Friday, March 12, 2021

இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்காக.

 'Zero hegemony' approach needed to end crisis in Iran-Saudi ties: Middle East Eye


ஈரான்-சவுதி உறவுகளில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர 'பூஜ்ஜிய  மேலாதிக்கம்' அணுகுமுறை தேவை: மிடில் ஈஸ்ட் ஐ

 


பல தசாப்தங்களாக அமெரிக்க தலையீடு மற்றும் ஒரு பிராந்திய ஆயுதப் போட்டி காரணமாக மேற்கு ஆசியா முடிவில்லாத நெருக்கடிகளில் சிக்கியுள்ளது, இந்த அணுகுமுறை முடிவுக்கு வர வேண்டும் என்று மிடில் ஈஸ்ட் ஐ (MEE) தெரிவித்துள்ளது.

குழப்பமும் பாதுகாப்பின்மையும் மேற்கு ஆசியா பிராந்தியத்தை தொடர்ந்து அழிப்பதாக MEE ஒப்புக் கொண்டது, மேலும் அது, “கடந்த வார இறுதியில் யேமன் தலைநகர் சனாவுக்கு எதிராக சவூதி அரேபியா தாக்குதல்களை நடத்தியது, யேமனின் ஹௌதி படைகள் பதிலடியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவின் எண்ணெய் துறையின் இதயத்தை குறிவைத்தன. கடந்த மாதம் ஓமான் வளைகுடாவில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் தாக்கப்பட்டது” என்று எழுதியது.

பிராந்தியத்தைப் பற்றிய ஜோ பைடனின் கொள்கையை சுட்டிக்காட்டி, மிடில் ஈஸ்ட் ஐ (Middle East Eye (MEE), “அமேரிக்க தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி, - இது ஒரு ஒப்பந்தக்காரரைக் கொன்றது மற்றும் ஒரு சிப்பாயைக் காயப்படுத்தியது - ஈரானிய ஆதரவுடைய போராளிப் படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிரியாவில் உள்ள வசதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார் எனபதை நினைவூட்டியது,

அமெரிக்காவின் தோல்வியுற்ற அணுகுமுறைகளை மீண்டும் செய்வது குறித்து கவலை தெரிவிக்கும் மிடில் ஈஸ்ட் ஐ அதே வேளையில், "பைடனின் வெள்ளை மாளிகைக்கான தேர்தல் வெற்றி  மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) அபாயகரமான சூழ்நிலையைத் தணிக்கவில்லை" என்று எழுதியது.

இது மேற்கு ஆசியா தொடர்பான அமெரிக்க உத்திகளை கடுமையாக விமர்சித்ததுடன், “பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மேலாதிக்க முன்னுதாரணம் நீண்ட காலமாக அமெரிக்க தலையீட்டை அடிப்படையாகக் கொண்டது" என்றும் குறிப்பிட்டது.இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், [பாரசீக] வளைகுடா நாடுகள் ஒரு பொருளாதார மற்றும் இராணுவ வல்லரசான அமெரிக்க பாதுகாப்பில் பெரிதும் தங்கியுள்ளன. பனிப்போரின் போது, ஒரு பிராந்திய காவல்துறை நபராக கருதப்பட்ட ஈரானின் ஷா, அமேரிக்கா உடனான வலுவான கூட்டணியின் மூலம் பாதுகாப்பை நம்பியிருந்தார்” என்றும்  அது குறிப்பிட்டது.

இராணுவ இருப்பின் விரிவாக்கம்

1979 [இஸ்லாமிய] புரட்சி மற்றும் ஷாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா [பாரசீக] வளைகுடாவில் தனது இராணுவ இருப்பை விரிவுபடுத்தியது; “அரபு வளைகுடா நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை பெருமளவில் வாங்குவதன் மூலமும், அமெரிக்க படைகளை கொண்டு வருவதன் மூலமும் பிராந்தியத்தில், அவர்களின் சொந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கருதின. ஈரான்-அமெரிக்க உறவுகள் முறுகல் நிலையிலேயே இருக்கின்றன, மத்திய கிழக்கில் [மேற்கு ஆசியா] மற்ற அமெரிக்க நட்பு நாடுகளான சவுதி அரேபியா போன்றவற்றால் ஈரானுடன் சமரசம் செய்ய முடியவில்லை," என்றும் அது எழுதியது.


"மத்திய கிழக்கு [மேற்கு ஆசியா] பிராந்தியத்தில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் கவனித்தல் - ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் அழிவுகரமான, அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புகள் முதல் பயங்கரவாதத்தின் எழுச்சி வரை, இஸ்லாமிய நாடுகளின் இடைக்கால பிரிவினைவாத வன்முறை வரை - பாதுகாப்பை (பணம் கொடுத்து) வாங்க முடியும் என்ற அனுமானம் கடுமையான சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,” என்று அது மேலும் கூறியது.

மேற்கு ஆசியாவில் பாதுகாப்பை உருவாக்க நான்கு சாத்தியமான அணுகுமுறைகள் ஆராயப்படலாம் என்று MEE விளக்கியது, “ஆனால் அமெரிக்கா, ஈரான் மற்றும் சவுதி அரேபியாவைப் பொருத்தவரை பிராந்திய பாதுகாப்பிற்கான மாற்றுக் காட்சிகள் என்ன? சாத்தியமான அந்த நான்கு காட்சிகளைக் கீழே காணலாம்.”

 முதலாவதாக, அமெரிக்காவின் பாரம்பரிய, மேலாதிக்க அணுகுமுறை உள்ளது, அங்கு மத்திய கிழக்கு [மேற்கு ஆசியாவில்] பிராந்தியத்தில் தொடர்ந்தும் அதனது இராணுவ இருப்பு உள்ளது, மற்றும் [பாரசீக] வளைகுடா நாடுகள் பாதுகாப்புக்காக அமெரிக்க துருப்புக்களை நம்பியுள்ளன. இந்த அணுகுமுறை ஏழு தசாப்தங்களாக ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, மத்திய கிழக்கு [மேற்கு ஆசியா] எண்ணற்ற நெருக்கடிகளில் மூழ்கியுள்ளது,” என்று அது எழுதியது.

இரண்டாவது மூலோபாயத்தைப் பொறுத்தவரை, “இரண்டாவது சூழ்நிலை, ‘கிழக்கை முன்னிலைப்படுத்துதல்’ என்ற அமெரிக்க திட்டமாகும் என்று MEE வாதிட்டது,

புதிய அடித்தளம் அமைத்தல்

 மூன்றாவது சூழ்நிலையில்,‘ அரபு நேட்டோ ’என்று அழைக்கப்படும்  இஸ்ரேலிய தலைமையிலான நிகழ்ச்சி நிரல் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ இருப்பை மாற்றியமைக்கும். ஈரானைப் பற்றிய பொதுவான கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் [பாரசீக] வளைகுடாவில் உள்ள அரபு நட்பு நாடுகளுடன் இஸ்ரேல் ஒரு ‘சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை’ உருவாக்க விரும்புகிறது என்று இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் சமீபத்தில் கூறினார். ஆனால் டிரம்ப் நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்த திட்டம் (அதாவது, அரபு நாடுகள் தமது பாதுகாப்புக்காக இதுவரை அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு பதிலாக இனி இஸ்ரேலில் தங்கியிருக்கும் திட்டம்) நிச்சயமாக பதட்டங்களைத் தக்கவைக்குமே அன்றி ஒருபோதும் அவற்றைக் குறைக்காது” என்று MEE தெரிவித்துள்ளது.

"நான்காவது காட்சி, நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் உகந்ததாகும், இது தி கார்டியன் வெளியிட்ட 12 கொள்கைகளின் அடிப்படையில் கூட்டு பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் ஒரு மாதிரியாகும்" என்று அது எழுதியது.

இந்த கொள்கைகளில் சில பிராந்திய நாடுகளுக்கிடையில் பரஸ்பர மரியாதை, தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல், நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது இருத்தல், பிரிவினைவாதத்தை நிராகரித்தல் மற்றும் பிராந்திய நாடுகளில் சட்டவிரோத போராளிகளுக்கு அனுசரணை வழங்காதிருத்தல் ஆகியவை அடங்கும்.

இந்த கொள்கைகள் பிராந்தியத்தில் மேலும் மோதல்களின் அபாயத்தை குறைக்கும் என்று MEE நம்பிக்கை தெரிவித்ததுடன், “ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நிலையான அமைதி, ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளுக்கு அடித்தளத்தை அமைக்கவும்; கூட்டு பிராந்திய ஒத்துழைப்புக்கு ஒரு புதிய பாதுகாப்பு முன்னுதாரணத்திற்கு வழி வகுக்கும்,” என்றும் MEE கூறியது.

'பூஜ்ஜிய மேலாதிக்கம்'

ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதட்டங்களைப் பற்றி, “ரியாத் மற்றும் தெஹ்ரான் ஒன்றுக்கொன்று கவனம் செலுத்துகின்றன, மேலும் சிறிய [பாரசீக] வளைகுடா நாடுகளும் சவூதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக்கின் மேலாதிக்க போக்குகள் குறித்து கவலைப்படுவதற்கு அது காரணமாகின்றன என்று அது கோடிட்டுக் காட்டுகிறது, . எனவே, ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பு “பூஜ்ஜிய மேலாதிக்கம்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். [பாரசீக] வளைகுடா நாடுகளிடையே பரஸ்பர உரையாடலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பது எந்தவொரு நல்லுறவுக்கும் மிக மிக அவசியமாகும்”.

இறுதியாக, “அதே நேரத்தில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய சவால்களில் ஒன்று இஸ்ரேலின் நீண்டகால பாலஸ்தீனிய உரிமை மீறல்களிலிருந்தே உருவாகிறது, இந்த துன்பகரமான மோதலுக்கு நிலையான மற்றும் நியாமான தீர்வு கிடைக்கப்பெறாமல் மத்திய கிழக்கில் [மேற்கு ஆசியாவில்] நிலையான அமைதியை ஒருவர் எதிர்பார்க்க முடியாது,” என்று அது கூறி முடித்தது.,

https://www.tehrantimes.com/news/458973/Zero-hegemony-approach-needed-to-end-crisis-in-Iran-Saudi-ties

No comments:

Post a Comment