Tuesday, January 11, 2022

சவுதி, எமிரேட்ஸ், பஹ்ரைன் முகத்திரையை கிழிக்கும் யுவோன் ரிட்லி

 KSA, UAE and Bahrain, the tyrannical triumvirate

சவூதி அரேபியா 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பிராந்தியத்தின் மிகவும் வறிய நாடான யெமனை ஆக்கிரமிப்பதற்காக ஒரு கூட்டணியைக் அமைத்தது, அது ஓர் இறுக்கமான கூட்டணியாக அமையவில்லை.. இந்த கூட்டணியில் சவுதிக்கு விசுவாசமாக இருக்கும் இரண்டு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.

போர் தொடங்கியதில் இருந்து, இந்த மூன்று நாடுகளும் யெமன் குடிமக்களை கருணையுடன் நோக்கவே இல்லை. இவர்களது மூர்க்கத்தனமான தாக்குதல்களினால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த கூட்டணியின் மனித உரிமைகள் அலட்சியம் யெமன் நாட்டில் மட்டும் நிகழ்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். அவர்களது சொந்த நாட்டில் கூட மனித உயிர் மற்றும் கண்ணியம் போன்றவற்றை மதிப்பது கிடையாது. அப்பாவி யெமன் மக்கள் மீதான இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை, இந்த மூக்கட்டு அநியாயத்தின் நீட்சியே ஆகும்.

ரியாத்தைப் பொறுத்தவரை, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் ஜமால் கஷோகியின் கொடூரமான கொலை, எதிரிகளை கையாளும் அவர்களது பொதுவான விதியாகும். இதனை ஒரு விதிவிலக்கு என்று கூற முடியாது.


கஷோகி ஒரு சவூதி ஊடகவியலாளர், அவர் சவூதி ஆட்சியாளர்களின் நடவடிக்கை சிலவற்றுட,ன் உடன்படவில்லை என்பதால் தான் அவருக்கு இந்த கதி நேர்ந்தது என்பதை சொல்ல தேவையில்லை.

உண்மையில், சவூதி அரேபியாவிலும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது, மௌனிக்கப்படுவது,  அச்சுறுத்தப்படுவது அல்லது அவர்களது கதை முடிக்கப்படுவது ஆச்சர்யமான விடயமல்ல. சவுதி போலவே பஹ்ரைன் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய இரண்டு அரபு நாடுகளிலும் பேச்சு சுதந்திரம் என்பது நடைமுறையில் கிடையாது.

மனித உரிமைகள் என்று வரும்போது, சவுதி அதிருப்தியாளர் ஜமால் கஷோகியின் கொடூரமான படுகொலையில் நாம் பார்த்ததைப் போல, அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மற்ற நாடுகளின் இறையாண்மையை மீறுவதில் கவலைப்படுவதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

துபாய் ஷேக் மக்தூம், தனது மகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக பிரிட்டனின் தெருக்களில் வைத்து அவரை கடத்தினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.

இந்த ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே சட்டத்தின் ஆட்சியை மதிக்கவில்லை. மற்றவர்களின் நாடுகளில் சட்டத்தின் ஆட்சியை அவர்கள் நிச்சயமாக மதிக்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது..

யுவோன் ரிட்லி, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்

அதிருப்தியாளர் எவராயினும் விட்டுவைக்கப்படுவதில்லை. முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப், இளவரசர் அஹ்மத் பின் அப்துல்அஜிஸ் மற்றும் முன்னாள் மன்னர் சவுத் பின் அப்துல்அஜிஸ் அல் சவுதின் மகள் இளவரசி பாஸ்மா பின்த் சவுத் அல் சவுத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது ராஜ்யத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

இந்த பாரசீக வளைகுடா நாடுகள் சர்வதேச நியாய விசாரணைத் தரங்களுக்குக் கீழ்ப்படியத் தவறி வருகின்றன, பெரும்பாலும் மூடிய அறைக்குள் நடவடிக்கைகளை இரகசியமாக நடத்துகின்றன.

நியாயமான விசாரணை என்று எதுவும் அங்கு இடம்பெறுவது இல்லை. உண்மையில், பெரும்பான்மையான அரசியல் கைதிகளுக்கு, சவுதியில், எந்த விசாரணையும் இல்லை, இது உண்மையில் சவுதி அரசியலமைப்பிற்கு எதிரானது.

சவுதியில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார், நீதி, நியாயமெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன, எனவே விசாரணைகள் எவ்வாறு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், நியாயமான விசாரணை என்ற சொல்லைக் கூட மறந்துவிடுங்கள், அங்கு சோதனைகளே நிரம்பியுள்ளன. விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டும் இல்லாமல், காலவரையின்றி மக்கள் ஆயிரக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுவோன் ரிட்லி,

நீதித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் செய்துள்ளோம் என்று பெருமையடித்த போதிலும் சவூதி அரேபியா 2021 இன் முதல் பாதியில் குறைந்தது 40 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

சவுதியின் நியாயமற்ற விசாரணைகள் அதன் சொந்த மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் "பயங்கரவாத அமைப்புடன்" தொடர்பு இருப்பதாக தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சவூதி அரேபியா 2020 மார்ச் இல், 68 பாலஸ்தீனியர்கள் மற்றும் ஜோர்டானியர்கள் மீது பாரிய விசாரணையைத் தொடங்கி தடுப்புக்காவலில் வைத்தது.

இதற்கிடையில், எண்ணற்ற முக்கிய ஆர்வலர்கள் தங்கள் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக குறிப்பாக அரபு உலகத்தை உலுக்கிய 2011 எழுச்சிக்குப் பிறகு நீண்டகால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்,

உதாரணமாக, பிரபல சவூதி மனித உரிமை ஆர்வலர் வலீத் சமி அபுல்கைர் சமூக ஊடகங்களில் மனித உரிமை மீறல்களை அமைதியான முறையில் விமர்சித்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

உலகின் அந்தப் பகுதியில் மனித உரிமைகள் எப்போதுமே ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது, மேலும் மனித உரிமைகளின் திசையில் மாற்றம் இருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டாலும் இவை அனைத்தும் வெறும் பகட்டுக்காக வெளியில் காட்டப்படும் ஒப்பனையாக இருக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன்.

உண்மை என்னவென்றால், அன்றாட அடிப்படையில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக சவுதியில் உரிமை கோரியதற்காக பெண்கள் மற்றும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஆயினும்கூட, சவுதி தன்னை மிகவும் பெண் நட்பு கொண்ட நாடாக, பெண்களுக்கு உரிமைகளை வழங்கும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன போன்றும் மேற்கு நாடுகளுக்குக் காட்டிக்கொள்கிறது.

சரி, அது உண்மையானால், பெண் உரிமை ஆர்வலர்கள் சிலர் ஏன் இன்னும் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்?

யுவோன் ரிட்லி

லௌஜைன் அல்-ஹத்லூல், மாயா அல்-சஹ்ரானி, சமர் படாவி, நௌஃப் அப்துல்அஜிஸ் மற்றும் நசிமா அல்-சதாஹ் உள்ளிட்ட பல முக்கிய பெண் உரிமை ஆர்வலர்கள் 2018 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்தனர்.

லௌஜைன் அல்-ஹத்லோல் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர் இன்னும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலையம் அது போன்றதே,

மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர் மற்றும் கல்வியாளர் நாசர் பின் கைத் ஆகியோரின் இரண்டு வழக்குகள், ஒரு முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் உரிமைகளை மதிக்கும் தேசமாக தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஒரு நாட்டின் உண்மையான நிலையை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்திய அதிகாரிகளை விமர்சித்த குற்றச்சாட்டில் பின்-கெய்த் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

உண்மையில், ஏராளமான ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சிறைகளில் நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பஹ்ரைனில், பதின்மூன்று முக்கிய எதிர்ப்பாளர்கள் 2011 இல் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டதில் இருந்து நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் அழுத்தம் காரணமாக, நாட்டின் மிக பிரபல மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான நபீல் ரஜப், ஜூன் 9, 2020 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆயினும், தனது ஐந்தாண்டு சிறைத் தண்டனையின் மீதியை மாற்றுத் தடைச் சட்டத்தின் கீழ்  அனுபவிக்கின்றார்.

மனித உரிமைகளுக்கான பஹ்ரைன் மையத்தின் நிறுவனர் அப்துல்ஹாதி அல்-கவாஜா, எதிர்க் குழு அல் ஹக்கின் தலைவரான அப்துல்ஜலீல் அல்-சிங்கேஸ் மற்றும் பஹ்ரைனின் மிகப்பெரிய, ஆனால் இப்போது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்ட, எதிர்க்கட்சி அல்-விஃபாக்கின் தலைவர் ஷேக் அலி சல்மான். ஆயுள் தண்டனை அனுபவிக்கும் மற்ற முக்கிய அரசியல் கைதிகளில் அடங்குவர்.

மனித உரிமை மீறல்கள் என்று வரும்போது, தன்னிச்சையாக குடியுரிமையை ரத்து செய்யும் வழக்கத்தை பஹ்ரைன் ஆட்சி கடைப்பிடித்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பஹ்ரைன் அதிகாரிகள் குடியுரிமையைப் பறித்த கிட்டத்தட்ட 300 பேர் பஹ்ரைன் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்கியதன் மூலம், இந்த ஆட்சிகள் இன்னும் கூடுதலான மனித உரிமைகளை மீறல்களைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை இப்போது தங்கள் வசம் கொண்டுள்ளன.

இந்த அரபு நாடுகள் இஸ்ரேலிய NSO குழுமத்தின் ஸ்பைவேரான Pegasus ஐ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் டிஜிட்டல் ஒடுக்குமுறையின் மையத்தில் பயன்படுத்தி வருகின்றன என்பதை வெளிப்படுத்தும் அல்லது சுட்டிக்காட்டும் பல அறிக்கைகள் உள்ளன.

பயிற்சி பெற்ற கட்டிடக் கலைஞரும் பொறியியலாளருமான 82 வயதான டாக்டர். முஸ்தபா எனது நல்ல நண்பர், கடந்த ஆண்டு மதீனாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து காணாமல் போனார்.

அவர் காணாமல் போனது குறித்து அவரது குடும்பம் அமைதியாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் 82 வயதான டாக்டர். முஸ்தபாவின் பிரச்சினையை எழுப்பும் ஒரு தனிக் குரலாக இருக்கிறேன், மேலும் அவர் விசாரணையின்றி, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர்.

யுவோன் ரிட்லி

சமீபத்திய ஆண்டுகளில், ரியாத், அபுதாபி மற்றும் மனாமா ஆகியவை தங்கள் கறைபடிந்த பெயரை மேம்படுத்த பயன்படுத்தும் ஒரு பொதுவான தந்திரமாக 'ஸ்போர்ட்ஸ்வாஷிங்' உத்வேகம் பெற்றுள்ளது.

சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவது மற்றும் உலகெங்கிலும் உள்ள பிரபலமான விளையாட்டுக் கழகங்களை விலைகொடுத்து வாங்க முயற்சிப்பது அனைத்தும் அவர்களின் 'ஸ்போர்ட்ஸ்வாஷிங்' திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை மனித உரிமைகள் அடிப்படையில் மோசமான நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆயினும்கூட, அவர்கள் மேற்குலக நாடுகளில் இருந்து பெறும் கிட்டத்தட்ட நிபந்தனையற்ற ஆதரவுடன் , அவர்கள் நிலைமையை மேம்படுத்த இதயசுத்தியான எந்த முயற்சியும் எடுக்காமல், தங்கள் அப்பட்டமான மனித உரிமைகளை மீறல்களை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாடுகளில் மக்கள் படும் துன்பங்களுக்கு முடிவே இல்லை; இந்த மூன்று நாடுகளு பிராந்தியத்தில் கொடுங்கோன்மையின் முக்கோணம். சர்வதேச சமூகம் இதை கண்டுகொள்வதில்லை.

https://www.presstv.ir/Detail/2022/01/02/673888/KSA-UAE-Bahrain-Tyrannical--Arabian-Trio

No comments:

Post a Comment