Sunday, April 16, 2023

கொடுங்கோல் சியோனிச ஆட்சி அழிவில் முடிவடையும்

The tyrannical Zionist regime will end in destruction

Forum for Justice and Peace அமைப்பினால் ஏப்ரல் 12, 2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச குத்ஸ் தின மாநாட்டில் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதுவர் ஹாஷெம் அஸ்ஜாசாதே ஆற்றிய உரையின் தமிழாக்கம்.


சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் பெயரால்....

இஸ்லாத்தின் மகத்துவமிக்க மாநபி இவ்வாறு கூறுகின்றார்:

مَن سَمِعَ رَجُلا یُنادی یا لَلمسلمین فَلَم یُجِبهُ فَلَیسَ بِمُسلِم

நீதி கேட்கும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்டு உதவிக்கு வராதவன் முஸ்லிம் அல்ல.

ஒரு முஸ்லிமாக நீங்கள் "குத்ஸ் இ ஷரீப்" என்ற வார்த்தையைக் கேட்டிருப்பீர்கள்; இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று ஒரு சில நாட்களிலேயே ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் புனித ரமலான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தினார். இந்த தீட்சணமிக்க நடவடிக்கை சட்ட விரோத, அடக்குமுறை சியோனிச ஆட்சிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அல்-குத்ஸ் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுடனான எமது ஒருமைப்பாட்டின் அவசியம் பற்றியும் மிக முக்கியமான உலகளாவிய நெருக்கடி பற்றி உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் நினைவூட்டும் நாளாக சர்வதேச குத்ஸ் தினம் அமைந்தது. எனவே, குத்ஸ் தினம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் அடக்குமுறையை எதிர்த்துப் போராட உறுதிபூண்டுள்ள அனைவரின் ஒற்றுமைக்கான களமாகவும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனம் 75 ஆண்டுகளாக இஸ்ரேலின் பயங்கரவாத ஆட்சியின் ஆக்கிரமிப்பில் உள்ளது, ஆனால் இன்று முஸ்லிம்களுக்கும் உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான ஒருமைப்பாட்டின் தேவை முன்பை விட அதிகமாக உணரப்படுகிறது, மேலும் சியோனிசம் எனும் இந்த புற்றுநோய் கட்டியை மற்றும் தீங்கிழைக்கும் ஆட்சியை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது; அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.  இது உலகின் சுதந்திர வேற்க்கைக்கொண்ட அனைத்து மக்களினதும் கடமையாகும்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக பாலஸ்தீனிய பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சியோனிச ஆட்சி, இந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியான அத்துமீறல்கள் மற்றும் குற்றங்களைச் செய்து வருகிறது. சியோனிச நிறவெறி ஆட்சியின் மனித விரோத நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் மறுக்க முடியாத கோட்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுகின்றன.

சியோனிசக் குடியேற்றங்களின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களைக் கொன்று வெளியேற்றுவது, அனைத்து மதத்தினருக்கும் புனிதமான இடமாக அல்-அக்ஸா மசூதியை இழிவுபடுத்துதல் மற்றும் படுகொலை செய்தல், காசா பகுதி முற்றுகை, கோலன் நிலங்களை இணைத்தல், மேலும் கடந்த 22 ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டது இந்தக் குற்றங்களின் ஒரு பகுதி மட்டுமே.

சமீபத்திய நாட்களில், அல்-அக்ஸா மசூதியில் நோன்பாளிகளுக்கு எதிராக இந்த ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் குற்றங்கள், அதன் வழக்கமான ஆதரவாளர்களின் கண்டனங்களை கூட எதிர்கொண்டன; இந்த குற்றச் செயல்களின் வெளியிடப்பட்ட படங்கள் இதயத்தைப் பிழிவது போல் உள்ளன மற்றும் அவை சுதந்திரத்தைத் தேடும் ஒவ்வொரு நபரின் மனதையும் நிச்சயமாக புண்படுத்தும்.

சியோனிச ஆட்சியின் மிருகத்தத்திற்கு எல்லைகள் என்பதே கிடையாது. இந்த ஆட்சி பயங்கரவாத அரசாக மாறி, உலகெங்கிலும் உள்ள தனது எதிரிகளை படுகொலை செய்ய முயற்சிக்கிறது. இந்த நாசகார ஆட்சி ஈரானிய விஞ்ஞானிகள் கொல்லப்படுவதில் நேரடி பங்கை வகித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சியோனிச ஆட்சியின் குற்றங்களை விசாரிக்கும் போது, இரண்டு முக்கியமான காரணிகளை புறக்கணிக்க முடியாது, அவற்றின் குற்றங்கள் இந்த குழந்தை-கொலைகார ஆட்சியின் குற்றங்களை விட குறைவானதல்ல. முதலாவதாக, சியோனிச ஆட்சிக்கு அரசியல், பொருளாதாரம், ராணுவம் என முழு ஆதரவை அளித்து, இந்த ஆட்சியின் குற்றங்களில் முக்கியப் பங்காற்றிய சில நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவைக் குறிப்பிட வேண்டும். அநீதியான "நூற்றாண்டின் ஒப்பந்தம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோடியாக ஜெருசலேமுக்கு தனது தூதரகத்தை மாற்றுவதில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அவமானகரமானது, அபகரிக்கும்/ஆக்கிரமிக்கும் சட்டவிரோத சியோனிச ஆட்சியினது மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு முதன்மையானதாகக் கருதப்படுகிறது

அடுத்தது, அநீதிக்கு துணைபோகும் ஊடகங்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் நாம் புறக்கணிக்க முடியாது, ஊடகங்களின் இரட்டை நிலை அணுகுமுறைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சியோனிஸவாதிகள் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் இருக்கும் ஊடகங்கள் உலகின் பிற பகுதிகளில் நிலவும் மிகச்சிறிய பிரச்சினைகளை பூதாகாரமாக்கும் அதேவேளை சியோனிச ஆட்சியின் மிகக் கொடூரமான செயல்களுக்கு முற்றிலும் பாராமுகமாக இருக்கின்றன.  ஆனால்  அரசியல் கண்ணோட்டம் எதுவாக இருந்தாலும் உண்மைகளை மட்டும் வெளியிட வேண்டிய ஊடகங்கள் இந்த பயங்கரவாத ஆட்சிக்கு உடந்தையாக இருந்து அதனது குற்றங்களை மூடி மறைத்து வருகின்றன.

இந்த இரட்டை நிலை அணுகுமுறை ஊடகங்களால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை, துரதிர்ஷ்டவசமாக, பல நாடுகளும் கூட இப்போது சியோனிச ஆட்சிக்கு அதன் குற்றங்களைத் தொடர உதவுகின்றன. இது மறுக்க முடியாத சர்வதேச மனித உரிமைகளைப் புறக்கணிப்பதாகும்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது முதல் அது உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எப்போதும் இருந்து வருகிறது. ISIS க்கு எதிராக ஈராக் மற்றும் சிரியா மக்களுக்கும், உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்திற்கும் நாங்கள் அளித்த ஆதரவு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இந்த அடிப்படைக் கொள்கையை விளக்குகிறது. அதேநேரம் பாலஸ்தீனம் ஒரு விசேட இடத்தைப் பெற்றுள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு பாலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமிய உலகின் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது மற்றும் இந்த மனிதாபிமானமற்ற சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுவதற்கு மதம் மற்றும் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் முஸ்லிம்கள் மற்றும் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட அனைவரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்தப் பிராந்தியத்தில் உண்மையான அமைதி மற்றும் முழுமையான ஸ்திரத்தன்மையை திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி, இந்த ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு  முற்றுப்புள்ளி வைப்பதும், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களின் மதம் மற்றும் இனம் வித்தியாசமின்றி அவர்களது சொந்த நிலங்களுக்குத் திரும்புவதும், இந்த நிலத்தில் உள்ள அனைத்து உண்மையான குடியிருப்பாளர்களின் பங்கேற்புடன் பொதுவாக்கெடுப்பு நடத்துவதும் மட்டுமே ஒரே வழி என்று ஈரான் கருதுகிறது.

இந்நிலையில், அல்-அக்ஸா பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தில் சியோனிச ஆட்சியின் அண்மைக்கால குற்றங்களை கண்டிக்கும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் கௌரவ அலி சப்ரி ஆகியோர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது அவசியம் என கருதுகிறேன். நிச்சயமாக, உங்களுக்குத் தெரியும், இந்த நடவடிக்கைகள் இந்த விடயத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர் நேரடியாகப் பேசியது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் நீதியின் மையத்தை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சியோனிச கொள்கைகளில் உருவான  ஆட்சியை ஆளும் கட்டமைப்பையும், எதிர்ப்பைத் தவிர இந்த முட்டுக்கட்டையிலிருந்து வெளியேற வழி இல்லை என்பதை நிரூபித்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களுடன் செய்யப்பட்ட எண்ணற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இந்த கொடூரமான ஆட்சிக்கு எதிராக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கொள்கை துல்லியம் மற்றும் நியாயத்தன்மையை இது நிரூபிக்கிறது. இந்த ஆட்சியை சமாளிக்க எதிர்ப்பைத் தவிர வேறு வழியில்லை என்பதும் தெளிவு. எனவே, இந்த ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்கிய நாடுகள் விரைவில் வருந்தும், உண்மையில், சியோனிச ஆட்சியும் அதன் முடிவில்லாத விரிவாக்கக் கொள்கைகளால் வருத்தப்படும்.

و سَیعلَمُ الّذینَ ظَلَموا أَی مَنقَلَبٍ ینقَلِبونَ

மேலும் அடக்குமுறையாளர்கள் என்ன தண்டனைக்குத் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள்”, இறைவனின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் அடக்குமுறை என்றும் நிலைக்காது என்றும் ஆக்கிரமிப்பு மற்றும் கொடுங்கோல் சியோனிச ஆட்சி அழிவில் முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

====================

சட்டத்தரணி மர்ஸூக் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்டத்தரணி டீ. கே. அஸூர், விஜித மொரகஸ்வெவ தேரர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர ஆகியோரும் சிறப்புரை வழங்கினர். 


No comments:

Post a Comment