Thursday, November 3, 2022

போராயுதமாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள்

 U.S. social media warfare

பிற நாடுகளில் அமைதியின்மை, தேசத்துரோகம், வன்முறை ஆகிய்வற்றைத் தூண்டி இறுதியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பல்வேறு சமூக தளங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா அதன் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியது.

Graphika and the Stanford Internet Observatory என்ற இணைய ஆய்வகத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பானது  பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே. ஆனால் வாஷிங்டன் அதன் நேரடி ராணுவ ஆக்கிரமிப்பில் நம்பிக்கையை இழந்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது, மேலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அது எதிரியாகக் கருதும் நாடுகளுக்கு எதிராக துர்பிரசாங்களை மேற்கொண்டு, கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினையை விதைப்பதில் இப்போது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது, அதாவது ஊடகத்தை ஆயுதமாக அதிகளவில் பயன்படுத்துகிறது.

ஈராக்கிய மக்களின் எதிர்ப்பின் மூலம் அமெரிக்கப் படைகளை அந்த மண்ணில் இருந்து 2011 இல் வெளியேறியது. பின்னர் பேரழிவுகரமான 20 ஆண்டு ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது, அங்கிருந்தும் 2021 ஆம் ஆண்டில் தலிபான்களால் விரட்டியடிக்கப்பட்ட பிறகு பென்டகன் தனது ராணுவ செலவுகள் மற்றும் வீரர்களின் உயிரிழப்பைக் குறைக்க தீவிரமான முறையில் பிற உத்திகளைக் கையாண்டு வருகிறது.

இந்த உத்தி ஒன்றும் புதிதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (SIGAR - Special Inspector General for Afghanistan Reconstruction) காங்கிரஸை அமைத்த கண்காணிப்பாளரின் பல வருட ஆய்வு அறிக்கைகளின்படி, பல அமெரிக்க நிர்வாகங்கள் ஆப்கானிஸ்தான் போர் தோல்வியடைந்தது என்பதை அறிந்திருந்தன, ஆனால் அந்த புதைகுழியில் இருந்து தப்புவதற்கு வெற்றிகரமான திட்டமொன்றை வகுக்கத் தவறிவிட்டன.

பெரிய சமூக ஊடக தளங்கள் அமெரிக்காவிற்குள்ளேயே செயல்படுவதால், பென்டகன் உளவியல் போர் நடவடிக்கைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தமது நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும் என்பதை உணர்ந்து, பல ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்தியும் வருகிறது.

தவறான தகவல்களை ஊக்குவிக்கும் போலி சமூக ஊடக கணக்குகள் மூலம் மேற்கத்திய சார்பு செய்திகளை உளவியல் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக பென்டகனின் சமீபத்திய ஆராய்ச்சி வழிவகுத்தது, பாதுகாப்புத் துறை அதைச் செய்துள்ளது என்று Washington Post சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவது உட்பட, ஆன்லைனில் இரகசிய உளவியல் செயல்பாடுகளை இராணுவம் பயன்படுத்துவதை உள்ளக ஆய்வு ஒன்றைச் செய்ய பென்டகன் உத்தரவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த சமூக ஊடக கணக்குகள் ஈரான் இஸ்லாமிய குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றை குறிவைத்து தவறான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

பென்டகனின் இந்த இரகசிய திட்டம் ஈரானைக் குறிவைத்து நாட்டின் வாழ்க்கை நிலை பற்றிய போலி செய்திகளை பல போலி கணக்குகள் மூலம் பரப்பி வருகின்றது என்பது தெளிவாகியது.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ட்விட்டர் மற்றும் மெட்டா, குறிப்பிட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் "நம்பகத்தன்மையற்ற ஒருங்கிணைந்த நடத்தையில்" பங்கேற்றதன் மூலம் அவர்களின் சேவை விதிமுறைகளை மீறுவதாகக் கூறி அந்த போலி கணக்குகளை நீக்கியது.

ஈரானுக்குள் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரங்கள் ட்விட்டர் மற்றும் டெலிகிராம் பயனர்களை இலக்காகக் கொண்டவை என்றும் மற்றும் பலவிதமான மாறுபட்ட பார்வைகளைத் தூண்டின என்றும் அறியப்பட்டது. பெரும்பாலான இடுகைகள் நாட்டில் விவாதத்தைத் தூண்டுவதற்கும் பிளவுகளை விதைப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட செயல்பாடுகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அகதிகளின் சடலங்கள் சில உறுப்புகள் இல்லாத நிலையில் ஈரானில் இருந்து திரும்பி வருவதாக உறவினர்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி எங்கே இருந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்துண்டா? சரி தொடர்ந்து வாசியுங்கள் தெரியவரும்.

இந்த பொய்யான தகவல் ஈரானிய ட்விட்டர் பயனர்களுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவும் கட்டுரையின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. உண்மையில், நீக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட சமூக ஊடக கணக்குகள் அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படுகிறது.

"பிரச்சாரம் முழுவதும் அவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பாக ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை விமர்சித்து கதைகளை முன்னெடுத்துச் செல்வதையும் நாங்கள் கண்டோம்" என்று கிராபிகாவின் புலனாய்வுத்துறை துணைத் தலைவர் ஜாக் ஸ்டப்ஸ் கூறினார்.

அமெரிக்காவின் தவறான தகவல் பிரச்சாரங்கள், பல்வேறு சமூக ஊடக தளங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுயவிவரங்களைக் கொண்ட போலி கணக்குகளை உருவாக்குதல் மற்றும் இணையத்தில் நிரூபிக்கப்படாத நம்பகத்தன்மையற்ற மூலங்களில் இருந்து ஈரானுக்கு எதிரான கட்டுரைகளை அடிக்கடி நகலெடுக்கும் போலிச் செய்தித் தளங்களை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது..

அமெரிக்க நிர்வாக அமைப்புகள் மற்றும் சமூக ஊடக போர்த்தளங்களுக்கு இடையேயான தொடர்புகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஈரானுக்கு எதிரான போலி சமூக ஊடக கணக்குகள் ஊடாக வெளியாகும் தவறான செய்திகள், ஈரானின் மனித உரிமை மீறல்கள் என பதிவாகும் என்று கூறும் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அறிக்கைகளுடன் ஒத்துப்போவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பல ஆண்டுகளாக, ஷியாக்களுக்கிடையேயே வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக ஊடக நிறுவனத்தினால் பரப்பப்படும் தேசத்துரோக உள்ளடக்கத்திற்காக, நாட்டில் பேஸ்புக்கை மூடுமாறு ஈராக் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு ஷியா அரசியல் பிரிவின் ஆதரவாளர்களை மற்றொரு ஷியா பிரிவுக்கு எதிராகத் தூண்டும் தவறான தகவல் பிரச்சாரத்தின் பின்னணியில் வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய ஆட்சி இருப்பதாக பாக்தாத் குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்காவினால் தூண்டப்பட்ட இந்த துர் பிரச்சாரம், ஈராக்கிய அதிகாரிகள் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நாடு முழுவதும் இயங்கும் பிற இராஜதந்திர அமைப்புகளின் வேலை என்றும் இது எண்ணற்ற ஈராக்கிய உயிர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் ஈராக்கிய அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய சமூக ஊடக போர், தவறான தகவல் பிரச்சார நடவடிக்கைகள், மேற்கத்திய சார்பு குழுக்களின் மறைமுக செல்வாக்கு குறித்தும் Graphika and the Stanford இணைய ஆய்வகத்தின் ஓர் ஆய்வை, வாஷிங்டன் போஸ்ட் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பின்னர் விசாரணைக்கு உட்பட்டது.

ஈரானிய போலீஸ் அதிகாரிகள் ஒரு யுவதியை துன்புறுத்தி கொன்றனர் என்பதும் அதைத் தொடர்ந்து நாட்டில் சமீபத்தில் நடந்த கலவரங்களும் அமெரிக்காவினால் தூண்டப்பட்டதாக சில ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய கலகக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயல்கள் "துணிச்சலானவை" என ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார் மற்றும் மேற்கு நாடுகளால் அது வரவேற்கவும் படுகின்றன என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது..

இவர்கள் துர்பிரசாரத்தின் மூலம் குறிவைக்கப்படும் முக்கிய நாடுகள் அவற்றின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு, சொந்த வெளிநாட்டு அல்லது பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ நினைக்கும் நாடுகளாகும். இராணுவ வழிமுறைகள் மூலமாகவோ அல்லது முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமாகவோ அமெரிக்காவால்  இந்த நாடுகளை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

Stanford University இணைய ஆய்வகம் மற்றும் சமூக ஊடகப் பகுப்பாய்வு நிறுவனமான Graphika ஆகியவற்றின் புலனாய்வில், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஐந்து சமூக ஊடக தளங்களில், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணக்குகளின் இணையம் கண்டறியப்பட்டது. இயங்குதளங்களின் தரவுத்தொகுப்புகள் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் காட்டி, கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தொடர்ச்சியான இரகசிய பிரச்சாரங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது."

வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிரான எங்கள் கொள்கையை மீறி செயல்பட்டதற்காக, இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தை” என்று கூறியது.

வெள்ளை மாளிகை இருக்கும் அதே வீதியில் அமைந்துள்ள அமெரிக்க PR நிறுவனம், CLS Strategies, சமூக ஊடகங்களில் நிபுணத்துவ முறையில் எதிர் பிரச்சார நடவடிக்கையை மேற்கொள்கையில் வசமாக மாட்டிக்கொண்டது.

இந்த சந்தர்ப்பத்தில், லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவு வலதுசாரி அரசாங்கங்களின் சார்பாக தவறான தகவல்களை பரப்புவதற்கு போலியான கணக்குகள் மற்றும் பக்கங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகப் போர் நடத்துவது தெரியவந்தது. அவர்கள் வெனிசுலா, மெக்சிகோ மற்றும் பொலிவியா ஆகிய இடதுசாரி அரசாங்கங்களை சீர்குலைக்க இரகசிய பிரச்சாரத்தை மேற்கொண்திருந்தனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

ஃபேஸ்புக்கில், இந்தத் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனம் 3.6 மில்லியன் டாலர்களை விளம்பரங்களுக்காக செலவிட்ட செய்தியும் அம்பலமானது.

எனவே, செய்திகளை நுகரும் நாம் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகாமல் மிகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இதுவாகும்.

https://www.tehrantimes.com/news/477758/U-S-social-media-warfare

No comments:

Post a Comment