Persian poet ‘Attar of Nishapur’
பாரசீக கவிஞன் அத்தார்
அத்தார்
இளம் வயதிலேயே ஃபரித் உத்-தீன் அத்தார் எகிப்து,
சிரியா,
அரேபியா,
இந்தியா மற்றும்
மத்திய ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, இறுதியாக வடகிழக்கு
ஈரானில் உள்ள தனது சொந்த ஊரான நைஷாபூரில் குடியேறினார், அங்கு அவர் பல
ஆண்டுகள் பிரபலமான சூஃபிகளின் தத்துவங்களையும் கூற்றுகளையும் சேகரித்தார்.
பல நூற்றாண்டுகளாக நீடித்த ஈரானிய இலக்கியம்
(பாரசீக இலக்கியம்), உலகின் மிகப்
பழமையான மேலும் பல கலாச்சாரங்களின் இலக்கியப் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய
ஒரு மகத்தான கலையாகும்.
பாரசீக கலை உலக வரலாற்றில் மிகவும் வளமான கலை
பாரம்பரியங்களில் ஒன்றாகும், இவ்விலக்கியம்
கட்டிடக்கலை, ஓவியம், நெசவு,
மற்பாண்டங்கள்,
எழுத்தணிக்கலை,
உலோக வேலைப்பாடு மற்றும்
சிற்பம் உள்ளிட்ட பல ஊடகங்களில் வலுவாக வெளிப்படுகிறது. பாரசீக இலக்கியம் பாரசீக கலாச்சாரத்தின் மணிமகுடமாகும். இது ஒட்டோமன் துருக்கி,
முஸ்லிம் இந்தியா
மற்றும் மத்திய ஆசியாவின் இலக்கியங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் கோதே (Goethe),
எமர்சன் (Emerson), மேத்யூ அர்னால்ட் (Matthew Arnold) மற்றும் ஜார்ஜ்
லூயிஸ் போர்ஜஸ் (Jorge Luis
Borges) உள்ளிட்ட பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துள்ளது. இவர்களுக்கு சிறந்த
தூண்டுதலாக இருந்தவர் ஈரானின் அத்தார்
அத்தார்
அத்தார் ஒரு புகழ்பெற்ற சூஃபி ஆவார். மொங்கோலியர்களால்
அவர் ஷஹீத் ஆக்கப்பட்டபோது, அவரைப் பற்றிய பல காவியக் கதைகள் கூறப்பட்டன, உதாரணமாக அவர் தனது
தலையை கையின் கீழ் வைத்துக்கொண்டு தனது உடலுக்கு ஒரு கல்லறையை தேடி குதிரை சவாரி செய்தார். இது உயர்ந்த
மனிதர்களைக் கௌரவிப்பதற்காக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான
மையக்கரு. சமகால துருக்கிய நாவலாசிரியர்
யாசர் கெமல், தனது "மீம்ட், மை ஹாக் (Memed, My Hawk)”
என்ற சிறந்த நாவலில் புனிதர்களைப் பற்றிய இதே போன்ற கதைகளை
மேற்கோள் காட்டுகிறார். மக்களிடையே
பொதுவாக பரவும் காவியக் கதைகளைப் போலல்லாமல், அத்தாரின் கதைகள்
யதார்த்தமானவை, பணிவானவை மற்றும் கல்வி சார்ந்தவை. அவர் சூஃபி
வாழ்க்கை முறை, அவற்றின் தார்மீக பண்புகள் மற்றும் உள்ளார்ந்த அர்த்தங்கள், அவர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டி நமக்குக்
கற்பிக்கிறார். அத்தார் ஈரானின் மிகவும் பிரபலமான கவிஞர்களில்
ஒருவர். அவரது படைப்புகள் ரூமி, ஹபீஸ்,
ஜாமி,
நவயி மற்றும் பல
கவிஞர்களுக்கு உத்வேகமாக இருந்தன.
இலக்கிய கருத்துக்கள், கருப்பொருள்கள் மற்றும் எழுத்து நடை ஆகியவற்றை
நோக்குகையில், அத்தாரின் செல்வாக்கு பாரசீக இலக்கியத்தில்
மட்டுமல்ல, பிற இஸ்லாமிய இலக்கியங்களிலும் வலுவாக
உணரப்படுகிறது.
சமகால ஈரானில், பாரசீக
இலக்கியத்திற்கு அவரது படைப்புகள் ஆற்றிய பங்களிப்பைக் குறிக்கும் வகையில்,
பாரசீக
நாட்காட்டியில் ஒவ்வொரு வருடமும்
ஏப்ரல் 14 ஆம் திகதி அத்தாரின் தேசிய தினமாகக் நினைவுகூரப்படுகிறது.
https://iranpress.com/attar-of-nishapur-what-iran-is-known-for
https://www.britannica.com/biography/Farid-al-Din-Attar
No comments:
Post a Comment