The good of the region lies in having independent, national armed forces & cooperation between neighboring countries
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயித் அலி கமேனி பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் குறுக்கீடானது முரண்பாடு மற்றும் அழிவுக்கு ஆதாரமாக உள்ளது என்றும் பலம் பெறுவதற்கும் மற்றும் பகுத்தறிவை பயன்படுத்துவதற்கு ஈரானின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு பிராந்திய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆயத்துல்லா கமேனி கடந்த (3-10-2021) ஞாயிற்றுக்கிழமை இராணுவ அகாடமிகளின் பட்டதாரிகளுக்காக நடத்திய விழாவில், ஈரானின் ஆயுதப்படைகளை விழித்து ஆற்றிய மெய்நிகர் உரையில் அவர்களை வெகுவாக பாராட்டினார், "வெளிப்புற மற்றும் உள் எதிரிகளின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையான அர்த்தத்தில் அவர்கள் ஒரு தற்காப்பு கவசம்" என்று அவர்களை குறிப்பிட்டார்.
ஈரானின் இராணுவம் வடமேற்கு எல்லையில் இராணுவப் பயிற்சிகளை நடத்திய பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்தொல்லாஹியான், தெஹ்ரான் "தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான சியோனிச ஆட்சியின் செயல்பாட்டை சகித்துக் கொள்ள மாட்டாது" என்று கூறியது, அண்டை நாடான அஜர்பைஜானுடன் இஸ்ரேலின் உறவுகளைக் குறிப்பிடுகிறது.
"பிராந்தியத்தில் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு முரண்பாடு மற்றும் சேதத்திற்கு நாசம் விளைவிப்பதாக உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் சம்பவங்களும் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் பிராந்தியத்தின் நாடுகள் அதிகாரம் மற்றும் பகுத்தறிவுக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தலைவர் கூறினார்.
பிராந்தியப் படைகளால் பிராந்தியத்தில் பாதுகாப்பை வழங்க
முடியும் என்று ஆயதுல்லா கமேனி கூறினார், சில அரசுகள் தங்கள் சொந்த தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், வெளிநாட்டுப் படைகள் தலையிடவோ அல்லது பிராந்தியத்தில் அந்நிய இராணுவ இருப்பை அனுமதிக்கவோ
கூடாது.
"ஈரானின் வடமேற்கில் உள்ள சில அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், வெளிநாட்டினரின் தலையீட்டுக்கு அனுமதி வழங்குவதைத் தவிர்த்து, தர்க்கத்துடன் தீர்க்கப்பட வேண்டும்" என்றும் தலைவர் கூறினார்.
"எங்கள் பிரியமான தேசத்தின் ஆயுதப்படைகள் எப்போதுமே பகுத்தறிவுடனும் சக்தியுடனும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் இந்த பகுத்தறிவு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு காரணியாகவும் இருக்க வேண்டும். மேலும் யார் ஒருவர் சகோதரர்களுக்காக முதலில் ஒரு குழி வெட்டுகிறார்களா அவர்களே அதில் விழுவார்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்." அவர் மேலும் கூறினார்.
ஆயதுல்லா கமேனி “பாதுகாப்பு என்பது ஈரானின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளின் அடிப்படை
உள்கட்டமைப்பு" என்று விவரித்தார், வெளிநாட்டவர்களை நம்பாமல் பாதுகாப்பை அடைவது முக்கியம் என்றும்
கூறினார்.
ஈரானிய தேசத்திற்கு பாதுகாப்பு என்பது சாதாரண விஷயம் என்று தலைவர் கூறினார், பல நாடுகள் - ஐரோப்பாவில் கூட - அதை அடைவதில் சிக்கல் உள்ளது, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலியா - வெளிப்படையாக அமெரிக்க அழுத்தத்தின் கீழ் - பிரான்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிறகு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் கட்டளையை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வழங்கியது.
"சில ஐரோப்பியர்கள் அமெரிக்ககாவின் இந்த நடவடிக்கையை (பிரான்சின்) முதுகில் குத்தும் செயலாகவும், ஒரு வகையில் ஐரோப்பா, நேட்டோ மற்றும் உண்மையில் அமெரிக்காவை நம்பாமல் சுதந்திரமாக அதனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்". அவர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரினது ஒரு நேர்காணல் மேற்கோள் காட்டியே அவ்வாறு குறிப்பிட்டார்.
"ஐரோப்பாவை அமேரிக்கா எதிர்ப்பதில்லை என்றாலும் அமெரிக்காவை நம்பியிருப்பதால் நீடித்த பாதுகாப்பை அடைவதில் ஐரோப்பிய நாடுகள் தம்மில் குறைபாடு இருப்பதாக உணரும்போது, பிற வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் தங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கும் மற்ற நாடுகளின் நிலை தெளிவானது," என்று தலைவர் கூறினார்.
வெளிநாட்டு சக்திகளை நம்பி பாதுகாப்பை ஒப்படைப்பது வெறும் "மாயை" என்று ஆயதுல்லா கமேனி கூறினார்.
"இந்த மாயையால் பாதிக்கப்படுபவர்கள் விரைவில் அதன் பலனை அனுபவிப்பர், ஏனென்றால் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு, யுத்தம் மற்றும் அமைதி ஆகியவற்றில் வெளிநாட்டினரின் நேரடி அல்லது மறைமுக தலையீடு ஒரு பேரழிவாகவே அமையும்."
ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பலம்வாய்ந்த அமெரிக்க துருப்புக்களை அவமானத்துடன் திரும்பப் பெற்றதை ஆயதுல்லா கமேனி சுட்டிக்காட்டி, இது அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று கூறினார்.
"அமெரிக்க இராணுவம் மற்றும் அது போன்ற நாடுகளின் வீராப்பு எல்லாம் ஹாலிவுட் படங்களில் வரும் ஒரு காட்சி போன்றதே, ஆப்கானிஸ்தானில் அவர்களின் உண்மையான தன்மை நன்கு வெளிப்பட்டது" என்று தலைவர் குறிப்பிட்டார்.
"தலிபான்களை வீழ்த்துவதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர், இந்த நீண்ட ஆக்கிரமிப்பின் போது, அந்நாட்டில் அவர்கள் பல படுகொலைகளையும் கொடுமைகளையும் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர், ஆனால் அனைத்து பொருள் மற்றும் மனித அழிவுக்குப் பிறகும், அவர்கள் அரசாங்கத்தை தலிபானிடம் ஒப்படைத்துவிட்டு ஓடினர் - இது அனைத்து நாடுகளுக்கும் ஒரு நல்ல பாடம்.
ஆயத்துல்லா கமேனி அமெரிக்க இராணுவத்தின் மீது கிழக்கு
ஆசிய மக்களின் வெறுப்பையும் தொட்டுக் காட்டி , "அமெரிக்கர்கள் தலையிடும் இடங்களிலெல்லாம் மக்களால் வெறுக்கப்படுகிறார்கள்"
என்றும் கூறினார்.
https://www.presstv.ir/Detail/2021/10/03/667755/Iran-Leader-foreign-threat-neighbors-armed-forces-
மிக்க நன்றி
ReplyDelete