Shiaphobia & Iranophobia are due to Domineering Powers’ rage over Iran countering their schemes
ஷியாஃபோபியா மற்றும்
ஈரானோபோபியா ஆகியவை ஆதிக்க சக்திகளின் கோபத்தின் வெளிப்பாடாகும்.
இஸ்லாமியப் புரட்சியின்
தலைவரான இமாம் காமனெய், செப்டம்பர் 3, 2022 அன்று இமாம் கொமெய்னி ஹுசைனியாவில் அஹ்லுல்பைத் உலக
சபையின் (ABWA) 7வது பொதுச் சபையில் பங்கேற்பாளர்களை
சந்தித்து அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில்
அவர் பேசியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லத்தாரின் பெருமையும், புகழும் இஸ்லாமிய உலகில்
தனித்தன்மை வாய்ந்தது. “இஸ்லாமிய சமூகங்களுக்கு
இன்று இந்த புனித குடும்பத்தினது போதனைகளின் பல்வேறு அம்சங்களுக்கான தீவிரத் தேவை உள்ளது. எனவே, விரிவான, சரியான திட்டமிடலின்
அடிப்படையில் அஹ்லுல்பைத் உலகப் பேரவை இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். மேலும், இந்த மகத்தான பொறுப்பை
நிறைவேற்ற அவர்கள் நியாயமான முறைகளையும் பயனுள்ள கருவிகளையும் பயன்படுத்த வேண்டும்", என்பதை அவர் வலியுறுத்தினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தைப் பின்பற்றுபவர்கள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் கொடியை உயர்த்த வேண்டும். மேலும், “அஹ்லுல்பைத் உலக பேரவையின் உருவாக்கம் ஷியா அல்லாதவர்களுடன் மோதலையும் பகைமையையும் வளர்ப்பதைக் குறிக்காது என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே கூறிவருகிறோம். சரியான பாதையில் செல்லும் ஷியா அல்லாத சகோதரர்களுடன் நாங்கள் இன்றளவிலும் ஒத்துழைத்து வருகிறோம்”.
“ஆணவ சக்திகளின் தற்போதைய கொள்கை இஸ்லாமிய உலகில் வேறுபாடுகளை
உருவாக்கி உண்மையற்ற பிளவு கோடுகளை முன்னிலைப்படுத்துவதாகும். ஷியாக்களுக்கு எதிராக
சுன்னிகளை மோதவிடுவதும், அரபி அல்லாதவர்களுக்கு எதிராக அரபிகளை மோதவிடுவதும், ஷியாக்களுக்கு எதிராக
ஷியாக்களையும்,
சுன்னிகளுக்கு எதிராக சுன்னிகளையும் தூண்டிவிடுவது, இரு நாடுகளுக்கிடையே
போர்களைத் தூண்டுவதும், சதி செய்வதும் இவர்களின் கொள்கையாகும். இப்போது சில நாடுகளில்
காணக்கூடிய போர்கள் அமெரிக்க பெரும் சாத்தானின் திட்டமாகும்.இது தொடர்பாக நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்” என்றார்.
ஆணவ சக்திகளின் அமைப்பை
எதிர்கொள்வதில் இஸ்லாமியக் குடியரசினால் உயர்த்தப்பட்ட கொடியைப் பற்றி குறிப்பிடுகையில், இஸ்லாமியப் புரட்சித் தலைவர், “நபி (ஸல்) அவர்களின்
குடும்பத்தைப் பின்பற்றும் ஷியாக்கள் உலக ஏகாதிபத்தியத்தின் அமைப்புக்கு தலைமை தாங்கும்
ஏழு தலை நாகத்திற்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொண்டதை பெருமையாக உணர்கிறேன். திமிர்பிடித்த
சக்திகளே இப்போது தங்களின் பல திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.”
இஸ்லாமியக் குடியரசின்
ஸ்திரத்தன்மைக்கு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தான்
காரணம். இதை அவர் பின்வரும் வார்த்தைகளில் விளக்கினார், "பிரகாசிக்கும் நட்சத்திரங்களான
அவர்கள் தங்கள் தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறை வழிகளைக் கொண்டு எமது விருப்பத்திற்குரிய
இஸ்லாத்தின் பாதையில் நடப்பதற்கும் குர்ஆனை
எவ்வாறு தியானிப்பது மற்றும் அதன்படி செயல்படுவது என்பதையும் எங்களுக்குக் கற்றுத்தந்தனர்."
"இஸ்லாமிய குடியரசின் கொடியானது நீதி மற்றும் ஆன்மீகத்தின்
கொடியாகும். இந்தக் கொடிக்கு எதிராக உலகளாவிய ஏகாதிபத்தியம், அதன் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது மற்றும் செயல்களில் பொருள், பணம் மற்றும் பலத்தை
அடிப்படையாகக் கொண்டு, எதிர்ப்பிலும் பகைமையிலும்
கொதித்து எழுகிறது." என்று இமாம் காமனெய் தெரிவித்தார்..
திமிர்பிடித்த சக்திகளின்
முன்னணியில் அமெரிக்கா இருப்பதாக குறிப்பிட்ட அவர் “குர்ஆனால் ஈர்க்கப்பட்டு, மதிப்பிற்குரிய எமது இமாம் கொமெய்னி (ரஹ்), அவர்கள் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் உள்ள அனைத்து
கற்பனை பிளவுக் கோடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் இஸ்லாத்திற்கும் குப்ருக்கும் இடையே உள்ள ஒரே ஒரு பிளவு கோட்டை மட்டுமே
கருத்தில் கொள்ளும்படியும் அனைவருக்கும் கற்பித்தார்.
அந்த பிளவு கோடுதான் இஸ்லாமிய உலகத்திற்கும் ஆணவ உலகத்திற்கும் இடையிலான இடைவெளியைக்
குறிக்கும் எல்லை நிர்ணயம்.
“பாலஸ்தீனத்திற்கான எமது ஆதரவு இந்த ஆழமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் விளைவாக, இஸ்லாமியப் புரட்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே எமது நிகழ்ச்சி நிரலிலும் பாலஸ்தீனம் வைக்கப்பட்டது, மேலும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் பாலஸ்தீனியப் பிரச்சினைக்காக தனது முழு இருப்பையும் கொண்டு நின்றார். மறைந்த இமாம் வரைந்த அதே அரசியல் வடிவியலின்படியே இஸ்லாமியக் குடியரசு இன்றும் செயல்படுகிறது. மேலும் அது எதிர்காலத்திலும் அதற்கு விசுவாசமாக இருக்கும், என்று இமாம் கமேனி வலியுறுத்தினார்,
ஈரானிய தேசத்துடன் இஸ்லாமிய
உலக நாடுகள் கொண்டுள்ள விதிவிலக்கான மரியாதை,
ஈரானிய மக்கள் இமாம் கொமெய்னியின் மூலோபாயத்தை கடைபிடிப்பதன் காரணமாகவே ஆகும்.என்று
தலைவர் நம்புகிறார். இது இஸ்லாமிய உலகில் மத, இன வேறுபாடுகளை மறுக்கும் உத்தியாகும். “இதன் அடிப்படையில்
அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஷியா - சுன்னி, அரேபி - அஜமி போன்ற பிரச்னைகளை புறக்கணிக்குமாறு நாங்கள்
எப்போதும் கேட்டுக் கொண்டுள்ளோம். கொள்கைகள் மற்றும் அடித்தளங்களின் அடிப்படையில் அவர்களின்
நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்ள நாங்கள் அவர்களை அழைத்துள்ளோம்."
உலக ஏகாதிபத்தியத்தின்
ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நிற்பதற்கு ஏனைய நாடுகளை ஊக்குவிப்பது இந்த ஆணவ சக்திகளின்
கோபத்திற்கும் பகைமைக்கும் காரணமாகும். "பல்வேறு நாடுகளில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி
வரும் கிரிமினல் திட்டங்களை ஈரான் முறியடித்துள்ளது; ஐஎஸ்ஐஎஸ் தோற்கடிப்பு இதற்கு ஒரு உதாரணமாகும். ஈரானோஃபோபியா
மற்றும் ஷியாபோபியாவை தூண்டுவதற்கும், மற்ற நாடுகளில் ஈரான்
தலையிடுவதாக குற்றம் சாட்டுவதற்கும் அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரச்சார முயற்சிகளை
ஏற்பாடு செய்ய இதுவும் காரணமாக இருந்தது."
இஸ்லாமிய குடியரசு வேறு
எந்த நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது என்று தலைவர் வலியுறுத்தினார். இஸ்லாமிய அமைப்பின்
கணிசமான முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் தோற்றுப்போனதே உலகளாவிய
ஏகாதிபத்தியத்தின் (ஈரானுக்கு எதிரான) குற்றச்சாட்டுகளுக்கான காரணமாகும். "நிச்சயமாக, திமிர்பிடித்த சக்திகளின்
கொள்கைகள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் தீய நோக்கத்திற்கு
ஒத்துழைக்காமல் கவனமாக இருக்க வேண்டும்." என்று தலைவர் வலியுறுத்தினார்,
இஸ்லாமிய உலகில் உள்ள
வன்சக்தி மற்றும் மென்சக்தி திறன்களைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய உலகின் எதிரிகளின்
எதிர்ப்பை எதிர்கொள்ளும் திறன் ஏற்கனவே இஸ்லாமிய உலகில் உள்ளது என்று புரட்சித் தலைவர்
வலியுறுத்தினார். "சத்திய இஸ்லாம்
மற்றும் அதன் போதனைகள், இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், வரலாற்றை நோக்கிய நம்பிக்கையான
கண்ணோட்டத்தைப் பேணுதல் மற்றும் இமாம் மஹ்தியின் வருகையில் நம்பிக்கை" ஆகியவை
இஸ்லாமிய உலகின் மென்சக்தி திறன்களில் சில.
மேற்குலகில் இருக்கும்
ஆன்மீக வாங்குறோத்து நிலை மற்றும் தாராளவாத ஜனநாயக அமைப்பு பற்றி குறிப்பிடுகையில் "இஸ்லாமிய உலகின் வளங்களைப் கொள்ளையடிப்பதற்கு, காலனித்துவம் போன்ற முறைகளைக்
கையாண்டுள்ளனர், மேலும் பலாத்காரம் மற்றும் ஆயுத தலையீடு போன்ற அனைத்து
வன்முறையினையும் திமிர்பிடித்த சக்திகள் கைக்கொண்டன, தங்களைத் தாங்களே பலப்படுத்திக்
கொள்வதற்காக எல்லாவிதமான தந்திரங்களையும் வஞ்சகங்களையும் பயன்படுத்தினர். இருப்பினும், இஸ்லாமிய நாடுகள் உலகில்
இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கு உதவும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின்
முக்கியத்துவம் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும், இது இன்று உலகில் உள்ள அனைவருக்கும் மிகவும் தெளிவான
விடயமாகும்.
அவரது உரையின் முடிவில், "இஸ்லாமிய உலகிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது, மேலும் ஷியா சமூகமான நீங்கள் இந்த எதிர்காலத்தை உருவாக்குவதில்
பெரும் பங்கை வகிக்க முடியும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
https://english.khamenei.ir/news/9136/Shiaphobia-Iranophobia-are-due-to-Domineering-Powers-rage
No comments:
Post a Comment