Contributors

Monday, January 20, 2020

ஈரான் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் - ஆயத்துல்லாஹ் காமனெய்


Iran will become more powerful in the short term, enemies will not even dare to threaten Islamic Republic - Leader-Khamenei-Friday-prayers
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் சையத் அலி காமெனெய் தனது குத்பா உரையில், ஓர் ஈரானிய தளபதியின் படுகொலை அமெரிக்காவை இழிவுபடுத்தியுள்ளது, ஏனெனில் அது "பயங்கரவாத" நடவடிக்கைக்கு சொந்தமான நாடு, இப்போது ஈரானின் பதிலடி காரணமாக அது அவமானமடைந்துள்ளது.
"இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தை நொறுக்கிய நாள் இறைவனின் நாட்களில் ஒன்றாகும். புரட்சி காவலர்களின் பதிலடி, அமெரிக்காவின் வல்லரசின் விகாரமான உருவத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் அடியாகும்" என்று தலைவர் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை (17/01/2020) ஜும்மாவுக்காக ஒன்றுகூடிய பெரும்திரளான மக்கள் கூட்டத்திடம் தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி கிராண்ட் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஆயத்துல்லாஹ் காமனேய் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனரல் கஸ்ஸெம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களை தனது ஏவுகணைககளை கொண்டு  தாக்கிய பின்னர் இடம்பெறும் இமாம் காமனேயின் பகிரங்க உரையாகும்.
கடந்த இரண்டு வாரங்கள் கசப்பான மற்றும் இனிமையான சாகசங்கள் கொண்டதாகும். இவை  ஈரானிய மக்களுக்கு படிப்பினைகளைக் கொண்ட நிகழ்வுகளால் ஆன, அசாதாரண வாரங்கள் என்று தலைவர் விவரித்தார்.
"இறைவனின் நாள் என்பது நிகழ்வுகளில் இறைவனின் பலத்தை காண்பது - ஈரானிலும் ஈராக்கிலும் மற்றும் சில நாடுககளிலும் மில்லியன் கணக்கான மக்கள் குத்ஸ் படை தளபதியின் இரத்தத்தை கௌரவிக்க வீதிக்கு வந்த நாள்," என்றும் இமாம் சொன்னார்கள்.
"இஸ்லாமிய புரட்சி காவல் படையினரின் ஏவுகணைகள் அமெரிக்க தளத்தைத் தாக்கிய நாள், இறைவனுக்குரிய மற்றொரு நாளாகும். இறைவனின் இந்த இரண்டு நாட்களையும் நம் கண் முன்னே பார்த்தோம். நாட்கள் வரலாற்றை உருவாக்கும் ஒரு திருப்புமுனையாகும். ஆகவே இந்த நாட்கள் சாதாரண நாட்கள் அல்ல" என்று அவர் விபரித்தார்.
"உலகின் திமிர்பிடித்த மற்றும் கொடுமை இழைத்து வரும் ஒரு சக்திக்கு கன்னத்தில் அறைந்தது போன்ற ஒரு பதிலடியை கொடுக்கும் தைரியத்தையும் பலத்தையும் எமக்கு கிடைக்கச் செய்தது நிச்சயமாக இறைவனின் அருளாகும்," என்று ஆயதுல்லாஹ் காமெனெய் மேலும் கூறினார்.
அண்மைய சம்பவங்கள், தேசங்களின் உறுதியிலும் மனநிலையிலும் ஒரு நித்திய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை ஈரானிய மக்கள் "பொறுமை, எதிர்ப்பு மற்றும் நன்றி மறவா தன்மை" போன்றவற்றை கொண்டுள்ளதாக தலைவர் கூறினார்.
மேலும் அவர் "சியோனிச செய்தி சாம்ராஜ்யமும் அமெரிக்க ஆட்சியின் பயங்கரவாத அதிகாரிகளும் எங்கள் அன்புக்குரிய மற்றும் சிறந்த பயங்கரவாத ஒழிப்பு தளபதியைக் குற்றம் சாட்ட தங்களால் முடிந்த அத்தனை முயற்சியைச் செய்தார்கள், ஆனால் சர்வவல்லமையுள்ள இறைவன் காட்சியை மாற்றியமைத்தான். இதனால் ஈரானில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தது மட்டுமல்லாமல் அமெரிக்க மற்றும் சியோனிச கொடிகளை எரித்து, அவர்கள் மீதான தமது விரோதத்தை வெளிப்படுத்தினர்" என்று கூறினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் அவரது தோழர்களுக்காக நடத்தப்பட்ட பாரிய இறுதி ஊர்வலங்கள் மற்றும் அவர்களின் உயிர் தியாகங்கள் "தெய்வீக அடையாளங்களில் உள்ளவை" என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
ஏனென்றால், "முழு பிராந்தியத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த தளபதியாக இருந்த ஜெனரல் சுலைமானியின் படுகொலை, அவமதிக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அவமானத்திற்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.
"இந்த வீரம் நிறைந்த தியாகியை அமெரிக்கர்களினால் போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியவில்லை, அதனால் தான் அவரை திருட்டுத்தனமாகவும் கோழைத்தனமாகவும் படுகொலை செய்தார்கள். இது  அமெரிக்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது," என்று தலைவர் மேலும் கூறினார்.
இத்தகைய படுகொலைகள் கடந்த காலங்களில் சியோனிச ஆட்சிக்கு மிகவும் பொதுவானவை என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, அமெரிக்கர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான அநியாயங்களையும் கொலைகளையும் செய்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி 'நாங்கள் பயங்கரவாதிகள்' என்று தனது சொந்த வார்த்தைகளில் ஒப்புக்கொண்டார். இதை விட பெரிய அவமானம் அவர்களுக்கு எதுவும் இல்லை என்று தலைவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோரின் தொடர்ச்சியான ட்வீட்களைக் குறிப்பிட்டு, ஈரானிய மக்களுடன் நிற்கின்றோம் என்று கூறும் அவர்கள் "மிகவும் மோசமான அமெரிக்க கோமாளிகள்" என்பதையும் ஆயதுல்லாஹ் காமனேய் குறிப்பிட்டர்.
"நாட்டின் புகழ்பெற்ற தளபதியின் உருவத்தை அவமதித்தது ஈரானிய மக்களின் சில நூறு பேர் கொண்ட சிறு குழுவாகும், ஆனால் ஹஜ் கஸ்ஸெமை கௌரவித்ததோ எண்ணற்ற பாரிய கூட்டம்" என்று தலைவர் கூறினார்.
உக்ரேனிய பயணிகள் விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்டதற்கு எதிராக தெஹ்ரான் நகரத்தில் சில நூறு பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஆயத்துல்லாஹ் காமனெய் குறிப்பிடுகிறார், இதன் போது ஜெனரல் சுலைமானியின் சுவரொட்டிகள் சில கிழிக்கப்பட்டன.
"அமெரிக்கர்கள் ஈரானிய மக்களுடன் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருந்தால், இந்த தேசத்தின் இதயத்தில் ஒரு விஷக் கத்தியை சொருகுவதே  அதன் பொருளாகும். நிச்சயமாக, அவர்களால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை, இனிமேலும் எதுவும் செய்ய இயலாது" என்று அவர் கூறினார்.

சோகமான நிகழ்வு
தெஹ்ரானுக்கு அருகே ஒர் உக்ரேனிய விமானம் தவறுதலாக வீழ்த்தப்பட்ட  "கசப்பான" சோக நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். பல உயிர்கள் பலியாக காரணமான இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 இந்த சம்பவத்தில் தெளிவற்ற தன்மைகள் சூழ்ந்து உள்ளன. விளக்கங்களை வழங்கிய ஐ.ஆர்.ஜி.சி தளபதிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆனால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரப்பட வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆயத்துல்லாஹ் காமனெய் மேலும் கூறுகையில், “விமான விபத்தால் நாங்கள் துக்கப்படுகையில், நாம் மனமுடைந்து இருக்கையில், எங்கள் எதிரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை ஐ.ஆர்.ஜி.சி, மற்றும் இஸ்லாமிய குடியரசை கேள்விக்குட்படுத்துவதற்கு கிடைத்த ஒரு சாக்காக அவர்கள் கருதுகின்றனர்".
எதிரியின் குறிக்கோள், "அந்த மாபெரும் சம்பவங்களை" (ஜெனரல் சுலைமானிக்கு நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகள் மற்றும் அமெரிக்க தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணைத் தாக்குதல்கள்) மறைப்பதாகும், ஆனால் "அது தவறான எண்ணம்" என்று அவர் கூறினார்.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலைவர் அனுதாபம் தெரிவித்தார்.
"அவர்களின் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களுடைய இதயங்கள் வேதனையும் துக்கமும் நிறைந்திருந்தாலும் கூட, எதிரிகளின் சதி மற்றும் சோதனையை எதிர்த்து நின்று, எதிரிகளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்ட பெற்றோர்களுக்கும், துயரமடைந்த குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், " என்று அவர் கூறினார்.
 இந்த விமான விபத்தில் உயிரிழந்த இந்த அன்பானவர்களில் ஒருவரின் தாய் எனக்கு கடிதம் எழுதி, ‘நாங்கள் இஸ்லாமிய குடியரசிற்கும் உங்கள் முயற்சிகளுக்கும் ஆதரவாக நிற்கிறோம்என்று எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தைரியம், நுண்ணறிவு மற்றும் விழிப்புணர்வு தேவை, ”என்று அவர் மேலும் கூறினார்.

மூன்று ஐரோப்பிய நாடுகளின் நகர்வு
ஈரான் மீது ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையை அமெரிக்க அழுத்தத்தின் கீழ் தொடங்கியதாக இந்த வாரம் ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு தலைவர்களையும் தலைவர் சாடினார்.
"இங்கிலாந்து, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசாங்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் எமது நாட்டின் முன்னேற்றங்களை மறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அணுசக்தி பிரச்சினையை மீண்டும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வதாக அவர்கள் ஈரானை அச்சுறுத்தினர், அதற்கு அதிர்ஷ்டவசமாக ஈரானிய அதிகாரிகள் கடுமையாக பதிலளித்தனர்,” என்று அவர் கூறினார்.
"இந்த மூன்று நாடுகள்தான் திணிக்கப்பட்ட போரின் போது சதாம் ஹுசைனுக்கு தங்களால் இயன்ற அளவு உதவியது. எங்கள் நகரங்களையும் போர் முனைகளையும் குறிவைப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் சதாம் உசேனுக்கு ரசாயன ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கியது. அந்த தாக்குதல்களின் தாக்கங்கள் எங்கள் வீரர்களின் உடல்களில் இன்னும் தெளிவாக உள்ளன,” என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
பிரெஞ்சு அரசாங்கம் முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரிக்கு சூப்பர் எண்டார்ட் ஸ்ட்ரைக் போர் விமானங்களை வழங்கியது, அவை 1980 களில் யுத்தம் திணிக்கப்பட்ட காலத்தில் ஈரானிய எண்ணெய் தாங்கிகளை குறிவைக்க பயன்படுத்தப்பட்டன என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.
"இதுதான் அவர்களது சரித்திரம். இங்கிலாந்து அரசாங்கமும் ஈரானுக்கு எதிரான சதாம் ஹுசைனின் யுத்தத்தில் உதவியது", என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
 இவைதான் அவற்றின் பின்னணி, அவை இன்றும் அதே வழியிலேயே செயல்படுகின்றன. இந்த அடிப்படையிலேயே அவர்கள் கணிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
விரிவான கூட்டு செயல்திட்டத்திலிருந்து (ஜே.சி.பி.ஓ.ஏ) அமெரிக்கா விலகிய பின்னர், இந்த மூன்று ஐரோப்பிய அரசாங்கங்களும் "சும்மா பேசிக் கொண்டே இருந்தன, முட்டாள்தனமான கருத்துக்களைத் தெரிவித்தன."  இந்த மூன்று அரசாங்கங்களையும் நான் நம்பவில்லை என்று முதல் நாளிலிருந்தே சொன்னேன். அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு சேவகம் புரிவோர் என்றும் சொன்னேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவை உண்மையில் அமெரிக்காவுக்கு தம்மை அடகு வைத்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது."
" உங்களுக்கெல்லாம் அப்பனான, முன்னோடியாக மற்றும் எஜமானராக இருந்த அமெரிக்காவினால் கூட ஈரானிய தேசத்தை முழங்காலிட செய்வதற்கு முடியவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதனுடன் ஒப்பிடுகையில் ஈரான் தேசத்தை முழங்காலிடச் செய்வதற்கு இவர்கள் அட்பமானவர்கள்என்று அவர் கூறினார்.
ஐரோப்பியர்கள் பேச்சுவார்த்தைக்கு அமரும்போது கூட, அவர்களின் பேச்சுவார்த்தை வஞ்சகம் மற்றும் தந்திரங்களுடன் கலக்கப்படுவதாக தலைவர் கூறினார்.
 பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் தான்; பாக்தாத் விமான நிலையத்தில் [ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தவர்கள்] கோழைத்தனமாக கொன்ற பயங்கரவாதிகளும் இவர்கள்தான்.
"அவர்கள் ஒரே மாதிரியானவர்கள், வேறுபட்டவர்கள் அல்ல. அவர்கள் தேவைக்கேற்ப தமது ஆடைகளை மாற்றிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான். உள்ளிருந்து புறமொன்று பேசுபவர்கள்.... எம்மால் அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது," என்று அவர் கூறினார்.

எமது தேசம் பலப்படுத்தப்பட வேண்டும்
ஈரானிய தேசம் இன்னுமின்னும் பலமடைய வேண்டும் என்று அயதுல்லா கமேனி மேலும் கூறினார்.
"ஈரானிய தேசம் முன்னேற ஒரே வழி வலுவாக இருப்பதுதான். நாம் மென்மேலும் பலமடைய முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை - நிச்சயமாக அமெரிக்காவுடன் அல்ல, மற்றவர்களுடன், ”என்று அவர் கூறினார்.
ஈரான் ஏற்கனவே வலுவானது தான், எதிர்காலத்தில் இன்னும் அது சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தலைவர் கூறினார்.
பலமடைதல் என்பது இராணுவ வலிமை மட்டுமல்ல. நாட்டின் பொருளாதாரமும் பலப்படுத்தப்பட வேண்டும். எண்ணெயை நம்பியிருப்பது முடிவுக்கு வர வேண்டும்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் எமது பாய்ச்சல் வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
ஈரானிய தேசம் குறுகிய காலத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், எதிரிகள் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்துவதற்கு கூட துணிய மாட்டார்கள் என்று ஆயத்துல்லாஹ் காமனெய் கூறினார்.

'அரபு சகோதரர்களுக்கு' ஒரு செய்தி
தனது உரையின் இறுதியில், தலைவர் "எங்கள் அரபு சகோதரர்களுக்கு சில வார்த்தைகளை கூறிக்கொள்ள  விரும்புகிறேன்" என்று தனது உரையை அரபு மொழியில் வழங்கத் தொடங்கினார்.
ஜெனரல் சுலைமானி மற்றும் ஈராக்கின் பிரபலமான அணிதிரட்டல் பிரிவுகளின் (பி.எம்.யூ) இரண்டாவது தளபதியாக இருந்த மஹ்தி அல்-முஹண்டிஸ் ஆகியோரின் படுகொலை "கோழைத்தனமானது" என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்கர்கள், போர்க்களத்தில் ஜெனரல் சுலைமானியை எதிர்கொள்ளத் துணியவில்லை என்பதாலேயே பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருடன் வந்தவர்களுடன் அவரை படுகொலை செய்ய கோழைத்தனமான வழியை தேர்ந்தெடுத்தனர்," என்று அவர் கூறினார்.
"மீண்டும் ஒரு முறை, ஈராக்கிய மற்றும் ஈரானிய இரத்தம் ஒன்றாகக் கலந்தன," என்று அவர் கூறினார், ஜெனரல் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவுகளை விதைக்க வெளிநாட்டு திட்டங்கள் தோல்வியடைந்தன.
"ஈரானில் ஈராக் தேசத்திற்கு எதிராகவும், ஈராக்கில் ஈரானிய தேசத்திற்கு எதிராகவும் தீங்கிழைக்கும் உணர்வை ஊக்குவிக்க, பொறுப்பற்ற மக்கள் பயன்படுத்தப்பட்டனர்."
வாஷிங்டனின் குறிக்கோள் ஈராக்கில் ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டுவதும், இறுதியில் நாட்டை பிளவுபடுத்துவதும், அதன் எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பதும் ஆகும் என்று ஆயத்துல்லாஹ் காமெனெய் கூறினார்.
சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் அந்நிய சக்திகளினால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் திட்டமிடப்பட்ட ஒன்று. அத்திட்டத்தின் ஒரு பகுதி ஈராக்கையும் குறிவைத்துள்ளது என்று அவர் கூறினார்.
அஞ்சாமல் எதிரிகளுக்கு முகம்கொடுப்பது மட்டுமே இந்த நாடுகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் "ஒரே பாதை" என்று தலைவர் கூறினார்.

Monday, January 13, 2020

அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் அமேரிக்கா திரும்புவர் - நஸ்ரல்லா


Dramatic Images Show Scale of Damage to U.S. Bases -  Media

U.S. Troops to Return in Coffins If Not Withdrawn - Nasrallah



பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும், அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம்…!



ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்கள் ஈரானின் ஏவுகணை வீச்சுக்கும் இலக்காகிய பின்னர், அத்தலங்கள் சேதமுற்று இருப்பதை வெளிக்காட்டும் படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. 

அந்த தளங்கள் தாக்கப்படவுள்ளதாக சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன் கிடைத்த ஐரோப்பிய நாடொன்றின் ரகசிய தகவலை அடுத்து, அங்கிருந்த படையணிகளில் அநேகர் வெளியேற்றப்பட்டனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'டெயிலி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் 16 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக பென்டகன் தெரிவித்துள்ளது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், எர்பில் ஒரு தளத்தையும் தாக்கியது, ஆனால் பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று பென்டகன் தெரிவித்தது.

சி.என்.என் படி, ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அமெரிக்க வீரர்கள் குவிந்துள்ள இடம் தான் இலக்கு வைக்கப்பட்ட தளத்தின் ஒரே பகுதி. ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும், அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம் என்று நிபுணர்கள் சி.என்.என்-க்கு கூறினர்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஈரான் 'வீழ்த்தப்பட்டது' என்று கூறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி கூறிய கருத்துக்களுக்கு இந்த வெளிப்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

அமெரிக்க வீரர்கள் அல்-அசாத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்டதாகவும் ஏனையோர் பதுங்கு குழிகளில் இருந்ததாகவும் அதிகாரிகள் சி.என்.என். க்கு தெரிவித்தனர். புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஈரானிய ஏவுகணைகள் தளங்களை பதம்பார்த்தன.


ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் தரையிறங்கின, இவ்வளவு துல்லியமாக இலக்குவைக்கப்பட்டது ஓர் "ஆச்சரியம்" என்று நிபுணர்கள் சி.என்.என்-க்கு கூறினர்.

லண்டனை தளமாகக் கொண்ட அல் மாயதீன் தொலைக்காட்சி சேனலும் பல ஈரானிய மற்றும் ஈராக் அரசியல்வாதிகளும் இந்த தாக்குதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும் காயப்பட்ட அவர்களில் சிலர் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கும்  மற்றவர்கள் பாக்தாத்தில் உள்ள ஒரு அமெரிக்க மருத்துவமனைக்கும் ஜோர்டானுக்கும் மாற்றப்பட்டனர், என்றும் தெரிவித்தனர்.

ஈரானிய அதிகாரிகள் கூறுகையில், அந்த நாடு 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், மீதமுள்ளவை எர்பில் இராணுவ தளத்தையும் தாக்கியுள்ளன.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக ஓர் ஐரோப்பிய தூதரகம் எங்களுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருக்கும் இரண்டு விமானத் தளங்களில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் தயாராக இருந்தனர், அமெரிக்க உளவுத்துறை மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் திட்டங்களைக் கண்டறியக் கூடியவாறு ஈரான், வேண்டுமென்றே தாக்குதலை உறுதிசெய்துள்ளது, அதிகாரிகள் டைம் பத்திரிகைக்குத் தெரிவித்தனர்.

ஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி கூறுகையில், ஈரான் தனக்கு ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னதாக ஒரு சமிக்ஞையைக் வழங்கியிருந்தது. ஆனால் தாக்கப்பட்டும் இடங்கள் பற்றி ஈரான் தனக்கு அறிவித்தல் வழங்கவில்லை, ஆனால் அவை அமெரிக்கப் படைகள் இருக்கும் இடங்களை மட்டுமே குறிவைப்பார்கள் என்பதை அறிந்துகொண்டேன். அந்த செய்தியை குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம், துருப்புக்களுக்கு பதுங்கு குழிகளில் தங்குமிடம் பெற அவகாசம் அளிக்கவும் முடிந்தது, என்று கூறினார்.

அதே நேரம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று ஈராக்கிய பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், நாம் அத்தீர்மானத்துக்குக் கட்டுப்படப் போவதில்லை அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.


இதனையடுத்து ஹிஸ்புல்லாஹ் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துருப்புக்களை பிராந்தியத்திலிருந்து விலகுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், ஈரான் மீதான எதிர்கால அமெரிக்க தாக்குதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.

"வரவிருக்கும் நாட்கள் அல்லது வாரங்களில் அமேரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கிலிருந்து திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மேரிக்கா திரும்புவர்" என்று நஸ்ரல்லா அறிவித்தார்.


ஈரான், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலானது அமெரிக்காவுக்கு தெஹ்ரானின் இராணுவ வலிமையைக் காட்டியுள்ளது. ஈரான் பயன்படுத்திய ஏவுகணைகள் அனைத்தும் ஈரானின் உள்நாட்டு தயாரிப்பாகும், என்று நஸ்ரல்லா கூறினார்.

சமீபத்தில் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி நினைவு தொடர்பாக லெபனானில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  நஸ்ரல்லா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

"மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் ஈரானின் துல்லியமான ஏவுகணை எல்லைக்குள் உள்ளன," என்று நஸ்ரல்லா கூறினார். "ஈரானில் உள்ள உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி நிலையங்களைத் தாக்க தனது விமானப்படையை அனுப்ப நெத்தன்யாகு தொடர்ச்சியாக கனவு காண்கிறார். இஸ்ரேல் ஈரானுடன்விளையாட திட்டமிட்டுள்ளது.  அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் சியோனிச நிறுவனத்திற்கு ஒரு வலுவான செய்தியாகும்", என்றும்  நஸ்ரல்லா கூறினார்.

ஈரானுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலைக் கொண்டுவரும் என்ற செய்தியை தெஹ்ரான் நட்பு நாடுகள் ஊடாகவும் ஊடகங்கள் மூலமாக வாஷிங்டனுக்கு தெரிவித்துள்ளதாக நஸ்ரல்லா கூறினார்.



Wednesday, January 8, 2020

அமெரிக்க ஆதரவு தளங்களை தீயால் குளிப்பாட்டுவோம்...!


 
இஸ்லாமிய புரட்சிகள் காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) தளபதி ஹுசைன் சலாமி, ஜெனெரல் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தது தொடர்பாக பேசும்போது "மத்தியகிழக்கில் அமெரிக்க ஆதரவு தளங்களை தீயால் குளிப்பாட்டுவோம்" என்று சூளுரைத்தார்.
பாக்தாத்தில் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தியாகியாகிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானியின் சொந்த ஊரான கெர்மனில் உள்ள ஒரு சதுக்கத்தில், கூடியிருந்த மில்லியன் கணக்கான மக்கள் முன் ஜெனரல் ஹுசைன் சலாமி மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.

அவரது சபதம் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, ஈரானிய உயர் அதிகாரிகளின் மற்றும் இஸ்லாமிய குடியரசு முழுவதுமான மக்களின் கோரிக்கைகளை பிரதிபலித்தது.  மத்திய கிழக்கு முழுவதும் பதட்டங்களை உருவாக்கிய அமெரிக்காவிற்கு பயங்கரவாத செயலுக்கு ஒரு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரினர்.

ஜெனரல் சுலைமானியின் சூட்சுமங்களை ஜெனரல் சலாமி பாராட்டினார். "பாலஸ்தீனிய விடுதலைக்காக போராடும் குழுக்கள், யேமனின் ஹவுதி போராளிகள் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்ட இஸ்லாம் விரோத சக்திகளை வீழ்த்துவதற்கு போராடும் தரப்பினரை பலப்படுத்துவதற்காக அவரின் பங்களிப்பு மகத்தானது", என்றார். "ஒரு தியாகியாகிய பின்னும் கூட, ஜெனரல் சுலைமானி  ஈரானின் எதிரிகளுக்கு இன்னும் பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்துவிட்டார்" என்று  சலாமி கூறினார்.

ஜெனெரல் சுலைமானியை கொன்றவர்களை நாம் பழிவாங்காது விடமாட்டோம் என்று - "அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம்" என்ற மக்களின் வானுயர்ந்த கோசத்துக்கு மத்தியில் - சபதம் செய்தார்.


ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க ஈரான் 13 திட்டங்களை உருவாக்கியுள்ளது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்தார். அவற்றில் பலவீனமான திட்டம் கூட ஐக்கிய அமெரிக்காவை கதிகளங்கச்செய்யும் என்றும் அவர் கூறினார்.

"அமெரிக்க துருப்புக்கள் எங்கள் பிராந்தியத்தை விட்டு தானாக வெளியேறா விட்டால், எமது செயல்பாடுகள் காரணமாக அவர்களின் உடல்களை கிடைமட்டமாக வெளியே கொண்டு செல்ல நேரும்" என்று ஷம்கானி கூறினார்.

ஈராக் முழுவதும் உள்ள அமெரிக்க தளங்கள் எமது தீவிர கண்காணிப்பில் உள்ளதாக ஷம்கானி கூறினார், ஒவ்வொன்றிலும் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் மற்றும் எத்தனை உபகரணங்கள் உள்ளன என்பது ஈரானுக்கு நன்றாகத் தெரியும்.

"எங்கள் பழிவாங்கலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தங்குமிடங்களில் ஊர்ந்து கதவுகளை மூடுவோருக்கு இஸ்லாமிய குடியரசு நரகத்திற்கான கதவைத் திறக்கும் என்பது தெரியாது."

"அனைத்து துருப்புக்களும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்." துருப்புக்கள் பதுங்கி இருக்க நாடினால், ராணுவ தளங்களுடன் சேர்த்து துருப்புகளை அழிப்போம்" என்று அவர் கூறியதாக ஈரானிய செய்தித்தாள் 'ரிஸாலத்' குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் பாராளுமன்றம், பென்டகனில் அமெரிக்க  இராணுவத்தின் கட்டளை அமைப்பையும், ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தவர்களும் அதன் சார்பாக செயல்படுவோரையும் "பயங்கரவாதிகள்" என்றும் அவை ஈரானிய பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டவை" என்ற அவசர மசோதாவை நிறைவேற்றியது.

"இந்த சக்திகளுக்கு இராணுவம், உளவுத்துறை, நிதி, தொழில்நுட்பம், சேவை அல்லது தளவாடங்கள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும், ஒரு பயங்கரவாத செயலில் ஒத்துழைப்பாக கருதப்படும்" என்று ஈரானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

குத்ஸ் படைக்கு இன்னும் 200 மில்லியன் யூரோக்கள் அல்லது சுமார் 224 மில்லியன்  டொலர் நிதியளிப்பதை மஜ்லிஸ் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தனர்.

ஜெனரல் சுலைமானி படுகொலை தொடர்பாக ஈரான் ஒரு "நொறுக்குதலான பழிவாங்கலை" நிச்சயமாக மேற்கொள்ளும் என்று உறுதியாகக் கூறியுள்ளது.

தாக்குதலை அடுத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எஞ்சியிருப்பதையும் ஈரான் ஏற்கனவே அகற்றிவிட்டது, மேலும் அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் வெளியேற்ற ஈராக் வாக்களித்துள்ளது. இது டிரம்புக்கு ஒரு மாபெரும் தோல்வியாகும்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள பசுமை மண்டலத்திலும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன, இந்த பகுதி இனி அதிகரித்த தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இன்னும் 500 பேர் சிரியாவில் உள்ளனர். இவர்களின் உயிருக்கு இனி எந்த உத்தரவாதமும் கிடையாது.


லெபனான் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் கூறுகையில், “அனைத்து அமெரிக்க தளங்களும், அனைத்து அமெரிக்க போர்க்கப்பல்களும், பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க சிப்பாயும் இப்போது எமது இலக்கே. இந்த படுகொலையை நடத்தியவர்களுக்கு உண்மையான, நியாயமான பதிலடி என்பது அமெரிக்க ராணுவத்தை இலக்குவைத்தலாகும்" என்று கூறினார். ஜெனரல் சுலைமானி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெயிரூத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது  அந்த கொலையாளிகள் மற்றும் அந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் ஒரு போரைத் தொடங்குவோம்," என்றும் அவர் சூளுரைத்தார்.

ஈரான், பிராந்தியத்தில் அமெரிக்க உயர்மட்ட தளபதிகளில் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் ஏதேனும் ஒரு "பெரிய" தாக்குதலை ஈரான் நடத்தும் என்று எதிர்பார்க்கிறது என்பதாக ஒரு அதிகாரி கூறினார்.




Saturday, January 4, 2020

முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள காசிம் சுலைமானி என்பவர் யார்?


Who was Qassem Soleimani, Iran's IRGC's Quds Force leader? 

பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்  வேளையில் அமெரிக்க வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஜெனரல் கஸ்ஸெம் சுலைமானி மேலும் 6 பேருடன் கொல்லப்பட்டார்.

ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குத்ஸ் படையின் (பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவின்) தலைவராவார்.

புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுக் குழுவின் தலைவராகவும், சிரியா மற்றும் ஈராக்கில் அமேரிக்கா, இஸ்ரேல், சவூதி இணைந்து உருவாக்கிய ISIS ஐ துவம்சம் செய்தவர் சுலைமானி. ISIS பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடுவதில் அவர் வகித்த முக்கிய பங்கிற்காகவும் சுலைமானி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல அந்தஸ்தைப் பெற்றார்.

அரபு நாடுகள் உட்பட மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கு பரவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இது அரபு பிற்போக்குவாதிகளை அச்சம் கொள்ளச் செய்தது.  அமெரிக்காவும் இஸ்லாமிய புரட்சியின்  பிராந்திய எதிரிகளான சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் இணைந்து இவரை கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய, இஸ்ரேலிய மற்றும் அரபு அமைப்புகளால் அவருக்கு எதிரான பல படுகொலை முயற்சிகளில் இருந்தும் அவர் தப்பினார்.

சிரியாவை அமெரிக்க, சியோனிஸ செல்வாக்குக்கு உட்படுத்த சவுதியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைக்கு எதிராக காசிம் சுலைமானியின் குத்ஸ் படை, சிரியாவை முக்கிய அரணாக இருந்து காத்தது. 
மேலும் ஈராக்கை துண்டாடுவதற்கும் இஸ்லாமிய அரசை தோற்கடிக்கவும் மேற்படி சக்திகளால் உருவாக்கப்பட்ட  ஐ.எஸ்.ஐ.எல்., ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் பயங்கரவாத குழுக்களை முற்றாக ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

சுலைமானி 1998 இல் குத்ஸ் மீட்பு படையின் தலைவரானார், லெபனானில் ஹிஸ்புல்லாஹ்க்களுடனும் மற்றும் இரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பாலஸ்தீனிய குழுக்களுடனும் ஈரானின் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டார்.

சமீபத்திய ஆண்டுகளில், அவர் ஈரானின் உச்ச மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தலைவர்களின் நம்பிக்கையையும் வென்றார்.

சுலைமானியின் தலைமையின் கீழ், குத்ஸ்  படை அதன் திறன்களை பெரிதும் விரிவுபடுத்தியது, ஈரானின் எல்லைகளுக்கு அப்பால் உளவுத்துறை, நிதி மற்றும் அரசியல் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய ஒன்றாக மாறியது. இதனைக்கண்ட இஸ்லாமிய எதிர் சக்திகள் அச்சம்கொள்ளலாயின. சுலைமானியைக் கொள்வதற்கு பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வடமேற்கு ஈரானில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தின்போதும் மற்றும்  டமாஸ்கஸில் 2012 குண்டுவெடிப்பைத் தொடர்ந்தும் சுலைமானி இறந்துவிட்டதாக வதந்தி பரவியது.

2015 இல் பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் அலெப்போ மீட்பு சண்டையிட்டபோதும், சுலைமணி கொல்லப்பட்டார் அல்லது பலத்த காயமடைந்தார் என்று வதந்திகள் பரவின.

சிரியாவில் அமைந்துள்ள குத்ஸ் மீட்பு படை தளங்கள் மீது மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

சுலைமானியை கொள்வதற்கு இஸ்ரேல் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் வெளியுறவு மந்திரி காட்ஸ் அப்போது கூறினார் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


மிக சமீபத்தில், கடந்த ஒக்டோபர் மாதத்தில், சுலைமானியைக் கொல்ல இஸ்ரேல் மற்றும் பிற்போக்குவாத அரபு ஏஜென்சிகள் சதி செய்ததாக தெஹ்ரான் கூறியது.

யுத்தகளத்தில் அவரை சந்திக்க சக்தியற்ற கோழைகள், இருட்டில் மறைந்திருந்து தாக்கி கொன்றுள்ளனர்.

தென்கிழக்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் 1957ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுலைமானி ஒரு தாழ்மையான பின்னணியைக் கொண்டவராகும்.

அவர் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக 13 வயதிலேயே பணியாற்றத் தொடங்கினார். தனது ஓய்வு நேரத்தை பாரம்தூக்கும் பயிற்சியிலும் மற்றும் கமேனியின் சன்மார்க்க பிரசங்கங்களிலும் கலந்து கொண்டார்.

1979ல் ஈரானிய புரட்சியின் போது ஒரு இளைஞனாக, சுலைமானி ஈரானிய இராணுவத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியத்தின் மூலம் படிப்படியாக உயர்ந்தார்.

ஈரான்-ஈராக் போரின்போது சுலைமானி  ஈராக்கின் எல்லையைத் தாண்டி நடத்திய துணிகர செயற்பாட்டின் காரணமாக ஒரு தேசிய வீரராக கருதப்பட்டார்.

பேராசிரியர் முஹம்மத் மராந்தி - தெஹ்ரான் பல்கலைக்கழகம், சுலைமானி பற்றி குறிப்பிடுகையில், "ISIS  பயங்கரவாதிகளை ஒழிப்பதில் அவர் அளித்த பங்களிப்பு, அவரை ஒரு தேசிய வீரனாக்கியது. ஏனைய மத்தியகிழக்கு நாடுகளிலும் அவரின் புகழ் ஓங்கியது. இவரைப் போன்றவர்கள் இல்லாதிருந்திருக்கும் பட்சத்தில், இந்த பிராந்தியம் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறப்பதையே கண்டிருப்பீர்கள்," என்று கூறினார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கமேனி, குத்ஸ் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானியை படுகொலை செய்தவர்கள் கடுமையான பழிவாங்கலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆயதுல்லா கமேனி வெள்ளிக்கிழமை விடுத்த ஒரு அறிக்கையில் "பூமியின் குழப்பம் விளைவிக்கும் மிக மோசமானவர்கள், உலகின் தீமைகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் எதிராக தைரியமாக, பல ஆண்டுகளாக போராடிய கெளரவமான தளபதியை படுகொலை செய்துள்ளனர்"

சுலைமானியின் மறைவு அவரது கொள்கை போராட்டப்  பணியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிடாது. ஆனால் ஜெனரல் சுலைமாயுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற தியாகிகளின் இரத்தக்கறை கொண்ட குற்றவாளிகள் கடுமையான பழிவாங்கலுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"தியாகி சுலைமானி அவர்களை முன்னுதாரணமாகக் கொண்ட அனைத்து போராளிகளும் இப்போது பழிவாங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்" என்று ஆயதுல்லா கமேனி குறிப்பிட்டார்.


"தீமையை எதிர்க்கும் பணி ஜிஹாத்தின் பாதை இரட்டை உந்துதலுடன் தொடரும் என்பதை அனைத்து நண்பர்களும் எதிரிகளும் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் இந்த புனிதமான பாதையில் போராடுவோருக்கு ஒரு திட்டவட்டமான வெற்றி காத்திருக்கிறது" என்று தலைவர் கூறினார்.

"எங்கள் அன்புக்குரிய, தன்னலமற்ற ஜெனரலின் மறைவு கசப்பானது தான், ஆனாலும் நிச்சயமாக இறுதி வெற்றிக்கான தொடர்ச்சியான போராட்டமும் சாதனைகளும் கொலைகாரர்களினதும் குற்றவாளிகளினதும் வாழ்க்கையை கசப்பானதாக மாற்றும்" என்று அவர் மேலும் கூறினார்.


Thursday, January 2, 2020

பாரசீக சொர்க்கத் தோட்டம் ‘எராம்’


Eram - The Persian Paradise Garden 



ஈரானில் அமைந்துள்ள ஒன்பது வரலாற்று சிறப்புமிக்க தோட்டங்களில் ஒன்றான 'எராம்' தோட்டம் 13 ஆம் நூற்றாண்டில் ஷிராஸ் நகரில் அமையப்பெற்றுள்ளது. உலக பாரம்பரியங்களில் ஒன்றான இத்தோட்டம் இல்கானேட் அல்லது காஷ்காய் பழங்குடியினரின் முக்கிய தலைவரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஷிலாஸில் உள்ள முக்கிய நதியான கோஷ்க் ராட் ஆற்றின் அருகே இது அமைந்துள்ளது.

ஆரம்பகால தளவமைப்பு, நாற்புற பாரசீக சொர்க்கத் தோட்டம் 11 ஆம் நூற்றாண்டில் செல்ஜுக்ஸால் போடப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க 'எராம்' தோட்டத்தைப் பார்வையிடுவது ஷிராஸில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். தோட்டத்தின் மையத்தில்ஒரு பழைய மண்டபம் உள்ளதுஇது பாரசீக தோட்டங்களின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

கவாமி குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு சொந்தமான இந்த தோட்டம் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மத்தியில் அமைந்துள்ள கட்டடம் உள்ளூர் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இதில் இரண்டு தளங்களில் 32 அறைகள் உள்ளன. கட்டடத்தின் சுவர்கள் கவிதைகள் கொண்ட ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த தோட்டம் 1983 முதல் ஷிராஸ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவின் ஓரங்கமாக உள்ளது மற்றும் இது உலக பாரம்பரிய அடையாளமாக இருப்பதால் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

பூமியில் சொர்க்கத்தின் குறியீடாக இத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தாவர வகைகள் உட்பட தோட்டத்தில் ஏராளமாக மரங்கள் உள்ளன.

'எராம்' தோட்டம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக 2011 இல் பதிவு செய்யப்பட்டது - பாரசீக தோட்டங்களின் சின்னமாக - உலகளவில் புகழ் பெற்றது. அதிர்ஷ்டவசமாக, தற்போது, இது அதன் வரலாற்று அடையாளத்திற்காக மட்டுமல்லாமல், அதன் அழகுக்காகவும், தாவரவியல் ஆராய்ச்சி மையமாகவும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.

கூடுதலாக, தோட்டம் 45 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் பல புதிய (இனப்பெருக்கம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் நியமிக்கப்பட்ட பெயரைக் கொண்ட பலவகையான பயிரிடப்பட்ட) தாவரங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கேற்ப பெயரிடப்படுவதற்கு சாதகமான சூழலைக் கொண்டுள்ளது.

இங்குள்ள ராக் கார்டன் (பாறைத்தோட்டம்) பகுதியில், அழகான துணை வெப்பமண்டல தாவரங்கள் பரவலாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகள் பழமையான அழகான சைப்ரஸ் மரங்கள் (சர்வ்-இ-நாஸ்) என உலகளவில் அறியப்படுகின்றன. இது உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்களை தோட்டத்திற்கு ஈர்க்கிறது.

தோட்டத்திற்குள் உள்ள கட்டிடம் அதன் கட்டிடக்கலை, ஓவியம், டைலிங், லித்தோகிராபி மற்றும் டோரி ஆகியவை கஜார் சகாப்தத்தின் தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

கட்டிடத்தின் தூண்கள் இரண்டு மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒற்றைக் கல் அடுக்குகளால் ஆக்கப்பட்டுள்ளன, இதில் உலகப்புகழ்பெற்ற ஈரானிய கவிஞர்களான ஹாபிஸ், ஸஅ'தி மற்றும் ஷூரிதே ஷிராஸி ஆகியோரின் கவிதைகள் செதுக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், தோட்டத்தின் பரந்த காட்சிகள், பூக்களின் நறுமணம், பழைய சைப்ரஸ் மரங்களின் அருமையான காட்சி மற்றும் பண்டைய கட்டிடத்தின் ஆடம்பரம் ஆகியவை உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன, மேலும் இந்த தனித்துவமான தோட்டம் ஷிராஸின் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாகும் மற்றும் ஈரான் சுற்றுப்பயணங்களின் கிட்டத்தட்ட அனைத்து பயணப் பொதிகளிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது.



எனவே பூமியின் மிக அற்புதமான மற்றும் மிகச்சிறந்த பாரசீக வனப்புமிக்க தோட்டங்களில் ஒன்றான 'எராம்' தோட்டத்துக்கு விஜயம் செய்து, உங்கள் வருகையை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக ஆக்கிக்கொள்ளுங்கள்.