Monday, July 3, 2023

ஈரான்-எகிப்து நல்லுறவு சியோனிச-அமெரிக்க தீய அச்சுக்கு மற்றொரு பேரிடி

 Iran-Egypt detente would signify another blow to Zionist-US axis of evil


இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், சமாதானம் ஏற்படவேண்டும், பிணக்குகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும், முஸ்லிம்கள் மத்தியில் சகோரத்துவம் ஒங்க வேண்டும் என்று இஸ்லாமிய புரட்சி வெற்றியின் பின் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்த ஈரான் இஸ்லாமிய குடியரசு, அதன் முயற்சியில் வெற்றிபெற்று வருவதாகவே தோன்றுகிறது.

சவூதி அரேபியாவுடனான உறவை அடுத்து பல முஸ்லிம் நாடுகள் ஈரான் நீட்டிய நேசக்கரத்தை பற்றத்தொடங்கி உள்ளன. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இது இப்போதே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான உறவு இறுக்கமடைய இறுக்கமடைய நிச்சயமாக இஸ்லாமிய உலகின் சக்தி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

சுமார் நாற்பது வருடங்களாக பகைமைப்பாராட்டி வந்தது மட்டுமல்லாமல் எப்போதுமே இஸ்லாமிய புரட்சியின் எதிரிகளின் பக்கம் நின்ற எகிப்தும் இப்போது ஈரான் பக்கம் நெருங்கி வருவதைக் காண சந்தோசமாக இருக்கிறது.

ஈரான்-எகிப்து உறவு கடந்த நான்கு தசாப்தங்களாக எவ்வாறு இருந்தது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்:


By Xavier Villar

சமீபத்திய மாதங்களில், ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையேயான இராஜதந்திர உறவுகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசு மற்றும் எகிப்து இடையே இதேபோன்ற நல்லுறவு ஏற்படக்கூடிய வாய்ப்பு பற்றி மத்தியகிழக்கு அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த இராஜதந்திர நல்லிணக்கம் நிறைவேறுமானால், இரு பெரும் முஸ்லிம் நாடுகளுக்கிடையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டிருந்த உறவுகளின் முடிவைக் குறிக்கும்.

தெஹ்ரானுக்கும் கெய்ரோவுக்கும் இடையிலான உறவுகள் வரலாறு முழுவதும் மேடு பள்ளங்களைக் கண்டுள்ளன. 1952 இல், மன்னர் ஃபாரூக்கின் முடியாட்சியை அகற்றிய புரட்சியைத் தொடர்ந்து, எகிப்திய ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸர் சோவியத் யூனியனுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். நாஸரின் இந்த முடிவு அமெரிக்கா மற்றும் சியோனிச நிறுவனத்துடன் நெருக்கமான அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணிய ஈரானிய பஹ்லவி முடியாட்சியால் அச்சுறுத்தலாக உணரப்பட்டது, இதன் விளைவாக, கெய்ரோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1960 இல் துண்டிக்கப்பட்டன மற்றும் நாஸர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1970 வரை மீட்டெடுக்கப்படவில்லை.

1970 இல் அன்வர் சதாத் ஆட்சிக்கு வந்து, இன்பிதா எனப்படும் அவரது நவதாராளவாதக் கொள்கையை அமல்படுத்தினார், அதன் பிறகு எகிப்துக்கும் பஹ்லவி ஈரானுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை எட்டியது.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்கு முன்னர், 1970 களில், இரு நாடுகளும் ஒரே மாதிரியான அரசியல் கொள்கையை பகிர்ந்து கொண்டன, அவை பரந்த வகையில், "மேற்கத்திய நவீனத்துவம்" என்ற கருத்தாக்கத்தால் நிறுவப்பட்ட கட்டமைப்பைப் பின்பற்றின எனலாம்.

இந்த கருத்தாக்கமானது உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தும், ஒரு சித்தாந்தமாக கூறப்படும் மேற்கின் மேன்மையைச் சுற்றி சுழல்வதாக இருந்தது.

இந்திய வரலாற்றாசிரியர் திபேஷ் சக்ரபர்த்தி , "ஐரோப்பாவின் அறிவார்ந்த மற்றும் இறையியல் மரபுகளின் வேர்களைக் கண்டறியக்கூடிய சில பிரிவுகள் மற்றும் கருத்துகளைத் தூண்டாமல் இந்த அரசியல் நவீனத்துவத்தை உருவாக்க முடியாது," என்று கூறுகிறார்.

Dipesh Chakrabarty

மேற்கத்திய நவீனத்துவத்தின் விளக்கத்தை புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத ஒன்று மதச்சார்பின்மை, இது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இஸ்லாத்தின் ஒழுங்குமுறை என புரிந்து கொள்ளப்படுகிறது.

ஈரானில் பஹ்லவி ஆட்சியின் கீழ், மதச்சார்பின்மை என்பது "இஸ்லாம் வேறு அரசியல் வேறு" என்பதன்  மூலம் வெளிப்படுத்தப்பட்டது. மறுபுறம், எகிப்தில், இஸ்லாமிய குழுக்களிடமிருந்து, குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவத்தில் இருந்து வரும் விமர்சனங்களை கையாள்வதற்காக அதிகாரிகளின் தேவைகளுக்கேற்ப இஸ்லாம் பயன்படுத்தப்பட்டது.

புவிசார் அரசியல் அடிப்படையில், 1978 இல் அன்வர் சதாத் அரசாங்கத்தால் சியோனிச அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கியது மற்றும் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் அது கையெழுத்திட்டதில் அவர்களது இந்த பகிரப்பட்ட பார்வை செயல்பட்டது.

ஈரானின் கண்ணோட்டத்தில், அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் அடையப்பட்ட இந்த ஒப்பந்தம், பல ஆண்டுகளாக சியோனிஸ்டுகளுடன் ஒத்துழைத்து வந்த பஹ்லவி வம்சத்தின் மேற்கத்திய சார்பு கொள்கைக்கு ஆதரவான ஒன்றாக கருதப்பட்டது.

1957 இல் சிஐஏ மற்றும் மொசாட்டின் உதவியுடன் SAVAK எனப்படும் ஈரானிய உளவுத்துறை சேவைகளை நிறுவியதானது இந்த ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க உதாரணம்.

கெய்ரோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இந்த அரசியல்-சித்தாந்த தொடர்பு 1979 இல் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பிறகு, முகமது ரேசா பஹ்லவியின் நாடுகடத்தல் மற்றும் இமாம் கொமெய்னி தலைமையில் இஸ்லாமிய குடியரசை நிறுவுதல் ஆகியவற்றுடன் தீவிர மாற்றத்திற்கு உட்பட்டது.

எகிப்து 1980 இல் இஸ்லாமிய குடியரசுடனான உறவுகளை துண்டிக்க முடிவுசெய்து, அதிகாரப்பூர்வமாக இந்த முறிவை நடைமுறைப்படுத்தியது. அந்த ஆண்டு மார்ச் மாதம், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷாவிற்கு சதாத் அரசாங்கம் புகலிடம் அளித்தது. எகிப்தின் இந்த சைகை பல தசாப்தங்களாக ஷாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடி கடும் பாதிப்பிற்கு உள்ளான ஈரானிய தேசத்திற்கு இது ஒரு அவமானமாக கருதப்பட்டது. ஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இறந்துவிடுகிறார்.

எகிப்து பாலஸ்தீனியர்களுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டி, கேம்ப் டேவிட் உடன்படிக்கையை இமாம் கொமெய்னி நிராகரித்தார். இந்த பிரச்சினை தொடர்பாக, 1964 ஆம் ஆண்டிலேயே, பஹ்லவி வம்சத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை கடுமையாக விமர்சித்து பகிரங்கமாக உரை ஆற்றிய இமாம் கொமேனி ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ரோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான விரிசல் 1980 களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. 1980 செப்டம்பரில் ஈராக் மற்றும் ஈரானுக்கு இடையே போர் வெடித்தபோது, சதாம் ஹுசைனின் படைகள் ஈரானியப் பகுதியை ஆக்கிரமித்ததில் தொடங்கிய போர், பெரும்பாலான அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளைப் போலவே எகிப்தும் ஈராக்கை ஆதரித்தது.

1981 இல் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்தில், ஈராக் சர்வாதிகாரிக்க்கு வழங்கப்பட்ட இந்த ஆதரவு எட்டு ஆண்டுகாலப் போர் முழுவதும் தொடர்ந்தது.

1991 ஆம் ஆண்டு, அலி அக்பர் ஹாஷிமி ரஃப்சஞ்சனி ஜனாதிபதியாக இருந்தபோது, இரு நாடுகளும் தங்கள் உறவுகளை மீண்டும் தொடங்கின. அந்த உறவு வரையறுக்கப்பட்ட முறையில் வர்த்தக பரிமாற்றங்களில் முதன்மையாக கவனம் செலுத்தியது. என்றாலும் தூதரகங்கள் திறக்கப்படவில்லை.

தெஹ்ரானுக்கும் கெய்ரோவுக்கும் இடையிலான உறவுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து மேம்பட்டன. உதாரணமாக, 2001 இல், ஜனாதிபதி முபாரக் மற்றும் ஈரானின் வெளியுறவு மந்திரி கமல் கர்ராஸிக்கு இடையே ஒரு சந்திப்பு நடந்தது, இதை 1979 க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட சந்திப்பு என குறிப்பிடலாம்.

Kamal Kharrazi
2006 மற்றும் 2008 க்கு இடையில், ஈரானிய நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் குலாம் அலி ஹத்தாத் ஆதெல் உட்பட, மூத்த ஈரானிய அதிகாரிகள் எகிப்துக்கு பல முறை விஜயம் செய்தனர்.

2008 இல், ஈரான் எகிப்துக்கு இராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்த அதன் விருப்பத்தைத் தெரிவித்து, கெய்ரோ அதன் தூதரகத்தை தெஹ்ரானில் அமைக்க ஒப்புக்கொண்டால், ஈரான் அதன் தூதரகத்தை கெய்ரோவில் மீண்டும் திறப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், அந்த நேரத்தில், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி முபாரக் இதை நிராகரித்தா, ஈரானின் அணுசக்தி திட்டம் உறவுகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஈரானிய அதிகாரிகள் 2011 ஆம் ஆண்டு எகிப்தியப் புரட்சியை சாதகமாகக் கருதினர், இதன் விளைவாக ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டது, தேர்தல்கள் நடத்தப்பட்டது மற்றும் மொஹமட் முர்சியின் வெற்றி, இராஜதந்திர உறவுகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

முஹம்மது முர்சி தலைமையிலான முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்தது எனலாம்.

2012 இல் முர்ஸியின் தெஹ்ரான் விஜயத்துடன் இந்த முன்னேற்றங்கள் உச்சத்தை எட்டின, இது 1979 க்குப் பிறகு எகிப்திய ஜனாதிபதியின் ஈரானுக்கான முதல் விஜயத்தைக் குறிக்கிறது.

இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முழு இயல்புநிலை அடையப்படவில்லை. எகிப்திய அரசாங்கம் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்கும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கும் சுதந்திரம் அற்றதாக இருந்ததே இதற்குக் காரணம் என்று பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எகிப்து நாட்டில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்த சவூதி அரேபியா ஈரான்-எகிப்து உறவுகளுக்கு ஒரு பெரும் தடையாக இருந்தது.

2013 இன் நிகழ்வுகள், முகமது முர்ஸி பதவிகவிழ்ப்பு, அப்தெல் பத்தா எல்-சிசி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்ததன் பின்னர், இரு நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அரசியல் கண்ணோட்டத்தில், இஸ்லாமிய குடியரசு டாக்டர் முர்ஸிக்கு எதிரான இராணுவ சதியை வன்மையாகக் கண்டித்தது. ஆகஸ்ட் 2013 இல் எகிப்திய இராணுவம் நடத்திய படுகொலையையும் தெஹ்ரான் வன்மையாகக் கண்டனம் செய்தது, இந்த ராணுவ வன்முறையில் 1,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஈரான் அதன் அரசியல் கொள்கைகளை கடைபிடிக்கும் போது நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கொள்கைகள், வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், நான்கு புள்ளிகளாக தொகுக்கப்படலாம்:

1. பிணக்குகளை உரையாடல் மற்றும் இராஜதந்திர தீர்வுகளை ஊக்குவிக்கும் பிராந்திய நிறுவன சேனல்களை நிறுவுதல்.

2. பிராந்திய நோக்கங்களின் கூட்டு வடிவமைப்பு.

3. பிராந்திய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்.

4. பிராந்தியத்தில் வெளிநாட்டு இராணுவ இருப்பைக் குறைத்தல்.

இந்த அரசியல் கோட்பாடுகள் இஸ்லாமியக் குடியரசு அதன் ஸ்தாபனத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட கொள்கைக்கு அடிகோலுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்லாமிய குடியரசு பிராந்தியத்தில் வெளிப்பிராந்திய மேலாதிக்க எதிர்ப்பை நிலைநிறுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஈரான் மற்றும் எகிப்து இடையேயான உறவுகளில் தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதை இஸ்லாமிய குடியரசு மற்றும் சவுதி அரேபியா இடையேயான சமீபத்திய இராஜதந்திர இயல்பு நிலையை கருத்தில் கொண்டே பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக, ஈரானியர்களுடனான நேரடி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எகிப்திய அதிகாரிகள் மீது சவுதி பிரயோகித்த அழுத்தம் குறைந்ததே இதற்கு காரணம் எனலாம்.

இந்த ஆண்டு மே மாதம், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செயத் அலி காமனெய், தெஹ்ரானில் ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனான சந்திப்பின் போது எகிப்துடனான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.

எகிப்துடனான உறவுகளின் மறுசீரமைப்பு மற்றும் இயல்பாக்கம் என்பது இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்தும் சியோனிச-அமெரிக்க கூட்டு மூலோபாயத்தின் புதிய தோல்வியைக் குறிக்கும்.

மேலும், இது இஸ்லாமிய குடியரசின் பிராந்திய மூலோபாயத்தை முன்னிலைப்படுத்துகிறது, இது அமெரிக்கா மற்றும் சியோனிஸ நிறுவனம் போன்ற வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஸ்திரமின்மையிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

கடைசியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பூரணமாக மீட்டெடுப்பது, எகிப்து முடிவுகளை எடுப்பதற்கு எந்தளவு சுதந்திரத்தை கொண்டுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. இலேசான ஒன்றாக தெரியவில்லை.

எவ்வாறாயினும், எகிப்தின் அரசியல் மற்றும் மூலோபாய கூட்டணிகளின் அடிப்படையில், நிலுவையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள எகிப்தின் விருப்பம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை செயல்முறையின் இறுதி முடிவை முன்கூட்டியே கணிப்பது கஷ்டமாக இருக்கும்.


 Xavier Villar
 is a Ph.D. in Islamic Studies and researcher who divides his time between Spain and Iran.

https://www.presstv.ir/Detail/2023/06/26/705955/Iran-Egypt-Detente-Would-Signify-Another-Blow-Zionist-US-Axis-Evil

 

No comments:

Post a Comment