துக்கு பெரும் தடையாக உள்ளது. அதேபோன்று ஹௌதிகள் இல்லை என்றால் யெமனும் இஸ்ரேலின் கோரப் பிடிக்குள் சிக்கியிருக்கும்.

ஆக, அமேரிக்கா, இஸ்ரேல், இஸ்லாம் விரோத அரபு ஆட்சிகள் ஆகியவற்றுக்கு அவற்றின் தீய திட்டங்களை நிறைவேற்றுக்கொள்ள பிராந்தியத்தில் பெரும் தடையாய் இருப்பது ஈரான் இஸ்லாமிய குடியரசாகும். இப்போது ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கான காரணம் ஈரான் எதிர்ப்பு என்பது வெளிப்படை.

தாஹா முஸம்மில்