Thursday, December 8, 2022

கிழக்கின் எழுச்சி: கற்பனையா அல்லது நிஜமா...?

 The rise of the East; claim or fact?

Ruholamin Saeidi, Assistant Professor at Imam Sadiq Univ.

ஆக்கம்: ரூஹல் அமீன் ஸஈதி, உதவிப் பேராசிரியர், இமாம் சாதிக் பல்கலைக்கழகம்

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய், சமீபத்தில் மாணவர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் உரையை நிகழ்த்துகையில் மேற்கில் இருந்து ஆசியாவிற்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான சக்தி மாறுவது குறித்தும் இந்த பண்டைய (ஆசிய) கண்டம் அறிவு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராணுவ சக்தி ஆகியவற்றின் உலகளாவிய மையமாக மாறிவருவது குறித்தும் பிரஸ்தாபித்தார். உலகின் பொருளாதார ஆதிக்க மையம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறுவது பற்றிய இந்தப் பேச்சு வெறும் கற்பனையா அல்லது மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் சர்வதேச உறவுகளின் ஆய்வாளர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்களா? என்பதை சற்று ஆராய்வோம்.

சர்வதேச ஒழுங்கின் எதிர்கால நிலை குறித்து உலகில் உள்ள சர்வதேச உறவுகளின் முக்கிய அறிஞர்களின் விவாதங்களின் சுருக்கமான கண்ணோட்டம், மேற்கிலிருந்து அதிகாரம் கிழக்கிற்கு படிப்படியாக மாறுகிறது என்பதற்கான ஒரு கூற்று மட்டுமல்ல அது ஒரு யதார்த்தம் என்பதை இங்கு காட்டுவது அவசியமாகும்.

இந்த கருத்து ஈரான் இஸ்லாமிய குடியரசு போன்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மேற்கத்திய அறிவியல் வட்டாரங்களில் அது ஒரு தொடர் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவரங்கள் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட,  சர்வதேச உறவுகள் துறையில் பல முக்கிய பிரமுகர்கள் இந்த பிரச்சினையின் சாரத்தை உறுதிப்படுத்தும் அளவிற்கு, கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளன,

உலகம் தற்போது அடிப்படை மாற்றம் மற்றும் மாற்றத்தின் நிலையில் இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். உலக ஒழுங்கு ஒரு முக்கியமான இடைநிலைக் காலத்தில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். அது அதன் முந்தைய இயக்கத்தின் போக்கை மாற்றியமைத்துள்ளது மற்றும் உலகில் ஏற்பட்டு வரும் விரிவான மாற்றங்கள் காரணமாக, அது ஒரு புதிய திசையில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அதிவேகமாக நகர்கிறது.

ஜோசப் நை (Joseph Nye) என்ற புகழ்பெற்ற நவதாராளவாதக் கோட்பாட்டாளரின் கூற்றுப்படி இந்த மாற்றத்தின் மிக முக்கியமான பரிமாணங்களில் ஒன்று, உலக ஒழுங்கின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமாகும், தொழிலாளர்கள் அவர்களின் திறன்களின் தரத்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட விதம் ஆகும்.

சக்தி கட்டமைப்பில் மாற்றம் இரண்டு நிலைகளில் நிகழ்கிறது: ஒன்று சக்தி மாற்றம் மற்றும் மற்றொன்று சக்தி பரவல். அதிகார மாற்றம் என்பது அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகளுடன் தொடர்புடையது. இதன் செயல்பாட்டில் உலகளாவிய சக்தி மற்றும் செல்வத்தின் மையம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு படிப்படியாக மாற்றப்படுவதையும், ஆசியாவின் முந்தைய நிலையை மீட்டெடுப்பதையும் நாம் காண்கிறோம்.

வரலாற்று ரீதியாக, தொழில்துறை புரட்சிக்கு முன்னர், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசியாவில் வாழ்ந்தனர் மற்றும் உலக தேவையில் பாதி இந்த கண்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு, 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிலைமை மாறியது. உலகளாவிய உற்பத்தியில் அதன் பங்கு ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்தது, மேலும் அதிகாரம் மற்றும் செல்வத்தின் மையம் மேற்கு நோக்கி (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) மாறிய போதிலும் உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல் இன்னும் ஆசியாவிலேயே உள்ளது. ஆகவே, 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக ஆய்வாளர்களும் நிபுணர்களும் கருதுகின்றனர். பண்டைய கண்டம் மீண்டும் எழுச்சி பெறுவதாகவும், இந்த நூற்றாண்டில் மீண்டும் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

மேற்கிலிருந்து கிழக்கிற்கு இந்த அதிகாரம் மாறுவதற்கான காரணத்தைப் பொறுத்தவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பா சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரமாண்டமான, சுதந்திரமான மற்றும் வளரும் பாத்திரத்தை வகிக்கும் திறனை நடைமுறையில் இழந்தது என்று கூறலாம். முழுமையாக அமெரிக்காவை மையப்படுத்திய ஒன்றாகவே அது இருந்தது,.

கடந்த சில தசாப்தங்களாக ஐரோப்பிய அரசாங்கங்களால் சுதந்திரமான நிலைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் அமெரிக்காவின் கனமான நிழலில் இருந்து விடுபடுவதற்கும் சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஈராக் போர் மற்றும் JCPOA பேச்சுவார்த்தைகள் போன்ற ஏமாற்றமளிக்கும் தோல்விகளுக்கு வழிவகுத்தன. எனவே, சர்வதேச உறவுகளின் அறிஞர்கள் உலகளாவிய சக்தி சமன்பாடுகளின் எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கு எந்த சிறப்பு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று பக்கங்களையும் உருவாக்கும் ஒரு முக்கோணத்தில் உலகின் தலைவிதியை அவர்கள் வரையறுக்கிறார்கள்.

தற்போதைய உலக ஒழுங்கில் அமெரிக்கா மட்டுமே வல்லரசாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரம் பலவீனமடைந்து, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற புதிய போட்டியாளர்கள் உருவாகும் வகையில் அதன் தலைமைத்துவ அதிகாரம் படிப்படியாக பரவலாக்கப்படுவதை பல ஆண்டுகளாக நாங்கள் அவதானித்து வருகின்றோம்.

இந்த நாடுகள் அமெரிக்காவின் வீழ்ச்சி நிலையை சாதகமாக்கியுள்ளன, மேலும் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் தங்களால் தீர்க்க முடியாத மோதல்கள் பலவற்றில் சிக்கியுள்ளனர். இது சம்பந்தமாக, ஜோசப் நை, மேலாதிக்கம் என்பது ஏகாதிபத்தியதிற்கு ஒத்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார், மேலும் அமெரிக்கா தற்போது உலகின் பிற பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது, என்றாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு இல்லை என்று ரிச்சர்ட் ஹாஸின் (Richard Haass) வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: "அமெரிக்கா இன்னும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், உலக அமைதியையும் செழுமையையும் அதனால் பராமரிக்க முடியவில்லை, அதை அபிவிருத்தி செய்வது ஒருபுறம் இருக்க".

இதன் அடிப்படையில், பல சர்வதேச உறவுகள் அறிஞர்கள் உலக ஒழுங்கின் தற்போதைய கட்டமைப்பை "ஒற்றை-பன்முனை" அமைப்பாகக் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், வல்லரசு எந்த சர்வதேச பிரச்சினைகளையும் தனியாக நிர்வகிக்க முடியாது, மற்ற பெரிய சக்திகளுடன் உடன்பட்டு ஒத்துழைக்க வேண்டும். வல்லரசு நாடு, குழுவின் தலைவராகவும், உயர்ந்த நிலையில் இருந்தாலும், உலகளாவிய விவகாரங்கள் மற்றும் சவால்களை நிர்வகிக்க மற்றவர்களின் ஒத்துழைப்பும் தலையீடும் தேவைப்படும் விதத்திலேயே இந்த அமைப்பு இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

1930 களின் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மிகவும் கடுமையான நிதி நெருக்கடியாகக் கருதப்படும் 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி, அமெரிக்காவின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் அடியாக அமைந்தது, ஏனெனில் இது நவதாராளவாத மாதிரியின் தோல்வியை பிரதிபலித்தது, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில். அதிகபட்ச அளவிற்கு நிதி கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

2008 ஆம் ஆண்டு அமெரிக்க மேலாதிக்க நற்பெயருக்கு அடிவிழுந்தற்கான காரணம், இந்த நிதி நெருக்கடி நோய், குறைபாடுகள் மற்றும் நவதாராளவாதத்தின் புதிய வடிவத்தின் பாதிப்புகளின் அறிகுறியாகும், இது "கேசினோ முதலாளித்துவம்" ("casino capitalism") என்று அழைக்கப்பட்டது. நிதிக் கட்டுப்பாடு நீக்கம், ஊகக் குமிழ்கள் (speculative bubbles) உருவாகவும், வளரவும், பின்னர் உலகம் முழுவதும் திடீரென வெடிக்கவும் காரணமாகிறது - இது பொருளாதார அமைப்பின் கணிக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும்.

இதன் விளைவாக, இந்தப் பெரும் நெருக்கடியானது மேற்கத்திய விழுமியங்களைப் பற்றிய சந்தேகங்களை அதிகரித்தது மற்றும் "ஆசிய மதிப்புகள்" மற்றும் சீனப் பொருளாதார மாதிரிக்கான பிற நாடுகளின், குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் ஆசைக்கு வழிவகுத்தது, எனவே, வளரும் நாடுகளின் சில பகுதிகளில், "வாஷிங்டன் ஒருமித்த கருத்தை" விட " பெய்ஜிங் ஒருமித்த கருத்து" (சீன ஆட்சி மாதிரியைப் பின்பற்றுதல் என்ற பொருளில்) மிகவும் பிரபலமானது.

இன்று, சந்தைப் பொருளாதாரம் மற்றும் எதேச்சாதிகார அரசாங்கத்தின் கலவையான அதன் வெற்றிகரமான நிர்வாக மாதிரியுடன், சீன அரசியல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே ஒரு காரண உறவின் இருப்பு தொடர்பான மேற்கத்திய அனுமானங்களை சவாலுக்கு உபடுத்தியுள்ளது. சீனா தற்போது அமெரிக்காவிற்கும், உலகப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின் தாராளவாத மாதிரிக்கும் இணையாக மிகவும் தீவிரமான போட்டியாளராகக் கருதப்படுகிறது.

சர்வதேச உறவுகள் ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி, சீனா இந்த வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்தால், வரும் தசாப்தங்களில் அமெரிக்காவுடன் சமமாக இருக்கும். 2008 நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மேலாண்மை ஆகிய இரண்டின் போதும், புதிய தாராளவாத நாடுகளை விட சீனா மிகவும் வெற்றிகரமான சாதனையை படைத்துள்ளது. ஆசிய விழுமியங்களை நம்பியிருக்கும் பல கிழக்கு நாடுகள் செய்த ஈர்க்கக்கூடிய சாதனைகள் மிகவும் வெளிப்படையாக இருந்தன, மேற்கத்திய அறிஞர்கள் அதன் விளைவுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), பாட்ரிசியா ஓவன்ஸ் (Patricia Owens) மற்றும் ஜான் பெய்லிஸ் (John Baylis) ஆகியோர் தங்களின் உலக அரசியலின் உலகமயமாக்கல் புத்தகத்தில் எழுதியுள்ள முன்னுரையில் இதற்கான உதாரணத்தைக் காணலாம்:

ஆசியாவின் "புலிகள்" என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், தைவான், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகள், சர்வதேசப் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் சிலவற்றை பெற்றுள்ளன, ஆனால் சிலரின் கருத்துப்படி, இந்த நாடுகள் தமது ஆசிய விழுமியங்களை பாதுகாத்து வந்துள்ளன. இந்த நாடுகள் சில "மேற்கத்திய" மதிப்புகளை கண்டிப்பாக நிராகரிக்கின்ற போதிலும், அவை மகத்தான பொருளாதார வெற்றியைப் பெற்றுள்ளன. முரண்பாடு என்னவென்றால், மேற்கத்திய விழுமியங்களைப் பின்பற்றாமல், இந்த நாடுகள் வெற்றிகரமாக நவீனமயமாக்குவதைத் தொடர முடியுமா என்பதுதான்… இந்த நாடுகள் பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலை நோக்கி தங்கள் சொந்த பாதைகளைத் தொடர்ந்து பின்பற்றினால், எதிர்காலத்தில் மனித உரிமைகள், பாலினம் மற்றும் மதம் போன்ற பிரச்சினைகள் மீதான "ஆசிய" மதிப்புகள் "மேற்கத்திய" மதிப்புகள் இடையேயான மோதல்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

இதன் விளைவாக, உலகளாவிய அதிகார பரவல் முறையின் மாற்றம் மற்றும் கிழக்கு நோக்கி படிப்படியாக மாறுவது மற்றும் மேற்கத்திய முறைகளுக்கு தீவிர போட்டியாக ஆசிய ஆட்சி முறைகள் தோன்றுவது ஆகியவை சர்வதேச உறவுகளின் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பேசப்படும் ஒரு விஷயமாகும். நீண்ட காலமாக அவர்கள் இதை மனதில் கொண்டு உலக அமைப்பின் எதிர்காலத்தை சித்தரித்துள்ளனர்.

இந்த அதிகார மாற்றம் மற்றும் அதன் பரிமாணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய துல்லியமான புரிதல், இந்த செயல்பாட்டில் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் நிலைப்பாடு பற்றிய சரியான விளக்கத்தைத் தொடர்ந்து, உலகில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் ஈரான் எங்கு இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, நாட்டின் உயர் மட்டங்களில் உள்ள முடிவெடுப்பவர்கள் மிகக்கவனமாக பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் டாக்டர். ரூஹுல் அமீன் ஸஈதி, இமாம் சாதிக் (அலை) பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பீடத்தில் உதவிப் பேராசிரியர் ஆவார்.

https://english.khamenei.ir/news/9279/The-rise-of-the-East-claim-or-fact


No comments:

Post a Comment