America descends into the cesspool of history
By: Hossein Askari
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கூறியதைக் சுட்டிக்காட்டுவோம்: "அக்டோபர்
7 தாக்குதல் சும்மா இடம்பெறவில்லை."
எது பயங்கரவாதம்...? இஸ்ரேல் உருவாவதற்கு முன்பு, வலதுசாரி சியோனிச இர்குனால்
1946ல் கிங் டேவிட் ஹோட்டல் மீது குண்டு வீசப்பட்டது. இந்த ஹோட்டலிலேயே பாலஸ்தீனத்திற்கான
பிரிட்டிஷ் நிர்வாக தலைமையகம் இருந்தது. அது பயங்கரவாதம்.
1948 ஆம் ஆண்டில், பாலஸ்தீனியர்கள் அவர்களின் நிலங்கள் (இழப்பீடு இல்லாமல்) கொள்ளையடிக்கப்பட்டு
அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அது ஒரு பயங்கரவாதம்.
மீண்டும் 1948 ஆம் ஆண்டில், டெய்ர் யாசின் படுகொலை நடந்தது, அங்கு
இர்குன் மற்றும் லேஹியைச் சேர்ந்த சியோனிஸ்டுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட
100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றனர். அது பயங்கரவாதம்.
பின்னர் 1982 ஆம் ஆண்டில், லெபனான் உள்நாட்டுப் போரின் போது இஸ்ரேலியப் படைகள்
மற்றும் அதன் லெபனான் கிறிஸ்தவ கூட்டாளிகளுடன் இணைந்து சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள்
முகாம்களில் படுகொலை செய்தது, இதில் 3,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அது பயங்கரவாதம்.
மிக சமீபத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பாலஸ்தீனிய நிலத்தில்
கட்டப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் வசிக்கும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
இஸ்ரேலிய படைகளின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்களை தினசரி அடிப்படையில் தாக்கி, கொலை
செய்து, பிரித்தெடுத்து சிறையில் அடைத்துள்ளனர். அதுதான்
தீவிரவாதம்.
யூதர்கள் அல்லாத இஸ்ரேலிய குடிமக்கள் இஸ்ரேல் முழுவதும் இரண்டாம் தர
குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறைவான செய்தி. அது பயங்கரவாதம் அல்ல, மாறாக
நிறவெறி.
மேற்குக் கரையிலும், அல்-குத்ஸிலும் வாழும் பாலஸ்தீனியர்கள் எல்லா
வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதுதான் நிறவெறி.
காஸாவில் வாழும் 2.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையில்
மனிதாபிமானமற்ற நிலையில் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பரிதாபகரமான வாழ்க்கைக்குத்
தள்ளப்படுகிறார்கள். அதுதான் நிறவெறி.
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்கள் என்று நீங்கள் எதை அழைத்தாலும், பல
ஆண்டுகளாக இஸ்ரேலிய கொள்கைகள் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளன. இஸ்ரேல் ஒரு நிறவெறி
நாடாக இருந்து, இப்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு
பொறுப்பாகிறது.
சியோனிஸ்டுகள் பயங்கரவாதத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்களாகவும், அதை பரப்புபவர்களாகவும்
தொடர்ந்து இருந்துவருகின்றன. (Israel’s torture techniques).
இன்று சுமார் 7 மில்லியன் யூத இஸ்ரேலியர்களும் 7 மில்லியன் பாலஸ்தீனியர்களும்
மத்திய தரைக்கடல் மற்றும் ஜோர்டான் நதிக்கு இடையில் வாழ்கின்றனர், இது
இஸ்ரேல் மற்றும் மேற்கு கரையை (கிழக்கு அல்-குத்ஸ் மற்றும் காஸா உட்பட) உள்ளடக்கிய
ஒரு பகுதியாகும். பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிகளில், இஸ்ரேல்
மட்டுமே ஆளும் சக்தியாக உள்ளது அல்லது வரையறுக்கப்பட்ட பாலஸ்தீனிய சுயாட்சியுடன்
முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய
குடியுரிமை பெற்றவர்கள் கூட இரண்டாம் தர குடிமக்களாகவும், இஸ்ரேலிய
குடியுரிமை இல்லாதவர்கள் சிவில் உரிமைகள் இல்லாத "உயிரினங்களாகவும்"
பார்க்கப்படுகிறார்கள். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை சிறையில் அடைத்து, பிரித்துள்ளது, அடிமைப்படுத்தியுள்ளது, அவர்கள் பாலஸ்தீனியர்கள்
என்பதற்காகவே தவிர, அவர்கள் குற்றம் செய்தார்கள்
என்பதற்காக அல்ல. மொத்தத்தில், நிறவெறி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை
நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இது எப்படி நடக்கமுடியும்?
இந்த இடத்தில்தான் “புனிதமான” அமெரிக்கா படத்தில் வருகிறது
மற்றும் உலகெங்கிலும், குறிப்பாக ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் ஆதரவாளர்களால்
ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்கள் மற்றும் குண்டுகள் அமெரிக்காவால்
வழங்கப்படுகின்றன. இதுவும் நிதி உதவியும் அமெரிக்க வரி செலுத்துவோரால் வழங்கப்படும்
பணம் ஆகும். இஸ்ரேல் மீதான விமர்சனங்களுக்கு அமெரிக்கா அரசியல் ஆதரவு அளிக்கிறது. இஸ்ரேலின்
மோசமான கொள்கைகள் மற்றும் செயல்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில்
100 வீட்டோக்களை அமெரிக்கா பிறப்பித்துள்ளது. இந்த வீட்டோக்கள் அமெரிக்காவை உலகின்
பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்துகின்றன, அவர்கள் களத்தில் என்ன நடக்கிறது என்பதைக்
அறியாதவர்கள் அல்ல.
கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது அமெரிக்கக் கொள்கைகளில்
ஊடுருவியுள்ளது. இஸ்ரேலை விமர்சிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக யூதர்களுக்கு எதிரானவர்கள்
என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். எத்தனையோ பேர் வேலை இழந்துள்ளனர். பேச்சு சுதந்திரத்தின்
கோட்டைகள் என்று சொல்லப்படும் பல்கலைக்கழகங்களில் கூட, பணக்கார யூத நன்கொடையாளர்கள்
இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை முறியடிக்காத நிறுவனங்களுக்கு நிதி உதவியை நிறுத்தி
வைப்பதன் மூலம் இஸ்ரேலைக் கண்டிக்கும் சிறிய விமர்சனங்களுக்கு கூட தங்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க அரசியலில் யூதப் பணத்தின் பங்கு மிகவும் பெரியதாக
இருக்கும் — அரசியல்வாதிகளுக்கு நிதி ஆதரவை நிறுத்தி வைப்பது மற்றும் இஸ்ரேலிய வழியை
மீறாத பிரச்சாரங்கள் ஆதரவு வழங்குவது.
இத்தகைய கண்மூடித்தனமான ஆதரவை அமெரிக்கா எவ்வாறு நியாயப்படுத்துகிறது? மத்திய கிழக்கில்
இஸ்ரேல் மட்டுமே ஜனநாயக நாடு, நமது மிகப்பெரிய நட்பு நாடு என்ற இரண்டு பெரிய பொய்களுடன்
அரசியலைத் தொடர்கிறது. இஸ்ரேல் எந்த வகையிலும் ஜனநாயக நாடு கிடையாது. இது மிகத்துல்லியமான
ஒரு நிறவெறி அரசு. இஸ்ரேலின் உக்ரைன் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான
விருப்பமின்மை மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலிருந்தும்
கிழக்கு ஜெருசலேமின் சில பகுதிகளை இணைப்பதைத் தவிர்ப்பதற்கும் அமெரிக்க வேண்டுகோளைப்
புறக்கணிப்பதிலும் உறுதியாக இருக்கிறது. இது தான் அவர்கள் கொண்டுள்ள நட்பு.
அரேபியர்கள் (மற்றும் முஸ்லிம்கள்) ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு கையாலாகாதவர்களா?
இல்லை, அவர்கள் கையாலாகாதவர்கள் அல்ல, ஆனால் அரபு மற்றும் பெரும்பாலான முஸ்லிம்
ஆட்சியாளர்கள் நாட்டு மக்களால் தெரிவுசெய்யப்படாத சட்டவிரோதமானவர்கள், பலவீனமானவர்கள்
மற்றும் சுயநலவாதிகள். அநேகமானோர் அமெரிக்காவை கண்மூடி பின்தொடர்பவர்கள், அவ்வாறு இல்லாவிட்டாலும்
குறைந்தபட்சம் முறைகேடான ஆட்சியாளர்கள் என்ற முறையில், உள்நாட்டு எதிர்ப்பை முறியடிக்கவும்,
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்கள் அமெரிக்காவின் ஆதரவை நம்பியுள்ளனர். நாம்
இப்போது கூட்டு காலனித்துவத்தின் ஒரு உலகத்தின் கீழ் வாழ்கிறோம்- அங்கு ஆட்சியாளர்கள்
தாங்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற காலனித்துவ சக்திகளின் விருப்பங்களை மீறுவதில்லை.
நிச்சயமாக. அவ்வாறான ஆட்சியாளர்களால் இஸ்ரேலிய-அமெரிக்க ஆக்கிரமிப்பை பின்னுக்குத்
தள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியாது, ஆனால் அவர்கள் மிகவும் பயனுள்ள பொருளாதார
ஆயுதமான 'பொருளாதாரத் தடைகளைக்' கொண்டுவரலாம். எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு
(எல்.என்.ஜி) ஏற்றுமதிக்கு அவர்கள் தடை அல்லது கட்டுப்பாட்டை விதிக்கலாம்.
அரேபியர்களும், முஸ்லிம்களும் அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதன்
கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அமெரிக்கா யாரையும், எதற்கும் தடை விதிக்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) விதிகளை மீறும் பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதில்
அமெரிக்கா ஒரு "முன்னோடியாக" இருந்து வருகிறது, ஒரு நாடு, ஒரு நிறுவனம்,
ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபருக்கு மட்டுமல்ல, அமெரிக்க தடைசெய்யப்பட்ட நிறுவனத்துடன்
தொடர்புகொள்வதன் மூலம் அமெரிக்க தடைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் தடை விதிக்கிறது.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள், குறிப்பாக எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி ஏற்றுமதியாளர்கள்,
இந்த ஆயுதத்தை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், ஆனால் இஸ்ரேலின் கண்மூடித்தனமான
ஆதரவாளரான அமெரிக்காவை அவர்கள் குழப்பிவிடக்கூடாது என்பதற்காக, ஒன்றிணைந்து அதைப் பயன்படுத்த
பயப்படுகிறார்கள். 1973 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் மறைந்த மன்னர் பைசல் விதித்த
வரையறுக்கப்பட்ட தடையையும், அது அமெரிக்காவில் ஏற்படுத்திய பீதியையாவது அரேபியர்களும்
முஸ்லிம்களும் நினைவில் கொள்வது நல்லது.
"பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும்
துயரமான சம்பவத்தை நாம் காண்கிறோம். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் செய்தது காஸாவில் வாழும்
அனைவராலும் இழைக்கப்பட்ட குற்றம், அவர்கள் அனைவரும் பொறுப்பு" என்று காஸா மீதான
கொடூரமான இஸ்ரேலிய தாக்குதலை — போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்
— ஒரு இஸ்ரேலிய அதிகாரி நியாயப்படுத்தினார். ஏன்? ஏனெனில் அவர்கள் தங்கள் தலைவர்களை தூக்கி
எறிந்திருக்கலாம். அப்படியானால்,
இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிராக செய்ததற்கும் செய்யக்கூடியவற்றுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரேலியர்கள்
மற்றும் அமெரிக்கர்கள் பொறுப்பாளிகளா?
இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகளின் வெறியாட்டங்கள் தொடர்கிறது. அமெரிக்க விமானங்கள்
மற்றும் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை
செய்கிறது. இதனையிட்டு உலகம் அமெரிக்காவை எப்படிப் பார்த்திருக்க வேண்டும்? சமாதானப்பிரியர்களாகவா..?
பேராசிரியர்
ஹொசைன் அஸ்கரி ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்
வணிகம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான எமெரிட்டஸ் பேராசிரியர் ஆவார்.
https://en.mehrnews.com/news/207710/America-descends-into-the-cesspool-of-history
தமிழில்: தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment