Zionists Prophesying Their Imminent Doom
By: Ramzy Baroud*
மூலம்: ரம்ஸி பரூட்
சியோனிசம் என்பது பாலஸ்தீனத்தில் குறிப்பிட்ட காலனித்துவ
நோக்கங்களை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு நவீன அரசியல் சித்தாந்தம்
என்பது உண்மைதான் என்றாலும், தீர்க்கதரிசனங்கள், இஸ்ரேல் தன்னைப் பற்றி
கொண்டுள்ள கருத்து மற்றும் பிற குழுக்களுடனான அதன் உறவு, குறிப்பாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ
மேசியானிக் குழுக்களின் ஓர் அங்கமாக தொடர்கின்றன.
முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் பராக் ஹீப்ரு மொழி
செய்தித்தாள் Yedioth Ahronoth க்கு சமீபத்தில் அளித்த
பேட்டியில், தெரிவித்த கருத்துகளைத்
தொடர்ந்து, (யூத) மத தீர்க்கதரிசனங்களுக்கு
அமைய இஸ்ரேல் அது ஸ்தாபிக்கப்பட்ட 1948
இல் இருந்து 80வது ஆண்டு நிறைவுக்கு
முன்னதாக "சிதைந்துவிடும்" என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார். ஒரு
"முற்போக்கு" அரசியல்வாதியாகக் கருதப்பட்ட எஹுட் பராக், இஸ்ரேல் பிரதமராகவும் ஒரு காலத்தில் இஸ்ரேலின் தொழிற்கட்சியின்
தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"யூத வரலாறு முழுவதும், டேவிட் மற்றும் ஹஸ்மோனியன் வம்சத்தின் இரண்டு ராஜ்யங்களைத்
தவிர யூதர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி
செய்த வரலாறு கிடையாது. இவ்விரண்டு காலகட்டங்களிலும் கூட, எட்டாவது தசாப்தத்தில் அவர்களின் சிதைவு தொடங்கியது"
என்று பராக் கூறினார்.
போலி வரலாற்று பகுப்பாய்வின் அடிப்படையில், பராக்கின் தீர்க்கதரிசனம், 2017 இல் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்
அறிக்கைகளை நினைவூட்டும் வகையில், வழக்கமான மெசியானிய இஸ்ரேலிய
சிந்தனையுடன் வரலாற்று உண்மைகளை ஒன்றிணைப்பது போல் தோன்றியது.
பராக்கினது போலவே, நெதன்யாகுவின் கருத்துக்களும் இஸ்ரேலின் எதிர்காலம் குறித்த அச்சத்தின் வெளிப்பாடாகவே
இருந்தன, மேலும் பல ஆண்டுகளாக
இஸ்ரேலிய "இருத்தலுக்கான அச்சுறுத்தல்" என்ற விடயம் ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின்
வீட்டில் நடந்த ஒரு பைபிள் ஆய்வு அமர்வில்,
நெதன்யாகு, ஹாஸ்மோனியன் இராச்சியம்
- மக்காபீஸ் என்றும் அழைக்கப்பட்டது - கிமு 63
இல் ரோமானியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு 80 ஆண்டுகள் மட்டுமே தப்பிப்பிழைத்ததாக எச்சரித்தார்.
"ஹஸ்மோனியன் அரசு 80 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, இதை நாங்கள் மிகைக்க வேண்டும்," என்று நெதன்யாகு கூறியதாக அமர்வில் கலந்துகொண்டவர்களில்
ஒருவரை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஹாரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஆனால், நெதன்யாகு அந்த எண்ணிக்கையை மிகைக்க வேண்டும் என்று
சொன்னதாக கூறப்படும் உறுதியின்படி, அவர் இஸ்ரேல் மக்காபீஸின் 80 ஆண்டுகளைக் கடக்கும், 100 ஆண்டுகள் உயிர்வாழும்
என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு இன்னும் 25 ஆண்டுகளே உள்ளன.
பராக் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் அறிக்கைகளுக்கு இடையே
பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை: முன்னவர் கருத்துக்கள் "வரலாறு" என்றும்
பின்னவர் கருத்து விவிலியம் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இரு தலைவர்களும் இரண்டு வெவ்வேறு அரசியல் பள்ளிகளை சேர்ந்தோராய்
இருப்பினும், ஒரே மாதிரியான சந்திப்பு
புள்ளிகளில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது: இஸ்ரேலின் உயிர்வாழ்வு ஆபத்தில்
உள்ளது; இருத்தலியல் அச்சுறுத்தல்
உண்மையானது மற்றும் இஸ்ரேலின் முடிவு காலத்தின் ஒரு விஷயம் மட்டுமே.
ஆனால் இஸ்ரேலின் இருப்பில் உள்ள அவநம்பிக்கையானது அரசியல்
தலைவர்களிடம் மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை,
அவர்கள் பயத்தை தூண்டுவதற்கும், அவர்களின் அரசியல் முகாம்களை, குறிப்பாக இஸ்ரேலின் சக்திவாய்ந்த மேசியானிக் தொகுதிகளை
தூண்டுவதற்கும் சம்பவங்களை பெரிதுபடுத்தி கையாளுவதற்கும் கைதேர்ந்தவர்கள். இது உண்மையாக
இருந்தாலும், இஸ்ரேலின் மோசமான எதிர்காலம்
பற்றிய கணிப்புகள் அதன் அரசியல் உயரடுக்குகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்பது நிதர்சனம்.
2019
இல் Haaretz பத்திரிகை உடனான ஒரு
நேர்காணலில், இஸ்ரேலின் மிகவும் மதிக்கப்படும்
முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான Benny
Morris, இஸ்ரேலின் எதிர்காலம் பற்றி அதிகம் சொல்லியிருந்தார். பராக் மற்றும் நெதன்யாகு
போல், மோரிஸ் எச்சரிக்கை சமிக்ஞைகளை
விடுக்கவில்லை, ஆனால் அவர் இஸ்ரேலின்
அரசியல் மற்றும் மக்கள்தொகை பரிணாம வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவு என்று கூறினார்.
"நாங்கள் அதிலிருந்து
எப்படி வெளியேறப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை," என்று மோரிஸ் மேலும் கூறினார்: "ஏற்கனவே, இன்று (மத்தியதரைக்) கடல் மற்றும் ஜோர்டான் (நதி) இடையே
யூதர்களை விட அதிகமான அரேபியர்கள் உள்ளனர். முழுப் பகுதியும் தவிர்க்க முடியாமல் அரேபியப் பெரும்பான்மையைக்
கொண்ட ஒரே தேசமாக மாறி வருகிறது. இஸ்ரேல் இன்னும் தன்னை ஒரு யூத நாடு என்று அழைக்கிறது, ஆனால் எந்த உரிமையும்
இல்லாத ஆக்கிரமிக்கப்பட்ட மக்களை நாம் ஆளும் சூழ்நிலை 21 ஆம் நூற்றாண்டில் நீடிக்க
முடியாது என்று கூறுகிறார்..
மொரிஸின் கணிப்புகள், யூத பெரும்பான்மையினரின் இனக் கற்பனையில் அவர் உறுதியாக இருந்தபோதும், பராக், நெதன்யாகு மற்றும் பிறரின்
கணிப்புகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் தெளிவாகவும்
யதார்த்தமாகவும் இருந்தது. இஸ்ரேலின் நிறுவனர் டேவிட் பென் குரியன் 1947-48ல் பாலஸ்தீனத்தின் அனைத்து பூர்வீக
மக்களையும் வெளியேற்றவில்லை என்று ஒருமுறை வருந்தியவர், ஒரு தலைமுறையில், இஸ்ரேல் அதன் தற்போதைய
வடிவத்தில் இல்லாமல் போகும் என்று கவலைப்பட்டார்.
"பாலஸ்தீனியர்கள் வெளிநாடுகளில்
இருந்து அனைத்தையும் பரந்த, நீண்ட காலக் கண்ணோட்டத்தில்
பார்க்கிறார்கள்" மற்றும் பாலஸ்தீனியர்கள் "அகதிகள் (சொந்த நாட்டிற்கு) திரும்பும் உரிமையைக் கோருவார்கள்" என்ற துல்லியமான கருத்து அவரது கருத்துக்களில்
குறிப்பாக அவதானிக்கத்தக்கது. ஆனால் மோரிஸ் குறிப்பிடும் "பாலஸ்தீனியர்கள்" யார்? நிச்சயமாக அவர்கள் பாலஸ்தீனிய
அதிகாரசபை இல்லை,
அதன் தலைவர்கள் ஏற்கனவே பாலஸ்தீனிய அகதிகள் திரும்புவதற்கான உரிமையை ஓரங்கட்டியுள்ளனர், மேலும் நிச்சயமாக
"பரந்த, நீண்ட கால முன்னோக்கு"
அவர்களுக்கு இல்லை என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். மோரிஸ் குறிப்பிடும்
"பாலஸ்தீனியர்கள்", நிச்சயமாக,
பாலஸ்தீனிய மக்களே, அவர்களின் தலைமுறைகள், பின்னடைவுகள்,
தோல்விகள் மற்றும் அரசியல் "சமரசங்கள்" அனைத்தையும் மீறி பாலஸ்தீனியர்
உரிமைகளுக்கான முன்னணிப் படைகளாக தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்.
உண்மையில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்
பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஒரு புதிய விடயமல்ல.. பாலஸ்தீனம் பிரிட்டனின் உதவியுடன் சியோனிஸ்டுகளால்
விவிலியக் குறிப்புகளின் அடிப்படையில் காலனித்துவப்படுத்தப்பட்டது. பண்டைய மக்கள்
"வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு" "திரும்புவதற்கு" விவிலியக்
குறிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக இஸ்ரேல் பல்வேறு அர்த்தங்களைப்
பெற்றிருந்த போதும் - சில சமயங்களில் ஒரு "சோசலிச" கற்பனாவாதமாக, மற்றவர்களுக்கு ஒரு தாராளவாத, ஜனநாயக புகலிடமாக காட்டப்பட்டாலும்-
அது உண்மையில் சியோனிஸவாதிகளைக் கொண்டது. இந்த உண்மையின் மிக மோசமான வெளிப்பாடு என்னவென்றால், மேற்குலகில் உள்ள மில்லியன்
கணக்கான கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் இஸ்ரேலிக்கான தற்போதைய ஆதரவு பெரும்பாலும் மேசியானிய, உலக முடிவு தீர்க்கதரிசனங்களால்
இயக்கப்படுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்..
இஸ்ரேலின் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய சமீபத்திய கணிப்புகள்
வேறுபட்ட தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இஸ்ரேல் எப்பொழுதும் தன்னை ஒரு யூத நாடாக வரையறுத்துக்
கொண்டிருப்பதால்,
அதன் எதிர்காலம் பெரும்பாலும் வரலாற்று பாலஸ்தீனத்தில் யூத பெரும்பான்மையை தக்கவைக்கும்
திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மோரிஸ் மற்றும் பிறர் ஏற்றுக்கொண்டுள்ளதன் அடிப்படையில் "மக்கள்தொகை மேலாதிக்கம்"
தெளிவாகவும் விரைவாகவும் தொலைந்து வருவதால், அவர்களது இந்தக் கனவு இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது.
நிச்சயமாக, ஒரே ஜனநாயக அரசில் சகவாழ்வு
எப்போதும் சாத்தியமான ஒன்றே. எனினும், இஸ்ரேலின் சியோனிச சித்தாந்தங்களைப்
பொறுத்தவரை, அத்தகைய அரசு யூத, சியோனிச அரசின் வடிவத்தில்
இனி இருக்கப்போவதில்லை என்பதால், நிறுவனத்தின் நிறுவனர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத
பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சகவாழ்வு நடைபெற வேண்டுமானால், சியோனிச சித்தாந்தம் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
பராக், நெதன்யாகு மற்றும் மோரிஸ் ஆகியோர்: மக்கள்தொகை அடிப்படையில்
இஸ்ரேல் ஒரு "யூத நாடாக" நீண்ட காலம் இருக்கப்போவதில்லை. என்று பேசினாலும், இஸ்ரேல் இனி யூதர்களை
பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக ஒரு போதும் இருந்ததில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் ஐபீரிய
தீபகற்பம் முழுவதும் இருந்ததை போல, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அமைதியாக இணைந்து வாழலாம்
மற்றும் கூட்டாக செழிக்க முடியும் என்பதை வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. உண்மையில், இது ஒரு கணிப்பு, ஒரு தீர்க்கதரிசனம் கூட, அதற்காக முயற்சித்தல்
நல்லதே.
நன்றி: Antiwar.com
https://kayhan.ir/en/news/103831/zionists-prophesying-their-imminent-doom
No comments:
Post a Comment