Contributors

Saturday, August 17, 2019

உலக புகழ்பெற்ற கவிஞர் உமர் கய்யாம் கணிதத்தில் கெப்ளருக்கும் நியூட்டனுக்கும் சமமானவர்.


The world famous poet Omar Khayyam was equal to Kepler and Newton in mathematics.


உமர் கய்யாம் ஒரு வானியலாளர், மருத்துவர், தத்துவவாதி மற்றும் கணிதவியலாளர்: அவர் இயற்கணிதத்தில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவரது கவிதை வேறு எந்த மேற்கத்திய சாரா கவிஞரையும் விட மேற்கில் நன்கு அறியப்பட்டிருக்கிறது.

கி.பி 1072 ஆம் ஆண்டில், உமர் கய்யாம் இதுவரை கணக்கிடப்பட்ட மிக துல்லியமான ஆண்டு நீளத்தை ஆவணப்படுத்தினார் - நவீன உலகில் பெரும்பாலான நோக்கங்களுக்காக துல்லியமான ஒரு கணக்கீடாக இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.


ஆரம்பம்
உமர் கய்யாம் 1048 மே 18 அன்று வடக்கு பாரசீகத்தின் நைஷாபூரில் ஒரு பெரிய வர்த்தக நகரத்தில் பிறந்தார். இன்று நகரம் ஈரானில் உள்ளது. உமரின்  தந்தை இப்ராஹிம் கய்யாமி, ஒரு செல்வந்த  மருத்துவர். உமரின் தாயின் பெயர் தெரியவில்லை. கய்யாமி என்றால் கூடாரம் கட்டுபவர் என்று பொருள்படும் என்பதால் உமரின் தந்தை கூடாரங்களை அமைப்பவராக இருந்தார் என்று சில ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், பல ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஸ்மித் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொல்லர்களாக இருப்பதில்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்குலக இலக்கியத்தில் ஒமர் கய்யாமின் தாக்கம்
பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் கவிஞர் உமர் கய்யாம் 1048 இல் நைஷாபூரில் (கோராசான் ராஸாவி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம்) பிறந்தார். ஷேக் முகமது மன்சூரி என்ற அறிஞரிடமிருந்து தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர்  இயற்கணிதம் மற்றும் வடிவியலைக் கற்பிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

உமர் கய்யாமின் மிகவும் பிரபலமான இயற்கணித  சிக்கல்களுக்கான தீர்வு' என்ற படைப்பை அவர் 1070 இல் நிறைவு செய்தார், இதில் அடிப்படை இயற்கணிதக் கொள்கைகளை வகுத்திருந்தார். 1077 ஆம் ஆண்டில் கயாம் எழுதிய மற்றொரு பெரிய படைப்பு, ‘ஷார்ஹ் மா அஷ்கலா மின் முசாதராத் கிதாப் உக்லிடிஸ்அதாவது யூக்லிட்டின் போஸ்டுலேட்டுகளில் உள்ள சிரமங்களின் விளக்கங்கள்என்ற நூலாகும். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜியோர்டானோ விட்டேல் என்ற ஒரு இத்தாலிய கணிதவியலாளர் கய்யாமின் கோட்பாட்டில் மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். எண்கணித சிக்கல்கள்என அழைக்கப்படும் கய்யாமின் மற்ற புத்தகம், இசை மற்றும் இயற்கணிதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நன்கு அறியப்பட்ட அக்கால வானியலாளராக இருந்தார். பாரசீக ஜலாலி நாட்காட்டியில் பல சீர்திருத்தங்களையும் செய்தார். ஜலாலி நாட்காட்டி ஏனைய நாட்காட்டிகளுக்கு அடித்தளமாக மாறியது. மேலும் கிரிகோரியன் காலெண்டரை விட இது மிகவும் துல்லியமானது என்றும் அறியப்படுகிறது. ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்பதற்கும் அப்பால், மேற்கில் அவரது புகழ் அவரது ருபையாத்கவிதைகளின் தொகுப்பால் ஏற்படுகிறது.

மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரிஸா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியர் டாக்டர் மரியம் கோஹெஸ்தானி இஸ்னா (ஈரானிய செய்தி நிறுவனம்) வுக்கு அளித்த பேட்டியில் உமர் கய்யாம் பற்றி குறிப்பிடுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருபையாத்அல்லது வசனங்களைத் தந்த ஒரு சிறந்த கவிஞர் என்று குறிப்பிட்டார். இவரது கவிதைகள் 70க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவித்துவத்துக்கு அப்பால் உமர் கய்யாம் ஒரு திறமையான தத்துவஞானியூமாவார். இவரது சிந்தனைப் பள்ளியில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு மொழிகளில் அவரது படைப்புகளின் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், தனது இளம் வயதிலேயே மருத்துவம் கற்ற  உமர் கய்யாம் மருத்துவ அறிவியலை நன்கு அறிந்திருந்தார். இப்னு சினாவின் ஆக்கங்களை ஆர்வத்துடன் கற்றார். அவற்றின் தாக்கம் அவரில் நிறைய இருந்தது. இதை அவரே குறிப்பிட்டிருந்தார்.

உமர் கய்யாம் தனது வாழ்நாளில் எந்த கவிதையையும் வெளியிடவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தத்துவஞானியாவுமே நன்கு அறியப்பட்டவர். இன்று ருபையாத் எனும் அவரது  படைப்பு உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உமர் கய்யாமின் ஆக்கங்களை ஆராய்ந்த முதல் ஆங்கில அறிஞர், தாமஸ் ஹைட் (1636-1703), கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்கு சிறிது இடத்தை அர்ப்பணித்தார், மேலும் கய்யாமின் 'ருபை' எனும் நாலடிப்பாடல்களை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்

சர் கோர் ஒஸ்லி (Sir Gore Ouseley 1770 -1844) ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர், மொழியியலாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் பாரசீக மொழியை நன்கு அறிந்தவர் மற்றும் ஈரானிய புத்தகங்களின் பல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரசீக இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஃபிட்ஸ் ஜெரால்ட் உமர் கய்யாமின் ருபையாத்'தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், (FitzGerald) மொழிபெயர்த்த ருபையாத்தின் புகழ் பிரிட்டனில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பரவியது. ஃபிட்ஸ் ஜெரால்ட் தனது மொழிபெயர்ப்பை பல முறை மாற்றியமைத்தார் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத், நான்காவது ஆங்கில பதிப்பு 1879 இல் வெளியிடப்பட்டது, மற்றும் ஐந்தாவது பதிப்பும் (கடைசி பதிப்பு) அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

ஃபிட்ஸ் ஜெரால்டின் பதிப்பின் ஊடாக ஐரோப்பாவில் (மேற்கு) கய்யாம் நன்கு அறியப்பட்டாலும், எட்வர்ட் ஹென்றி வின்ஃபீல்ட் (1836-1922)  எனும் பாரசீக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் கய்யாமின் ருபையாத்தினது துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கினார். இவர் உமர் கய்யாமின் 500 ருபையாத்களை மொழிபெயர்த்தார்.  ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்தது 101 ருபையாத்கள் மட்டுமே. இந்த இரண்டு படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில், வின்ஃபீல்ட் பாரசீக கவிதை மரபு பிசகாமல் மொழிபெயர்த்திருந்தார் என்பதாகும்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் விக்டோரியன் ரொமாண்டிஸத்துடன் ஒத்துப்போகும்படி அசல் "ரூபாயத்"தை கணிசமாக சிதைத்தார். கய்யாமின் தத்துவ வசனங்களுக்கு பதிலாக காதல் வசங்களை உட்புகுத்தியதன் காரணமாக ருபையாத் கவிதையை ஒரு காதல் பாடலாக சிலர் கருத வழிவகுத்தது.

1892 ஆம் ஆண்டில் கய்யாம் சங்கம்லண்டனில் நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றுகூடும் மையமாக இருந்தது. விக்டோரியன் எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத்தை  நினைவுகூரும் வகையில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. லண்டனில் கய்யாம் சங்கத்தின் வெற்றி ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் கய்யாம் சங்கங்களை நிறுவ வழிவகுத்தது. ருபையாத்தை நினைவுகூரும் வகையில் கய்யாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் லண்டன் சங்கத்தில் ஒன்றுகூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் கய்யாம் மேற்கத்திய இசையிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். கிரான்வில்லே பான்டோக் என்ற ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு உமர் கய்யாம்ஆல்பத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் சிறந்த கணிதவியலாளர் வில்லியம் எட்வர்ட் ஸ்டோரி என்பவர் உமர் கய்யாம் கெப்லருக்கும் நியூட்டனுக்கும் சமம் என்று நம்பினார்.


பாரசீக கவிதைகள் குறித்த தனது "இலக்கியம் மற்றும் சமூக நோக்கங்கள்" என்ற கட்டுரையில் கய்யாம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ரால்ப் வால்டோ எமர்சன் சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்க எழுத்தாளர்களான மார்க் ட்வைன் மற்றும் டி.எஸ். எலியட் ஆகியோரில் உமர் கய்யாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். கய்யாமின் எண்ணங்களுக்கு ஏற்ப இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலின் கதையைச் சொல்லும் தனது "தி வுல்ப்  ஆஃப் தி சீ" (The Wolf of the Sea) நாவலில் அமெரிக்க நாவலாசிரியரான ஜாக் லண்டனையும் அவர் ஈர்த்திருந்தார்.

உமர் கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை கருவாகக் கொண்டு பல படங்களை ஹாலிவுட் உருவாக்கியுள்ளது. "தி கீப்பர்: தி லெஜண்ட் ஆஃப் உமர் கய்யாம்" (The Keeper: The Legend of Omar Khayyam) 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் சமீபத்திய திரைப்படமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜீன்-பாப்டிஸ்ட் நிக்கோலாய் கய்யாமின் ருபையாத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தபோது பிரெஞ்சு மக்கள் கய்யாமின் ருபையாத்துடன் நன்கு பரிச்சயமாகினர்.

பிரெஞ்சு கவிஞரும் நாடக ஆசிரியருமான மோரிஸ் புஷெர் "ட்ரீம் ஆஃப் கய்யாம்" (Dream of Khayyam) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை வழங்கினார், அதில் அவர் "நான் கய்யாமை  பின்பற்றுபவர்களில் ஒருவன்" என்று கூறினார்.

தவிர, ஜீன் லாகூர் கய்யாமின் தத்துவத்தின் அடிப்படையில் "மாயை" (Illusion) என்ற புத்தகத்தை எழுதினார்.

கய்யாம் ஒரு புதிரான மனிதராக இருக்கிறார். அவரைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். ஆயினும் அவர் ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

தாஹா முஸம்மில் 

Sunday, August 11, 2019

இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை சீரிய வடிவில் காட்டித் தரும் ஹஜ் - இமாம் செய்யது அலீ காமெனெயி விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019


ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யது அலீ காமெனெயி
விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019

Hajj Message by Imam Seyyid Ali Khamane'i - 2019

அருளாளன் கருணையாளன் அல்லாஹ் பெயர் போற்றி.

புகழ் அனைத்தும் அகிலங்களின் இரட்சகனுக்கே உரியது.

மாட்சிமையுரியவரும் நம்பிக்கைக்கு உரியவருமான இறுதி நபியும் ஆகிய அவனது தூதர் முஹம்மது நபிகளார் மீதும் அவரதுபுனித குடும்பத்தினர் மீதும் குறிப்பாக அண்டங்களில் அவனது அத்தாட்சியாய் உள்ளவர் மற்றும்  கண்ணியமிக்க நபித் தோழர்கள் அடங்கலாக இறுதி நாள் வரை அன்னோரைநெறியோடு பின்பற்றியோர் மீதும் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் பொழிவதாக.

ஒவ்வொரு வருடமும் ஹஜ் இஸ்லாமிய உம்மத் மீதான படைப்பாளனின் அருள்மழை பொழிகின்ற காலம் ஆகும். ஹஜ்ஜுக்கு மக்களிடம் அழைப்பு விடுங்கள்என்ற குர்ஆனின் அழைப்பு வரலாறு பூராகவும் இந்த இறையருளின் பொக்கிஷங்களை அடைந்து கொள்வதற்கான நித்திய அழைப்பாகும். இறைவனை ஆசிக்கும் உள்ளங்களும் உடல்களும் மற்றும் அவர்களது சிந்தனைகளும் நோக்குகளும் அதனால் பயனடையலாம். அதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மக்கள் கூட்டம் ஹஜ்ஜின் மூலம் பாடங்களும் கற்பிதங்களும் உலகெங்கும் சென்றடைகின்றது.

ஹஜ்ஜில் இறைவனுக்கு அடிபணிதலினதும் தியானத்தினதும் அமுதம் கிடைக்கிறது. இதுவே சமுதாயத்தினதும் தனிமனிதனதும் பண்பாட்டுக்கும் மேம்பாட்டுக்கும் உயர்வுக்கும் அடிப்படையான அம்சமாகும். ஒரே உம்மத் என்பதைப் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் மாபெரும் ஐக்கிய ஒன்று கூடலின் போது இது பெறப்படுகிறது. தனியான ஓர் அச்சைச் சுற்றி வலம் வருவதும் பொதுவான குறிக்கோளுடனான ஒருமைப் பட்ட ஒரு பயணத்தில் செல்வதும் இறை ஏகத்துவத்தின் அத்திவாரத்தின் மீது உம்மத் இயங்குவதையும் முயற்சி செய்வதையும் சுட்டி நிற்கின்றது.

ஹஜ்ஜை நிறைவேற்றுவோர் மத்தியில் காணப்படும் சமத்துவம், வேறுபாடின்மை என்பன எம் மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டு சந்தர்ப்பங்கள் சரிசமமாகபொதுமைப் படுத்துவதற்கு அடையாளமாகும்.

இவை அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை மிகச் சீரிய வடிவில் காட்டித் தருகின்றன. ஹஜ்ஜின் கிரியைகளில் அடங்கியுள்ள இஹ்ராம், தவாப், சஈ, தரித்தல், ரம்யு, நகர்தல், தரித்தல் போன்ற ஒவ்வொரு செயலும் இஸ்லாம் விரும்பும் சமூக அமைப்பின் பலவித அங்கங்களை சித்தரிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

தொடர்பின்றி தூரத்தில் உள்ள நாடுகளினதும் பிராந்தியங்களினதும் மக்கள் அறிவுகளையும் சாதனைகளையும் பரிமாறிக் கொள்ளுதல், தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளல், தத்தமது நிலைமைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளல், தப்பெண்ணங்களை ஒதுக்கித் தள்ளி இதயங்களை இணைத்துக் கொள்ளல், பொது எதிரிகளை முகம் கொள்ளும் விதத்தில் தமது சக்தியை மேம்படுத்திக் கொள்ளல் போன்றன ஹஜ்ஜில் கிடைக்கும் அரிய பெரிய அடைவுகளாகும். இது போன்ற வேறு சாதாரண சனத் திரள்கள் நூற்றுக் கணக்கில் கூடினாலும் இவ்வாறு அடைந்து கொள்ள முடியாது.

பராஅத் எனப்படும் [முஷ்ரிகீன்களில் இருந்து விலகிக் கொள்ளும் பிரகடனம்] கிரியையின் அர்த்தம், எந்தக் காலத்தையும் சேர்ந்த அடக்குமுறையாளர்களின் எல்லாவித கொடூரம், அடக்குமுறை, குழப்பம், அநியாயம் என்பவற்றை மறுதலித்து எக்காலத்தையும் சேர்ந்த அகந்தை கொண்டோரின் அடக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் எதிராக எழுந்து நிற்பதாகும். இது ஹஜ்ஜின் பிரமாண்டமான ஓர் ஆசீர்வாதமாகும். ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயங்களுக்கு சிறந்த சந்தர்ப்பமும் ஆகும்.

இன்று, அமெரிக்காவை முதன்மையாகக் கொண்டுள்ள அகங்கார அடக்குமுறையாளர்களின்  இணைவைப்பினதும் [ஷிர்க்] இறை மறுப்பினதும் [குப்ர்] கூட்டணியில் இருந்து தம்மை விளக்கிக் கொள்வது ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் அவர்கள் மீது போர் தொடுப்பதையும் மறுப்பதாகும். ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அமெரிக்காவின் ப்ளாக் வாட்டர் முதலான பயங்கரவாதத்தின் அடிவேர்களை மறுப்பதாகும். அது சிறுவர்களைக் கொலை செய்கின்ற சியோனிச அரசையும் அதன் ஆதரவாளர்களையும் ஒத்து ஊதுபவர்களையும் எதிர்த்து நிற்பதாகும்.  மேற்கு ஆசியா மற்றும் வடஆபிரிக்க கேந்திர முக்கியத்தும் வாய்ந்த பிராந்தியங்களில் போர் மூட்டத் துடிக்கும் அமரிக்கா மற்றும் அதன் தோழமை சக்திகளையும் கண்டிப்பதற்கு சமனாகும். அந்த சக்திகள் மக்களின் மீது எல்லையில்லாத துன்பங்களையும் வேதனைகளையும் கட்டவிழ்த்துள்ளதுடன் நாளாந்தம் புதிய தொல்லைகளையும் முடுக்கி விடுகின்றன. அதன் அர்த்தம், இனவாதம் மற்றும் புவியியல், சாதியம், மேனியின் நிறம் போன்றவற்றின் அடிப்படையிலான அனைத்து வித பாரபட்சங்களையும் மறுதலித்தல் ஆகும். இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் சிபார்சு செய்துள்ள கண்ணியமுள்ள, நீதியான, உயரிய நடைமுறைகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட மற்றும் மக்கள் அல்லலில் மகிழ்வுறுகின்ற சக்திகளின் குரூரம் நிறைந்த நடத்தைகளை மறுதலித்தல் ஆகும். இப்ராஹீமிய ஹஜ்ஜின் பயன்களில் சில இவையாகும். நமக்கு தூய இஸ்லாமின் அழைப்பும் இதுவாகும். இது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியமான இலட்சியங்களின் தோற்றப்பாடுமாகும். 

ஹஜ்ஜின் நெறிப்படுத்தலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் இந்த மாபெரும் அர்த்தம் செறிந்த காட்சி ஆண்டு தோறும் நிறைவேற்றப்படுகின்றது. இது போன்றதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உழைக்குமாறு அனைவரையும்அழகிய மொழியில் அழைக்கிறது,

இஸ்லாமிய சமுதாயத்தின் பொறுப்புள்ள முக்கியஸ்தர்கள் கனதியான, பாரதூரமான ஒரு பொறுப்பை தமது தோள்களில் சுமந்துள்ளார்கள். அவர்களில் பலர் தற்போது ஹஜ்ஜில் கலந்து கொண்டும் உள்ளார்கள். இந்தப் பாடங்கள் அவர்களது விடா முயற்சியாலும் விவேகத்தாலும் சமூக மயப்படுத்தப்பட்டு பொது அபிப்பிராயத்துக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். சிந்தனைகள், அபிலாசைகள், அனுபவங்கள், தகவல்கள் என்பனவற்றின் ஆன்மீக ரீதியான பரிமாற்றம் அவர்களின் கைகளினால் செயல் வடிவம் பெற வேண்டும். 

இன்றைய முஸ்லிம் உலகின் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று தான் பாலஸ்தீன் பற்றிய பிரச்சினை. எந்த மத்ஹபை எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் முஸ்லிம்களின் தலையாய அரசியல் பிரச்சினையாக முன்னே நிற்பது இது தான். அண்மைய நூற்றாண்டுகளின் மிகப் பெரிய அக்கிரமம் பலஸ்தீனில் நிகழ்ந்திருக்கிறது. வேதனை நிறைந்த இந்த நிகழ்ச்சிக் கோவையில் ஒரு தேசத்தின் வாழ் நிலம், வீடு, விளை நிலம், வருமானம், கண்ணியம், சுய அடையாளம் என அனைத்துமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்கள் துவண்டு போகாமல் துணிந்து நின்று நாளுக்கு நாள் மென்மேலும் வலுப் பெற்று களத்தில் நின்று போராடுகிறார்கள். இவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு எல்லா முஸ்லிம்களினதும் ஒத்தாசை அவர்களுக்குத் தேவை. 

நூற்றாண்டின் உடன்பாடுஎனும் சதித் திட்டக்குரிய பின்புலம் அநியாயக்கார அமரிக்கா மற்றும் அதன் சதிகார தோழமைகளாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது பலஸ்தீன் மக்கள் மீது மட்டும் அன்றி முழு மக்கள் இனத்தின் மீதுமான பாதகச் செயலாகும். எதிரிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கு அனைவரும் காத்திரமாக பங்களிக்க வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கிறோம். இறைவனின் நாட்டத்தாலும் வலுவாலும் இதுவும் உலக வல்லூறுகளின் ஏனைய சதித் திட்டங்களும் எதிர்த்தெழும் முன்னணியின் விசுவாசம் மற்றும் உறுதி என்பவற்றின் எதிரில் படு தோல்வியையே தழுவிக் கொள்ளும்.
இறைவாக்கு இவ்வாறு உள்ளது: அவர்கள் சதி செய்ய விரும்புகிறார்களா? உண்மையில் இறை மறுப்பாளர்கள் தான் சதி செய்கிறார்கள்.

வெற்றியும் கருணையும் தேகரோக்கியமும் பெறவும் வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்படவும் கண்ணியமிக்க எல்லா ஹாஜிகளுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.

செய்யித் அலீ காமெனெயி

Thursday, August 8, 2019

ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை - இமாம் காமனெய்

Human rights in Islam is to defend the rights of oppressed - Ayatollah Khamenei

மேற்குலக நாடுகள் மனித இனத்துக்கு இழைக்க முடிந்த அத்தனை அநியாயங்களையும் இழைத்துவிட்டு, உலகில் தாம்தான் மனித உரிமைகளின் முன்னோடிகள் போலும் காவலர்கள் போலும்  பாசாங்கு செய்துகொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் மனித இனத்துக்கு எதிராக உள்ள அனைத்து உரிமைகளையும் மீறுவோராக அவர்களே உள்ளனர். அவ்வளவையும் வெளிப்படையாக செய்கின்றனர். இதற்காக எண்ணிலடங்கா உதாரணங்களை தர முடியும்.

இவ்வாறிருக்க, வறிய நிலையில் உள்ள மூன்றாம் உலக நாடுகளை மனித உரிமைகளை மீறுவோராக குற்றம்சாட்டி, அச்சுறுத்தி காரியம் சாதிக்கவும் பார்க்கின்றன.

இது, ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யதலி காமனெய் அவர்கள் மனித உரிமைகள் தொடர்பாக அவ்வப்போது ஆற்றிய உரைகளின் தொகுப்பாகும்.
அநியாயமிழைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே உண்மையான மனித உரிமைகளை காக்கும் முறையாகும்; மனித உரிமைகளைப் பின்பற்றுவதற்கான அறிகுறியுமாகும். இவ்விடயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்னணியில் உள்ளது.
அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள  பாலஸ்தீனத்தில், லெபனனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாமல் உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனரோ  அவர்களுக்காக எமது ஆதரவை நாம் தெரிவித்து வருகின்றோம் என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் தெரிவித்தார். மேலும் அவர் இஸ்லாம் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் மனித உரிமைகளின் கொடி உயர பறக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய மனித உரிமைகளின் தவறான அடித்தளம்

"மேற்குலகு பேசும் மனித உரிமைகள் தவறான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே, உலக மக்கள் மத்தியிலும் உலகில் உள்ள நீதித்துறை அமைப்புகளிடையேயும்  தர்க்கரீதியான ஆதாரங்களுடன் இஸ்லாமிய மனித உரிமைகளைஊக்குவிப்பது அவசியமாகும்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை விமர்சித்தார் - சில நாடுகளிடமிருந்து பணத்தைப் பெற்றதற்கு ஈடாக யெமனில் தற்போது தொடரும் சிசுக்கொலை குற்றங்கள் குறித்து அது கண்களை மூடிக்கொண்டிருப்பது - மனிதகுலத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விடயமாகும். அவர் மேலும் கூறியதாவது: இது உண்மையான மனித உரிமைகளுக்கு எதிரான கேவலமான செயல் என்பதோடு அவ்வமைப்புக்கு அவமானமுமாகும். இந்த விஷயத்தில் நாங்கள் உலக அளவில் சட்ட மற்றும் நீதித்துறை பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மேற்கு நாடுகள் உண்மையில் மனித உரிமைகளை பாதுகாக்கிறதா?

சல்மான் ருஷ்டி என்ற ஒரு வெறியன் "சாத்தானிய வசனங்கள்" என்ற நூலை எழுதி, இஸ்லாத்தின் புனிதமானோர் மீது அவதூறான வார்த்தைகளால் அவமதித்து, ஒரு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உரிமைகளை மீறுகையில் இந்த (போலி) மனித உரிமை ஆதரவாளர்கள் அமைதியாக இருந்ததுமட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளர்கள் அவனுக்கு ஊக்கமளித்து இந்த வெறியனை பாதுகாப்பதற்காக ஒரு ஐக்கிய முன்னணியையும் உருவாக்கினார்கள். இது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா?

200 மில்லியன் இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளால் தூண்டப்பட்ட  கும்பலால் முஸ்லிம்களது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படும் போது ஏன் அவர்களால் மனித உரிமைகளைப் பற்றி பேச முடியாது போனது...?

அவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களாக இருந்தால், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் மில்லியன் கணக்கானவர்கள் மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டபோது, குழந்தைகளும் பெண்களும்  கொல்லப்பட்டபோது, நோயுற்றவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஒரு கண்டணத்தையாவது செய்யாது ஏன் மௌனம் காத்தனர்…?

பலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்த மக்கள் அடித்துத் துரத்தப்படுகையில் இந்த மனித உரிமை ஆதரவாளர்கள் ஏன் மௌனம் காத்தார்கள்...? இன்றும் கூட, பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் அகதி முகாம்களில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை; அன்றாடம் போல் இஸ்ரேலின் குண்டுவீச்சு ஆளாகிறார்கள். மனித உரிமை என்று ஆர்ப்பரிப்போர் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களா, பொய்யர்களா அல்லது ஏமாற்று பேர்வழிகளா...?

மேற்குலகு போதிக்கும் மனித உரிமைகள் உண்மையில் மனித உரிமைக்கு எதிரானது, மனிதர்கள் மீதான மூர்க்கத்தனத்தை நியாயப்படுவதுவதே மேற்கத்திய கலாசாரம். மனித உரிமைகள் குறித்த இந்த [போலி] வரையறைக்கு உண்மையான மனித உரிமைகளுடன் எந்த தொடர்பும் கிடையாது.

நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், இஸ்லாம் மனிதர்களின் உரிமைகளை ஆதரிக்கிறது. இஸ்லாத்தைப் போன்று வேறு எந்தக் கோட்பாடும் மனித கண்ணியத்தின் மதிப்பை மதிக்கவில்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் போது எப்போதும் முன்வைக்கப்படும் இஸ்லாமிய கொள்கைகளில் ஒன்று "மனித கண்ணியம்" என்ற கொள்கையாகும்.

மனித உரிமைகள் பற்றி மேற்கு நாடுகள் நமக்குக் கற்பிப்பதற்கோ அல்லது மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து அறிவுறுத்துவதற்கோ நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
நாங்கள் மனித உரிமைகளை முதலில் ஆதரிப்பவர்கள். இஸ்லாத்தின் பாதுகாப்பின் கீழ் மனித உரிமைகள் எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

இந்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அல்லது சர்வதேச குழு என்ன கூறினாலும் நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், மனித உரிமைகளைப் பின்பற்றுகிறோம். மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அது ஒரு இஸ்லாமிய கொள்கை. அதனால் நாங்கள் எப்போதும் மனித உரிமைகளை காக்கின்றோம். ஆனால் இந்த அமைப்புகள் கூறுவது பொய்யானது, அது ஏமாற்றும் செயல் என்று நாங்கள் கருதுகிறோம்.

மனித உரிமைகளுக்கான அவர்களின் கோஷம் பெண்களின் உரிமைகளுக்கான அவர்களின் கோஷத்தைப் போன்றது. உலகின் ஏகாதிபத்தியவாதிகள், ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள், நாடுகளின் உரிமைகளை புறக்கணிப்பவர்கள், பலவீனமான நாடுகளின் நலன்களை அழிப்பவர்கள் மற்றும் பலவீனமான நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் தான் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகளை ஆதரிப்போர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றனர். இவர்கள் கூறுபவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் முஸ்லிம் நாடுகளுக்கு கிடையாது என்பது வெளிப்படையானது.

மனித உரிமைகளை பாரிய அளவில் மீறும் நாடு ஐக்கிய அமேரிக்கா
அமெரிக்கர்களின் ஆதரவையும் உதவியையும் கொண்டு தான் அபகரிக்கும் சியோனிச ஆட்சி இப்பகுதியில் இந்த தீய செயல்களை எல்லாம் செய்து வருகிறது. பாலஸ்தீனம் எந்த சூழ்நிலையில் உள்ளது? பாலஸ்தீனியர்கள் எந்த சூழ்நிலையில் உள்ளனர்? காஸா  எந்த சூழ்நிலையில் உள்ளது? காசா மக்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது உலகில் உள்ளவர்களுக்குத் தெரியாதா? அந்த ஒடுக்கப்பட்ட நிலத்தில், அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளி படுக்கையில் இருக்கிறார், அவருக்கு அடிப்படை மருந்துகள் கிடைப்பதில்லை, அது ஏன்? சியோனிச ஆட்சிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதால் தான் என்பது சொல்லிப் புரிவேண்டும் என்பதில்லை.

உலகில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதிலும் அமெரிக்காவுக்கே மிகப் பெரிய பங்கு உள்ளது என்ற போதிலும், அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமிய குடியரசு மற்றும் முஸ்லிம்கள் பயங்கரவாத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். அமேரிக்க துருப்புக்களும் பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் அசிங்கமான குற்றங்களைச் செய்து வருகின்றனர்; மேலும் அபு கிரைப் சிறையில் அவர்கள் செய்த கொடூரமான செயல்கள் அந்த நாட்டில் அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்குத் தெரிந்தவரை, கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, உலகில் எந்த நாடும் அமெரிக்கா செய்ததைப் போல மனித உரிமைகளை மீறவில்லை. ஈராக், ஆப்கானிஸ்தான், குவாண்டனாமோ மற்றும் தங்கள் சொந்த சிறைகளில் கூட மனித உரிமைகளை அவர்கள் அவமதித்து மிதிக்கின்றனர். ஆனால் மற்ற நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக அவர்கள் அப்பட்டமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் செய்து வரும் குற்றங்களுக்கு மேலதிகமாக, அமெரிக்காவிலேயே மனித உரிமை மீறல்களையும் செய்கிறார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னமும் அடக்குமுறை, பாரபட்சம், பாகுபாடு மற்றும் பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜ் புஷ், சீனியர் ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சில மாநிலங்களில் பெரும் ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர், ஏனெனில் அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறை மற்றும் அநீதி காரணமாக. காவல்துறையினர் கலவரத்தைத் தணிக்க முடியாததால், இராணுவம் உள்ளே வரவழைக்கப்பட்டது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பதவியில் இருந்த போது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் ஒரு தாவீதியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு கிறிஸ்தவ குழு, அமெரிக்க மதக் குழுவின் எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் செயல்பட்டுவந்த தலைமையக கட்டிடத்தில் இருந்து வெளியே வர மறுத்ததால், அக்கட்டிடத்துள் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். இருப்பினும், இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை...! அவர்கள் பிரசாரம் செய்யும் மனித உரிமை இவ்வாறானது தான்...!

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் கீழ், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்றபோது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிய பொதுமக்கள் மீது குண்டுகளை வீசியது மட்டுமல்லாமல், நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள வீடுகளை அழித்தன. அவர்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகளை படுகொலை செய்தனர்.  மேற்கின் ஊடக சாம்ராஜ்யம் இந்த அநியாயத்தை முழுமையாகவே இருட்டடிப்பு செய்தது. இவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கும் இந்த அநியாயக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு உள்ளிட்ட பிற நாடுகளை மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.