Zarif: Time of
US hegemony is over
அமெரிக்க மேலாதிக்கத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீப் ஆகஸ்ட் 18, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அணு விவகாரம் தொடர்பாக ஈரான் மற்றும் மற்றும் 6 சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில்
மேற்கொள்ளப்பட்ட விரிவான கூட்டு செயல்திட்டத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய 2018 ஆம் ஆண்டு முதல் டிரம்ப் நிர்வாகம் தப்புக்
கணக்கு போடத் தொடங்கியது என்று ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீப் கூறினார்.
ஈரான் ஆயுதத் தடை நீக்கப்படுவதைத் தடுக்க அமெரிக்கா எல்லா
முயற்சிகளையும் மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் அது
தோல்வியில் முடிந்தது என்றும் ஸரீப் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து ஜே.சி.பி.ஓ.ஏ என அழைக்கப்பட்ட ஈரான்
அணுசக்தி ஒப்பந்தத்தில் குறுக்கிடத் தொடங்கியதில் இருந்து தொடங்கும் அவர்களின்
தவறான கொள்கைதான் அமெரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று வெளியுறவு
அமைச்சர் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா அவர்களின் அதிகபட்ச
அழுத்தம் காரணமாக ஈரான் அடிபணியும், அவர்களின் வழிக்கு வரும் என்றெல்லாம் தப்புக்
கணக்கு போட்டது,
என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.
ஈரான் மீதான ஆயுதத் தடையை நீட்டிப்பதற்கான அவர்களின் வரைவுத்
தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிராகரித்ததன் மூலம் அமெரிக்கர்கள் தங்களை
சிக்கலில் மூழ்கியுள்ளனர். அதே நேரத்தில் இனறைய உலக நிலைமை
நிறைய மாறிவிட்டது என்பதையும், அமெரிக்க நிர்வாகம்
எப்போதும் சர்வதேச சமூகத்திலிருந்து வேறுபட்ட ஒரு மாற்று திசையில் செல்ல
முயற்சிக்கிறது,
அது பலனளிக்காது என்பதையும் அவர்கள்
புரிந்து கொள்ளவில்லை என்றும் ஸரீப் கூறினார்.
அமெரிக்க வரைவு தீர்மானத்திற்கு அமெரிக்க சார்பு ஐரோப்பிய நாடுகள்
கூட வாக்களிக்கவில்லை என்பதை ஸரீப் சுட்டிக்கானார்.
பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தேவையான ஒன்பது
உறுதிப்படுத்தும் வாக்குகளைப் பெறாததால் தீர்மானத்தை நிராகரிப்பதற்கு வீட்டோ கூட அவசியப்படவில்லை, டொமினிகன் குடியரசு மட்டும்
அமெரிக்காவோடு இணைந்து வரைவுத் தீர்மானத்திற்கு வாக்களித்தது.
ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க வரைவு தீர்மானத்திற்கு எதிராக
வாக்களித்தன,
ஏனைய 11 உறுப்பு நாடுகளும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
பாதுகாப்பு கவுன்சிலின் 75 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று ஸரீப் கூறினார்.
பல சர்வதேச விடயங்களில் அமெரிக்கர்கள் தொடர்ச்சியாக தவறு
செய்கிறார்கள்;
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில்
அவர்களது தவறான கணிப்பினாலும் செயற்பாடுகளினாலும்
பிராந்தியத்தில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டதாக ஸரீப் தெரிவித்தார்.
சதாம் ஹுசைனின் சர்வாதிகார ஆட்சி காலத்தில் அமெரிக்கா ஈராக் மீது
படையெடுத்தது மற்றும் கத்தாபி காலத்தில் லிபியாவில் அவர்கள் செய்தது கூட இந்த தவறான
கணிப்பீட்டின் அடிப்படையிலேயே என்றும்
அவர் கூறினார்.
இப்போது, அமெரிக்கர்கள்
மீண்டும் ஒரு தவறான கணிப்பீட்டை மேற்கொண்டு வருகிறார்கள், மேலும் அவர்கள் அவர்களாலேயே
உருவாக்கப்பட்ட ஒரு புதைகுழியில் சிக்கியுள்ளனர், என்று வெளியுறவு மந்திரி மேலும்
கூறினார்.
அமெரிக்கர்கள் மற்றும் சியோனிச ஆட்சியின் கட்டளைகளுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும் அமேரிக்கா அச்சுறுத்தி காரியம் சாதித்த காலம்
மலையேறிவிட்டது என்றும் ஸரீப் கூறினார்.
இது இவ்வாறிருக்க, முன்னாள் அமெரிக்க
ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் விவேகமற்ற செயலை
விமர்சித்தார்.
ஈரானிய
அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டியைத்
தடுப்பதற்கும் ஒரு வழிமுறையாக அடுத்த அமெரிக்க நிர்வாகம் ஒபாமா கால
ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்று 2016 ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கிளின்டன் கூறினார்.
2015 ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டதற்காக ஜனாதிபதி
டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி
கிளிண்டன் விமர்சித்தார், பன்னாட்டு ஒப்பந்தத்திற்கு
திரும்புவது அமெரிக்காவுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்று கூறினார்.
அமெரிக்கா
போன்ற பலம் வாய்ந்த நாடுகள் ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும், அவ்வாறில்லையென்றால் அதன் மதிப்பு மரியாதை உலகளவில் கெட்டு விடும்.
கடந்த 17 ஆம்
திகதி திங்களன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு அட்லாண்டிக் கவுன்சில் நிகழ்வின் போது, கிளின்டன் அடுத்த அமெரிக்க
நிர்வாகம் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளுடன் எவ்வாறு முன்னேற வேண்டும்
என்பது குறித்து தனது கருத்துக்களை வழங்கினார், அவற்றில் ஈரான் கொள்கையும் ஒன்று.
முன்னாள்
ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய கிளின்டன், 2018 மே மாதம் இந்த ஒப்பந்தத்தில்
இருந்து திடீரென அமெரிக்காவை வெளியேற்றுவதற்கு பதிலாக, இந்த ஒப்பந்தத்தில் உள்ள
பிரச்சினைகள் என்று கருதியதை சரிசெய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சித்திருக்கலாம்
என்றார்.
ஒபாமா
காலத்தில் ஏற்படுத்தப்பட்ட விரிவான கூட்டு திட்டத்திலிருந்து (ஜே.சி.பி.ஓ.ஏ)
வாஷிங்டன் விலகியதன் காரணமாக ஏற்பட்ட ஒரு முக்கிய விளைவு ஈரானும் சீனாவும் தங்கள்
உறவுகளை வலுப்படுத்தியது என்று அவர் கூறினார்.
ஈரானும்
சீனாவும் 25
ஆண்டு கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கான
முயற்சியில் ஈடுபட்டுள்ளன, "நான் அதை நேரடியாக டிரம்ப் நிர்வாகத்தின் முன் வைத்தேன் – நான் ராஜாங்க
செயலாளராக இருந்தபோது அமெரிக்கா வெளியேறிய ஈரானுடனான குறிப்பிட்ட
ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை நானே
தொடங்கினேன்,
என்னைத் தொடர்ந்து பதவிக்கு வந்த
ஜான் கெர்ரியினால் மிக முக்கியமான அந்த ஒப்பந்தத்தை நிறைவுக்கு கொண்டு வர
முடிந்தது." என்று ஹிலாரி கிளிண்டன்
தெரிவித்தார்.
ட்ரம்பின் கீழ் வாஷிங்டனால்
கைவிடப்பட்ட காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது போலவே, ”ஈரான் ஒப்பந்தத்தில் மீண்டும்
இணைவது அமெரிக்காவின் நன்மையின் பால் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”.
எவ்வாறாயினும், ஈரான் "அதற்கு சம்மதிக்குமா"
என்று அவர் சந்தேகத்தை எழுப்பினார், "அவர்கள் முன்னேறி இப்போது எங்கோ சென்றுள்ளனர் என்று நான்
நினைக்கிறேன்."
அடுத்த ஜனாதிபதிக்கான
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன், ஈரானுடனான சர்வதேச ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக
சாடையான முறையில் பலமுறை தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த
விவேகமற்ற முடிவு அமெரிக்காவுக்கு சாதகமான எந்த ஒரு பலனையும் தரவில்லை. ஈரானின்
பொருளாதாரம் உறுதிபெற்று வருவதால் அமெரிக்க அழுத்த பிரச்சாரத்திற்கு
தாக்குப்பிடிக்கும் சக்தியை ஈரான் பெற்று வருகிறது என்று அமெரிக்காவின் முன்னணி
சஞ்சிகையான "வெளியுறவுக் கொள்கை" (Foreign Policy) தெரிவித்துள்ளது.
மே மாத
தொடக்கத்தில்,
ஜோ பைடனின் ஆலோசகர்களில் ஒருவரான
அந்தோனி பிளிங்கன், அதிபர்
டொனால்ட் டிரம்ப் புதியதொரு ஒப்பந்தத்தைக் கோருவதற்கு முன்பு அமெரிக்கா அசல்
ஒப்பந்தத்தில் மீண்டும் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
பல நாடுகளுடன்
இணைந்து கையொப்பமிட்ட முக்கியமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மே 2018 இல் விலகிய பின்னர், டிரம்ப் ஈரான் மீதான நியாயமற்ற ஒரு
"அதிகபட்ச அழுத்தம்" என்ற பிரச்சாரம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார், இதனூடாக, ஈரானுக்கு அதன் பாலிஸ்டிக் ஏவுகணை
தொடர்பாகவும் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும்
ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அழுத்தம்
கொடுக்க வீணாக முயல்கிறார்.
டிரம்ப்
நிர்வாகம் சமீபத்தில் ஈரான் மீது ஐ.நா. ஆயுதத் தடை தொடர்ந்தும் விதிக்கப்படுவதற்கான
ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சித்து, பலனற்ற தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து தோல்விகண்டது.
ஜே.சி.பி.ஓ.ஏ தொடர்பாக மறு
பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று ஈரான் பலமுறை உறுதிபட கூறியுள்ளது, அமெரிக்கா தனது ஒருதலைப்பட்ச
அழுத்தக் கொள்கையை கைவிட்டு ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிப்பாட்டிற்கு
திரும்புமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.
https://en.irna.ir/news/83911577/Zarif-Time-of-US-hegemony-is-over
No comments:
Post a Comment