Monday, August 12, 2024

நபிகளாரின் மூத்த பேரன் இமாம் ஹசன் (அலை) அவர்களின் தியாகம்

  Martyrdom of the Prophet’s Elder Grandson Imam Hasan 

மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்



 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

இன்னும்அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:154)


சஃபர் மாதத்தின் சோகமான 
ஆம் தேதி இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூத்த பேரன்இரண்டாவது வாரிசு இமாம் ஹஸன் (அலை) அவர்களின் தியாக நினைவு நாள்.

"மிகச் சிறந்தவர்" என்று பொருள்படும் ஹஸன் என்ற பெயரைக்கொண்ட இமாம் ஹஸன் (அலை)மாசற்ற பெற்றோரான ஹஸ்ரத் ஃபாத்திமா ஸஹ்ரா (அலை) மற்றும் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை) ஆகியோரின் முதல் மகனாவார். ஹிஜ்ரி 50ல் முடிவடைந்த அவரது வாழ்நாள் முழுவதும்போலித்தனத்தையும், நயவஞ்சகங்களையும் அம்பலப்படுத்தி இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்ட பாடுபட்டார்.

இமாம் ஹஸன் (அலை) 47 வயதாக இருக்கையில்ஆரம்பம் தொட்டே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் பரம வைரியான முஆவியா இப்னு அபு சுஃப்யானின் உத்தரவின் பேரில் கொடுக்கப்பட்ட விஷத்தின் காரணமாக ஷஹீதானார்.

மதீனாவில் பிறந்த இமாம் ஹஸன் (அலை) அவர்களும் அவரது இளைய சகோதரர், கர்பலாவின் தியாகி, இமாம் ஹுசைன் (அலை) அவர்களும் "சொர்க்கத்தின் இளைஞர்களின் தலைவர்கள்" என்று இறை கட்டளையின் அடிப்படையில் நபியவர்களால் புகழப்பட்டவர்களாகும்.

நபியவர்களால் தனிப்பட்ட மேற்பார்வையில் வளர்க்கப்பட்ட இரு சகோதரர்களும் (அவர்களின் பெற்றோரைப் போலவே)புனித குர்ஆனின் பல ஆயாக்களின் அடையாளங்கள்.

اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிஉங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (திருக்குர்ஆன் 33:33)

மேற்குறிப்பிட்ட ஆயத்தின் மூலம் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் றஸூலுல்லாஹ்வுடன் அவரது மகள்மருமகன் மற்றும் இரண்டு பேரர்களை "அஹ்ல் அல்-பைத்" அல்லது "வீட்டின் மக்கள்" என்று அழைத்து அவர்களின் தூய்மைக்கு உறுதியளிக்கிறான்.

நஜ்ரானில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு எதிராக இஸ்லாத்தின் உண்மையை வெளிப்படுத்தும் முக்கிய முபாஹிலாவில்இறைவனின் கட்டளைப்படி (3:61), பரிசுத்தமான இந்த ஐந்து பேர்களும் கலந்து கொண்டனர்கிறிஸ்தவ பாதிரியார்கள் றஸூலுல்லாஹ்வுடன் அவர்களைப் பார்த்ததும்அவர்களின் ஆன்மீக பிரகாசத்தையும் தெய்வீக குணங்களையும் உணர்ந்துஉடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டனர்.

இமாம் ஹஸன் (அலைஅவரது சகோதரர்அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் அபிசீனிய பணிப்பெண் ஃபிஸ்ஸா ஆகியோர் நேர்ச்சை ஒன்றை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்றதற்காக தெய்வீக வெகுமதிகளைப் பெற்றனர்ஒவ்வொரு இரவும் (நோன்பு திறக்கும்) அந்தி சாயும் நேரத்தில் வரும் ஏழை வறியோருக்கு தாராளமாக தங்கள் உணவை அளித்தனர். (76:5-to-22)

இமாம் ஹஸன் (அலை) அவர்கள் அறிவில் உறுதியாக உள்ளவர்களைக் குறிக்க புனித குர்ஆனில் (3:7 & 4:162) சர்வவல்லமையுள்ள இறைவனால் இரண்டு முறை பயன்படுத்தப்பட்ட "ராஸிக்கூன ஃபில்-இல்ம்" (இறைவனால் முழுமையான அறிவு வழங்கப்பட்ட) என்ற வார்த்தையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.

அஹ்ல் அல்-பைத்தின் முக்கிய தகுதியானது சூரா ஷூ'ராவின் ஆயா 23 வில் குறிப்பிடப்படுகிறதுஇது அவரது பாவம் செய்ய முடியாத சந்ததியினருக்கும் அவர்களின் அதிகாரத்திற்கும் செலுத்த வேண்டிய மரியாதையை தெளிவுபடுத்துமாறு நபிக்கு அறிவுறுத்துகிறதுஇமாம் அலி (அலை) மற்றும் அவரது தூய சந்ததியினரின் தலைமையை சந்தேகத்திற்கு இடமின்றி இந்த ஆயா நிறுவுகிறது.

தனது பிரியாவிடை ஹஜ் யாத்திரையின் போது அரஃபா தினத்தன்று மினாவில் நிகழ்த்தப்பட்ட தனது புகழ்பெற்ற பிரசங்கத்தில்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஹதீஸ் தக்கலைனை" வலியுறுத்தி கூறினார்கள்"உங்களில் விலைமதிப்பற்ற இரண்டு (தகலைன்) நான் விட்டுச் செல்கிறேன்: ஒன்று இறைவனின் புத்தகம் மற்றுது எனது அஹ்ல் அல்-பைத். அவர்களைப் பற்றிக் கொள்ளுங்கள்நீங்கள் வழிதவற மாட்டீர்கள்ஏனென்றால் அவர்கள் (மறுமை நாளில் கவுதரின்) நீரூற்றில் என்னைச் சந்திக்கும் வரை அவர்கள் ஒருபோதும் பிரிய மாட்டார்கள். "ஹஸன் மற்றும் ஹுசைன் அவர்கள் உட்கார்ந்தாலும் அல்லது நின்றாலும் (அமைதியாக இருந்தாலும் அல்லது எழுந்தாலும்) இமாம்கள் (உம்மாவின் தலைவர்கள்)" என்றும் அவர் தெளிவாக வலியுறுத்திக் கூறினார்.

ஆயினும்கூடபடைப்பாளரின் இந்த தெளிவான கட்டளைகள் மற்றும் நபியின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும்அஹ்ல் அல்-பைத்தின் அரசியல் தலைமைத்துவ உரிமை றஸூலுல்லாஹ்வை கொல்லத்துணிந்த மக்காவின் தன்னலக்குழுக்களால் பறிக்கப்பட்டது.

இழிவான ஹிந்த் பிந்த் உத்பாவின் மகன் முஆவியாறஸூலுல்லாஹ்வை அழித்தே தீருவேன் என்று கங்கணம்கட்டியிருந்த முக்கிய நபர்களில் ஒருவர். ஹிந்த் என்பவள் உஹதுப் போரின்போது நபிகளாரின் மாமனார் ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைச் சிதைத்துகல்லீரலை மெல்லுவதற்காகதன் அடிமையான வஹ்ஷிக்கு பொறுப்பை வழங்கியவள்.

(இஸ்லாத்தை பூண்டோடு அழிக்கும் எண்ணத்தோடு றஸூலுல்லாஹ்வை கொல்லத்துணிந்த உமையா வம்சம்மக்கா வெற்றியின் போதுஇனியும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில்தம் உயிர்களை பாதுகாத்துக்கொள்ளஇஸ்லாத்தில் இணைந்தவர்கள்)

அபு ஸுஃப்யானின் மகன் முஆவியாஇஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தின் மீது மறைத்துவைத்திருந்த பகையை மீறிசிரியாலெபனான்ஜோர்டான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் (இஸ்ரேல்) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிதாக கைப்பற்றப்பட்ட ஷாம் பிராந்தியத்தின் ஆளுநராக இரண்டாம் கலீஃபாவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்களின் இஸ்லாமியத்திற்கு முந்தைய நட்பு காரணமாகவே அவ்வாறு நியமிக்கப்பட்டார்.


டமாஸ்கஸில் ஆளுநர் என்ற அதிகாரத்தை பொறுப்பேற்றவுடன்இஸ்லாமிய சமூகத்தை உள்ளிருந்து பலவீனப்படுத்தவும்இஸ்லாத்தின் போதனைகளை சிதைக்கவும் சகல சதித்திட்டங்களையும் கையாண்ட முஆவியா அமீருல் முஃமினீன் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை அவர்களால் முறையாக பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அமீருல் முஃமினீனின் கட்டளைக்கு கட்டுப்படாமல்முஆவியா ஆளுநர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.

அவர் இமாமுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்தார்ஆனால் நீண்டகால சிஃபின் போரில் தவிர்க்கமுடியாத தோல்வியை எதிர்கொண்டபோது,​​ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஈட்டி முனைகளில் புனித குர்ஆனின் பிரதிகளை ஏந்தி வந்து முஸ்லிம்களை தவறாக வழிநடத்தி வந்தார்.

இதற்கிடையில் ஹிஜ்ரி 40 இல் விசுவாசிகளின் தளபதி அமீருல் முஃமினீன் கொல்லப்படுகிறார்அதன் பின் முஆவியா இப்னு அபு சுஃப்யான் முழு கிலாபத்தையும் தனதாக்கிக்கொள்ளும் வகையில் இமாம் ஹஸன் (அலை) க்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்; பயங்கரவாதம்போலியான ஹதீஸ்களை இட்டுக்கட்டுதல் மற்றும் லஞ்சம் போன்ற கொள்கையை கடைபிடித்தார்.

இதன்போது இமாம் ஹஸன் (அலை) முஆவியாவுக்கு பின்வரும் கடிதத்தை எழுதினார்:

ஓ முஆவியா! பொய்யிலிருந்தும் கிளர்ச்சி செய்வதில் இருந்தும் விலகி இருங்கள் மேலும். வெகுஜனங்கள் செய்தது போல் எனக்கு விசுவாசமாக இருங்கள். சர்வவல்லமையுள்ள இறைவன்அவனுடைய தூதர்கள் மற்றும் மனசாட்சியுள்ளவர்களின் பார்வையில் உங்களை விட கலிஃபா பொறுப்புக்கு நானே மிகவும் தகுதியானவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து கலகத்தை கைவிடுங்கள். முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்தாதீர்கள்.

இந்த உமய்யா கிளர்ச்சியாளர்இமாமுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாகஇமாம் ஹசனின் (அலை) வாழ்க்கைக்கு எதிராக சதி செய்ய ஈராக்கில் உள்ள பழங்குடியினரின் சில துரோகத் தலைவர்களை லஞ்சம் கொடுத்து வாங்கினார். அவர் உண்மையான முஸ்லிம் அல்ல என்றும் இஸ்லாத்தின் போதனைகளை சிதைக்க முயற்சிக்கிறார் என்றும் இமாம் அவருக்கு வெளிப்படையான வார்த்தைகளில் எழுதினார். கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது:

பரிதாபத்துக்குரிய முஆவியா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை (சொல் மற்றும் நடத்தை) கடைப்பிடிப்பவர் மற்றும் அவரது செயல்கள் இறைவனுக்கு கீழ்ப்படிவதை நிரூபிப்பதே உண்மையான கலீஃபாவாகும். என் வாழ்வில்நாங்கள் (அஹ்லுல் பைத்) நிச்சயமாக வழிகாட்டுதலின் அடையாளங்களாகவும்இறையச்சத்தின் விளக்குகளாகவும் இருக்கிறோம். முஆவியா அவர்களேநீர் சுன்னாவைத் திரித்துபித்அத்துக்களை உயிர்ப்பித்தவர்களில் ஒருவர்அல்லாஹ்வின் அடியார்களை அடிமைகளாகவும்அல்லாஹ் வழங்கிய செல்வத்தை விளையாட்டாகக் கருதியவர்களில் ஒருவர்.

முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமித்து பைத் அல்-முகத்தஸைக் கைப்பற்றுவதற்கான பைசண்டைன் பேரரசர் கான்ஸ்டன்டைன் IV இன் நோக்கங்களுக்கு மத்தியில்அவரது இராணுவத்தின் பலவீனமான நம்பிக்கைமுஆவியாவின் துரோகம் மற்றும் அவரது எதிரியின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கும் அதே சமயம் உள்நாட்டுப் போர் அச்சுறுத்தலை உணர்ந்த றஸூலுல்லாஹ்வின் மூத்த பேரன்இரத்தக்களரியைத் தடுக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த இணங்கினார்.

இமாம் ஹஸன் (அலை) அவர்கள் மதீனாவிலும் அமைதி காணவில்லை. ஒப்பந்தத்தை மீறி தனது தகுதியற்ற மகன் யாசித்தை கலீஃபாவாக மாற்ற முயன்றார் முஆவியா. அவரின்  சூழ்ச்சியினால்இமாம் அவர்கள் நஞ்சூட்டப்பட்டுவிஷத்தின் கொடிய வீரியத்தால் ஷஹீதானார்.

இமாமத்தின் தெய்வீக அறக்கட்டளையை இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு வழங்கிய போது, "நான் துரோகியால் ஊட்டப்பட்ட விஷத்தின் காரணமாக உயிரிழக்கின்றேன்." என்று இமாம் ஹஸன் குறிப்பிட்டார். இருப்பினும்இந்த நாள் உங்கள் நாள் போல் இருக்கப்போவதில்லை ஓ அபா அப்தில்லாஹ்! அன்று முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமிருந்தும்எங்கள் பாட்டனாரின் உம்மத்தின் அங்கத்தினரிடமிருந்தும் முப்பதாயிரம் கூட்டங்கள் ஒன்றுகூடி உங்கள் இரத்தத்தை சிந்தி, உங்களைக் கொன்றுவிடுவார்கள்... (அவர்கள்) உங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்து உங்கள் உடைமைகளைச் சூறையாடுவார்கள். அந்த நேரத்தில் இறைவன் உமையாக்களின் மீதான சாபத்தை அனுமதிப்பான்மேலும் வானத்திலிருந்து இரத்தமும் சாம்பலும் பொழியும்எல்லா உயிரினங்களும்காட்டு விலங்குகளும்கடலில் உள்ள மீன்களும் கூட உங்களுக்காக அழும்.”

இமாம் ஹஸன் (அலை) அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு முன்கோவேறு கழுதை மீது ஏறிச் சென்ற ஒரு தேசத்துரோகப் பெண்ணின் தூண்டுதலின் பேரில்பல அம்புகள் எறிந்துமரியாதைக்குரிய உடலைத் துளைத்தது ஒரு சோக சம்பவம். இமாம் ஹஸன் (அலை) மற்றும் இமாம் ஹுசைன் (அலை) இருவரும் இவ்வாறு இஸ்லாத்தையும் அவர்களின் பாட்டனாரின் பணியையும்அவர்களின் தந்தை இமாம் அலி (அலை) அவர்களின் தீவிர முயற்சிகளையும் தங்கள் தனித்துவமான வழிகளில் காப்பாற்றினர்.

அதற்கு உலக முஸ்லிம்கள் என்றென்றும் கடமைப்பட்டிருப்பார்கள்.

https://kayhan.ir/en/news/130358/martyrdom-of-the-prophet%E2%80%99s-elder-grandson

1 comment: