Palestinians see Abu Dhabi's move as a sheer betrayal.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ஒப்பந்தம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்ட போதிலும் அபுதாபியின் இந்த நகர்வை பச்சை துரோகமாக பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.
இந்த வளைகுடா அரபுத்
தலைவர்களின் உண்மையான நோக்கம் பலஸ்தீனுக்கு உதவுவதல்ல, பாலஸ்தீன் அவர்களுக்கு ஒரு
பொருட்டே அல்ல; அவ்வாறு இருந்திருப்பின்
பலஸ்தீன் உடன்பிறப்புகள் பல தசாப்தங்களாக படும் துயர் அவர்கள் கண்களுக்கு
பட்டிருக்க வேண்டும். ஈரானுக்கு எதிராக ஒன்றிணைவதே இவர்களது முக்கிய
குறிக்கோளாகும் என்பதை பாலஸ்தீனர்கள் நன்கு அறிவார்கள்.
மத்திய கிழக்கில் வளர்ந்து
வரும் ஈரானின் செல்வாக்கை, குறிப்பாக அரபு இளைஞர்கள்
மத்தியில் வளர்ந்து வரும் செல்வாக்கை முறியடிப்பதற்காக சவூதி தலைமையிலான அரபு
நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பல இயக்கங்கள் மற்றும் பல
ஊடகங்கள் அவர்களால் இயக்கப்பட்டும் வருகின்றன.
ஈரானின் இஸ்லாமிய அரசு முறையும், பலஸ்தீன் தொடர்பான அதன் உறுதியான கொள்கையும், அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு முகம்கொடுக்கும் அதன் துணிச்சலும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அரபு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இளைஞர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு செல்வதை தடுக்க இந்த அரபு ஆட்சியாளர்களுக்கு இன்றும் பயன்படுவது ஷீஆ - சுன்னி என்ற பிரிவினைவாதமாகும்.
ஒரு சில அரபு ஆட்சியாளர்கள் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கையினை, சுன்னி உலகு இஸ்ரேலுடன் இணங்கிச்செல்ல தயாராய் உள்ளது போலவும் அதனை எதிர்ப்பது ஷியாக்கள் மட்டுமே என்பது போலவும் ஒரு மாயையை உருவாக்க சியோனிச ஊடகங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஈரானை சுன்னி உலகுக்கு எதிரான
நாடாக காட்டுவதற்கு அரபு அரச ஊடகங்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு
வருகின்றன. இவ்விடயத்தில்
முஸ்லிம் உலகு ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் அவை கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு
வருகின்றன.
பக்கத்தில் பலம்வாய்ந்த நாடாக ஈரான் வளர்ந்து வருவதையும் அரபு மக்கள் படிப்படியாக அதன்பால் ஈர்க்கப்படுவதையும் இந்த அரபு ஆட்சியாளர்கள் தங்கள் பரம்பரை ஆட்சிக்கு பெரும் சவாலாகவே பார்க்கின்றனர்; அதனால் தான் எந்த சாத்தானுடன் கூட்டு சேர்ந்தாவது, ஈரானின் வளர்ச்சியை முறியடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் தற்போது அவர்கள் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகும்.
With deal, UAE abandons
Palestinian struggle – Cartoon [Sabaaneh/MiddleEastMonitor]
கடந்த வாரம் ஒரு வலைப்பதிவில், ஓய்வுபெற்ற
யுஎஸ்ஏஎஃப் உளவுத்துறை அதிகாரி "சுன்னி அரேபியர்களுடன் இணைந்து பணியாற்ற
இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள்" என்று எழுதினார். ஏனெனில் "அவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் லெபனான், சிரியா, ஈராக்
மற்றும் யெமனில் உள்ள அதன் ஷியா சிண்டிகேட்டை ஒரு பொது எதிரியாக கருதுகின்றனர்," என்று ரிக் ஃபிராங்கோனா
விளக்கினார்.
எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட விஷயம் என்னவென்றால், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதில் அடுத்ததாக இருக்கும் அரபு நாடுகள் பஹ்ரைன், ஓமான் மற்றும் மொராக்கோ என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதாகும்.
இப்பிராந்தியத்தை நோக்குகையில் ஒருபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சுன்னி அரபு நாடுகளின் பின்னிப்பிணைந்த நலன்கள் உள்ளன, (ஷியா பெரும்பான்மை பஹ்ரைன் சுன்னி கலீபா குடும்பத்தால் ஆளப்படுகிறது, இபாதி ஷியா பெரும்பான்மை ஓமான் பிராந்திய விவகாரங்களில் பல தசாப்தங்களாக நடுநிலை வகிப்பதில் இருந்து விலகிவிட்டது), அவற்றுக்கு பிராந்தியத்தில் சியோனிச பிரசன்னம் ஒரு பொருட்டல்ல; மறுபுறம் ஈரானுடன் கூட்டணி வைத்திருக்கும் அரபு நாடுகளும் அரச சார்பற்ற (ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ், அன்ஸாருல்லாஹ் போன்ற) இஸ்லாமிய இயக்கங்களுமாகும்; இவையே சியோனிச உறவை தீவிரமாக எதிர்ப்பனவாகும்.
எவ்வாறாயினும், சட்டவிரோத
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சுன்னி அரபு நாடுகள் இன்னும் உள்ளன என்பதை
சுட்டிக்காட்டியாக வேண்டும். உதாரணமாக, துனிசியா மற்றும் அல்ஜீரியா
ஆகியவை இஸ்ரேலுடன் இயல்பாக்கத்திற்கு எதிரானவை.
ஈராக் அரசாங்கம் தனது நிலைப்பாடு மாறாது என்றும் இஸ்ரேலுடன் எந்த உறவும் இல்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாக்தாத்தில் ஒரு மதச்சார்பற்ற கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி இஸ்ரேலுடன் தொடர்புகளை இயல்பாக்குதலுக்கு சார்பாக வாதிட்டு வந்தாலும், ஈராக் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது.
பிராந்தியத்தில் ஈரானிய
செல்வாக்கை எதிர்ப்பவர்களும், சில ஈரானிய அதிகாரிகளும் கூட, தெஹ்ரான்
பாக்தாத், பெய்ரூட், டமாஸ்கஸ்
மற்றும் சனா ஆகிய நான்கு அரபு தலைநகரங்களை கட்டுப்படுத்துகிறது என்று
கூறுகின்றனர். இந்த
கூற்றுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும், ஈரான் அதன்
அரபு நட்பு நாடுகளிடையே ஏற்படுத்தும் செல்வாக்கு கணிசமானது என்பதை மறுப்பதற்கில்லை.
சியோனிசம் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கடுமையான எதிர்ப்பில் இந்த நாடுகள்
அனைத்தும் மிகவும் உறுதியாக உள்ளன என்பது தற்செயல் நிகழ்வும் அல்ல.
ஈரானின் நெருங்கிய நட்பு நாடான சிரியா இன்னும் இஸ்ரேலுடன் போர் நிலையில் இருந்தபோதிலும், எகிப்து மற்றும் ஜோர்டான் செய்ததைப் போல ஆக்கிரமிப்பு அரசுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. சிரியாவிற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகள் குறித்து ஜூன் மாதம் பேசிய சிரிய வெளியுறவு மந்திரி வலீத் முஅல்லிம், டமாஸ்கஸை அழுத்தங்கள் ஊடாக நாங்கள் "எங்கள் கூட்டணிகளையும், எதிர்ப்பிற்கான எங்கள் ஆதரவையும் கைவிட்டு, இஸ்ரேலுடன் தொடர்புகளை இயல்பாக்குவோம் என்று எதிர்பார்த்தால் நிச்சயமாக ஏமாறுவர்" என்று கூறினார்.
இஸ்லாம் மற்றும் அரேபியத்தை காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்தை கண்டித்து, லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் பொதுச்செயலாளர் சையித் ஹசன் நஸ்ரல்லா தொலைக்காட்சி உரையில், இது நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சாதகமான செயல்பாடே தவிர வேறில்லை" என்று கூறினார்.
சவூதி அரேபியாவின் பல தசாப்த
சுரண்டல் மற்றும் தலையீடு யெமனிய ஸைதி முஸ்லிம்களை
ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் தள்ளிய பங்களிப்பு காரணிகளில் ஒன்றாகும். யெமனில்
உள்ள ஹௌதி தலைமையிலான அரசாங்கமே அதிக
சக்தியைப் பயன்படுத்துகிறது மற்றும் நாட்டின் பெரும்பகுதியை மக்கள் தொகை
மையங்களின் அடிப்படையில் நிர்வகிக்கிறது; நாடுகடத்தப்பட்ட
சவுதியை தளமாகக் கொண்ட மான்சூர் ஹாதியின் யெமன் அரசாங்கம் அல்ல;
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதில் ஹௌதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. "சியோனிச ஆட்சியை ஆதரிக்கும் அரபு ஆட்சிகள் உண்மையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களில் பங்காளிகள்" என்று ஹவுத்தி தலைவர் சையித் அப்துல்மாலிக் அல்-ஹௌதி கடந்த வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இஸ்ரேல் ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலைப் பற்றி சாதகமாகப் பேசிய தெற்கு இடைக்கால கவுன்சிலின் (எஸ்.டி.சி) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பிரிவினைவாதிகளின் நிலைப்பாட்டிற்கு ஹௌதிகளின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. எமிரேட்ஸின் ஆதரவில் இயங்கும் (எஸ்.டி.சி) குழுக்களின் செயல்பாட்டுகள் யெமனில் இஸ்ரேலுக்கு கால் பதிக்க ஏதுவாக இருப்பதால் அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். யெமனில் ஈரான் சார்பு ஹௌதிகளுக்கு எதிராக செயல்படுவது சவூதி, அமெரிக்க, எமிரேட்ஸ், இஸ்ரேலிய கூட்டணி என்பது இங்கு தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் இல்லையெனில் இன்று லெபனானும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குக்கு உள்ளான நாடாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோல் சிரியா தொடர்பாக ஈரான் கொண்டிருக்கும் நிலைப்பாடு இஸ்ரேலின் விஸ்தீகரிப்பு திட்டத்துக்கு பெரும் தடையாக உள்ளது. அதேபோன்று ஹௌதிகள் இல்லை என்றால் யெமனும் இஸ்ரேலின் கோரப் பிடிக்குள் சிக்கியிருக்கும்.
ஆக, அமேரிக்கா, இஸ்ரேல், இஸ்லாம் விரோத அரபு ஆட்சிகள் ஆகியவற்றுக்கு அவற்றின் தீய திட்டங்களை நிறைவேற்றுக்கொள்ள பிராந்தியத்தில் பெரும் தடையாய் இருப்பது ஈரான் இஸ்லாமிய குடியரசாகும். இப்போது ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கான காரணம் ஈரான் எதிர்ப்பு என்பது வெளிப்படை.
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment