Suicide that the US committed
மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் தகர்த்த சன நாள் ஜனவரி 8, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு எதிரான முதல் இராணுவத் தாக்குதலாக இது
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8, 2020 அன்று, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்த மேற்கு ஈராக்கின் அல் அன்பர் பிரதேசத்தில் உள்ள அமெரிக்காவின் அய்ன் அல்-அசாத் ராணுவ தளம். |
கல்வியில் மேலோங்கி இருந்தால் எந்த சக்திக்கும் அடிமையாக வாழவேண்டிய அவசியமில்லை,
தலைநிமிர்ந்து நிற்கலாம்
என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஈரான் இஸ்லாமிய குடியரசு.
இஸ்லாமிய உலகில் அணு விஞ்ஞானம், நனோ தொழில்நுட்பம், மருத்துவம், பாதுகாப்புத்துறை என்று பல துறைகளில், பல தடைகளையும் தாண்டி அந்த நாடு தலைசிறந்து விளங்குகிறது.
இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் கடந்த 42 ஆண்டுகளில் ஈரானின் பொது இராஜதந்திரம் எப்போதும் அமெரிக்க
அரசியல்வாதிகளுக்கு கடுமையான சவாலாக இருந்து வருகிறது. ஈரான் பிரச்சினை அமெரிக்க திட்டமிடல் மற்றும் பட்ஜெட்
பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த நான்கு தசாப்தங்களாக, அமெரிக்காவின் முக்கிய நலன்கள், இஸ்லாமிய குடியரசின் அரசியல் மற்றும் இராணுவ வலிமையால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச சியோனிசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான புனித போராட்டம் மற்றும் ஜெருசலேமை
ஆக்கிரமித்துள்ள ஆட்சியை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்லாமிய அமைப்புகளை வழிநடத்துதல் , முஸ்லிம் நாடுகளை துண்டாடி, சிறிய சக்தியற்ற மற்றும்
அடிபணியும் நாடுகளை உருவாக்குவதற்கான சியோனிச
முயற்சிகளை ஈரான் எதிர்கொள்வதும் அமெரிக்கா தலைமையிலான உலகிற்கு மிக முக்கியமான
சவால்களில் ஒன்றாகும்.
பல்வேறு வெளிப்படையான மற்றும் இரகசிய தகவல்களின்படி, ஈரானுடனான மிக தீவிரமான அமெரிக்க பிரச்சினை இது என அறிய முடிகிறது.
மறுபுறம், கடந்த தசாப்தத்தில், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்துவரும் ஈரானின் செல்வாக்கு ராணுவ
ரீதியில் அதனது வியக்கத்தக்க வளர்ச்சி இதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுக்கு பெரும்
தலையிடியாக மாறிவருகிறது.
பஹ்லவி மன்னர் ஆட்சி காலத்தில் அதிகார சக்திகளின் கைப்பாவையாக செயற்பட்ட ஈரான்
இன்று பிராந்தியத்தில் தவிர்த்து செயல்படமுடியாத, தவிர்க்கமுடியாத ஒரு
முக்கிய சக்தி என்ற நிலையை அடைந்துள்ளது.
1943 டிசம்பரில், நேச நாடுகளின் தலைவர்கள்
(ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட்)
ஈரானின் மன்னனாக இருந்த ஷாவுக்கு தகவல் தெரிவிக்காமல், தெஹ்ரானுக்கு வந்து,
போரை நிர்வகிக்கும் நோக்கத்துடன்
தெஹ்ரானில் ஒரு மாநாட்டை நடத்திவிட்டு சென்றனர்.
அந்த காலத்தில், விருந்தினர்கள் போல் அவர்களிஷ்டப்படி வருவதற்கும், சாப்பிடுவதற்கும், தீர்மானங்கள் எடுப்பதற்கும்
அவர்களால் முடிந்தது. அதற்கான சேவைகளை வழங்குவதற்கு மட்டுமே ஈரானால் முடிந்தது. ஆனால்
இன்று, அவ்வாறான ஒன்றை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவில் ஈரான் வளர்ந்துள்ளது.
மத்தியகிழக்கில் இப்போது ஈரானை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையை உருவாக்கியதில் ஷஹீத் ஜெனரல் சோலைமானியின் பங்கு மகத்தானது என்று கருதப்படுகிறது.
மேலும், 2003 இல் இருந்து தொடர்ந்த ஈராக் பிரச்சினை தீர்வில் ஈரானின் பங்கு பிராந்திய நிர்வாகத்தில் ஈரானின் பங்களிப்பு அதன் சக்தியின்
மற்றொரு பகுதியை நிரூபித்துள்ளது.
ஈராக்கை ஆக்கிரமிப்பதில் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவுசெய்த்து, ஆயினும் ஈரானின் ராஜதந்திர
செயல்பாடு அதனை பயனற்றதாக ஆக்கியது. அதுமட்டுமல்லாமல் ஈரானிய பேரம் பேசும் சக்தியையும்
மற்றும் பல்வேறு துறைகளிலும் அதன் செல்வாக்கையும் அதிகரித்தது. இது ஈரானின் எதிரிகளால்
கணிப்பிட்டு புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிராந்தியத்தில் ஜெனரல் சுலைமானியை பாதுகாப்பு
மையமாகக் கொண்ட பாரிய ஈரானிய பங்கை குறைப்பதற்கு அவரை அழித்தொழிப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு
வேறு வழியில்லை.
அவரது வேகம், விவேகம், போர் தந்திரம், தமது மேலாதிக்கத்துக்கு சவாலாக மாறிவருவதை அறிந்து, சுலைமானியின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே அமெரிக்கா அவரைக் கொன்றது எனலாம்.
இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை, பாதிப்பின் அனைத்து பக்கங்களையும் விரிவாக ஆராய்ந்து மதிப்பிட அவர்கள் தவறிவிட்டிருந்தனர். சண்டித்தனத்தின் மூலம் சிக்கல் தீர்க்கும் மேற்கத்திய
முறையின்படி அவர்களுக்கு அத்தகைய மதிப்பீடு அவசியப்பட்டிருக்காது. இந்த அற்பத்தனமான செயலுக்கான பொறுப்பை டிரம்ப் ஏற்றதே
இதற்கு போதுமான சாட்சியாக இருக்கிறது.
டிரம்ப் பதவியேற்றவுடன்,
அமெரிக்க நிர்வாகம் சர்வதேச
அரங்கில் தான்தோன்றத்தனமாக நடக்க தொடங்கியது.
ட்ரம்ப் அனைவரையும் அச்சுறுத்தி காரியம் சாதிக்க முனைந்தார், அவர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக கருதப்பட்டார். அவர் தனது கவ்பாய் (cowboy) இயல்பை சிறிதும் மறைக்கவில்லை. வெளியில் ஈரானுடனான நட்பையும், உள்ளே பகைமையையும் வெளிப்படுத்த
அவருக்கு எந்த காரணமும் இல்லை. அவர் தன்னை ஒரு உண்மையான
எதிரி என்று காட்டினார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்
என்ற பயங்கரவாதக்குழுவை துவம்சம் செய்ததில் சுலைமானியின் பங்களிப்பு அளப்பரியது. இதன்
காரணமாக அவர் ஈரானுக்கு மட்டுமல்ல முழு பிராந்தியத்துக்கும் ஒரு ஹீரோவாக கருதப்பட்டார்.
ஜெனரல் சுலைமானி பிராந்தியத்தில் பயங்கவாத எதிர்ப்பு முன்னணியை ஒன்றிணைப்பதன் மூலம்
வெற்றியின் அடையாளமாக இருந்தார்.
காசீம் சுலைமானியைக் கொல்வதால் ஈரான் பலவீனமடைந்துவிடும், பிராந்தியத்தில் நிலைமை
முன்பிருந்ததுபோல் தமக்கு சாதகமாக மாறிவிடும் என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள்.
சுலைமானியின் படுகொலையுடன்,
நாட்டினுள் ஐந்தாம் படை
உதவியுடனும் பொருளாதார தடை பிரச்சினைகள் மற்றும் ஊடகப் போருடன், ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து, பிராந்தியமெங்கும் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளிடையே கருத்தியல் சந்தேகம் ஏற்படுத்திடுவதன்
மூலம் நிறுவன சரிவை ஏற்படுத்தலாம் என்று ட்ரம்ப்
நினைத்தார்.
ஏற்கனவே , அமேரிக்கா அதனது அதிநவீன, மிகவும் மேம்பட்ட உளவு ட்ரோன் 'குளோபல் ஹாக்' ஈரான் தனது வான்பரப்பில் ஊடுருவியதற்காக சுட்டு வீழ்த்தி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
விடுத்திருந்த போதிலும், ஈரானிய ஜெனரலை படுகொலை செய்வதன் மூலம் அது ஈரானுக்கு எதிரான போரை அறிவித்தது.
எதிரிக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தாவிட்டால், தாம் இன்னும் அதிகமாக
பாதிக்கப்படுவோம் என்று ஈரானியர்களுக்கு வரலாற்று அனுபவம் கற்பித்திருந்தது. அமெரிக்காவுடன் போருக்கு
மக்கள் பயப்படவில்லை;
மாறாக, அவர்கள் அதைக் கோரினர்.
இங்குதான் உலகம் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஈரானியர்கள் திருப்பித்தாக்கினார்கள்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8, 2020 அன்று, மேற்கு ஈராக்கின் அல்
அன்பர் பிரதேசத்தில் உள்ள அமெரிக்காவின் அய்ன் அல்-அசாத் ராணுவ தளத்தை தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்தது.
அமேரிக்கா தமது ஆட்சியினை பாதுகாக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த அரபு ஆட்சியாளர்களின்
கனவில் இடிவிழுந்தது. தாமே பிராந்தியத்தின் பாதுகாவலர் என்று கடந்த நான்கு தசாப்தத்துக்கும்
மேலாக கட்டியெழுப்பிவந்த அமெரிக்காவின் இமேஜ் ஓரிரவில் தவிடுபொடியானது.
அரசியல் விமர்சகர்களின் பார்வையில் அமேரிக்கா சுலைமானியை கொலைசெய்ததன் மூலம் தற்கொலை
செய்துகொண்டுள்ளது.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment