Thursday, April 28, 2022

சர்வதேச குத்ஸ் தினம் மற்றும் பாலஸ்தீன விடுதலை

International Quds Day and the Liberation of Palestine


மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்." இந்தத் தினமானது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய ஆதரவைப் பிரதிபலிக்கிறது.



சர்வதேச குத்ஸ் தினம்நாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஊர்வலங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகள் மூலம் அனுஷ்டிக்கப்படுகிறது, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இந்த நுண்ணறிவுமிக்க அறிவிப்பு எல்லைகடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது..

சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின் பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீன மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் அரசு சட்டவிரோத மற்றும் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு,, 1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ சிலுவைப்போராளிகள் யூதர்களை தங்கள் ஜெப ஆலயத்தில் உயிருடன் எரித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் சலாஹுத்தீன் யூதர்களை அபயமளிக்குமுகமாக ஜெருசலேமுக்கு அழைத்து வந்து, பெரும்பான்மையான முஸ்லிம்களுடன் குடியமர்த்தினார். 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் கடந்தகாலத்தில் யூதர்களுக்கு முஸ்லிம்கள் காட்டிய கருணைக்கான நன்றிக்கடனை இவ்வாறே  திருப்பிச் செலுத்தியது.


பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கம் அல்லது இடைவிடாத மத்திய கிழக்கு மோதல் என்று அறியாமையால் மற்றவர்கள் குறிப்பிடுவது தொடர்பான அனைத்து சாலை வரைபடங்களின் முக்கிய சூத்திரதாரி மற்றும் தலைமை வடிவமைப்பாளராக அமெரிக்கா இருந்து வருகிறது.

இப்போது எழும் மிக முக்கியமான கேள்விகள் என்னவெனில் "ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் ஏதேனும் உறுதியான சாதனைகள் பெறப்பட்டுள்ளதா? பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் நம்பிக்கை உள்ளதா? என்பதாகும்.

மோதலின் மறுபக்கம் பார்க்கையில் அமெரிக்க மற்றும் பிற ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கான ஆதாய ஆயுத வர்த்தகம் வெளிப்படுகிறது.

1945 இல் அரபு லீக் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்றும், எனவே, அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்க முடியும் என்றும் பலர் நினைத்தனர். ஆனால் அரபு லீக் அமைப்பின் சாதனைகள் என்ன? இந்த அமைப்பினால் மற்றும் அதன் சகோதர பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினால் (PLO) எந்த அளவிற்கு அவர்கள் கூறிய நோக்கங்களை அடைய முடிந்தது? என்பதை சிந்தித்தல் நன்று.


கேள்வி என்னவென்றால், அரேபியம் என்ற தேசியவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரபு லீக் மற்றும் PLO வினால்  எவ்வாறு பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும்...? ஏனெனில் அதே தேசியவாதமே அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேலை நிறுவ பயன்படுத்தப்பட்டது.

எனவே, சர்வதேச குத்ஸ் தினம் மட்டுமே முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமும் மற்றும் முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை உறுதி செய்யக்கூடிய ஒரே நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையே பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான இறுதி நம்பிக்கை.  உண்மையில், இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் செய்தியின் முக்கிய கருப்பொருளும் அதுவே ஆகும்.

ஜார்ஜ் கர்ஸன், 1911-1921 வெளியுறவுத்துறைக்கான பிரிட்டிஷ் செயலர்  "முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய ஒற்றுமையைக் கொண்டுவரும் எந்த முயற்சிக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிலாபத் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளதால், முஸ்லிம்கள் மத்தியில் அறிவு ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஒற்றுமை என்ற ஒன்று மீண்டும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியதை உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் உச்ச தலைவர் ஆயதுல்லா சையத் அலி காமனெய், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிளவுகளை விதைப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்க நலனுக்காக தெளிவாக சேவை செய்கிறது என்று கூறுவதற்கு இதுவே காரணம். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;.(அத்தியாயம் 3, வசனம் 103) என்று அல்லாஹ் கூறியிருக்க இவ்வாறு நடக்கிறது.


சர்வதேச குத்ஸ் தினம் என்பது பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஒருமைப்பாட்டை தெரிவித்தது ஆதரவு வழங்கும் தினமாகும் அதேவேளை ஒடுக்குமுறை மற்றும் அநீதியைக் கண்டிக்கும் நாளுமாகும்.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) நிறவெறியை வெறுத்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு பூரண உதவியை வழங்கினார். பதிலுக்கு நெல்சன் மண்டேலாவும் "பாலஸ்தீனன் சுதந்திரம் அடையாமல் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது" கூறினார்.


நீண்ட சிறை தண்டனையில் இருந்து விடுதலையான மண்டேலா அவர் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின் போது, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இமாம் வகித்த பாத்திரத்தையும் ஈரானின் வரலாற்று ஆதரவையும் பாராட்டினார். 

மறைந்த வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் சர்வதேச குத்ஸ் தின நிகழ்வுகளில் தனது நாட்டில் ஏனைய போராட்டக்காரர்கள் மத்தியில் முன்னணியில் காணப்படும் முக்கிய நபராக இருந்தார்.


சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் புறக்கணித்து வரும் சவூதி அரேபியா, அதன் கூட்டாளிகளுடன் இணைந்து 2015 முதல் யெமனுக்கு எதிரான இராணுவப் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சவூதி அரேபியா பணக்கார மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அரபு தேசமாகும். அது வறிய மற்றும் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு எதிராக திட்டமிட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயலாகும். யெமனில் நடந்த ஆக்கிரமிப்பின் விளைவை சமகால வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடு வர்ணித்தது.


உலகம் முழுவதும் அமைதிகாக்கவும், நீதிகாக்கவும் போராடும் மக்களின் முயற்சியை அங்கீகரிப்பது கட்டாயம். இமாம் அவர்கள் வலியுறுத்தியது போல் "குத்ஸ் தினம் என்பது ஒரு சர்வதேச தினம். இது குத்ஸுக்கே பிரத்தியேகமான நாள் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும், ஆணவ சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் தினமாகும்."


அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. பிராந்தியத்தில் அவர்களின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னணி நிலைகளைக் கோரும் வளர்ந்த நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது. என்ன ஒரு நயவஞ்சகத்தனம், என்ன ஒரு இரட்டை நிலைப்பாடு...!



 


No comments:

Post a Comment