The Israeli media is showing their side's failure
ByAl Mayadeen English
இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வடக்கு முனையை ஹிஸ்புல்லாவிடம் இழந்துவிட்டதாக ஒரு
உயர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகிறார்.
இஸ்ரேலிய போர் அமைச்சரவை (War Cabinet) வடக்கை இழந்துள்ளது மட்டுமல்லாமல் "இஸ்ரேல்" ஒரு மூலோபாய பிரச்சினையையும் எதிர்கொள்கிறது, மேலும் காஸா முனையில் ஒரு நீண்ட போரை எதிர்கொள்கிறது என்று இஸ்ரேலிய சேனல் 13 ரிசர்வ் கர்னல் கோபி மரோம் மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.
"வடக்கில் வசிப்பவன் என்ற வகையில் கூறுகிறேன், அமைச்சரவை வடக்கை இழந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன். இங்கு ஒரு மூலோபாய பிரச்சினை உள்ளது. எந்த தீர்வும் கண்ணில் தென்பது தூரத்தில் இல்லை. இது பல மாதங்களாக நடந்து வரும் பெரும் அழிவுப் போராக உள்ளது," என்று மரோம் இஸ்ரேலிய சேனலிடம் கூறினார்.
"அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்கள் ஆகியவை தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 70,000 பேரை மீண்டும் அழைத்து வருவதற்கான நிலைமைகளை உருவாக்கவில்லை என்று நான் நம்புகிறேன்," என்று வலியுறுத்திய அவர், "அமைச்சரவை வடக்கை கவனித்துக் கொள்ளவில்லை மற்றும் ஹெஸ்பொல்லாவின் "அச்சுறுத்தலை" அகற்றுவது என்ற அதன் இலக்கு குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில், சேனல் 12 நிருபர் ரோவி ஹேமர்ஷ்லாக் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் "ஒரு அமைதியற்ற வார இறுதி" பற்றி குறிப்பிட்டார், ஹெஸ்புல்லா அதன் நடவடிக்கைகளை இங்கே முடுக்கிவிட்டுள்ளது மற்றும் ஏராளமான தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்று கூறினார்.
சனிக்கிழமை காலை ஹெஸ்புல்லா இரண்டு ராக்கெட்டுகளை ஏவியது குறித்து ஹேமர்ஷ்லாக் பேசுகையில், "மார்கலியட் மற்றும் மிஸ்காவ்-ஆம் ஆகிய இடங்களில் சைரன்கள் ஒலித்தன. பின்னர், அப்பர் அல்-ஜலீலியின் வான் பகுதியில் ட்ரோன்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன," வான் பாதுகாப்பு அமைப்பு "அவற்றை இடைமறிக்கத் தவறிவிட்டது" என்பதையே இது வெளிப்படுத்தியது.
இஸ்ரேலிய நிருபர் மேலும் தெரிவிக்கையில் "கஃபார் ப்ளூம் அருகே இரண்டு ட்ரோன்கள்
விபத்துக்குள்ளானதாகவும், சம்பவ இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார்.
அந்த அலைவரிசையின் இராணுவ வர்ணனையாளர் ரோய் ஷரோன், "இஸ்ரேலின் வடக்கில் வசிப்பவர்கள் திரும்பி வந்து குடியேறுவதற்கான சூழ்நிலை வரும் என்றும் அவ்வாறான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் இன்னும் நம்புகிறார்கள், ஆனால் அது கிட்டிய எதிர்காலத்தில் நடக்காது" என்று கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 6 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளாலும், அவர்கள் திரும்பி வருவதற்கு ஹிஸ்புல்லாவுடன் ஒரு அரசியல் தீர்வுக்கான எந்த திட்டமும் இல்லாததாலும் அவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
தெற்கின் நிலையும் மோசமானதே
இஸ்ரேலிய செய்தி நிறுவனமான வாலா சனிக்கிழமையன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் காஸா மீதான போரில் உறுதியற்ற நிலையில் இருப்பதாலும், தெளிவான மூலோபாயம் இல்லாமல் இருக்கின்றது, இதனால் அது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மீள வழி தெரியாமல் அங்கு சிக்கியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் சமீபத்தில் வெறுமையாக்கப்பட்ட பகுதிகளில் ஹமாஸ் எதிர்ப்பு இயக்கம் அதன் திறன்களை தீவிரமாக மீண்டும் கட்டியெழுப்புகிறது என்பதை வாலா அடிக்கோடிட்டுக் காட்டியது, இந்த பிரச்சினையில் "இஸ்ரேலுக்கு" எந்த தெளிவான இலக்கும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்நாட்டு அரசியல் இயக்கவியலால் செயலிழந்து
காணப்படுகிறார், என்று வாலா கட்டுரையாளர்
பென் காஸ்பிட் கூறினார். ஆதாரங்களின்படி, நெதன்யாகுவின் முடிவெடுக்கும் திறன் தீவிர வலதுசாரி
அரசியல்வாதிகளான இட்டாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோரின்
செல்வாக்கால் தடைபட்டுள்ளது, இது காஸாவில் இஸ்ரேலிய படைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு பதிலளிப்பதில்
அரசாங்கத்தை முடக்கியுள்ளது.
ஹமாஸ் தனது கோட்டையான கான் யூனிஸை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கான் யூனிஸின் மூலோபாய முக்கியத்துவத்துடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல் ரஃபா மீதான படையெடுப்பை தொடர்வது புத்திசாலித்தனமல்ல என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
நெத்தன்யாகுவிற்கு எதிராக விமர்சனங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன; ஆக்கிரமிப்பின் தற்போதைய இக்கட்டான நிலைக்கு இஸ்ரேலிய அவருடைய தலைமைதான் சிக்கலுக்கு காரணம் என்று யெடியோத் அஹ்ரோனோத் செய்தியாளர் பென்-ட்ரோர் யெமினி போன்றவர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகள் சென்றாலும்
சரிசெய்ய முடியாத நெருக்கடியை ஹிஸ்புல்லா உருவாக்கியுள்ளது -
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிராந்திய அதிகாரி ஒருவர் வடக்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது தனக்குள்ள விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய அல்-ஜலீல் பிராந்திய கவுன்சிலின் தலைவர் ஜியோரா சால்ட்ஸ் இஸ்ரேலிய வானொலி சேனலான FM103 க்கு கூறுகையில், "நாங்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறோம், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு யதார்த்தமாகும்," என்றார்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள வடக்கு பிராந்தியங்களில் "வரவிருக்கும் ஆண்டுகளில்" எதிர்நோக்கப்படும் நெருக்கடி குறித்து அவர் எச்சரித்தார், அதேவேளையில் அப்பிராந்தியத்தில் இராணுவ மற்றும் பாதுகாப்பு இயலாமைக்காக இஸ்ரேலிய அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
ஹிஸ்புல்லாவே இஸ்ரேலுக்கு "வலுவான, மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான சவால்"
என்று கூறிய அவர், ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு பகுதிகளை முன்னுரிமையில் இரண்டாம் நிலை கருத முடியாது
என்றும் கூறினார்.
No comments:
Post a Comment