Tuesday, December 26, 2023

சியோனிச ஆட்சியின் தோல்வி அமெரிக்காவின் தோல்விக்கு சமம் - இமாம் செய்யிதலி காமனெயி

 Palestinians' greatest achievement in Gaza: US & Britain being disgraced

காஸாவில் பாலஸ்தீனியர்களின் மிகப்பெரிய சாதனை: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அவமானம்

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் செய்யிதலி காமனெயி 2023 டிசம்பர் 23 சனிக்கிழமை இமாம் கொமைனி ஹுசைனியாவில் கெர்மான் மற்றும் குசெஸ்தான் மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சந்நதித்தபோது ஆற்றிய உரையின் சுருக்கம்

"இந்த சம்பவம் இரண்டு வழிகளில் இணையற்றது. சியோனிச ஆட்சியின் தரப்பிலிருந்து, இதுபோன்ற கொடூரம், குற்றச்செயல்கள், இரத்தவெறி, குழந்தை கொலைகள், தீமை, கொடூரம், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகளை வீசுதல் ஆகியவை இதற்கு முன்பு காணப்படவில்லை. மேலும், பாலஸ்தீன மக்கள் மற்றும் போராளிகளின் தரப்பில், அவர்கள் பொறுமையையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது.

“தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருட்கள் இம்மக்களுக்குச் சென்றடையவில்லை என்றாலும், மலைபோல் உறுதியாக நிற்கிறார்கள், இந்த நெகிழ்ச்சிதான் அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும், பொறுமையாக இருப்பவர்களிடம் இறைவன் இருக்கிறான், வெற்றியின் அடையாளங்களை இன்று பார்க்கக்கூடியதாக இருக்கிறது."

சியோனிச ஆட்சி அதன் அனைத்து உபகரணங்கள் மற்றும் சொத்துக்களை கொண்டிருந்தபோதிலும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சக்தியற்றதாக உள்ளது, மேலும் இது இந்த இணையற்ற மோதலின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இந்த சம்பவத்தில் சியோனிச ஆட்சியின் தோல்வி அமெரிக்காவின் தோல்விக்கு சமம். இன்று, உலகில் யாரும் சியோனிச ஆக்கிரமிப்பு ஆட்சி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக கருதவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றுதான் என்பது அனைவருக்கும் புரிந்துள்ளது.

போர்நிறுத்தத்திற்கான பல ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் கொண்டு ரத்து செய்தது அமெரிக்க அரசாங்கத்தின் "வெட்கங்கெட்ட" செயல். அதே நேரத்தில் காமனெயி குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற மக்கள் மீது குண்டுகளை வீசுவதற்கு சியோனிச ஆட்சிக்கு அமெரிக்கா உடந்தையாக இருப்பதைக் கண்டித்தார்.

"பாலஸ்தீன தேசமும், உண்மையுடன் நிற்கும் எதிர்ப்பு முன்னணியும், விடுதலைப் போராளிகளும் மேற்கத்திய நாடுகளையும் அமெரிக்காவையும் இழிவுபடுத்தியதன் மூலமும், இவர்களின் பொய்யான மனித உரிமைக் கோஷங்களின் தன்மையை அம்பலப்படுத்தியதன் மூலமும் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்; ஏனெனில் அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இஸ்ரேல் இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்திருக்க முடியாது. இன்று, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கொடூரமான, நயவஞ்சகமான, தீய முகங்கள் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன,"

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எந்த வகையிலேனும் அல்லது வடிவத்திலேனும் உதவுவது உலக அரசாங்கங்கள் மற்றும் நாடுகளின் கடமை. "அதே நேரத்தில் சியோனிச ஆட்சிக்கு உதவுவது பெரும் குற்றம் மற்றும் துரோகமுமாகும்."

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் காமனெயி சில இஸ்லாமிய அரசுகள் சியோனிச ஆட்சிக்கு உதவிய குற்றச் செயலுக்காக வன்மையாகக்  கண்டனம் செய்தார், "உலக முஸ்லிம்கள் இந்தத் துரோகத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று வலியுறுத்தினார்.

இது தவிர, பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆகியவை காசா மக்களுக்கு நீர் கிடைப்பதைத் தடுத்த சியோனிச ஆட்சியை அடைவதைத் தடுப்பது இஸ்லாமிய அரசாங்கங்களின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

"சியோனிச குற்றவாளிகளுடன் வைத்திருக்கும்  எந்தவித உறவுகளையும், வழங்கிவரும் உதவியையும் துண்டிக்குமாறு முஸ்லிம் சமூகம் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவர்களால் உறவுகளை நிரந்தரமாக துண்டிக்க முடியாவிட்டால், தீய, குரூரமான மற்றும் இரத்தவெறி ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் தற்காலிகமாகவாவது அதைச் செய்ய வேண்டும்."

இன்று, சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தால் உலகின் மனசாட்சி புண்பட்டுள்ளது."அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள், அவர்களில் சில அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் வேந்தர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சியோனிச ஆட்சிக்கு தங்கள் அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி சில அரசுகள் கொடூரமான ஆட்சிக்கு தொடர்ந்து உதவி வருகின்றன.

"இறைவனின் உதவியுடன், உண்மையுடன் நிற்கும் எதிர்ப்பு முன்னணி சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சியோனிச ஆட்சி நிச்சயமாக அகற்றப்படும். அந்த நாளை இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் கண்களால் காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த சந்திப்பின் போது, 2024 மார்ச் 21 அன்று நடைபெற உள்ள ஈரானின் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் இமாம் காமனெயி குறிப்பிட்டார். பின்வரும் நான்கு பண்புகளுக்கு ஏற்ப, தேர்தல்களை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஈரானிய தேசம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்: "வலுவான மற்றும் உயிரோட்டமான பங்கேற்பு, பிரிவுகளின் உண்மையான போட்டித்தன்மை மற்றும் அவர்களின் மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்குதல், உண்மையான சட்டப்பூர்வத்தன்மை மற்றும் முழுமையான பாதுகாப்பை வழங்குதல்."

இஸ்லாமிய குடியரசில் தேர்தல்களின் கொள்கை மற்றும் தர்க்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் போது, "அமைப்பின் 'குடியரசு' மற்றும் 'இஸ்லாமிய' அம்சங்கள் இரண்டும் தேர்தல்களைச் சார்ந்துள்ளன, ஏனெனில் ஒரு குடியரசு, ஜனநாயகம் மற்றும் நாட்டின் நிர்வாகத்தில் மக்களின் ஈடுபாட்டைப் பெறுவதற்கு தேர்தல்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் நடத்தப்படாவிட்டால், நாடு சர்வாதிகாரம், குழப்பம், பாதுகாப்பின்மை மற்றும் கலவரங்களை எதிர்கொள்ளும் என்றும் இமாம் கமேனி சுட்டிக்காட்டினார். மக்களின் தேசிய இறையாண்மையை உறுதி செய்யக்கூடிய ஒரே சரியான மற்றும் உண்மையான பாதை தேர்தல்கள் மட்டுமே" என்று அவர் மேலும் கூறினார்.

https://english.khamenei.ir/news/10393/Palestinians-greatest-achievement-in-Gaza-US-Britain-being

 

No comments:

Post a Comment