Contributors

Tuesday, July 28, 2020

ஹஜ் என்பது சில கிரியைகளை கொண்ட வெற்றுச் சடங்கல்ல; அதன் பின்னால் மாபெரும் தாத்பரியம் ஒன்றுண்டு.

The Hajj Pilgrimage from Imam Khomeini's Point of View

 

தனது அறிவுசார், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, உண்மையான இஸ்லாத்தை விளக்கி, அறியாமை, விறைப்பு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றின் பொறிகளிலிருந்து விடுபடுவதற்கான அவசியத்தை மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது முதன்மை நோக்கமாகக் கருதினார்கள்.

இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று இஸ்லாமிய குடியரசு முறையையும் ஸ்தாபித்த பின்னரும், உலக அளவில் இஸ்லாமிய சிந்தனையை புத்துயிர்ப்பிப்பது ஒரு முஸ்லிமின் புனிதமான நோக்கமாக கருதி இமாம் கொமெய்னி (ரஹ்) செயற்படுத்தி வந்தார்கள். அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்கள் வரை அதைப் பின்பற்றுவதில் கொஞ்சம்கூட சளைக்கவில்லை.

சர்வாதிகார ஆட்சியின் கட்டமைப்பை மாற்றுவதற்கும் இஸ்லாமிய ஆட்சியின் அஸ்திவாரங்களை அமைப்பதற்கும் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் முக்கிய காரணியாக மக்கள் நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுத்தி அசல் இஸ்லாமிய தன்மைக்கு அவர்களை மீளவைக்கும் வழிமுறை பற்றியும் இமாமவர்கள் திட்டமிட்டார்கள்.


மத சிந்தனையின் மறுமலர்ச்சியை காணும் வழியில் இமாம் கொமெய்னி அவர்கள் புனித போராட்டத்தின் பரிமாணங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் ஒன்றாக 'ஹஜ் யாத்திரை'யை அதன் அடிப்படை தத்துவங்கள், பாடங்கள், அது வழங்கும் செய்திகள் மற்றும் சமூக மற்றும் அரசியல் பரிமாணங்களை விளக்கி விவரிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும் என்று அயராத முயற்சி செய்தார்கள்.

ஹஜ் சம்பந்தமான இமாமின் செய்திகள் மற்றும் அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க பகுதி இப்ராஹீம் (அலை) அவர்கள் கால மற்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கால ஹஜ் யாத்திரையை புத்துயிர் பெறச்செய்வதாகவே அமைந்திருந்தன.

இந்த மாபெரும் மார்க்க கடமையில் இருந்து மூடநம்பிக்கைகளை  அகற்றி, ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதன் விளைவுகளையும் விளக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவ சக்திகள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகள் ஆகியோரை  அடையாளம் காட்டி, ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியத்தை உணர்த்த முடியும் என்று நம்பினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஹஜ் தொடர்பாக இமாம் கொமெய்னி விடுத்த அறிக்கைகளில் ஒரு பகுதியை ஆராய்ந்ததில், அது மூன்று முக்கிய தலைப்புகளைக் கொண்டுள்ளது என்பதை கண்டறிந்தோம். அது ஒவ்வொன்றையும் தத்தனியாக ஆராய்வோம்.

1.    ஹஜ்ஜின் தத்துவம் தொடர்பான குழப்பமான விளக்கங்கள்

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்த புனித யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் ஹஜ்ஜை நிலைநிறுத்த தங்கள் பொருள் மற்றும் ஆன்மீக வாழ்வின் ஒரு பகுதியை ஏன் செலவிட வேண்டும் என்பதையும் கண்டறிவதாகும்.

இவற்றை ஆய்ந்தறியாத நபர்களால் அல்லது பக்கச்சார்பான ஆய்வாளர்களால் இதுவரை ஹஜ் யாத்திரையின் தத்துவமாக வரையப்பட்டிருப்பது என்னவென்றால், இது ஒரு கூட்டு வழிபாடு மற்றும் ஒரு யாத்திரையுடனான ஒரு சுற்றுலா பயணம்.

ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு புனித போராட்டத்தில் ஈடுபட வேண்டும், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றுக்கும் ஹஜ் யாத்திரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்களின் உரிமைகளையும், அடக்கி ஆள்பவரிடமிருந்து நலிந்தவர்களையும் பாதுகாப்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்கள் மீது செலுத்தப்படும் உளரீதியான மற்றும் உடல்ரீதியான  அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது...? முஸ்லிம்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாகவும், மூன்றாவது உலகளாவிய சக்தியாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா...? மாறாக, ஹஜ் யாத்திரை என்பது 'கஃபா' மற்றும் மதீனா நகரத்தைப் பார்வையிடும் ஒரு பயணமாக மட்டுமே இருக்க வேண்டுமா...? போன்ற கேள்விகள் எம்முள் எழ வேண்டும்.

வரலாறு முழுவதும் இஸ்லாமிய சமூகங்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்களை கட்டிப்போட்டுள்ள ஆபத்துகளில் ஒன்று ஹஜ் யாத்திரையின் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் அந்த உபரிகளையே ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகும்.

இவர்களால் கொடுக்கப்படும் இந்த தவறான விளக்கங்கள் இந்த வழிபாட்டுச் செயலின் யதார்த்தங்கள், போதனைகள் மற்றும் ஞான அறிவு ஆகியவற்றை அறியாமையுடன் கலக்கச் செய்து முஸ்லிம்களில் மந்தநிலை, மூடநம்பிக்கை போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களில் உள்ள மாற்றத்தை உருவாக்கும் திறனை பயன்படுத்த விடாது, பின்தங்கியிருக்க காரணமாகின்றன.

ஹஜ் எனும் இந்த முக்கியமான இஸ்லாமிய கடமையின் போது  அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டி, ஒரு பாரிய இஸ்லாமிய மாநாட்டு வடிவத்தில், சமூக மற்றும் அரசியல் விளைவுகளை உணரச் செய்ய பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சுற்றுலா பயணம் போல் கருதச் செய்துள்ளனர்.

முஸ்லிம்களை மகிழ்விக்கவும், களிப்புறச் செய்யவும், அங்குள்ள  கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பார்த்துவிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என்றா இஸ்லாம் கோருகிறது...?

இமாம் கொமெய்னி அவர்களின் பார்வையில், ஹஜ் தொடர்பான இந்த தவறான விளக்கங்கள் இரண்டு குழுக்களால் முன்வைக்கப்பட்டு தொடர்கின்றன.

முதல் குழு, அறியாமையில் உள்ளவர்கள்: இஸ்லாமிய சமூகங்களின் உண்மையான தேவை தொடர்பான புரிதலும் அறிவும் இல்லாத காரணத்தால், ஹஜ் யாத்திரையை சில இடங்களை தரிசிப்பதற்காகவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தை சில சடங்குகளுக்குள் சுருக்கி, வரையறுத்து கட்டுப்படுத்துகிறார்கள். இவர்களது இந்த அறியாமை, புனித ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதனால் ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கத்தையும் அதன் கருத்தியல் மற்றும் ஆன்மீக நோக்கங்களுடன் புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.

இரண்டாவது குழு தமது பொருளாதார மற்றும் அரசியல் நலன் காரணங்களுக்காக ஹஜ் யாத்திரையை பயன்படுத்த முயற்சிக்கும் பக்கச்சார்பான ஆய்வாளர்கள் ஆகும். இந்த குழு யாத்ரீகர்கள்  ஹஜ்ஜின் உண்மையான நலன்களையும் அபிலாஷைகளையும் அடையவிடாது, அல்லது விரும்பிய மற்றும் வளமான முறையில் அதன் தாத்பரியத்தை  உணரவிடாது இந்த மாபெரும் இறை வழிபாட்டை அவர்கள் தங்கள் மார்க்கப் பிரிவினரின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப விளக்குகிறார்கள். இந்த ஆய்வாளர்கள், இன்றும்கூட, மதத்தின் பெயரில் இஸ்லாமிய போர்வை போர்த்திக்கொண்டு, பொதுமக்களின் கருத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர் ஹஜ் யாத்திரையின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை எதிர்க்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதே நபர்கள்தான். இன்றும், அவர்கள் காலத்தின் கட்டாயமான முஸ்லிம் ஒற்றுமையை எதிர்ப்பவர்களாகவும் இஸ்லாமிய பிரிவுகளின் அடிப்படை நெருக்கத்தை மறைப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தான் புனித ஹஜ்ஜை சடங்குகளுக்கு முடக்கி சில இடங்களை தரிசிக்கும் பொழுதுபோக்கு பயணம் போல் நம்பச் செய்துள்ளார்கள்.

இந்த இரு குழுக்களும் நம்பமுடியாத அனுமானங்களையும் விளக்கங்களையும் வழங்குவதன் மூலம், ஹஜ் யாத்திரைக்கும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற கூற்றை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்களுக்கு முஸ்லிம்கள் உலகளாவிய அதிகாரத்தை அடைவதோ, திமிர்பிடித்த உலக சக்திகளுக்கு எதிரான புனித போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதோ அவசியமில்லை. அவர்களின் பார்வையில், இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகளுக்கு எதிராக போராடுவது ஒரு தவறான செயலாகும்.

2.    உண்மையான ஹஜ் யாத்திரையில் மறைந்திருக்கும் உண்மைகள்

ஹஜ் யாத்திரைக்கு கொடுக்கப்பட்டு வரும் மேற்கூறப்பட்ட  தவறான விளக்கங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரித்த உடனேயே, இமாம் கொமெய்னி இந்த மாபெரும் வழிபாட்டின் மகத்துவம் பற்றி குறிப்பிடுகிறார்:

"... ஹஜ் யாத்திரை என்பது மனிதர்கள் நெருங்கி வந்து கஃபா எனும் புனித இல்லத்தின் உரிமையாளனுடன் இணைவதுதான் ... மேலும் ஹஜ் யாத்திரை என்பது வெறுமனே கிரியைகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஜெப சொற்களின் தொடர் அல்ல. ஒரு நபர் இறைவனை சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இறுகிய இயக்கம் போன்றவற்றின் ஊடாக அடைவதில்லை. தெய்வீக போதனைகளின் மையத்தில் ஹஜ் யாத்திரை உள்ளது. அதில் இருந்து இஸ்லாத்தின் கொள்கையின் உள்ளடக்கத்தை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேட வேண்டும். ஹஜ் யாத்திரை என்பது பொருள் மற்றும் எண்ணங்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு முக்கிய கடமையாகும்; மேலும் அது ஒரு நபரில் மற்றும் உலகில் அன்பை உருவாக்கும் ஒரு முழுமையான சமூக வாழ்க்கையின் அனைத்து காட்சிகளின் வெளிப்பாடும் ஆகும்.

இன்னும் ஹஜ் யாத்திரையில் உள்ளவை உண்மை வாழ்க்கையுடன் தொடர்புபட்ட  சடங்குகளாகும்... மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் "உம்மா" எனும் உலகளாவிய சமூக சபையுடன் இணைவதற்கு, எந்தவொரு இனத்திலிருந்தும் தேசத்திலிருந்தும் வந்தபோதும், இப்ராஹிம் (அலை) அவர்களின் கவ்ம் எனும் வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, "உம்மா" என்ற ஒன்றுபட்ட சக்தியாக மாறி, இந்த ஏகத்துவ வாழ்க்கையின் பயனை அடைவதற்கு ஹஜ் யாத்திரை எம்மை தயார் படுத்துகிறது, அதற்கான பயிற்சியை வழங்குகிறது. அதற்கான ஒத்திகையே இந்த புனித கடமையாகும்.

3. ஹஜ் யாத்திரை என்பது குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்களின் பொருள் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் மற்றும் திறன்களை பிரதிபலிக்கும் அற்புத காட்சி; மேலும் அது அனைவரும் பயனடையக்கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

சன்மார்க்க சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய தேசமான "உம்மா" வின் நிலையினை நன்கு அறிந்தவர்கள் ஹஜ்ஜின் கடமையில் புதைந்து கிடைக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களை அடைந்துகொள்வதற்கு, ஞானக் கடலில் மூழ்கவேண்டும், சுழியோட வேண்டும். அவ்வாறன்றி அவற்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

ஹஜ் யாத்திரையின் தத்துவம் மற்றும் விளைவுகள் பற்றி  இந்த விளக்கங்களில், இமாம் கொமெய்னி (ரஹ்) விவரிக்கிறார். இந்த பெரிய இறை வழிபாட்டுச் செயலையும் அதன் விளைவுகள் மற்றும் அறுவடைகளின் மகத்துவத்தையும் இலகுவான, புரியும் மொழியில்  தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையான ஹஜ் யாத்திரையை விளக்கிய பின்னர், இமாம் கொமெய்னி (ரஹ்) மகத்தான சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்ட இந்த மாபெரும் வழிபாட்டுச் செயல் எவ்வாறு அதன் இயல்பு தன்மையில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது, வெறும் சரித்திர கதையாக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்.

புனித குர்ஆனில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் புரியாதுள்ளது போன்றே ஹஜ்ஜின் தாத்பரியங்களையும்  அறியாதிருக்கிறோம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

உயிர்த்துடிப்புள்ள குர்ஆன் வசனங்களின் அர்த்தத்தை எந்தளவு மறைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஹஜ்ஜின் மகத்துவமும் வக்கிர சிந்தனையின் மண்ணின் கீழ் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது ...

புனித குர்ஆனின் வழிகாட்டுதல், வாழ்வொழுங்கு மற்றும் வாழ்க்கையை உருவாக்கும் தத்துவத்தின் மொழி எவ்வாறு திகில், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மொழியாக தரம் குறைக்கப்பட்டுள்ளதோ, ஹஜ் யாத்திரை அதே கதியை அனுபவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று, இஸ்லாத்தின் புனித ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் மற்றும் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள்  கால்தடங்களில் கால் பதிக்கின்றனர். இருப்பினும், இப்ராஹிம் (அலை) யார், முகமது (ஸல்) யார், அவர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள் என்ன; அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கேள்வியெழுப்புவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.

நிச்சயமாக, ஒர் உயிர் துடிப்பற்ற ஹஜ், இயக்கம் அற்ற ஹஜ், ஒற்றுமையை வெளிப்படுத்தாத ஹஜ் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை அழிக்க அழைப்பு விடுக்காத ஹஜ் உண்மையான ஹஜ் யாத்திரை அல்ல.

சுருக்கமாக கூறின், அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியங்களின்பால் கவனம் செலுத்த வேண்டும், குர்ஆன் போதனைகளை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் இவை இரண்டும் உயிரோட்டம் பெற வேண்டும்.

ஹஜ் யாத்திரையின் சரியான மற்றும் உண்மையான தத்துவத்தை, விளக்கங்களை முன்வைப்பதன் மூலம், ஆஸ்த்தான ஆலிம்களின், மத அறிஞர்களின் தன்னிச்சையான அனைத்து மூடநம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிதைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.

குர்ஆன் உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கை புத்தகம் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மட்டுமல்ல, இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் நியதிகள் மற்றும் கொள்கைகளுடன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். அதன் போதனைகளின் உலகளாவிய தன்மையையும், வாழ்க்கையை உருவாக்கும் நியதிகளையும் கொண்ட சத்தியத்தின் சிறந்த புத்தகமான குர்ஆன் இன்று மரணித்தவர்கள் ஆன்மாக்களுக்கான பாராயண புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது பெரும் கவலைக்குரிய விடயமாகும். அதுபோல் இந்த மகத்தான ஹஜ் கடமையில் இருந்து சமூக மற்றும் அரசியல் தத்துவங்கள் தூரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த வேதனையையும் துக்கத்தையும் தெரிவித்திருந்தார்கள்.

http://www.hajij.com/en/the-hadj-messages/item/118-the-hajj-pilgrimage-from-imam-khomeinis-point-of-view


Monday, July 20, 2020

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விடுக்கும் ஈரான்-சீன ஒப்பந்தம்: நியூ யார்க் டைம்ஸ்

NY Times: Iran-China Deal ‘Major Blow’ to U.S.

ஈரானும் சீனாவும் ஒரு பாரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளன, இது எரிசக்தி மற்றும் பிற துறைகளில் பில்லியன் கணக்கான டாலர் சீன முதலீடுகளுக்கு வழிவகுக்கும். இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்த டிரம்ப் நிர்வாகத்திற்கு இது ஒரு பெரும் அடியாக இருக்கும் என்று  நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே மற்றும் இதுபோன்ற ஏராளமான திட்டங்களில் சீனா பங்களிப்பை பெரிதும் விரிவுபடுத்தும் 18 பக்க உத்தேச ஒப்பந்தத்தின் விவரங்கள் அடங்கிய பிரதி ஒன்றை கடந்த வாரம் இப்பத்திரிகை பெற்றுள்ளது. சீன பங்களிப்புக்கு ஈடாக, அடுத்த 25 ஆண்டுகளில் கிராமமான முறையில்  சீனா ஈரானிய எண்ணெய் விநியோகத்தைப் பெறும் என்று அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மூலோபாய திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்து வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்விரு நாடுகளும் இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதையும் இந்த ஆவணம் விவரிக்கிறது. கூட்டு பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆயுத மேம்பாடு மற்றும் உளவுத்துறை பகிர்வு - இவை அனைத்தும் "பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுடன் எதிர்த்துப் போராடும் நோக்கத்துக்காக" என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டாண்மை - சீன தலைவர் ஜி ஜின்பிங்கினால், 2016 இல் அவர் ஈரானுக்கு விஜயம் செய்தபோது முதலில் முன்மொழியப்பட்டது - கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் அமைச்சரவை இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீப் கடந்த வாரம் தெரிவித்தார்.

சீனாவுடன் இவ்வொப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இன்னும் ஈரான் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் ஸரீப் கூறினார்.

பெய்ஜிங்கில், அதிகாரிகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிடவில்லை, மேலும் சீன அரசாங்கம் இதில் கையெழுத்திட்டதா அல்லது அவ்வாறு இருந்தால், அதை எப்போது அறிவிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

"ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் விரிவாக நடைமுறைக்கு வந்தால், இந்த ஈரான்-சீன கூட்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோசமடைந்துவரும் உறவில் புதிய மற்றும் ஆபத்தான மோதல் புள்ளிகளை உருவாக்கும்" என்று அந்த பத்திரிகை அறிக்கை மேலும் கூறியது.

"அதிபர் ஒபாமாவும் மற்ற ஆறு நாடுகளின் தலைவர்களும் இரண்டு வருடங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2015 ல் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் மீதான ஆக்கிரோஷக் கொள்கைக்கு இது ஒரு பெரிய அடியைக் குறிக்கிறது”, என்று அப்பத்திரிகை மேலும் தெரிவித்தது.

ஈரானில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனத்துக்கும் சர்வதேச வங்கி முறைக்கான அணுகலை துண்டிக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள், ஈரானுக்குத் தேவையான எண்ணெய்க்கான தொழில்நுட்பமும் எண்ணெய் பசியும் கொண்ட சீனாவின் பக்கம் திரும்ப தெஹ்ரானைத் தூண்டின.

 உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்று.  எனினும் டிரம்ப் நிர்வாகம் 2018 இல் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியதிலிருந்து அதன் ஏற்றுமதிகள் சரிந்தன; சீனா தனது எண்ணெய் தேவையில் 75 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து பெறுகிறது மற்றும் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது, கடந்த ஆண்டு அதன் ஒரு நாள் தேவை 10 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல்.

"பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கும் நேரத்தில், பெய்ஜிங் தற்போதைய அமெரிக்க பலவீனத்தை உணர்ந்துள்ளது. ஈரானுடனான உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம், பெரும்பாலான நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்க பொருளாதார தடையை மீறும் சக்திகொண்ட நிலையில் இருப்பதாக சீனா உணர்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் நடத்தி வரும் வர்த்தகப் போரில் உள்ளதைப் போலவே, அமெரிக்க சவால்களை தாங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது ”என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

"இரண்டு பண்டைய ஆசிய நாகரிகங்கள் (ஈரானும் சீனாவும்), வர்த்தக துறைகளில் இரண்டு பங்காளிகள் போன்று, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு நலன்கள் பேணுவதில் ஒன்றுக்கொன்று மூலோபாய பங்காளியாக கருத்தில் கொள்ளும்,” என்று அந்த ஆவணம் அதன் தொடக்க வாக்கியத்தில் கூறுகிறது.

ஈரானில் 25 ஆண்டுகளில் மொத்தமாக 400 பில்லியன் டாலர் சீன முதலீடுகள், என்று ஒப்பந்தம், சீன நிறுவனங்களுக்கு எதிராக இன்னும் கூடுதலான தண்டனை நடவடிக்கைகளைத் தூண்டக்கூடும், அவை சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே அமெரிக்க நிர்வாகத்தால் குறிவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பத்திரிகையின் படி, இராணுவ உதவி விரிவாக்கம், இராணுவ பயிற்சி மற்றும் உளவுத்துறை தகவல்கள் பகிர்வு ஆகியவை வாஷிங்டனால் எச்சரிக்கையுடன் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படும். அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவின் நெரிசலான நீர்ப்பகுதியில் ஈரானியப் படைகளுடன் தொடர்ந்து உரசிக் கொள்கின்றன; மற்றும் தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனாவின் சொந்தம் கொடாடும் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய கூற்றை சவாலுக்கு உட்படுத்துகின்றன, மேலும் பென்டகனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் சீனாவை ஒரு எதிரி நாடாகவும் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் ஈரானுடனான நீண்டகால முதலீட்டு ஒப்பந்தத்தின் அறிக்கைகள் வெளிவந்தபோது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அதை ஏற்றுக்கொள்ளவுமில்லை மறுக்கவுமில்லை. கடந்த வாரம் மீண்டும் இது குறித்து கேட்டபோது, சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லீஜியாங், ஒரு ஒப்பந்தம் செயல்படுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

"சீனாவும் ஈரானும் பாரம்பரிய நட்பை கொண்டுள்ள இரு நாடுகள், இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்தும் உரையாடி வருகின்றன," என்று அவர் கூறினார். "நடைமுறை ஒத்துழைப்பை சீராக முன்னேற்ற ஈரானுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டார்."

குறிப்பிட்ட திட்டங்கள் - ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 100 செயற்றிட்டங்கள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன - இது ஷியின் "பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி", அதாவது இது ஒரு பரந்த உதவி மற்றும் முதலீட்டு திட்டத்துடன் பொருந்தக்கூடியது என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள், அதிவேக ரயில்வே மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட மில்லியன் கணக்கான ஈரானியர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படும் திட்டங்களாகும். மேலும் வடமேற்கு ஈரானில் உள்ள மாகுவிலும்  அபாதானில், பாரசீக வளைகுடா தீவான கெஷ்மிலும் சீனா சுதந்திர வர்த்தக வலயங்களையும் உருவாக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் 5 ஜி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், சீனாவின் நவீன உலகளாவிய நிலைப்படுத்தல் GPS வழங்குவதற்கான பெய்டோ (Beidou) திட்டங்களும் அதில் அடங்கும்.

டைம்ஸின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகம் ஈரானுடனான  அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்ட பின்னர் பெய்ஜிங் ஈரானில் ஒரு பரந்த முதலீட்டுத் திட்டத்துடன் முன்னேறுவது, அமெரிக்கா மீதான பெருகிய பொறுமையின்மையைக் வெளிக்காட்டுகின்றது. "சீனாவும் ஒரு தரப்பாக இருந்த இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க சீனா பலமுறை அமெரிக்க நிர்வாகத்திடம் அழைப்பு விடுத்துள்ளது, மேலும் ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை அமெரிக்கா பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்துள்ளது" என்று அது கூறியது.

பத்திரிகையின் படி, ஈரானிய அரசாங்கங்கள், பாரம்பரியமாக வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளிகளுக்காக ஐரோப்பாவை நோக்கி மேற்கு நோக்கிப் பார்வையை செலுத்தின. ஆயினும் "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ட்ரம்பின் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்த போதிலும், அவை ஒப்பந்தத்தை மதிக்காத காரணத்தினால், ஈரான் கடும் விரக்தியடைந்துள்ளது".