Monday, November 20, 2023

இஸ்லாமிய ஈரானிடம் பினாமி குழுக்கள் இல்லை - நாசர் கனானி

Kan'ani: Unlike US, Iran has no proxy forces in region

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி ஈரானிடம், அதன் நட்பு நாடுகளுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவைப் போல், மேற்காசிய பிராந்தியத்தில் எந்த பினாமி படைகளும் இல்லை என்று கூறினார்.

திங்களன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாசர் கனானி, குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்த ஈரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் கூற்றுக்களை நிராகரித்தார். "பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள் ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, ஆனால் அவை தங்கள் நாடுகளையும் அரசாங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன" என்று கூறினார்.

"ஈராக், சிரியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள் தங்கள் நாடுகளின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன" என்றும், அமெரிக்காவைப் போலல்லாமல், அதன் கூட்டாளிகளுக்கு கட்டளையிடும் அதன் கட்டளை அல்லது முகமையின் கீழ் செயல்படும் படைகளைக் கொண்டிருக்கவில்லை.

பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்பு சக்திகள் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகள் என்றும், அவர்கள் தங்கள் நாடு மற்றும் தேசத்தின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள் மற்றும் தன்னாட்சியுடன் செயல்படுகிறார்கள் என்றும் நாங்கள் பல முறை கூறியுள்ளோம்," என்று கனானி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை சியோனிச ஆட்சி தான் சிக்கியுள்ள "மோசமான நிலைமையில் இருந்து தப்பிக்க" பயன்படுத்தும் ஒருவகையான "குற்றச்சாட்டு" என்றும் குறிப்பிட்டார்.

"காஸாவில் உள்ள பாலஸ்தீன எதிர்ப்புக் குழுவிடமிருந்து (பெற்றுவரும் அடியின் காரணமாக) பல பரிமாணத் தோல்வியை கண்ட இந்த ஆட்சியினால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே, ஈரான் இஸ்லாமிய குடியரசு உட்பட, இது குறித்தும் பல்வேறு வழிகளில் குற்றம் சாட்ட முயற்சிக்கிறது" என்று விளக்கினார்.

சியோனிச ஆட்சியின் "குற்றவியல் நடவடிக்கைகளுக்கு" அமெரிக்க இராஜதந்திரிகளின் ஒட்டுமொத்த ஆதரவின் விளைவாகவே இந்த பிராந்தியத்தில் மோதல்கள் தொடர்வதாக குறிப்பிட்ட அவர் "மேற்கத்திய நாடுகளின் மற்றும் குறிப்பாக அமெரிக்காவின் (இஸ்ரேலுக்கு) ஆதரவு காரணமாக, காஸாவின் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான தரை, கடல் மற்றும் வான்வழி தாக்குதல்களை நாங்கள் காண்கிறோம்" என்று கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்களின் எதிர்வினையைத் தூண்டிவிட்டன, அவர்கள் "இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், எதிர்ப்புக் குழுக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என்று அமெரிக்காவையும் சியோனிச ஆட்சியையும் பலமுறை எச்சரித்திருந்தனர்.

இஸ்ரேலிய ஆட்சியுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இஸ்லாமிய நாடுகள் துண்டிக்கும் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக இஸ்லாமிய குடியரசு அடிக்கடி குரல் எழுப்பி வருகிறது, இஸ்லாமிய நாடுகள் தங்கள் அனைத்து திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்று பாலஸ்தீன தேசம் நியாயமாக எதிர்பார்க்கிறது என்றார். இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, எனினும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

காஸாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளினால் பல நடவடிக்கைகளை எடுக்க முடியும், எனினும், துரதிர்ஷ்டவசமாக, பாலஸ்தீனியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான நடைமுறை நடவடிக்கைகளை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை என்றும் கானானி கூறினார்.

https://en.mehrnews.com/news/208585/Unlike-US-Iran-has-no-proxy-forces-in-region-FM-Spox

No comments:

Post a Comment