Tuesday, February 8, 2022

இஸ்லாமியப் புரட்சி"ஒரு புதிய விடியல் மற்றும் ஒரு புதிய சகாப்தம் - யசீர் அரபாத்

 Islamic Revolution "A New Dawn and a New Era - Yasser Arafat

An Arab perspective on Iran's Islamic Revolution at 43

43வது வருட நிறைவில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சி தொடர்பாக அரபுக் கண்ணோட்டம்

-          டாக்டர் முஸ்தபா ஃபெடோரி

புரட்சிக்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் என ஆரம்பித்த போராட்டம் 11 பிப்ரவரி 1979 அன்று உச்சத்தை எட்டியது,

ஈரானின் இஸ்லாமியப் புரட்சி ஷா முகமது ரேஸா பஹ்லவியின் கீழ் பல தசாப்த அடக்குமுறை முடியாட்சிக்கு முடிவுகட்டியது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் சதி திட்டங்களை முறியடித்து, இஸ்லாமிய குடியரசு ஈரான் பிறந்தது மட்டுமல்லாமல் பாரசீக வளைகுடா நாடுக்ளின் ஆட்சியாளர்களை நடுநடுங்கச் செய்தது.

பிராந்திய அரசியலில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு மாற்றம் ஈரானின் அரபு அண்டை நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல அரபு நாடுகள், குறிப்பாக வளைகுடாவில், புரட்சியை அச்சுறுத்தலாகக் கண்டன. அமெரிக்கா அப்படிப் பார்த்தது என்பதே அதற்கு காரணம்.

சிரியா, லிபியா மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) தவிர, பெரும்பாலான அரபு ஆட்சியாளர்கள் ஈரானை ஒரு நட்பு நாடாகப் பார்ப்பதற்கு பதிலாக ஒரு எதிரியாகப் பார்க்கத் தொடங்கினர், அதுவும் தவறான காரணங்களுக்காக.

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 43 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ் வேளையில், அரேபியர்கள் புரட்சிகர ஈரானைத் நட்பு நாடாக இல்லாமல் எதிரியாக கருதினார்கள் இது ஏன் என்று ஆராய்வது சிறந்தது. புரட்சிக்குப் பிந்தைய ஈரானில் உண்மையில் என்ன மாற்றம் ஏற்பட்டது, பல அரேபியர்கள் தங்கள் வரலாற்று எதிரியான இஸ்ரேலை விட ஈரானை ஆபத்தான எதிரியாகக் கருத வைத்தது எது?

1979 க்கு முன், ஷியா பெரும்பான்மை முஸ்லிம் நாடாக இருந்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. ஈரானின் ஷா "வளைகுடாவின் போலீஸ்காரர்" என்று செல்லப்பெயர் பெற்றிருந்தார். சோவியத் செல்வாக்கை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையின் புறக்காவல் நிலையமாகவும், இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாகவும் ஈரான் மூலோபாய ரீதியாக பார்க்கப்பட்டது.

அப்போது, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அறிவுக்கு ஈடாக இஸ்ரேலின் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை ஈரான் வழங்கியது. எடுத்துக்காட்டாக, SAVAK எனப்படும் ஷாவின் பயங்கரமான உள் பாதுகாப்பு கருவியை உருவாக்க இஸ்ரேல் உதவியது, இது மறைந்த ஆயதுல்லாஹ் ரூஹுல்லா கொமைனியை நாடுகடத்தியது. நாடுகடத்தப்பட்ட இமாம் மக்களை வழிநடத்தி ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று ஷாவோ அல்லது அவரது இஸ்ரேலிய நண்பர்களோ ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

ஈராக் கூட ஈரானுடனான அதன் பிராந்திய மோதல்களைத் தீர்க்க 1975 இல் அல்ஜியர்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, லிபியா, சிரியா மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பு மட்டுமே, இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆட்சியாளகள் மற்றும்  ஷா வழங்கிவந்த ஆதரவின் காரணமாக ஷாவை வீழ்த்துவதற்கான அவரது முயற்சிகளில் நாடுகடத்தப்பட்ட இமாம் கொமைனியை  ஆதரித்தன.

லிபியாவின் முயம்மர் கடாபி அமெரிக்க பிராந்திய மேலாதிக்கத்திற்கு மற்றொரு அடியாக இஸ்லாமியப் புரட்சியை கண்டு வரவேற்றார், மேலும் 1979 இல் தெஹ்ரானில் புதிய தலைமைக்கு வாழ்த்து தெரிவிக்க உடனடியாக தனது பிரதிநிதியை தெஹ்ரானுக்கு அனுப்பினார்.

அன்று, இன்று போல், ஈரான் ஒரு பெரிய பிராந்திய சக்தியாக இருந்தது. ஷாவின் காலத்திலும், புரட்சிக்குப் பிந்திய முதல் தசாப்தத்திலும், ஈரானின் பிராந்தியக் கொள்கையில் ஷியா கொள்கை ஒரு முக்கிய காரணியாக இருக்கவில்லை.

பிப்ரவரி, 1979 இல், அரேபியர்களின் இதயங்களின் மையமான பாலஸ்தீனத்திற்கு ஈரான் வலுவான ஆதரவாளராக மாறியது. ஷா ஆட்சி கவிழ்ந்து ஒரு மாதத்திற்குள், PLO தலைவரான மறைந்த யசீர் அரபாத், தெஹ்ரானில் புரட்சிகர தலைமையால் வரவேற்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் ஆவார். அவரது வருகையின் போது மூடப்பட்ட இஸ்ரேலிய தூதரகத்தின் திறவுகோல் அவருக்கு வழங்கப்பட்டது, அதே இஸ்ரேலிய தூதரக கட்டிடம் ஈரானிய தலைநகரில் உள்ள பலஸ்தீன் விடுதலை அமைப்பு அலுவலகமாக மாறியது.

இஸ்லாமியப் புரட்சி என்பது பிராந்தியத்தில் "ஒரு புதிய விடியல் மற்றும் ஒரு புதிய சகாப்தம்" என்று இந்த நிகழ்வைப் பற்றி மகிழ்ச்சியுடன் அரபாத் கூறினார்.

இது அரேபியர்களுக்கும் ஈரானியர்களுக்கும் இடையிலான உறவின் ஒரு நல்ல வளர்ச்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அரஃபாத்தின் அரபு சகாக்கள் பலர் ஈரானை எதிரியாக சித்தரித்து அதன் ஷியா கோட்பாட்டை பரப்புவதாக குற்றம் சாட்டி ஒரு மூலோபாய பிழையை செய்தனர்.

அரேபிய குரோதத்தின் முதல் செயல்பாடு

செப்டம்பர் 1980 இல் ஈராக், ஈரானின் புரட்சிக்கு பிந்தைய குழப்ப சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது, அல்ஜியர்ஸ் உடன்படிக்கைகளை தூக்கியெறிந்து, முடிந்தவரை அதிகமான நிலப்பரப்பைப் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் ஈரான் மீது படையெடுத்தது. பெரும்பாலான அரேபிய தலைவர்கள், குறிப்பாக வளைகுடா நாடுகள், மோதலை முடிவுக்குக் கொண்டுவர சமரசம் செய்வதற்குப் பதிலாக (அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் செய்தது போல்) சதாம் ஹுசைனின் ஆக்கிரமிப்பை ஆதரித்தன.

இரத்தம் தோய்ந்த எட்டு ஆண்டுகள் மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் உயிரிழப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச் சேதத்திற்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது. ஈராக் அடைந்தது எதுவுமில்லை. ஈரானில் இருந்தது இஸ்லாமிய அரசை வீழ்த்தும் அரபிகளின் நோக்கமும் நிறைவேறவில்லை.

உண்மையில், ஈராக் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தது, ஈரான், இழப்புகள் இருந்தபோதிலும், போரில் வெற்றி பெற்றதாகக் கூறலாம்.

2003ல் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஈராக் மீதான அமெரிக்காவின் வெட்கக்கேடான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, பெரும் செல்வாக்குடன் ஈரான் ஒரு முக்கிய சக்திவாய்ந்த நாடாக மாறியது. ஈராக்கின் பெரும்பான்மையான ஷியா மக்கள் திடீரென தங்கள் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோராக ஆகினர்.

புரட்சிகர ஈரான் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியது. இது பாலஸ்தீனியர்களுக்கு, குறிப்பாக ஹமாஸுக்கு உதவியது; இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது; மற்றும் சியோனிச அரசைக் கண்டிக்கும் வகையில் சர்வதேச குத்ஸ் தினத்தை வருடாந்திர பொது நிகழ்வாக இமாம் கொமெய்னி பிரகடனப்படுத்தினார். அந்த நாள் இன்றும் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

தெற்கு லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க பெய்ரூட்டில் உள்ள அரசாங்கத்திற்கு ஈரானிய ஆதரவு கணிசமாக உதவியது. 1973 அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு, எந்த ஒரு சமாதான ஒப்பந்தமும் இல்லாமல் அரபு நிலத்தை விட்டு வெளியேற இஸ்ரேல் தள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னிகளைக் கொண்ட ஹமாஸுக்கு ஈரான் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவு, பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஷியா இயக்கங்களை மட்டுமே ஈரான் ஆதரிக்கிறது என்ற கூற்றை பொய்யாக்கியுள்ளது. ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கு இடையேயான பிணக்கு, தெஹ்ரான் மற்றும் ரியாத்தை எதிரெதிர் பக்கங்களில் வைப்பது இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டமாகும், நிச்சயமாக அது புரட்சிகர ஈரானின் பிராந்திய லட்சியங்களில் ஒன்றல்ல.

உண்மையில், இத்தகைய மோதல்கள் இஸ்ரேல் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியத்திற்கு மூலோபாய அச்சுறுத்தலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்டு, ரியாத் மற்றும் பிற அரேபியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும்.

இப்போதுஅந்த பிரிவு பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற அரேபிய உலகின் இழப்பில் சியோனிச அரசுடன் அதிக உறவுகளை உருவாக்க சவூதி அரேபியாவால் மறைமுகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

எப்போதுமே அரேபியர்களின் அண்டை நாடாகவே இருக்கும் ஈரானை பகைத்துக்கொள்வதால் எந்த அரபு நாட்டிற்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை, ஆனால் அண்டை நாடுகள் புறக்கணிக்கப்படும்போதும், இழிவுபடுத்தப்படும்போதும், அவர்கள் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

சவூதி தலைமையிலான கத்தார் புறக்கணிப்பு மற்றும் யெமன் போர் ஆகியவை தோஹாவில் உள்ள அரசாங்கம் தெஹ்ரானின் ஆதரவை பெற்றுக்கொண்டது, அதே நேரத்தில் பிராந்திய ரீதியாக தீங்கு விளைவிக்கும் யெமன் போர் அரேபிய தீபகற்பத்தில் ஈரானின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

அண்டை மாநிலங்களில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த நாடுகளில் பொதுவாக ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதன் காரணமாக ஈரானை பார்த்து உத்வேகம் அடைந்துள்ளனர் என்பது உண்மையே, ஏனெனில் அவர்கள். உதாரணமாக, சவூதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவினர், தங்கள் சொந்த நாட்டை விட ஈரானுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை.

ஈராக் மற்றும் பஹ்ரைனிலும் இதே நிலைதான். ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பொதுவாக எந்த மூலத்திலிருந்தும் ஆதரவை வரவேற்கின்றன. அத்தகைய பிரச்சினையை, ஈரானை எதிரியாய் பார்ப்பதை விட ஈரானுடன் இணைந்து, எளிதாக தீர்க்க முடியும்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு ஈரானின் ஆதரவு கூட அவர் ஒரு ஷியா என்பதை விட மூலோபாய நோக்கங்களால் இயக்கப்படுகிறது. அல்-அசாத் ஒரு ஷியாவாக இருக்கலாம் ஆனால் சிரியாவில் நடந்த போர் மதபிரிவு பற்றியது அல்ல. மத்தியதரைக் கடலுக்கு நேரடியாக அணுகக்கூடிய ஈரான், அது இல்லாமல் இருப்பதை விட மிகவும் வலிமையானது. மற்றும் அல்-அசாத்தை ஆதரிப்பது அத்தகைய அணுகலை வழங்குகிறது.

இன்று தெஹ்ரானில் உள்ள அரசாங்கம், 1979 க்கு முன் இருந்ததைப் போலவே, நட்பு வலையமைப்பை உருவாக்குகிறது, சில சமயங்களில் அரசாங்கங்கள் உடன்படவில்லை என்றால் அரசு அல்லாத மற்றவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்துகிறது.

அதிக நண்பர்கள் என்றால் குறைவான எதிரிகள், இது ஒரு நியாயமான அரசியல் நோக்கமாகும்.

அரேபியர்கள் ஈரான் மீதான தங்கள் கொள்கையை ஒரு எளிய இலாப நட்ட பகுப்பாய்வு செய்வதன் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அடுத்த மாதம் டியூனிசியாவால் நடத்தப்படும் அரபு உச்சிமாநாடு அதைச் செய்வதற்கான சரியான வாய்ப்பாகும். ஈரான் ஒரு விருந்தினராக உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட வேண்டும், மேலும் அரபு-ஈரானிய உரையாடல் மூலம் இரு தரப்பிலும் உள்ள சந்தேகங்களை, குறைகளையும் தீர்க்க வேண்டும்.

ஒன்றுபடுதல் வெற்றி-வெற்றி சூழ்நிலையை உருவாக்கும்; பிளவுபட்டால், அரேபியர்களும் ஈரானியர்களும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பது சகல தரப்பினராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

https://messageofwisdom.blogspot.com/2022/02/an-arab-perspective-on-irans-islamic.html?fbclid=IwAR3hUqlkJfJmFbKIlbhPVG9U_gw-FE0MVRlP9gKq3TPf8RfJjd4beEi-_zA

No comments:

Post a Comment