Iran is playing important role in unifying Latin America, West Asia: Journalist
By Syed Zafar Mehdi
லத்தீன்
அமெரிக்காவையும் மேற்கு ஆசியாவையும் ஒன்றிணைக்க உதவுவதன் மூலம், வளர்ச்சிக்காக
அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய உலகளாவிய தெற்கு முகாமை உருவாக்குவதில் ஈரான் முக்கிய
பங்கு வகிக்கிறது, என்று லத்தீன் அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் ஆய்வாளர்
கூறுகின்றார்.
நிகரகுவாவை
தளமாகக் கொண்ட பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான பென் நார்டன், பிரஸ் டிவி
இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில், லத்தீன் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பல
நாடுகள் "பொதுவான வளர்ச்சி இலக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றன" என்றும்
"மேற்கத்திய காலனித்துவ சக்திகளின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒத்த
வடிவங்களை எதிர்கொள்கின்றன" என்றும் கூறினார்.
ஈரான் ஜனாதிபதி
இப்ராஹிம் ரயீஸி, உயர்மட்ட அரசாங்கக் குழுவுடன், தனது மூன்று
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில் கியூபாவைத்
வந்தடைந்தபோது, "ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளவும், ஒற்றுமையை
வலுப்படுத்தவும் முடியும்" என்று கூறினார்.
"பல நூற்றாண்டுகளாக, மேற்கத்திய
காலனித்துவ நாடுகள் உலகளாவிய தெற்கின் வளங்களைப் கொள்ளையடிப்பதற்கு அதன் செல்வத்தை
சுரண்டுவதற்கும் பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்த முயற்சித்தன. இந்த புதிய
காலனித்துவ சுரண்டலில் இருந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளவும்
விடுவித்துக்கொள்ளவும் தெற்கின் நாடுகள் விரும்பினால், அவர்கள்
ஒன்றிணைந்து, புதிய கூட்டணிகள் மற்றும் வர்த்தகக் அமைப்புகளை ஸ்தாபித்து, தங்கள் சொந்த
நிறுவனங்களை உருவாக்க வேண்டும்,” என்று நார்டன் கூறினார்.
ஜனாதிபதி ரயீஸி
கடந்த வாரம் கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனலைச் சந்தித்த போது மின்சார உற்பத்தி, உயிரித்
தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்
என்றார்.
"கியூபாவும் ஈரானும் இன்று ஒரே மாதிரியான நிலைமைகள் மற்றும்
சூழ்நிலைகள் மற்றும் பல பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன, என்றாலும் எங்கள்
உறவுகள் ஒவ்வொரு நாளும் வலுவடைகின்றன"
என்று ரயீஸி குறிப்பிட்டார்.
கியூபாவிற்கு
செல்வதற்கு முன்னதாக, ஜனாதிபதி ரயீஸி அமெரிக்காவால் பொருளாதாரத் தடைகளுக்கு
முகம்கொடுத்துள்ள வெனிசுலா மற்றும் நிகரகுவா நாடுகளுக்கு விஜயம் செய்தார்.
"வெனிசுலா, நிகரகுவா, கியூபா மற்றும்
ஈரான் ஆகியவை யங்க்கி (அமெரிக்க) ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின்
தடைகள், மற்றும் குறுக்கீடுகளை ஒரு உறுதியான எதிர்ப்பைக் காட்டி, வீரத்துடன்
எதிர்கொள்ளும் நாடுகளாக உள்ளன" என்று கியூபா ஜனாதிபதி டயஸ்-கேனல் ஹவானாவில்
தனது ஈரானியப் பிரதிநிதியிடம் கூறினார்.
இவ்விடயங்களை
சம்பந்தப்படுத்தி ஊடகவியலாளர் நார்டன், பிரஸ் டிவி இணையதளத்தில் பேசுகையில், "உலகளாவிய
மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் மற்றும் உலகளாவிய மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடுகள் மீது அமெரிக்கா "சட்டவிரோத ஒருதலைப்பட்ச தடைகளை"
விதித்துள்ளது" என்றார்.
"இது, முரண்பாடாக, அமெரிக்க டாலரின்
மேலாதிக்கம் மற்றும் வாஷிங்டனின் மேலாதிக்க உலக நிதி அமைப்புக்கு எதிராக ஒரு
சர்வதேச கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் வலியுறுத்தினார்.
தடைகளுக்கு உள்ளாகியுள்ள நாடுகள், "SWIFT அமைப்பு, உலக வங்கி மற்றும்
சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு சவால் விடும் புதிய மாற்று நிறுவனங்கள்
உருவாகி வருகின்றன" என்று அவர் கூறினார்.
"அமெரிக்க பொருளாதாரத் தடைகள் தீவிர மனித அவலங்களை
ஏற்படுத்தியுள்ளன, வெனிசுலா, ஈரான், கியூபா, சிரியா, ஜிம்பாப்வே, ஈராக் மற்றும் வட
கொரியா போன்ற நாடுகளில் நூறாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது, அவர்களின்
பொருளாதாரங்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது," என்று நார்டன்
கூறினார், ஏனைய நாடுகளை அடிமையாக்கும் வாஷிங்டனின் அதிகார வெறி, உலகெங்கிலும் அது
நடத்தும் பொருளாதாரப் போர் அதன் சொந்த மேலாதிக்கத்தின் புதைகுழியைத்
தோண்டியுள்ளது."
ஜனாதிபதி
ரயீஸியின் முக்கியத்துவம் வாய்ந்த லத்தீன் அமெரிக்க விஜயம், அமெரிக்க
அதிகாரிகள் உட்பட, உலகம் முழுவதும் பரவலான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது.
இதனையிட்டு அமெரிக்கா தனது தீவிர அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நிகரகுவாவை
தளமாகக் கொண்ட ஆய்வாளர், "வட அமெரிக்கர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைப் பற்றி
கவலைப்படுவது நல்லது" என்றும், இது "உலகம் முழுவதும் போர்களை உருவாக்கி, டிரில்லியன்
கணக்கான டாலர்களை உயிர்களைக் கொல்வதற்காகவும் மற்றும் அழிவுக்காகவும்
செலவழிக்கிறது" அதேநேரம் உள்நாட்டில் சுகாதாரத்தை மலிவாக வழங்க
முடியாதுள்ளது.
"உலகெங்கிலும் உள்ள சுதந்திர அரசாங்கங்களை நிலைகுலையச் செய்வதற்கும் கவிழ்ப்பதற்கும் இரகசிய நடவடிக்கைகளுக்காக தங்கள் சொந்த அரசாங்கம் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிப்பதைப் பற்றி வட அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டும், அதே நேரத்தில் அமெரிக்காவில் வீடற்ற தன்மை ஒவ்வொரு ஆண்டும் மோசமாகிறது, அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெருக்களில் வாழ்கின்றனர்,” நார்டன் பிரஸ் டிவி இணையதளத்திடம் கூறினார்.
U.S. Los Angeles Homeless People Living in the Street
அமெரிக்கா பல
தசாப்தங்களாக "எண்ணற்ற ஈரானிய குடிமக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து
அழித்தது" என்றும், ஈரானிய இராஜதந்திரத்தைப் பற்றி புகார் செய்வதற்குப் பதிலாக
"தனது சொந்த இராஜதந்திரத்தை ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும் மற்றும்
ஈரான் மற்றும் பிற நாடுகள் மீதான அதன் போர்களை முடிவுக்குக் கொண்டுவர
வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஒற்றைத்துருவ
முறையில் இருந்து பலதுருவ ஒழுங்கிற்கு உலகம் விரைவாக மாறிவருகிறது. அமெரிக்கா
தலைமையிலான ஒருமுனை உலக ஒழுங்கு முடிந்துவிட்டது என்ற யதார்த்தத்தை வாஷிங்டன் ஏற்க
மறுக்கிறது என்று நார்டன் கூறினார்.
"பெருகிய முறையில் பலமுனை உலகில் அதன் மேலாதிக்கத்தைப்
பற்றிக்கொள்ளும் முயற்சியில், சீனா, ரஷ்யா மற்றும்
ஈரான் ஆகிய யூரேசிய சக்திகளுக்கு எதிராக வாஷிங்டன் அதன் ஆக்கிரமிப்பை
விரைவுபடுத்தியுள்ளது, அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்காவிலும் அதன் ஜனநாயக
விரோத தலையீடுகளை விரிவுபடுத்துகிறது," என்று அவர்
குறிப்பிட்டார்.
"கடந்த இரண்டு தசாப்தங்களில், பொலிவியா, பெரு, வெனிசுலா, நிகரகுவா, கியூபா, ஹோண்டுராஸ், பிரேசில், மெக்சிகோ, ஈக்வடார் மற்றும்
பராகுவே ஆகிய நாடுகளில் உள்ள இடதுசாரி அரசாங்கங்களைக் குறிவைத்து, இப்பகுதியில்
ஏராளமான ஆட்சிக்கவிழ்ப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் ஸ்திரமின்மை
நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியுள்ளது."
இந்த ஆண்டு (2023) காலனித்துவ
"மன்ரோ கோட்பாட்டின்" 200 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும், வலதுசாரி அமெரிக்க
அரசியல்வாதிகள் "லத்தீன் அமெரிக்காவில் தலையிடுவதை நியாயப்படுத்த இந்த
அசிங்கமான கோட்பாட்டை இன்னும் பின்பற்றுகிறார்கள்," என்றும் அவர் கூறினார். ("மன்ரோ கோட்பாடு: 1823 இல் ஜனாதிபதி
ஜேம்ஸ் மன்ரோவால் உருவாக்கப்பட்ட அமெரிக்கக் கொள்கையின் ஒரு கொள்கை, அமெரிக்காவின்
அரசியலில் வெளி சக்திகளின் எந்தவொரு தலையீடும் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு
விரோதமான செயலாகும்.)
"அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வால் ஸ்ட்ரீட் (Wall street) முதலாளித்துவ
நலன்களால் இயக்கப்படுகிறது" என்பதால் அமெரிக்கப் பேரரசு, "லத்தீன் அமெரிக்காவில் உள்ள புரட்சிகர இடதுசாரி
இயக்கங்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை எப்போதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த
முயல்கிறது" என்று நார்டன் குறிப்பிட்டார்,
“அமெரிக்க அரசு முறை நிச்சயமாக ஜனநாயகம் அல்ல; இது பில்லியனர்
தன்னலக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பில்லியனர்களின் நலக்காக்கும்
அமைப்பாகும், அதன் பெருநிறுவனங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்களை
கட்டுப்படுத்தவும் அதன் மக்களை மலிவு உழைப்புக்கு சுரண்டவும் விரும்புகின்றன," என்று அவர் குறிப்பிட்டார், இந்த அமைப்பு
"உண்மையான மக்கள் ஜனநாயகம்" மூலம் மாற்றப்பட வேண்டும் என்று
குறிப்பிட்டார்.
"அதனால்தான் துல்லியமாக லத்தீன் அமெரிக்காவிற்குள் பிராந்திய
ஒற்றுமை மற்றும் உலகளாவிய தெற்கின் பிற பகுதிகளுடன் சர்வதேச ஒற்றுமை மிகவும்
முக்கியமானது, ஏனெனில் இந்த நாடுகள் ஒன்றுபட்டால், அவை ஏகாதிபத்திய
ஆக்கிரமிப்பிற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்."
No comments:
Post a Comment