Saturday, July 9, 2022

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை

 It is the duty of the Islamic Ummah to thwart the efforts of the enemies


மகத்துவமிக்க அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்றுகூடியுள்ள ஹாஜிகளை விழித்து இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் விடுத்த அறிக்கை.

 அருளாளன், கருணையாளன் இறைவனின் பெயரால்

அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரஹ்மத் லில் ஆலமீன் முஹம்மது முஹம்மத் முஸ்தபா (ஸல்) மீதும், அவருடைய தூய சந்ததியினர் மீதும், அவர் தேர்ந்தெடுத்த தோழர்கள் மீதும் அமைதியும் ஆசீர்வாதமும் உண்டாவதாக.

ஹஜ் என்பது இஸ்லாமிய உலக ஒற்றுமையின் சின்னம்

புனிதமான துல்-ஹஜ் மாதத்தை உலக முஸ்லிம்கள் சந்திக்கும் தருணமாக மீண்டும் மாற்றியதற்காகவும், அவனுடைய கிருபை மற்றும் கருணையின் காரணமாக இந்த பாக்கியத்தை ஹாஜிகளுக்கு கிடைக்கச் செய்ததற்காகவும், எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றுகிறேன். இந்த தெளிவான, எல்லையற்ற காலக் கண்ணாடியில் இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மீண்டும் அவதானிக்க முடிகிறது, மேலும் ஒற்றுமையின்மை மற்றும் பிளவுக்கு வழிவகுக்கும் காரணிகளிலிருந்து விலகிச் செல்ல இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம்.

ஒற்றுமை மற்றும் ஆன்மீகம்: ஹஜ்ஜின் அடிப்படை அடித்தளங்கள்

முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை என்பது ஹஜ் யாத்திரையின் இரண்டு அடிப்படை அடித்தளங்களில் ஒன்றாகும். இந்த அடித்தளம் ஆன்மீகம் மற்றும் அல்லாஹ்வை நினைவு கூரும்போது (திக்ர்) அவர்கள் இஸ்லாமிய உம்மத்தின் மரியாதை மற்றும் கண்ணியத்தின் உச்சத்தை அடைய முடியும்.-

இந்த மார்க்கக் கடமையின் மற்ற அடிப்படை பல இரகசியங்கள் நிறைந்த அடித்தளத்தை உள்ளடக்கிய ஒன்றாகும், "கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; " [அல்குர்ஆன் 63:8] என்ற [வசனத்திற்கு] ஓர் உதாரணமாக அதை அவர்கள் செயல்படுத்த முடியும். இஸ்லாம் அரசியல் மற்றும் ஆன்மீகத் துறைகளின் உன்னத கலவையாகும்; அதுபோலவே ஹஜ் என்பதும் அரசியல் மற்றும் ஆன்மீக கூறுகளின் கலவையாகும்.

இஸ்லாமிய உம்மாவின் கெளரவத்தின் அடித்தளத்தை சீர்குலைக்கும் எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமையாகும்

சமீபகால வரலாற்றில், முஸ்லிம் நாடுகளின் எதிரிகள், நமது நாடுகளுக்கிடையே உள்ள இஸ்லாமிய ஒற்றுமை மற்றும் ஆன்மீகம் ஆகிய இரு நிவாரணிகளை வலுவிழக்கச் செய்ய விரிவான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகள் ஆன்மீகம் இல்லாத மேற்கத்திய வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் ஈமானை பலவீனப்படுத்த முயல்கிறார்கள், இது அவர்களின் பொருள்முதல்வாத பார்வையில் வேரூன்றியுள்ள குறுகிய பார்வையாகும். மொழி, நிறம், இனம் மற்றும் புவியியல் வேறுபாடுகள் போன்ற அடிப்படையற்ற பிரிவினையை வளர்க்கும் காரணிகளை ஊக்குவிப்பதன் மூலமும், பிரச்சாரம் செய்வதன் மூலமும் இஸ்லாமிய ஒற்றுமையைக் குலைக்க அவர்கள் முயல்கின்றனர்.

இஸ்லாமிய உம்மத்தின் ஒரு சிறிய பகுதியை இப்போது ஹஜ்ஜின் அடையாளச் சடங்குகளில் காணலாம், முஸ்லிம்களை பிரித்துவைக்கும் எதிரிகளின் ஒரு சிறு செயலையும் நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு எதிராக எழ வேண்டும். இதன் பொருள், ஒருபுறம், நாம் அல்லாஹ்வின் நினைவை அதிகரிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக செயல்பட வேண்டும், அல்லாஹ்வின் போதனைகளை தியானிக்க வேண்டும், நம் அனைவரின் மனதிலும் அவனுடைய வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மறுபுறம், பிளவு மற்றும் ஒற்றுமையின்மையை வளர்க்கும் காரணிகளை ஒதுக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஒற்றுமைக்கும் அதற்கான முன்நிபந்தனைகளுக்கும் இஸ்லாமிய உலகம் தயாராக உள்ளது

இன்று உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், உலக மற்றும் இஸ்லாமிய உலகத்தின் தற்போதைய சூழ்நிலை முன்னெப்போதையும் விட இந்த மதிப்புமிக்க முயற்சிக்கு தயாராக உள்ளது.

1.    இஸ்லாமிய விழிப்புணர்வு

முதல் காரணம், இஸ்லாமிய நாடுகளில் உள்ள உயரடுக்கினரும், பெரும்பாலான பொது மக்களும் தங்களின் சமயப் புரிதல் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தின் பெறுமதி பற்றியும், அதன் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு பற்றியும் இப்போது அறிந்திருக்கிறார்கள். இன்று, மேற்கத்திய நாகரிகத்தின் மிக முக்கியமான பங்களிப்புகளான லிபரலிசம் எனும் தாராளமயம் மற்றும் கம்யூனிசம் ஆகியவை 100 ஆண்டுகளுக்கு அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த கவர்ச்சியை இப்போது கொண்டிருக்கவில்லை. பொருள்முதல்வாதத்தால் இயக்கப்படும் மேற்கத்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை இப்போது தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, மேலும் மேற்கத்திய சிந்தனையாளர்கள் தாங்கள் தத்துவார்த்த மற்றும் நடைமுறை இழப்பில் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நிலைமையை அவதானிப்பதன் மூலம், இஸ்லாமிய உலகில் உள்ள இளைஞர்கள், புத்திஜீவிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத அறிஞர்கள் தங்கள் சொந்த அறிவின் பலம் மற்றும் மதிப்பு மற்றும் அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் நீரோட்டங்கள் குறித்து புதிய கண்ணோட்டங்களைப் பெற முடிகிறது. இதுவே நாம் தொடர்ந்து குறிப்பிடும் "இஸ்லாமிய எழுச்சி" ஆகும்.

2.    அடிபணியா எதிர்ப்பு கொள்கை

இரண்டாவதாக, இஸ்லாமிய இளைஞர்களின் இந்த சுய விழிப்புணர்வு இஸ்லாமிய உலகின் இதயத்தில் ஓர் அற்புதமான, உத்வேகத்தை, அதிசயமான கொள்கையை உருவாக்கியுள்ளது, மேலும் இது திமிர்பிடித்த சக்திகளுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த கொள்கையின் பெயர் " அடிபணியா எதிர்ப்பு" மற்றும் விசுவாசத்தின் சக்தியில் அதன் உண்மை வெளிப்படுகிறது, மேலும் அல்லாஹ்வின் பாதையில் போராடி, அவனையே நம்பியிருக்கிறது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பின்வரும் உன்னத வசனம் அருளப்பட்டதற்கான அந்த நிகழ்வு இதுதான்:

ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَـٰنًۭا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ

فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍۢ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍۢ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌۭ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். (குர்ஆன் 3:173-174)

அநியாயக்கார சியோனிச ஆட்சியை அதன் ஆக்கிரமிப்பு நிலையில் இருந்து வீழ்த்த முடிந்த இந்த அற்புதமான நிகழ்வின் வெளிப்பாடுகளில் பாலஸ்தீனத்தின் நிலைமையும் ஒன்றாகும் மற்றும் (எதிரியின்) ஒரு தற்காப்புக்கான கூக்குரல், செயலற்ற நிலைப்பாடு மற்றும் அதன் மீது தற்போதைய, வெளிப்படையான அரசியல், பாதுகாப்பு, மற்றும் அது எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவற்றைக் காணலாம். அடிபணியா எதிர்ப்பின் ஏனைய சிறந்த எடுத்துக்காட்டுகளை லெபனான், ஈராக், ஏமன் மற்றும் வேறு சில இடங்களில் தெளிவாகக் காணலாம்.

3) ஈரான் இஸ்லாமிய குடியரசில் அரசியல் நிர்வாகம்

மூன்றாவதாக, இந்த மற்ற காரணிகளுக்கு மேலதிகமாக, இஸ்லாமிய ஈரானில் அதிகாரம் மற்றும் அரசியல் இஸ்லாமிய நிர்வாகத்தின் வெற்றிகரமான மாதிரி மற்றும் பெருமைமிக்க உதாரணத்திற்கு உலகம் தற்போது சாட்சியாக உள்ளது. இஸ்லாமியக் குடியரசின் ஸ்திரத்தன்மை, சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் கௌரவம் என்பது ஒவ்வொரு உணர்வுள்ள முஸ்லிமின் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஈர்க்கக்கூடிய ஒரு சிறந்த, முக்கியமான, குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.

இந்த அமைப்பின் அதிகாரிகளின் இயலாமைகள் மற்றும் சில நேரங்களில் தவறான செயல்கள் - இஸ்லாமிய ஆட்சியின் அனைத்து நன்மைகளையும் அடைவதைத் பின் தள்ளிப் போடலாம் - உறுதியான அடித்தளங்களை [இஸ்லாமிய குடியரசின்] பௌதீக மற்றும் ஆன்மீக முன்னேற்றம், இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவை என்பதால் அதை அசைக்கவோ அல்லது அதை நோக்கிய பாதையில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை நிறுத்தவோ முடியவில்லை.

இவைதான் இஸ்லாமிய உலகில் இணக்கமான, ஒன்றுபட்ட இயக்கத்திற்கு சாதகமான சூழ்நிலையை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் காரணிகளாகும். வேறு எவரையும் விட, முஸ்லிம் அரசுகளும், மதத்தலைவர்களும் மற்றும் உயரதிகாரிகளும், விஞ்ஞானிகளும் சுதந்திர சிந்தனையுள்ள புத்திஜீவிகளும், உண்மையைத் தேடும் இளைஞர்களும் இந்தச் சாதகமான நிலைமைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்க திமிர்பிடித்த சக்திகளின் கருவிகள்

இஸ்லாமிய உலகில் இத்தகைய சாதகமான போக்கைப் பற்றி ஆணவ வல்லரசுகளும், அமெரிக்காவும் கவலைப்படுவதும், அதை எதிர்கொள்வதற்காக அவர்கள் தங்கள் எல்லா வளங்களையும் பயன்படுத்துவதும் இயற்கையானது. இதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் கையாளும் தந்திரோபாயங்கள்: ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் மென்போர், போர்வெறி மற்றும் பினாமி போர்களைத் தொடங்குதல், அரசியல் உளவு மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்கள் மற்றும் அச்சுறுத்தல், லஞ்சம் மற்றும் பிற வகையான கவர்ச்சிகள் வரை இருக்கும். இந்த தந்திரோபாயங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்கா மற்றும் பிற திமிர்பிடித்த சக்திகளால் இஸ்லாமிய உலகத்தை அதன் சரியான விழிப்புணர்வு மற்றும் வெற்றியின் பாதையில் இருந்து திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் உள்ள கிரிமினல்களான அவமானகரமான சியோனிச ஆட்சி இந்த முயற்சிக்கு அவர்கள் பயன்படுத்தும் மற்றொரு கருவியாகும்.

எதிரிகளின் இந்த முயற்சிகள், அல்லாஹ்வின் கிருபையால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தன, அல்ஹம்துலில்லாஹ். மேலும் திமிர்பிடித்த மேற்குலகம் நாளுக்கு நாள் நமது உணர்திறன் நிறைந்த பகுதியிலும், சமீபகாலமாக உலகம் முழுவதிலும் பலவீனமாகி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஐக்கிய அமேரிக்கா மற்றும் அதன் கிரிமினல் கூட்டாளியான அப்பிராந்தியத்தில் கிரிமினல் [சியோனிச] ஆட்சியின் தோல்வியும், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈராக், யேமன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் சமீபத்திய நிகழ்வுகளில் தெளிவாகக் காணப்படுகின்றன.

இஸ்லாமிய உலகின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சொத்துக்கள் மற்றும் அதன் கீழறுக்கும் காரணிகள்

மறுபுறம், இஸ்லாமிய உலகம் ஆற்றல் மிக்க இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களே இன்று எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய சொத்து, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு. இன்று, இந்த சொத்துக்கள் இஸ்லாமிய உலகில், குறிப்பாக இந்த பிராந்தியத்தில் ஏராளமாக உள்ளன. இந்த விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் நம் அனைவருக்கும் கடமை உள்ளது.

இருப்பினும், எதிரியின் தந்திரங்களை ஒரு கணம் கூட நாம் புறக்கணிக்கக்கூடாது. அலட்சியமாகவுக் இருக்கக்கூடாது.

பெருமை தவிர்ப்போம், மேலும் நமது விழிப்புணர்வையும் முயற்சியையும் அதிகரிப்போம். மேலும் எல்லா நேரங்களிலும், சர்வவல்லமையுள்ள, ஞானமுள்ள அல்லாஹ்வின் உதவிக்காக கவனத்துடன் மன்றாடுவோம். ஹஜ் மற்றும் அதன் சடங்குகளில் பங்கேற்பதானது அல்லாஹ்வை நம்புவதற்கும், அவனிடம் மன்றாடுவதற்கும், அதே போல் கலந்துரையாடல்கள் மூலம் முடிவுகளை எட்டுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள உங்கள் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், அவர்களின் முயற்சி மற்றும் வெற்றிக்காக இறைஞ்சுங்கள். உங்கள் தூய பிரார்த்தனைகளில் உங்களது இந்த சகோதரருக்காகவும் தெய்வீக இறைவழிகாட்டுதலுக்காகவும் உதவியையும் கோருங்கள்.

அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உங்கள் அனைவர் மீதும்  உண்டாவதாக.

சையத் அலி காமனெய்

July 2022


No comments:

Post a Comment