The extraordinary life and strong policies of President Ebrahim Raisi
அதிபர் இப்ராஹிம்
ரயீஸியின் அதிசிறந்த வாழ்க்கையும் வலுவான கொள்கைகளும்
மக்கள்
நலனை மையமாகக் கொண்ட மற்றும் நீதியை வலுவாக பற்றிக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியை அமைத்த
ஈரானின் 8ஆவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரயீஸி ஈரானிய நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பெற்ற
ஒரு தலைவர். இவரது மார்க்கப்பற்றான வாழ்க்கை முறையும் வலுவான கொள்கைகளும் தலைமைத்துவத்திற்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆயத்துல்லாஹ்
செய்யத் இப்ராஹிம் ரயீஸி 1960 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் புனித ஷியா முஸ்லிம்களின் தாயகமான
மேலும் இஸ்லாமிய அறிவு மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலுக்காக போற்றப்படும் இமாம் ரிழா
(அலை) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஷ்ஹத் நகரில் ஒரு இஸ்லாமிய பாரம்பரிய குடும்பத்தில்
பிறந்தார். அவரது தந்தை, ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யத் ஹாஜி ரயீஸ் அல்-சதாதி மற்றும் தாய், செய்யிதா
இஸ்மத் குதா தாத் ஹுஸைனி ஆகியோரின் வழியில் செய்யத் இப்ராஹிம் ரயீஸி, ஹழரத் செய்யத்
பின் அலீ ஹுஸைன் (அலை) அவர்களின் வம்சாவளியாகிறார். மார்க்க அறிஞராக இருந்த அவரது தந்தை அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது
இறந்தார்.
ஷியா
பாரம்பரியத்தில் நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலாக தன்னை அடையாளப்படுத்தும் கருப்பு
தலைப்பாகையை அணிந்திருந்த அதிபர் ஆயத்துல்லாஹ் ரயீஸி, தனது தந்தையின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றி ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலை கல்வியை அடுத்து தனது 15ம் வயதில் கும் நகரம்
(ஷியா முஸ்லிம்களின் அறிவியல் மையம்) உள்ள ஹவ்ஸா
என்றழைக்கப்படும் ஆன்மீக கலாபீடத்தில் உயர் கல்வியை பூர்த்தி செய்தார். மேலும் ஈரானின்
மிக முக்கியமான மார்க்க அறிஞர்கள் சிலரிடம் பயின்றார்.
மேற்கத்திய ஆதரவு பெற்ற ஷா பஹ்லவியின் ஆட்சியில் ஈரானியர்கள் பரவலாக அதிருப்தி அடைந்திருந்த
நேரத்தில், கும்மில் உள்ள பல ஆன்மீக கலாபீட மாணவர்கள், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாகத்தில்
இஸ்லாமிய நெறிமுறையை உறுதிசெய்ய முயன்ற இமாம் ரூஹுல்லாஹ் கொமைனியின் புரட்சிகர கொள்கைகளில்
ஈடுபட்டிருந்தனர். இப்புரட்சிகர போராட்டத்தில் மாணவரான இப்ராஹிம் ரயீஸியும் அர்ப்பணிப்புடன் பங்கேற்றார்.
இறுதியில் 1979 இல் இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி தலைமையிலான இஸ்லாமியப்
புரட்சியில் ஷா அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.
ஈரானின்
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, தனது 20 வயதில், ஈரானின் புதிய நீதித்துறையில் ஆயத்துல்லாஹ்
இப்ராஹிம் ரயீஸி சேர்ந்தார். 1981 இல் ஈரானின் ஜனாதிபதியான ஆயத்துல்லாஹ் கமேனியிடம்
பயிற்சி பெற்றபோது பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இஸ்லாமியக்
குடியரசின் சட்ட நிபுணர்
ஈரானியப்
புரட்சிக்குப் பிறகு, புதிதாக உருவான இஸ்லாமியக் குடியரசு பல நெருக்கடிகளையும், சவால்களையும்
எதிர்கொண்டது, ஷாவின் விசுவாசிகள் முதல் மதச்சார்பற்ற இடதுசாரிகள் வரை, மேலும் அண்டை
நாடான ஈராக்குடனான போர் ஆகியவை அவற்றில் முதன்மையானவை. ஆரம்பத்திலிருந்தே ஆயத்துல்லாஹ்
செய்யத் ரயீஸி தனது தொழிற்துறையை உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராக புதிய ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு
அர்ப்பணித்தார். அவர் நிர்வாகத்தில் பயிற்சி பெற்ற உடன் தென்மேற்கு ஈரானில் உள்ள மஸ்ஜித்
சுலேமானில் உள்ள நீதித்துறையில் சட்ட வல்லுநராக பிரவேசித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளில்,
கராஜ் நகரம், ஹமதான் நகரம் மற்றும் ஹமதான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு அதிகார எல்லைகளுக்கு
சட்ட நிபுணராக மேலதிக அனுபவத்தைப் பெற்றார். 1985 ஆம் ஆண்டு அவர் நாட்டின் தலைநகரான
தெஹ்ரானில் துணை தலைமை நீதிபதியானார்.
1989
இல் ஆயத்துல்லாஹ் அலீ கமேனியீ ஈரானின் உச்ச தலைவர் ஆன பிறகு, ஆயத்துல்லாஹ் இப்ராஹிம்
ரயீஸி ஈரானின் நீதித்துறை அமைப்பில் உயர்ந்த பதவிகளைப் பெறத் தொடங்கினார். தெஹ்ரானின்
துணை தலைமை நீதிபதியாக (1989–94) பணியாற்றிய பிறகு, அவர் மிக முக்கியமான பதவிகளை வகித்தார்
அவற்றில் பொது ஆய்வு அமைப்பின் தலைவர் (1994–2004) மற்றும் மார்க்க அறிஞர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (2012–21) ஆகியவை
அடங்கும், அவை அரசாங்க அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் ஒருமைப்பாட்டை மேற்பார்வையிடும்
பதவிகளாகும். நீதித்துறை மட்டுமல்லாது, ஆயத்துல்லாஹ் ரயீஸி நிபுணர்கள் சபையின் உறுப்பினராகவும்
(2007–24) பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டில், மஷ்ஹத் நகரில் உள்ள 'அலீ அல்-ரிழா' சமஸ்தானத்தின்
பாதுகாவலராக ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸியை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் கமேனியீ நியமித்தார், அவரை ஈரானின் மிகப்பெரிய தொண்டு அறக்கட்டளையின் பொறுப்பில் அமர்த்தினார்.
2019 வரை நீடித்த இந்த நியமனம், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை -
மற்றும் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பகுதியை - ரயீஸியின் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வந்தது, இறையச்சம் கொண்ட ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி இதனை நேர்மையாக
கையாண்டார். உயர் பதவியில் இருந்தபோதிலும், அதிபர் இப்ராஹிம் ரயீஸி ஊழலுக்கு எதிராக
கடுமையாக நடந்து கொண்ட, ஒரு கொள்கை ரீதியான அரசாங்க விமர்சகராக மக்களால் கருதப்பட்டார்.
ஜனாதிபதி
காலம்
2021
ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி போட்டியிட்டபோது, அரசாங்க
ஊழலுக்கு எதிரான கொள்கை ரீதியான பாதுகாவலராக தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
அதே நேரத்தில், ஈரானியர்களின் நலனை மையமாக கொண்டு ஒரு சர்வதேச அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவர் வகித்த உயர் பதவியே அவரை தேர்தலில்
முன்னிலைப்படுத்தியது. ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஈரானின் 8ஆவது அதிபராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார்.
தனது பதவியேற்பு உரையின் போது, ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க தனது அரசாங்கம்
முயற்சிக்கும் என்றும் வெளிநாட்டு தலையீடுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிபர்
ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி கூறினார். மேலும் ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியான
நோக்கங்களுக்காக மட்டுமே என்று உறுதியளித்த அதிபர் ரயீஸி ஈரானியர்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுவதாக கூறினார். அவர் உறுதியளித்த
படியே தனது தனிப்பட்ட வாழ்க்கையை விட மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி விடாமுயற்சியுடனும்
இறை அச்சத்துடனும் பணியாற்றினார். அவர் மக்களின் ஜனாதிபதியாக இருந்து, தனது குடிமக்களின்
நலன்களுக்காக தொடர்ந்து பாடுபட்டார்.
அண்டை
நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்காக அதிபர் ஆயத்துல்லாஹ் ரயீஸி புதுப்பிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களை
மேற்கொண்டார். பாகிஸ்தானுக்கு ஒரு உயர்மட்ட விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஆயத்துல்லாஹ்
ரயீஸி இலங்கைக்கு பயணம் செய்தார், அங்கு ஈரானிய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியைப்
பயன்படுத்தி கட்டப்பட்ட ஒரு நீர்மின் திட்டத்தைத் திறந்து வைத்தார். மே 19 அன்று, அஜர்பைஜானுடன்
இணைந்து நாடுகளின் எல்லையில் கட்டப்பட்ட புதிய அணைகளைத் திறப்பதற்கான பயணத்திலிருந்து
ஆயத்துல்லாஹ் ரயீஸி திரும்பிக் கொண்டிருந்தபோது, மலை எல்லைப் பகுதியில் மோசமான வானிலையின்
மத்தியில் அவரது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் ஷஹீதாகினார். இவரின் மறைவு ஈரானிய மக்களுக்கு பெரும் துயராக அமைந்தது.