Monday, November 18, 2024

காஸாவில் இஸ்ரேல் "இன சுத்திகரிப்பு" - சுன்னி உலமாக்கள் ஜி-ஹா-துக்கு அழைப்பு

 United Nations committee finds Israeli war on Gaza “consistent with genocide”

காஸா மீதான இஸ்ரேல் போர் "இனப்படுகொலையுடன் ஒத்துப்போகிறது" -  .நா குழு

அக்டோபர் 17, 2024 அன்று காஸா ஸ்ட்ரிப்பில் உள்ள டெய்ர் அல்-பலாவில் உணவு விநியோகத்திற்காக பாலஸ்தீனியர்கள் வரிசையில் நிற்கின்றனர். [AP புகைப்படம் / அப்தெல் கரீம் ஹனா]

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் .நா.வின் நிலைக்குழு கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில்காஸாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் "இனப்படுகொலையின் பண்புகளுடன் ஒத்துப்போகின்றனஎன்று கூறியுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பானது, பாலஸ்தீனிய மக்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரேபியர்களின் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறைகளை விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவாகும், 1968ல் காஸா மற்றும் மேற்குக் கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு பின்னர் இது அமைக்கப்பட்டது. இந்தக் குழு இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய மூன்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் குறிக்க "இனப்படுகொலை" என்ற சொல்லை அது இதற்கு முன்னர் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

"போர் தொடங்கியதில் இருந்தே, பாலஸ்தீனியர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை பறிக்கும் (மனிதாபிமானமற்ற) கொள்கைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் பகிரங்கமாக ஆதரித்து வருகின்றனர்" என்று குழு கூறியது. "இந்த அறிக்கைகள், மனிதாபிமான உதவியின் முறையான மற்றும் சட்டவிரோத குறுக்கீடுகளுடன், அரசியல் மற்றும் இராணுவ ஆதாயங்களுக்காக உயிர் காக்கும் பொருட்களை கருவியாக்கும் இஸ்ரேலின் (மோசமான) நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றன."

இந்த அறிக்கை, காஸாவில் இஸ்ரேலிய பேரழிவுகரமான போர் மீதான ஒரு கடும் சொல் குற்றச்சாட்டை  உள்ளடக்கி உள்ளது, அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் அரசியல் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 14,000 க்கும் அதிகமான 2,000 பவுண்டு குண்டுகளை வழங்கியுள்ளது. இவை இரண்டு ஹிரோஷிமா அளவிலான அணுகுண்டுகளுக்கு சமமானதாகும். இதுவரை 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிமருந்துகள் காஸா மீது வீசப்பட்டுள்ளன, இதனால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நடைமுறையளவில் சமூகரீதியில் அவசியமான ஏனைய அனைத்து வசதிகளுடன் சேர்த்து அதன் பெரும்பாலான குடியிருப்பு கட்டிடங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

"இன்றியமையாத நீர், சுகாதாரம் மற்றும் உணவு வசதிகளை அழிப்பதன் மூலமும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதன் மூலமும், இஸ்ரேல் நெருக்கடிகளின் ஒரு கொடிய, மோசமான நிலையை உருவாக்கியுள்ளது, இது வரவிருக்கும் தலைமுறைகளுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்" என்று அந்த குழு அதனது அறிக்கை நிறைவு செய்தது.

"காஸா மீதான அதன் முற்றுகை, மனிதாபிமான உதவிகளைத் தடுத்தல், பொதுமக்கள் மற்றும் உதவிப் பணியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மற்றும் நிராயுதபாணிகளான அப்பாவிகளை கொல்லுதல் போன்ற படுபாதக செயல்களை செய்துவருகிறது.  

.நா. விதிமுறைகள், சர்வதேச நீதிமன்றத்தின் கட்டுப்படுத்தும் உத்தரவுகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் வேண்டுமென்றே மரணம், பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது; பட்டினியை ஒரு போர் முறையாக பயன்படுத்துகிறது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீது கூட்டு தண்டனையை திணிக்கிறது, " என்று கமிட்டி கூறியது.

குறிப்பிடத்தக்க வகையில், இனப்படுகொலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பைக் குறிவைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களால் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவரும் இணைய தணிக்கைக்கு குழு கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேலிய அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகளுடன் ஒப்பிடும்போது, ​​'பாலஸ்தீன சார்பு நிலைப்பாட்டை' வெளிப்படுத்தும் இத்தகைய பதிவுகள் சமூக ஊடக நிறுவனங்களால் விகிதாசாரமாக அகற்றப்பட்டன" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவுபவர்களால் யுத்த நிறுத்தத்திற்கான குரல்கள் நசுக்கப்படுவதை "அறிக்கையை வேண்டுமென்றே மௌனமாக்குவதை" அறிக்கை கண்டனம் செய்தது.

காஸாவில் இஸ்ரேல் "இன சுத்திகரிப்பு" செய்வதாக குற்றம்சாட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒரு தனி அறிக்கையை வெளியிட்ட அதே நாளில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை, "பல கட்டாய இடப்பெயர்வு நடவடிக்கைகள் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதால், அது போர்க்குற்றங்களுக்கு சமம்" என்று கண்டறிந்தது. "கட்டாய இடப்பெயர்வு வேண்டுமென்றே இஸ்ரேலிய அரசு கொள்கையின் பாகமாக அமைகிறது என்பதையும், ஆகவே அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதப்படுகிறது என்பதையும் கட்டளை பொறுப்புடன் கூடிய மூத்த அதிகாரிகளின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன," என்று அது வெளிப்படுத்தியது. "இஸ்ரேலின் நடவடிக்கைகள் இன சுத்திகரிப்பின் வரையறையையும் பூர்த்தி செய்வதாக தோன்றுகிறது" என்று அது மேலும் தெரிவித்தது.

அது அறிவித்தது, "இஸ்ரேலிய படைகளின் நோக்கம், அவர்கள் நிரந்தரமாக பாலஸ்தீனியர்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து காலி செய்து, அவ்விடங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவே தோன்றுகிறது."

அமெரிக்க நிலைப்பாடு

வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் இரு அறிக்கைகளின் முடிவுகளையும் மறுத்து அவற்றைக் கண்டித்தார். காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தி வருகிறது என்ற .நா அறிக்கையின் கூற்றுக்களுக்கு பதிலளித்த அவர், "இதுபோன்ற சொற்றொடர்கள் மற்றும் அந்த வகையான குற்றச்சாட்டுகள் நிச்சயமாக ஆதாரமற்றவை என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று கூறினார்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கைக்கு விடையிறுக்கையில், காஸாவில் 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்ற உண்மைக்கு இடையிலும், அமெரிக்கா "எந்தவிதமான குறிப்பிட்ட பலவந்தமான இடப்பெயர்வையும்" பார்க்கவில்லை என்று படேல் அறிவித்தார். "பொதுமக்கள் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியை காலி செய்யுமாறு கேட்பது முற்றிலும் நிலையானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியும்" என்று படேல் கூறினார்.

காஸா மக்களை வேண்டுமென்றே பட்டினி போடும் நெத்தனியாகு அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்கா பகிரங்கமாக ஆமோதித்து வருகிறது என்பது வெளிப்படை. கடந்த மாதம், நெத்தனியாகு அரசாங்கம் "ஜெனரல்களின் திட்டம்" என்றழைக்கப்படுவதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது, இது வடக்கு காஸாவிற்கான மொத்த உணவு தடையை உள்ளடக்கியது, மேலும் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் அனைவரும் எதிரி போராளிகள், ஆகவே கொல்லப்படக் கூடியவர்கள் என்ற அறிவிப்பையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயன்று, இஸ்ரேல் காஸாவிற்கு உணவு தடை ஏற்படுத்தியதன் மூலம் மூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தீர்மானித்தது.

அக்டோபர் 13 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், காஸாவிற்கான உணவு வழங்கலை இஸ்ரேல் பாரியளவில் அதிகரிக்காவிட்டால், "இந்த நடவடிக்கைகள் என்எஸ்எம்-20 இன் கீழ் அமெரிக்க கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்" என்று எச்சரித்தனர், இது இஸ்ரேல் மனித உரிமைகள் சட்டத்தை மீறியதாக கருதப்படும் அபாயத்தில் உள்ளது மற்றும் மேலதிக இராணுவ உதவியைப் பெறாது என்பதை மறைமுகமாக குறிக்கிறது.

நிருபர்கள் வற்புறுத்தியபோது, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் படேல், "இஸ்ரேலியர்கள் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளனர்" என்று நாங்கள் மதிப்பீடு செய்யவில்லை" என்று அறிவித்தார்.

அக்டோபர் 2024 நிலவரப்படி, காஸாவின் 2.2 மில்லியன் மக்களில் சுமார் 1.95 மில்லியன் பேர் "பேரழிவு," "அவசரநிலை" அல்லது "நெருக்கடி" அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

https://www.wsws.org/en/articles/2024/11/16/nmjj-n16.html

இது இவ்வாறிருக்க......

நூற்றுக்கணக்கான ஈரானிய அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் உருக்கமான வேண்டுகோள்

Iranian Sunni scholars pen letter to Islamic world on Gaza

ஈரானில் உள்ள நூற்றுக்கணக்கான சுன்னி அறிஞர்கள், காஸா பகுதியில் அதன் இனப்படுகொலை போருக்கு மத்தியில் சியோனிச இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுத்து இஸ்லாமிய உலகில் உள்ள தங்கள் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், துனிசியா, ஈராக், சிரியா, கத்தார், எமிரேட்ஸ், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள மதிப்பிற்குரிய அறிஞர்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

"இன்று, முஸ்லிம்களின் முதல் கிப்லாவின் நிலத்தில், அதாவது புனித பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸா பிராந்தியத்தில், பெரிய சாத்தானின் ஆதரவுடன் தீய சியோனிச ஆட்சியின் குற்றங்களை நாம் காண்கிறோம். நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே நீர் காண்பீர்; (5:82) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவுபடுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியை வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் இணைக்கும் இஸ்ரேலிய ஆட்சியின் திட்டத்திற்கு எதிராக ஈரானிய அறிஞர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

தீய எதிரியின், அதாவது அமெரிக்கா மற்றும் இறைமறுப்பு ஐரோப்பிய அரசாங்கங்களால் வழங்கப்பட்ட ஆயுதம் ஏந்திய சியோனிச ஆட்சியின் மனித இனத்திற்கு எதிரான .குற்றங்களைக் கண்ட பின்னர் தங்கள் முஸ்லிம் சகாக்களுக்கு எழுத முடிவு செய்தோம்.

சியோனிச ஆட்சியின் குற்றங்களைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக இஸ்லாமிய உலக அறிஞர்கள் தங்கள் எதிர்ப்பை செயல்படுத்தவும், சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கவும் இக்கடிதம் மூலம் அழைப்பு விடுக்கின்றோம்.

ஈரானிய சுன்னி அறிஞர்கள் இஸ்லாமிய பிரதேசங்களை பாதுகாக்க ஜி-ஹா-த் மற்றும் ஆயுதம் ஏந்துவதை இஸ்லாமிய கடமையாக பிரகடனம் செய்யவும் மற்ற நாடுகளில் உள்ள எமது சகாக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இஸ்லாமிய விடுதலை போராளிகளுக்கு நிதியுதவி அளியுங்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியின் உற்பத்திப் பொருட்கள், ஆட்சிக்கான ஏற்றுமதிகள் மீது முழு தடை விதையுங்கள் என்றும் உங்கள் அரசாங்கங்களை வலியுறுத்துங்கள்."குறைந்த பட்சம், காசாவில் போர் நிறுத்தப்படும் வரையாவது, ஒருவரால் செய்யக்கூடிய, அவர்களின் நாடு வழியாக பொருட்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அடைவதைத் தடுக்க போராடும் ஜோர்டானிய விசுவாசிகளுடன் சேருங்கள்இணையுங்கள், அதுபோல் ரஃபா எல்லைக் கடவையில் போராடும் எகிப்திய விசுவாசிகளுடன் இணையுங்கள். சியோனிச ஆட்சியின் போர்வெறியர்கள் மீது அழுத்தம் கொடுங்கள்."

"சியோனிஸ்டுகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் (ஜி-ஹா-த்) ஃபத்வாவை பிரகடனம் செய்து இஸ்லாமிய உம்மாவுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வழங்குங்கள்" என்று ஈரானிய சுன்னி அறிஞர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே வேளையில், நாங்கள் ஒன்றுபட்டால், ‘சத்தியத்தின் வெற்றி மற்றும் காஃபிர்களின் அழிவுஎன்ற தெய்வீக வாக்குறுதி நிறைவேறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

https://en.mehrnews.com/news/224550/Iranian-Sunni-scholars-pen-letter-to-Islamic-world-on-Gaza

 

No comments:

Post a Comment